Stories that touch hearts

Home  /  31. பிரபா அமுதன் (மலைச்சாரலாய் நீ! மருத நிலமாய் நான்!)  /  Chapter 1

CHAPTER 1

மலைச்சாரல் – 1

By Prabha Amuthan · October 7, 2026

0

மண்டபம் முழுவதும் நாதஸ்வரத்தின் மங்கள இசை ஒலித்துக் கொண்டிருந்தது.

முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, உறவினர்களின் பரபரப்பும் அதிகமாகிக் கொண்டிருந்தது.

“பொண்ணை அழைச்சிட்டு வாங்க…” என்று ஐயர் சொல்ல,

மணமேடைக்கு அருகில் நின்றிருந்த பெண்கள் கூட்டம் சட்டென்று நகர்ந்தது.

அந்தக் கூட்டத்தின் நடுவே மெதுவாக நடந்து வந்தாள் மணப்பெண்.

மஞ்சள் நிற பட்டுப்புடவையில் சிவப்பு கரையோடும், தலை நிறைய சூட்டியிருந்த மல்லிகைப்பூவின் மணத்தோடும், கழுத்தில் மின்னிய நகைகளோடும் அவள் நடந்து வர

மணமேடையில் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்த வருணின் பார்வை முழுவதும் அவள் மீதே பதிந்தது.

அவள் அருகில் வந்தும் அவன் பார்வையை விலக்கவில்லை.

“வருண் பொண்ண மட்டும்  பாக்காத. பக்கத்துல உக்காந்து இருக்குற  ஐயரையும் பாரு”என்று அருகில் இருந்த குணா கேலி செய்ய,

சுற்றியிருந்தவர்கள் சிரித்தார்கள்.

வருணும் மெல்ல  சிரிக்க மணப்பெண்

மட்டும் வெட்கத்தில் தலையைக் குனிந்துகொண்டாள்.

அவள் அவனுக்கு அருகில் வந்து அமர்ந்ததும், மல்லிகைப்பூவின் வாசனையோடு அவளுடைய உடலின் பரிசமும் கலந்து அவனைத் திணறடிக்க தொடங்கியது.

இத்தனை கூட்டத்தின் நடுவிலும் அவனுக்கு மட்டும் அந்த இடம்  பெரும் அவஸ்தையை கொடுத்தது.

“மாப்பிள்ளை, மாலை போடுங்க…”என்று

ஐயரின் குரல் கேட்டதும் வருண் எழுந்தான். ஐயர்

அவன் கையில் மாலை கொடுக்க அதற்காகவே காத்திருந்தவன் போல மாலையை வேகமாக வாங்கினான்.

“ டேய் வருண், கொஞ்சம் பொறுமையா இரு. பொண்ணு ஓடிடாது” என்று  ராகவ் சொல்ல அதை எல்லாம் எங்கு காது கொடுத்து வாங்கினான் வருண்.

சில அடி இடைவெளியில் இருந்த மணப்பெண்ணை தன் அருகில் தன்னோடு இணைத்து விட வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே அவனிடம் காணப்பட்டது.

அடுத்த நொடி வருண் மாலையை அவள் கழுத்தில் அணிவித்தான். பிறகு பெண்ணவளும் மாலையை வருனுக்கு அணிவிக்க

அட்சதை தூவப்பட்டு, மேளமும் நாதஸ்வரமும் முழங்கியது.

சிறிது நேரத்தில் இருவரும் மீண்டும் மணமேடையில் அமர

ஐயர் மந்திரங்களை ஓத ஆரம்பித்தார்.

சுற்றியிருந்தவர்கள் அனைவருடைய கவனமும் சடங்கின் மீது இருக்க

வருணின் கவனம் மட்டும் அவள் மீதுதான்.

அவளுடைய விரல்கள் பதற்றத்தில் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டிருப்பதை அவன் கவனித்தான்.பின்பு

யாருக்கும் தெரியாமல் அவன் தன் கையை அவளருகே நகர்த்தி

அவளுடைய சுண்டுவிரலைத் தொட

அவள் சட்டென்று அவனைப் பார்த்தாள்.

வருண் எதுவும் நடக்காதது போல முன்னால் பார்த்துக்கொண்டிருக்க

அவளுடைய உதட்டில் மட்டும் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

“மாப்பிள்ள தாலி எடுத்துக்கோங்க”

என்ற ஐயரின் குரல் கேட்டதும்,

வருண் தாலியை கையில் எடுத்தான்.

இப்போது அந்த  மஞ்சள் நிறத் தாலி  வருணின்  கைகளில்

அவன் அவனைப் பார்க்க

அவளும் அவனை பார்த்தாள்.

“தாலிய  கட்டவா?” என்று வருண் கண்ணசைவில் கேட்க அவளும் சம்மதம் என்று லேசாக தலையை அசைக்க மங்கள வாத்தியங்கள் முழங்க  வருண் தாலியை அவளுடைய கழுத்தில் விட்டு அவள் பிறை நுதலில் முத்தத்தை பதிக்க போக

‘ஊதுங்கடா சங்கு,நான்

தண்டச்சோறு கிங்கு,

தமிழ் இஸ் மை மதர் டங்கு’

என்ற   பாடல் வருணின் செல்போனில் இருந்து ஒலிக்க, கனவு கலைந்து கண் விழித்தான் நம் நாயகன்  வருண்.

