• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
71
கதைப்போமா 19


ஆராத்யா காவல் நிலையத்திற்கு வரும்போது. மேலிடத்தில் அப்ளை செய்து அவனுக்கான முன்ஜாமினை வாங்கி வந்திருந்தார் அவர்களுடைய வக்கீல். சில கோப்புகளில் கையெழுத்திட்டு கொண்டிருந்தார்கள். அவள் காவல் நிலையத்திற்குள் நுழைந்தாள்.

அவளைப் பார்த்ததும் அபிமன்யுவின் கண்கள் மின்னியது. அவள் சென்று வந்த காரணம் நியாபகத்திற்கு வர, அடுத்த நிமிடம் அவன் புருவம் இடுங்கியது. அவனால் அவளை நோக்கிச் செல்ல முடியவில்லை. அவள் அவனை நோக்கி வந்தாள்.

அவன் கரத்தைப் பற்றித் தன் கரத்தில் வைத்துக் கொண்டாள். பல வார்த்தைகள் சொல்ல முடியாத உணர்வுகளை அந்த ஸ்பரிசமும் கண்களில் இருந்த மலர்வும் அவனுக்குத் தந்தது. அது அவனுக்குள் அப்படியே கடத்தப்பட்டது.

“எப்படி இருக்கீங்க?” என்று உதட்டசைத்து கேள்வி எழுப்பினாள்.

“நல்லா இல்ல, இதெல்லாம் எப்ப முடிவுக்கு வரும்னு இருக்கு. நீ எப்படி இருக்க?? என்னை நம்புற தானே?” என்று அபிமன்யு கேள்வி எழுப்பினான்.

கண்களை மூடித் தன் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு ‘நம்புகிறேன்” என்று உதட்டையும் அசைத்து இருந்தாள். இதையேதான் முன்தினமும் செய்தாள். அவளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் சூழல் அதற்கு ஏதுவாக இல்லை.

தன் கரத்தில் படிந்து இருந்த அவள் கரத்தின் மீது இன்னொரு கரத்தை எடுத்து வைத்து அழுத்தம் கொடுத்தவன். “தேங்க்ஸ்” என்றான்.

நன்றி வேண்டாம் என்று தலையசைத்தபடி, இதழ்களை லேசாக விரித்தாள். அந்தப் புன்னகையில் உயிர்ப்பு இல்லை. ஆனாலும் அவனுக்கு ரசிக்கத் தோன்றியது.

பற்றிய கரத்தை அவன் விடவே இல்லை. அங்கிருந்து அவர்களை அழைத்துச் செல்லும் போதும் சரி, வாகனத்தில் ஏறும் போதும் சரி, அதன் பிறகும் கூட அவள் கரத்தை அவன் விடவில்லை.

“இந்தப் பொண்ணு அவங்க புருஷனை ரொம்ப நம்புது. ஒருவேளை அவன் நல்லவனா இருப்பானோ??, இல்ல அந்தப் பொண்ணு வெகுளியான பொண்ணா?” என்று ஒரு கான்ஸ்டபிள் கேட்க.

“அட நீ வேற, காலேஜ்ல பொம்பள பிள்ளைய மயக்கின மாதிரி, ஆறே நாள்ல பொண்டாட்டியை வசியம் பண்ணி வச்சிருக்கான். கொடுத்து வச்சவன். நமக்கும் வாச்சு இருக்குங்களே??” என்று பெருமூச்சு வெளியிட்டார் இன்னொருவர்.

பார்ப்பவர்களும் கேட்பவர்களும் தங்களுக்குள் யூகித்து, கிரகித்து கதை கட்ட ஆரம்பித்து விடுவார்கள். அங்கே அதுதான் நடந்து கொண்டு இருந்தது. அவர்கள் அனுபவத்திற்கும் இதுபோல நிறைய பார்த்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அபிமன்யுவை தான் சந்தேகப்பட தோன்றியது.

வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த தாயையும் தந்தையையும் பார்த்த ஆத்ரேஷ், விளையாட்டுப் பொருட்களை அப்படியே விட்டுவிட்டு அப்பா என்று ஓடி வந்தான். அவனை வாரி அணைத்து உச்சி முகர்ந்தவன். ஒரு கையால் மகனைப் பற்றிய படி, மறு கையால் மனைவியை மீண்டும் பற்றிக் கொண்டான். ஏதோ தவிப்பு அந்தத் தொடுதலில் இருந்தது. மீண்டும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் சென்று விடுவேனோ என்ற பயம் இருந்தது. அதை அவளால் உணர முடிந்தது.

“அப்பா, அம்மா சூப்பர் உமன். அப்பா வேணும்னு நேத்து தான் கேட்டேன். அம்மா உடனே கூட்டிட்டு வந்துட்டாங்க. உங்களுக்கு ஒன்னு தெரியுமா?? நான் கூட அப்பா வேணும்னு அழுவல. ஆனா அம்மா அழுதாங்க. ஆனா அடுத்த நாளே அப்பாவ கூட்டிட்டு வந்துட்டாங்க” என்று தந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்தபடி மகன் கூறிக் கொண்டிருக்க.

அவள் ஆத்ரேஷை தொட்டு, “தான் அழைத்து வரவில்லை. உன் தாத்தா தான் அழைத்து வந்திருக்கிறார்” என்று அவனுக்குச் செய்கையால் காட்டினாள்.

இந்தச் சிறு விஷயத்துக்குக் கூட தன்னை காட்டுகிறாளே? என்று செந்தாமரைக்கு நெகிழ்வாகப் போய்விட்டது.

குளித்துவிட்டு வந்து அவன் சாப்பிட, மற்றவர்களும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்களுக்குத் தனிமை வேண்டும் என்று உணர்ந்து செந்தாமரை.

“அங்க சரியா உன்னால தூங்கி இருக்க முடியாது. போய் ஓய்வு எடுத்துக்கோப்பா. சாயங்காலம் வக்கீல் வரேன்னு சொன்னாரு” என்றார்.

அவனுக்கும் அது அப்போது தேவைப்பட்டது. குழந்தை மனைவி என்று அவர்களுடன் தனிமை தேவைப்பட்டது. அவளுக்குமே தேவைப்பட்டது அவனிடம் பேசுவதற்காக.

குழந்தை தாயின் மடியில் தலை வைத்துக் கொள்ள அவள் தலையை வருடிக் கொடுத்தாள். தந்தையின் மடியில் தன் கால்களை வைத்துக் கொள்ள அவன் கால்களை அழுத்திக் கொடுத்தான். அந்த இதத்தில் குழந்தை நன்றாக உறக்கத்தை தழுவி இருக்க.

“நான் உங்களிடம் பேச வேண்டும்” என்று அவள் சொல்வதற்கு வாயை அசைத்திருக்க. அதற்குள் அவன் பேசியிருந்தான்.

