பாலைவனத்து முல்லை❣️
பகுதி – 10
கஸ்தூரியின் நாராசாரமான வார்த்தைக்கு அவர் கன்னத்தில் அறைந்தது அவரது கணவன் ஜெகதீஷ் தான்.
அனைவரின் எதிரிலும் தன்னை அடித்த தன் கணவனை எரித்து விடும் பார்வை பார்த்தார் கஸ்தூரி.
“என்னடி அப்படி பாக்குற? இன்னோரு பக்க கன்னமும் சிவக்கணுமா? முல்லையும் நம்ம மீனா மாதிரி தானே. அந்த பொண்ணை பற்றி இவ்ளோ கேவலமா பேச உனக்கு எப்படி மனசு வருது” என்று பொறிந்து தள்ளினார் ஜெகதீஷேன்.
கஸ்தூரி பேசிய பேச்சை கேட்டு முல்லை மேலும் அழுதவளை ஜீவானந்தம் சமாதானம் செய்துக்கொண்டு இருக்க, தனக்கு பரிந்து பேசியதால் தான் முல்லைக்கு இந்த நிலை என்று எண்ணிய கதிர்வேலன் உள்ளுக்குள் புழுங்கி போனார்.
“ஏன் கஸ்தூரி. உனக்கு ஆண்டவன் நாவை தான் படைத்து இருக்கானா.? இல்லை விஷத்தை மட்டுமே கக்கும் பாம்பின் நாக்கை வச்சி அனுப்பிருக்கானா.? ஏன் எப்போ பாரு முல்லையை இப்படி கரித்து கொட்டிக்கிற” என்ற பாண்டியனும் தன் பங்குக்கு அவரின் தங்கையை கடிந்துகொண்டார்.
“அம்மா. நீ சும்மாவே இருக்க மாட்டியா, இனி நீ முல்லையை பற்றி எதுவும் பேசக்கூடாது சொல்லிட்டேன்” என்று மீனா தன் அன்னையை கண்டிக்க,
“சரி டி. இனி இவளை பற்றி நான் பேசவே மாட்டேன்” என வெடுகென்று முகத்தை தன் தோளில் இடித்து வெட்டிகொண்டார் கஸ்தூரி.
“அத்த. இனி நீங்க முல்லையை பற்றி தவறா பேசாமல் இருப்பதெல்லாம் இருக்கட்டும், முதலில் இப்போ நீங்க என் அண்ணன்களையும் முல்லையை பற்றி ரொம்ப கேவலமா கமெண்ட் பண்ணதுக்கு இவங்க மூணு பேர்கிட்டயும் மன்னிப்பு கேளுங்க” என்று ரோஜா சொல்ல, கஸ்தூரியின் முகம் அதித சூட்டில் கருகி போன கடுகை போல கறுத்து விட்டது.
“என்ன. நான் இவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணுமா.? இவங்க வயசு என்ன என் வயசு என்ன?” என்று கஸ்தூரி விதண்டாவாதம் செய்ய, “வயசுக்கு ஏற்ற பேச்சை பேசலைனா இப்படி தான் சின்ன பசங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்” என்றாள் ரோஜா.
“ரோஜா. மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம்ம், அவ ஏதோ கூறுக்கெட்டு பேசிட்டா, நீ இதை பெருசாக்காத” என்று பாண்டியன் சொல்ல,
“சரி. நம்ம வீட்டு ஆம்பளைங்ககிட்ட அத்த மன்னிப்பு கேட்க வேண்டாம்ம், ஆனா அவங்க முல்லைகிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும்” என்று ரோஜா தீர்க்கமாக சொன்னாள்.
“ஹ்ம் ஹ்ம். வேண்டாம்ம் ரோஜா, சித்தி தானே. இருக்கட்டும்” என்று தொண்டை குழியில் இருந்து வார்த்தை வராத நிலையில் கண்ணீருடன் முல்லை கஸ்தூரியை பார்க்க, “இப்படி அழுது அழுதே இந்த வீட்டுக்கு மூத்த மருமகளாக வர போறாள்” என்று மீண்டும் முல்லையை சீண்டி பார்த்தார் கஸ்தூரி.
