முல்லையும் ரோஜாவும் இப்படியாக பேசிக்கொண்டிருக்க, “ஏன் முல்லை நீ இப்படி பண்ற. அவரு பாவம். எனக்கும் கதிர் மாமாவுக்கும் தானே கல்யாணம் நடக்கிறதா இருந்துச்சு, இப்போ திடீர்னு அவரு உன் கழுத்துல தாலி கட்டினதால கொஞ்சமா கவலையா இருப்பாரு. அதனாலதான் சரக்கு அடிக்க போறாரு. அதுக்கு ஏன் நீ கதிர் மாமாவை கஷ்டப்படுத்துற.“ என்று மீனா கோவமாக முல்லையிடம் சண்டைக்கு வர,
“ஐயோ, இந்த பெரிய அண்ணி வேற நடுவுல காமெடி பண்ணுது” என்றபடி மீனாவை பார்த்து முறைத்தாள் ரோஜா.
மீனாவின் வார்த்தையில் முல்லையின் முகமும் மாறி போக.“அண்ணி. எந்த நேரத்தில் என்ன பேசுறீங்க. இனி நீங்க வாத்தியை பற்றி கவலை படாதீங்க, போங்க போய் சாப்பிடுங்க” என்று ரோஜா சொன்னதும். மீனா கண்கள் சட்டென்று கலங்கியபடி.
“நீ என்ன தான் சொன்னாலும் கதிர் மாமா மனசுல இருந்து என்னை யாராலயும் அழிக்கவே முடியாது. என் மேல அவருக்கு அளவு கடந்த அன்பு இருக்குறதால தான் அவரோட நெஞ்சில என் பேர பச்சை குத்தி வச்சிருக்காரு” என்ற மீனா. முல்லையை முறைத்து பார்த்துக்கொண்டே அவள் அறைக்குள் புகுந்ததும், ரோஜாவிற்கு இவர்களை எப்படி சமாளிப்பது என்ற குழப்பம்தான் அதிகரித்தது.
மீனாவின் வார்த்தையில் முல்லை சோகமாக நின்று இருக்க,
“அண்ணி, நீங்க இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. நீங்க போய் வாத்தியை சாப்பிட அழைச்சிட்டு வாங்க” என்று ரோஜா சொன்னதும், முல்லையும் சம்மதமாக இவர்கள் அறைக்குள் நுழைந்த தருணம். தரையில் பாய் விரித்து இடுப்பில் வேஷ்டியும், மேலுக்கு உள்பணியுடன் படுத்திருந்த கதிர்வேலனை முறைத்தபடியே முல்லை உள்ளே நுழைதவள், சிறு கடுப்புடன் கட்டிலில் அமர்ந்தாள்.
முல்லையை கண்டுகொள்ளாமல் வலது கையை தன் தலைக்கு கீழ் கொடுத்து. இடது கையைக்கொண்டு தன் கண்களை மூடியப்படி கதிர் படுத்து இருக்க.
அவன் வலதுபக்க மார்பை குறுகுறுவென முறைத்து பார்த்த முல்லையின் கண்களுக்கு இடது பக்கத்தில் இருக்கும் K என்ற எழுத்து மட்டும் தெண்டபட்டதும். மீதம் இருக்கும் M என்ற எழுத்தையும் பார்க்கும் ஆர்வத்தில் கீழே படுத்து இருக்கும் கதிரின் அருகே பூனை போல மெதுவாக சென்றாள் முல்லை.
கதிர் அவள் அருகாமையை உணராமல் படுத்து இருந்தவனின் மார்பு பகுதியில் பதிந்து இருந்த KMஎன்ற எழுத்தை பார்க்க பார்க்க முல்லையின் காதில் மீனா சொன்ன வார்த்தை மட்டுமே ஒலித்திக்கொண்டு இருக்க.
என்ன நினைத்தாளோ பெண்ணவள். அவளுக்கு எழுந்த ஆத்திரத்தில் தன் வலது கையை மடித்து கதிரின் இதயபகுதியை பார்த்து ஓங்கி ஒரு குத்து வைத்தாள்.
