Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 38

CHAPTER 38

முல்லை – 38

By Roja Roslin · October 29, 2026

0

இரவு 1மணி அளவில். உறக்கத்தில் முல்லை தன் கையை எடுத்து கதிரின் மேல் போட்டதும், தூக்கத்தில் கண் விழித்த கதிரின் அருகாமையில் முல்லை இருக்க.

அவளின் சூடான மூச்சு காற்று கதிரின் தேகத்தில் மேலும் உஷனத்தை கூட்டியது.

தன் கைக்கு எட்டாத கனி அவள் என்று இவன் இதுநாள் வரை நினைத்து இருக்க. இப்போது கதிரின் அதரங்களுக்கு அருகே மாதுளை மணி நிறத்தில் சிவந்து இருக்கும் பெண்ணின் இதழ்களை கண்டு ஆடவனின் இதழ்களும் வியர்த்து போனது. .

கண்கள் இமைக்காமல் தன் அருகே தோன்றி இருக்கும் வானவில்லின் அழகை

கதிர் ரசித்து இருக்க. சட்டென்று முல்லை அவளின் வலது காலை தூக்கி கதிரின் கால் மீது போட்டதும்.

கஷ்டப்பட்டு அடக்கி வைத்து இருந்த கதிரின் வீரப்பு எல்லாம் விரல் சுண்டும் நொடியில் காணாமல் போய் இருந்தது.

“ஐயையோ கதிரே. இவ எட்டடி தள்ளி நின்னாலே உனக்கு பத்தடி உள்ளுக்குள் பதறி எழுந்துடும். இப்போ இவ வேற. கையை போட்டு, காலை போட்டு. ஹ்ம் ஹ்ம். வேண்டாம்ம் டா கதிரு. இவ மனசுல நம்ம மேல விருப்பமே இல்லாம இவளை நம்ம தொட்டுட்டா அப்புறம் காலத்துக்கும் இவ மனசுல நம்மனால இடம் பிடிக்கவே முடியாது. முதல்ல இவ மனசுல நம்ம நிலையான இடத்தை பிடிப்போம். அப்புறம் இவளை ஒரு பிடி பிடிப்போம். அதுவரைக்கும் கை வாய் காலுன்னு எல்லாத்தையும் மூடிக்கிட்டு படுத்துட்டு கதிரு, “ என்று எண்ணிய கதிர்.

பொறுமையாக முல்லையின் கையையும் காலையும் தன் மீது இருந்து எடுத்து விட்டவன். கட்டிலில் இருந்து எழுந்து அவளை ஏக்கத்துடன் பார்த்து. போர்வையை சரி வர அவளுக்கு போர்த்திவிட்டு, அறையின் கதவை திறந்துக்கொண்டு ஹாலில் இருந்த சோபாவில் சென்று படுத்தவனின் மனதில். முல்லை அவனை உறக்கத்தில் கட்டி அணைத்து படுத்துக்கொண்ட நிகழ்வு தான் வந்து வந்து போனது.

விடியல் காலை 5மணி அளவில் முல்லை உறக்கம் கலைந்து எழுந்தவள் அருகே கதிர் இல்லையென்று அறிந்துகொண்டவள்,

“மாமா சார் எங்க போனாரு” என்று எண்ணிக்கொண்டே. அறையின் கதவை பார்க்க. அங்கே தாப்பா திறந்து இருக்க.

“காலையில எழுந்து எங்க போய் இருப்பாரு. ஒரு வேள ஜாகிங் போயிட்டாரா”. என்று எண்ணியவள்.

“சரி. அப்பா இன்னைக்கு கோவிலுக்கு போகணும்னு சொன்னாரே. நம்ம மாமா சார் வரதுக்குள்ள போய் குளிச்சிட்டு வந்துடலாம்” என்று எண்ணிய முல்லை, தன் அறையின் கதவை பூட்டிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தவள், தலைக்கு குளித்து. கூந்தலில் ஈர துணியை சுற்றிக்கொண்டு, மார்பளவு துண்டோடு தன் அலமாரியை திறந்து புது புடவையை தேடிக்கொண்டு இருந்தாள்.

