Stories that touch hearts

Home  /  46. மோ.நித்யா சபரி (இளவேனில் சாய்ந்தாட ஒரு தோள்)  /  Chapter 7

CHAPTER 7

“இளவேனில்🍀🫂 சாய்ந்தாட ஒரு தோள்…!!!”

By மோ.நித்யா சபரி · November 10, 2026

0

அத்தியாயம்-7-

அந்தப் நட்சத்திர ஹோட்டலின் பார்ட்டி ஹாலில் ஒரு புதிய சூழல் உருவாகி…. சற்று முன்பு குழந்தைப் பிறப்பிற்கான பாடல் ஒலித்த அந்த  இடத்தில், இம்முறை மிக மெல்லிய, காதலைத் தாலாட்டும் ஒரு ரம்மியமான திருமண இசைப் பாடல் ஒலிக்கத் தொடங்கவும்…!      

  ​அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்த சாரதாவோ, உடனே தான் தோள் சாய்ந்திருந்த டேவிட்கிட்ட ,  

       “இதுவும் உங்க வேலைதானா….?”

 என்று   அவனின் தோளின் மீது வைத்திருந்த தன் தலையை எடுத்தவாறே, விசாரிப்பவளிடம்​டேவிட்டோ, தன் கைகளை விரித்து,  

“ஐயோ, நான் இல்ல சாருமா….!”  

   என்றுவிட்டு, பாவமாக விழிக்கவும்…,

  “அப்புறம் யாருடைய வேலை இது…?”  

  என்று சாரதா அங்கிருந்த எல்லோர் மீதும் கண்டிப்பான பார்வையுடனே  உறுதியான குரலிலே கேட்டாள்…..அப்போது கூட்டத்திற்குள்ளிருந்து மெல்ல ஒரு கரம்!  மட்டுமாக மேலே ஓங்கவும்…. அப்படி குறுக்கிட்ட வருணியோ,

“ஹாஹா… இந்தமுறை ஏற்பாடு நான்தான்  பண்ணேன் மம்மி…!”   

    ​”இப்போ எதுக்கு இந்த மாதிரி பாட்டெல்லாம்….?”      

என்று சாரதா மகளிடம் கண்டிப்புடனே கேட்கவும்…., வருணியுடனே ஒருமித்த குரலாக மகனும் மருமகளும் ஒருவித மர்மப் புன்னகையுடனே சேர்ந்துக்கொண்டே,

“சர்ப்ரைஸ்….!”

என்று அவர்கள் அப்படிச் சொன்ன கணம், சரியாக அங்கே ஒரு சிறிய அழகிய சிவப்பு நிற வெல்வெட் பெட்டியுமே பளபளக்கும் தட்டில் வைத்தவாறு  கொண்டுவந்து நீட்டப்பட…   

“இதென்ன இன்னொரு சர்ப்ரைஸா…?”  

என்று சாரதாவும் டேவிட்டுமாக வியப்புடனே அதைப் பார்த்தனர்… அப்போதோ வருணி சத்தமில்லாமல் டேவிட்டின் காதுக்குள்ளாக மட்டுமே ஏதோ ஒன்றை ரகசியமாகச் சொல்லவும்…. அதைக் கேட்டதும் டேவிட்டின் முகத்தில் ஒரு கள்ளமற்ற சிரிப்பு மலர்ந்து,

“ஓஹோ… அப்படியா சங்கதி…!”  

என்று அந்த சமயம்  சிரித்துக்கொண்டே அந்தப் பெட்டியைப் பெற்றுக் கொண்டவனின் மீதே ​அனைவரின் பார்வையும்  இருக்க…., திடீரென்று ஒரு முழங்ககாலைத்  தரையில் ஊன்றி மண்டியிட்டு…!!!,, தன் வலது கையால் அந்தப் பெட்டியைத் திறந்து சாரதாவிடம் நீட்டினான் டேவிட்…. ​அப்போதுதான் அதில் என்னவிருக்கிறது…?, என்று பார்த்த சாரதாவின் முகம் ஒரு வினாடி வெட்கத்தால் சிவந்துபோக,

“ஓஹோ இதுவா…”

என்று மெலிதாகச் சிரித்துக்கொண்டு அந்தத் தருணத்தில் அதை வெட்கத்துடனே ஏற்றுக்கொண்டாள்!… அப்படியாக மண்டியிட்டுத் தன் வலது கையில் அந்தப் பெட்டியை ஏந்தி நீட்டிய டேவிட்டின் கரங்களைப் பார்த்த சாரதாவின் கண்கள் பனித்தன….  

