Stories that touch hearts

Home  /  39. யுவஸ்ரீ (மலர்மாலை மயங்கியது மன்னவன் மார்பில்)  /  Chapter 4

CHAPTER 4

மலர்மாலை – 4

By Yuva Sri · October 9, 2026

0

மாதவி தன் தம்பியின் அறை கதவை தட்டினாள்,

ஈஷா கதவ தொறப்பா காலைல இருந்து நீ ரூமுக்குள்ளவே இருக்க, நானும் துர்காவும் இங்க தனியா இருக்கோம் எங்களை கொஞ்சமாவது நினைச்சு பார்த்தா,

இப்ப நீ கதவ தொறந்து தான் ஆகணும், உன்கிட்ட நான் பேசணும் பா என்று கதவைத் தட்டிக் கொண்டு இவள் பேசிக் கொண்டிருக்க,,

அக்கா ப்ளீஸ் கா என் மனசு இன்னும் சரி வரல நான் காலையில வரைக்கும் இப்படித்தான் இருக்க போறேன் என்ன டிஸ்டர்ப் பண்ணாதே என்றான்,

என்னப்பா பேசுற இன்னைக்கு உங்களுக்கு முதல் ராத்திரி நீ துர்கா கூட தான் இருக்கணும் என்று கதவுக்கு இந்த பக்கம் இருந்து மாதவி சொல்ல,

அதைக் கேட்டவுடன் அவன் மனது சுக்குநூறாய் உடைவது போல் தோன்றியது,,

கோவமும் ஒரு பக்கம்  வர,

வேகமாக வந்து கதவை திறந்தவன் தன் அக்காவை பார்த்தான்,

அதுவும் கோபமாக,

கோபமாக இருக்கும் தன் தம்பியை பார்த்து,

என்ன பா எதுக்கு நீ காலைல இருந்து கதவை திறக்காமல் இருந்த எங்களை என்ன நினைச்சுட்ட,

உன்னை நம்பி தானே நாங்க இருக்கோம் என்று  அழுவும் செய்தாள் மாதவி,

அக்கா என்ன நெனச்சிட்டு இருக்க அந்த பொண்ணுக்கும் எனக்கும் ஃபர்ஸ்ட் நைட்ட என்று அதிர்ச்சி அடைந்தவன் ,

ரொம்ப சின்ன பொண்ணுக்கா அவதான் ஏதோ புரியாம சொந்தக்காரங்க முன்னாடி ஏதேதோ பேசி,

என்னையும் எதையும் பேச முடியாமல் பண்ணி தாலி கட்டிக்கிட்டு வந்துட்டே,

ஆனா அதுவே என்னால ஜீரணிக்க முடியல கஷ்டத்தோட இருக்கேன்,

இந்த நேரத்துல இப்படி வந்து சொல்ற ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்க கா என்னால துர்கா கூட வாழ முடியாது அக்கா,

அவதான் சின்ன பொண்ணு அவளுக்கு நான் பட்ட கஷ்டம் தெரியாது,,

ஆனா உனக்கு தெரியும் இல்ல என் பக்கத்துல இருந்தே பார்த்தே இல்லை அப்படி இருக்கும் பொழுது நீ இப்படி கேட்கலாமா என்று கேட்டான்,

இப்ப என்னப்பா பண்ண முடியும் பழசை நினைச்சுகிட்டு இப்போ உனக்கு அமைந்திருக்கிற வாழ்க்கையை விட்டுடனும்னு சொல்றியா என்று மாதவி கேட்க,,

எனக்கு என்னக்கா வாழ்க்கை அமைந்து இருக்கு,, நம்ம துர்காவோட வாழ்க்கை தான் கேள்விக்குறியா இருக்கு அவ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னத்த சுகத்தை காணப் போறா,

ஏன் இப்படி பண்ணா அந்த மாப்பிள்ளை இல்லனா இன்னும் ஆயிரம் மாப்பிள்ளைகளை நான் தேடி கண்டுபிடிச்சு இருப்பேனே என்   அக்கா மகளுக்காக,

ஆன அவ இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவு எடுத்து என்னை இக்கட்டான சூழ்நிலையில் கூட்டிட்டு வந்து விட்டுட்டாளே கா என்றான்,,,

யாரும் யாரையும் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளல கரெக்ட்டான ஒரு விஷயம் நடந்திருக்கு சந்தோஷமான ஒரு விஷயம் நடந்திருக்கு அதுக்கு நீ சம்மதிச்சு தான் ஆகணும் என்று சொல்லிக் கொண்டே வந்தான் ஈசனின் நண்பன் ரகு,,,,

தன் நண்பன் வர தன் நண்பனை பார்த்தான் ஈசன்,,

வந்தவன் மாதவி இடம் அக்கா நீங்க போங்க நான் இவன்கிட்ட பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு,