யார் என்ன சொன்னாலும், கஸ்தூரிக்கு மட்டும் முல்லையை பிடிக்காமல் போக, பொறுத்து பொறுத்து பார்த்த கதிர்வேலன், “அத்த. இது தான் உங்க லிமிட், இதுக்கு மேல நீங்க முல்லையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது” என்றவர், மீனாவை பார்த்து அவள் கண் முன்னே விரல்களை சுண்டி, “ஏய் இந்தா. உன் அம்மாவை அழைச்சிக்கிட்டு ஒழுங்கா இங்க இருந்து ஓடிடு” என்று கர்ஜித்தார் கதிர்வேலன்.
முல்லைக்காக தன்னை மேலும் அவமானப்படுத்தும் ரோஜா மற்றும் கதிர்வேலனை பார்த்து கஸ்தூரி மேலும் கோவம்க்கொள்ள,
“ப்ச். கதிரு நீ கொஞ்சம் அமைதியா இரு, நான் பேசிக்கிறேன்” என்று அனைவரையும் சமாதானம் செய்தார் பாண்டியன்.
வக்கிலை அழைத்து சொத்தை சமமாக பிரித்த பாண்டியன், கையோடு தன் மகன்கள் இருவருக்கும் அடுத்த முகூர்த்ததில் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடிவெடுத்து இருக்க, அந்த நல்ல காரியத்துக்கு கஸ்தூரி முட்டுக்கட்டையாக வந்து நின்றார்.
இருந்தும் பாண்டியன் தன் தங்கை கஸ்தூரியை சமாதானம் செய்தவர், ஜெகதீஷ் மற்றும் கஸ்தூரியை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தார்.
“முல்லை. நீ போய் முகம் அலம்பிட்டு வா” என்று ரோஜா சொல்ல, அன்னம் அவள் அழுத விழிகளை பார்த்து, ஆதவன் கதிர்வேலனின் அகம் கொதித்தது.
கஸ்தூரி வந்தாலே கலகம் வரும் தான் என்று அறிந்து இருந்த ஜீவானந்தம் பொறுமையை கடைபிடிக்க, ஒரு வழியாக கஸ்தூரியின் திருவாய் சற்று ஓய்ந்து இருந்தது.
“இங்க பாரு கஸ்தூரி. ஜீவா முல்லைக்கு நான் கல்யாணம் ஏற்பாடு பண்ண போறேன், இப்போ நீ சம்மதம் சொன்னால், இவங்க கல்யாணம் நடக்கும் போதே, நம்ம மீனா கதிர் கல்யாணத்தையும் அதே மேடையில பண்ணிடுவேன்” என்று பாண்டியன் கல்யாண பேச்சுக்கு பிள்ளையார் சுழி போட்டார்.
தன் தந்தையின் வார்த்தையை கேட்ட கதிர்வேலன், ரோஜாவின் அருகே நின்று இருந்த முல்லையை பார்க்க, அவளோ எந்த ஒரு உணர்வும் இல்லாமல் சிலையென தான் நின்று இருந்தாள்.
முல்லையை பார்த்த கையோடு தன் பார்வையை ஜீவானந்தம் பக்கம் கதிர்வேலன் திருப்ப, அவரோ சிரித்த முகத்துடன் நின்று இருக்க,
“அப்பா. முதல்ல அண்ணன் கல்யாணம் நடக்கட்டும்” என்றார் கதிர்வேலன்.
“யார் என்ன சொன்னாலும் உன் அண்ணன் கல்யாணம் நடக்க தான் போகுது, ஆனா நான் இப்போ பேசறது உன் கல்யாணத்தையும் சேர்த்து தான்” என்று பாண்டியன் சொல்ல,
“நம்ம வீட்டுல கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கும் போது, எனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்” என்று கேட்டார் கதிர்வேலன்.