சிலம்பம் வாத்தியாரின் இதயத்தில் இந்த உலகிலேயே மிக அழகான மலராக அவன் நினைக்கும் முல்லை மலரின் ஒரே ஒரு இதழ் அவன் மேல் விழுந்ததை போல உணர்ந்து கண் விழித்தவன் அருகே அமர்ந்து இருந்த தன் மனைவியை பார்த்து ஏதும் புரியாதவனாக, “ஏய், இப்போ நீ என்னை அடிச்சியா.?” என்ற கதிரை பார்த்து திருட்டு விழி விழித்தாள் முல்லை.
தன்னவளின் முழியே அவளின் கள்ள தனத்தை அவனுக்கு கட்டிக்கொடுக்க.“சொல்லு டி அடிச்சியா” என்ற கதிரை பார்த்து.
“நா. நான் அடிக்கலையே மாமா சார்” என்று பதற்றதுடன் அவனிடமிருந்து எழ முயன்றாள் முல்லை.
அவளின் பதட்டத்தை கண்டு. முல்லையின் கரத்தினை பிடித்து தன் வசம் கதிர் இழுத்த வேகத்தில் முல்லை ஒரே அடியாக கதிர்வேலனின் இதயபகுதியில் விழுந்தவளின் மென் கனிகள் இரண்டும் அவன் மார்போடு ஒட்டிக்கொண்டது.
கதிரின் இத்தகைய செயலில் திடுக்கிட்ட முல்லை சுதாரிக்கும் முன்னே ஆண் அவனின் கரங்கள் அவள் இடையை இறுக்கமாக கட்டிக்கொள்ள,
அவனின் இதயபகுதியில் பச்சை குத்தி இருந்த KM என்ற ஆங்கில எழுத்துகள் இரண்டும் இந்த நொடி இவர்கள் வாழ்வின் உயிர் எழுத்துக்களாக மாறி இருந்தது.
“சொல்லுடி அடிச்சியா” என்ற கதிரை பார்த்து.
“நா. நான் அடிக்கலையே மாமா சார்” என்று பதற்றதுடன் அவனிடமிருந்து எழ முயன்றாள் முல்லை.
அவளின் பதட்டத்தை கண்டு. முல்லையின் கரத்தினை பிடித்து தன் வசம் கதிர் இழுத்த வேகத்தில் முல்லை ஒரே அடியாக கதிர்வேலனின் இதயபகுதியில் விழுந்தவளின் மென் கனிகள் இரண்டும் அவன் மார்போடு ஒட்டிக்கொண்டது.
கதிரின் இத்தகைய செயலில் திடுக்கிட்ட முல்லை சுதாரிக்கும் முன்னே ஆண் அவனின் கரங்கள் அவள் இடையை இறுக்கமாக கட்டிக்கொள்ள,
அவனின் இதயபகுதியில் பச்சை குத்தி இருந்த KM என்ற ஆங்கில எழுத்துகள் இரண்டும் இந்த நொடி இவர்கள் வாழ்வின் உயிர் எழுத்துக்களாக
மாறி இருந்தது.
இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் ரசித்து இருக்க.
“என்னடி என்னை கொலைப் பண்ணப்போறியா” என்று கேட்டான் கதிர்.
அவன் கேள்வியில் கோவம் கொண்ட பெண்ணவள், அவனிடமிருந்து திமிறி எழ முயன்றவளின் இடையை மேலும் கதிர் வாகாக கட்டிக்கொள்ள. மேலும் அவன் அங்கத்தில் அடைக்கலம் அடைந்து இருந்தாள் முல்லை.
“கேக்குறேன் தானே. ஏன் என்னை கொல்ல பாக்குற.“ என்றவனின் கேள்விக்கு முல்லையின் பதில் கண்ணீருடன் சேர்ந்த மௌனமாக மட்டுமே இருக்க.
அவள் கண்ணீருக்கு காரணம் இவன் மேல் அவளுக்கு பிரியம் இல்லை என்று தானாக தப்புகணக்கு வகுத்துக்கொண்டான் கதிர்வேலன்.
