Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 38
- Thread Author
- #1
அத்தியாயம் - 9
கண்கள் கலங்கிய நிலையில் மகதி அவள் அறைக்குள் சென்றதும்,"மகதி என்னாச்சு உனக்கு? " என்று மீண்டும் புரியாமல் கேட்டான் வர்மன்.
"வர்மா! நீங்க என் அம்மாவுக்குப் போன் பண்ணி சீக்கிரமா வீட்டுக்கு வரச் சொல்லுங்க"என்ற மகதியின் குரலில் பதற்றமும் அழுகையும் கலந்திருந்தது.
"இரு இரு நான் மாமாவுக்குப் போன் பண்ணி பாக்குறேன்" என்ற வர்மன் தன் கைபேசி மூலம் மகதியின் தந்தையை அழைக்க, அவரோ இவன் அழைப்புக்குப் பதில் தராமல் போனார்.
"மகதி! மாமா போன் எடுக்கல, சரி நீ ஏன் அழற!?, என்னாச்சு உனக்கு?" என்ற வர்மன் மூடி இருந்த மகதியின் அறை வாசலில் நின்று தன் கேள்வியை எழுப்ப, மகதியின் அழுகை சத்தம் மட்டும் தான் வர்மனின் காதில் கேட்டது.
"என்ன நீ நான் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டுற, இப்படியே அழுதுகிட்டு இருந்தால் என்ன அர்த்தம்?" என்று கேட்டுக்கொண்டே வர்மன் தன் நண்பன் மாயனை அழைத்துப் பார்க்க, அவனும் பதில் அளிக்காமல் போனான்.
தன் அறையினுள் மூலையில் அமர்ந்து இருந்த மகதிக்கு ஏன் அழுகிறோம் என்று தெரியாமல் அவள் கண்ணீர் தரையை நனைத்தது.
லேசான வயிற்று வலியால் மேலும் கண்கள் கலங்கியவளின் விசும்பல் சத்தம் வர்மனின் காதில் கேக்க, அதே சமயம் வர்மனின் தந்தையிடமிருந்து அவன் கைபேசிக்கு அழைப்பு வந்தது.
"ஹலோ அப்பா... நானே உங்களுக்குப் போன் பண்ணனும்னு இருந்தேன்" என்ற வர்மனின் பதற்றமான குரலைக்கேட்டு,
"என்னாச்சு வர்மா? எதாவது பிரச்சனையா?" என்று ராஜன் கேக்க, வர்மன் மகதியின் அழுகையை பற்றி விவரித்துச் சொன்னான்.
"வர்மா! மகதி பெரிய பொண்ணு ஆகிட்டான்னு நினைக்கிறேன்"என்று ராஜன் சொல்ல, கைபேசியை காதில் வைத்து இருந்த வர்மனுக்கு அப்போது தான் மகதியின் பயத்துக்கு காரணம் தெரிந்தது.
"அப்பா...ஆனா இப்போ மாமா அத்தை வீட்ல இல்லையே, நான் என்ன பண்ணட்டும்" என்று வர்மன் தன் தந்தையிடம் கேக்க,
"நான் சொல்லுற மாதிரி பண்ணு" என்ற ராஜன் கைபேசி வாயிலாகவே வர்மனுக்கு சில விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார்.
"வர்மா... நானும் மகாலிங்கத்துக்கு போன் பண்ணி சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பச் சொல்லிடுறேன். நீ அந்த வீட்டு பொம்பள பிள்ளையைப் பத்திரமா பார்த்துக்கோ.
அவளுக்குத் தைரியம் சொல்லு. நான் நைட் போன் பண்ணுறேன்" என்ற ராஜன் தன் கைபேசி இணைப்பைத் துண்டிதார்.
பெண் பிள்ளையுடன் வளராத காரணத்தால் வர்மனுக்கும் மகதியின் நிலைமையைப் புரிந்துக்கொள்ள முடியாமல் போனதும், தன் தந்தையின் வார்த்தையைக்கேட்டு மகதியின் பெற்றோர் வரும் வரை அவளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான்.
வர்மன் சமையலறை புகுந்தவன் மகதிக்காகத் தேநீரை தயாரிக்கும் தருணம், "சாரி வர்மா! ரொம்ப லேட் பண்ணிட்டேனா!" என்று கேட்டுக்கொண்டே மாயன் வீட்டுக்குள் நுழைந்தான்.