“எதுக்காக அங்க போன தியா??. அந்தப் பொண்ணு சரியான அடமென்ட். இப்ப இல்ல, காலேஜ்கு அந்தப் பொண்ணு வந்த புதுசுலயே என்கிட்ட வந்து அவளோட காதல சொன்னாள். காலேஜ்ல இதெல்லாம் சகஜம், ப்ரொபசர ஸ்டூடண்ட்ஸ் சைட் அடிக்கிறது. ஆனா எங்களுக்குச் சில வாக்குறுதிகள்போல வாங்குவாங்க. ஸ்டுடென்ட்ஸை ஸ்டுடென்ட்ஸா மட்டும் தான் பார்க்கணும். ஆசிரியர் தொழில் உன்னதமானது. அதை மிஸ் யூஸ் பண்ண கூடாதுன்னு. நாங்க எம். பில் பண்ணும்போது எங்களுக்கு அதுக்காக ஒரு சைக்காலஜி கிளாஸ் எடுப்பாங்க. நானுன்னு இல்லை எல்லா ப்ரொபசர்சுமே அப்படித்தான் பாப்போம். அதுல யாராவது விதிவிலக்கா இருக்கலாம், அதுக்காக ஒட்டுமொத்த ஆண்களையும் ப்ரொபசர்களையும் டீச்சர்சைய்யும் குறை சொல்லிட முடியாது. அவள் வந்து என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணும்போது ப்ரீத்தி ஆத்ரேஷை வயித்துல சுமந்துகிட்டு இருந்தாள். அதுவும் எயிட் மந்த்ஸ். டீன் ஏஜ் பொண்ணு தானே, ஆர்வக்கோளாறுல சொல்றானு நெனச்சேன். ஆனாலும், ரொம்ப கிளியரா சின்ன பிள்ளைக்குச் சொல்ற மாதிரி அவளுக்குப் புரிய வச்சேன். எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு குழந்தை பிறக்கப் போகுதுன்னு. அழுதுகிட்டே போயிட்டாள். அதுக்கப்புறம் ஒதுங்கித் தான் இருந்தாள். நானும் அவளை அப்படியே மறந்துட்டேன். அடுத்த ஒன் அண்ட் ஆப் மந்த்குள்ள ப்ரீத்தி ஆத்ரேஷை பெத்து குடுத்துட்டு இறந்துட்டாள். என்னால அந்த இழப்பை ஏமாற்றத்தைத் தாங்கிக்கவே முடியல. ஒன்னு பச்ச குழந்தையா என் புள்ளை தாயுக்கும், பாலுக்கும் தவிச்சுக்கிட்டு இருந்தான். இன்னொன்னு ப்ரீத்தி வீட்ல எனக்குச் செஞ்ச துரோகம். அட்லீஸ்ட் அவளாவது என்கிட்ட உண்மையைச் சொல்லி இருக்கலாமேன்னு ஆதங்கம் எல்லாம் சேர்த்து என்னை ரொம்ப சாச்சுருச்சு. கிட்டத்தட்ட த்ரீ மந்த்ஸ் நான் காலேஜுக்கு போகல. கெஸ்ட் ப்ரொபசர் வச்சு தான் என்னோட கிளாஸ் ஹாண்டில் பண்ணாங்க. நான் என்னைத் தேத்திக்கறதுக்கு, நாட்கள் பிடிச்சுது”, என்று அவன் கூறும் போதே அந்த நாட்களின் ஞாபகங்களில் அவன் கண்களில் கண்ணீர் குலம் கட்டியது. தன் இரண்டு விரல்களால் அதைத் துடைத்துக் கொண்டவன். மேலும் பேச்சைத் தொடர்ந்தான்.

“ஆத்ரேஷ் என் நெஞ்சிலே தான் தூங்குவான். தாயோட கத கதப்புக்கு பதிலா தந்தையோட அரவணைப்பு மட்டும் தான் அவனுக்குக் கிடைத்தது. அதனால கல்லூரிக்குப் போகணுன்ற எண்ணமே எனக்கு இல்ல. மூணு பாசத்துக்கு அப்புறம் என்ன தேத்திகிட்டு குழந்தையை அம்மா கிட்ட விட்டுட்டு காலேஜுக்கு போனேன். முதல் நாளே வந்து நின்னாள்.