“உனக்கு என்னை பிடிக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்ன பண்ண சொல்லுற. அதான் பெரியவங்க எல்லாம் சேர்ந்து நமக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களே” என்ற கதிரின் வார்த்தை இப்போதும் பொதுவாகவே வெளிப்பட்ட காரணத்தால் முல்லையின் மனதில் மேலும் வேதனை கூடிப்போனது.
முல்லையின் முக மாற்றத்தை பார்த்து அவளை தன் வசமிருந்து விடுவித்த கதிர். படுக்கையில் இருந்து எழுந்து சுவற்றின் ஆணியில் மாட்டி இருந்த சட்டையை எடுத்து அணிந்துகொண்டவன். பாயில் கண்ணீருடன் அமர்ந்து இருந்த பெண்ணவளை பெருமுச்சுடன் பார்த்தான்.
இருவரும் உடைத்து பேசினால் இந்த நொடியே இவர்களின் பணிப்போர் மறைந்து போகும்.
ஆனால் இருவரும் கண்ணால் பார்த்ததை, காதால் கேட்டதை உண்மையேன்று நம்பியவர்களுக்கு இன்றைய நாளும் இனிமையாக அமையாமல் போனது.
அந்த அறையே அமைதியாக இருந்த தருணம்.“அண்ணி. வாத்தியை அழைச்சிட்டு சாப்பிட வாங்க” என்ற ரோஜாவின் குரல் இவர்கள் இருவரின் சிந்தனையை மாற்றி அமைக்க,
“கண்ண துடைசிகிட்டு சாப்பிடு போ” என்றான் கதிர்.
“நீங்களும் வாங்க” என்று முல்லை அவனை அழைக்க.“நான் வெளிய போயிட்டு வந்து சாப்பிடுறேன்” என்றவனை தன் கண்களால் கண்டிப்புடன் முறைத்தாள் முல்லை.
அவள் பார்வையின் அர்த்தத்தை அறிந்துக்கொண்டவன், “முறைக்காத டி. குடிக்க போகல” என்றதும் அவனை நம்பாமல் மேலும் அவள் முறைக்க.
“சத்தியமா குடிக்க போகல” என்றவனை பார்த்து அழகாய் சிரித்தாள் பெண்ணவள்.
கோவம் மறந்து சிரிக்கும் பெண்ணை பார்த்து தானும் சிரித்தவன்.
“உனக்கு இருக்கு டி ஒரு நாள்” என்று இரட்டை அர்த்தத்தில் சொன்னவன். அவள் காதில் விழ வேண்டும் என்றே சத்தமாக சொல்லிக்கொண்டே அறையின் கதவை திறந்தான்.
Dinning டேபிள் அருகே ரோஜா நின்று இருந்தவள், “வாத்தி. நீங்களும் அண்ணியும் சாப்பிடுங்க. எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்” என்ற ரோஜா அவள் அறையை நோக்கி நடக்க,
“அம்மா நீங்க சாப்பிடலையா” என்று கேட்டான் கதிர்.
“அதானே. ஏன் ரோஜா நீ சாப்பிடாம தூங்க போற” என்று முல்லை கேட்க.
“அண்ணி நான் சாப்பிட்டேன்” என்றாள் ரோஜா.
“என்னமா சொல்றிங்க, நான் இல்லாம நீங்க சாப்பிட மாட்டீங்களே” என்று கதிர் கேட்டதும்.“அதெல்லாம் போன வாரம். இப்போ உங்கள பார்த்துக்க உங்க பொஞ்சாதி வந்துட்டாங்க. அதனால இனி நீங்க அண்ணியையும். அண்ணி உங்களையும் கவனச்சுக்கோங்க. நான் போய் இப்போ தூங்க போறேன்” என்ற ரோஜா. சிரித்த முகத்துடனே அவள் அறைக்கு சென்றாள்.
“ம். சரி நீ சாப்பிடு. நான் வெளிய போய்ட்டு வரேன்” என்ற கதிர் வாசலை நோக்கி நடக்க.“ஹாங் வாங்க ரெண்டு பேரும் ஒண்ணா போய்ட்டு வந்து, ஒண்ணா வந்து சாப்பிடலாம்” என்றாள் முல்லை.
“என்னடி. ஏன் இப்படி இம்சை பண்ற. இத்தன நாள் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா தான் இதெல்லாம் பண்ணோமா” என்று அவன் கோபத்துடன் கேட்க.