"டேய் எங்கடா போன! இந்தா முதல்ல இந்த டீயைக் கொண்டு போய் மகதிகிட்ட கொடு, நான் கடைக்குப் போயிட்டு வரேன்"என்று வர்மன் சொல்ல,
"ஏன் கடைக்கு? என்ன வேணும் சொல்லு நான் போய் வாங்கிட்டு வரேன்" என்றான் மாயன்.
"டேய் கடையில... அது அத! எப்படி உன்கிட்ட சொல்லுறது"என்று வர்மன் தயங்கும் தருணம்,
"அண்ணா..." என்ற மகதியின் அழுகுரல் கேட்டு,"பட்டுக்குட்டி என்னமா வேணும்?" என்று அறையின் வாசலில் நின்றப்படியே கேட்டான் மாயன்.
"மாயா... மகதி பெரிய மனுஷி ஆகிட்டா!" என்று வர்மன் சொன்னதின் அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ள தெரியாத மாயனோ,
"என் தங்கச்சி எப்பவுமே பெரிய மனுஷி தனமா தானே பேசுவாள்" என்றான்.
"டேய்...மகதி ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டாள்!" என்று வர்மன் ஒரு வழியாக மாயனுக்கு புரியும்படி சொன்னவனின் குரலைக் கேட்டுத் தன் அறையில் அமர்ந்து இருந்த மகதிக்கு சங்கடமாகப் போனது.
பதினைந்து வயதை நெருங்கியும் தன் மகள் ருது ஆகவில்லை என்ற கவலையில் இருந்த மகதியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத தருணம் தன் சித்தி மகள் பூபடைந்த செய்தி மாயனுக்கும் மகிழ்வை தான் கொடுத்தது.
"வர்மா! உடனே இந்த நல்ல செய்தியைச் சித்தி சித்தப்பாவுக்கு போன் பண்ணி சொல்லணும்" என்ற மாயன் சற்று தாமதிக்காமல் தன் கைபேசி வாயிலாக மகதியின் பெற்றோர்களை அழைக்க, மாயனின் அழைப்புக்கும் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போனது.
"என்ன வர்மா இது! சித்தி சித்தப்பா போன் எடுக்கலையே" என்ற மாயன் தன் அம்மா கீதாவை அழைத்துப் பார்த்ததும்,
"மாயா... நானே உனக்குப் போன் பண்ணனும்னு தான் இருந்தேன்" என்றார் கீதா.
"மாயா...இங்க ஒரே பிரச்சனை மாயா! இந்த ஊர் அரசியல் தலைவரை யாரோ ஆளை வச்சி போட்டுட்டாங்க, ரோட்டுல எந்த வண்டியும் ஒடக்கூடாதுனு மறியல் பண்ணுறாங்க, ஹலோ மாயா நான் பேசுறது கேக்குதா" என்ற கீதாவின் குரலை விடவே அவர்களின் பின்னே கேக்கும் கட்சியின் கோஷம் அதிகமாக இவர்களுக்குக் கேட்டது.
"அம்மா... சித்தி சித்தப்பா எங்க? இங்க மகதி பெரிய மனுஷி ஆகிட்டா!" என்று மாயன் சொல்ல, அவன் பேசிய ஒரு வார்த்தைக்கூட கீதாவின் காதில் விழாத பட்சத்தில் அவரின் கைபேசி இணைப்பும் துண்டிக்கப் பட்டது.
"மாயா… அவங்க வரும்போது வரட்டும், நீ இந்த டீயை மகதிக்கு கொடு" என்ற வர்மன் வேகமாக டிபார்ட்மென்டல் ஸ்டோரை நோக்கிச் சென்றான்.
"பட்டுக்குட்டி இந்தாடா டீக்குடி" என்று அறை வாசலில் நின்றுக்கொண்டு மாயன் தன் தங்கையை அழைக்க, "எனக்கு எதுவும் வேண்டாம்" என்று அழுதாள் மகதி.
நீண்ட நிமிடங்கள் மாயன் போராடியும் மகதி கதவைத் திறக்காமல் போனதும்,"என்னடா இன்னுமா மகதி ரூம்ல இருந்து வரல!" என்று கேட்டுக்கொண்டே வர்மன் கை நிறைய பைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
"நானும் எவ்வளவு நேரம் தான் டா கதவைத் தட்டுறது, ஆனா! மகதி வெளியே வரவே இல்லை" என்று மாயன் சொன்னதும்,
"மகதி... நீ இப்போ கதவைத் திறக்கப் போறியா! இல்லை நான் கதவை உடைச்சிகிட்டு உள்ளே வரவா" என்ற வர்மனின் கோவமான குரலில் சட்டென்று கதவைத் திறந்துகொண்டு வந்தாள் மகதி.
