அவரின் சூது புரியாது, “ஓ… சரி சரி நீங்க வாங்க. வந்து உக்காருங்க” என்றாள்.
“ஏன்டி இங்க உக்காரவா நாங்க வந்து இருக்கோம்?” ராஜசேகரன் குரலில், அவள் புரியாது பார்க்க, “அண்ணா இவகிட்ட என்ன பேச்சு.? போட்டு தள்ளுங்க இவள” என்றார் தனசேகரன்.
“டேய் அதுக்கு முன்னாடி அந்த டிவி பொட்டியை போட்டு சத்தத்தை கூட்டி வை.”
“ஏங்க என்னங்க பண்ண போறீங்க? முல்லை நீ வா மா நம்ம வீட்டுக்கு போலாம்.” மணி அழைக்க, அவளோ, கதிர் வரட்டும் அண்ணா” என்றாள்.
சேரன் அவளின் கன்னத்தில் அரை வைத்து, “என்ன கதிரா? என் மவனை பெயர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு உனக்கு திமிர் அதிகமாச்சு இல்ல” என்க,
“அங்கிள் என்ன பண்றிங்க?”
“டேய் தனா அவன ஒன்னு போடுடா. நடுவுல கிடந்தது குதிச்சிட்டே இருக்கான்.”
“அட பாவிங்களா முல்லை அப்பாவை கொன்னதுக்கு, உங்கள மட்டும் இநேரத்துக்கு தண்டித்து இருந்தா, நீங்க உள்ள இருந்து இருப்பிங்க. உங்களுக்கு போய் முல்லை பாவம் பாத்த விளைவு, நீங்க முல்லையை கொடுமை பண்ணுறீங்களா?”
“டேய் இவ அப்பாவை கொன்னது என் மச்சானுங்க இல்லடா. நான்… நான் தான் கொன்னேன்” என்றார் சேரன்.
“என்ன சொல்றிங்க?”
“ஆமாடி. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என் வீட்டுக்கு மருமகளா வர நினைச்சு இருப்ப. அதனாலதான் உன் அப்பன் மேல திருட்டு பழி போட்டு, உன்னையும் அவனயும் ஊரை விட்டே துரத்த பாத்தோம். ஆனா நாங்க எதிர் பார்க்காத சமயத்துல என் மகன் உள்ள வந்து எல்லாத்தையும் கலைச்சிட்டான்.”
“எங்க அப்பா உங்கள என்ன பண்ணாரு? ஏன் அப்படி செய்தீங்க?” என்றாள் அழுகையுடன்.
“உன் அப்பன் விசுவாசமானவன். அதனாலதான் என் மகன் உன் குடிசைக்கு ஏன் வந்தான்ன்னு நான் கேட்டதும், அவன் உன்னை காதலிக்கிற விஷயத்தை என்கிட்ட சொன்னான். அப்போ முடிவு பண்ணேன். நீ அந்த ஊரிலேயே இருக்ககூடாதுன்னு. ஆனா, நீ என்னடனா எப்படியோ தப்பித்து என் மகனை கல்யாணம் முடிச்சு சந்தோஷமா வாழற இல்ல” என்றார் ஆத்திரமாக.
“நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு சரியா புரில. ஆனா நீங்க ஏன் என் அப்பாவை கொன்னிங்க?”
“ஆங் அவன் கையால உனக்கு தான் நாங்க விஷம் வைக்க சொன்னோம். ஆனா அவன் முடியாதுன்னு சொன்னது மட்டும் இல்லாம, அவன் மேல நாங்க போட்ட திருட்டு பழியை நிரூபிக்க என்ன வேணும்னாலும் பண்ணுவேன்னு எங்ககிட்டயே சவால் விட்டான். அதான் அவனை அடிச்சு தொங்க விட்டுடோம்.” ராஜசேகரன் நடந்ததைச் சொல்ல,
“அட பாவிங்களா. முல்லை பாத்தியாமா. நான் அப்பவே சொன்னேன் இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் தண்டிச்சே தீரணும்னு. நீ என்னனா இவங்களுக்கு பாவம் பாத்த. ஆனா இவங்க உன் அப்பாவை பதம் பாத்து இருக்காங்க பாத்தியா?”
“என்னை விட்டுடுங்க. நான் கதிர்கிட்ட போகனும்.”
“ஏய் கிராமத்துலேயே உன் கதையை முடிச்சு இருப்போம். ஆனா, நீ தப்பிச்சிட்ட.”
“டேய் ஜாதி பிசாசுங்களா. இப்ப நீங்க வெளிய இருக்கிறதே முல்லை போட்ட பிச்சை தான்.”
“ஆமா ஆமா அதனாலதான் நாங்க ஒரு முடிவு பண்ணியிருக்கோம். தனா அந்த விஷத்தை எடு” என்றார் ராஜசேகரன்.
“டேய் என்னடா பண்ணறீங்க?”
