• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
9


“டேய்! தாலி கட்டுற நேரத்துல என்ன உளறிட்டிருக்க? பேசாம உட்கார்” என்றார் அவனின் தந்தை.

“முடியாதுப்பா. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல. என்னால இந்தப் பொண்ணை மேரேஜ் பண்ணிக்க முடியாதுன்னு உங்ககிட்ட ஆயிரம் முறை சொல்லிட்டேன். நீங்க கேட்கலை. எனக்கும் வேற வழி தெரியல. இந்தப் பொண்ணுகிட்ட பேசவும் நீங்க அலோ பண்ணல. உங்களுக்காகவாவது மேரேஜ் பண்ணிக்கலாம்னு நினைச்சாலும், என்னால இவங்க பக்கத்துல கூட உட்கார முடியல.”

அதுவரை அமர்ந்திருந்த தாரிணி சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தாள்.

“என்னை மன்னிச்சிருங்கப்பா” என்று தன் தகப்பனிடம் அவன் மன்னிப்பு கேட்டான்.

ஜெயராமனுக்கோ என்ன செய்வதென்று தெரியாமல் தங்கையைப் பார்க்க, “அண்ணா எனக்கு இதெல்லாம் தெரியாதுண்ணா. ரொம்ப தெரிஞ்சவங்கன்ற நம்பிக்கையில தான் சொன்னேன். மத்தபடி நம்ம புள்ளையோட வாழ்க்கையை கெடுக்க இல்லண்ணா” என்று அவனின் பெற்றோரிடம் சண்டையிட்டார்.

தாரிணியின் தாயோ, ‘தன் பெண்ணின் வாழ்க்கையை தாங்களே கெடுத்துவிட்டோமே’ என்ற எண்ணத்தில் கண்களில் கண்ணீருடன் நின்ற இடத்தில் அப்படியே நின்றார்.

அதற்குள் நண்பர்கள் அனைவரும் மேடைக்கு வர, “சாரிமா” என்றான் தாரிணியிடம் அவளை வேண்டாமென்ற மணமகன்.

“யாரையாவது லவ் பண்றீங்களா?” என்ற கேள்வி தாரிணியிடம் இருந்து அமைதியாக வந்தது. அவனோ தலைகவிழ, “அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு சம்மதிச்ச?” என்றாள் கோவத்தை அடக்கியபடி.

“அ...அது வீட்ல ப்ளாக்மெய்ல் பண்ணினாங்க. அதான்.” என்றான் குரலே வராமல்.

“கல்யாணம் பண்ணிக்க ப்ளாக்மெய்ல் பண்ணினதால மேடைக்கு வந்திட்ட. அவங்க செத்துபோகச் சொன்னா, ஆறு குளம்னு விழுந்து டெமோ காட்டுவியா? இல்ல கத்தி, கயிறுன்னு குத்தியோ, தொங்கியோ காண்பிப்பியா?” கோவத்தில் பாகீரதி தோழிக்காக பேசி, அவள் கையை தன் கையுடன் இறுக்கிக் கொண்டாள், ‘உனக்கு நானிருக்கிறேன்’ எனும் விதமாய்.

அதுவரை மௌனமாக இருந்தவன் அவளின் நக்கலில், “ஏய்! என்ன ஓவரா பேசுற?” என அவன் எகிறியபடி வர,

அதைப் பார்த்திருந்த ஸ்ரீனிவாசனும், ப்ரவீணும் மணமேடை நோக்கி செல்ல, அதற்குள் நண்பர்கள் அவனை சூழ்ந்தனர்.