இரண்டு மூன்று புடவையை நிராகரித்தவள் கடைசியாக தங்க நிறத்தில் உள்ள பட்டுப் புடவையையும், அதற்கு தோதான ரவிக்கையும் எடுத்துக்கொண்டு ஆள் உயர கண்ணாடியின் முன்னே நின்று தன் மார்பளவுக்கு கட்டியிருந்த துண்டை கழட்டி ரவிக்கையை அணிவிக்க எண்ணியவள் தன் முன்னே இருந்த கண்ணாடியை பார்த்த தருணம்.

தூக்க கலகத்தில் கதிர் இவர்கள் கட்டிலின் மேலே அமர்ந்து இருந்தவன், “குட் மார்னிங்” என்று இரண்டு கைகளை தன் தலைக்கு மேல் தூக்கியபடி காலை வணக்கத்தை சொன்னவனின் கண்கள் முல்லை இருந்த கோலத்தை பார்த்து,

“ஏய். எ. ன், ன டி இது” என்றவனின் குரலை கேட்டு முல்லைக்கு விழிகள் பிதுங்கி.

“மாமா சார். நீங்க எப்படி ரூமுக்குள்ள? நான் கதவை பூட்டிட்டு தானே குளிக்க போனேன்” என்றவள். அவசர அவசரமாக தன் புடவையயை எடுக்க நினைத்தவளின் அரைகுறை தரிசனம் ஆணின் மனதை ஆட்டம் காண வைத்த நிலையில். என்ன நடந்தாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்த கதிர்வேலன்.

மின்னல் வேகத்தில் முல்லையை நெருங்கியவன், அவள் சுதாரிக்கும் முன்னே அவளை கட்டி அணைத்துக்கொண்டவனின் செயலில் முல்லையின் சப்த நாடியும் அடங்கி போனது.

முல்லை குளித்து முடித்து புது புடவையை தேர்ந்தெடுத்து கண்ணாடி முன்னே நின்று இருந்தவள், அவள்

கூந்தலில் ஈரத் துணியை சுற்றியிருந்ததால், அவள் முகம் இன்னும் மலர்ந்த மாதிரி பளிச்சென தெரிந்தது.

அந்த நேரத்தில் கட்டிலில் சாய்ந்து இருந்த கதிர் திடீரென

“குட் மார்னிங்.“ என்று சொன்னவனின் குரலில் திடுக்கிட்டு அச்சத்தில் திரும்பியவள்,

“மாமா சார்… நீங்க… நீங்க எப்படி ரூம்ல இருக்கீங்க? நான் கதவை பூட்டிட்டேனே.“ என்றவள்.

அவசரமாக புடவையைக் கட்ட முயன்றவளின் அரைகுறை தோற்றம் கதிரின் கண்களுக்கு மின்னல் போலப்பட்டு அவன் மனம் துடித்தது.

அவளின் அழகில் தன்னிலை மறந்த கதிர், ஒரு நொடிக்கூட யோசிக்காமல், மின்னல் வேகத்தில் முல்லையை நெருங்கி அவளை நெருக்கமாக கட்டி அணைத்துக்கொண்டான்.

கதிரின் இந்த செயலில் துடி துடித்த முல்லை, “அய்யோ.“ என்று திடுக்கிட்டவள்.

“என்ன பண்ணறீங்க மாமா சார் … என்னை விடுங்க.“ என்று கதிரை தள்ள முயன்றாள்.

அவள் குரலைக்கேட்டு தன்னிலை உணர்ந்த கதிர், “ஐயையோ. கதிர் என்ன பண்ணி வச்சுருக்க.“ என்று தனக்குள் நினைத்தவன்.

