Stories that touch hearts

Home  /  39. யுவஸ்ரீ (மலர்மாலை மயங்கியது மன்னவன் மார்பில்)  /  Chapter 8

CHAPTER 8

மலர்மாலை – 8

By Yuva Sri · November 4, 2026

0

மாலை 6.30 மணி,,,,,

அந்த நேரம் ஈசன் வீட்டுக்கு வந்தான்,

வந்தவன் அக்கா அக்கா என்று அழைத்துக் கொண்டு வர,,

என்ன ஈசா என்று கேட்டுக் கொண்டு அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள் மாதவி,,

அக்கா  இல்ல நைட் ரகு வீட்டுக்கு போகணும்னு துர்கா கிட்ட சொல்லி இருந்தேன்,, அவ கிளம்பிட்டாள

இப்போ போனா தான் கரெக்டா இருக்கும் என்றான்,,

அவன் அப்படி சொல்ல,

அவ கிளம்பிட்டு தான் இருக்கா, நீயும் போய் கிளம்பு டைம் ஆகுது இல்ல சீக்கிரம் போனா அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசி இருந்துட்டு சாப்பிட்டு வருவீங்க என்று சொல்ல,

சரிக்கா என்றவன்,

துர்கா அவள் அறையில் தான் இருப்பாள் என்று நினைத்துக் கொண்டு, தன் அறையின் கதவை பட்டென்று திறந்தான் ,

திறந்தவன் பார்த்தது அங்கே டிரஸ் சேஞ்ச் பண்ணிக் கொண்டிருக்கும் துர்காவை தான்,

பார்த்தவன் சில நொடி அப்படியே நின்றான்,

அவன் அவ்வாறு நின்று இருக்க,,,,

இவள் புடவையை கட்டிக் கொண்டே திரும்பியவள்  அவனை பார்க்க,

பார்த்தவள்,, மாமா என்று கத்தி கொண்டே    தன் சேலையை எடுத்து மேலே போட்டுக் கொண்டவள் அவனைப் பார்க்க,

அவன் மாமா என்று அழைத்த உடன் தான் அவனுக்கு சுயநினைவு வந்தது,,,,

வேகமாக சாரி துர்கா சாரி என்று கண்கள் மூடிக்கொண்டே திரும்பியவன்  சோபாவில் வந்து அமர்ந்தான்,,

அவளும் அவன் சென்ற பிறகு,,,

என் புருஷன் தானே மாமா அவர் வந்ததுனால ஏன் நான் அப்படி கத்துனேன்,

நான் அப்படியே அவரை கூப்பிட்டதுனால தான் அவர் திரும்பி போயிட்டாரு என்று நினைத்துக் கொண்டே புடவையை கட்டிக் கொண்டவள்,

முதலா அவரு என் புருஷனு நான் நினைக்கணும் அப்படி நினைச்சிருந்தா நான் இப்படி சத்தம் போட்டு இருப்பேனா என்று நினைத்தவள் அப்படி சத்தம் போட்டதால்,

அவர் அவரையே தப்பா எடுத்துட்டு இருப்பாரே என்று யோசித்துக் கொண்டே தன்னை முழுவதும் அலங்கரித்துக் கொண்டவள்,

மெல்ல அறையிலிருந்து வெளியே வந்தாள்,

வந்தவள் அங்கு அமர்ந்திருந்த ஈசனை பார்த்தாள்,.

