Stories that touch hearts

Home  /  46. மோ.நித்யா சபரி (இளவேனில் சாய்ந்தாட ஒரு தோள்)  /  Chapter 1

CHAPTER 1

இளவேனில்🍀🫂சாய்ந்தாட ஒரு தோள்!

By மோ.நித்யா சபரி · October 24, 2026

0

அத்தியாயம்-1-

ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பிரம்மாண்டமான பார்ட்டி ஹால் ஒன்றில், அந்த ஆடம்பரச் சூழலின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான டைனிங் டேபிளில், நேரம் நகர்வதைக் கவலை கலந்த பார்வையுடன் கண்காணித்தபடியே, அமர்ந்திருந்த உருவமோ அப்படியே, தன் கைகளை மெதுவாய்த் திருப்பி தன் கைக்கடிகாரத்தின் முட்களைச் சரிபார்த்தும் கொண்டிருக்கவும்….  

     அப்படியே, அந்த உருவத்தின் முகத்திலோ ஒருவித பதற்றமும் காத்திருப்புக்குரிய இயலாமையும் தலா ஒரு கோடு வரைந்திருந்தது….    

     ​அதே கணத்தில், ஹோட்டலின் பிரதான வாயிலுக்கு வெளியே ஒரு காஸ்ட்லி கார் வந்து சீறிப்பாய்ந்து நிற்கவும்….. அதைக் கண்டதும் ஹோட்டலின் வாட்ச்மேன்  ஓடிவந்து கதவைத் திறக்க…, உள்ளிருந்து இறங்கிய உருவம்! சாதாரணமானதல்ல… சினிமா ஸ்டார்களை மிஞ்சும் நட்சத்திர அந்தஸ்தின் பிரகாசம் அந்த உருவத்திடம் தெரிந்தது….அவ்வளவுதான்…       

“அவர்தானா அது…?!”

என்ற முணுமுணுப்பு காற்றில் பரவவும்…., நொடியில் அங்கே பெரும் கூட்டம்! திரண்டது. ….வந்திருப்பவரை அருகில் கண்ட மகிழ்ச்சியில்  ஃபேன்ஸ், தங்கள் செல்பேசியில் அந்த நபருடன் செல்ஃபி எடுக்கவும்….,  ஆட்டோகிராஃப் பெறவும்  ரசிகர்கள் போட்டிபோட்டனர்….​வெளியே , அப்படி ஒரு பெரும் ஆரவாரம் நிகழ்ந்துகொண்டிருக்க….,   

    உள்ளே டைனிங் டேபிளில் காத்திருந்த அந்த உருவத்துக்கு சொந்தக்காரி! ஒரு  நடுத்தர வயதுப் பெண்… அவள் தனது வாட்ச்சில் மணியைப் பார்த்துக் கொண்டே எரிச்சலின் உச்சத்தில் இருந்தாள்…..          

    வெளியே ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்தப் பிரபலம் வேறு யாருமல்ல…., தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த அதிரடி ரேப் பாடல்களால் ஒட்டுமொத்த இளைஞர்களின் நாடித்துடிப்பை ஆளும் புகழ் பெற்ற ரேப் சிங்கர்… வருணி!     

சிங்கப்பூர், அமெரிக்கா என வெளிநாடுகளில் நடந்த உலகளாவிய போட்டிகளில் இந்தியாவின் கொடியை ஏந்தி, ரேப் இசையில் சிகரம் தொட்டு இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்த மாடர்ன் மங்கை அவள்..!  

பார்ப்பதற்கு செதுக்கி வைத்த சிற்பம் போல் கம்பீர முகவெட்டு, கூர்மையான தாடை , அகன்ற நெற்றி, வில் போல வளைந்து நேர்த்தியான அடர்ந்த புருவங்கள், நீண்ட இமைகள், மின்னல் பாய்வதைப் போன்ற கூர்மையான  காந்த கண்கள், கிளிமூக்கு போன்ற கூர்நாசி,ஸ்டராபெர்ரி மற்றும் செவ்வந்திப் பூவைப் போல சிவந்த உதடுகள், அழகிய முத்துப்பற்கள், ரோஜா இதழின் மென்மையைப் போன்ற பளபளக்கும் கன்னங்கள்,  என அதிகப்படியான மேக்கப்பின் ஆர்ப்பாட்டம் இல்லாத ரம்மியமான வட்ட முகம்,அடர்த்தியான கருங்கூந்தல்! தோள்களில் தவழ,  அதிலே காப்பர் பிரவுன்  கலரில் ஹைலைட்ஸ் ,  காதுகளில் ஆடும் பெரிய வட்டமான  நவீன ஹூப்! கம்மல்கள், கழுத்தில் ஒரு தடிமனான தங்கச் சங்கிலி!, கையில் விலையுயர்ந்த ஸ்மார்ட் வாட்ச் மற்றும் காலில் ஒரு பிரம்மாண்டமான பிராண்டட் ஸ்னீக்கர்ஸ்  என்று அவளது மொத்த உடையும் ஒரு மாடர்ன் ரேப்! சிங்கருக்கான  கெத்தான லுக்காக இருக்க ….          