“இல்ல கதிரு. ரோஜாவுக்கு நான் இப்போ கல்யாணம் பண்ணுறதா இல்ல. அதுவும் இல்லாம முல்லையை நம்ம வீட்டுல ரொம்ப நாள் வச்சிருக்க முடியாது, நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க, நாக்குல நரம்பு இல்லாத ஜென்மங்கள்” என்று பாண்டியன் சொல்ல,
“உன் அண்ணன் உன் முகத்துல துப்பாமல் துப்பி காட்டுறாரு” என்று கஸ்தூரியை பார்த்து கேலி செய்தார் ஜெகதீஷ்.
“இல்ல அப்பா. நான் என்ன சொல்ல வறேனா?” என்று கதிர்வேலன் சொல்லும் முன்னே,
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்ம், நாளைய மறுநாள் நம்ம பாண்டி கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு அங்கேயே உங்க நாலு பேருக்கும் மோதிரம் மாற்றி நிச்சியத்தை முடிச்சிடலாம்” என்றார் பாண்டியன்.
“என்ன அண்ணா சொல்லுறீங்க, எந்த நாலு பேருக்கு நிச்சியம் பண்ண போறீங்க” என்று கஸ்தூரி தெரியாததை போல கேட்க,
“இங்க பாரு கஸ்தூரி, உன் பொண்ணை நீ கதிருக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க சம்மதம் சொன்னா அவன் பேர்ல இருக்குற சொத்து எல்லாம் உன் பொண்ணுக்கும் தான் வந்து சேரும். இல்ல நீ உன் மகள் விருப்பத்தை மீறி வெளிய எங்கவாது மாப்பிளையை பார்க்க போறினா சொல்லுடு, ஒரு தாய்மாமானா நான் என்ன பண்ணணுமோ அதை பண்ணிடுறேன்” என்று பாண்டியன் சொல்ல, கஸ்தூரி தீவரமாக யோசனையில் முழுகி இருந்தார்.
“அம்மா. எனக்கு எப்படியாவது கதிர் மாமாவை கல்யாணம் பண்ணி வையுங்க அம்மா” என்று மீனா தன் தாயிடம் கெஞ்சி கேட்க, நினைவு தெரிந்ததில் இருந்து தன்னை பெற்ற அன்னை வள்ளியின் அருகே கூட நிற்க தனக்கு குடுப்பணை இல்லையே என்ற ஏக்கம் முல்லையின் விழிகளில் வலியை கொடுத்தது.
“இந்தாடி ரொம்ப யோசிக்காத. என் மாப்பிள கதிருக்கு என்ன குறைச்சல். அதான் உன் எண்ணம் படியே உன் அண்ணனுக்கு சம்மந்தியாக போறியே, அது போதாதா” என்று ஜெகதீஷ் கேட்க,
“சரி அண்ணா. என் மகளை நான் கதிருக்கு கட்டிக்கொடுக்க சம்மதிக்கிறேன்” என்று தன் சம்மததை சொன்னார் கஸ்தூரி.
தன் அன்னையின் வாய்வழியே வந்த நல்ல வார்த்தையை கேட்டு மீனாவின் வாடிய முகம் பொலிவு பெற, கதிர்வேல்னோ மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் சூழ்நிலை கைதியாக நின்று இருந்தார்.
“ஜீவா. நாளைய மறுநாள் கோவிலுக்கு போக வேண்டிய ஏற்பாட்டை எல்லாம் பார்த்து பண்ணிடு, அப்படியே நாளைக்கு நம்ம வீட்டு பொண்ணுங்கள அழைச்சிட்டு போய் புடவை நகையெல்லாம் வாங்கி கொடுத்துடு” என்று பாண்டியன் சொல்ல,
“அப்பா. நாளைக்கு மீட்டிங் விஷயமா நம்ம ரெண்டு பேரும் பொன்னமராவதி போகணுமே மறந்துட்டீங்களா.?” என்று கேட்டார் ஜீவானந்தம்.
“அட ஆமா. நான் மறந்தே போயிட்டேன்.