பார்த்தவள் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பிறகு,

மாமா என்று குரல் கொடுக்க,,,

அவனும் ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டது போல் மனதில் குழப்பத்துடன் அமர்ந்திருக்க,

அந்த நேரம் துர்காவின் குரல் அந்த குழப்பத்தில் இருந்து கொஞ்சம் வெளிய வர வைத்தது,

அவ்வாறு வர,,,,,,,,,மெல்ல திரும்பி அவளை பார்த்தான்,

பார்த்தவன் நொடியும் தாமதிக்காமல்  எழுந்து நின்றான்,

அவ்ளோ அழகாக இருந்தாள்,

அவள் அழகை பார்த்தவனுக்கு அவள் கிட்டே போக வேண்டும் என்று தோன்றியது,

எவ்வளவு அழகு அந்த பேன்சி புடவையில் அவள் இருந்த அழகு, ஒரு ஏஞ்சலை போல் அவளை நினைக்க வைத்தது,

அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவன் கட்டிய தாலி அவன் கண்களுக்கு பட,,

அதைப் பார்த்து அவளையும் பார்த்து சிரித்தவன்,

கிளம்பிட்டியா என்று கேட்டான்,

நான் கிளம்பிட்டேன் மாமா, நீங்க போய் கிளம்பி வாங்க நான் வெயிட் பண்றேன் என்ற அவள் அவன் கிட்டே வர,

💐

தன்னை நோக்கி நடந்து ஒரு பூ தோட்டமே வருவது போல் இருந்தது அவள் நடந்து வருவதை பார்த்து,

அவ்ளோ அழகாக பொறுமையாக நடந்து வந்தாள் துர்கா,,

அந்த நேரம் மாதவியும் வர,

அதே நேரம் ஈசன் பக்கத்தில் வந்து நின்றாள் துர்கா,,

மாமா ரொம்ப நேரம் உங்களை வெயிட் பண்ண வச்சிட்டேனா,

எனக்கு இந்த புடவை சரியா கட்ட வரலையா அதான் கொஞ்சம் டைம் எடுத்தது,,

இப்பதான் கொஞ்சம் ஒழுங்கா வந்திருக்கு, சரி நீங்க போய் கிளம்பி வாங்க என்று அவள் பேச,

அவள் வாய் அவள் கண்கள் அவள் முகம் இது மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தது அவள் பேசிய வார்த்தை அவன் காதுகளில் விழவில்லை,

அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்,

கொஞ்ச நேரம் தன் வயதை மறந்து அவளை ரசிக்க ஆரம்பித்தான்,.

ஒரு நொடி இவள் என்னுடைய பொண்டாட்டி தானே, இவளை ரசித்தால் என்ன தப்பு,,,

நான் கட்டின தாலி அவ கழுத்துல இருக்கு இல்ல என்று நினைத்தவன் அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்க,,,

தன்னை அப்படி பார்க்கும் அவனை இவளும் பார்த்தாள்,

பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது அவன் பார்வையில் கொஞ்சம் மென்மையாக கொஞ்சம் காதலாக இருக்க அதை பார்த்து மனதுக்குள் சந்தோஷப்பட்டவள் ,

இப்படியே பார்த்துட்டு இருக்குற இவர நம்ம உசுப்பி விடக்கூடாது  எவ்வளவு நேரம் என்னையே பார்த்துட்டு இருக்காருன்னு பார்க்கிறேன் என்று நினைத்தவள் அவன் எதிரவே நிற்க,

அந்த நேரம் துர்கா நீ கிளம்பிட்டியா,,

உன் மாமா இன்னும் கிளம்பாம நிக்கிறான் என்ற மாதவி ஈசா நீ கிளம்பலையா என்று கேட்க,,,

தன் அக்காவின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தவன்,,, சட்டென்று தன் பார்வையை அவளிடம் இருந்து விலக்கி,

ஐயோ ரொம்ப சின்ன பொண்ணு இவள ஏன் நான் தப்பாவே பாக்குறேன் என்று மனதில் தன்னுடனே பேசிக் கொண்டவன் திரும்பி தன் அக்காவை பார்த்து,

இல்லக்கா அது வந்து இவ்வளவு நேரம் துர்கா ரெடி ஆயிட்டு இருந்தா அதனால தான் சரி நான் போய் கிளம்பி வரேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் ,,,

போனவன் ஒரு அரை மணி நேரத்தில் கோட் சூட் உடன் வந்தான்,, அவனும் ரொம்ப ஸ்மார்ட்டா தான் இருந்தான்,,

