• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
40
கதைப்போமா 7

நாட்களைக் கடத்தாமல் அன்றே கவிச்சந்திரனுக்கு அழைப்பு விடுத்து தங்களின் செயலுக்காக மன்னிப்பு கேட்டவர். தங்களுக்கு திருமணத்தில் முழு சம்மதம் என்றும் கூறியிருந்தார்.

அவன் அதை எதிர்பார்த்து இருந்ததால், பெரிதாக எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டான். அவனைப் பொறுத்தவரை அபிமன்யுவின் தாய் ஏதாவது பேசுவாரா என்று தான் தயங்கினான். அதற்கான வழியையும் அபிமன்யுவே சொல்லிவிட அதற்கு மேல் தோண்டி துருவித் தன் தங்கைக்குக் கிடைக்க இருக்கும் நல்ல கணவனை இழக்க அவனும் தயாராக இல்லை.

“ஒரு வழியா உங்க தங்கச்சி திருமணம் செட்டில் ஆயிடுச்சா??, வேணான்னு அவ்வளவு கத்திட்டு போனவன் கிடீர்னு சம்மதிச்சாங்கன்னா என்ன அர்த்தம்?? ஒருவேளை அவங்க ஏதாவது நகை பணம் அதிகமா கேக்குறாங்களா??. இதுவரைக்கும் வந்தவங்க எல்லாம் ஊமை பொண்ணு தானே பணத்தை சுருட்ட பார்த்தார்களே அதுபோல?” என்று குழலி கேட்க.

“இல்லை” என்றான் அவன்.

“நான் சும்மா கத்திகிட்டே இருக்கேன். என்கிட்ட மறைக்கணும்னு நினைக்காதீங்க. பின்னாடி ஏதாவது எனக்குத் தெரிய வந்துச்சுன்னா. நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்றாள் குழலி.

“இப்ப மட்டும் அப்படி இருக்கிறதா உனக்கு நினைப்பா??” என்று மனதிற்குள் தான் நினைத்துக் கொண்டான் அவன்.

“என்ன மனசுல நினைக்கிறீங்க?? நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு. எல்லாத்தையும் தூக்கி உங்க தங்கச்சிக்கு கொடுத்துட்டீங்கனா??. அப்புறம் நம்ம பொண்ணுக்கு ஒன்னு இல்லாம போயிடும்” என்று இரண்டரை வயது பெண் குழந்தைக்கு இப்பொழுதே பேசினாள்.

தன் முன்னால் இருந்த குழந்தையைப் பார்த்துவிட்டு, திரும்பி அவளை முறைத்தான். “என் பொண்ணுக்கு பண்றதுக்கு நான் இருக்கேன். என் தங்கச்சிக்கு பண்றதுக்கு எங்க அப்பா எல்லாத்தையும் சேர்த்து வச்சுட்டு தான் போயிருக்கார். எங்களுக்குன்னு இந்த வீடு. தங்கச்சிக்கு நகைங்க அவளோட திருமணத்துக்குப் பணம். ஏன் என் அம்மா பேர்ல கூடப் பணம் போட்டு வச்சிருக்காரு. எல்லாமே அவரோட உழைப்பு மட்டும் தான். அதனால் நீ கவலை படத் தேவையில்லை. உன் பொண்ணுக்கு நான் சேர்த்து வைப்பேன். நான் கையாலாகாதவன் கிடையாது. நல்லா சம்பாதிக்கிறேன் அது உனக்கு நல்லாவே தெரியும்” என்றான் அழுத்தமாக.

“அதெல்லாம் இருக்குன்னு எனக்கும் தான் தெரியும். ஆனா அதிகமா கேட்டா நீங்களும் அதிகமா செய்யறேன்னு வாக்கு கொடுத்திட போறீங்க??. அதுக்கு தான் பேசினேன்” என்று அவள் இடைப்புகுந்தாள்.

“ஒன்னு பண்றியா?? நான் என் தங்கச்சிக்கு திருமணம் செய்யுற வரைக்கும். நீ உங்க அம்மா வீட்ல போய் ரெஸ்ட் எடுத்துட்டு வரியா?“ என்று கேட்டான் கவிச்சந்திரன்.

“ஏன் ஏன் ஏன்??? எனக்குத் தெரியாம அப்ப ஏதோ பண்ண போறீங்க?”, என்றாள் அவள்.