“இத்தன நாள் இல்ல, ஆனா இனிமே இப்படி தான்” என்றாள் முல்லை.
முல்லையின் வார்த்தையை கேட்டு கதிருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி எழுந்தாலும், முகத்தை மட்டும் கோவமாகவே வைத்து இருந்தான்.
“இப்போ என்ன மாமா சார். சொல்லுங்க. நான் உங்கூட வரணுமா இல்ல, நீங்க என்கூட சாப்பிட போறிங்களா” என்று முல்லை கேட்க ,
“உக்காரு சாப்பிடலாம்.“ என்று கடுகடுத்த முகத்துடன் டைனிங் டேபிளில் அமர்ந்தான் கதிர்வேலன்.
வேண்டுமென்றே சாப்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று எண்ணியவன், சாப்பாட்டு மேசையில் உள்ள பாத்திரங்களைத் திறந்து பார்த்து, “என்ன இது. இட்லி சப்பாத்தி சாதம்ன்னு இருக்கு, இல்ல இல்ல எனக்கு தோசை தான் வேணும். தோசை இல்லாம நான் நைட்டு சாப்பிட மாட்டேன். அதனால. நீ என்ன பண்ற, இங்க இருக்குற சாப்பாட்டெல்லாம் நீ சாப்பிடு.
நான் வெளியே போய் தோசை சாப்பிட்டு வரேன்” என்ற கதிர் இருக்கையில் இருந்து எழுந்தவனின் கையை சட்டென்று அவன் எதிர்பார்க்காத வண்ணம் பற்றி நிறுத்துனாள் முல்லை.
அவள் தொடுதலில் அவளை திரும்பிப் பார்த்தவன், “ என்னடி.“ என்று கேட்க.
“இப்ப என்ன உங்களுக்கு. தோசை தானே வேணும். வாங்க. நானே ஊத்திக் கொடுக்கிறேன்” என்றவள், அவன் கையைப் பற்றிக் கொண்டு சமையல் அறைக்குள் அவனை இழுத்துச் செல்ல. அன்னையின் பின்னே நடக்கும் பிள்ளையை போல அவளைத் தொடர்ந்து சென்றான் கதிர்வேலன்.
“நீங்க இங்க உட்காருங்க மாமா சார், நான் தோசை ஊத்துறேன்.“ என்று முல்லைச் சொல்ல, அவள் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாமல் சமையலைரை மேடையில் ஏறி அமர்ந்தவன், முல்லை தோசை ஊற்றிக் கொடுக்க கொடுக்க திருப்தியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
கிட்டத்தட்ட 3தோசை சாப்பிட்டு முடித்ததும், “ஏய் ரவா லட்டு. நீயும் சாப்பிடு” என்ற கதிர், முல்லை எதிர்பாரா நேரம் அவளுக்கு தன் கையாலேயே ஊட்டிவிடவும்,
முல்லையின் விழிகள் ஆச்சிரியத்தில் மிளிர்ந்தது.
கதிரின் அன்பு எப்படிப்பட்டது. இவன் மனதில் அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என்று முல்லை யோசிக்கும் நேரம்.
“என்ன பண்றீங்க” என்ற கேள்வியோடு சமையலறைக்குள் நுழைந்தாள் மீனா.
மீனாவின் கேள்வியில் முல்லைக்கு முகம் மாறி போக. கதிரோ எந்த பக்கமும் பாராமல் தோசையை எடுத்து முல்லை வாயில் திணித்துக் கொண்டு இருந்தான்.
கதிரின் இத்தகைய செயலில் முல்லையின் விழிகள் அசைய மறுக்க.“மாமா என்ன பண்றீங்க” என்று கோபத்துடன் கேட்டாள் மீனா.
“என்ன கேள்வி இது. நைட் சாப்பாடு சாப்பிடுறோம். ஏன் உனக்கு கண்ணு தெரியலையா” என்று கதிர் கேட்க.
