ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான வீடு அந்த வீட்டை சுற்றியும் மதில் சுவர் எழுப்பப்பட்டு இருந்தது,,
இவ்ளோ பெரிய வீட்டுக்கு கேட்டு இல்லாமையா இருக்கும் இருந்தது அதற்கு காவலாக ஒரு காவலாளியும் இருந்தார்,,
கேட்டை திறந்து கொண்டு உள்ளே போனால் அவ்ளோ அழகாக இருந்தது அந்த வீட்டு சுற்றுபுறமும், வண்ண வண்ண பூச்செடிகள் அழகு மிகுந்த செடிகள் அழகு மிகுந்த மரங்கள் பார்ப்பதற்கு ஒரு பூங்காவை போல் காட்சி அளித்தது அந்த வீடு,,
அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்ட வீட்டுக்குள் தான் ஒரு பிரம்மாண்ட கார் நுழைந்தது,,,
உள்ளே வந்து கார் நின்றவுடன் காரில் இருந்து மணமக்களான ஈசன் துர்கா இருவரும் இறங்கினார்,,
அதே காரில் இருந்து இறங்கிய மாதவி வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் ஆரத்தி கலந்து எடுத்துட்டு வர சொல்ல,
அவளும் அவ்வாறே வந்தாள்,
அவள் வருவதை பார்த்த மாதவி நீயே ஆரத்தி எடும்மா என்று சொல்ல,,
அம்மா நானா என்று அவள் கேட்க,
நான் எப்படி எடுக்கறது நீதானே எடுக்கணும் நம்ம வீட்ல வேற யாரு இருக்கா சொந்தக்காரங்க எல்லாம் மண்டபத்தோடு போயிட்டாங்க,
நீ எடு கனகா என்று சொல்ல,
சரி என்றவள் வந்து இருவருக்கும் ஆரத்தி எடுத்து முடித்தாள் பிறகு இருவரும் உள்ளே சென்றனர்,,
இவர்கள் உள்ளே போய் உட்காருவதற்குள் இவள் போய் வெளியே ஆரத்தி தட்டை கொட்டி விட்டு வேகமாக வந்தவள் இருவருக்கும் பால் பழம் எடுத்துட்டு வந்து கொடுக்க,
அதை வாங்கிக்கொண்டு தன் மகளிடமும் தன் தம்பியிடமும் சென்றாள் மாதவி,
அவள் அவ்வாறு வர தன் அக்காவை பார்த்த ஈசன்,
அக்கா என்ன பண்ற எங்களுக்கு எப்படி கல்யாணம் நடந்தது,,
இந்த நேரத்துக்கு இதெல்லாம் தேவையா என்று அவன் கேட்க,
எப்படி நடந்தா என்ன கல்யாணம் நடந்ததில்ல அதனால இதெல்லாம் சம்பிரதாயம் வேணாம்னு சொல்ல கூடாது ஈசா,
அதனால மறக்காம வாங்கிக்கோ என்று அவன் கையில் பால் பழத்தை கொடுத்து நீ கொஞ்சம் குடிச்சிட்டு துர்காவுக்கு கொஞ்சம் கொடுப்பா என்று சொல்ல,💐
என்ன பண்றது வேற வழி இல்லையே இன்னைக்கு என்ன நாள்னு தெரியல இவ்வளவு மோசமா போகுது என்று மனதில் நினைத்துக் கொண்டே அந்த பாலை வாங்கி குடித்தவன் பக்கத்தில் இருந்த அவளுக்கும் கொடுத்தான் அவளை பார்க்காமலேயே,
அவளும் மறுக்காமல் வாங்கி குடித்தாள்,,
பிறகு பழத்தையும் பகிர்ந்து கொண்டனர்,
அதன் பிறகு தன் மகளை அழைத்துக் கொண்டு போய் பூஜை அறையில் விளக்கேற்ற வைத்த மாதவி,,
சரிமா நீ போய் உன் ரூம்ல ரெஸ்ட் எடு என்று சொல்ல,,