அவர்களைத் தடுத்த தாரிணியோ, “உனக்கு மேரேஜ்ல இஷ்டம் இல்லைன்னா சூஸைட் பண்ணிட்டு சாக வேண்டியதுதான. அதை விட்டுட்டு, அடுத்தவங்களை சாகடிக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது? என்னை பொண்ணு கேட்டு வரச்சொல்லி நாங்களா கூப்பிட்டோம். படிச்சிட்டிருக்கிறவளை பொண்ணு கேட்டு, அதுவும் ஒரே வாரத்துல அவசர அவசரமா ஃபிக்ஸ் பண்ணி, சே... எங்க அப்பாவுக்காகதான் சம்மதிச்சேன். இல்லன்னா... ப்ச்...” என சலித்து வார்த்தையை முடிக்காமல், “ஒழுங்கா மரியாதையா என் கண்முன்னாடி நிற்காம போயிரு” என வாசற்புறம் கைநீட்டினாள்.

அதற்குமேல் அங்கு நிற்காமல் அவனும் கிளம்பி சென்றான். மாப்பிள்ளை வீட்டினரோ தலைகவிழ, தாரிணியின் அத்தையோ அவர்களை வார்த்தைகளால் கொன்று கொண்டிருந்தார்.

கோவத்துடனும் கண்களில் நீருடனும் இருக்கும் மகளை, சமாதானப்படுத்த வழி தெரியாமல் நொந்து போய் ஜெயராமன் தரையில் அமர, அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்திருந்த ஜானகி ஓடி வந்து அவரைத் தாங்க, அந்த இடமே களேபரமானது. தாரிணியும் மேடையிலிருந்து தந்தையை நோக்கி வர, “என்னை மன்னிச்சிருமா” என மகளிடமே தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

அடுத்து என்ன என்ற கேள்வி அனைவரிடமும் இருக்க, “பணக்காரன் வெளிநாட்டுல இருக்கான்னுதான அவசரமா கல்யாணத்தை வச்சான். அதான் பேராசை பெருநஷ்டமாகிருச்சி. ஆசைக்கும் அளவு இருக்கணும்பா. இவ்வளவு சின்ன வயசிலேயே கல்யாணம் பண்றதுக்கு இவன் பொண்ணு சென்னையில் என்ன தப்பு பண்ணினாளோ?” என பல நாக்குகள் பலவாறு சுழன்றடிக்க, இதைப்போல் பேச்சுகளெல்லாம் கேட்டிராத தாரிணியோ மறுத்துப் பேசமுடியாமல் வாயடைத்துப் போயிருந்தாள்.

அவளின் அத்தையோ பேசியவர்களை பதிலுக்கு திட்டிக்கொண்டிருந்தார்.

அதைப் பார்த்திருந்த பாகீரதி, தாரிணியை அவளின் தாயிடம் ஒப்படைத்துத் தன் அண்ணனின் அருகில் வந்து, “அண்ணா தாரிணியை எல்லாரும் கண்டபடி பேசுறாங்க. அவ நல்லவள்ணா. அவ அழறா பாருங்க. எனக்கு கஷ்டமாயிருக்கு. அவளை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்கணா ப்ளீஸ்” என ப்ரவீணிடம் கெஞ்சினாள்.

“அம்மூஊஊ” என அதிர்ந்தவனுக்கு சூழ்நிலையும், அவளின் நிலையும் புரிந்தாலும், ஏற்கனவே வீட்டில் ஒரு பெண்ணை பேசியிருக்கும் பட்சத்தில், அதுவும் அப்பா சொன்ன அந்த காரணத்திற்காகவே திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறான் என்றால் அந்த பெண்ணுடனான திருமணம் ரொம்ப முக்கியமானதாகிற்றே.

அவனின் தங்கைக்கோ அது எதுவும் நினைவேயில்லை. தற்பொழுது தோழி மட்டுமே மனதினுள் நிற்க, அவளை மற்றவர்கள் கண்டபடி பேசுவது பிடிக்கவில்லை. தன் அண்ணனை விட யாரும் அவளைப் பார்த்துக்கொள்ள முடியாதென்ற எண்ணம் மட்டுமே மனமெங்கும் வியாபித்திருந்தது.

தங்கையின் கெஞ்சல் பொறுக்காமல் ப்ரவீண் சம்மதிக்க, “தேங்க்யூண்ணா. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்று தாரிணியின் தந்தையிடம் அழைத்துச் சென்றாள்.