மகதியை பார்த்ததும் மாயன் சிரித்தவன்,"இதுக்கெல்லாம் யாராவது அழுவங்களா?" என்று கேட்டான்.
"ஏன் நீ சொல்ல மாட்ட! உனக்கு வந்தா தான் என் வலி தெரியும்"என்ற மகதியின் கன்னத்தில் கண்ணீரின் கோடு காய்ந்து இருந்தது.
"சரி சரி... உனக்கு இந்த மாதிரி நேரத்துல வயிறு வலிக்காம இருக்க வெந்தய தூள் குடிச்சா நல்லதாம், டேய் மாயா இத தண்ணீர்ல கலந்து மகதிக்கு கொடு"என்றான் வர்மன்.
மாயனையும் வர்மனையும் சங்கடமாகப் பார்த்த மகதிக்கு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அம்மா ஸ்தானத்திலிருந்து வர்மனே எல்லா வற்றையும் காத்துக்கொடுக்க, மகதியும் வர்மன் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டாள்.
"இந்தா மகதி, இந்தப் பையில உனக்குத் தேவையான பொருளெல்லாம் இருக்கு, நீ போய்க் குளிச்சிட்டு வேற ட்ரெஸ் மாத்திக்கோ.டேய் மாயா நீ வா நம்ம மகதிக்கு சாப்பிட உளுந்து கஞ்சி ரெடி பண்ணலாம்" என்ற வர்மன் தன் நண்பனைச் சமையலறைக்குள் அழைத்துச் சென்றான்.
மகதியும் குழந்தை இல்லையே! பொதுவாக இந்த வயதில் அவளுக்கும் இந்தச் சூழ்நிலை யில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து இருக்க,
தன் பெற்றோர்கள் வரும் வரை தைரியமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து குளிக்கச் சென்றாள்.
மகதி வருவதற்குள் கூகுளை பார்த்து வர்மனும் மாயனும் மகதிக்கு தேவையான சத்தான உணவுகளைத் தயார் செய்து மேசைமேல் அடுக்கினார்கள்.
"மகதி சாப்பிட வா" என்று வர்மன் அழைக்க, "நான் வெளியே எல்லாம் வரக்கூடாது வர்மா" என்றாள் தயக்கத்துடனே.
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல மகதி, இந்த மாதிரி நேரத்துல உடல் அசதியா இருக்கும், வேலை பண்ண முடியாது, அதனால தான் ஓரமா உக்காந்து ஓய்வு எடுக்கச் சொல்லுவாங்க, மற்றபடி இந்த வயதில் எல்லா பெண்ணுக்கும் வர இயற்கையான விஷயம் தான்" என்று தைரியம் சொன்னான் வர்மன்.
ஒரு வழியாக வர்மன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு மகதி ஹாலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
"இது என்ன கஞ்சி எல்லாம் தரிங்க,
தோசை இல்லையா!?" என்று மகதி கேக்க,
"உனக்கு நெய் தோசை பிடிக்கும்னு எனக்கும் தெரியும், ஆனா இந்த நேரத்துல நீ ரொம்ப சத்தான சாப்பாட்டை தான் சாப்பிடணும்" என்ற வர்மன் மகதி என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்று பெரிய லிஸ்டையே சொல்லி முடித்தான்.
"ஏன் வர்மா! அது என்ன பொண்ணுங்களுக்கு மட்டும் இதெல்லாம் தராங்க!?அப்போ நமக்கு அதெல்லாம் தரமாட்டாங்களா"என்று மாயன் கேக்க,
"டேய்...பொண்ணுங்களுக்கு தான் டா இன்னோரு உயிரைச் சுமக்குற சக்தி இருக்கு, அவங்க ஆரோக்கியமா இருந்தா அடுத்தடுத்து வரப் போற தலைமுறை எல்லாம் ஆரோக்கியமா இருப்பாங்க" என்ற வர்மன் மேலும் சில உணவுப் பொருட்களை மகதியின் முன்னே எடுத்து வைத்தான்.
"போதும் வர்மா... இவ்ளோ சாப்பிட்டா நான் குண்டாகிடுவேன்" என்ற மகதி கொஞ்சம் கொஞ்சமாக அவள் பயத்திலிருந்து விடுபட்டு இருந்தாள்.