“அது தெரியுது. ஆனா நீங்க ஏன் முல்லைக்கு ஊட்டி விடுறிங்க” என்ற மீனாவின் கேள்வியில் கதிருக்கு கோவம் வந்த நிலையில்,
“இப்போ என்ன பிரச்சனை உனக்கு” என்று பல்லை கடித்தான் கதிர்.
“மாமா சார், ஏன் மீனாக்கிட்ட கோவமா பேசுறீங்க. மீனா. உனக்கு தோசை வேணுமா” என்று முல்லை கேட்க.
இவர்கள் இருவரும் மட்டும் தனியே சமையலறையில் நிற்பதை விரும்பாத மீனா.“ஆமா எனக்கு தோசை வேணும்” என்று இவர்கள் நடுவே வந்து நின்றுகொண்டாள்.
மீனாவின் செயலை கதிர் பெரிதாக எடுத்துக்கொள்ளதவன்.“இந்தாடி இன்னும் ஒரு வாய் ஊட்டிக்கோ, “ என்றவன். மீண்டும் முல்லையின் வாயில் தோசையை திணிக்க. முல்லைக்கோ என்ன சொல்வதென்று புரியாமல் பாதி தொண்டையில் நின்று இருக்கும் தோசையை வேக வேகமாக விழுங்கிக்கொண்டு இருந்தாள்.
கதிர் செய்யும் வேலைகளை பார்த்து மீனா சொல்ல முடியாத கோபத்தில் இருந்தவள்
“முல்லை. எனக்கு நீ தோசை ஊத்துறியா இல்ல நானே ஊத்திக்கட்டுமா” என்று கேட்டதும்.
“சரி. அப்போ நீயே ஊத்திக்கோ. ஏய் ரவா லட்டு வா நம்ம ரூமுக்கு போகலாம்” என்றவன், முல்லையை விடாப்பிடியாக சமையலறையில் இருந்து இழுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான்.
கதிரின் செயலில் மேலும் மேலும் கோபமடைந்த மீனாவிற்க்கு கதிர் இனி தன் வாழ்வில் இல்லை என்ற ஏக்கத்தை விடவே, முல்லையை கதிர் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று எண்ணம் மீனாவின் மனதில் சிறு விதையாக விழத் தொடங்கியது.
“யார் என்ன நினைத்தால் எனக்கு என்ன. என் மனதில் பட்டதை தான் நான் செய்வேன்” என்று நினைத்திருந்த கதிரோ. முல்லையை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தவன் “ஆமா. நீ ஒழுங்கா சாப்பிட்டியா. உனக்கு தோசை பத்துச்சா” என்று கேட்க. அவனை ஏகத்துக்கும் முறைத்தாள் முல்லை.
“என்னடி முறைக்கிற தோசை பத்தலையா. நான் வேணும்னா பால் காய்ச்சி எடுத்துட்டு வரட்டா?” என்று கதிர் கேட்க
“ஒன்னும் தேவை இல்ல, ஏன் மாமா சார்
இப்படி பண்றீங்க.“ என்று முல்லை கோவம் கொள்ள.
“என்ன டி?நான் என்ன பண்ணேன்” என்றான் கதிர்,
“மீனா தோசை தானே ஊத்தி குடுக்க சொன்னாள், ஏன் நான் ஊத்தி கொடுக்குறதுக்குள்ள என்ன இங்க அழைச்சிட்டு வந்தீங்க” என்று முல்லை கேட்க.
“ம். உன் கூட டூயட் பாடறதுக்கு உன்னை அழைச்சிட்டு வந்தேன்” என்றான் கதிர்.
அவன் பதிலில் கடுப்பான முல்லை.“க்கும். நீங்க அப்படியே பாடிட்டாலும்” என்றதும்,
“என்னடி லந்தா” என்று கோவமாக கேட்டான்.
“பின்ன என்ன. அவ பாவம் தானே” என முல்லை மீனாவுக்கு பரிந்து பேச.
“யாரு பாவம், ஏன் அவங்களுக்கு தேவையான தோசையை அவங்க ஊதிக்க மாட்டாங்களா” என்று கேட்டான் கதிர்.
“அப்படி இல்ல மாமா சார். கூட்டு குடும்பத்தில் இந்த மாதிரி போட்டா போட்டி எல்லாம் போடக்கூடாது” என்று முல்லை சொல்ல. அது எனக்கும் தெரியும்.