“ச்ஷ்… அசையாதே.“ என்று பொறுமையாக சொல்ல.

“ஏன்… என்னாச்சு…” என்று முல்லை பயந்தவளாக கேட்டவளின்

குரல் நடுங்கியது.

அவள் குரலை வைத்தே. சுதாரித்து கொண்ட கதிர், “உ. உன் தோள் மேல கருப்பாம்பூச்சி …” என்று கதிர் சொன்ன தருணத்தில் முல்லை பதறி போனவள்,

“எங்க… எங்க” என்றவள் அவனை மேலும் வலுவாகப் பற்றிக்கொண்டாள்.

அவள் கை நடுங்கியது. மூச்சு தடுமாறியது.

கதிரோ சிரிப்பை அடக்கிக் கொண்டே, “இதோ உன் முதுகுல டி” என்று சொல்ல,

“மாமா சார். எனக்கு பூச்சின்னா பயம். ஐயோ அதை விரட்டுங்க” என்ற முல்லை. மேலும் இறுக்கமாக அவனை கட்டிக்கொண்டாள்.

அவளின் அணைப்பில் கதிரவனின் தேகமே ஜில்லேன்று இருக்க, “மாமா சார். அது போச்சா” என்ற முல்லை கண்கள் மூடி இருந்தவளுக்கு உடலில் நடுக்கம் ஏற்ப்பட…

“இரு இரு நான் போக சொல்றேன்” என்ற கதிர், “உஷ். உஷ்” என்று இல்லாத கருப்பாம்பூச்சியை விரட்டியவன். முல்லை அவள் முகத்தை அவன் மார்பில் சாய்ந்து இருந்த தருணத்தை ரசித்துக்கொண்டு இருந்தான்.

முல்லை இன்னும் தன்னை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிர் சிரித்துக்கொண்டே.“ஹாங். பூச்சி போச்சு” என்றதும்,

தன் ஒற்றை கண்ணை திறந்து பார்த்த முல்லை.“அது போச்சா” என்று கேட்க.

“ஹாங் போச்சு” என்றவனின் பார்வையை கஷ்ட்டப்பட்டு கட்டுப்படுத்தியவன்,

“சரி… நான் உன்னை கருப்பாம்பூச்சிக்கிட்ட இருந்து காப்பாத்தினேனே… அதுக்கெல்லாம் தேங்க்ஸ் இல்லையா.“ என்று கிண்டலாக கேட்க.

முல்லை அதுவரை அவன் அருகே ஒட்டி நின்று இருந்தவள். திடீரென விழித்து கொண்டவள் போல அவனைத் தள்ளி விட்டு,

“சாரி. சாரி மாமா சார்.“ என்றவள் பதற்றதுடன் கையில் கிடைத்த துணியை எடுத்துக்கொண்டு மீண்டும் குளியலறைக்குள் புகுந்தவளை பார்த்து கதிர் பெருமுச்சோடு தனக்குள் சிரித்துக்கொண்டே தனக்கு தேவையான துணியை எடுத்துக்கொண்டு அந்த அறையின் உள் தாப்பாளை திறந்தப்படி வெளியே வந்தான்.

காலை நேரம் என்பதால். மாட்டு தொழுவத்தில் இருந்து ஒரு சொம்பு பாலுடன் இசக்கி வீட்டுக்குள் நுழைந்தவர்.

“மாப்புள்ள தம்பி. உங்களுக்கு டீ வேணுமா காபி வேணுமா” என்று கேட்க.