சற்று நேரத்திற்கு முன் பாகீரதியைத் திட்டியதைத் தாங்க முடியாமல் ஸ்ரீனிவாசன் மேடையை நோக்கி வர, அதற்குள் நண்பர்கள் அரண் அமைத்ததால், ‘பரவாயில்லையே பசங்க’ என்றுதான் தோன்றியது. அதன்பின் மேடைக்கு செல்லாமல் கீழேயே நின்று அவர்களைத்தான் கவனித்திருந்தான்.

இந்த களேபரங்களைப் பார்த்திருந்த சுதர்ஷன் தன் நண்பனிடம் “ஸ்ரீ நான் அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கவா?” என கேட்டதும், கேள்வியாய் நண்பனைப் பார்க்க, “இல்லடா பொண்ணைப் பார்த்தா பாவமாயிருக்கு. நல்ல பொண்ணா தெரியுறா” எனும்போது நடுவில் சிந்துவின் முகம் வந்தாலும், அவள் இன்னொருவனுக்குச் சொந்தமாகப் போகிறாள் என்ற எண்ணத்தில் வந்த நினைப்பை உதறி, “நான் மேரேஜ் பண்ணிக்கிறேன்டா” என்றான்.

“தர்ஷா என்ன உளர்ற? இதென்ன வியாபாரமா இது இல்லன்னா அதுன்னு எக்ஸ்சேஞ்ச் பண்றதுக்கு. வாழ்க்கைடா. அந்தப் பொண்ணுக்கு இஷ்டம் இருக்கணும்.”

“அதெல்லாம் பார்க்க இது நேரமில்லைடா” என்று தர்ஷன் தாரிணியின் தந்தையை நோக்கிச் செல்ல,

அதே நேரம் ப்ரவீணும் தங்கையுடன் ஜெயராமனை நோக்கிச் சென்றான்.

சுதர்ஷன் அவரை அழைக்க வாய்திறக்க,

அதற்குள், “அங்கிள் தாரிணியை எனக்கு அண்ணியா கொடுக்குறீங்களா?” என்றிருந்தாள் பாகீரதி.

பாகீரதி தோழியை அண்ணனுக்கு கேட்டதில், தர்ஷனோ திறந்த வாய் மூடாதிருக்க, ஸ்ரீனிவாசனோ அதிர்ச்சியின் உச்சியிலிருந்தான். ‘எப்படி சாத்தியம்? அப்ப என் தங்கை? ஏனிப்படி செய்கிறாள் இந்த ரதி?’ கேள்விகள் மனதிற்குள் சுழல, ‘ஐயோ’ என்றிருந்தது அவனுக்கு. இருப்பினும் இன்னும் உறுதியாக எந்த முடிவும் எடுக்காத திருமணப்பேச்சி தானே என தோன்றினாலும், அவளின் மேல் சிறிது கோபமும் வந்தது.

“என்னமா புரிஞ்சிதான் பேசுறியா? இதொண்ணும் சின்னப்பிள்ளைங்க விளையாடுற விளையாட்டில்ல” என்றார் ஜெயராமன்.

“நிஜமா அங்கிள். எங்கண்ணா டாப் ஒன் பிசினஸ்மேன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. அதை விட ரொம்ப நல்லவங்க. உங்க பொண்ணை நல்லா பார்த்துப்பாங்க.”

“என்ன தம்பி சின்னப்பொண்ணு என்னவோ சொல்றாள்னா நீங்களும் பார்த்துட்டு சைலண்ட்டா இருக்கீங்க?” ப்ரவீணிடம் நேரடியாகவே கேட்டார்.

“என்கிட்ட கேட்டபிறகுதான் உங்ககிட்டேயே சொல்றா. உங்களுக்கு சம்மதம்னா உங்க பொண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் அவனையே நம்ப முடியாமல் பார்த்திருந்த தாரிணியின் கண்கள் பார்த்து.