போனில் அழைப்பை ஏற்று காதில் வைக்க

“டேய் எருமை,

கதவை எவ்வளவு நேரம் தட்டறது

கதவை திறக்கிறதுக்கு இவ்வளவு நேரமாடா?” என கத்தினான்  ராகவ்

“வெளியிலயா நிக்கிற நில்லு  வர்றேன்!”

என கண்களை திறக்காமல் தூக்க கலக்கத்திலேயே  தட்டு தடுமாறி  கதவை திறந்தான் வருண்.

“என்ன பண்ணுன, கதவ திறக்க இவ்வளவு நேரமா, எவ்வளவு நேரமா கதவை தட்டிக்கிட்டே வெளியில நிக்கிறேன்னு தெரியுமா?”என ராகவ் கேட்க

“என் கனவை கலைச்சிட்டு, என்ன பண்னுனேன்னுமா கேக்குற?” என கோபமாய் கொந்தளித்தான் வருண்.

“எப்பவும் வர்ற கனவு காதலியா?” என ராகவ் நக்கலாய் வினவ,

“இந்த தடவை காதலி இல்லை! என் பொண்டாட்டி “ என்று வெட்கப்பட்டான் வருண்.

“அது சரி, வர வர  நீ ரொம்ப பண்ற! கூடிய சீக்கிரத்துல உன்னைய மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்க்க வேண்டியது வரும்னு  நினைக்கிறேன்” என்று  ராகவ் கூற

“என் பொண்டாட்டிய இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்குற நேரத்துல கதவைத் தட்டி கனவை கலைச்சிட்டு, என்னைய மெண்டல் ஆஸ்பத்திரியில சேர்க்கணும்னுமா சொல்ற?”  என்று கேட்டான் வருண்.

“சாரிடா மச்சான் நீ உம்மா கொடுத்து உன் பொண்டாட்டிய  அம்மாவாக்குற முயற்சிய கெடுத்துட்டேன் போல!” என்று சிரித்தான் ராகவ்.

ராகவ் சிரிப்பதை பார்க்க  முறைத்தான் வருண்.

“சாரி மச்சான் என்னை மன்னிச்சிரு!நல்ல சான்ச கெடுத்துட்டேன் போல,

அடுத்த தடவை முத்தம் கொடுக்கப் போகும்போது  என்கிட்ட சொல்லிரு நான் உனக்கு போன் பண்ண மாட்டேன்”  என ராகவ் சொல்ல சிரித்தான் வருண்.

“என்னவோ போ நேத்து நைட்ல இருந்து அந்த ஹச் ஆர் உயிர வாங்கிட்டான். ஏண்டா வேலைக்கு போறோம்னு இருக்கு! வேலைய முடிச்சிட்டு டயர்டா ரூமுக்கு நான் வந்தாலும் நீ அப்பப்ப இப்படி ஏதாவது காமெடி பண்றதுனால தான்  நான் சந்தோசமா இருக்கேன்” என்று கிண்டல் அடித்தான் ராகவ்.

“ஏற்கனவே என் கனவை கலைச்சிட்டேன்னு உன் மேல கடும் கோபத்துல இருக்கேன், காமெடி பண்றேன்னு வேற எகத்தாளம் பண்ற? ஏதாவது சொல்லி வாங்கி கட்டாத”

“ சரி அத விடு மச்சான்,உன் பொண்டாட்டியா வந்தவ யாருடா?

அந்த சுவீட்டியா, இல்ல ப்ரீத்தியா? அவளுகதான்  உன் பின்னால ஆறு மாசமா சுத்திகிட்டு இருக்காளுக!” என்று கூறினான் ராகவ்.

“ஸ்வீட்டியும் இல்ல ப்ரீத்தியும் இல்லை!இவ வேறடா! என்னோட அழகு தேவதை, கனவுல  என்னைய கொஞ்சிக் கொஞ்சி காதல் செய்ற காதல் தேவதை, என்னோட கனவு காதலி!” என்று சிலாகித்துக் கூறினான் வருண்.

“உனக்கு கனவுலையாவது காதலி பொண்டாட்டின்னு வந்து போராளுங்க,

எனக்கு அதுக்கு கூட வழி இல்லாம நைட் ஷிப்ட் போட்டுட்டாங்க!

சரி பகல்ல தூங்கும்போது யாராவது வர்றளுகளானு பார்த்தா,என் அத்தை மகள் பவளம் வந்து அத்தான்னு பல்ல காட்டி பயமுறுத்திரா!” என ராகவ் சொல்ல குலுங்கி குலுங்கி சிரித்தான் வருண்.

வருணும்,ராகவும் கல்லூரி நண்பர்கள்.கல்லூரியை முடித்துவிட்டு சென்னையில் உள்ள பிரபல தனியார் ஐ டி  கம்பெனியில்  பணிபுரிகின்றனர்.

கோயம்புத்தூர் பசங்களான இருவரும் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கி கொண்டிருக்கின்றார்கள்.

இருவரும் ஒன்றாக ஒரே டீமில் பணி புரிந்தனர். கடந்த ஒரு வாரமாக வருணுக்கு காலை ஷ்ப்டும் , ராகவுக்கு நைட் ஷிப்டும்  வேலை இருக்கிறது

சில நாட்களாகவே  வருணின் கனவில் பெண்ணொருத்தி வந்து, காதல் மொழிகளை பேசிக் கொண்டிருக்கிறாள்

கனவு காதலியின் காதல் மொழிகளை கேட்க, கனவிலே காத்துக்கொண்டிருக்கிறான் இந்தக் கள்வன்.

“மச்சான்,   உன் காதல் தேவதை பெயர் என்னடா?”என ராகவ் கேட்க

“தெரியலையே?”என பதில் கூறினான் வருண்.

“பெயரே  தெரியாமலேயே பொண்டாட்டி ஆக்கிடியா? சூப்பர் மச்சான்! இந்த கதையை வெளியில சொல்லிடாத?உன்னை லூசுன்னு நினைச்சிட போறாங்க!” என கலாய்த்தான்  ராகவ்.

“என் காதலி என்னை தேடி சீக்கிரத்துல நேரிலேயே வருவாடா!

அப்ப நீ பாப்ப”, என வருண் கூற

“டேய்  உனக்கு முத்திருச்சுன்னு நினைக்கிறேன்,

சீக்கிரத்தில் அந்த ஸ்வீட்டியவாது கல்யாணம் பண்ணு அப்பதான் நீ தப்பிக்க முடியும், நம்ம எல்லாம் 90ஸ் கிட்ஸ் மச்சான்  இப்படி கனவுலையாவது எவளாவது வந்தாதான் உண்டு

என்ன வாழ்க்கை, ஏன் கல்யாணம் இன்னும் பண்ணலைன்னு கேட்கிறவனுக்கு  பதில் சொல்ல முடியலடா” என சலித்துக் கொண்டான் ராகவ்.

“கவலப்படாத!! அதான் உங்க அத்தை மக, பவளம்  இருக்குறாளே, சொந்தத்திலேயே பொண்ண வச்சுக்கிட்டு ஏன்டா பொலம்புற”

“பவளம் பல்ல பாத்தாலே பயமா இருக்குடா!!..

அவ வேற,அத்தான் அத்தான்னு கூப்பிடும்போது  எல்லாம் நான்  செத்தேன் செத்தேன்னு, தோணுதுடா” என கூறிக்கொண்டே சிரித்தான் ராகவ்.

“ பல்லு சரியில்லைன்னா என்ன டென்டல் கிட்ட போய் சரி பண்ணிகிடலாம்”

“டென்டல் கிட்ட கூட்டிட்டு போனால் டென்டலையும் மெண்டல் ஆக்கிருவாடா, என் அத்தை பெத்த  முத்து மக பவளம்”

“ அது சரி, குடும்பத்தோட ஒரு முடிவுல தான் இருக்கீங்க போல!” எனச் சிரித்து விட்டு,

“சரி மச்சான்,   நான் போய் குளிச்சிட்டு வாரேன், நீ சாப்பாட சமைச்சு வை,

வேலைக்கு போக டைம் ஆச்சு, லேட்டா போனா அந்த ஹெச் ஆர் திட்டுவான்” என சொல்லிக்கொண்டே குளியல் அறையில் புகுந்து விட்டான் வருண்.

பிளாக் கலர் ஃபார்மல் ஷர்ட், ஒயிட்  கலர் பேண்ட், டக்கின் பண்ணி, தன் தலை தேசத்தை ஜெல்லை கொண்டு நீவினான் . ஆறடிக்கும் சற்று குறைவான உயரத்தோடு, பெண்களை வசீகரிக்கும் மாய கண்ணனாக, செதுக்கி வைத்த சிலை போன்ற உடலமைப்போடு, அம்சமாக ரெடியாகினான் வருண்.

ராகவ் உப்புமா கிண்டி வைக்க, இருவரும் அதை சாப்பிட்டுவிட்டு, வருண் தனது புல்லட்டை எடுத்துக்கொண்டு ஐடி நிறுவனத்திற்கு கிளம்பினான்.

தன் காதல் தேவதையின் முகம், எந்த பெண்ணின் முகத்தை யாவது ஒத்திருக்கிறதா?என்று சாலையில் செல்லும் பெண்களை பார்த்துக் கொண்டே வாகனத்தை ஓட்டினான்.

அவன் பார்வை படுவதற்காக ஏங்கும் பெண்கள் அவன் அலுவலகத்தில் அதிகம், கனவு காதலியை தவிர   எப்பேர்பட்ட அழகிகளாக இருந்தாலும்  பார்க்க மாட்டேன் என பிடிவாதமாய் இருக்கிறான் நம் நாயகன்!!

கனவில் வரும் தேவதை அவனுக்கு நிஜத்தில் வந்து தரிசனத்தை கொடுப்பாளா??.. அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!