Member
- Joined
- May 20, 2025
- Messages
- 67
- Thread Author
- #1
எங்குத் திரும்பினும் பனிமூட்டம், பச்சை பசேலென்ற காடுகள், ரம்மியமாய் ஆர்ப்பரிக்கும் அருவிகள், அழகிய தோட்டங்கள் என உடலுக்கும் மனத்திற்கும் குளிர்ச்சி தரும் வகையில் இருந்தது அவ்விடம்.
முதல் நாள் அங்குச் சென்றதும் இயற்கையை ரசித்தவர்களாய் நிறையத் தற்படங்கள் எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தவர்கள் அருவியில் கால்களை நனைத்தவாறு ஓரிடத்தில் அமர்ந்தனர். அப்போது அங்கே சுற்றி உலவிய காதல் ஜோடிகளைப் பார்த்துத் திடீரெனக் கார்த்திகேயன் சிரிக்க, "ஏன் சிரிக்கிறீங்க?" எனக் கேட்டாள் வள்ளி.
"இல்ல இங்கே இருக்கிற பாதிப் பேர் ஹனிமூன் கப்புள்ஸ்னா மீதி பேர் லவ்வர்ஸ்ஸா வந்திருக்காங்க. இப்படிக் கையோட அணைச்சிக்கிட்டு லவ்வர்ஸ்ஸா சுத்துறவங்க நாளைக்கு ஹனிமூனுக்கு வேற யாரோட கையையோ தானே பிடிச்சிட்டு வருவாங்கனு நினைச்சேன். சிரிச்சேன்" என்றவன் சொன்னதும்,
"ஏன் அப்படிச் சொல்றீங்க? மேரேஜ் செஞ்சிக்கனும்ற எண்ணத்துல தானே லவ் பண்ணுவாங்க எல்லாரும். அப்புறம் எப்படி வேற யாரு கூடவோ ஹனிமூன் வருவாங்க" எனக் கேட்டாள்.
"நீ எந்தக் காலத்துல இருக்க வள்ளி? இப்பலாம் டைம் பாஸூக்கு ஊரு சுத்துறதுக்காக லவ் செஞ்சிட்டு கழட்டி விட்டுட்டு போற ஆணும் பொண்ணும் தான் அதிகமா இருக்காங்க. இப்பலாம் கல்யாணம் செஞ்சிக்கிற பெரும்பாலான ஆணுக்கும் பெண்ணுக்கும், அவங்க கணவனோ மனைவியோ முதல் காதலா இருக்கிறதே இல்லை. சிலர் இப்படி வேணும்னே செய்றாங்கனா சிலர் சூழ்நிலை காரணமா பிரிஞ்சி, வேற கல்யாணம் செய்துக்கிற மாதிரியும் ஆகிடுது" என்றவன் கூறியதைக் கேட்டதும்,
"நான் அப்படி இல்ல கார்த்தி! என்னோட ஃபர்ஸ்ட் லவ் நீங்க தான்" என்றாள் வள்ளி.
"ஹ்ம்ம் தெரியும் வள்ளி. உன்னோட கவிதை எல்லாத்தையும் வாசிச்சதுலயே புரிஞ்சிது. ஆனா நான் உனக்கு முன்னாடி அஞ்சு பொண்ணுங்களுக்குப் பிரபோஸ் செஞ்சிருக்கேன் வள்ளி" என்றவன் சொன்னதை நம்ப முடியாத பாவனையுடன் பார்த்தவளாய்,
"பொய் தானே சொல்றீங்க?" என்றாள்.
தன்னுடைய கணவன் தான் தனக்கு முதல் காதலாக இருக்க வேண்டும் என்பதைத் தன்னுடைய பல கவிதைகளில் வெளிப்படுத்தி இருக்கிறாள் வள்ளி. அதனால் தன்னுடைய கவிதை மூலம் தன்னைப் பிடித்துக் காதலித்ததாகக் கார்த்திகேயன் உரைத்ததும், தன்னைப் போல் அவனும் மணந்து கொள்ளப் போகும் மனைவியைத் தான் முதல் காதலாகக் கொள்ள வேண்டுமென்ற கொள்கையுடன் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.
அதனாலேயே அவன் உரைத்ததை அவளால் நம்ப முடியவில்லை.