அந்த சால்ட் பேப்பர் ஹேர் ஸ்டைல் அவனுக்கு மிகவும் அழகாக இருந்தது,,

அதைப் பார்த்தவுடன் இவள் எழுந்து நின்றவள் மாமா வெரி ஸ்மார்ட் என்றவள் வேகமாக ஓடி வந்து அவன் பக்கத்தில் நிற்க,,,

நின்றவள் அவனைப் பார்த்தாள் ரொம்ப ஸ்மார்ட் ஆக இருந்த அவனை கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது இவளுக்கும்,

தம் புருஷன் அல்லவா, இருக்காதா பின்ன அதுவும் இந்த ஹாண்ட்சம் ஹீரோவை பார்த்தவுடன் அந்த மாதிரி தோன்றவில்லை என்றால் தான் தப்பு,,

சிரித்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு அவள் இருக்க,

சரி ஏழு மணி ஆயிடுச்சு கிளம்பலாமா என்றவன் கேட்க,

சரி மாமா கிளம்பலாம் என்றவள் அம்மா நாங்க கிளம்பறோம் என்று தன் அன்னையிடம் சொல்ல,

சரி பார்த்து பத்திரமா போயிட்டு சீக்கிரம் வந்துடுங்க அப்படி லைட்டா ஆச்சுன்னா எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லுங்க நான் பயமில்லாமல் இருக்கிறேன் சரியா என்று சொல்ல,

சரி மா லேட் ஆச்சுன்னா நான் கண்டிப்பா உனக்கு போன் பண்றேன் என்றவள் போகலாம் மாமா என்று கேட்க,,

சரி என்றவன் முன்னாடி நடக்க,,,, அவன் பி பின்னால் இவள் நடந்தாள்,

இருவரும் வெளியே கிளம்பி வந்து கார் இருக்கும் இடத்திற்கு சென்றனர்,,, பிறகு காரில் ஏறி அமர்ந்து இருவரும் ரகு வீட்டுக்கு சென்றனர்,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மாயா நீ எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற,

அவனுக்கு கல்யாணம் ஆகி இருக்கு அவ்வளவுதான்,

ஆனா அந்த கல்யாணம் நீடிக்காது அவன் கல்யாணம் பண்ணி இருக்கிற பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணு,

45 வயசு ஆள் கூட 23 வயசு பொண்ணு எப்படி வாழ்வா,

எப்படியும் இன்னும் ஆறு மாசத்துல ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்க அதனால நீ டென்ஷன் ஆகாம அமைதியா இரு என்று மகேஷ் சொல்ல,,

என்னங்க பேசுறீங்க அந்த பொண்ணு அந்த மண்டபத்தில் இருக்கிறவங்க அத்தனை பேரும் சொல்லியும் கேட்காம தன் மாமன தான் கட்டிப்பேனு கட்டி இருக்கா,

அப்படியே பட்டவ எப்படி இவன் கூட இல்லாம போவா,

எனக்கு இது சரியா படல, அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கை ஆரம்பிச்சுட்டாங்க? அப்புறம் குழந்தை குட்டினு போயிடும்,, பிறகு நான் போய் என் அப்பா கிட்ட நின்னாலும் ஒரு பைசா தரமாட்டார்,

இவனுக்கு எதுக்கு திடீர்னு இந்த கல்யாணம்,

இத்தனை வருஷமா அமைதியா இருந்த மாதிரி இதுக்கு அப்புறமும் இருந்து தொலைய வேண்டியதுதானே இந்த வயசுல அவனுக்கு கல்யாணம் கேக்குதா என்று சொன்னவள்,

மகேஷ் நான் உடனே அப்பாவ போய் பாக்கணும் ஏற்பாடு பண்றீங்களா என்று கேட்டாள் தன் புருஷனிடம்,,