        அப்படியே, அவள் உடல் வாகிற்குத் தகுந்தாற்போல கச்சிதமாகப் பொருந்திய ஒரு மாடர்ன் பிளாக் அண்ட் கோல்டு  கிராப் ஜாக்கெட், அதற்குள் ஒரு சிம்பிளான பிளாக் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்திருந்தது அவளது ஃபிட்டான உடற்கட்டை அழகாக வெளிப்படுத்தவும்….    

  அப்படியே,   ட்ரெண்டியான ரிப்வ்டு ஹை-வேஸ்ட் ஜீன்ஸ் அவளது ஸ்டைலிஷ் நடப்புக்கு மேலும் மெருகூட்டியது…..    

    அவளது வலது கையின் முன்கை பகுதியில்  பொறிக்கப்பட்டிருந்த டாட்டூ!,  ஒரு மைக்ரோபோனைச் சுற்றியபடி பின்னிக் கொள்ளும் மியூசிக்கல் நோட்ஸ் மற்றும் வானில் சுதந்திரமாகச் சிறகடிக்கும் ஃபெனிக்ஸ் பறவையின் கலவையான அந்த டாட்டூக்கள், அவளது இசைப் பயணத்தின் வீச்சையும், விடாமுயற்சியையும் சொல்லாமல்ச் சொல்லவும்….        

தனது ஃபேன்ஸின் மனம் கோணாமல், அத்தனை போட்டோக்களுக்கும் அன்போடு போஸ் கொடுத்துவிட்டு, ஆட்டோகிராஃப்களையும் பொறுமையோடு  வழங்கிவிட்டு, ஒரு மாடர்ன் மங்கையின் கம்பீரத்தோடு அந்த பார்ட்டி ஹாலுக்குள் ஸ்டைலாக நுழைந்தாள் வருணி….     

         ​ஆனால், உள்ளே நுழைந்த அடுத்த விநாடி… அந்த உலகப் புகழ்பெற்ற ரேப் சிங்கரின் பந்தாக்கள் அத்தனையும் காற்றில் பறக்க…. எதிரே அமர்ந்திருந்த அம்மாவைக் கண்டதும், அவளது அதிரடி நடை அடங்கி, ஒரு பாசமான அடிபணிவு முகத்தில் கவிழ்ந்து,

     “மம்மி…!”  

    என்றுவிட்டு , அம்மாவிடம் மேலும்  அவள் செல்லமாகக் கொஞ்சி பேச… , சாரதாவோ, மகளை முறைக்கும் பார்வையால் சுட்டெரித்தவர்….        ​

“என்ன…?, ஏன் நேரம் ஆச்சு உள்ளே வரதுக்கு….?!”     

என்ற அம்மாவின் கோபக் குரல் காற்றைக் கிழிக்கவும்…..​அதைக் கேட்டதும் கொஞ்சமும் பயப்படாமல், மாறாக ஒரு குறும்பான சிரிப்போடு தாயின் அருகில் வந்த வருணி,       

    “சாரதா ஹிஸ்ட்ரி டீச்சர்…!, நீங்க… இன்னுமே அந்த ஸ்டிரிக்ட் ஆபீசரா கத்துறத நிறுத்திக்கவே இல்லயே…?!”