சரி கதிரு. நீ இவங்கள எல்லாம் கடைக்கு அழைச்சிட்டுபோய்ட்டு வந்துடு. கஸ்தூரி நீயும் வேணா இவங்ககூட போயிட்டு வா” என்று பாண்டியன் சொல்ல,
“பின்ன நான் போகாம எப்படி.?” என்று இழுவையாக பதில் கொடுத்தார் கஸ்தூரி.
“சார். நான் வந்த வேலை முடிஞ்சிடிது, அப்போ நான் கிளம்பவா” என்று வக்கீல் கேட்க,
“இருங்க இருங்க. அடுத்து வரும் போது முல்லை அப்பா முருகனோட சொத்துக்கும் என் மருமகளுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லைனு பத்திரம் தயார் செய்துக்கொண்டு வாங்க” என்றார் பாண்டியன்.
“சரிங்க ஐயா. அடுத்த சந்திப்பில் எடுத்து வரேன்” என்ற வக்கீல் பாண்டியன் வீட்டில் இருந்து வெளியேற,
“சரி சரி எல்லோரும் போய் வேலையை பாருங்க” என்ற பாண்டியன் தன் அறைக்குள் சென்று இருந்தார்.
“இந்தாடி. வா வீட்டுக்கு போகலாம்” என்று கஸ்தூரியை ஜெகதீஷ் அழைக்க,
“அதான் நாளைக்கு கடைக்கு போக போறாங்களே. நான் இங்கேனேயே இன்னைக்கு தங்கிக்கிறேன்” என்ற கஸ்தூரி நேரே சமையலறைக்குள் புகுந்து பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்து இருந்தார்.
“சரி மாப்பிள்ளைங்களா. இன்னைக்கு ஒரு நாள் உங்க அத்த தொல்லை இல்லாம நான் நிம்மதியா இருக்கேன்” என்ற ஜெகதீஷ் சோகமாக நின்று இருந்த முல்லையின் அருகே சென்று வாஞ்சையாக அவள் தலையை வருடிக்கொடுத்தார்.
“உன் சித்தி ஒரு பைத்தியக்காரி முல்லை. நீ அவ பேசுனதை எல்லாம் எண்ணி கவலைப்படாத” என்று ஜெகதீஷ் சொல்ல,
“ம். “ என்று வலி நிறைந்த புன்னகையுடன் ஜெகதீஷை வழி அனுப்பி வைத்தாள் முல்லை.
“கதிரு இந்தாடா கார்ட், நாளைக்கு இவங்கள அழைச்சிட்டு போய் என்ன தேவையோ அதெல்லாம் வாங்கிக்கொடுத்துடு” என்று ஜீவானந்தம் கார்டய் கதிர்வேலனிடம் நீட்ட,
“அம்மாகிட்ட கொடுங்க, அவங்களே அத வச்சிக்கிட்டோம்” என்ற கதிர்வேலன், ரோஜாவை பார்த்து சிரித்த வண்ணமாக வேகமாக பாண்டியன் வீட்டில் இருந்து நாகராஜனின் வீட்டை நோக்கி சென்று இருந்தார்.
சில நிமிடத்தில் கஸ்தூரி செய்த ஆர்ப்பாட்டத்தில் முல்லைக்கு தலைவலி அதிகரிக்க, “ ரோஜா. எனக்கு பெயின் கில்லர் தரியா” என்று முல்லை கேட்டதும்,
“என்ன முல்லை. கஸ்தூரி அத்த பேசினதுல உனக்கு தலைவலியே வந்துடுதா” என்று கேட்ட ஜீவானந்தம் முல்லையை அவரால் முடிந்தவரை சமாதானம் செய்துகொண்டு இருந்தார்.
பாலைவனத்து முல்லை
பகுதி – 1௦. 2
அன்றைய நாள் முழுதும் ரோஜா தன் அண்ணன் கதிர்வேலனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நாகராஜன் மதிய உணவை எடுத்து செல்ல வீட்டுக்கு வந்த போதும் கூட தன் அண்ணனை பற்றி ரோஜா கேட்கவில்லை.