தன் நண்பனை அறைக்குள் அழைத்து வந்து கதவை சாத்திக் கொண்டவன் அவனை அமர வைத்து அவன் பக்கத்தில் அமர்ந்த ரகு,

என்ன நெனச்சிட்டு இருக்கடா நீ,

உனக்கு ஒரு சூழ்நிலையில கல்யாணம் ஆயிடுச்சு ஆனா கல்யாணத்தை இப்ப என்ன பண்ணனும் என்று சொல்ற ,

உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்து இருக்கு அதுவும் உன் அக்கா பொண்ணு அந்த பொண்ண அப்படியே விட்டுடனும்னு சொல்றியா என்று கேட்டான்,

என்னால அந்த பொண்ணு கூட எப்படிடா வாழ முடியும் சின்ன வயசுல இருந்து நான் அந்த பொண்ண பார்த்து இருக்கேன்,

எனக்கு கல்யாணம் ஆகும் பொழுது நம்ம துர்காவுக்கு என்ன வயசு தெரியுமா என்றவன் தன் நண்பனை பார்க்க,,

இப்ப அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்ற,,,,இது கடவுள் போட்ட முடிச்சு அத ஒண்ணுமே பண்ண முடியாது,

இந்த நேரத்துல இதை நான் சொல்றது கஷ்டமா தான் இருக்கும் ஆனா சொல்லி தான் ஆகணும்,

உன்ன அவமான  படுத்திட்டு ஓடிப் போனாளே அவளை நினைச்சுட்டு இருக்க போறியா இல்ல உன்னையே நம்பி வந்திருக்கிற இந்த பொண்ணு கூட வாழ போறியா என்று கேட்டான்,

சத்தியமா நான் அவளை நினைச்சுட்டு இல்ல ஆனா அதே நேரம் இந்த பொண்ணு கூட வாழ முடியாது டா என்றான்,

ஏண்டா வாழ முடியாது, உன் அக்கா பொண்ணு உன்ன நல்லா புரிஞ்சிக்கவா , என்ன வயசு வித்தியாசம் இருக்கு தான் செய்யுது அதுக்காக என்ன பண்ண முடியும்,

இப்ப இருக்கிற காலகட்டத்தில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது ஈஷா,

புரிஞ்சுக்கடா நீ அவ கூட வாழ்க்கை எப்ப வேணா ஸ்டார்ட் பண்ணு ஆனா இன்னைக்கு இருந்து துர்கா ஊர் ரூம்ல தான் இருக்கணும் அதுதாண்டா நடைமுறை வாழ்க்கை என்றான்,

டேய் என் ஃப்ரெண்ட் உனக்கு எனக்கு ஒரே வயசு உன் பையன் என்ன படிக்கிறான் சொல்லு காலேஜ் போறான்,

இன்னும் ஒரு நாலஞ்சு வருஷத்துல அவனுக்கு நீ கல்யாணம் பண்ணுவ,,,,இப்போ எனக்கு குழந்தை இருந்தால் அப்படி தானடா, இந்த வயசுல நான் எப்படிடா அந்த பொண்ணு கூட வாழறது,

நீ வாழ வேண்டிய வயசுல வாழல இல்ல அதனால தான் காலம் கடந்த உன் மேல கடவுள் கருணை காட்டி இருக்காரு,

நீ 27 வயசுல வாழாத வாழ்க்கையை இன்னைக்கு 45 வயசுல உனக்கு கிடைச்சிருக்கு அதை நீ விட்டு விடாதே அதுதான் நான் சொல்லுவேன் என்றான்,

எனக்கு புரியுது டா நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுது ஆனா அவ ஏற்படுத்திட்டு போன அவமானம் என் மனசுல ஆறாத ரணமா இருக்கு,,,, இப்போ அது கூட இன்னொரு ரணமும் சேர்ந்துகிட்டு என்னை வதைத்தால் நான் என்ன பண்ணுவேன் என்றான்,

இப்படியே பேசிட்டு இருந்தா ஒன்னும் வேலைக்கு ஆகாது,

உனக்கும் துர்காவுக்கும் மனசு ஒத்து போற வரைக்கும் நீங்க ஒரு அறையில் இருங்கள் தனித்தனி அறையில இருக்கணும்னு இனிமே அவசியமில்லை உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு,

இந்த வயசுல தான் டா நிறைய பேர் முதல் கல்யாணமே பண்ணிக்கிறாங்க, நீ என்னவோ 45 வயசு பெரிய வயசு என்ற மாதிரி பேசிட்டு இருக்க,