“சாரி சார் உங்களுடைய இழப்புக்கு. ஆனா இப்போ எனக்கு இன்னொரு சான்ஸ் கிடைச்சிருக்கு உங்க மகனை என் மகன்போல நான் நல்லா பாத்துப்பேன்னாள். இருக்கிற கடுப்புல என் பொறுமை காணாம போயிடுச்சு. ஓங்கி அரஞ்சுட்டேன் . இன்னொரு வாட்டி என் முன்னாடி வந்தா கொன்னுடுவேன்னு மிரட்டி அனுப்பினேன். கொஞ்ச நாளைக்கு ஓரமா இருந்தாள். என்கிட்ட வரலையே தவிர, தூரமா இருந்து என்னை அட்ராக்ட் பண்றதுக்கு நிறைய ட்ரை பண்ணாள். அவள் என் பின்னாடி தொடர்ந்துகிட்டே இருக்கான்றத, எனக்குக் காட்டிக்கிட்டே இருந்தாள். அதை நானும் கவனிச்சேன். சில நேரங்களில் முறைச்சேன். சில நேரத்துல என்னோட மன அழுத்தத்துல கண்டும் காணாம போயிட்டேன். அதுக்கப்புறம் இது அப்பப்ப தொடர்ந்துகிட்டே இருந்துச்சு. கல்யாணம் ஒருமுறை தான் நடக்கணும். எனக்கு நடந்திருச்சு, எனக்கு என் பையன் போதும்னு அவள் கிட்ட தெளிவா சொல்லிட்டு நான் என் வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டேன். எப்படியும் மாசத்துக்கு ஒரு வாட்டி என் முன்னாடி வந்து நிற்பாள். மனசு மாறிடிச்சானு கேட்பாள். நீ என்ன லூசா? உனக்கு ஒரு வாட்டிச் சொன்னா புரியாதா??. இப்படி எவ்வளவு கேள்வி கேட்டாலும் திரும்பத் திரும்ப வந்து நிப்பாள். போன வருஷம் அவள் மேல நான் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன். மேனேஜ்மென்ட் கூப்பிட்டு வார்ன் பண்ணி விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் அமைதியா இருந்தான்னு பார்த்தா??. நம்ம மேரேஜ் முடிஞ்சு நான் காலேஜ்க்கு போன அந்த மூன்றாவது நாள் வந்து நின்னாள். நான் அவளைக் கண்டுக்கல. காலேஜ் முடிச்சு நான் கார்ல வந்துட்டு இருக்கும்போது அவள் பின்னாடி வந்து இருக்காள். நான் அதைக் கவனிக்கல. ஆத்ரேஷ் கிட்ட இருந்து போன் வந்ததுனால, காரை ஓரமா நிறுத்தும்போது அவள் வந்து நின்னு கார் கதவைத் தட்டினாள். அங்கேயே பிடிச்சு நல்லா திட்டி அனுப்பினேன். உங்க ரெண்டு பேர பார்த்ததுக்கு அப்புறம் எல்லாத்தையும் மறந்துட்டேன். இதை நான் ஒரு விஷயமா கூடக் கன்சிடர் பண்ணல. பைத்தியத்தோட பேச்சா தான் நினைச்சேன். அதனால தான் உன் கிட்ட கூடச் சொல்லல. ஆனா அது இப்ப என் வாழ்க்கையை புரட்டிப் போட்டுடுச்சு. சில நேரங்களில் நாம பாவம் பாக்குறது நமக்கு வினையா வந்து முடிஞ்சிடும். அப்படித்தான் இதுவும். நான் இத்தனை வருஷம் சொல்லிக் கேட்காதவள். நீ போய் சொன்னவுடனே கேட்டுருவாளா?? தன்னை தவிர வேற எதைப் பத்தியும் யோசிக்க மாட்டாள். சரியான சுயநலவாதி. அவள் நெனச்சது நடக்கணும். அதுக்காக அவள் என்ன வேணா பண்ணுவாள்”. “உனக்கு ஒன்னு தெரியுமா?? காலேஜ் ஆன்வல் டேல டான்ஸ் பர்பாமென்ஸ் பண்ண இருந்த பொண்ணோட காலை உடைச்சி. அவள் இடத்துல இவள் டான்ஸ் பெர்பார்மன்ஸ் பண்ணாள். இதெல்லாம் அவங்க கேங்குக்கு தெரியும். ஏன் மேனேஜ்மென்ட்கும் தெரியும். சில ப்ரொபசர்ஸ்க்கும் தெரியும். இந்த டீன் ஏஜ்ல இதெல்லாம் நடக்கிறது தான். அதெல்லாம் கண்டும் காணாம விட்டுடலாம்னு மேனேஜ்மென்ட் சொன்னதுனால நானும் கம்முனு விட்டுட்டேன். இப்ப என் கண்ணுக்குள்ள புகுந்து உருத்திட்டு இருக்கு” என்று அவன் ஆதங்கமாகப் பேசிக் கொண்டிருக்க.

