Stories that touch hearts

Home  /  33. நித்யா சபரி (இது மங்கலத்தின் மறுமணம்)  /  Chapter 1

CHAPTER 1

“இது மங்கலத்தின் மறுமணம்♥️💛…!!!”

By மோ.நித்யா சபரி · October 1, 2026

1

அத்தியாயம்-1

“ஏய் திமிங்கலம், எழுந்திருடி! போ… போயி டீ போடுடி!” என்றதும்,

   “சரிங்க…”

என்று அரக்கப்பரக்க எழுந்தாள் மங்கலம்…..      களைந்த முடியை அள்ளி முடிந்து கொண்டை போட்டுவிட்டு, பாத்ரூமுக்குள் சென்று முகம் கழுவி வரவும்…… நேராகச் சமையலறைப் பக்கமாகப் போகிறவளிடம்,     

 

“ஏன்டி இவ்ளோ நேரம்…?, அப்படியே இந்த முகரைக்கட்டையில் என்ன இருக்குன்னு இவ்ளோ நேரம்?… போடி சீக்கிரம்!…. டீயை போட்டு எடுத்து வா….. அதுல ஏலக்காயை நல்லா தட்டிப் போடுடி….. சர்க்கரை தூக்கலாகப் போடு….. எல்லாம் சரியா போட்டு எடுத்துட்டு வா டி…… ஏதாவது சொதப்புச்சு… மூஞ்சியில ஊத்திடுவேன் பாத்துக்கோ….!”       

என்று கணவன் மாணிக்கம் மிரட்டவும் …. அதை ஏற்கனவே அனுபவித்தவளின் கைகள் நடுங்கி….!, அந்த நடுக்கத்துடனே மங்கலம் டீயைத் தயார்  செய்யவும்…. அதைத் தன் மூக்குக் கண்ணாடி வழியே பார்த்த கணவன்,    

    ‘ஆகா… பயப்படுறா….! அந்தப் பயம் இருக்கட்டும்…’   

  என நினைத்தவன், அப்படியே தான் படிக்கும் நியூஸ் பேப்பரில் மூழ்கவும்…..அவளும் சுடச்சுட ஆவி பறக்க டீயைப் போட்டு வந்து கொடுக்க…., அதை வாங்கி ஒரு வாய் பருகியவன், புகழ்வதற்காக வாய் திறந்தது போல,      

“நான் சொன்னதெல்லாம் டீயில் சரியா போட்டிருக்கியே…”  

“ஆமாங்க”         

என்றவளின்,  முகத்தில் அந்தச் சூடான டீயை அப்படியே கணவன் மாணிக்கம் ஊற்ற  முயற்ச்சிக்கவும்… ஏற்கனவே, அவளுக்கு  அதற்கான அனுபவம் பல தடவை  முகத்தில் அந்த டீ!  பட்டிருந்தமையால் இருந்ததால் , மங்கலம் இம்முறை முகத்தை தன் புடவையின்  முந்தானையை வைத்து மறைத்துக்கொண்டு தப்பித்தாள்….      

       “போ… போய் வேற டீ போட்டு எடுத்துட்டு வா டி…..! இந்த டீ  பாலா இருக்கு…., தண்ணியா போட்டு எடுத்துட்டு வா டி….”    

என்று சொன்னதும், என்னத்தான் அவ புடவையின் முந்தானையால் முகத்தை மறைத்திருந்தாலும்….. , அதையும் மீறி….. அவ  முகத்தில் சிலத் துளிகள் தெரித்த  டீயின் சூட்டைப் பொறுக்க முடியாமல் மங்கலம்  துடிக்கவும்…. அவ கத்தியபடியே,

“சரிங்க…!!!”

என்றவள்……மேலும்,     

   “நேற்று தானுங்க பால் சேர்த்து டீ போடு…., டீ மொட்டத் தண்ணியா கழனித் தண்ணி போல இருக்குன்னு சொல்லி என் மூஞ்சில ஊத்துனீங்க…” .