“இந்தாப்பா வேலைக்காரா. ஏன் கதிர் வீட்டுக்கு வந்து சாப்பிட மாட்டானா” என்று கஸ்தூரி கேட்க,
“அத்த. அவருக்கு நாகராஜன் என்று ஒரு பெயர் இருக்கு” என்ற ரோஜாவின் பதிலில் கஸ்தூரி முகத்தை திருப்பிக்கொண்டு தோட்டப்பக்கம் சென்றார்.
“நாகா அண்ணா. கதிர் மாமா ஏன் வீட்டுக்கு சாப்பிடல வரல” என்று மீனா கேட்க,
“நைட் வருவாருங்க” என்ற நாகராஜன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சிலம்பம் திடலுக்கு சென்றார்.
காலையில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்த கதிர்வேலன் தன் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் தன் எதிரே இருக்கும் மண் மூட்டையில் கையை மடக்கி ஆத்திரம் அடங்க குத்திக்கொண்டு இருக்க,
“டேய் டேய் கதிரு. என்னடா பண்ற” என்று பதற்றத்துடன் தன் நண்பனை தன் வசம் இழுத்தார் நாகராஜன்.
“என்ன கதிர் நீ. இப்படி நீயே உன்னை காயப்படுத்திகிறதால என்ன மாறப்போகுதுனு நினைக்கிற?”
“அப்பா எனக்கும் மீனாவுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணுறாரு நாகா”
“நல்லது தானே கதிர்.
நீ மீனாவை கல்யாணம் பண்ணிக்கோ. “
“உளராத. நான் காதலிச்சது முல்லையை தான். “
“அது தான் ஒருதலை காதலாச்சே. “
“இருந்தாலும் என்னால எப்படி முல்லையை தவிர்த்து வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியும்?”
“சும்மா அதையே சொல்லாத கதிர். நீ உன் காதலை முல்லைகிட்ட சொல்லுறதுக்கு முன்னாடி உன் அண்ணன் முல்லையை லவ் பண்ணிட்டாரு. சரி உன் அண்ணன் காதலிச்சாலும் பரவாயில்ல, முல்லை உன்னை லவ் பண்ணி இருந்தாளாவது உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க உன் தங்கச்சி எதாவது முயற்சி பண்ணி இருப்பாங்க. ஆனா முல்லையும் தானே நண்பா உன் அண்ணனை காதலிக்கிறாங்க”
“டேய். இதெல்லாம் எனக்கு தெரியாதா. நீ என்னமோ எனக்கு தெரியாத விஷயத்தை பேசுற மாதிரி பேசற. “
“ம். அப்போ உனக்கு எல்லாம் தெரியுது தானே. இருந்தும் நீ ஏன் மீனாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல மாட்டுற. “
“இருந்தாலும்டா. “
“இந்த இருந்தாலும் பறந்தாலும் எல்லாம் வேண்டாம் கதிரு.
முதல்ல நீ தண்ணி சாப்பிடுறதை நிறுத்து.
நேத்து நைட் கூட நீ குடிச்சிட்டு முல்லையை கட்டிப்பிடித்து பெரிய கலாட்டா பண்ணிட்ட. “
“என்னடா சொல்லுற. நான் முல்லையை கட்டிப்பிச்சேனா.?”
“பின்ன என்ன.? நேத்து நீ ரொம்ப பண்ணிட்ட. அதனால தான் உன் தங்கச்சி இனிமே உன்கூட பேசவே மாட்டேன்னு போய்ட்டாங்க. “
“ஓ. அதான் அம்மா காலையில இருந்து என்கிட்ட கோவமா இருக்காங்களா?”