இருக்காதா பின்ன! முதல் பார்வையிலேயே அத்தனை வெறுப்பைக் காட்டியவனாயிற்றே!

“இல்லப்பா. பெரியவங்ககிட்ட கேட்காம செய்யுறது தப்பு. இது உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற விஷயமில்லை” என்றார் பெரிய மனிதராய்.

அவரின் இந்த குணம் ப்ரவீணுக்கு பிடித்திருந்தது. பணக்காரன் ஒருவன் மாட்டியிருக்கிறான். சூழ்நிலை காரணமாக தானே வந்தும், பெண்ணை அவன் தலையில் கட்ட முயற்சிக்காமல், இந்த நேரத்திலும் தன்னால் அடுத்தவர்கள் பாதிக்கக்கூடாது என்கிற அவரின் நல்லெண்ணம் ரொம்பப் பிடித்தது.

“எங்க அப்பாகிட்ட நான் பேசுறேன்” என்று போன் செய்யப் போனவனைத் தடுத்த பகீரதி, “நான் பேசுறேன்ணா” என்று நீண்ட நாட்களுக்குப்பிறகு தன் தந்தையை போனில் அழைக்க... அவரின் “ரதிமா போய் சேர்ந்துட்டீங்களாடா?” என்றதில் மனதிலிருந்த கோபம் எங்கேயோ போக, “ம்.. வந்துட்டோம்ப்பா” என்றாள் குரலே வராமல்.

“சரிம்மா. கல்யாணம் முடிஞ்சதும் பார்த்து பத்திரமா வாங்க” என்றவருக்குள் கணக்கிலடங்கா நிம்மதி. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மகளின் “அப்பா” என்ற அழைப்பைக் கேட்டிருக்கிறாரே.

“அப்பா” என தயங்கியவளிடம், “என்னமா? எதாவது பிரச்சனையா? கல்யாணம் நல்லபடியா நடக்குதுதான? உங்களுக்கு எதாவது..” என்றதும் தந்தையின் கற்பனைகள் விரிவதை உணர்ந்து...

“அச்சோ! அப்பா எங்களுக்கு எதுவுமில்லை தாரிணிக்குத்தான்” என நிறுத்தியவள் நடந்ததை வேகவேகமாக ஒப்பிக்க, “அம்மு நல்லா யோசிச்சித்தான் இந்த முடிவு பண்ணினியா? என்றார்.

“ஆமாப்பா. தாரிணியை எல்லாரும் தப்பா விமர்சனம் பண்றாங்க. இப்ப மேரேஜ் வேண்டாம்னு சொல்லி அவளை படிக்க அனுப்பினாலும், இந்த நேம் அப்படியேத்தான்ப்பா இருக்கும். அவளை உங்களுக்கும் தெரியுமேப்பா என்னைவிட நல்லவப்பா. ப்ளீஸ்பா ஓகே சொல்லுங்கப்பா?” என கெஞ்சினாள்.

“அம்மு! அப்ப சிந்து?” என்று மகளுக்கு நினைவுபடுத்தினார்.

“அப்பா!” என அதிர்ந்தவள், “நான் மறந்தே போயிட்டேன்ப்பா. இங்க இவங்ககிட்டேயும்...” முடிக்க முடியாமல் தொண்டையடைக்க வந்த அழுகையை அடக்க முயற்சித்தும் அடங்காது வந்த கண்ணீர் கன்னம்தொட, “ஐ ஐம் சாரிப்பா” என்றாள் மிதமிஞ்சிய வருத்தத்தில்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, மகளின் கண்ணீர் ஒருபக்கம் அவரைக் கரைக்க, “சிந்துவை ப்ரவீணுக்கு கேட்டதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்குமா. சரி விடு. அந்த பேச்சு நம்ம ரெண்டு பேர் வீட்டாருக்கும் பேச்சளவுலதான் இருக்கு. இன்னும் நிச்சயம் பண்ணல. ஹ்ம்..” பெருமூச்சுவிட்டு, “இப்ப அது பிரச்சனையில்லை பார்த்துக்கலாம். என் பொண்ணு அத்தனை பேர் நடுவுல வாக்குக் கொடுத்தது நடக்கலன்னு ஆகக்கூடாது. நீங்க கல்யாணத்தை முடிச்சிட்டு வாங்க பார்த்துக்கலாம். இப்ப நான் திருப்பூர்ல இருக்கேன்மா. போனை ப்ரவீண்கிட்டக் கொடு” என்றார்.