ஆனா நம்ப ரெண்டு பேரும் அங்க இருக்கும்போது, நம்மள பிரிக்கணும்னே அவ நம்மகிட்ட வந்து பேசுற மாதிரி உனக்கு தோணலையா” என்று கேட்டான் கதிர்.
“என்ன, மீனா மேல திடீர்னு கோவமா பேசுறீங்க.“ என்று முல்லை கேட்க.“அது என்ன திடீர்னு, தப்பு யாரு பண்ணாலும் எனக்கு கோவம் வரும் தான்.“ என்று கதிர் சொல்ல, “ஆமாமா நீங்க தப்பே பண்ண மாட்டீங்க பாருங்க” என்று உதட்டை சுழித்தாள் முல்லை.
“ஏன் நான் என்ன தப்பு பண்ணேன்.“ என்று கதிர் கேட்க.“சரி அந்த பேச்ச எல்லாம் விடுங்க. அப்போ மீனா மேல இருக்கிற கோவத்தால தான் என்ன நீங்க ரூமுக்கு அழைச்சிட்டு வந்தீங்களா” என்று முல்லை கேட்க.
“பின்ன வேற எதுக்கு அழைச்சிட்டு வருவாங்க” என்று கேட்டான்.
“ஓ. மீனா இவுகள கல்யாணம் பண்ணிக்கலன்னு இவுகளுக்கு மீனா மேல இவ்ளோ கோபம் வருதா” என்று முல்லை தனக்குள் நினைத்து இருக்க.
“சரி சரி உனக்கு மறுபடியும் பசிச்சா நீ போய் பால் காய்ச்சி குடி.
இப்போ நான் போய் நாகாவ பாத்துட்டு வரேன்” என்றான் கதிர்.
“என்னது. நாகா அண்ணனை பார்க்க போறீங்களா. பொய் சொல்லாதீங்க. மறுபடியும் சரக்கு கடைக்குதானே போகப் போறீங்க” என்று முல்லை கேட்க,
“அடியே. மணி பத்தர. அதுவும் இல்லாம சாப்பிட்டதுக்கு பிறகு இந்த நாட்டை ஆளுற அப்பனே வந்து கொடுத்தாலும் நான் சரக்கடிக்க மாட்டேன் புரியுதா. இப்போ நான் போயி நாகாவ பாத்துட்டு வரேன். நீ படுத்து தூங்கு” என்றான் கதிர்,
“இல்ல இல்ல நானும் வருவேன். நீங்க தனியா போக கூடாது.“ என்று முல்லை சொல்ல.“ ஏய். நாங்க ரெண்டு பேரும் ஆம்பளைங்க டி, எங்களுக்குள்ள எதையாவது பேசுவோம். நீ எங்க நடுவுல வந்து என்ன பண்ண போற” என்று கதிர் கேட்க.
“தனியா இந்த ரூம்ல இருந்துகிட்டு மட்டும் நான் என்ன பண்றது. எனக்கு தனியா இருக்க போரடிக்குது” என்றாள் முல்லை.
“ம். அப்ப நீ போயி அம்மாகிட்ட, இல்ல இல்ல. அம்மா தூங்குவாங்க, அவங்கள நீ டிஸ்டர்ப் பண்ணாத,” என்று கதிர் சொல்ல,
“ஓ. உங்க அம்மா தூக்கத்தை நினைச்சு உங்களுக்கு கவலை இருக்கு. ஆனா என் மேல உங்களுக்கு அக்கறை இல்லையா” என்று முல்லை கேட்க.
“ஏண்டி படுத்துற. இப்ப நான் என்னதான் பண்ணனும்” என்று கதிர் கேட்க.
“நீங்க எங்கயும் வெளியே போகக்கூடாது. அப்படி போனீங்கன்னா என்னையும் அழைச்சிட்டு போங்க” என்றாள் முல்லை கண்டிப்புடன்
“இங்க இருக்குற தோட்டத்துக்கு போறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா” என்று கதிர் கோபத்துடன் கேட்க.