என்று வருணி  செல்லமாகக் கிண்டலடிக்கவும்….மகள் தன்னைச் சீண்டுவதால், இன்னும் கடுப்பான சாரதா மகளை முறைத்துப் பார்க்க, உடனே அவரது தோளில் கைபோட்டுக் கொஞ்சியபடியே,      

  “வெளியே என்ன கூட்டம் தெரியுமா…?, எல்லாம் என் ஃபேன்ஸ்…!!!, எப்புடியும் கண்டுபிடிச்சு வந்துராங்க மம்மி…  ஒரே ரகளையா போச்சு மம்மி… அவங்க தானே என் உலகம்! அவங்கள தவிர்க்க முடியுமா நான் … அதான் லேட் மம்மி இங்க வர…?!”    

  என்று வெளியில் நடந்த விஷயங்களைச் சாதாரணமாக விளக்கத் தொடங்கினவளிடம், தாயோ,   

​

“எல்லாம் எனக்கும் தெரியுது… ஆனா டைம் இஸ் வெரி இம்பார்ட்டன்ட்  வரு….  உனக்கு எப்போ தான் இது புரியும்…?”

    என்று டீச்சரின் கண்டிப்போடு தாய் சாரதா கடிந்துகொள்ள, வருணி விடாப்பிடியாக எதிர்வாதம் செய்தவள்,   

​”மம்மீ….., நீங்க டீச்சர்ன்னு  ரெம்ப தான் எனக்கு லெக்சர் எடுக்கிறீங்களே… நான் நேத்து நைட் தான் ஃபாரின்ல இருந்து லேண்ட் ஆனேன் தெரியும்ல…, பாருங்க இங்க கரெக்டா வந்துட்டேன்… . ஆனா உங்க செல்ல கடைக்குட்டி குமரன் இங்கதானே பக்கத்துல இருக்கான்… ஆனா  இன்னும் வரலையே…! அவன்கிட்டயும் இப்புடி  கேள்வி கேட்பீங்களா இல்லதானே….?”                  

      என்று தம்பியைப் போட்டுக் கொடுக்கவும்…., ​கோபம் தலைக்கேறிய சாரதா மகளின் காதைத் திருகியபடியே,    

   “அவனும் வரட்டும்… அவனுக்கும் இருக்கு கச்சேரி…!”      

  என்றவரிடம்  உறுதியான குரலில் வருணி,           ​

“அப்ப அவனுக்கு மட்டும் தான் தண்டனையா….?,  அவன் மனைவி யாழினிக்கு, அவங்க பொண்ணு ஜோவிகாவுக்கு …?”       

என்று  சிரித்துக்கொண்டே அவ கேட்கவும்… சரியாக அதே விநாடி,அந்த பார்ட்டி ஹாலின் பிரதானக் கதவு விலக, உள்ளே வந்து சேர்ந்தனர் குமரனும் யாழினியும், அவர்களுடன் துள்ளிக்குதித்து வந்த குட்டி ஜோவிகாவும்…! இங்கேயும் அவர்கள உள்ளே நுழைய, குமரனும் யாழினியும் சற்று முந்திய தாமதத்திற்கு உடனடியாக மன்னிப்பு கேட்டவாறே வந்து நின்றனர்….      

        ஆனால், அவர்களின் அந்தப் பேச்சைக் கேட்கும் நிலையில் சாரதா இல்லை, ஆதலால் அவர் முற்றிலும் வாயடைத்துப்போய் நின்றிருக்கவும்….​அதை அருகில் இருந்து கவனித்த வருணி, தன் தாயைப் பார்த்து கண்கள் மூலமான குறும்பான ஜாடையைச் செய்தவள்,        

‘ பார்த்தீங்களா மம்மி… நான் லேட்டா வந்தப்போ என்னய எப்புடி எல்லாம் கேள்வி கேட்டீங்க…., ஆனா இவங்க வந்ததும் எந்தக் கேள்வியும் கேட்காம அமைதியா இருக்கீங்களே ஞாயமா….?!’   

  என்பது போல அவளது பார்வை இருக்க…. மகளின் அந்தச் செய்கையைக் கவனித்த சாரதாவுக்குள் இன்னும் தவிப்பு அதிகரித்து,        

‘இவ வேற… என் மனநிலை என்னன்னு புரியாம இப்படி பண்றாளே…!’   