     “நானா சொன்னேன்….? இல்லையே… போ….., போய் டீ போடு டி! கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு, ஒரு டீ கூட போடத் தெரியல முட்டாள்…”        

என்று மங்கலத்திடம்  அவ கணவன் மழுப்பி! கடிந்து கொள்ள….இதேபோலத்தான் அவள் செய்யும் சமையலையும் குறை சொல்வான்…. சில சமயம் அவள் செய்யும் சமையலில்,     

  “சாம்பார் ருசி இல்ல….,காய்களை சின்னதா  வெட்டு….  தோசை வட்டமாக வரல…. எண்ணெய் ஊத்து… எண்ணெய் ஊத்தாதே….. , முறுகலா வரல….. தோசை வேணாம் இட்லி ….. இட்லியே திரும்ப திரும்ப செய்யாத…. அத செய் இத செய்யாத …. இத செய் அத செய்யாத…. ஏன்டி கல்யாணமாகி எத்தன வருஷம் ஆகுது இன்னுமா எனக்கு புடிச்ச மாதுரி சமைக்க தெரியல …இத நான் இன்னைக்கு சமைக்க சொன்னேனா… ஏன்டி என்ட்ட என்ன சமைக்கனும்ன்னு  கேட்டு தான் சமைப்பியா ….”       

”  வீடான வீட்டுல ஏன்டி விளக்கு பொறுத்தல…. மங்கலம்ன்னு பேர வச்சுக்கிடடு அமங்கலமா  போட்டு வச்சுருக்கா  வீட்ட .. எப்புடி வீட்டுக்கு மகாலட்சுமி வரும்….. ”      

    ” ஏன்டி …. விளக்கு பொறுத்துன…???,  அப்படியே. சாமி உனக்கு நல்லத செஞ்சிடும்ன்னு  நினைப்போ….???, படிச்ச புள்ள தானே நீ ….. அறிவிருக்கா….??? வீட்டையே பக்தி பரவசம்  ஆக்குறேன்னு  புகை மண்டலமா ஆக்கி வச்சுருக்க மூதேவி….”    

     “என்னடி டிரஸ் இது …. அய்யே…. கலட்டு கலட்டு…. வேற ஏதாவது என் ஸ்டேஸுக்கு தகுந்தாப்புல வாங்கி போடுடி….அதுக்கு காசு வேணும்னா  கேளு  தரவா மாட்டேன்னு சொன்னேன்….”  

   “என்னடி சும்மா நொய்யு நொய்யுன்னு  டிரஸ் வாங்கனும்னு  காசு கேட்குற…. இதென்ன உங்கப்பன் வீட்டு காசா…???”         

           என்றுவிட்டு, ஏதாவது இதே போலவும் தினமும் புதிது புதிதாக குறைகளைக் கண்டுபிடித்து ,   ஒருக் குறையேனும் சொல்லி மாணிக்கம் தன் மனைவி மங்கலத்தை திட்டி தீர்த்தும்   அடித்தும் உதைத்தான்….. அதோடு அவளது பெற்றோரைத் தன் வீட்டுக்கேக் கூப்பிட்டு வைத்து,  தன் கால் மேல் கால் போட்டு அவர்கள் முன்னாடி  உட்கார்ந்து,   

    “உங்க வளர்ப்பு சரியில்ல…ஏழைதானே நீங்க…., பணக்காரன் நான்….”     

  எனவும் வயதுக்கு மரியாதை இல்லாமல்  அகந்தையாக ஏச்சுப் பேச்சு பேசுபவன் அப்படியே,     

“எனக்கு இருக்கிற பணத்துக்கும், அழகுக்கும், படிப்புக்கும் இவ தகுந்தவளே இல்ல….”     

      எனவும் சொல்லுபவன் இதையேதான் தொடர்ந்து இன்றளவும் அவளின்  பெற்றவர்களை வீட்டுக்கு அழைத்து   குறை சொல்கிறான்……இத்தனைக்கும் மாணிக்கம் மங்கலத்தின் தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்க….. ஒரு ஆண்,ஒரு பெண் என  இருக்கின்றனர் …. இந்தக் குழந்தைகளை இவனிடம் பெற்றுக்கொள்ள அவள் பட்ட பாடு வாயில் சொல்லி மாளாது….. கர்ப்பிணி என்ற அக்கறை அவனிடம்  துளியும் இருக்காது….. கர்ப்பம் கலைந்து போனாலும்,    

    ” நீதான் காரணம்….”