“உரிமை ஊறுகாய் பத்தி எல்லாம் இப்போ நான் பேசல. நான் உங்கள நைட்ள்ள எங்கேயும் தனியா விடமாட்டேன்” என்றாள் முல்லை.
“நீ ரொம்ப பண்றடி,” என்று கதிர் முணங்க.“ஆமாமா. அப்படித்தான் பண்ணுவேன்” என்றாள் முல்லை சிலுத்துக் கொண்டே.
“ப்ச், இப்ப என்ன. நாகா வீட்டுக்கு நீயும் வர, அவ்வளவுதானே. சரி வா போகலாம்” என்ற கதிர், முல்லையை அழைத்துக் கொண்டு நாகராஜன் தங்கியிருக்கும் தென்னந்தோப்பு வீட்டிற்கு செல்வதற்காக தன் அறையில் இருந்து வெளியே வந்தவனின் எதிரே ரோஜா கையில் தண்ணீர் பாட்டிலுடன் நின்று இருந்தாள்.
“அம்மா. நீங்க இன்னும் தூங்கலையா. நல்லதா போச்சு. நீங்க ரவா லட்டுக்கூட பேசிகிட்டு இருங்க. நான் நாகாவை பார்த்து பேசிட்டு வரேன்” என்ற கதிர், யார் பதிலுக்கும் காத்து இருக்கலாம் வேகமாக வீட்டில் இருந்து வெளியேறியவனின் செயலில் முல்லையின் முகம் வாடிபோக. இதே தருணம் ஜீவாவின் அறையில் இருந்து வெளியே வந்த மீனாவின் இதழ்களில் ஏளன புன்னகை பூத்தது.
இதே தருணம். தன் வீட்டிலிருந்து நேரே தன் நண்பனின் வீட்டிற்கு சென்ற கதிரை
“என்ன நண்பா. புது பொண்டாட்டி வந்த ஜோறுல என்னையெல்லாம் பார்க்க வரமாட்டேன்னு தானே நினைச்சேன். ஆனா நீ என்ன இப்படி வந்து நிக்கிற” என்று தன் நண்பனை சீண்டிப் பார்த்தான் நாகராஜன்.
தன் நண்பனின் கேள்வியில் கதிரை அறியாமல் அவன் இதழ்களில் புன்னகை மலர.“அய்யய்யோ. . என்னடா சிரிக்கிற” என்று மீண்டும் கிண்டலாக கேட்டான் நாகராஜன்.
“பின்ன முறைக்கவா” என்று கதிர் கேட்க “இந்த சிரிப்புக்கு என்ன காரணம்” என கேட்டான் அவன் நண்பன்
“என் சிரிப்புக்கு காரணத்தை தேடுறது விட்டுடு, இப்போ என் சந்தேகத்துக்கு பதிலை சொல்லு” என்று கதிர் கேட்க
“அப்படி என்ன நண்பா உனக்கு சந்தேகம்” என்று கேட்டான் நாகராஜன்.
“இந்த ரவா லட்டுக்கு என்னை பிடிக்காமதானே இந்த கல்யாணம் நடந்துச்சு. . ஆனா அவள் நடவடிக்கைல அவளுக்கு என் மேல நிறைய அக்கறை இருக்கிற மாதிரி தோணுது. சரி. நம்ம மேல அக்கறையா இருக்கான்னு நம்ம ஏதாவது உரிமை எடுத்துக்கிட்டா நம்மள தப்பா நினைப்பாளான்ற பயமும் இருக்கு. இதைப் எப்படிதாண்டா நான் ஹேண்டில் பண்றது” என்று கதிர் கேட்டதும், நாகராஜன் சத்தமாக சிரித்து விட்டான்
தன் நண்பனின் சிரிப்பில் கோபமடைந்த கதிரோ, “டேய். சந்தேகம் கேட்டா தீர்த்து வைக்கணும். இப்படி பைத்தியக்காரன் மாதிரி சிரிக்க கூடாது” என்று சொல்ல
“சிரிக்காம வேற என்ன பண்ண சொல்ற நண்பா. இங்க பாரு நண்பா. இதெல்லாம் தாலியோட மகிமை நண்பா” என்று நாகராஜன் சொல்ல.