"இல்ல நிஜமா சொல்றேன். என்னோட அம்மா அப்பா லவ் மேரேஜ் செஞ்சவங்க வள்ளி. அம்மா படிச்ச காலேஜூக்கு பக்கத்துல இருக்க ஹோட்டல்ல தான் அப்பா மேனேஜரா வேலைச் செஞ்சிட்டு இருந்தாங்களாம். அப்பாவைப் பார்க்க அம்மா அடிக்கடி ஹோட்டலுக்குப் போக, அம்மாவைப் பார்க்க அப்பா அடிக்கடி காலேஜ் வாசல்ல போய் வெயிட் பண்ணனு அவங்க காதல் அப்படியே டெவலப் ஆகி வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க. நான் பிறந்த பிறகு சொந்தகாரங்க கூடச் சேர்ந்துகிட்டாங்கனாலும் அவ்ளோ ஒட்டுதல் இல்லை. அதனால நான் காலேஜ் படிக்கும் போதே, எனக்கு எந்தப் பொண்ணைப் பிடிச்சாலும் கட்டி வைப்போம்னு அப்பாவும் அம்மாவும் சொல்லிட்டாங்க"
பேரதிர்ச்சியுடன் இதனைக் கேட்டுக் கொண்டிருந்தாள் வள்ளி. 'அப்ப நான் அவருக்கு முதல் காதல் இல்லையா?' ஏமாற்றமாய் உணர்ந்தாள்.
அவளின் முக மாறுதலை கவனித்தவனாய் அவசரமாய், "அதுக்காக நான் எல்லாரையும் காதலிச்சேன்னு நினைக்காத வள்ளி. உன்கிட்ட எப்படிக் கல்யாணம் செஞ்சிக்கலாமானு கேட்டேனோ அதே மாதிரி தான், எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சி கல்யாணம் செஞ்சிக்கலாம்னு மனசுக்குள்ள தோணிச்சுனா, கல்யாணம் செஞ்சிக்கலாமானு பிரபோஸ் செஞ்சிடுவேன். அப்படிச் செஞ்சதுல என்னை அக்சப்ட் செஞ்ச ஒரே ஆள் நீ தான்" எனக் கூறிச் சிரித்தான்.
'அப்ப இவர் பிரபோசலை நான் அக்சப்ட் செய்யாம இருந்திருந்தா வேற பொண்ணு பின்னாடி போயிருப்பாரு தானே' என்று எண்ணிய போதே இவளின் மனமும் முகமும் சுருங்கிப் போக, அந்நேரம் கார்த்திகேயனிடம் ஒரு தம்பதியர் தங்களது கைப்பேசியைக் கொடுத்துத் தங்களைப் புகைப்படம் எடுத்துத் தருமாறு கேட்கவும், அதில் கவனமானான் அவன்.
அடுத்தடுத்து அவன் அவளை அக்கறையுடன் பார்த்துக் கொண்டதில் அவனின் மீதான இந்தச் சுணக்கம் மனத்தினுள் பின்னோக்கிச் சென்றிருந்தது அவளுக்கு.
அன்றிரவு அறைக்குச் செல்லும் வழியில் மழைச்சாரல் தூரலாய் பொழிய, சிறிது தூரம் மழையில் நடந்து செல்லலாமென எண்ணி அவர்கள் வந்து கொண்டிருந்த வாடகை வண்டியை ரிசாட்டின் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பி விட்டு நடக்கத் தொடங்கினர் இருவரும்.
வள்ளி அவனின் கையினை இறுகப் பற்றியவாறு நடக்க, கார்த்திகேயன் அவளின் தோளைச் சுற்றிக் கைப்போட்டவனாய் அதீத மகிழ்வுடன் விசில் அடித்தவாறு இயற்கையை ரசித்தவனாய் நடந்திருந்தான்.
அறையினுள் நுழைந்த நொடி, ஈர உடையுடன் கார்த்திகேயன் அவளைக் கட்டிலில் தள்ளி இறுக அணைத்து இதழில் முத்தமிட, அவனுள் உருகிக் கரைந்தவளாய் தன்னிலை மறந்திருந்தவள் அவன் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல முற்படவும், தன்னுணர்வுக்கு வந்தவளாய், "வேண்டாம் கார்த்தி" என்றவள் அவனைத் தன் மீதிருந்து தள்ளினாள்.
தன்னை மறந்து இன்ப வானில் பறந்திருந்தவன், "எனக்கு வேணும்டா" என்று மீண்டுமாய் அவள் இதழுக்குள் புதைந்து கரைய, அவனது செயலில் மீண்டுமாய் அவனைத் தள்ளி நிறுத்தியவள், "ப்ளீஸ் வெளி இடங்கள்ல வேண்டாமே கார்த்தி" என்று கெஞ்சல் பார்வையுடன் கூறியிருந்தாள்.
அவளின் பார்வையில் இருந்த கெஞ்சல் அவனைச் சுய உணர்வுக்குக் கொண்டு வந்த போதும், "ஏன் என்னாச்சு வள்ளி?" எனக் கேட்டான்.