என மங்கலத்தை மாணிக்கம்  போட்டு  அடிக்கவும் …..    அதிலும் ஒரு முறை  ஐந்து மாத! கர்ப்பத்தின் போது மங்கலத்திற்கு குழந்தை கலைந்துவிட்டது…… காரணம்,

‘ஊர்த் திருவிழா!’ எனவும் அழைப்பவனிடம்,     

“வேணாமுங்க பெட் ரெஸ்ட் எடுக்க சொன்னாருங்க  டாக்டரு…”     

        “அம்மா கூப்பிட்டாங்க வாடி….”      

    எனவும் மங்கலம்  சொல்லச் சொல்லக் கேட்காமல்,  கூட்டிப் போனான் மாணிக்கம்….. அங்கே பேச்சியம்மாள் அவன் அம்மா   வேறு,      

‘தன் மகள்கள் கஷ்டப்பட இவள் மட்டும் மகன் காசுல நல்லா இருக்காளே….’      

என இவளை வேலைகள் வாங்கி கொடுமைப்படுத்தவும்…., அதன் விளைவாக ஊரில் இருந்து வந்த இரண்டாவது நாளே…!!!!, அந்தக் குழந்தையும் மங்கலத்திற்கு கலைந்துவிட்டது…. அதற்கும் அடி, உதை, திட்டு,

     ” நீ எனக்கு மங்கலம் இல்ல…. அமங்கலம் நீ…. திமிங்கலம் நீ….”     

என  அசிங்கப்படுத்துவது எனத்தொடர்ந்து  மாணிக்கம் குறைச் சொல்ல…… அப்படியே, தான்  இன்னொரு பொண்ணை  மறுமணமும் செய்துகொள்ளப் போவதாகவும் சொல்லி அவளை எந்நேரமும் பயமுறுத்துவான்……     அப்படியே தொடர்ந்து கணவன் மங்கலத்தை மிரட்டி வரவும்…. காலங்கள் தாறுமாறாக அதன் போக்கிலே  உருண்டோடின…. .

எப்படியோ கலப்போக்கிலே,  போராடி இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் மங்கலம்… அதன் விளைவாக அவள் உடல் பருமன் வேறு ஏறிவிட்டது….. ஏற்கனவே ‘திமிங்கலம்…!’ என்று மங்கலத்தை அழைப்பவனுக்கு இது இன்னும் வசதியாகப் போச்சு….            இப்படியே பதினெட்டு வருஷங்கள் ஓடிப்போச்சு…. மூத்தவன் பத்தாவது படிக்கிறான், இளையவள் நான்காவது படிக்கிறாள்….. ஆனாலும் இன்னும் கணவனின் அதே   பூஜைகள் தான்  மங்கலத்திற்கு கிடைக்கின்றன…..  

” ஏன்டி  என் புள்ளங்கள படி படின்னு  அதுகள டார்ச்சர் பண்ணுற….???, எனக்கு இருக்குற சொத்துக்கு   என் புள்ளங்க  மட்டுமல்ல அதுகளின் வாரிசுகளும் ஏழுதலைமுறைக்கும்  உக்காந்து சாப்பிடலாம்….”    

  ” ஏன்டி உன் புள்ளங்க மார்க்  குறைச்சு  எடுக்குது …. அதுகள படிக்க வச்சியா …? , ஏதாவது வழியுல அதுகள படிக்க வைக்க தான் முயற்சி பண்ணியா …??? , நீ அதுகளுக்காக என்னத்த தான்டி செஞ்சு  கிழிச்ச…???” 

‘இதற்கு ஒரு முடிவே இருக்காதா…???’       

          என மங்களம் தனக்குள்ளாகவும், ஆண்டவரிடமும் புலம்புவாள்…. அவளுக்கு இப்போதெல்லாம் சரியாக  தூக்கம் வருவதில்லை… அப்படியே, வந்தாலும், கனவிலும் இதே ஞாபகம் தான் வரும்….. திடுக்கிட்டு மூச்சு விட முடியாமல் அவள் எழுந்து அமர்ந்தாலும், அதைக் காணவும்…..,     

   “”ஃபிட்னஸ் இருந்தால் இந்தப் பிரச்சனை இருக்காது….”    