“அப்போ முல்லை என்னை ஏத்துப்பாளா.“ என்று கதிர் கேட்டான்.
“நீ எத மனசுல வச்சுக்கிட்டு இப்படி கேக்குறேன்னு எனக்கு புரியுது நண்பா. ஆனா எனக்கு ஆரம்பத்துல இருந்து முல்லை உன் அண்ணனை விரும்புற மாதிரி ஒரு சின்ன எண்ணம் கூட வந்ததே இல்ல. அது ஏன்னு எனக்கும் தெரியல, சரி அந்த கதையை விடு, ஆனா இப்போ முல்லை உன்னோட பொண்டாட்டி. நீ தேவையில்லாம எதையும் யோசிச்சு உங்க சந்தோசத்தை தள்ளி போடாம. முல்லை கூட மனம் விட்டு பேசி. அவங்க கூட வாழ்க்கையை ஆரம்பி” என்றான் நாகராஜன்
தன் நண்பனின் வார்த்தையைக்கேட்டு சிரித்த கதிரோ, “எனக்கும் அந்த ஆசை எல்லாம் இருக்குதாண்டா. ஆனா அண்ணனுக்கு எங்க கல்யாணம் முடிஞ்ச கதையே தெரியாது, தெரிஞ்சா அண்ணன் என்ன நினைக்குமுன்னு ஒரு சின்ன கவலையும் இருக்கு” என்று கதிர் சொல்ல.
“நீ என்ன லூசா. ஜீவா அண்ணனுக்கு முதல்ல கல்யாணம் நடந்ததாலதான நீ ஆசைப்பட்ட முல்லை உனக்கு கிடைச்சாங்க. இங்க பாரு நண்பா. நீயும் முல்லையும் சேரனும் என்றது தான் விதி. அதான் உன் ஆசைப்படியே உனக்கு உன் காதலியே மனைவியாக அமைஞ்சுட்டாங்க. நீ சும்மா அண்ணனுக்காக யோசிக்கிறேன் ஆயாவுக்காக யோசிக்கிறேன்னு இல்லாம, போ போய் முல்லைக்கூட உன் வாழ்க்கையை ஆரம்பி நண்பா” என்றான் நாகராஜன்.
“ஆமாமா, உனக்கு என்ன. ஆரம்பி ஆரம்பின்னு சொல்ற. நானா அவகிட்ட ஏதாவது உரிமை எடுத்துக்கிட்டா என்னை அவ தப்பா நினைச்சிட மாட்டாளா. அதான், அவ மனசார என்ன ஏத்துக்கிட்ட பிறகு எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும்ன்னு காத்து இருக்கேன்” என்று கதிர் சொல்ல
“டேய். அவங்க மனசுல நீ இருக்கணும்னா நீ அவங்க மனசுல பதியுற மாதிரி ஏதாவது பண்ணி இடம் பிடிக்கனும் டா” என்று நாகராஜன் சொல்ல.
“என்னடா நண்பா சொல்ற. ஆனா எனக்கு தான் அந்த ரொமான்ஸ் எல்லாம் வரவே வராதே” என்றான் கதிர்.
தன் நண்பனை மார்க்கமாக பார்த்த நாகராஜனோ, “அது என்னமோ உண்மைதான், நீ எப்ப பாரு மூஞ்ச ஊறுகாய் தின்ன உடும்பு மாறியே வச்சிருப்ப. உனக்கு இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் ட்ரை பண்ணு நண்பா, நீ உலகநாயகன் படமா பாரு. பாத்துட்டு உன்னுடைய பெர்ஃபார்மென்ஸ்ச கொஞ்சம் மெருகேத்து. கூடிய சீக்கிரம் நீங்க ரெண்டு பேரா இருக்குறவங்க மூணு பேரா மாறுங்க” என்ற நாகராஜனை பார்த்து கதிர் வெட்கப்பட,
“ஐயையோ. . நீ வெக்கப்படுறத பார்த்தா ரெண்டு பேர் நாலு பேரா மாறிடுவீங்க போல” என்று தன் நண்பனுடன் கிண்டலாக பேசிக்கொண்டு இருந்தான் நாகராஜன்.