அதெல்லாம் ஒன்னும் கிடையாது உனக்கு இப்பதான் நல்ல காலம் பிறந்து இருக்கு அதை பயன்படுத்திக்க என்றான் ரகு,

டேய் இப்ப என்ன சொல்ற அதுக்குன்னு இந்த சின்ன பொண்ணு கூட வாழ சொல்றியா என்ன,

அவ சின்ன பொண்ணுன்னு யாருடா சொன்னது அவ படிப்பு முடிச்சிட்டு நல்லா மெச்சூரிட்டியா இருக்கா, ஒரு இக்கட்டான நேரத்துல நல்ல முடிவு எடுத்து இருக்கா தெளிவான பொண்ணு,

அதுவும் இல்லாம அவங்க உன் அக்கா பொண்ணு உன்னை விட அவள யாரு நல்லா வச்சுக்க முடியும் யோசிச்சு பாரு நீ அவ கூட எப்ப வேணா வாழ்க்கையை தொடங்கு,,,

ஆனால் அதுவரைக்கும் அவ உன் ரூம்ல தான் இருக்கணும் சும்மா இந்த சீன் போடுற வேலை எல்லாம் வெச்சுகாதே,

எனக்கு காலைல ஒரு முக்கியமான வேலை இருந்தது அதனாலதான் அக்கா பொண்ணு தானே வந்து கூட அவளை சமாதானப்படுத்திக்கொள்ளலாம் என்று வெளியே போயிட்டேன், நான் போயிட்டு வரதுக்குள்ள இப்படி எல்லாம் நடந்து இருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது இந்த விஷயத்த கேட்டு,

ப்ளீஸ் டா இத்தனை நாளா அக்காவுக்கும் சரி எனக்கும் சரி எனக்கு ஒரு வாழ்க்கை இல்லாமல் இருக்கேன்னு ரொம்ப கஷ்டமா இருந்தது இப்ப அது கிடைச்சிருக்கு எங்களுக்கும் சந்தோஷம் கிடைச்சிருக்கு அது வேண்டாம் என்று விட்டு தள்ளிடாதடா ப்ளீஸ் டா உன் கைய காலா நினைச்சு கேட்கிறேன் என்று அவன் இரு கைகளையும் பிடித்துக் கொண்டான் ரகு,

தன் நண்பன் அவ்வாறு பேச அமைதியாக இருந்தான் ஈசன்,,

அவன் அமைதி, ரகுவிற்கு மனசுக்கு கொஞ்சம் நிம்மதி தந்தது ஏனென்றால் தான் சொன்னதுக்கு அவன் சம்மதித்து விட்டான் அதனால் தான் அமைதியாக இருக்கிறான் என்று நினைத்தவன்,

சரி போ போய் குளிச்சிட்டு கிளம்பி வெளிய வா சாப்பிட்டுவிட்டு அதுக்கப்புறம் ரூமுக்கு வருவ  அதுக்கப்புறம் துர்கா வருவ சரியா அந்த பொண்ணு மனசு கஷ்டப்படுற  மாதிரி எதுவுமே பேசாதே புரியுதா அவ உன் அக்கா பொண்ணு என்று சொன்ன ரகு போடா போ என்று அவனை எழுப்பி குளியல் அறைக்குள் தள்ளி விட்டான்,

அதன் பிறகு குளித்து முடித்து விட்டு வந்தவன் போய் சாப்பிட அமர,

ரகு ஈசன் இருவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்தனர் பிறகு, தன் நண்பனை கட்டிப்பிடித்து அவன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்த ரகு,

எங்களுக்கு டபுள் சந்தோஷமா இன்னைக்கே கூட நீ துர்கா கூட வாழ ஆரம்பித்தாலும் சந்தோசம் தான்,,

இல்ல இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று நினைத்தாலும் பரவாயில்லை ஆனா இன்னியோட உன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கு, உன் அழகான இதயத்துக்கு வேலை கிடைச்சிருக்கு டா அவ எத்தனை நாளா உன் அக்கா பொண்ணு இதுக்கு அப்புறம் உன் பொண்டாட்டியா அவளை பாரு அப்புறம் பாரு உன் வாழ்க்கை தேன் மாதிரி இனிக்கும் என்று சொல்லிவிட்டு,

சரி நான் கிளம்புறேன் என்றவன் விடை பெற்று சென்றான்,

அதே மாதிரி ஈசனும் அவன் அறைக்கு சென்றான்,

அவன் போன ஒரு பத்து நிமிடத்திற்கு அப்புறம் தன் மகளை தன் தம்பியின் அறைக்கு அனுப்பி வைத்தாள் மாதவி,,

கையில் பால் சொம்பு உடன்  தன் மாமாவின் அறைக்கு சென்றாள் துர்கா,,

தொடரும்😍

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!