“அப்பா” என்றவனிடம், “நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது போல ப்ரவீண். நீ அந்தப்பொண்ணை மேரேஜ் பண்ணிக்கோ. அம்மாவைதான் கொஞ்சம் சமாளிக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே என்னால எனக்காகன்னு அவ நிறைய இழந்திருக்கா. ப்ச்... அதோட இதுவும் ஒண்ணா சேரப்போகுது” என்றவரின் குரலிலுள்ள கலக்கம் அவனையும் வாட்டியது.

“இதுவரை சமாளிக்கலையா. இதையும் சமாளிக்கலாம்பா. நீங்க கவலைப்படாதீங்க. இப்படில்லாம் நடக்கும்னு நினைச்சோமா என்ன? எல்லாம் நல்லபடியா நடக்கும்பா. நான் அம்மாகிட்ட பேசிக்கறேன். தாரிணியை அம்மாவுக்கு பிடிக்கும்பா” என்றான் அவளைப் பார்த்தபடி.

அதன்பின் ஜெயராமனிடமும் கணபதி பேசி சம்மதிக்க வைத்து, மாப்பிள்ளையாக ப்ரவீண் மணமேடை அமர்ந்தான்.

இந்த களேபரங்கள் முடிந்து தாரிணியை முகம் கழுவி வரச்சொல்ல, அவளோ தோழியை கண்களால் அழைத்தாள். உள்ளே சென்றதும் கதவடைத்தவள், “புரிஞ்சிதான் பேசுனியா பாக்கி. எனக்குத்தான் வயசிருக்கே. அப்புறமென்ன? எனக்காக ஏன் உங்க அண்ணன் லைஃப்லயும் ரிஸ்க் எடுத்த. வந்த இடத்தில் இதெல்லாம் தப்பு பாக்கி. உன் பாசத்தைக் காட்டி அவங்களை நீ கார்னர் பண்ணிட்ட? வேற வழியில்லாம உனக்காக அவங்களும் சம்மதிச்சிட்டாங்க” என தோழி மேல் சரமாரியாக குற்றம்சாட்டினாள்.

“எங்கண்ணனை உனக்கு பிடிக்கலையா தர்ணி?” என்றவளை இடைமறித்து, “அப்படியில்லை பாக்கி. எனக்குப் பிடிக்குது பிடிக்கலைன்றது வேற. உங்கண்ணனுக்கு என்னைப் பிடிக்கணும்.”

“அப்ப உனக்கு எங்கண்ணனைப் பிடிக்கும்னு சொல்லு.”

“லூசாடி நீ?” என்று சத்தமாக திட்டி, “ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. உங்கண்ணனுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. விருப்பமில்லாத கல்யாணத்துல அவங்களை ஏன் கோர்த்துவிடணும் சொல்லு” என்றவள் குரல் இறங்கியிருந்தது.

“இல்ல தர்ணி. அண்ணனுக்கு பெர்சனலா உன்மேல கோவம் கிடையாது. நான் செய்த தப்புனால உன்மேல கோவமா இருக்காங்க. அதை நான் பார்த்துக்கறேன். இப்ப மணமேடைக்கு வர்றியா, இல்ல மணமகனா உட்கார்ந்திருக்கிற எங்கண்ணனை அவமானப்படுத்தப்போறியா?” என்றாள் கோவமாக.