“இவ போட்ட பிச்சையில வாழந்து சாகறதுக்கு பதில், நாங்க எங்க கௌவரவத்துக்காக இவளை கொலை பண்ணிட்டு வீரமா தூக்கில கூட தோங்குவோம்டா. அண்ணா அவ வாயை திற” என்றார் தனசேகரன்.
“என்னை விடுங்க. என் கையை விடுங்க.”
“ஜாதி கௌவரவத்துக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். ஏன் என் மகனை கூட இநேரத்துக்கு எங்க ஜாதி கார பசங்க குழி தோண்டி புதைத்து இருப்பாங்க” என்று நின்றார் சேரன்.
“கதிர். கதிரை ஒன்னும் பண்ணிடாதீங்க. உங்கள கை எடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன். என் கதிரை விட்டு வேணும்னா நான் போயிடுறேன். ஆனா அவர ஒன்னும் பண்ணாதீங்க” என்று கெஞ்சினாள்.
“அவனுக்கு ஏதும் ஆகக்கூடாதுனா, நீ உயிரோட இருக்ககூடாது.”
“சரி நானே செத்து போறேன். என் கதிர் நல்லா இருக்கட்டும்.”
“பாப்பா என்னமா சொல்ற?”
“என் கதிர் நல்லா இருந்தாலே போதும். நான் போறேன் அண்ணா.”
“அண்ணா முதல்ல இந்த அல்லக்கை காலை உடைச்சு அந்த அறைக்குள்ள தூக்கி போடு” என்றார் தனசேகரன்.
“டேய் விடுங்கடா” என்ற மணியை கதிரின் பெரிய மாமன் அடித்து ஒரு அறைக்குள் போட்டு கதவை தாழிட,
“ஏய் இந்தா குடி இதை” என்றார் சேரன்.
“மாமா இவ இத குடிச்ச பத்து நிமிஷத்துல பரலோகம் போயிடுவா.”
“நமக்கும் அதானே வேணும். இவ போட்ட பிச்சையில நம்ம வாழறதுக்கு நம்ம செத்து போலாம்டா.” என்றார் ராஜா.
“என்னடி பாக்குற? ம்… குடிடி.. கீழ் ஜாதி…” என்று திட்ட,
“இப்ப குடிக்கிறியா? இல்ல கதிரை ஊர்கார பசங்களை வச்சு அடிக்க கொல்லவா.” என்று பயமுறுத்த,
“வேணாம் வேணாம் நான் குடிக்கிறேன். தாங்க” என்று வாங்கிய முல்லைப்பூ இவர்கள் தந்த விஷத்தை குடிக்க, “ரொம்ப கசக்குது. சர்க்கரை கூட சாப்பிடவா?” என்று கேட்டாள்.
“ஏய் பைத்தியமே. ம் முழுசா குடி.”
“நான் குடிக்கிறேன். ஆனா கதிர ஒன்னும் பண்ணிடாதீங்க.” முல்லை அந்த விஷத்தை முழுவதுமாக குடித்து முடிக்க, கண்கள் கிறங்கி வாயில் ரத்தத்துடன் கீழே சரிந்து விழுந்தாள்.
“டேய் ராஜா யாரோ கதவ தட்டுறாங்க பாரு.”
“யாரு இந்த நேரத்துல? டேய் தனா நான் இவள மறைவா இழுத்துட்டு போறேன். நீ யாருன்னு பாரு.”
“தனா நீ போ நான் பாக்குறேன்” என்று சேரன் சொன்னதும், ராஜா முல்லையை பக்கத்து ரூமுக்கு இழுத்து செல்ல, வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு சேரன் கதவை திறக்க, வாசலில் கோவமாக கதிர் நின்று இருந்தான்.
“நீங்க இங்க என்ன பண்றீங்க? என்ன பூச்சாண்டி காட்டுறிங்களா? கணக்கு பிள்ள நீங்க கிழ விழுந்து அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்கீங்கன்னு சொன்னாரு. ஆனா நீங்க என்னடனா என் வீட்ல இருக்கீங்க?” என்று கேள்வி கேட்டான் கதிர்.
“உன்னை பாக்க தான் மாப்பிள்ள வந்தோம்” என்றார் தனா.
எனக்கு உங்கிட்ட பேச விருப்பமில்ல. மணி மணி… டேய் எங்கடா இருக்க? முல்லை முல்லை” என்று அழைக்க, முல்லை அனத்தும் சத்தம் கேட்டு கதிர் வேகமாக வீட்டுக்குள் இருக்கும் இன்னொரு அறைக்கு செல்ல, அங்கே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவன் மனைவியை பார்த்ததும் பதறி போய், அவள் அருகில் வந்தவன் அவளை தன் மடி மீது கிடத்தி கொண்டு, “முல்லை என்னடி ஆச்சு உனக்கு? ஐயோ! ஏய் என்னங்கடா பண்ணீங்க என் முல்லையை?” என்று கதறினான்.
“க…கதிர்… கதிர் வந்துட்டியா. உனக்கு ஒன்னும் ஆகல இல்ல.”