"இது.. இப்படி... வெளி இடங்கள்ல எனக்குக் கம்ஃபர்டபுள் இல்லை கார்த்தி. நம்ம தாம்பத்தியத்தை எப்பவும் நம்ம பெட் ரூம்ல அந்தப் பெட்டுல நாலு செவுத்துக்குள்ள வச்சிப்போமே! வெளி இடங்கள் சேஃப்டி மேல எனக்கு நம்பிக்கை இல்லை கார்த்தி. அப்படியே அது சேஃப்டியான பிளேஸ்ஸாவே இருந்தாலும் மனசுல ஒருவித பயத்தோடவே தான் நான் உங்களுக்கு இணங்குற மாதிரி இருக்கும். முழு மனசா என்னால் இருக்க முடியாது" என்றாள்.
அவள் கூறியது எதுவும் அவனுக்குச் சமாதானமாய் இல்லை. இனிப்பை திண்பதற்கு ஆசையுடன் வந்தவனிடம், இனிப்பை கையினில் வைத்துக் கொண்டே ஏமாற்றவது போன்ற அவளின் இச்செயலில் ஏமாற்றமடைந்த மனத்துடன், "இந்த வியாக்கியானத்தை எல்லாம் இங்கே வரதுக்கு முன்னாடியே சொல்லிருக்க வேண்டியது தானே. ஹனிமூன் போறோம் ஜாலியா இருக்கலாம்னு தான் அன்னிக்குத் தூங்கினேன். அதுக்குலாம் சேர்த்து வச்சி இப்ப என்னை ஏமாத்திட்டல! சந்தோஷம் தானே" என்று கோபத்துடன் உரைத்தவனாய் கைப்பேசியை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றிருந்தான் கார்த்திகேயன்.
அவனின் இந்தக் கோபத்தை எதிர்ப்பார்க்காதவளுக்குப் பெரும் அதிர்ச்சி.
'அப்ப இதுக்கு மட்டும் தான் நான் வேணுமா அவருக்கு. இது வேண்டாம்னா என்னையும் வேண்டாம்னு உதறிட்டுப் போய்டுவாரா? இதுக்குப் பேரு தான் காதலா அவருக்கு' என்று அவளின் உள்ளம் குமுற கண்களில் கண்ணீர் கசிய,
'நான் அவர் காதலை அக்சப்ட் பண்ணாம இருந்திருந்தா வேற யாரையாவது காதலிச்சி கல்யாணம் செஞ்சிருந்திருப்பாரு. நான் தான் என்னமோ அவரோடது காவிய காதல்னு நம்பி ஏமாந்து போய்ட்டேன் போல. இல்லனா இப்படித் தன்னை நம்பி வந்த பொண்ணை ராத்திரி தனியா விட்டுட்டு போவாரா?' என்றெல்லாம் எண்ணி இவள் அழுது கரைந்தவாறு படுத்திருக்க,
கைப்பேசி இணைப்பு கிடைக்கும் இடத்திற்குச் சென்று பெற்றோரிடத்தில் பேசிவிட்டுத் தன்னை நிதானப்படுத்தியவனாய் அறைக்குள் வந்தவன் அவளின் அழுகையைக் கண்டு, 'அப்படி என்ன கோபம் உனக்கு?' என்று தன்னையே திட்டிக் கொண்டான். ஆயினும் எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தில் தன்னிடம் இதனை முன்பே கூறாத அவளின் மீதான கோபம் அடங்க மறுத்தது.
"போய் டிரஸ் மாத்திட்டு வா வள்ளி. இப்படியே இருந்தா ஜூரம் வந்துடும்" என்றவனாய் அவளை எழுப்ப, அவன் முகத்தைப் பார்க்காது துணிகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
தனது உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அவன் படுத்திருக்க, இவளும் உடையை மாற்றிவிட்டு வந்து அவனுக்கு முதுகு காண்பித்தவாறு தள்ளிப் படுத்தாள்.
எதையோ சிந்தித்தவாறு கைப்பேசியைப் பார்த்திருந்தவன், "நாம பிளான் செஞ்ச மாதிரி இந்த ஹனிமூன் டிரிப்பை அஞ்சு நாளா இல்லாம மூனு நாள் டிரிப்பாக்கிடலாமா வள்ளி? மூனு நாள் இருந்துட்டு மீதி ரெண்டு நாள் கேன்சல் செஞ்சிடலாமா வள்ளி? நாளன்னைக்கு இங்கிருந்து போறதுக்கு ஃப்ளைட் டிக்கெட் கூட இருக்கு" எனக் கேட்டான்.