அதற்கு தன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா,,
அதற்கு மாதவி என்னடி அப்படி பாக்குற உன் ரூமுக்கு போ என்று சொல்ல,
எதுவும் சொல்லாமல் அவள் ரூமுக்கு சென்றாள்,
அதன் பிறகு ஈசனும் அவன் அறைக்கு வந்து வேகமாக தன் உடைகளை எல்லாம் கழட்டி எறிந்தவன்,
பிறகு வேறு உடையை அணிந்து கொண்டு அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தான்,
சுற்றி சுற்றி பார்த்தவனுக்கு அவனது முதல் மனைவி ஞாபகம் வந்தாள்,
அவள் ஞாபகம் வர அய்யோ கடவுளே என்னை ஏன் திரும்பவும் ஒரு நரகத்துக்குள்ள தள்ளிட்ட,
எனக்கு கல்யாண வாழ்க்கையே வேண்டாம் என்று தானே அவ என்ன விட்டு பிரிந்த பிறகு,
நான் கல்யாணமே பண்ணிக்காம இருந்தேன் திரும்பவும் என்ன ஒரு கல்யாணம் பந்தத்தில் இணைச்சுட்டியே,
அதுகூட என் கூட இணைக்கிறதுக்கு உனக்கு வேற ஆள் கிடைக்கலையா,,
நான் குழந்தையா பார்த்த அவளை என்கூட கல்யாணம் பண்ணி வச்சுடியே நான் எப்படி ஏத்துக்கவேன் அவ கூட இனிமே இணைந்து வாழணுமா அதை நினைச்சா கூட என் அங்கமெல்லாம் கொதிக்குதே,
ஐயோ கடவுளே ஏன் இப்படி பண்ண எனக்கு வசதியான வாழ்க்கை வெற்றிகரமான தொழில் போனா போன இடத்துல மரியாதை எல்லாம் கொடுத்த நீ என் வாழ்க்கையில மட்டும் ஏன் இவ்வளவு வேதனையும் என்னால இதை ஏத்துக்க முடியல,
அதுவும் துர்காவ எனக்கு மனைவியா என்னால ஏத்துக்கவே முடியல இப்ப எப்படி அவ கிட்ட சொல்லி புரிய வைத்து அவளை நான் பிரிவது என்று யோசித்துக் கொண்டே இருந்தவன் அப்படியே மெத்தையில் அமர்ந்தான்,,,
அமர்ந்திருந்தான் அமர்ந்திருந்தான் நேரங்கள் செல்ல செல்ல அப்படியே அதே இடத்தில் அமர்ந்திருந்தான்,
மாதவி இரண்டு மூன்று தடவை வந்து அவனைக் கூப்பிட்டு விட்டாள் சாப்பிடுவதற்காக தான்,
ஆனால் எனக்கு பிடிக்கல என்ன டிஸ்டர்ப் பண்ணாதே என்று சொல்லிவிட்டான்,
அதனால் மாதவியும் இவனை வற்புறுத்தாமல் சென்று விட்டாள்,
அது மட்டுமா அவனது கைபேசிகள் ஒலித்துக் கொண்டே இருந்தது,
எல்லாமே நண்பர்கள் தொழில் ரீதியான நண்பர்கள் பிசினஸ் பார்ட்னர்கள் கம்பெனில வேலை செய்ற மேனேஜர் சூப்பர்வைசர் என்று எல்லோருமே இவனுக்கு கால் பண்ணி இருக்க ஒரு காலையும் அட்டென்ட் பண்ணாமல் அப்படியே அமர்ந்திருந்தான்,,
ஏதோ வாழ்க்கையே வெறுத்து போனதும் போல் அவன் உணர்ந்தான் அவன் வாழ்க்கையில் கல்யாணமே இனி இல்லை என்று நிம்மதியாக இருந்தவனுக்கு ஆண்டவன் போட்ட முடிச்சு தான் துர்கா,,,,
நேரங்கள் சென்றது இரவு நேரம் வந்தது,,,
இங்கே துர்காவின் ஆறை ,,,🌷🌷
இங்க துர்கா முதலிரவுக்காக கிளம்பி கொண்டு இருந்தாள்,
அவளை கிளப்பிக் கொண்டிருந்தது பியூட்டி பார்லரில் இருந்து வந்த பெண்கள் தான்,,
இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி அவளை அழகாக கிளப்பிக் கொண்டிருந்தனர் கல்யாண ரிசப்ஷனுக்கு கூட இவளை இவ்ளோ அழகாக அலங்கரிக்கவில்லை ஆனால் இப்போது அலங்கரித்துக் கொண்டிருக்க அந்த நேரம் மாதவி வந்து,
இப்ப என்ன பண்றது அவன் கதவே தொறக்கல என்று சொல்ல,
அதைக் கேட்ட துர்கா,
அவ்வளவுதான் முடிந்ததா என்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அந்த பெண்களிடம் கேட்க,
எல்லாம் முடிஞ்சது மேடம் நாங்க கிளம்பறோம் என்று அவர்கள் எடுத்துட்டு வந்த பொருள் எல்லாத்தையும் எடுத்து வைத்தனர்,
சரி ஓகே நான் பணத்த ஆன்லைன்ல அனுப்பிறேன் எவ்ளோ என்று கேட்க,,
அவர்களும் எவ்வளவு பணம் என்று சொல்ல,
அதை அனுப்பி வைத்தவள் அவர்களையும் அனுப்பி வைத்துவிட்டு தன் அம்மாவை பார்த்தாள்,
மாதவியும் கைய பிசைந்து கொண்டு அவளை பார்க்க,
அம்மா , நான் என்ன பண்ண முடியும் காலையில கல்யாணம் ஏதோ சூழ்நிலையால் நடந்துடுச்சு, இந்த விஷயத்தை நான் ஏத்துக்கிட்டேன் ஏத்துக்கிட்டு அவர் கூட வாழ தயாரா தான் இருக்கேன்,
இதுக்கு அப்புறமும் அவர் ஏதாவது எடாகூடமா பண்ணா நான் ஒன்னும் பண்ண முடியாதுமா என்றாள்,
ஏண்டி உனக்கு என் தம்பிய புடிச்சிருக்கா ரொம்ப வயசானவன் ஆச்சே அதுதான் கேட்கிறேன் என்றாள்,
அம்மா ப்ளீஸ் இதுவரைக்கும் அவர் உன் தம்பி இதுக்கப்புறம் அவர் என் புருஷன்,,
என் புருஷன எப்படி எல்லாம் சொல்றது எனக்கு பிடிக்கல,
அவர் என்ன கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் அவர் என் மாமா என் அம்மாவோட தம்பி அப்படித்தான் நினைச்சிட்டு இருந்தேன்,
அவர் எப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ அவர் வயசு வித்தியாசம் அவர் அழகு எதுவுமே நான் பார்க்கல அவர் கூட வாழ நான் தயாரா இருக்கேன்,,
இப்ப நீ என்கிட்ட பேச வேண்டிய அவசியம் இல்ல,
நீ பேச வேண்டியது உன் தம்பி கிட்ட தான் என்ன பேசுவியோ எது பேசுவியோ எனக்கு தெரியாது நான் மாமாவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன் மாமாவுக்கு நான் தான் பொண்டாட்டி இதை நான் புரிஞ்சுகிட்டேன் ,
இதுக்கு அப்புறம் நீ உன் தம்பி கிட்ட பேசி புரிய வை,,,,
அப்படி புரிய வைத்து என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுகிறேன்,,
அப்புறம் என்கிட்ட பேசுவதை விட்டுவிட்டு உன் தம்பி கிட்ட போய் பேசு என்று சொல்லி தன் அம்மாவை அனுப்பி வைத்தாள் துர்கா,,
தொடரும்