    அப்படயே அவன் மெல்ல சர்ப்ரைஸாக  அந்த அழகிய வெல்வெட் பெட்டியின் மூடியைத் திறந்து வைத்திருக்கவும்….. சாரதா பார்த்ததோ, அதற்குள்ளே ஜொலிக்கும் வைரக் கல்லோ, ஆடம்பரமான நகைகளோ இல்லை…. மாறாக, இருவரின் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக, இரண்டு ஜோடி எளிமையான, அதே சமயம் வசீகரமான தங்கம் மற்றும் பிளாட்டினம் கலந்த மோதிரங்களை அப்படியாக அவைகள் அவளின் கண்களில் பளபளத்துக்கொண்டிருந்தன….    

      ​அந்த மோதிரங்களைக் கண்டதும், இத்தனை காலம் தனிமையிலும் குடும்பச் சுமைகளிலும் உறைந்துபோயிருந்த சாரதாவின் இதயம் ஒரு கணம் சிலிர்த்து நிற்கவும்….. அவளது முகத்தில் படர்ந்திருந்த இறுக்கமும் வாட்டமும் மறைந்து, வெட்கமும் இளமையும் கலந்த ஒரு மெல்லிய நாணம் படர்ந்தது….. அப்படியே அவளது கன்னங்கள் நாணத்தால் சிவக்க, விழிகளில் ஆனந்தக் கண்ணீரும் துளிர்த்தது…. 

    வருணி மகளின் குறும்பான சிரிப்புக்கும், குமரன் யாழினியின் வேஷ புன்னகைக்கும், ஜோவிகாவின் மழலை மாறாத கள்ளகபடமற்ற சிரிப்புக்கும் மத்தியிலே…., டேவிட் நிமிர்ந்து சாரதாவைப் பார்க்கவும்…. அவனது  அந்தப் பார்வையில் அத்தனை வருட காதலும், தோழமையின் ஆழமும் நிரம்பியிருந்தது…..

“சாருமா…”

என்று அவன் குரல் மெலிதாகத் தழுதழுக்க, அந்தப் பெட்டியிலிருந்து ஒரு மோதிரத்தை மெல்ல டேவிட் எடுக்கவும்….  அருகே நின்றிருந்தவர்களின் கைதட்டல்கள் பின்னணியில் ஒலிக்க, சாரதா தன் இடது கையை அவனிடம் நீட்டினாள்…. உடனே, டேவிட்  தன் விரல்களால் அந்த மோதிரத்தை  பிடித்தவாறே , சாரதாவின் நடுவிரலில் மிக மென்மையாகவும், பவ்யமாகவும் அவளுக்கு  அணிவித்தான்….   

   

அந்தத் தருணம்  சாரதாவுக்கு அவளது உடலெல்லாம் ஒரு மின்னல் பாய்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்த….. ​அடுத்த வினாடியே, தன் சுமையெல்லாம் தீர்ந்த நிம்மதியோடு, சாரதாவும் அந்தப் பெட்டியிலிருந்து மற்றொரு மோதிரத்தை எடுத்து டேவிட்டின் விரல்களில் மாட்டினாள்....​ அந்த மோதிரப் பரிமாற்றம் வெறும் நகைப் பரிமாற்றம் அல்ல…. அது சமூகத்தின் தடைகளை மீறி, பிள்ளைகளின் சுயநலக் கணக்குகளுக்கு நடுவே, இரண்டு முதிர்ந்த மனங்கள் தங்களுக்குத்தானே எழுதிக்கொண்ட நிம்மதியான காதல் சாசனம்…!,       ​

அதைப் பார்த்துக் கொண்டிருந்த வருணியின் முகத்தில் பூரிப்பு வழிந்தோடவும்…..  

‘இப்போவாவது அம்மாவின் முகத்துல உண்மையான சந்தோஷம் வந்துச்சே…’   

என்று மனதுக்குள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்… அப்படியாக மோதிரப் பரிமாற்றத்தின் நெகிழ்ச்சியான அந்தத் தருணம் கடந்ததும், பார்ட்டி ஹாலில் கொண்டாட்டக் களகம் மேலும் தொற்றிக்கொள்ளவும்….   

​”போதும்பா செண்டிமெண்ட்… இப்போ எல்லாரும் கேமரா முன்னாடி வாங்க…!”

என்றுவிட்டு  ரேப்பர் வருணி உற்சாகமாக ரேப் பாடல் ஒன்றை பாடிக் கத்தியபடியே தன் போனை வெளியே எடுத்தாள்…அவளது அந்த ஈடுபாட்டில் குமரனும் யாழினியும் கூடத் தயக்கத்துடன் சேர்ந்துக் கொள்ள….. வருணி மேலும் ரேப் பாடல் ஒன்றை தன் சொந்த வரியில்  பாடியப்படியே தன் தம்பியையும் தம்பி மனைவியையும் தன்னுடனே  தான் சொல்லும் சில பல வரிகளை அவர்கள் போக்குக்கும் பாட வைக்க முயற்ச்சிக்கவும்… அவர்களும் கரகரப்பான   தங்களின் எதார்த்தமான குரலிலே அந்த வரிகளைப் பாடிட , அப்படியே ஜோ பாப்பாவுமே அவர்களுடனே சேர்ந்து அத்தை ரேப்பர் சொல்லித்தந்த வரிகளை மழலலை மொழியிலே மொழிந்து பாடியது…. 