“இங்க பாரு கதிரு. மீனா உனக்காக உயிரையே கொடுக்க துணிஞ்சு இருக்கு, நீ முதல்ல மீனாவை ஏத்துகலைன்னா கூட, முல்லையை மறக்க ட்ரை பண்ணு”
“அந்த ரவா லட்டை மறக்க முடியாம தானே டா நான் இந்த ஊர விட்டே ஓடிப்போனேன்”
“இதுக்கு மேல உன்னால ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ஒழுங்கா உன்னை நேசிக்கிற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ. உன் விஷயம் மட்டும் உன் அண்ணனுக்கு தெரிந்தால் அப்புறம் உங்க குடும்பத்துல பிரச்சனை தான் வரும்”
“டேய் ஏன் டா நீ வேற. இப்போ என்னை என்ன தாண்டா பண்ண சொல்லுற?”
“மீனாவை கல்யாணம் பண்ணிக்கோ, அதுக்கு முன்னாடி மீனா கூட சகஜமா பேசு” என்று நாகராஜன் சொன்னதும், கதிர்வேலன் தன் நண்பன் பேசியதை கேட்டு பெருமூச்சுடன், “ம். ட்ரை பண்ணுறேன்” என்றார்.
சிவகங்கையில் இருக்கும் முருகனின் வீட்டில் பார்வதி எல்லை இல்லாத மகிழ்ச்சியில் இருக்க, “என்ன அக்கா ரொம்ப ஹாப்பியா” என்று தன் உடன் பிறப்பை பார்த்து கேட்டான் கேசவன்.
“பின்ன இருக்காதா கேசவா. இனி அந்த முல்லை தொல்லை நமக்கு இல்லடா. இந்த சொத்து முழுக்க நம்மகிட்ட மட்டுமே இருக்க போகுது” என்று பார்வதி சொல்ல,
“அப்படினு நினைத்தால் உன்னை விட ஒரு முட்டாள் வேற யாரும் இல்லை” என்றான் கேசவன்.
“என்னடா தம்பி சொல்லுற. அப்போ இந்த சொதுக்கு எல்லாம் நான் சொந்தக்காரி யாக முடியாதா” என்று பார்வதி அதிர்ச்சி அடைய,
“வாய்ப்பே இல்லை” என்றான் கேசவன்.
“அக்கா. இப்போதைக்கு முல்லை சொத்து வேண்டாம்ன்னு எழுதி கொடுத்தாலும் நாளைக்கு அவளுக்கு பிறக்க போற பிள்ளைக்கு தாத்தா சொத்துல எல்லா உரிமையும் இருக்கு. அதனால தான் சொல்லுறேன், என்ன நடந்தாலும் முல்லை கழுத்துல நான் தாலி கட்டி, அவளை இந்த வீட்டோட அடைச்சு வைக்கணும் அக்கா” என்ற கேசவனின் முகம் கொடூரமாக மாறியது.
“ஆனா. அந்த பாண்டியன் தான் முல்லைக்கு அவன் பையனை கல்யாணம் பண்ணி தர போறதா சொன்னானே” என்று பார்வதி கேட்க,
“அவன் சொன்னா போதுமா. யார் என்ன சொன்னாலும் முல்லை என்னோட பொஞ்சாதி மட்டும் தான். அவளை மறுபடியும் எப்படி இங்க அழைச்சிட்டு வரதுனு எனக்கு தெரியும்” என்ற கேசவனின் மூளை அதி வேகமாக தவறான பாதையில் முல்லையை அடைய தயாரானது.
நாள் முழுவதும் கதிர்வேலன் வீட்டுக்கு வராமல் இருக்க, ஒரு நாளைக்குள் மூன்று முறையேனும் தன் அண்ணனிடம் அலைபேசி வாயிலாக பேசும் ரோஜா இன்று கதிர்வேலனை அழைக்காமல் இருக்க,
“என்ன ரோஜா. நைட் மணி ஒன்பது ஆச்சே, ஏன் இன்னும் கதிர் மாமா சாப்பிடல வரல” என்று கேட்டாள் மீனா.