“நான் ஏதாவது பண்ண போறேன்ற டென்ஷன்லையே உனக்குப் பிபி ரைஸ் ஆயிடும்னு எனக்குத் தோணுது. அது உனக்கும் நம்ம குழந்தைக்கும் நல்லது இல்ல. இப்படியே நீ கத்திக்கிட்டு இருந்தா அது நம்ம பொண்ணுக்குமே நல்லது இல்லாம போயிடும். என்னோட பேங்க் அக்கவுண்ட் டீடைல்ஸ் எல்லாம் உனக்குத் தெரியும். நானா ஆசைப்பட்டு என் தங்கச்சிக்கு என்ன செய்யணும்னு நினைக்கிறனோ அதைச் செய்வேன். மத்தபடி எல்லாம் எங்க அம்மா அப்பாவும் சேர்த்து வைத்தது தான். அதுவே அதிகமா தான் இருக்கு. எனக்குமே சேர்த்து வச்சிருக்காங்க எங்க அப்பா. அதனால நீ அமைதியா இரு. அப்படி இருக்க முடியலன்னா உங்க அம்மா வீட்டுக்குப் போ. திருமணம் முடிவாகும்போது சொல்றேன் வந்து கலந்துக்கோ. அதுவரைக்கும் என்ன நிம்மதியா விடு. உண்மைய சொல்லனும்னா, உண்மையிலேயே அந்த அபிமன்யு குடுத்து வச்சவரு” என்று சாதாரணமாகக் கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் கூறுகின்ற வார்த்தைகள் பொறுமையாகத் தான் அவளுக்குப் புரிந்தது. மனதினுள் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஆனால் உண்மையில் கர்ப்பத்தை காரணம் காட்டி தன்னை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டால் என்ன செய்வது?? கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு. தன் வயிற்றை தடவி பார்த்துக் கொண்டாள்.

அவனைத் தேடிப் பிடித்துச் சென்றாள். “அப்ப ஒன்னு பண்ணுங்க .கல்யாணம் முடியற வரைக்கும் உங்க ஏ டி எம்கார்டையும் பாஸ்புக்கையும் என்கிட்ட கொடுத்துடுங்க. உங்களோட ஜீ. பே நம்பரையும் டீஆக்டிவேட் பண்ணிடுங்க. அதுக்கப்புறம் எல்லாத்தையும் சரி பண்ணிக்கோங்க” என்று கூறினாள்.

இவளைத் திருத்த முடியாது என்று பல்லை நரநரத்தவன் வீட்டைவிட்டே சென்று விட்டான்.

…..

“தூங்கிட்டியா?” என்று அபிமன்யுமிடமிருந்து மெசேஜ் வர. அவள் இல்லை என்று பதில் அளித்தாள்.

“சைன் லாங்குவேஜ் எப்படி கத்துகிறதுன்னு. நீ இங்க வந்து எனக்குக் கற்றுக்கொடுக்கிறியா??, இல்ல அதுக்கு முன்னாடி ஏதாவது கோச்சிங் கிளாஸ் போகவா?“ என்று கேட்டான் அபிமன்யு.

“அதெல்லாம் அவசியம் இல்லை, நான் பேசப் பேச நீங்கப் பார்த்தா புரிஞ்சிடும்” என்றாள் ஆராத்யா.

“எனக்குப் புரியும் ஆனா மகனுக்கும் புரிய வைக்கணுமில்ல?“ என்று அபி கேட்க.

“நான் புரிய வச்சுக்கிறேன்” என்று அவள் பதில் உரைத்தாள்.

“உண்மையிலேயே என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?“ என்று அபிமன்யு கேள்வி எழுப்பினான்.

“அதே கேள்வியை நான் திரும்பக் கேட்க வா?” என்று அவள் கேள்வி எழுப்பினாள்.

“நீ நல்லா பேசுவ போல, உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னு தோணுது” என்று அவன் சாதாரணமாகக் கூறினான்.

சிறிது நேரம் அவளிடமிருந்து பதில் இல்லை.

“என்ன தியா?? சாதாரணமா பேசுறத சாதாரணமா எடுத்துக்கோ. உனக்கு இருக்கிறது குறையா நான் நினைக்கல. நீயும் அதை நினைக்காத. இப்படி நான் பேசுறதுக்கெல்லாம் நீ குறை கண்டுபிடிச்சா அப்புறம் நான் எண்ணி எண்ணி பேச வேண்டியதாயிடும். நீ இப்படி எனக்கு மெசேஜ் பண்றது என்கிட்ட பேசுற மாதிரி தான் இருக்கு. ஆனா காலம் முழுக்க மெசேஜ் கூடக் குடும்பம் நடத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமா நான் சைன் லாங்குவேஜ் படிக்க ட்ரை பண்றேன். நீ வந்ததுக்கப்புறம் உன்கிட்ட இருந்து கத்துக்கறேன்” என்றான்.

அவன் கூறிய தியா அவளுக்கு அப்போதுதான் உரைத்தது. மனதில் சந்தோஷமான துள்ளல் ஏற்பட்டது. மனதில் தோன்றிய சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட பகிர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலையை எண்ணி வருந்தினாள்.

“ஆத்ரேஷ் என்ன பண்றான்?” என்று ஆராதியா கேட்க.

“என் பக்கத்துல தான் படுத்துட்டு இருக்கான். ஹோம் ஒர்க் எழுதிக்கிட்டு இருக்கான்”,

“ஹோம் ஒர்க் எல்லாம் நான் எழுத வச்சிருவேன்” என்றாள் அவள்.

“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ ரொம்ப டென்ஷன் ஆகாத” என்றான் அபிமன்யு.

திருமண நாள் குறித்தாகிவிட்டது. ஆனால் அதற்கு இரண்டு மாதம் இருந்தது. அவளைப் பார்த்துவிட்டு வந்த அந்த நாளிலிருந்து தினமும் இரவில் அவளுக்கு எதையாவது மெசேஜ் தட்டி விடுவான். அவளும் அதற்குப் பதில் அளிப்பாள்.. அவர்களுக்குள் மெலிதான ஒரு புரிதல் அங்கிருந்தே ஆரம்பம் ஆகியது.

அவனாக ஆத்ரேஷ் பற்றிக் கூறவில்லை என்றாலும். அவளாகவே தினமும் அவர்கள் இருவரின் பேச்சுக்கு இடையே அவனைக் கொண்டு வந்து விடுவாள்.

அப்படித்தான் ஒரு நாள் குழந்தையிடம் பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அவளால் இப்பொழுது பேச முடியாது. ஆனால் அவனிடம் பேசிப் பழகி கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். பெரியவர்கள் எனும்போது புரிதல் இருக்கும். சிறியவனிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

“ஆத்ரேஷ் கிட்ட பேசணும்னு ஆசைப்படுறேன். ஆனா என்னால பேச முடியாது. அவனை என்கிட்ட பேச வைக்கிறீங்களா?” என்று அவள் மெசேஜ் தட்டி விட்டபிறகு தான் அவன் அழைப்பை எடுத்து இருந்தான்.

திருமணத்திற்கு மகனை ஒருவாறு பழக்கப்படுத்தி இருந்தான் அபிமன்யு. ஆத்ரேஷுக்கும் அவளைப் பிடித்திருந்தது. அந்த அம்மாவையே கல்யாணம் பண்ணிக்கோங்கப்பா, அவங்க தான் அம்மா மாதிரி இருக்காங்க” என்று கேட்ட மகனுக்குத் தாய்ப்பாசம் என்பது முற்றிலும் புதிதான ஒன்றுதான்.

“உங்க அம்மா கிட்ட பேசுறியா?” என்று கேட்டான் அபிமன்யு.

சரி என்று அவன் ஆசையாகத் தலையாட்ட. வீடியோ கால் செய்து விட்டான் அபிமன்யு .

“ஹாய்” என்று கைகளை ஆட்டி வாயை மட்டும் அசைத்திருந்தால் ஆராத்யா.

“அப்பா, அம்மா பேசறது என் காதுலையே விழல” என்றான் மகன்.

அதைக் கேட்ட நொடி அவள் கண்கள் தானாகக் கண்ணீரை வெளியேற்றி விட்டது. அபிமன்யுவுக்கும் சங்கடமாகப் போய்விட்டது. திருமணத்தைப் பற்றி மகனுக்குப் புரிதலை ஏற்படுத்தியவன். அவளின் நிலையை பற்றிப் புரிதல் ஏற்படுத்தாத தன்னை நொந்து கொண்டவன்.

“அம்மாவுக்கு வாயில் அடிபட்டு இருக்கு. அதனால அவங்களால பேச முடியாது. அதனால அவங்க பேசும்போது குரல் நமக்குச் சரியா கேட்காது. ஆத்ரேஷ் நல்ல பையன் இல்லையா??, அம்மாவைக் கரெக்டா புரிஞ்சிக்க ட்ரை பண்ணுவானாம், அம்மாவுக்குத் துணையா இருப்பானாம், அம்மாவுக்காக அவனே பேசுவானாம்” என்று அபிமன்யு கூற. சிறியவன் புரியாமல் விழித்தான்.

“அம்மா, அவங்க வீட்ட விட்டுட்டு நம்ம ரெண்டு பேருக்காக இங்க வராங்க. அதுவும் முக்கியமா உனக்காக வராங்க. அவங்க பேசுறது நம்ம காதுல விழலைன்னாலும் அவங்க வாய் அசைக்கிறதை வச்சு அதைப் புரிஞ்சுக்க நாம முயற்சி பண்ணனும். நீங்களும் பிரில்லியன்ட் தானே?? நீங்களும் புரிஞ்சிப்பீங்க தானே?? ஒருவேளை அம்மா பேசுறது புரியலன்னா, அம்மா எழுதிக் காட்டுவாங்க, அதை என் அபிலேஷ் சரியா புரிஞ்சுப்பான் தானே??“ என்று கேட்டான்.