“எல்லோரும் குடிக்கிறதே எனக்கும் கொடுங்க” என்ற கதிர். முருகன் வீட்டின் தோட்டத்துப்பக்கம் சென்று அங்குள்ள வெப்பமரத்தின் குச்சியை எடுத்து பற்களை துளக்கிக்கொண்டே. வெப்பமரத்தை அண்ணாந்து பார்த்தவன். தூய்மையான காற்றை சுவாசித்தப்படியே. பெருமுச்சுடன் இவர்கள் சிறு வயதில் அங்கே ஊஞ்சல் கட்டி விளையாடியதை எண்ணிக்கொண்டே கிணற்றிடி பக்கமே குளியலையும் முடித்து, வேறு ஆடையில் சூரிய நமஸ்காரம் செய்தவரின் முன்னே வெள்ளை வேஷ்டி சட்டையில் முருகன் தரிசனம் கொடுத்தவரின் கையில் முல்லையின் கைபேசி இருந்தது.

“என்ன மாப்புள்ள. இங்கேயே குளிச்சிட்டிங்களா” என்று முருகன் கேட்க.

“ம்.“ என்ற கதிரின் முன்னே முருகன் கைபேசியை நீட்டியவர்.“மாப்புள்ள. முல்லை போனுக்கு ரோஜா கூப்பிட்டு இருக்கு. இந்தாங்க பேசுங்க” என்றார்.

கதிர் போனை வாங்கிக்கொண்டு. ஒரு இடத்தில் அமர்ந்தவன்.“சொல்லுங்க அம்மா” என்றதும்.

“என்ன வாத்தி. பொஞ்சாதி வீட்டுக்கு போனதும் எங்களை எல்லாம் மறந்துட்டீங்களா” என்று கேட்டதும். ஏனோ கதிரின் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி நிலவியது.

தன் அண்ணனின் அமைதியை மறுமுனையில் அறிந்து இருந்த ரோஜாவோ.“என்ன வாத்தி. என்ன பதிலையே காணோம், என்னமோ சரியில்லாத மாதிரி இருக்கே. நீங்க முதல்ல வீடியோ call வாங்க” என்றதும் கதிர் வீடியோ அழைப்பை on செய்தார்.

தன் அண்ணனின் முகத்தில் கூடுதலான பொலிவை கண்ட ரோஜா.“வாத்தி, என்னாச்சு.“ என்று கேட்க,

கதிரின் இதழ் ஓரத்தில் புன்னகை மொட்டு விரிந்தது.

“ஐயோ. என்ன இது வெக்கமா, வாத்திக்கு வெக்கம் எல்லாம் வருமா” என்று ரோஜா கேட்க.

“என்ன நீங்க, ஏன் இப்படி கிண்டல் பண்றிங்க. சரி நீங்க சொல்லுங்க. அப்பா எப்படி இருக்காரு. ஆமா. ஜீவா அண்ணன் வீட்டுக்கு வந்துடுதா, நேத்து நடந்த கல்யாணத்த பற்றி ஜீவா அண்ணன் என்ன சொன்னாரு” என்ற கதிரை கோவமாக முறைத்தாள் ரோஜா.

“என்ன ம்மா ஏன் முறைக்கிறிங்க” என்று கதிர் கேட்டதும்,

“பின்ன என்ன வாத்தி. இதுல அண்ணன் நினைக்க என்ன இருக்கு, இனியாவது நீங்க உங்க மனசுல இருக்குற காதலை முல்லை அண்ணிக்கு புரிய வைத்து. அவங்ககூட சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பியுங்க” என்று ரோஜா சொல்ல. மீண்டும் கதிருக்கு. முல்லையின் அருகாமையை எண்ணி உடலில் புதிய ரத்தம் பாய்வதை போல உணர்வு தோன்றியது.

“ம். சரி ம்மா. நான் பார்த்துக்குறேன். ஆமா ஜீவா அண்ணன் இன்னும் வீட்டுக்கு வரலையா” என்று கதிர் கேட்க.

“இல்லை” என்ற ரீதியில் தலையசைத்தாள் ரோஜா.

“ம், சரி ம்மா. நீங்க நாகாக்கிட்ட சொல்லி ஜீவா அண்ணன் எங்க போனாருன்னு தேட சொல்லுங்க” என்று கதிர் சொல்ல.

