சரண்யாவின் கேள்விக்கு முல்லை பதில் தரும் முன்னே.
“சரண்யா. ஜீவா தம்பிக்கு மீனா கூட கல்யாணம் ஆயிடுச்சு. இந்த ஜென்மத்துல முல்லைக்கு கதிர் மாப்பிள்ளை தான் புருஷன்” என்று முருகன் சொல்ல. சரண்யா நிலைமையை புரிந்து கொண்டவள்
“புரிது அப்பா. வாழ்த்துகள் முல்லை. கதிர் உங்களுக்கும் வாழ்த்துகள்” என்று சரண்யா சொல்ல.
“என்ன. வெறும் வாழ்த்துதானா. அன்பளிப்பு எதுவும் இல்லையா” என்று கேட்டார் கதிர்.
“உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சிடுதுன்னு அரசல் புரசலா தான் கேள்விப்பட்டேன். ஆனா உண்மை தெரியாமல் கிப்ட் வாங்க கூடாதுன்னு தான் வாங்கல. சரி. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் இன்னைக்கு சாயங்காலம் முல்லை வீட்டுக்கு கிப்ட் வாங்கிட்டு வரேன்” என்று சரண்யா சொல்ல
“எனக்கு பிடிச்சது.“ என்று கதிர் சொல்லும் முன்னே, “சரக்கு தான் கேக்க போறாரு” என்று தனக்குள் முனங்கினாள் முல்லை
முல்லையின் எண்ணத்தை அறிந்திருந்த கதிர், அவளை முறைத்த வண்ணம், “இன்னைக்கு சாயங்காலம் நாங்க குன்னக்குடிக்கு கிளம்பிடுவோம். நாங்க அடுத்த முறை இங்க வரும்போது நீ ஒரு பத்து பவுன்ல சங்கிலி வாங்கிட்டு வா” என்று கதிர் சொல்ல, சரண்யாவின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.
எப்போதும் போலவே இந்த முறையும் சரண்யாவிடம் வம்பிழுக்கும் கதிரின் பேச்சைக் கேட்டு, முல்லை சிரிக்க, “ஏனடி. உன் மாமா சார் என்னை ஒரண்டை இழுக்கிறாரு நீ சிரிச்சுக்கிட்டு இருக்கியா” என்று கேட்க.
“சரி சரி. அடுத்த முறை மாமா சார் கேட்ட மாதிரி பத்து பவுன் சங்கிலியோட எங்க வீட்டுக்கு வந்துடு” என்று முல்லை சொன்னதும்,
“யப்பா சாமி, உன்னை நான் கோவில பாத்து பேசியே இருந்திருக்கவே கூடாது, ஆளை விடுமா” என்று தலை தெரிக்க அங்கிருந்து ஓடி இருந்தாள் சரண்யா.
அவள் சென்றதும், முருகனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே சில பல கதைகள் பேசி முடிக்க, நேரம் மதியம் இரண்டை காட்டியது.
“என்னங்க, நேரம் ஆகுது வீட்டுக்கு கிளம்பலாமா” என்று பார்வதி கேட்க
“இதோ போகலாம். முல்லை நீ மாப்பிள்ளைய காருக்கு அழைச்சிட்டு போ. நானும் அம்மாவும் ஐயருக்கு தக்ஷனை கொடுத்துட்டு வரோம்” என்று முருகன் சொல்ல.