குழந்தைகளை எப்படி கையாளுவது என்று அவன் பிஹெச்டி முடித்து இருப்பான் போல, அழுது கொண்டிருந்தவள் வாயைப் பிளந்து அவர்கள் இருவரையும் பார்க்க. மகன் தந்தைக் கூறிய அனைத்திற்கும் தலையாட்டினான். அப்போதுதான் அவனையும் அவள் கவனித்தாள்.

“அம்மா, நீங்கக் கவலைப்படாதீங்க நான் உங்களுக்குத் துணையா இருப்பேன். நீங்க இங்க வந்தபிறகு நீங்கப் பேசறது எனக்குக் காதுல விழலனாலும் நான் புரிஞ்சுக்க ட்ரை பண்றேன். அப்புறம் இங்கிலீஷ்ல எழுதுனா எனக்குப் புரியும். தமிழ்ல எழுதினா” என்று அவன் விழித்து நிறுத்தினான்.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
40
“ஐயாவுக்கு கொஞ்சம் தமிழ் தகராறு அதுதான் இப்படி பேசுறான்” என்று அபிமன்யு அவர்கள் இருவருக்கும் இடையே வந்தான். ஆராதியாவின் இதழ்களில் இப்பொழுது புன்னகை மலர்ந்தது.

ஆராத்யா அவர்கள் இருவர் வாழ்க்கையிளும் சிறிது சிறிதாக நுழைந்து கொண்டிருந்தாள்.

“உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னு நினைச்சேன்” என்று பீடிகை போட்டான் அபிமன்யு .

“என்ன?” என்று அவள் கையை ஆட்டிக்கேட்டாள்.

“இல்ல உனக்கு இப்பதான் இருபத்தி நாலு வயசு ஆகுது. என்னோட வயசு தெரியுமா?” என்று கேட்டான்.

தெரியும் என்பது போல அவள் தலையாட்டினாள்.

“கிட்டத்தட்ட ஒன்பது வயசு வித்தியாசம். ஓகேவா??” என்று மூக்கை சுருக்கி அவன் பாவணையாகக் கேட்க.

ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டார் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள். அதையே தட்டச்சு செய்து அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

“ஃபர்ஸ்ட்டே உன்கிட்ட பேச வரும்போது இதெல்லாம் கேட்கணும்னு நினைச்சு தான் வந்தேன். ஆனா உன்ன பார்த்துப் பேசினதுல, நீ கொடுத்த பதில்ல, நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். அடுத்த நாளும் பேசணும்னு நினைச்சேன். நீ என்ன பதில் சொல்வ உங்க வீட்ல இருந்து வருவாங்ளான்ற டென்ஷன்லையே மறந்துட்டேன். அப்படியே மறந்து மறந்து இத்தனை நாள் ஆயிடுச்சு. நீ இன்னும் பதில் சொல்லாம இருக்க” என்றான்.

“எங்க அம்மாவும் அப்பாவுக்கும் பதிமூனு வயசு வித்தியாசம்” என்று அவள் மெசேஜ் தட்டியிருக்க.


“அட, எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆறு வயசு வித்தியாசம் தான். உன் அண்ணன் அண்ணி கூட லவ் மேரேஜ் தானே?? அப்பச் சேம் ஏஜ், இல்லன்னா ஒன் இயர் டிஃபரென்ஸ் மட்டும்தான் இருக்கும். அதனால தான் ஓகேவானு கேட்கிறேன். உங்க அப்பா அம்மாவுக்கு நடந்தது எப்பயோ நடந்தது. ஆனா இப்ப இந்த ஏஜ் டிஃபரண்ட்ஸ்ல பண்ணிக்கிறது இல்ல. கிட்டத்தட்ட ஒரு ஜெனரேஷன் கேப் விழுது” என்று கேட்டான் அபிமன்யு .

“எனக்கு அப்படியெல்லாம் தோணல எனக்குப் பிடிச்சிருக்கு. வயச வித்யாசமா நான் இதைப் பாக்கல. நீங்க என்ன நல்லா பாத்துப்பீங்கன்னு தோணுது. நானும் உங்க ரெண்டு பேரையும் நல்லா பார்த்துப்பேன். எனக்கு வேண்டியது அன்பு மட்டும்தான். அதை நீங்கக் கொடுப்பீங்கன்னு அன்னைக்கு நீங்கப் பேசும் போதே எனக்குப் புரிஞ்சிருச்சு” என்று கூறினாள். அவள் மெசேஜில் பேசினாலும், அவன் எப்பொழுதும் வீடியோ கால் தான் செய்வான். சில நேரங்களில் மகன் தூங்கி இருப்பான். பல நேரங்களில் தூங்காமல் விழித்திருப்பான். அவர்கள் இருவருக்கும் மட்டுமான புரிதல் இப்பொழுது மூவருக்குமாக மாறி இருந்தது.



……
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top