“ம். சரி வாத்தி. நாங்க இங்க பார்த்துப்போம். நீங்க உங்க காதல் மனைவியுடன் ஹாப்பியா இருந்துட்டு வாங்க” என்ற ரோஜா. தன் கைபேசி இணைப்பை துண்டிட்டதும். முல்லையின் கைபேசி திரையில் (wallpaper) அவளின் புகைப்படம் இருந்ததை பார்த்தவன்.

சிறு புன்னகையுடனே கைபேசியோடு வீட்டுக்குள் நுழைந்தான்.

“மாப்புள்ள. இந்தாங்க டீ எடுத்துக்கோங்க” என்ற பார்வதியின் கையில் இருந்த குவளையை வாங்கிக்கொண்டு கதிர் முல்லையின் அறைக்குள் நுழைய.

அங்கே கட்டிலில் யோசனையோடு நைட்டியில் அமர்ந்து இருந்தாள் முல்லை.

கதிர் வந்ததை கூட பார்க்காமல் ஆழ்ந்த யோசனையில் இருந்தவளை பார்த்து குரலை செருமியப்படி, “ஏய் ரவா லட்டு” என்று

அழைக்க. திடுக்கிட்டு திரும்பியவள். தன் இருக்கரங்கள் கொண்டு அவள் மேல் அழகை மறைத்துக்கொள்ள.

பக்கென்று சிரித்து விட்டான் கதிர்.

அவன் சிரிப்பை பார்த்து முறைத்தவள். பொறுமையாக அவள் கையை அவள் மார்பின் மீது இருந்து விலக்கியவள். பொய்யான கோவத்துடன் கட்டிலில் இருந்து எழுந்து அவன் அருகே வந்தவளை கண்டுகொள்ளாமல் கதிர் தேநீரை புசிக்க ஆரம்பித்து இருந்தான்.

அவன் செய்கையில் பொறுமை இழந்தவளாக, “மாமா சார்.“ என்று முல்லை அழைக்க, “என்னடி. டீ வேணுமா” என்றவன்.“போய் உன் சித்திகிட்ட கேளு போ” என்றான்.

“எனக்கு Dயும் வேணாம் Eயும் வேணா. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்” என்றவளை.“என்ன முதல் மரியாதை பார்த்தியா” என்று கதிர் கேட்க.

“ம். இல்ல. காதலுக்கு மரியாதை பார்த்தேன்” என்று சொன்னவளை பார்த்து.

“ஓ. ஆமா ல்ல. நீ விஜய் Fan தானே” என்றவன்.“நான் யார் Fanன்னு உனக்கு தெரியுமா என்று கேட்க.

“நீங்க ஒரு ஓடாத டேபிள் Fan” என்றவளை ஏகத்துக்கும் முறைத்தான் கதிர்.

“என்னடி லந்தா. உன்ன எல்லாம் அந்த கருப்பாம்பூச்சிக்கிட்டையே பிடிச்சி கொடுக்கணும். பாவம் பார்த்து உன்னை காப்பாத்தினேன் பாரு. எல்லாம் என்னை சொல்லணும்” என்ற கதிரை சந்தேகமாக பார்த்த முல்லை.

“நீங்க காப்பாத்தினது எல்லாம் ஓகே தான் மாமா சார். ஆனா நான் இந்த ரூமை பூட்டிட்டு தானே குளிக்க போனேன். நீங்க எப்படி உள்ள வந்திங்க. நான் குளிக்க போகும் போது நீங்க இந்த ரூம்ல இல்லையே” என்று முல்லை கேட்க.

“நான் இங்க தான் இருந்தேன். நீ தான் பார்த்து இருக்க மாட்ட” என்றான் கதிர்.

கதிரின் பேச்சில் மேலும் குழப்பம் அடைந்தவள்.“என்ன சொல்றிங்க. நான் எழும் போது நீங்க இங்க இல்லையே” என்று முல்லை சொன்னதும்.