“என்னடி இது வாயில ரத்தம் எல்லாம் வருது. இங்க என்ன நடக்குது முல்லை?”
“கதிர் என்னை விட்டு போகாத. இவங்க எனக்கு விஷம் தந்துக் குடிக்க சொன்னாங்க. ரொம்ப கசக்குது சக்கரை கூட தரல” என்று புகாரளித்தாள்.
“டேய் உங்கள…” கதிர் கத்த,
சேரன் அருகில் இருந்த சேரை கொண்டு கதிர் தலையில் அடிக்க, அவன் நிலை தடுமாறி முல்லை அருகில் சரிந்து விழ,
“ஐயோ. என் கதிர ஒன்னும் பண்ணிடாதீங்க.”
“டேய் ராஜா இவன காருல தூக்கி போடுங்கடா.”
“முல்ல. டேய் விடுங்கடா என்னை” என்று கதிர் துள்ள,
“தனா நீ இவன கொண்டு போய் நம்ம பண்ண வீட்ல கட்டி போடு. அப்போ தான் கௌவரவத்துக்காக தன் மகனையே தண்டித்தான் இந்த சேரன், என்று நம்ம ஜாதி கார மக்கள் எல்லாம் என்மேல மதிப்பும், மரியாதையுடனும் நடந்துப்பாங்க. ம்… தூக்கிட்டு போங்க இவன. டேய் ராஜா நீ இவளை தூக்கி அந்த பேன்ல மாட்டுடா” என்று கட்டளையிட்டார்.
“முல்ல. டேய் என்னங்கடா பண்ணுறீங்க?”
“ம் தெரியலையா மகனே, இவள கௌவரவ கொலை பண்ணப்போறோம்.”
“கதிர்…. கதிர்…” அவள் அலற,
“முல்லை” என்று கதிர் தலையில் ரத்த காயத்துடன் முல்லையை கட்டி பிடித்து கொள்ள,
“கதிர் இவங்க ஏன் இப்படி பண்ணுறாங்க? ஜாதினா என்ன? நான் என்ன தப்பு பண்ணேன்? ஏன் என்னை சாக சொல்றாங்க? கதிர் இங்க பாரு” எனவும், கதிர் முல்லையின் நெற்றியில் இதழ் பதித்தவன் கண்கள் கிறங்கி மூச்சு பேச்சு இல்லாமல் அவள் மடியில் சரிந்து விழுந்தான்.
“கதிர்” என்ற சொல்லை மட்டுமே இறுதியாக சொன்னவள் அவன் தோளில் கண்மூட,
“என்ன மாமா இது? ரெண்டு பேரும் போயிட்டாங்க போல?” என்றார் ராஜா.
“டேய் எப்ப இவன் கீழ் ஜாதி வீட்டு சட்டியில கஞ்சி குடிச்சானோ, அப்பவே என்னை பொறுத்த வர செத்துட்டான். அதனால இந்த ரெண்டு சடலத்தையும் சேர்த்து இந்த வீட்டை கொளுத்தி விடுங்கடா “என்று கதிரின் அப்பா சேரன் சொன்னதும் ராஜாவும், தனாவும் அவர் சொல்லுக்கு கட்டுபட்டனர்.காலம் காலமாக நடந்து வரும் ஆணவக்கொலையை கொஞ்சம் மாற்றி அமைத்தால்! கதிர் வீட்டை விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது திருப்புமுனை.
முல்லை குழப்பத்தில் இருக்க, கதிர் அவன் வீட்டில் முல்லைக்கு துணையாக மணியை இருக்க சொன்னவன் வெளியே செல்ல, கதிர் சென்ற நேரம் கதிரின் மாமன்கள் ராஜசேகரன், தனசேகரனுடன் கதிரின் அப்பா சேரன் கதிரின் வீட்டுக்குள் வந்தனர்.
முல்லையையும் மணியையும் மிரட்டி ,மணியை அடித்துப்போட்டு முல்லையை விஷம் அருந்தச் சொன்னார்கள். அவளும் பயந்து போய் அழுது கொண்டு இருந்தவள், கையில் சேரன் விஷத்தை தந்து குடிக்க சொல்ல, முல்லை வாங்கி குடிக்கப்போன சமயம் வீட்டின் வாசற்கதவு தட்டப்பட்டது.
“யாரடா இந்த நேரத்துல?” சேரன் வீட்டு கதவை திறக்கவும் கதிர் சிரித்தப்படி வீட்டிற்குள் நுழைந்தான்.
“டேய் கதிர் நீ எங்கடா இங்க?” என்று அதிர்ந்தார் சேரன்.
“அததான் நானும் கேக்குறேன். நீ எங்க இங்க? உனக்கு என்னமோ தலையில அடிபட்டு மல்லாக்க இருக்கன்னு சொன்னாங்க” என்றான் நக்கலாக.
CHAPTER 12
முகவரி – 12
By Leela Chandran · October 30, 2026