“ஏய் லூசு! என்னடி பேசுற? ஒரு நிமிஷம்” என்று உள்ளே சென்று முகம் கழுவி, சின்னதாக அலங்காரம் செய்து, ஏற்கனவே கட்டியிருந்த புடவையை மாற்றி வேறொரு பட்டுப்புடவையில் மேடைக்கு வந்தாள்.

தற்செயலாகத் திரும்பிய ப்ரவீண், தாரிணியைப் பார்க்க, அதே நேரம் அவனின் கண்களை நேரில் பார்த்தவளோ, கண்களால் மன்னிப்பைக் கோரினாள். அவனோ அதைக் கண்டும் காணாதவன் போல் முகம் திருப்ப, அவளுள் புதிதாக ஒரு வலி வந்து போனது. ஏற்கனவே அவனுக்கு தன்னைக் கண்டால் பிடிக்காது. அதிலும் இது திடீர் திருமணம் வேறு. மனம் கலங்க கண்களில் கண்ணீர் தளும்பியது.

“தர்ணி என்ன நின்னுட்ட? எல்லாரும் பார்க்கிறாங்க பாரு. போய் உட்காரு” என்றதும் கண்ணீரை உள்ளிழுத்தபடி உட்கார்ந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் பெரியவர்கள் முன்னிலையில் தாலி கட்டி, தாரிணியை தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டான் ப்ரவீண்.

அனைவரும் அட்சதை போட்டு வாழ்த்திய பின், “ப்ச்... பையனுக்கு வயசிருக்கும் போலடா?” என தர்ஷன் வருத்தப்பட்டான்.

“ம்... இருபத்தேழு நம்மளை விட டூ இயர்ஸ் சீனியர்” என்றான் ஸ்ரீனிவாசன்.

“உனக்குத் தெரியுமாடா அவங்களை?”

“ஆமா ரொம்பவே தெரியும். தங்கச்சிக்குப் பார்த்திருந்த பையன்தான் பேரு ப்ரவீண்” என்றான் அமைதியாக.

“என்னடா இப்படிக் கூலா சொல்ற? உன் தங்கையைப் பேசிட்டு இப்படிப் போயி உட்கார்ந்துட்டான். நீ கண்டுக்காம நிற்கிற?” என்றான் வேகத்தில்.

“எனக்கு ஒண்ணு சொல்லு தர்ஷா, நீ எதுக்கு அந்தப் பொண்ணை மேரேஜ் பண்ணிக்கப் போறேன்னு கிளம்பின? என்ன பார்த்ததும் லவ்வா?”

“அ...அது” என தடுமாறிய தர்ஷனைப் பார்த்து, “இல்லைல்ல. நீ பரிதாபத்துல போன. அவன் பாசத்துல போனான். பாசத்துக்கு எப்பவும் ஒரு வேல்யூ உண்டு. அது அந்தப் பொண்ணை காலத்திற்கும் நல்லா வாழவைக்கும். உன்னோட பரிதாபம், கூடிய சீக்கிரம் கோவமாவோ, இயலாமையாவோ மாறி, சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாம் குடும்பத்துல சண்டை வந்து, குடும்பம் சீர்குலைஞ்சிரும்டா. எப்படியிருந்தாலும் அவன் என் மச்சான்தான் தர்ஷா” என்றான்.

“என்னது மச்சானா?”

“ஆமா. பக்கத்துல பாரு என்னோட முறைப்பொண்ணு நிற்கிறா” என்றான் புன்னகையுடன்.

"ஸ்ரீ இந்தப்பொண்ணு அன்னைக்கு...” என்று யோசித்தவன், “இவங்க கணபதி சார் பிள்ளைங்களா!?” என்றான் ஆச்சர்யமும் கேள்வியமாய்.

“ஏன்டா, என் தங்கைக்கு பார்த்த பையன்னும் போதே தெரிஞ்சிருக்கணும். ரொம்ப ட்யூப்லைட்டா இருக்கியே” என்று அவனைக் கிண்டலடித்தான்.