“உங்க மேனேஜ்மென்ட் உங்களுக்குத் துணைக்கு வரமாட்டாங்களா??” என்று கேட்டாள்.

“காலேஜா, இல்ல ப்ரொபஸரானு வரும்போது அவங்க காலேஜை தான் பாப்பாங்க தியா. அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஆனா கேட்டுப் பார்க்கலாம். சப்போஸ் எனக்கு ஹெல்ப் பண்ணவும் வரலாம்” என்றான்.

“அந்தப் பொண்ணோட ஃப்ரெண்ட்ஸ்?” என்று அவள் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

“அதுக்கெல்லாம் சான்ஸ் இல்ல. அதுங்க எல்லாம் ஜால்ரா தூக்குறதுங்க. பாய்ஸ் கேர்ள்ஸ்னு அவங்க டீம்ல சில பேர் இருக்காங்க. தப்பே செஞ்சாலும், ஆஹா ஓஹோன்னு என்கரேஜ் பண்ற மாதிரிக் கத்தி கத்தி அந்தப் பொண்ண குட்டிச்சுவராக்கி வச்சிருக்கறது அந்தக் கேங்க தான். அவங்க யார்கிட்டயும் நீதி நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. இவ்வளவு பெரிய பழியை தூக்கிப் போட்டு இருக்காள். கொஞ்சம் மாச்சம் யாரை பத்தியாவது யோசிச்சாளா பாரு?? அவங்க பேரன்ட்ஸ், நான், என்னோட குடும்பம் குழந்தை பொண்டாட்டி, இப்படி யாரை பற்றியும் யோசிக்கல, அவள் அவளைப் பத்தி மட்டும் தான் யோசிப்பாள். ச்சே” என்று அவன் கோபத்தை கட்டிலை அழுத்தியபடி குறைத்துக் கொள்ள நினைத்தான்.

“அவளே கேஸ் வாபஸ் வாங்குறேன்னு சொன்னாள்?” என்று டைப் செய்து அவன் முன்பு காட்டினாள்.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
71
“சான்சே இல்ல, நீ கேட்டதற்காக இறங்கி வந்தாளா??, என்னால நம்ப முடியல??. வேற ஏதோ பிளான் பண்றான்னு நினைக்கிறேன்” என்றான்.



“இறங்கி வரல, கண்டிஷன் போட்டாள்” என்று எழுதிக் காட்டினாள்.



“கண்டிஷனா? என்னது??”.



“நான் உங்கள கன்வின்ஸ் பண்ணி டைவர்ஸ் பண்ண வைக்கணுமாம். அதுவும் ஒரே நாள்ல. நாளைக்கு காலையில இத பத்தி சொன்னா, அவள் கேஸை வாபஸ் வாங்குறாளாம். இல்லாட்டி டிவி சோஷியல் மீடியானு தம்பட்டம் அடிப்பேன்னு சொல்றாள். அவளுக்கும் அவள் பிரெண்ட்ஸ்ங்களுக்கும் நிறைய யூடியூப் சேனல் இருக்காம். அதுல எல்லாம் வெளிப்படுத்தி அசிங்கப்படுத்துவேன்னு சொல்றாள்” என்றாள்.



“சொன்னேன்ல சரியான பைத்தியம் அது?” என்று கூறியபடியே எழுந்து நின்றான்.



“நாம டைவர்ஸ் அப்ளை பண்ணி கேசை வாபஸ் வாங்க வைக்கலாம்” என்று அவள் காட்டிய பேப்பரை கசக்கி அவள் முகத்திலேயே தூக்கி எறிந்து அவளை உக்கிரமாகப் பார்த்தான் அபிமன்யு.
 
Member
Joined
May 9, 2025
Messages
57
When is the next part waiting for a week
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top