   அப்படியாக  ரேப் பாடும் கூட்டத்தின் நடுவே சாரதாவும் டேவிட்டும் மகிழ்ந்தப்படியே ஜோடியாக கைக் கோர்த்தப்படி நின்றிருந்தனர்…., அவர்களைச் சுற்றி வருணி, குமரன், யாழினி மற்றும் ஜோ பாப்பா என அனைவரும் ஒன்று கூடி அவர்களையுமே  அந்த ரேப் பாடலை பாட வைக்கவும்…..

அப்படியே விதவிதமான போஸ்களிலும்  எல்லாருமாக நின்றப்படியே செல்பிகளும் எடுக்கப்பட்டன…!, முதலில் சாரதாவின் தோளில் கைபோட்டபடி டேவிட் புன்னகைக்க, அருகில் வெட்கத்துடன் நின்றிருந்த சாரதா என அவர்களை மட்டும் ஜோடியாக ஒரு புகைப்படம்  எடுத்த வருணியோ அடுத்ததாகவும் குறும்புத் தனத்துடனே,   

“டேவிட் அங்கிள், இன்னும் கொஞ்சம் மம்மிகிட்ட நெருங்கி வந்து நில்லுங்க…!”   

    என்று கலகலப்பாகச் சொல்லிவிட்டு, ஒரு செல்பி ஸ்டிக்! உதவியோடு ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிரித்த முகத்துடன் பிரேமுக்குள் அடக்கினாள் வருணி…. அப்பவுமே குமரனும் யாழினியும் செயற்கையான சிரிப்போடு நடுவிலிருந்த ஜோ பாப்பாவைத் தூக்கிக்கொண்டு போஸ் கொடுக்க, ​ஃபோன் கேமரா கிளிக் ஆகும் ஒவ்வொரு முறையும், அந்தத் திரையில் படம் பதிவானதில் சாரதா மற்றும் டேவிட்டின் முகம் தான் பிரகாசமாக மின்னி பளிச்செனத் தெரிந்தது….  

   எல்லாவற்றிற்கும் மேலாக, வருணியின் வற்புறுத்தலால்… கேமராவைப் பார்த்துக் கை நீட்டி, மோதிரத்தைக் காட்டியபடியே டேவிட்டும் சாரதாவும் தனியாகச் சில க்யூட்டான, வெட்கம் கலந்த செல்பிகளைப் பதிவிட்டுக்கொண்டனர்….    

“சரி சரி… நேரமாச்சு, சீக்கிரம் சாப்பாடு ஆர்டர் போடுவோமா…?, காலையில வந்தோம், பேசியே மதியமும் ஆகிடுச்சு….! நேரடியா மதிய உணவை சாப்பிடுவோமா…?”  

என்று சாரதா எல்லோரிடமும் அன்பாக அதே சமயம் கட்டளையாகவும் கேட்டவளிடம்,  

“ஆமா…. ரொம்பப் பசிக்குது… ஆர்டர் பண்ணுவோம்…!”

   என்று அனைவருமாக ஆமோதித்தவர்கள் அவரவருக்குப் பிடித்த உணவுகளை மெனு கார்டைப் பார்த்து தலா ஒண்ணாகத் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்…. சிறிது நேரத்திலே அவையெல்லாம்  அவர்கள் அமர்ந்திருந்த  டைனிங் டேபிளின் உணவு மேசைக்கு வந்து சேர்ந்து, அழகாகவும் அடுக்கி வைக்கப்பட்டுவிட்டது….     அதன் விளைவாக அந்தச் சூழலில் அனைவரின் மனச்சுமைகளுமே சற்று விலகியிருக்க…, சர்வர் வந்து புன்னகையோடே சுடச்சுட அனைவருக்குமாக அந்த உணவுகளைப் பரிமாறினான்….

அப்படியாக எல்லோரும் சேர்ந்து மகிழ்வுடனே அந்த மதிய உணவை உண்டு களித்துக் கொண்டிருக்கவும்…. ஆனால், அங்கேயும் ஒரு விஷயம் மட்டும் இன்னுமே மாறவேயில்லை…!, குமரனும் யாழினியும் சாப்பிட்டு முடிக்கும் வரையிலுமாக  தங்கள் முகத்திலே ஒரு செயற்கையான வேஷப் புன்னகையை மாட்டிக்கொண்டிருந்தார்களே தவிர…, உள்ளுக்குள் தங்களது சுயநலத் திட்டங்களை ஓடவிட்டுக் கொண்டேதான் இருந்தனர்….   