“என்னைக் குழப்புறடா. இந்தப்பொண்ணு எப்படி உனக்கு முறைப்பொண்ணாகணும்?”

“அது அவங்கம்மா என்னை அத்தை கூப்பிடச் சொன்னாங்கள்ல. அதுக்கு முன்னாடியிருந்து எனக்கு முறைப்பொண்ணு.” என்று சிரிக்காமல் சொல்ல,

“ஓ... அப்படியா!” என்று ஒத்துக்கொண்டவன். திடீரென்று, “ஹேய்! இரு இரு. எதோ தப்பாயிருக்கே. ஆமா. அவங்க அத்தை கூப்பிடச் சொன்ன பிறகுதான முறைப்பெண்ணாகனும். அதெப்படி முன்னாடி ஆச்சிது?”

“அது டாப் சீக்ரட் நண்பா. இப்ப உனக்கு இந்த தாமரைப்பூ கிடைக்கலைல்ல. நான் உனக்கு சிந்து நதிப்பூவைத் தர்றேன்டா” என்றான் வினயமாக.

“சிந்து நதிப்பூவா! சிந்துநதி எந்த மாநிலத்துல ஓடுது?” என்றவன் குழப்பத்தில் கூகுளைத் தட்ட ஆரம்பிக்க,

“தர்ஷா நீ மேப்ல தேடுனா போபால்னு வரும். நான் சொன்னது திருப்பூர்ல இருக்கு” என்றான் நண்பனைப் பார்த்து சிரித்தபடி.

“என்னை குழப்புறடா ஸ்ரீ. அப்புறம், சிந்து நதி எப்படி திருப்பூர் வரும்?”

சுதர்ஷனின் குழப்பம் கலந்த பேச்சில், இன்னுமே சிரிப்பு வர சத்தமாக சிரித்து, அவனின் தோள்மேல் கைபோட்டு, “நண்பா! நண்பா! அதெல்லாம் வரும்போது கண்டிப்பா வரும். ஆனாலும், இவ்வளவு நல்லவனா ஏன்டா இருக்கிற. வெரி பேட்யா” எனும்போதே சிந்துவிற்கு தர்ஷனை முடிக்க வேண்டுமென்ற முடிவை எடுத்துவிட்டான் ஸ்ரீ.

‘இருவருக்கும் நல்ல பொருத்தம் இருக்கு. அதனுடன் மற்றவர்களை விட சிந்து இவனிடம்தான் வெளிப்படையாக பேசி சிரிக்கிறாள்’ என்றும் தோன்றியது. “சரி நமக்கு இங்க வேலையில்ல. வா போகலாம்” என்று கிளம்ப, செல்லும் வழியிலேயே மகேந்திரனுக்கும், சிந்துவிற்கும் போன் செய்து விஷயம் சொன்னான்.

முதலில் அதிர்ந்தாலும், சூழ்நிலையை எண்ணி, “பரவாயில்லை. இதான் நடக்கணும்னு இருந்தா யாரால மாற்ற முடியும். அந்த சூழ்நிலையில் யாராயிருந்தாலும் எடுக்கிற முடிவுதான்” என்றார்கள் இருவரும் ஒரே மாதிரியாக.


‘என்ன மனுஷங்கடா இவங்களுக்கு பெயரளவுல கூட அவன்மேல் கோவம் வரவேயில்லை. அவனின் சூழ்நிலையைப் புரிந்து எனக்கே ஆறுதல் சொல்றாங்க.’ தன்னை நல்ல குடும்பத்தில் சேர்த்த கடவுளுக்கு எப்பவும்போல் நன்றிகள் சொன்னான் மனதார.
 
Active member
Joined
May 9, 2025
Messages
110
That’s why they we have to take the kids in the marriageable age to other marraiages, where someone will be a readymade ponnu or mappillai 😜
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
That’s why they we have to take the kids in the marriageable age to other marraiages, where someone will be a readymade ponnu or mappillai 😜
Haha Athu Sari
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top