மீனா கேட்ட அதே கேள்வி முல்லையின் மனதில் எழுந்து இருந்தாலும், ஏனோ கஸ்தூரியின் குத்தல் பேச்சை கேட்ட முல்லைக்கு இப்போதெல்லாம் கதிரைப்பற்றி பேசவே தயக்கமாக இருந்தது.
கதிர்வேலனை பற்றி மீனா கேட்டதும், “அவன் இந்நேரம் எங்க குடிச்சிட்டு கவுந்து படுத்துகிட்டு இருக்கானோ” என்று கஸ்தூரி சொல்ல, அதே தருணம் ஜீவானந்தமும் பாண்டியனும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
வெளியே சென்று வரும் நபர்களுக்கு உடனே அருந்த தண்ணீரை கொடுக்கும் வழக்கம் முல்லைக்கு இருப்பதால், அவளும் ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துவந்து பாண்டியனிடம் நீட்ட, “எப்படியெல்லாம் எல்லோரையும் கைக்குள்ள போட்டு வச்சிருக்கா பாரு. நான் பெத்தது தான் எதுக்கும் பிரயோஜனம் இல்லை” என்று முணுமுன்னுத்தார் கஸ்தூரி.
பாண்டியன் குடித்த நீர் குவளையை ஜீவானந்தன்னிடம் கொடுத்த பாண்டியன், “என்ன இன்னும் கதிர் வீட்டுக்கு வரலையா?” என்று கேட்டார்.
“ஹ்ம். உங்க சின்னப் பையன் சீக்கிரம் வீட்டுக்கு வந்தா மழை வானத்தை பொளந்துகிட்டு ஊத்துமாச்சே” என்று கஸ்தூரி செல்ல,
உண்மைக்கு இடியுடன் கூடிய மழையில் நனைந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார் கதிர்வேலன்.
“டேய் என்ன டா நீ, மழை வருதுன்னு தெரியும் தானே, ஏன் ஓரமா நின்னு வந்தா என்ன.? முல்லை. அவனுக்கு துண்டை எடுத்துக்கொடு” என்று ஜீவானந்தம் சொல்ல, தன் அருகே இருந்த துண்டை எடுத்த முல்லை அதை மீனாவிடம் கொடுத்த பிறகு சமையலறைக்குள் சென்று நின்றுக் கொண்டாள்.
வீட்டில் உள்ள அனைவரின் தேவை அறிந்து நடந்துகொள்ளும் முல்லைக்கு கஸ்தூரியின் பேச்சைக்கேட்டத்தில் இருந்து எந்த வேலை செய்தாலும் அதில் தயக்கம் இருக்க, முல்லையின் மாற்றத்தை பார்த்த ரோஜாவிற்கு கஸ்தூரி மீது தான் கோவம் எழுந்தது.
“டேய் போய் டிரஸ் மாத்திட்டு வா சாப்பிடலாம்” என்று ஜீவானந்தம் தன் தம்பியை அழைக்க, இன்றும் கதிர்வேலன் குடித்து இருப்பதை ரோஜா கண்டுகொண்டவள், தன் அண்ணனிடம் பேசாமல் சமையலறைக்குள் புகுந்துகொண்டாள்.
இவர்கள் அனைவரும் ஒன்றாக இரவு உணவை முடித்ததும், “ ஜீவா. நாளைக்கு காலையில் ஐந்து மணிக்கு கிளம்புனா தான் சரியா இருக்கும், நீ நேரத்தோட போய் படு” என்ற பாண்டியன் அவர் அறைக்குள் செல்ல,
“சரி எல்லோரும் போய் தூங்குங்க” என்ற ஜீவானந்தம் முல்லையை பார்த்து கண்கள் சீமிட்டி, “குட் நைட் முல்லை” என்றவாறு தன் அறைக்கு சென்று இருந்தார்.
இன்று தன் நண்பனின் வீட்டுக்கு செல்லாமல் அவர் அறையிலேயே உறங்க சென்ற கதிர்வேலனை, “மாமா. “ என்று மீனா அழைக்க, மீனாவிடம் முகம் கொடுத்து பேசாமல் தன் அறைக்குள் சென்று கதவை ஓங்கி அடித்து சாத்திகொண்டார் கதிர்வேலன்.