என்ன பேசுற உங்க அப்பா உன்ன அவர் வீட்டு கேட்டாண்ட கூட சேர்க்க மாட்டார் தெரிஞ்சும் இந்த மாதிரி கேக்குற என்று மகேஷ் சொல்ல,,

அவர் சேர்க்கலைன்னா என்ன அவர் என்ன சேர்க்கிற வரைக்கும் நான் அந்த கேட்டுக்கு வெளியவே இருக்க போறேன்,, என் அப்பா கிட்ட நான் பேசியே ஆகணும் என்றாள்,,

புரிஞ்சுக்கடி நீ அங்க போனா பிரச்சனை ஆகும்,,, உங்க அப்பாவுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை, இப்ப நீ போய் நின்னு அவர்கிட்ட சண்டை போட்டேனா அவருக்கு ஏதாவது ஆகும் அப்புறம் பிரச்சினை உனக்கும் எனக்கும் தான் புரியுதா என்றான்,

ஒரு பிரச்சனை வராது அப்படி அவருக்கு ஏதாவது ஆகிடாலும்,, அவர் மகளா அந்த  சொத்தை எல்லாம் நான் எப்படி வாங்கணுமோ அப்படி வாங்குவேன் என்றவள்,

அப்பாவை பாக்கணும் மகேஷ் என்றவள்,,, ஆன அதற்கு முன்னாடி அந்த ஈசனை பார்க்கணும் என்றாள் மாயா,,,

உங்க அப்பாவ பாக்கணும்னு சொல்ற ஓகே ஆன ஈசன எதுக்கு பாக்கணும்னு சொல்ற என்றான் ,

புதுசா கல்யாணம் ஆகி இருக்கு இல்ல அப்போ அவன பாக்க தானே பாக்கணும், பார்த்து அவன் கிட்ட கொஞ்சம் பேசணும் என்ற அவள், என்ன சொல்ற மகேஷ் நான் அவன பாக்க நீ சம்மதிப்பியா என்று கேட்டாள்,

ஏய் நான் எதுக்கு சமாதிக்காம போறேன்,, நீ என்ன அவன கொஞ்சவா போக போற,,

இல்லையே அவன திட்ட தான போற அதனால நீ அவனை  பாக்குறது இல்ல எனக்கு பிரச்சனை இல்லை என்றவன் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா,

நேத்து கல்யாணம் ஆனா அவனுக்கு இன்னைக்கு அவனோட பிரண்டு ரகு இருக்கான்ல அவன் விருந்துக்கு அழைத்து   இருக்கான்,

இப்போ அங்க தான் புதுமண தம்பதிகள் வரப்போறாங்க என்று சொல்ல,,

அப்படியா என்றவள்,

அப்போ ஓகே ரகு வீட்டிலேயே அவனை மீட் பண்ணி அவன் இப்ப கட்டிருக்கான்ல புது பொண்டாட்டி அவ முன்னாடியே அவனை என்ன கேள்வி கேட்கிறான் பாரு என்றவன் வேகமாக போய் கிளம்பி வந்தாள்,,

வந்தவள் சரி போய் வண்டி எடு போகலாம் என்று சொல்ல,

ஏய் வேணாம்டி கொஞ்சம் நிதானமா நாம யோசிக்கலாம் உடனே நீ இந்த மாதிரி பண்றது உங்க அப்பா காதுக்கு போகும் அதுவும் நமக்கு தாண்டி பிரச்சனை என்றான்,

இன்னைக்கு நான் அவன திட்ற திட்டுல நாளைக்கா என் அப்பாவே என்னை கூப்பிட்டு பேசவாரு நீ வேணா பாரு என்றவள் வேகமாக வெளியே வந்து நின்றாள்,

இவள சமாளிக்க முடியாது என்று நினைத்தவன் அவனும் வெளியே வந்து போய் கார் எடுத்துட்டு வர இருவரும் கிளம்பி ரகு வீட்டுக்கு சென்றனர்,

தொடரும்,😍

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!