கதிரும் முல்லையும் காரை நோக்கி நடக்க, “மாமா சார். உங்களுக்கு இந்த கோவில் நினைவிருக்கா” என்று கேட்டாள் முல்லை
அவள் கேள்வியில் அவளை முறைத்து பார்த்தவன், “ஏண்டி. ஏன் நினைவில்லாம. நம்ம சின்ன வயசுல இங்க விளையாடும் போது. அதோ அங்க ஒரு தூண் இருக்கு பாரு, அங்க தானே போய் நீ அடிக்கடி மறஞ்சுப்ப, நான் தானே உன்னை தேடி கண்டுபிடிப்பேன்” என்று கதிர் சொல்ல.“மாமா சார், நீங்க இதெல்லாம் மறக்கலையா. இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களா” என்று ஆச்சரியமாக கேட்டாள் முல்லை
“இவ என்ன பைத்தியம் மாதிரி கேள்வி கேட்கிறா. இவள மறந்துட்டு என்னால வாழ முடியுமா. அது சாத்தியமா. இவ பிறந்த கணத்துல இருந்தே இவளை பற்றி நினைக்காத நாளென்று ஒன்னு இருக்கா. . ,
ஹ்ம். இவளுக்கு என்னைக்கு தான் என் மனசு புரிய போகுதோ.“ என்று கதிர் இந்த முறையும் தன் மனதிலேயே காதல் கோட்டையை கட்டிக் கொண்டிருக்க,
“ஆமா. இதெல்லாம் ஞாபகம் இருந்து என்ன பிரயோஜனம், எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து என் அத்த மகனான இவரை நான் நேசிச்சதே இவருக்கு தெரியலையே” என்று தனக்குள் அலுத்துக் கொண்டாள் முல்லை.
இப்படியாத இவர்கள் இருவரும் மீண்டும் மாறி மாறி ஒருவரை நினைத்து ஒருவர் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு இருக்க, முருகன் பார்வதியும் காருக்குத் திரும்பிய நிலையில். சில நிமிடத்திலேயே இவர்கள் நால்வரும் தங்கள் வீட்டையும் சென்று அடைந்தார்கள்
“அம்மாடி முல்லை. நீயும் மாப்பிள்ளையும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்று முருகன் சொல்ல, மீண்டும் கதிரும் முல்லையும் ஒன்றாக ஒரே அறையில் தங்க நேரிட்டது
முல்லை குளியலறை சென்று தன் பட்டு புடவையை மாற்றிக்கொண்டு கிளி பச்சை நிற பருத்தி சேலைக்கு காவி நிற ரவிகை அணிந்தப்படி வெளியே வந்தவள்,
“மாமா சார். நீங்க ரெஸ்ட் எடுங்க. ஏதாவது வேணும்னா என்னை எழுப்புங்க” என்ற முல்லை, தரையில் பாயை விரித்து பார்த்துக்கொண்டாள்.
முல்லையின் செயலில் புருவம் உயர்த்திய கதிர், “இப்போ எதுக்கு இவ கீழ படுக்கறா. அதுக்குள்ள ஏதாவது நாடகம் பார்த்துட்டாளா.“ என்று யோசித்தான்.
கதிர் தன்னையே பார்த்து இருக்கிறான் என்பதை அறிந்திடாத முல்லை போர்வையால் தன்னை மூடிக்கொள்ள, “ஏய் ரவா லட்டு. நீ ஏன் கீழ படுக்குற” என்று கேட்டதும்.
கதிரின் கேள்வியில் தன் போர்வையை விலக்கி அவனை உறுத்து முறைத்தவள்.“பரவால்ல மாமா சார். நீங்க மேல படுத்துக்கோங்க. நான் கீழப் படுத்துகிறேன்” என்று சொன்னதும்.
“ஏய், அதான் ஏன்னு கேக்குறேன், நேத்து நைட்டு என்னமோ நான் மெத்தையில் தான் படுப்பேன்னு சொன்ன, ஏன் இப்போ என்ன ஆச்சு” என்று கதிர் கேட்க.
“ஒன்னும் ஆகல.“ என்று சமாளித்தாள் முல்லை.
“இந்தா கேக்குறேனே. என்ன ஆச்சு” என்று மீண்டும் கதிர் மிரட்ட.
“இன்னும் என்ன ஆகணும். அதான் நீங்க சொன்னீங்களே. என் பக்கத்துல உங்களால படுக்க முடியலன்னு. அதனாலதான் நான் கீழ படுத்துகிறேன், நீங்கபடுங்க” என்ற முல்லை. கண்கள் மூடி போர்வையால் தன்னை போர்த்திக் கொண்டவளை ஏகத்துக்கும் முறைத்தான் கதிர்.