“ப்ச். இந்த மாமாகிட்ட நம்மனால தனியா பேசவே முடியல” என்று மீனா புலம்பிக்கொண்டே வேறொரு அறைக்கு செல்ல, அங்கே கஸ்தூரி தன் மகளுக்காக காத்து இருந்தார்.
“என்ன அம்மா. ஏன் இந்த நேரத்துல வர சொன்ன, ரோஜாவும் முல்லையும் தூங்க போயிட்டாங்க, சீக்கிரமா சொல்லு என்ன விஷயம், எனக்கு தூக்கம் வருது” என்று மீனா சொல்ல,
“அடியே. தூக்கமா முக்கியம். இங்க பாரு, நான் சொல்லுறத நல்லா கேட்டுக்கோ. நாளைக்கு புடவை நகை எல்லாம் எடுக்க போகும் போது, முல்லையை விடவே நீ அதிகமா வாங்கிக்கோ. அதே மாதிரி உனக்கு வாங்குற முகூர்த்த புடவையை அவளை தொடவே விடாதே” என்று கஸ்தூரி தன் மகளுக்கு தூபம் போட்டார்.
“ஏன் அம்மா. முல்லை தொடுறதால என்ன ஆகப்போகுது” என்று மீனா கேட்க,
“அவ ராசி இல்லாத பொண்ணு டி. அவ பிறந்ததும் நல்லா இருந்த என் அக்கா போய் சேர்ந்துட்டா. அவளை கூட வச்சிக்கிட்டா அவ அப்பனுக்கே பிரச்சனைன்னு தான் அவளை ஹாஸ்டளுக்கு அனுப்பி படிக்க வச்சான் முருகன். அதான் சொல்லுறேன். நீ அவகிட்ட கொஞ்சம் தள்ளியே இரு.
நாளைக்கு நான் கடையில வச்சி இதெல்லாம் சொன்னால் அந்த ரோஜாவும் கதிரும் என்கிட்ட சண்டைக்கு வருவாங்க. அதனால தான் நான் உன்னை தனியா அழைத்து வந்து சொல்லி தறேன்” என்று கஸ்தூரி இல்லாதலையும் பொல்லாதத்தையும் சொல்லிக்கொடுக்க,
“சரி சரி நான் பார்த்துக்குறேன் நீ தூங்கு” என்ற மீனா அந்த அறையில் இருந்து வெளியே வர, அப்போது தான் கையில் தண்ணீர் பாட்டிலுடன் முல்லை சமையலறைக்குள் நுழைந்தாள். “ஐயோ நம்ம பேசுனத முல்லை கேட்டு இருப்பாளா” என்று மீனா நினைத்துக்கொண்டே ரோஜாவின் அறைக்குள் நுழைய, அங்கே ரோஜா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் அருகே மீனாவும் படுத்துக்கொண்டாள்.
நீண்ட நேரம் கடந்தும் முல்லை சமையலறையில் கண்களில் கண்ணீருடன் நின்று இருந்தவள், சற்று முன்பு கஸ்தூரி மீனாவிடம் பேசிய உரையாடல்கள் அணைத்தையும் கேட்க நேர்ந்தது.
“உண்மையில் நம்ம ராசி இல்லாத பொண்ணு தானா.? அதனால தான் நம்ம முதலில் அவர் கூட வாழணும்னு ஆசைப்பட்ட அந்த வாழ்கை நமக்கு கிடைக்காமல் போச்சா. “ என்று முல்லை ஆதங்கத்தில் வாய்விட்டு புலம்ப.
“என்ன சொல்லுற நீ. அப்படி யார்கூட நீ முதல்ல வாழ ஆசைப்பட்ட வாழ்கை உனக்கு கிடைக்காமல் போச்சு?” என்ற குரலில், முல்லை திடுக்கிட்டு திரும்பியவளின் முன்னே புருவம் இடுங்க நின்று இருந்தது,