அப்படியே  யாவருமாக அங்கே உணவு உண்டு முடிந்த பின்பும் கூட…., அடுத்த கட்டமாக அம்மாவைத் தங்களுடனே  தங்கள் வீட்டிற்கு எப்படி  அழைத்துச் செல்வது…?, என்கின்ற எண்ணமே அவர்களின் மௌனமான மனத்திற்குள்ளாக ஓடிக்கொண்டேயிருந்தது….  

    அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக  குறுக்கிட்ட குமரனோ,    

     ​“சரி… சரி… நேரம் ரொம்ப ஆயிடுச்சு மம்மி…., நீங்க கிளம்புங்க எங்களோடே எங்களுடைய வீட்டுக்கு போகலாம் நாம …?”   

     என்று தன் தாயை நோக்கி அவன் கேட்க, அந்த அறையின் சூழலே ஒரு வினாடி கனத்துப் போனது…..​அவளோ, அதுவரை டேவிட்டின் அருகிலேயே இருந்து, அவர் சாப்பிட்டு முடிக்கும் வரையிலுமே தன் கைகளாலேயே உணவை அவருக்குப் பரிமாறி, அவரது உடல்நலனில் அத்தனை அக்கறையும் பாசமும் காட்டி சாரதா மகிழ்ந்திருக்கவும் ….   

தற்போது, இப்படி  மகன் அழைக்கையிலே டேவிட்டின் பிரிவு! அவளது அந்தச் சந்தோஷத்தை ஒரு நொடியில் சுக்குநூறாக உடைத்திருநதது….. உடனே, சாரதாவின் முகம் சட்டென்று சுருங்கி, ஒரு வாட்டம் அவளுக்குள்ளாக  உருவாகி அவளின் தலைக் கவிழ்ந்தது…..  அப்படியே அவளால்  மேற்க்கொண்டு அந்தப் பிரிவை மனதோடு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை….  

அவளது அந்தத் தவிப்பையும் கலக்கத்தையும் டேவிட் கச்சிதமாகப் புரிந்து கொள்ளவும்…. எப்போதும் போல அமைதியாய் அவளருகில் வந்தவன், அவளது தோள்மீது மென்மையாகத் தன் கையை வைத்துத் தேற்றிவிட்டப்படியே,     

“கவலைப்படாதே சாருமா… நான் அப்ப்போ உன்னை வந்து அங்கே பாத்துக்குவேன்…!”    

  என்று அவளை ஆசுவாசப்படுத்தி…., அப்படியே டேபிள் கல்தூண் போல நின்றிருந்த குமரனைத் திரும்பிப் பார்த்து,  

  ​”குமரன்… உங்கம்மா சரியா நேரத்துக்கு மருந்து மாத்திரை போடுறங்களான்னு பாத்துக்கோ….! ஏன்னா இதெல்லாம்  அவகிட்டயே விட்டுட்டா, அவ தன் உடம்பை பத்திலாம் சரியா கவலைப்படவே மாட்டா… அவ கூடவே இருந்து நீதான் அவளை சரியா கவனமா பார்த்துக்கணும், சரியா….?”  

  என்று ஒரு தந்தையைப் போலவே உரிமையோடும் கண்டிப்போடும் எச்சரிக்கவும்…..​டேவிட் அப்படிப் பக்குவமாகச் சொன்னதைக் கேட்ட குமரனும்,

“சரிங்க அங்கிள், நான் பாத்துக்கிறேன்…!”

என்றப்படியே தலையாட்டினான்…. இந்த அத்தனை நிகழ்வுகளையும் ஓரமாய் நின்று கவலை தோய்ந்த முகத்துடனே வருணி கவனித்துக் கொண்டிருக்க… . தன் அம்மாவின் முகத்தில் நிரந்தரமான அந்தச் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிலைக்க வேண்டும் என்றால், இந்தச் சுயநலக் கூட்டத்தின் பிடியிலிருந்து அம்மாவை விடுவித்து, டேவிட் அங்கிளுடன் சேர்த்து வைக்கக் கண்டிப்பாக ஏதேனும் ஒரு வழி செய்தே ஆக வேண்டும் நான்…. என்றப்படியே அவளது மூளையில் தீவிரமாக அதைப்பற்றியே சிந்திக்கத் தொடங்கினவளின் யோசனையிலே அப்போதுதான் அப்படியே ஒரு மின்னல் பொறி தட்டியது….!

🫂தோள் சாய்ந்திடும் தருணம் வரும்…   

🤔வருணியின் அந்தத் தந்திரமான, அதே சமயம் உறுதியான யோசனை என்னவாக இருக்கும்…? ,

பார்ப்போம் பட்டுஸ்💛♥️…

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!