“நான் கட்டில் கீழ தான் டி இருந்தேன். நீ தான் என்னை பார்க்காம ரூமை பூட்டிட்டு குளிக்க போய் இருக்க” என்று கதிர் சொன்னதும்.“நீங்க ஏன் கட்டில் கீழ போய் படுத்திங்க” என்று முல்லை கேட்டாள்.

“பின்ன. உன் பக்கத்துல படுத்தா என் நிலைமை என்ன ஆகுறது” என்ற கதிரின் வார்த்தையை கேட்டு முல்லையின் விழிகள் சட்டென்று கலங்கி விட,

இந்த இடத்தில் அவனின் காதல் ஏக்கத்தில் வெளியான வார்த்தையும் முல்லையின் காதுக்கு அவன் தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள வில்லை என்பதை போல உணர்த்தியது.

ஒரு வேளை முல்லையின் கலங்கிய விழிகளை கதிர் கண்டு இருந்தால் கூட இந்த கணமே இவர்களின் பணிப்போர் முடிந்து காதல் ஆட்சி மலர்ந்து இருக்குமோ என்னவோ. இவர்கள் இருவருமே இந்த நொடி வரை மனதில் உள்ளதை உடைத்து பேசாமல் ஒருவருக்கொருவர் கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

இதே தருணம். அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பார்வதியின் தம்பி கேசவனை பார்ப்பதற்காக சுந்தரேசன் மற்றும் அவனின் தம்பி ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் சென்று இருந்தார்கள்.

“என்ன கேசவா. இப்போ எப்படி இருக்க” என்று ஸ்ரீனிவாசன் கேட்க.

“ஏன் இருக்கோமுன்னு தோணுது” என்றான் கேசவன்.

“நீ இருக்கனும் கேசவா. இனிமே தான் நீ தைரியமா இருக்கனும். அந்த கதிர் குடும்பத்தை நான் பழிவாங்க நீ என்கூட இருக்கனும் கேசவா” என்று சுந்தரேசன் சொல்ல.

“கதிரை மட்டும் இல்லை. எனக்கு accident நடந்தது தெரிந்தும் என்னை வந்து பார்க்காத அந்த முருகனையும் என் அக்காவையும் கூட பழி வாங்க வேண்டும்” என்று கேசவன் சொன்னதும்.

“அவங்க எப்படி உன்னை பார்க்க வருவாங்க கேசவா. அவங்க தான் மாப்பிளை வந்த குஷில இருக்காங்களே” என்றான் சுந்தரேசன்.

“என்ன சொல்றிங்க. மாப்பிள வந்த குஷியா” என்று கேசவன் புரியாமல் கேட்டதும், அவனுக்கு புரியும் விதத்தில் பிளாஷ் பேக்கை சொல்லி முடித்தான் சுந்தரசன்.

“என்ன. கதிருக்கும் முல்லைக்கும் கல்யாணம் முடிஞ்சு போச்சா” என்று அந்த நிலைமையில் நாடி புடைக்க கேசவன் தன் படுக்கையில் இருந்து எழ முயன்றவனை.

“சார் சார் உங்களுக்கு வயத்துல முதுகுலன்னு நிறைய தையல் போட்டு இருக்கு சார். நீங்க இப்படியெல்லாம் ஸ்ட்ரைன் பண்ணக்கூடாது” என்று செவிலியர் சொன்னதும். தன் ஆத்திரதை கட்டுப்படுத்த முடியாமல் கேசவனின் ரத்தம் எல்லாம் கொதித்துக்கொண்டு இருந்தது.