     என்பான். ஆனால், அவனுக்குமே தொப்பை இருப்பதை அவன் மறந்திருக்க….. அவனுக்கு நோய் வந்தால், அதற்கும் காரணம் இவள்தான்…., இவள் சமையலால்தான் என அவள் மேல் பழியைப் போட்டுத் திட்டவும்…. அவன் மனசாட்சி கூட சொல்ல்லியது, 

      ” அடேய்…. நீ சின்ன வயசுல குடியும்…. புகையும்…  கூம்மாளுமாக இருந்ததை மறந்துவிட்பாயா   டா…. அடேய் லூசு பயலே….!!! அதான் உன்னை  செக்கப் பண்ண டாக்டர் மனைவி என்கிற அடிப்படையில் உனக்கிருக்கும் வியாதியை எதனால் வந்ததுன்னு அவ கிட்ட சொல்லமாலா  இருப்பார் பாவத்த…..”     

    ஆனால் சொல்லும் மனசாட்சிக்காவது பயந்தானா  இல்லையே …..!!!,      எல்லாத்துக்கும் பதிலாக காலம் ஒருநாள்! எல்லாவற்றையும் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டது….        கர்மவினையின் பலனை அவன் அனுபவிக்க வேண்டுமல்லவா…?.., அதான்…… அவன் அடிக்கடி என்ன சொல்லுவான்… ‘மறுமணம்…!!!’, அதானே….? அதுவே அவனுக்குத் தண்டனை தரக் காத்திருக்கவும்…… மறுமணம் மங்களத்தின் வடிவில் நீதி கேட்கப் போகிறது…..!    

அன்றைய காலையும் அழகாய் விடிய….!!!,. அவளுக்கு முன்பாக எழுந்துகொள்வதுதானே அவனின் வழக்கம்….. ஏனெனில்,   

‘ ஏய் திமிங்கலம்…. என்னடி லேட்டா எழுந்திருக்கிற….????  நீ என்ன பெரிய மகாராணியோ..???..’    

     என அவளைக் குற்றம் சொல்வதற்காகவே அப்படி எழுபவன்…. ஆனால், அன்றோ அவனுக்கு முன்னே அவள் மங்கலம் எழுந்துவிட்டாள் ….!!!, அதை குறிப்பால் உணரவும்….., அவளைத் தேடிக்கொண்டு ….படுக்கையிலிருந்து எழுந்தவன் நேரே வீட்டின் நடு ஹாலுக்கு வரவும்…. அங்கே போடப்பட்டிருந்த சோபாவில், அஷ்டலட்சுமியாய்… ஒரு புது அவதாரம் எடுத்திருக்கும்  மங்கலம்! அதிலே  கம்பீரமாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு தைரியமாக  அமர்ந்திருப்பதை விழிவிரித்து திகைத்துப் பார்க்கிறவனை ….   

“ஹேய் மனி….. கம்….கம்….”

   ‘எதே ….. மாணிக்கமுங்குற என் பெயரை கூறு போட்டு கூப்பிடுறாளே…. எவ்ளோ திமிரு…..’

என்று கணவன் நினைக்கவும்…. கேள்வியாக புருவத்தை உயர்திதயவாறு அவளை நெருங்கினான்….

  💒 மறுமணமாகும்…..

♥️அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு பெண், தன் சுயமரியாதையை மீட்டெடுக்கும் பொருட்டு,  ‘அஷ்டலட்சுமியாய் அவதாரம்’ எடுத்திருக்க….!!! , இனி மாணிக்கத்திற்கு வரப்போகும் விளைவுகள்  என்னென்ன…???,எனவும், மாணிக்கத்திற்கு மங்கலம் எப்படிப் பாடம் புகட்டுவாள்..???, என்பதையும்  நோக்கித் தான் மிச்சக்கதை நகரும்…..

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!