   என்று மனதுக்குள் நினைத்தபடியே, தன் கைகளைப் பிசைந்துகொண்டிருந்தவர், கவலையாக வேறு  நெற்றியைச் சுருக்கி வைத்திருக்க….,  மேலும், சாரதாவுக்கு அந்த ஏசியின் குளிர்காற்றிலும் வியர்த்து கொட்டியது….. அப்படி எதையோ  நினைத்துக்கொண்டு, தலை கவிழ்ந்தபடியே அவர் அமைதியாக இருந்ததைக் கவனித்துவிட்ட வருணியின் முகத்திலோ சட்டென்று அந்தச் குறும்பு மறைந்து ஒரு நிழல் கவ்விக் கொள்ளவும்…..  

     ​’என்ன இது… ?, அம்மாவுக்கு உண்மையாகவே ஏதோ பெரிய பிரச்சனை போலிருக்கே…! எதையோ நம்மிடம் சொல்ல யோசிக்கிறவங்க…அப்படியே சொல்லவும் தயங்குறாங்களோ..?.’    

என்று வருணிக்கு உள்ளுக்குள் லேசான அச்சமும் குழப்பமும் தோன்றியது…. ​அங்கே நிலவிய அந்த விசித்திரமான மௌனத்தைக் கண்டு குழம்பிய குமரனும்,

‘என்னவாக இருக்கும்…?,’

என்பது போல தன் அக்கா வருணியைப் பார்த்துக் கண்களாலேயே விசாரிக்கவும்….. அவனுக்குப் பின்னால் நின்றிருந்த யாழினியோ, குமரனின் பின்தோளைச் லேசாகச் சுரண்டி,    

“என்னங்க… உங்க அக்கா என்ன சொல்றா…?”      

என்று பதற்றமாகக் கேட்டவளிடம், குமரனோ குழப்பத்தோடு,  

     “தெரியலையே யாழினி … அக்கா அமைதியா பதில் சொல்லாம இருக்கா …?”     

    “அத விடுங்க  நாம பேசணும்னு நினைச்சத  சொல்லிடலாம முதல…” 

என்று  இவ்வாறு தம்பதியர்கள் அவர்களுக்குள்ளாக முணுமுணுக்கவும்…..      ​அங்கிருந்தவர்களின் அந்தத் தவிப்பையும் குழப்பத்தையும் கலைக்க நினைத்த வருணியோ, லேசாகத் தன் தோளைக் குலுக்கிக் கொண்டு,  

   ” மம்மி…. பாரின் ல இருந்த என்னையும்,  இதோ உங்களுக்கு எதிரே  இருக்குற அவனையும் அவன் குடும்பத்தையும் எதுக்கு  இங்கே  கூப்பிட்டீங்க…? ஐ மீன் எதுக்கு இங்க மீட்டிங் அரென்ஜ் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா நாங்க…?”      

என்று ஒரு சிறிய பொடி! வைத்துப் பேசினவளிடம், தளர்ந்த குரலிலே அதே சமயம் தீர்க்கமாக அம்மா சாரதா, அவர்களின் கைக் கடிக்காரத்தையும்,  கைப்பேசியையும் நொடிக்கு ஒருக்கா பார்த்தப்படியே,   

“இப்போ உங்களுக்கெல்லாம்  ஒரு சர்ப்ரைஸ் வரும் …. வந்ததும் அது சம்பந்தமாக பேசுறேன் ….”    

என்று சொல்லிய சாரதா ஒரு நடுத்தர வயதை உடைய கைம்பெண்!  …. மகள் வருணி  கல்யாண வயதை தாண்ட போகும் திருமணமாகாத அல்ல … அல்ல…. திருமணத்தை விரும்பாத பெண்!… மகன் குமரன்  மருமகள் யாழினி காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள்….

“ஓகோ அப்புடியா மம்மி…. நாங்க கூட இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் உங்க கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சோம்…”

“ஆமா ஆண்டி….”

என்று மகனும் மருமகளுமாக சேர்ந்து, ஒருமித்த குரலில் சொல்லவும்…. அவ்வாறே சாராதவும், வருணியும் ,

” சரி சொல்லுங்க …” என்றனர்…  

🫂 தோள் சாய்ந்திடும் தருணம் வரும்…   

 ♥️  என்ன சர்ப்ரைஸ் வரும்…?,

💛 என்ன சர்ப்ரைஸ் நியூஸ் மகனும் மருமகளும் சொல்லுவாங்க…? ,

பார்ப்போம் காய்ஸ்… இதிலும் உங்கள் நித்யாவுடன் பயணியுங்கள் பட்டூஸ்

🙏💛♥️🙏🫂

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!