“என்ன கேசவா. ஆத்திரம் வருதா. எனக்கு இதைவிட அவன் மேல கொலை வெறியே வருது, நான் எவ்வளவு பிளான் போட்டு கச்சிதமா அந்த ரோஜாவை என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு நினைத்தேன். . ஆனா என் திட்டமெல்லாம் பாலா போச்சு” என்று சுந்தரேசன் சொல்ல

“இல்ல. முல்லையை நான் வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவ எனக்காக பொறந்தவ. நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு அந்த முல்லை கதிர் காதலை பிரிச்சேன் தெரியுமா? ஆனா நான் ஹாஸ்பிடலுக்கு வந்த நேரம் பார்த்து அவங்க கல்யாணம் முடிஞ்சு இருக்கு, இல்ல. அவங்க கல்யாண வாழ்க்கையை நான் நல்லவிதமா வாழ விட மாட்டேன்” என்ற கேசவனை கேள்வியாக பார்த்தான் சுந்தரேசன்

“ஏய் கேசவா. இரு இரு. இப்போ நீ என்ன சொன்ன. கதிர் முல்லை காதலை நீ பிரிச்சியா? என்னடா சொல்ற. ஆனா அந்த முல்லை ஜீவாவையும், கதிர் மீனாவையும் காதலிக்கிறதா தானே எல்லாரும் சொன்னிங்க. இது என்ன நீ புது கதை சொல்ற” என்று சுந்தரேசன் கேட்க, கேசவன் திரு திருவென விழித்தான்.

சுந்தரேசன் ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் கேசவனின் திருட்டு விழியை கண்டு கொண்டவன், “டேய். இப்போ உண்மைய சொல்ல போறியா இல்லையா. என்ன. அப்போ கதிரும் முல்லையும் தான் காதலிச்சாங்களா?” என்று சுந்தரேசன் கேட்க

“ஆமா. அது பல வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதை. அவங்க ரெண்டு பேருடைய காதலை பிரிச்சது நான் தான்” என்ற கேசவன் ஒரு சிறு ஃப்ளாஷ் பேக்கையும் சொல்லி முடிக்க,

“அடப்பாவி, சின்னஞ்சிறுசுங்க காதல இப்படி சின்னா பின்னமா ஆக்கி வச்சிருக்கியே, ம். பரவால்ல. நானாவது அந்த கதிருக்கு இப்பதான் வில்லன். நீ ஆரம்பத்துல இருந்தே அவனுக்கு வில்லனாக இருந்து இருக்கியே.“ என்று சுந்தரேசன் சொல்ல,

“ஆமா. எனக்கு அந்த கதிரை பழி வாங்கணும் தான். ஆனால் அதைவிட தீவரமா முல்லையை நான் கல்யாணம் பண்ணனும்னு தான் காத்துகிட்டு இருந்தேன். ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, கோடிக்கணக்காண சொத்துக்கு ஒரே வாரிசு அந்த முல்லை தான். அழகுலையும் அவளுக்கு குறை இல்ல. அவ ஒரு பயந்த சுபாவமான ஆளு. அவளை நான் கல்யாணம் பண்ணா என் வாழ்க்கை செட்டில் ஆகணும்னு நினைச்சு எவ்வளவோ பிளான் போட்டு இருந்தேன். ஆனா நான் ஹாஸ்பிடலுக்கு வந்த நேரம் பார்த்து அந்த கதிர் என் முல்லை கழுத்துல தாலி கட்டி இருக்கான், இல்ல. இந்த கல்யாணம் நடந்திருக்கலாம். மத்தபடி அவங்க வாழ்க்கையை நான் வாழவே விடமாட்டேன்” என்று கேசவன் சபதம் எடுக்க,

கேசவன் சுந்தரேசன் தனலட்சுமி என்று இவர்கள் மூவரின் திட்டத்தில் இருந்து கதிர் முல்லை எப்படி தப்பிக்கப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

சிவகங்கையில் உள்ள அம்மன் கோவிலில் முருகனின் குடும்பத்தினர் தலைமை ஏற்று நடத்தும் சிறப்பு பூஜை நடந்து கொண்டிருந்தது.

முல்லை அவள் கைகளால் பொங்கல் வைத்து கடவுளை வணங்கிக் கொண்டிருந்த சமயம், கதிர் தூரத்தில் நின்றபடி முல்லையின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தான்.

“மாப்ள, வாங்க நீங்களும் வந்து தீபாரனை காட்டுங்க” என்று முருகன் அழைக்க.

“நீங்களே முன்ன நின்னு பண்ணுங்க மாமா” என்ற கதிர் ஓரமாக நின்றபடி முல்லையை பார்த்திருக்க, முல்லையோ அவனை கண்டுகொள்ளாமல் பொங்கல் வைத்துக்கொண்டு இருந்தாள்.

சில நிமிடங்களில் கோவிலில் பூஜை புனஸ்காரம் எல்லாம் முடிந்த நிலையில், அனைவரும் குடும்பமாக அமர்ந்து இருக்க “மாப்ள இந்தாங்க மா விளக்கு” என்று முருகன் கதிரிடம் கொடுக்க,

“அப்பா. மாமா சாருக்கு அது கூட ஒரு பத்த தேங்காய் வைத்து கொடுங்க. அப்பதான் அவருக்கு பிடிக்கும்” என்றாள் முல்லை

“என்னமா முல்லை நீ, அதான் கதிர் மாப்பிள்ளை உன் கழுத்துல தாலி கட்டிட்டாரே. இன்னும் ஏன் அவரை மாமா சார்ன்னு கூப்பிடுற. ஒன்னு மாமான்னு கூப்பிடு. இல்ல வாங்க போங்கன்னு கூப்பிடு. இப்பவும் பழைய மாதிரி மாமா சார்ன்னு கூப்பிட்டால் ஒரு மாதிரி இல்லையா” என்று பார்வதி கேட்க.

“அது, சின்னதுல இருந்தே பழகிடுச்சு சித்தி” என்றாள் முல்லை.

“பழக்கத்தை மாத்திக்கோமா. இனி மாப்பிளையை மாமான்னு கூப்பிடு” என்று முருகனும் சொல்ல. முல்லையில் முகமோ சட்டென்று வாடி போனது.

தன்னவளின் வாட்டத்தை பார்த்த கதிர் “அவளுக்கு எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அப்படியே கூப்பிடட்டும்” என்றவன் மாவிளக்கை சாப்பிட்டுக்கொண்டு இருந்த சமயம் தூரத்திலிருந்து,

“ஏய் எப்படி டி இருக்க” என்றபடி சரண்யா இவர்களை நோக்கி வந்தாள்.

முல்லையின் தோழி சரண்யாவை பார்த்த முல்லை, தன் தோழியை கட்டி அணைத்து நலம் விசாரிக்க, “என்னடி. உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சின்னு கேள்விப்பட்டேன். ஏன் எங்ககிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லல” என்று உரிமையோடு சரண்யா கோபித்துக் கொள்ள,

“ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தாண்டி எனக்கு கல்யாணம் நடக்க போற விஷயமே எனக்கு தெரியும்” என்றாள் முல்லை

முல்லை விளையாட்டாக சொன்னாலும் அதுதான் உண்மை என்று அறிந்திருந்த கதிரோ.“அதானே. முன்னாடியே சொல்லி இருந்தா இவ இந்த கல்யாணத்துக்கே வந்து இருக்க மாட்டாளே” என்று தனக்குள் நினைத்திருக்க, அதே சமயம் சரண்யாவின் ஓரப்பார்வை கதிர் மீது பாடிந்தது.

“ஏண்டி. அப்போ ஜீவா.“ என்று இழுத்த சரண்யாவின் வார்த்தையைக் கேட்டு முல்லையின் முகம் மாறி போக.

கதிரோ சரண்யா கேட்ட கேள்விக்கு முல்லையின் பதில் என்னவாக இருக்கும் என்று கேட்க காத்து இருந்தான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!