“இவ என்ன பைத்தியமா. நம்ம இவ பக்கத்துல படுத்தா டெம்ப் ஆகிடுவோம்ன்னு கட்டில் கீழே போயி படுத்தா. இவ என்ன நம்பள வேற மாதிரி புரிஞ்சுகிட்டாளா. ம். இவ மனசுல என்ன தான் இருக்கு” என்று கதிர். தரையில் உறங்கும் முல்லையை பார்த்தப்படி அறையில் இருந்து வெளியேறி இருந்தான் கதிர்வேலன்.
நேரம் மாலை 4மணியளவில்.
முல்லையின் அறைக்குள் நுழைந்தார் பார்வதி.
முல்லை தன் அலமாரியில் அடுக்கி வைத்து இருந்த துணியை எல்லாம் பார்த்தப்படி நின்று இருர்ந்தவளை.
“முல்லை. 6pm க்குள்ள நம்ம வீட்டுல இருந்து கிளம்புனா தான் நீங்க இருட்டுறதுக்குள்ள குன்னக்குடி போக முடியும்” என்றார் பார்வதி.
“ஹாங். இதோ நான் கிளம்பிட்டேன் சித்தி” என்றவள். சின்ன பையை மட்டும் எடுத்துக்கொண்டு ரூமில் இருந்து வெளியேற.
“என்ன முல்லை. உனக்கு தேவையானதை எல்லாம் எடுத்துகிட்டியா” என்று கேட்டர் முருகன்.
தன் தந்தையின் கேள்வியில் மீண்டும் அவள் அறையை ஏக்கமாக திரும்பி பார்த்து
பெருமூச்சு எடுத்த முல்லை.
“ம். எடுத்துக்கிட்டேன் அப்பா” என்றாள்.
“முல்லை. உனக்கு புடவ நகை பாத்திரம் பண்டம் எல்லாம் முறையா நாளைக்கு பாண்டியன் அண்ணன் வீட்டுக்கு சீர் எடுத்துட்டு வரோம்” என்று பார்வதி சொன்னதும்.
“சித்தி. நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதிங்க. இப்போ பாண்டியன் மாமா வீட்டுல மீனாவும் வாழ வந்து இருக்கா. அப்டி இருக்கும் போது நீங்க எனக்கு மட்டும் சீர் கொடுத்தா நல்லா இருக்காது. அதனால எனக்கு பண்ற மாதிரியே மீனாவுக்கும் பண்றிங்களா” என்று முல்லை கேட்டதும்.
தன் மகளை அன்பாக கட்டி அணைத்துக்கொண்ட முருகன்.
“உனக்கு அப்படியே உன் அம்மா குணம். இப்ப என்ன. உனக்கு நான் பண்ற சீர் மாதிரியே மீனாவுக்கும் நானே எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணிடுறேன் போதுமா” என்று முருகன் சொல்ல. தன் தந்தையின் இத்தகைய மாற்றத்தை எண்ணி முல்லை அகம் மகிழ, இவர்கள் பேசுவதை வாசலின் நின்றப்படி கேட்டுக் கொண்டு இருந்தான் கதிர்வேலன்.
“சரி மா. நேரமாச்சு நீங்க கிளம்புங்க. மீதி விஷயத்தை நாளைக்கு நானும் உன் சித்தியும் மாப்பிள்ள வீட்டுக்கு வரும் போது பேசிப்போம்” என்று முருகன் சொல்ல. முல்லை தன் பிறந்த வீட்டில் இருந்து கதிருடன் சேர்ந்து அவளின் புகுந்த வீட்டுக்கு செல்வதற்காக வாசலில் நின்று இருந்த காரை நோக்கி சென்றாள்.
“மாப்புள்ள. நீங்க முல்லையை அழைச்சிட்டு நம்ம காருல போயிடுங்க. நாளைக்கு நாங்க வீட்டுக்கு வரும் போது காரை எடுத்துக்குறோம்” என்று முருகன் சொல்ல.
“ம். சரி மாமா. நாங்க கிளம்புறோம்” என்ற கதிர். பார்வதியை பார்த்து சிறிய புன்முறுவலுடன் முருகனின் இல்லத்தில் இருந்து விடை பெற.
ஏனோ இந்த சூழ்நிலையில் தன் மனதில் எழும் உணர்வுகளை வார்த்தையால் விவரிக்க முடியாமல் முல்லையின் கண்கள் கலங்கியப்படி காரில் ஏறி அமர்ந்ததும்.
கதிர் வண்டியை குன்னக்குடியை நோக்க விரட்ட,
முருகனும் பார்வதியும் இவர்களுக்கு கையசைத்து வழி அனுப்பி வைத்தார்கள்.
வழியெல்லாம் கதிரும் முல்லையும் அமைதியாகவே பயணிக்க.
இருவர் மனதிலும் பல கேள்விகள் ஓடிக்கொண்டு தான் இருந்தது.
இவர்களுக்குள் திருமணம் நடந்த மகிழ்ச்சியை மீறி இருவரும் இனம்புரியாத
சோகத்தில் தங்களை அடிமைப்படுத்தி வைத்து இருந்தார்கள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் கதிர் அவன் விரட்டிய காரை பாண்டியன் இல்லத்தின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த.
முல்லை காரில் இருந்து இறங்கியவளை ஓடி வந்து கட்டிக்கொண்டாள் ரோஜா,
“அண்ணி. நீங்க வாத்திக்கூட நாளைக்கு தான் வருவீங்கன்னு நினைச்சேன்” என்று ரோஜா சொல்ல.
“நாளைக்கு அப்பாவும் சித்தியும் வருவாங்க ரோஜா” என்று முல்லை சொல்ல.
“ம்மா. எப்படி இருக்கீங்க” என்று கதிர் தன் தங்கையை நலம் விசாரித்தான்.
“ஒரே நாளுல எனக்கு என்ன ஆகப்போகுது வாத்தி.“ என்று ரோஜா சிரித்த முகத்துடன் கேட்க,
“உங்களுக்கு ஒன்னும் ஆகாது” என்ற கதிரை பார்த்து சிரித்த வண்ணமாக முல்லையின் கையை பிடித்து வீட்டுக்குள் அழைத்து சென்ற ரோஜா.“அப்பா. அண்ணியும் வாத்தியும் வந்துட்டாங்க” என்றதும். சமையலறையில் முதல் ஆளாக ஓடி வந்தாள் மீனா.
“வா மா முல்லை. என்ன கதிரு. இன்னும் ரெண்டு நாள் முருகன் வீட்ல தங்கி இருந்துட்டு வந்து இருக்கலாமே” என்று பாண்டியன் கேட்க. முல்லை கதிரை முறைக்க.
“ஆமா. நேத்து ஒரு நாள் நைட்டு நான் பட்டது போதாதா” என்று முணங்கிக்கொண்டே கதிர் அவன் அறைக்குள் புகுந்தான்.
முல்லை மீது தனக்கு இருக்கும் காதலை கட்டுப்படுத்த முடியாமல் கதிர் அப்படியொரு வார்த்தையை சொல்லி இருக்க, அதன் அர்த்ததத்தை புரிந்துகொள்ளாத மீனாவோ.
முல்லையை கதிர் முழு மனதாக ஏற்றுக்கொள்ள வில்லை என்று எண்ணி இருந்தாள்.
மீனாவின் முகத்தை வைத்தே அவளின் எண்ண ஓட்டத்தை கணித்து இருந்த ரோஜாவோ.“மீனா அண்ணி. நைட் இட்லி கூட கத்திரிக்காய் சட்னி வச்சிடலாம். ஜீவா அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று சொன்னதும். மீனா சம்மதமாக தலையசைக்க. ஜீவாவின் பெயரை கேட்டதும் பாண்டியன் அவர் அறைக்கு சென்று விட்டார்.
“ரோஜா. என்ன சாப்பாடு பண்றீங்க. வாங்க நானும் வந்து உதவி பண்றேன்” என்ற முல்லை சமையலறைக்குள் நுழைய பார்த்தவளை தடுத்து நிறுத்திய ரோஜா.
“நீங்க போய் டிரஸ் மாத்திட்டு வாங்க. சாப்பாடு வேலையெல்லாம் நாங்க பார்த்துப்போம்” என்று சொல்ல.
முல்லை ரோஜாவின் அறையை நோக்கி நடந்தாள்,
தன் அறைக்கு சென்ற முல்லையை பார்த்து, “அண்ணி அண்ணி ஏன் என் ரூமுக்கு போறீங்க. நீங்க உங்க ரூம்ல போய் டிரஸ் மாத்திக்கோங்க” என்ற ரோஜாவின் வார்த்தையை கேட்டு. முல்லையை விட மீனாவுக்கு தான் அதிர்ச்சியானது.
“என்ன சொல்ற. என் ரூமா. நான் எப்பவும் உன் ரூம்ல தானே இருப்பேன்.“ என்று முல்லை கேட்க.
“இனி நீங்க எப்பவும் உங்க ரூம்ல தான் இருக்கனும்.“ என்று ரோஜா சொல்ல.
“முல்லைக்கு தனி ரூமா” என்று மீனா கேட்க.
“அவங்களுக்கு ஏன் தனி ரூம். வாத்தி இருக்குற ரூம் தான் இனி முல்லை அண்ணியின் ரூம்” என்ற ரோஜாவை மீனா கடுப்பாக பார்த்தாள்.
ரோஜாவின் வார்த்தையில் நியாயம் இருந்தாலும். முல்லை தயக்கத்துடனே நின்று இருக்க,
“அண்ணி. போங்க. போய் ட்ரெஸ் மாத்துங்க. மீனா அண்ணி நீங்க வாங்க” என்ற ரோஜா. மீனாவின் கையை பிடித்து தன்னோடு சமையலறைக்குள் அழைத்து சென்றாள்.
“இவ வேற ஒரு இம்ச. இப்போ ஏன் என்னை மாமா சார் ரூமுல போய் தங்க சொல்லுறா. ஏற்கனவே அவருக்கு என்னை ஆகாது. இப்போ அவர்கூட ஒரே ரூம்ல இருக்க அவரு எப்படி சம்மதிப்பாரு. .?” என்று தனக்குள்ளே கேள்விகேட்டுக்கொண்டு முல்லை கதிரின் அறைக்கு வெளியே நின்று இருந்தவள், கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு போனாள்.
கதவின் அருகே நின்று இருந்த முல்லையை கேள்வியாக கதிர் பார்க்க.
“என்ன? இப்படி முறைக்கிறாரு. அவரு ரூமுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லுவாரா?” என்று தனக்குள் யோசித்த வண்ணமாகவே நின்று இருந்தாள் முல்லை.
தயக்கத்துடன் நின்று இருந்த பெண்ணவளை பார்த்து, “ நான் வேணும்னா ஆரத்தி எடுக்க ஏற்பாடு பண்ணவா.?” என்று கதிர் கேட்க.
“அ. அர்த்தியா, அது யாரு” என்று முல்லை புரியாமல் கேட்டவளின் உச்சி மண்டையில் நக்கென்று குட்டு வைத்தவன், “ம். ஓடி போன உன் பாட்டி” என்றான் கதிர்.
கதிரின் வார்த்தையை கேட்டு முல்லை சிரித்தவள்.“பாட்டியால எப்படி ஓட முடியும் மாமா சார்” என்ற முல்லையை கதிர் ஏகத்துக்கும் முறைத்தவன்.
“நேரா நம்ம ரூமுக்குள்ள வராம. பிடிச்சி வைச்ச பிள்ளையார் கணக்கா இங்கேயே நிக்குறியே. அதான் உனக்கு ஆரத்தி எடுத்து உள்ள அழைக்கணுமான்னு கேட்டேன்” என்ற கதிரை ஆச்சிரியமாக பார்த்தாள் முல்லை.
ஆம், ஆச்சிரியத்தில் அவளின் மான் விழிகள் அழகாய் நடனம் ஆடும் அழகினை ஆடவனும் ரசிக்க தவரவில்லை.
என் அறை என்று சொல்லாமல். நம் அறை என்று கதிர்வேலன் தன்னையும் அவனுடன் சேர்த்துக்கொண்ட சொல்லாடல் மங்கையின் மனதை அவன் வசம் மயங்க தான் செய்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படியே நின்று இருக்க.
“என்ன நண்பா கண்ணால கபடி ஆடுறியா?” என்ற தன் நண்பனின் குரலில் கதிரின் பார்வை கடுப்பாக வாசலை பார்க்க. அங்கே சிரித்த முகத்துடன் நின்று இருந்தான் நாகராஜன்.
நாகராஜனின் குரலை கேட்டு முல்லையும் வாசலை பார்க்க.“உள்ள போ. நம்ம வீட்டுல உனக்கு என்ன தயக்கம்” என்று இனிமையாகவே சொன்னான் கதிர்.
கதிரின் வார்த்தையில் சின்னதாக மகிழ்ச்சி அடைந்த பெண்ணவள் உரிமையுடன் அவன் அறைக்குள் நுழைய.
“இந்த ரூமுக்குள்ள வந்து எத்தனை வருஷமாச்சு” என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள் முல்லை.
அவள் அறையினுள் சென்றதும் கதிர் தன் நண்பனுடன் சேர்ந்து தோட்டத்து பக்கம் வந்தவன், “ஜீவா அண்ணன் எங்க டா. ஏன் இன்னும் அவர் வீட்டுக்கு வரல” என்று கதிர் கேட்க.
“நானும் அவர் போற இடத்துல எல்லாம் தேடிப் பார்த்துட்டேன் நண்பா, ஆனா அவர் எங்கேயும் வரலன்னு தான் பதில் வருது” என்றான் நாகராஜன்.
“என்னடா சொல்ற. அண்ணன் எங்க தான் போய் இருக்கும்.“ என்று கதிர்வேலன் யோசித்தவனுக்கு. தனக்கும் முல்லைக்கும் திருமணம் ஆன செய்தி ஜீவானந்தத்திற்கு தெரிய வந்தால் அவனின் செயல் என்னவாக இருக்கும் என்ற குழப்பம் இந்த நொடி வரை இருக்கத்தான் செய்தது.
அன்றைய தினம் இரவு நேரம் பாண்டிய இரவு உணவை முடித்துக்கொண்டு அவர் அறைக்கு செல்ல.
அவசர அவசரமாக கதிர்வேலன் தன் அறையில் இருந்து சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டவனின் எதிரே வந்து நின்றாள் முல்லை.
முல்லையின் செயலில் மீனாவின் பார்வை அவர்களையே பார்த்து இருக்க.“என்னடி. வெளியே இருந்து ஏதாவது வாங்கிட்டு வரணுமா” என்று கதிர் கேட்க,
“எனக்கு எதுவும் வேணாம், நீங்க எங்க கிளம்புறீங்க?” என்று கேட்டாள் முல்லை
“போகும் போது எங்க போறீங்கன்னு கேட்கலாமா” என்ற கதிரை பார்த்து, “சரி அப்போ எங்க இருந்து வருவீங்கன்னு சொல்லுங்க” என்று கிண்டலுடன் முல்லை கேட்க, “ ஏய். நீயேன் இதெல்லாம் கேட்குற” என்றான் கதிர்
“என்ன மாமா சார். மறுபடியும் சரக்கு அடிக்க கிளம்புறீங்களா” என்ற முல்லையின் கேள்விக்கு.“ஆமா. சரக்கு அடிக்க தான் போறேன். ஏன் உனக்கும் வேணுமா” என்று கதிர் கேட்க.
“எனக்கெல்லாம் வேணாம். சரி இருங்க நானும் வரேன்” என்ற முல்லை வாசலை நோக்கி நடந்தாள்.
“ஏய். என்ன. நேத்து மாதிரி மறுபடியும் பிரச்சனை பண்ணலாம்னு நினைக்கிறியா. இங்க பாரு. இந்த ஊர்ல சரக்கு அடிச்சிட்டு எப்படி வீட்டுக்கு வரணும்னு எனக்கு தெரியும். நீ என்னை பத்தி கவலைப்படாம போயி சாப்பிட்டு தூங்கு” என்று கதிர் சொல்ல,
“இங்க பாருங்க. நீங்க சரக்கடிக்க போறதா இருந்தா உங்க கூட நானும் வருவேன். இல்லனா நீங்க தனியா போகக்கூடாது” என்று முல்லை கட்டளையாக சொல்ல.
“என்னடி. மீறி போனா என்ன பண்ணுவ” என்று கதிர் கேட்டதும்.“என்ன வேணாலும் பண்ணுவேன் மாமா சார்” என்றாள் முல்லை.
“அதான் கேக்குறேன் என்ன பண்ணுவ. உன்னால என்ன பண்ண முடியும்” என்ற கதிரை முறைத்த முல்லை.
“நீங்க சரக்கு அடிக்க போனா நான் இந்த நிமிஷமே இங்கருந்து கோவில் குலமுன்னு எங்காவது போயிடுவேன்” என்ற முல்லையின் வார்த்தையில் கதிரின் முகம் கோவத்தில் இறுகியது.
“ஏய், என்ன பைத்தியம் மாதிரி பேசுற” என்று கதிர் கத்தியதும்,
“பின்ன எப்படி பேச சொல்றீங்க. இப்ப எதுக்காக நீங்க சும்மா சும்மா சாராயக்கடையை தேடி போறிங்க. அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கு” என்று இயல்புக்கு மாறாக முல்லை கோபத்துடன் பேச.“அண்ணி அண்ணி என்ன ஆச்சு?, என்ன பிரச்சனை” என்று பதறி அடித்து இவர்கள் அருகே ஓடி வந்தாள் ரோஜா.
“இங்க பாரு ரோஜா, உன் அண்ணன்கிட்ட சொல்லி வை, எனக்கு சாராய வாடையே பிடிக்காது” என்று முல்லை சொன்னதும்.“உன்னை யாருடி குடிக்க சொன்னது” என்று கேட்டார் கதிர்.
“ஜோக்கா. என்ன ஜோக்கா. இங்க பாருங்க மாமா சார். இனி நீங்க தண்ணி அடிச்சிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்தா நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்” என்று முல்லைச் சொல்ல.
“சரி. நான் வரல, நான் போயி என் நண்பன் கூட படுத்துக்கிறேன்” என்றான் கதிர்.
“ஓ. அப்போ நான் இங்க இருக்குறது உங்களுக்கு பிடிக்கல. அதனால தானே இங்க இருந்து போறேன்னு சொல்றிங்க, சரி நீங்க எங்கேயும் போக வேணா. நான் கிளம்புறேன்” என்ற முல்லை. கோவமாக வாசலை நோக்கி நடக்க.
“ஏய் எங்கடி போற” என்று அவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திதான் கதிர் வேலன்.
“உங்ககிட்ட சண்டை போடற தெம்பு எனக்கு இல்ல, நீங்க இப்போ வெளிய போனா நான் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுவேன்” என்று முல்லைச் சொல்ல,
“ச்சே, ஒரு மனுஷனால நிம்மதியா சரக்கு கூட அடிக்க முடியல. எல்லாம் என் தலையெழுத்து” என்று முகத்தை திருப்பிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டான் கதிர்.
கோபமாக சென்ற கதிரை முல்லை முறைத்துப் பார்த்தபடி நின்று இருக்க, “என்ன அண்ணி நீங்க. ஏன் வீட்டை விட்டு எல்லாம் வெளியே போறேன்னு சொல்றீங்க” என்ற ரோஜாவை பார்த்து ஒற்றைக்கண் அடித்து சிரித்த முல்லை.
“அப்படி சொன்னாதான் மாமா சார் குடிக்க போக மாட்டாரு ரோஜா, இப்ப பாத்தியா உன் வாத்தி ரூம்குள்ள போயிட்டாரு” என்று சிரித்த முகத்துடன் முல்லை சொன்னதும்.
“ஐ. சூப்பர் அண்ணி, இந்த வைத்தியம் கூட நல்லா தான் இருக்கு” என்ற ரோஜா, முல்லையை கட்டி அணைத்து சிரித்துக் கொண்டாள்.