மூன்று நாள் தேனிலவு பேக்கேஜ் மட்டுமே அவனின் அலுவலகத்தில் திருமணப் பரிசாய் வழங்கியிருந்தனர். மேலும் இரண்டு நாள்கள் இங்கே இருக்கலாம் எனக் கூறி இவனே அதற்கான பணத்தையும் செலுத்தி மூன்று நாள் தேனிலவை ஐந்து நாளாக மாற்றியிருந்தான். இப்பொழுது இவனே அதனை மூன்று நாளாக மாற்றுவதாய்க் கூறியதில் மேலும் அடிப்பட்டுப் போனது அவளுள்ளம்.
அவள் ஏதும் கூறாது சரியெனத் தலையை மட்டும் அசைத்தவாறு அழுதவாறே உறங்கிப் போனாள்.
இவனும் வேறு சில யோசனைகளுடன் அப்படியே உறங்கிப் போனான்.
மறுநாள் காலை எழும் போதே இரவு அழுததன் பயனாக வள்ளியின் கண் மடல்கள் வீங்கியிருக்க, அழுதியிருக்கிறாள் என்று பார்த்ததும் தெரியுமாறு வீங்கியிருந்தன அவளின் இமைகள்.
வள்ளி எழுவதற்கு முன்பே எழுந்து குளித்து காலை உணவினை அறைக்கே எடுத்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தான் கார்த்திகேயன்.
"கண்ணு ஏன் இப்படி இருக்கு? நைட் அழுதுட்டே தூங்கினியா வள்ளி? இல்ல உடம்பு எதுவும் சரியில்லையா?" அவளின் கழுத்தில் நெற்றியில் கை வைத்து காய்ச்சல் இருக்கிறதா எனப் பரிசோதித்தவனாய்க் கேட்டிருந்தான் கார்த்திகேயன்.
இல்லை எனத் தலையசைத்தவளாய் கழிவறைக்குள் அவள் புகுந்து கொள்ள, "என்னாச்சு இவளுக்கு? உண்மையிலேயே நடந்ததுக்கு நான் தான் இவக்கிட்ட கோபப்படனும். இவ என்னடானா என் மேல கோபப்பட்டு மூஞ்சைத் திருப்பிக்கிட்டுப் போறா" என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டவனாய் அமர்ந்திருந்த கார்த்திகேயன், அவள் கழிவறையில் இருந்து வெளியே வந்ததும், "உனக்குப் பீரியட்ஸ் டைமா வள்ளி? வயிறு எதுவும் வலிக்குதா? அதான் இவ்வளோ சோர்வா தெரியுறியா?" வினவியவனாய் அவளை மெல்ல அணைத்து வயிற்றில் கை வைத்து வருட, அவனின் அக்கறையான பேச்சில் சட்டெனக் கண்ணீர் வெளியாகி அவனது வெற்றுத் தோளில் விழவும், அவளின் முகத்தைக் கைகளில் தாங்கியவனாய், "என்னடா! நேத்து நான் பேசினதுல ஹர்ட் ஆகிட்டியா?" எனக் கேட்டான்.
ஆமென அவள் தலையசைக்கவும், "அதுக்காக இப்படியா அழுவ? எப்டிடா நீ அப்படிப் பேசலாம்னு என்கிட்ட சண்டை போடாம இப்படி அழுதுட்டு வந்து நிக்கிறியே! அம்மா சொன்னது சரி தான். உன்னைக் கண்ணாடி மாதிரி ஹேண்டில் வித் கேர்னு தான் பார்த்துக்கனும் போல" என்றவாறு அவளின் நெற்றியில் முத்தமிட்டவன், "சாரிடா வைரக்கட்டி! இனி நான் பேசுறது ஏதாவது உன்னைக் கஷ்டப்படுத்துச்சுனா உடனே என்கிட்ட சண்டை போடு. இப்படி அழுதுட்டு இருக்காத" என்றான்.
அன்று அவளின் உடல்நலனைக் கருதியே எங்கேயும் வெளியே செல்லாமல் இருந்தான்.
அதற்கடுத்த நாள் காலை சில இடங்களுக்குச் சென்று விட்டு வந்தவர்கள் தங்களது உடைமைகளை எடுத்து வைக்கத் தொடங்கினர்.
இரவு விமானம் ஏறி மறுநாள் விடியற்காலை சென்னை அடைந்த போது, "வள்ளியோட அம்மா அப்பாவை காணோம் கார்த்தி. எங்கே போனாங்கனே தெரியலை" என்ற அதிர்ச்சியான செய்தியுடன் அவர்களை வரவேற்றிருந்தார் கார்த்திகேயனின் தந்தை தாமோதரன்.

Last edited: