அன்றைய தினம் மாலை நேரம் பாண்டியனை மருத்துவமனையில் இருந்து கதிரும் ரோஜாவும் வீட்டிற்கு அழைத்து வர, பாண்டியனைப் பார்த்ததும் மீனா ஓடி வந்தவள், “ மாமா. இப்போ உங்க உடம்பு எப்படி இருக்கு” என்று கேட்க,
“ரோஜா. என் கண் எதிரில் இந்த நம்பிக்கை துரோகியும், இவ புருஷனும் வரவே கூடாது. இவங்க இங்கே இருந்தா நான் இனி இங்கே இருக்க மாட்டேன்” என்று பாண்டியன் கோபமாக கத்த.
“இது என்ன அண்ணா நியாயம். என் பொண்ணு கழுத்துல உங்க பெரிய பையன் தாலி கட்டிருக்கான். அப்படின்னு பார்த்தா இந்த குடும்பத்தோட மூத்த மருமக என் பொண்ணு தான். என் பொண்ணு இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு” என்று கஸ்தூரி சம்பந்தி என்ற முறையில் வார்த்தையில் ஜாலம் காட்டி பேசிய வரை பாண்டியன் கோபமாக முறைத்தார்.
“அத்த. உங்க வயசுக்கு கொஞ்சமாவது பக்குவமா நடந்துக்கோங்க. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல இருந்து இப்பதான் அழைச்சிட்டு வந்து இருக்கோம். மேற்கொண்டு ஏதாவது பிரச்சனை பண்ணீங்கன்னா மரியாதை கெட்டும்” என்று ரோஜா கஸ்தூரியை எச்சரித்தவள்,
மீனா அண்ணி. டாக்டர் அப்பாவை ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரு. பயப்படும்படி ஒன்னும் இல்ல. நீங்க போய் ஜீவா அண்ணன் ரூம்ல இருங்க. மத்த விவரம் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்ற ரோஜா, மீனாவை தன் அண்ணியாக ஏற்றுக் கொண்டாள்.
பாண்டியனின் கோவத்துக்கு ஆளான மீனாவின் ஓரப்பார்வை கதிர்வேலன் மீது விழ, அவனோ மீனா என்ற ஒருவள் தன் எதிரே நிற்கிறாள் என்பதை கூட கவனிக்க இஷ்டம் இல்லாமல் தன் தந்தையை அழைத்துக் கொண்டு பாண்டியனின் அறைக்குள் நுழைந்தான்.
ரோஜாவும் கதிர்வேலனும் பாண்டியனை அவர் அறைக்கு அழைத்து செல்ல,
“நீ என்னடி மீனா, சும்மா இவங்ககிட்ட எல்லாம் பம்பிகிட்டே இருக்க. நீ இந்த வீட்டோட மூத்த மருமக. இங்க உனக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு. அடுத்த முறை அண்ணன் இந்த மாதிரி பேசனா நல்லா நறுக்குன்னு கேள்வி கேட்டு விடு, புரியுதா. இல்லன்னா சொத்த பிரித்து கொடுக்க சொல்லு. நீயும் ஜீவாவும் இந்த வீட்டில ராஜா ராணி மாதிரி வாழலாம்” என்று கஸ்தூரி தூபம் போட, மீனா தன் அன்னையின் பேச்சை கேட்டு கஸ்தூரியை கொலை காண்டில் முறைத்துக்கொண்டு இருந்தாள்.
“ம். எப்படியோ நீ அந்த குடிகாரன் கதிர்வேலனை கல்யாணம் பண்ணாம, நல்லா படிச்சு, அடுத்த பஞ்சாயத்து தலைவரா ஆகப்போற ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணிக்கிட்ட, ம். இப்போ நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா” என்று கஸ்தூரி சொல்லி வாயை மூடுவதற்குள்,
“முல்லை. முல்லை, “ என்ற உரக்க கத்திய ஜீவானந்தத்தின் குரலில் அந்த வீடே ஆட்டம் கண்டது.
“முல்லை. முல்லை.“ என்ற ஜீவானந்தத்தின் குரலில் அந்த வீடே ஆட்டம் கண்டதைப் போல உணர்ந்து கதிர்வேலன் ரோஜா ஆகிய இருவரும் பாண்டியனின் அறையில் இருந்து வெளியே ஓடி வர,
மீனா கஸ்தூரி என்று இவர்கள் இருவரும் ஒன்றாக நின்று இருக்க,
ஜீவானந்தம் மூச்சு முட்ட குடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவன்,
“கதிரு, என்னை மன்னிச்சிடு டா”
என்று கைக்கூப்பி கதிர்வேலனை பார்த்து கும்பிட்ட ஜீவானந்தம், அருகே நின்று இருந்த கஸ்தூரியின் மீது வாந்தி எடுத்து. அப்படியே அரை போதையில் மயங்கி கீழே சரிந்தார்.
தன் அண்ணனை இப்படி ஒரு நிலையில் பார்த்த கதிர்வேலன் பதறிப்போய், “அண்ணா.“ என்று தன் வசம் அனைத்துக்கொண்டு, “இது என்ன புது பழக்கம்” என கேட்டதும்,
“என்னை மன்னிச்சுடு முல்லை” என்று வாய்விட்டு புலம்பினான் ஜீவா.
“ஐயோ ஐயோ இந்த அநியாயம் எங்க நடக்கும், காலையில என் பொண்ணு கழுத்துல தாலியை கட்டிட்டு நைட்டு குடிச்சிட்டு வந்து முல்லை மல்லின்னு உளறிக்கிட்டு இருக்கானே. இவனை நம்பியா. என் மக வாழ்கை நல்லா இருக்க போகுதுன்னு சந்தோஷப்பட்டேன்” என்று வாயில் வயிற்றில் அடித்துக்கொண்டு கஸ்தூரி கத்த ஆரம்பித்து இருந்தார்.
“ஐயோ அத்த. வாயை மூடுங்க, உள்ள அப்பா உடல் நிலை சரியில்லாம படுத்து இருக்காரு, ஏற்கனவே அவரு மனசால உடைஞ்சி போயிட்டாரு. இப்போ நீங்க வேற இப்படி கத்தி பேசி அப்பாவுக்கு மேலும் பிரச்சனையை உண்டாக்காதீங்க” என்ற ரோஜாவை பார்த்து கஸ்தூரி கடுப்புடன் முறைத்தார்.
“முல்லை. என்னை மன்னிச்சுடு. கதிரு என்னை மன்னிச்சுடு. அப்பா. அப்பா என்னை மன்னிச்சிடுங்க அப்பா” என்று புலம்பும் ஜீவானந்தத்தை பார்த்து மீனா தேம்பி அழுதவளை பார்ப்பதற்கு ரோஜாவிற்கு கஷ்டமாக இருந்தது.
“ஐயோ. என் மேலையே வாந்தி எடுத்துட்டானே. என்னதான் இந்த வீட்டுக்கு நாம் சம்மந்தயானாலும், இந்த குடிகாரன்ங்க Focus மட்டும் என் மேல தான் இருக்கும் போல” என்று புலம்பிக்கொண்டே கஸ்தூரி குளிப்பதர்க்காக தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்துக்கொண்டார்.
கஸ்தூரி போன பாதையை முறைத்து பார்த்த ரோஜா, “வாத்தி. நீங்க ஜீவா அண்ணனை கிணத்தடிக்கு அழைச்சிட்டு போங்க” என்றவள். வீட்டை சுத்தம் செய்ய தண்ணீரைக்கொண்டு வந்தாள்.
கதிர்வேலன் ஜீவாவை தோட்டத்துக்கு அழைத்து சென்றதும், “ரோஜா. வீட்டை நான் சுத்தம் பண்ணிக்கிறேன், நீ கதிர் மாமா கூட போய் ஜீவா மாமாவுக்கு என்ன வேணும்னு பாரு” என்ற மீனாவை ரோஜா அழுத்தமாக பார்த்தாள்.
ரோஜாவின் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று அறிந்துக்கொண்ட மீனாவோ, “நீ ஏன் என்னை இப்படி பாக்குறன்னு எனக்கு புரியாம இல்ல ரோஜா. ஆனா உன் கேள்விக்கு என்கிட்ட இப்போதைக்கு எந்த பதிலும் இல்லை” என்ற மீனாவின் குரலில் அப்படியொரு ஒரு வலி மறைந்து இருந்தது.
இருக்க தானே செய்யும். மீனா கடந்த மூன்று வருடங்களாக கதிர்வேலனை தான் தன் மணவாளனாக நினைத்து கற்பனையில் அவருடன் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் இரவில் இத்தனை வருட கனவு காற்றாக கரைந்ததை எண்ணி இப்போதைக்கு மீனாவால் அழ மட்டுமே முடிந்தது.
மீனாவை பார்த்து பெருமுச்சுடன் ரோஜா தோட்டத்து பக்கம் செல்ல, “ என்னை மன்னிச்சிடு முல்லை” என்ற அதே புலம்பளை பாடிக்கொண்டு இருந்தார் ஜீவா.
தன் அண்ணன் தலையில் கிணற்று தண்ணீரை இரைத்து ஊத்திய கதிர்வேலனுக்கு, தன் அண்ணன் முல்லை மீது வைத்து இருக்கும் காதலின் ஆழத்தை எண்ணி உள்ளுற ஜீவா மீது மதிப்பு ஏற்பட்டது.
முல்லை மீது ஆழமான காதலை தனக்குள் வைத்து இருக்கும் ஜீவா, ஏன் மீனாவை திடிர் திருமணம் செய்ய வேண்டும் என்று யோசனையில் கதிர்வேலன் தன் அண்ணனை குளிக்க வைத்துக்கொண்டு இருக்க, “வாத்தி. எனக்கு என்னமோ இதுக்கெல்லாம் காரணம்” என்று ரோஜா சொல்லி முடிக்கும் முன்னே,
“கூட்டு சதி தான்” என்றார் கதிர்வேலன்.
“யார் பண்ணி இருப்பாங்க” என்று ரோஜா கேட்க, “யாரு, ஏன், எதனால இப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியது மீனாவும் அண்ணனும் தான்” என்று கதிர்வேலன் சொல்ல,
“அதுக்கு வாய்ப்பில்ல. ரெண்டு பேரும் வாயை திறக்க மாட்டுறாங்க, அதனால நீங்களே என்ன ஏதுன்னு கண்டுப்பிடிங்க” என்றாள் ரோஜா.
“ம். நான் பார்த்துக்குறேன்” என்ற கதிர்வேலன் ஜீவாவை அவர் அறைக்கு அழைத்து செல்ல, “என்னை எல்லோரும் மன்னிச்சிடுங்க” என்ற இறுதி வார்த்தையோடு அப்படியே கட்டிலில் கவுந்து விழுந்தவரை கதிர்வேலன் ஒழுங்காக படுக்க வைத்தான்.
“ஏன் வாத்தி. அப்பா சொன்னது போல முல்லைக்கு நம்ம துரோகம் பண்ணிட்டோமோ” என்ற ரோஜாவின் கேள்விக்கு கதிர்வேலனிடம் பதில் இல்லாமல் போனது.
“நேற்று வரைக்கும் முல்லை தானே ஜீவா அண்ணனை கல்யாணம் பண்ணிக்க போறதா இருந்துச்சு, நம்ம மட்டும் முல்லையை அன்னைக்கு கோவில்ல இருந்து அழைச்சிட்டு வராமல் இருந்து இருந்தா இந்நேரம் அவளுக்கு கேசவன் கூட கல்யாணம் முடிந்து இருக்குமே, பாவம் அவ வாழ்க்கையை நம்ம எல்லாம் சேர்ந்து தான் நாசமாக்குற மாதிரி எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு” என்ற ரோஜாவின் கண்களில் முல்லையை நினைத்து கண்ணீரும் வந்தது.
“ஜீவா அண்ணன் மீனா கல்யாணம் நம்ம யாருமே எதிர் பார்க்காத ஒன்று. ஆனா நீங்க சொன்ன மாதிரி ரவா லட்டு பாவம் தான்” என்ற கதிர்வேலனுக்கோ முல்லையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
“ஏன் ம்மா. நான் வேணும்னா நாளைக்கு சிவகங்கை போய் ரவா லட்டை பார்த்துட்டு வரவா” என்று கதிர்வேலன் கேட்க,
“ம். ஆமா வாத்தி, அது தான் முறையும் கூட. பாவம் முல்லை. கண்டிப்பா அவளை அந்த வீட்டுல இந்நேரம் அந்த பார்வதி கரித்து கொட்டி வேதனை படுத்திகிட்டு இருக்கும், அதனால நீங்க எதுக்கும் நாளைக்கு போய் முல்லையை பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க” என்ற ரோஜாவின் மனதில் இனி எப்படியாவது முல்லைக்கு கதிர்வேலனை மனமுடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இரவெல்லாம் உறங்காமல் தனித்து இருந்த முல்லைக்கு பாம்பு கடித்த அசதியும் சேர்ந்து இருக்க, மறுநாள் காலை அவளாகவே எழுந்து காலை கடன்களை முடித்த பிறகு தனக்கான உணவை தயார் செய்தாள்.
“என்ன மா அப்பாவுக்கு சாப்பாடு இல்லையா” என்று அலட்டிகொள்ளாமல் கேட்ட முருகன், முல்லையின் அருகே வந்து அமர்ந்ததும்,
“என் கையாள நீங்க சாப்பிட மாட்டீங்களே.“ என்ற முல்லை வேகமாக சாப்பிட்டு முடித்து தட்டை எடுத்துக்கொண்டு அடுப்பணைக்குள் புகுந்தாள்.
தன் மகளை எப்படியாவது சமாதானம் செய்து பாண்டியனின் பெயரில் புகார் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த முருகன், “முல்லை. சீக்கிரமா போய் கிளம்புமா” என்றதும், “எங்க கிளம்பனும்” என்று கேட்டாள் முல்லை.
“என்னடி நீ இப்படி கேக்குற, அந்த பாண்டியன் உனக்கு எவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகம் பண்ணி இருக்கான், அவனை பஞ்சாயத்துல நிக்க வச்சி நாக்கை பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேப்போம்” என்ற பார்வதியை பார்த்து ஏளனமாக சிரித்தாள் முல்லை.
தன் மகளின் செயலை பார்த்து தன் கோவத்தை கட்டுப்படுத்திகொண்ட முருகன், “கிளம்பு முல்லை.“ என்று சொல்ல, “என்னால முடியாது” என்றவளின் கன்னத்தில் பளார் என்று அறை விழுந்து இருந்தது.
எந்த உயிரினத்தையும் அடிப்பது தவறு.
அதுவும் பெண்களை அடிப்பது மகா பாவம்.
அதுவும் ஒரு ஆணாக இருந்து ஒரு பெண்ணை அடிப்பது கேவலம்,
இந்த கேவலம் தான் இன்று முருகனின் இல்லத்தில் நடந்தது.
ஆனால். பெற்ற மகளை அடித்தது முருகன் இல்லை, முல்லையை அடித்தது கேசவன் தான்.
தன் மகளை ஒருவன் அடித்தத்தை கூட கண்டிக்காமல், ஏன். சின்ன முக சுழிப்பு கூட இல்லாமல் மரம் போல் நின்று இருந்தார் முருகன்.
கேசவன் அடித்த அடியில் வலியால் முல்லையின் கன்னம் சிவந்து, கண்களில் கண்ணீர் வடிந்தது.
“என்னடி. விட்டா ரொம்ப பேசுற. போ. போய் வண்டியில ஏறு” என்று கேசவன் முல்லைக்கு கட்டளையிட்டான்.
அவன் தன்னை மிரட்டியதையோ அடித்ததையோ பெரிதாக எடுத்துகொள்ளாத முல்லைக்கு தன் தந்தை மீது வருத்தம் ஏற்பட்டது.
மிருங்கங்கள் கூட தன் பிள்ளையை எவரேனும் தாக்கினால் அவர்கள் உயிரை எடுக்க எதிர்த்து நிற்கும், ஆனால் இங்கே கேசவன் முல்லையை அடித்ததை பார்த்து முருகனுக்கு எந்த வித கவலையும் ஏற்படவில்லை.
“என்ன உன் அப்பாவை பார்த்துகிட்டு நிக்குற. போ. போய் கிளம்பு” என்று மீண்டும் கேசவன் முல்லையை அடிக்க ஓங்கியவனை பார்த்து முல்லை இரண்டடி பின்னே நகர்ந்து செல்ல, “ ம். பயம் இருக்கு தானே. போ போய் கார்ல உக்காரு” என்றான் கேசவன்.
“நான் வர மாட்டேன். இப்போ ஏன் சம்மந்தமே இல்லாம பாண்டியன் மாமாவை அசிங்க படுத்த பாக்குறீங்க” என்று முல்லை கண்கள் கலங்கிய நிலையில் கேட்க,
“நான் தான் எப்பவோ அதற்கு உண்டான காரணத்தை சொல்லிட்டேனே. ம். போய் காருல உக்காரு” என்று முருகனும் பாண்டியணை பழி தீர்க்க எண்ணியவரின் மனதில் முல்லை மீது இம்மி அளவும் அன்பு இல்லாமல் போனது.
“நீங்க என்ன சொன்னாலும் நான் வர மாட்டேன்” என்று முல்லை அடம் பிடித்தவளின் கையை பிடித்து வலுகட்டாயமாக கேசவன் காரில் ஏற்றியவன் இன்று எப்படியாவது ஊருக்கு மத்தியில் வைத்து பாண்டியன் குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் முருகன் மற்றும் பார்வதியை அழைத்துக் கொண்டு முல்லையுடன் குன்னக்குடியை நோக்கி காரை விரட்டினான்.
வழியெல்லாம் அழுதுக்கொண்டே இருந்த முல்லைக்கு அடுத்த நொடி தன் வாழ்வில் என்ன நடக்க போகிறது என்ற பயம் எழுந்தது.
“ஏன் டா தம்பி. நம்ம சொந்தங்களை எல்லாம் பாண்டியன் வீட்டுக்கு வர சொல்லிட்டியா” என்று பார்வதி கேட்க,
“ஆமா அக்கா. பஞ்சாயத்து நடக்குற இடத்துக்கே எல்லோரையும் வர சொல்லி இருக்கேன்” என்றான் கேசவன்.
“நல்ல காரியம் பண்ணீங்க மாப்புள. அந்த பாண்டியனுக்கு நம்ம யாருன்னு காட்டணும், இனி அவன் அந்த ஊருல தலை நிமிர்ந்து நடக்கவேக் கூடாது” என்ற முருகனின் வன்மத்தை பார்த்து முல்லைக்கு மேலும் தன் தந்தை மீது அவமரியாதை ஏற்பட்டது.
“எல்லாம் நல்லப்படியா முடிந்ததும், அடுத்த முகூர்த்ததில் நம்ம கேசவனுக்கு முல்லையை கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்று பார்வதி சொல்ல,
“எல்லாம் இனி நமக்கு நல்லதாகவே நடக்கும்” என்றார் முருகன்.
இதே தருணம். பாண்டியன் இல்லத்தில், தன் தந்தைக்கு காலை உணவை கொடுத்து, மாத்திரையை எடுத்துக்கொடுத்த ரோஜா, “அப்பா. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று சொல்ல,
“அந்த நம்பிக்கை துரோகிகளை பற்றி மட்டும் பேசாத” என்று ரோஜா சொல்ல வந்ததை சொல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார் பாண்டியன்.
“அண்ணன் தரப்பு நியாயம் என்னனு கேக்காம நீங்க அவர் மேல கோவப்படுறது தப்பு ப்பா” என்று ரோஜா சொல்ல,
“யார் தப்பு.?
நானா தப்பு??
எப்படி மா நீ என்னை தப்புனு சொல்லுற, கதிரும் முல்லையும் பாவம் ரோஜா,
அவங்க ரெண்டு பேருக்கும் துரோகம் பண்ணிட்டு இதுங்க ரெண்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்குதுங்களே, அத எப்படி ரோஜா என்னால ஏத்துக்க முடியும்” என்ற பாண்டியனின் சத்தமான குரலைக் கேட்டு கதிர்வேலன் இவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.
“அப்பா. நீங்க ஏன் இப்படி உணர்ச்சி வாசப்படுறீங்க, அண்ணன் முல்லையை எந்த அளவுக்கு விரும்புச்சுனு எனக்கு நல்லாவே தெரியும், ஆனா இப்போ மீனாவை அண்ணன் கல்யாணம் பண்ணிருக்குன்னா. கண்டிப்பா இதுக்கு பின்னாடி எதாவது ஒரு காரணம் இருக்கு” என்று கதிர்வேலன் சொல்ல,
“அப்படியென்ன பொல்லாத காரணம். என்னவா இருந்தாலும் அவன் என்கிட்ட தானே சொல்லி இருக்கனும்” என்று பாண்டியன் கோவமாக கேட்க,
“அதான் அப்பா நானும் சொல்லுறேன். அண்ணனோட இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணமுன்னு அண்ணனை கேட்டா தானே தெரியும்” என்றார் கதிர்வேலன்.
“எனக்கு அவனை பார்க்கவே பிடிக்கல கதிர். என் முன்னாடி அவன் வந்தா எனக்கு இருக்குற கோவத்துல கண்டிப்பா அவனை நான் கொன்னே போட்டுடுவேன்” என்ற பாண்டியனின் கோவத்தை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் கதிர்வேலனும் ரோஜாவும் குழம்பி போனார்கள்.
இவர்கள் மூவரும் ஒன்றாக ஒரே அறையில் இருக்கும் தருணம், “நண்பா.“ என்ற நாகராஜனின் அழைப்பில் கதிர்வேலன் வெளியே வந்ததும், “நண்பா. வாசல்ல உங்க முருகன் மாமா ஊர்க் காரங்க எல்லாம் வந்து இருக்காங்க” என்றான் நாகராஜன்.
“என்ன ஊர் காரங்களா.“ என்ற கேள்வியோடு கதிர்வேலன் வாசலை நோக்கி நடக்க,
அங்கே வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் நான்கு ஐந்து பெரியவர்கள் நின்று இருந்தார்கள்.
“வாங்க. உள்ள வாங்க” என்று கதிர்வேலன் அவர்களை வீட்டுக்குள் அழைக்க, “தம்பி. நாங்க இங்க நலம் விசாரிக்க வரல, உங்க அப்பா பாண்டியனை பஞ்சாயத்துக்கு வர சொல்லி தகவல் சொல்லிட்டு போக தான் வந்தோம்” என்று ஒருவர் சொல்ல,
“அப்பாவுக்கு உடல் நலம் சரியில்ல, அவர் தீர்ப்பு சொல்ல எல்லாம் இப்போதைக்கு வர முடியாது” என்றான் கதிர்வேலன்.
“தம்பி. உங்க அப்பாவை தீர்ப்பு சொல்ல நாங்க அழைக்க வரல, உங்க அப்பா பேர்ல ப்ராது கொடுத்து இருக்காங்க, அதுக்காக தான் அவரை பஞ்சாயத்துக்கு வர சொன்னோம், இன்னும் அரைமணி நேரத்துல பஞ்சாயத்து கூடிடும். உங்க அப்பாவையும் உங்க பெரிய அண்ணனையும் அங்க வர சொல்லிடுங்க” என்றார் இன்னோருவர்.
“என்ன உளறுறீங்க, என் அப்பா மேல யார் ப்ராது கொடுத்தாங்க” என்று கதிர்வேலன் கேட்க, “எல்லாம் உன் அத்த புருஷன் முருகன் தான்” என அவர்கள் சொன்னதும், கதிர்வேலனுக்கு எல்லையில்லாத கோவம் எழுந்தது.
“சீக்கிரம் வர சொல்லு ப்பா.“ என்ற பெரிய மனிதர்கள், பாண்டியனின் வீட்டில் இருந்து பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு சென்று இருக்க, அதித கோவத்தோடு உள்ளே நுழைந்த கதிர்வேலனோ இந்த செய்தியை தன் தந்தையிடம் தெரியப் படுத்தினார்
தகவலை கேட்ட பாண்டியன் விரக்தியாக சிரித்தவாரு, “உப்பு தின்றவன் தண்ணி குடிச்சு தானே ஆகணும்” என்றபடி பஞ்சாயத்துக்கு கிளம்ப,
“அப்பா நானும் வரேன்” என்று ரோஜாவும் தன் தந்தையிடன் கிளம்ப,
“வீட்டுல இருக்குற ரெண்டு துரோகிகளையும் பஞ்சாயத்துக்கு வர சொல்லிடு கதிர்” என்றபடி பாண்டியன் காரில் ஏறி அமர,
அடுத்த பத்தே நிமிடத்தில் குன்னக்குடி பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகே உள்ள சின்ன கட்டிடத்தில் பெரியவர்களின் முன்னிலையில் பாண்டியனின் குடும்பமும் முருகனின் குடும்பமும் நேருக்கு நேர் நின்று இருந்தார்கள்.
மீனாவும் ஜீவானந்தமும் ஜோடியாக நின்று இருக்க, கன்னம் சிவந்த நிலையில் கண்களில் கண்ணீருடன் நின்று இருந்த முல்லையை பார்த்து காதல் தோல்வியால் தான் வருந்துகிறாள் என்று தப்புக்கணக்கு போட்டான் கதிர்வேலன்.
மாமன் மச்சான் தகராரை தீர்த்து வைக்க இரு வீட்டின் சொந்தங்களும் ஒன்று கூடி இருக்க, இவர்களுடன் கஸ்துரியும் கெத்தாக வந்து நின்றவளின் திமிரான பார்வை முல்லையை ஏளனமாக உள் வாங்கி இருந்தது.
“என்னப்பா பாண்டியா இது. இந்த ஊருக்கே நீ தான் பஞ்சாயத்து தலைவர். ஆனா உன் குடும்பத்துலயே இப்படி ஒரு பிரச்சனை வந்து இருக்கே. இதுக்கு நீ என்ன முடிவு சொல்ல போற” என ஒருவர் சபையில் முதலில் பேச தொடங்கினார்.
“இருங்க இருங்க. இப்போ இங்க என்ன நடந்துச்சுனு என் அப்பாவை பஞ்சாயத்துல நிக்க வச்சி நீங்க எல்லாம் கேள்வி கேக்குறீங்க” என்ற கதிர்வேலனின் பார்வை முருகனின் அருகே நின்று இருந்த கேசவன் மற்றும் பார்வதி மீது படிந்தது.
“தம்பி நீ சத்த சும்மா இரு ப்பா. பெரியவங்க பேசிகிட்டு இருக்கோம் தானே.“ என்ற ஒருவர், “முருகா. எதுக்காக இந்த பஞ்சாயத்தை ஏற்பாடு பண்ணினன்னு நீயே சபையில சொல்லு பா” என்று சொல்ல,
“என்னத்த சொல்ல சொல்லுறீங்க, என் மகளை இந்த பாண்டியன் அவர் வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போக போறேன்னு வாக்கு கொடுத்துட்டு, இன்னைக்கு வேற ஒரு பொண்ணை அந்த ஆளோட பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு, இது தான் இந்த பெரிய மனுசனோட நியாயம் தர்மமா” என்று முருகன் கேட்க, ஜீவா குனிந்த தலை நிமிறாமல் சிலையென அத்தனை பேர் எதிரிலும் சூழ்நிலை கைதியாக நின்று இருந்தார்.
“ஏன் பா பாண்டியா. முருகனோட பொண்ணை நீ உன் பையனுக்கு கட்டி வைக்க போறதா வாக்கு கொடுத்த விஷயம் எங்க எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனா இப்போ இந்த பொண்ணு மனசுல ஆசையை வளர்த்துட்டு, இப்படி திடிர்னு உன் பையனுக்கு வேற பொண்ணை கட்டி வச்சது என்ன நியாயம் பாண்டியா” என ஒருவர் கேட்க,
“நீங்க எதிர்பார்க்குற நியாயம் தர்மம் எல்லாம் இந்த ஆளுகிட்ட கிடைக்காது. இந்த ஆளு முல்லையை அவங்க வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போக நினைத்ததுக்கு காரணமே எங்களோட சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டு தான். ஆனா இந்த வீட்டுக்கு முல்லை மருமகளா போனா எங்க சொத்துல இருந்து ஒத்த பைசா தர மாட்டோம்னு சொன்னதால விவரமா எங்க பொண்ணை ஏமாத்திட்டு இப்போ அவங்க பையனுக்கு வேற பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க” என்ற பார்வதியின் பேச்சை கேட்டு கதிர்வேலன் கைகளை மடக்கிக்கொண்டு சண்டைக்கு சென்றவரின் கரங்களை பற்றி இருந்தாள் ரோஜா.
“என்ன பாண்டியா. இவங்க உன் மேல சொல்லுற குற்றத்துக்கு உன்னோட பதில் என்ன. பாவம் பா அந்த முல்லை பொண்ணு. அந்த பொண்ண, உங்க வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போறேன்னு சொல்லி மனசுல ஆசையை வளர்த்துட்டு இப்போ உன் பையனுக்கு வேற பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருக்கியே, இதெல்லாம் நல்லவா இருக்கு” என்ற பெரியவர்களின் குற்றசாட்டில் பாண்டியன் கூனி குறுகி போனார்.