• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 5.2

New member
Joined
Jan 15, 2026
Messages
12
5.2

நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்து செல்ல, அன்றைய தினம் ஞாயிற்று கிழமை. கொடியின் ஆபீஸ் விடுமுறை என்பதால், அவன் சற்று தாமதமாக கீழே இறங்கி வர, வீட்டு வாசலில் நின்று கொண்டு சுரேஷ் யாரிடமோ போனில் பேசிக்கொண்டு இருந்தவன் கொடியை பார்த்து கையசைத்தான்.
“எப்போ மச்சான் வந்த?”
"நேத்தே வர வேண்டியதுடா. வீட்டுல அவளுக்குக் கொஞ்சம் முடியல. அதான்" என்று தன் நிலைமையை சொன்னவனின் தோளில் தட்டி கொடுத்த கொடி, "சிஸ்டர்க்கு இப்போ எப்படி இருக்கு" என்று அன்பாக கேட்டான்.
"ஆங். அவ இப்போ OK தான். சரி நீ போய் டிபன் சாப்பிடு" என்று சொன்ன சுரேஷ் மீண்டும் வாசலை நோக்கி சென்றான்.
"ஏன் நீ எங்க போற?" என்று வினாவினான் கொடி.
"இன்னைக்கு என் தங்கச்சியை பொண்ணு பார்க்க வராங்கடா. அதான் நான் அவங்களுக்காக காத்து இருக்கேன்" என்று சிரித்த முகத்துடன் சொன்னான் சுரேஷ்.
"ஓ சரிடா. அப்போ பொண்ணு பார்க்கிற பார்மாலிட்டி முடியட்டும். நம்ம அப்புறமா சேர்ந்தே சாப்பிடலாம்" என்று கொடி சொன்ன நேரம் புரோக்கருடன் காரில் வந்த ரெண்டு பெண்களும், நடு வயதை எட்டிய தம்பத்தியனரையும் சுரேஷ் வீட்டுக்குள் அழைத்து வந்தான்.
"மாப்பிள்ள வீட்டுல இருந்து வந்துட்டாங்கடா. டேய் வேணு பாட்டிகிட்ட போய் அவங்க எல்லாம் வந்துட்டாங்கன்னு சொல்லு போ" என்று மகனை விரட்டிய சுரேஷ், வந்தவர்களை வரவேற்று வீட்டுக்குள் அழைத்து போக, கொடியும் அவர்களை பின் தொடர்ந்து உள்ளே சென்றான்.
“வாங்க” என்று பாட்டி அனைவரையும் வரவேற்க, புரோக்கர் பாட்டியை பார்த்து வணக்கம் வைத்தார்.
“எப்படி இருக்கீங்க?”
“நலம் தான்மா. நீங்க எப்படி இருக்கீங்க? சித்ரா பாப்பா எப்படி இருக்கு?” என்று பதிலுக்கு நலம் விசாரித்தார் புரோக்கர்.
“ம்... இருக்கா. ஆமா. மாப்பிள வரலையா?” எனக் கேட்டார்.
“இவங்க எல்லாம் மாப்பிளயோட குடும்பம். இவங்க பொண்ணை பார்த்துட்டு போய் சரின்னு சொல்லிட்டா அப்புறமா மாப்பிள தம்பி வந்து பாப்பாரு.”
“அது எப்படிங்க?” என்றான் சுரேஷ்.
“எப்படின்னா? இது என்ன கேள்வி? எங்க குடும்பத்துல எதுவா இருந்தாலும் நாங்க பார்த்து சரி சொன்னா போதும். எங்க வீட்டு பையன் அதுக்கு கட்டுப்படுவான்.” என்றனர் மாப்பிள்ளை வீட்டினர்.
“அது இல்லிங்க...”
“சுரேஷ் நீ சும்மா இருக்கியா?”
“பாட்டி நான் என்ன சொல்ல வர்றேன்னா...”
“நீ ஏதும் சொல்ல வேணாம். வேணு நீ போய் உன் அத்தையை அழைச்சிட்டு வா.” என்று பேரனை அனுப்பினார்.
“என்ன மச்சான் இது. மாப்பிள்ளையே இல்லாம இவங்க மட்டும் வந்து பொண்ணை பார்த்து என்ன பண்ண போறாங்க?” என்று கொடிவீரன் கேட்க,
“நம்ம சொன்னா இந்த கிழவி நம்மள மதிக்கவா போகுது. இரு என்ன நடக்குதுன்னு பாப்போம்.” என்றான் சுரேஷ்.

வேணு மகிழினி அறைக்குள் சென்றவன் போன வேகத்திலேயே வெளியே ஓடிவர, “என்ன டா. எங்க உன் அத்த?” என்று கேட்டார் பாட்டி.
“அத்த ரூம்ல இல்ல பாட்டி.”
“என்ன ரூம்ல இல்லையா. ஒருவேள மாடியில இருக்காளா?”
“அங்க இல்ல பாட்டி. நான் மாடியில இருந்து தானே வரேன். அவங்க அங்க இல்ல.” என்றான் கொடி.
“இன்னைக்கு இப்படி ஒரு விஷேசம் நடக்க போகுதுன்னு சித்ராவுக்கு தெரியும் தானே?” என்று கேட்டார் புரோக்கர்.
“அது...” என்று பாட்டி ஏதோ சொல்ல வருவதற்குள், கையில் புதிதாக இரண்டு மல்லி பூ செடிகளை வாங்கிக்கொண்டு, ஆட்டோவில் வந்து இறங்கிய மகிழினியை பார்த்து கோவம் கொண்டார் பாட்டி.
"என்னமா நீ. எங்க போன? மறுபடியும் எதுக்கு பூ செடியா வாங்கி அடுக்குற. சரி சரி வா. வந்து வந்தவங்களுக்கு எல்லாம் காபி கொடு” என்று பாட்டி சொல்ல. மகிழினி தன் கையில் இருந்த மல்லி பூச்செடியை அலுங்காமல் மேசை மேல் வைத்தவள் தன் பையில் இருந்து இயர் மெஷின்னை எடுத்து காதில் மாட்டினாள்.
“என்ன புரோக்கரே பொண்ணு விதவைன்னு தானே சொன்னிங்க. ஆனா இவங்களுக்கு காதும் கேக்காது போல?” வந்திருந்தவர்களில் ஒரு பெண்மணி கேட்க,
“அது வந்துமா... இவங்களுக்கு நடந்த விபத்துல தான்... இவங்க முதல் புருஷன் இறந்து...” என்று புரோக்கர் மகிழினியை பற்றிய விவரத்தை சொல்லும் முன்பு,
"மன்னிக்கணும் எனக்கு சம்மந்தம் இல்லாத ஆளுங்க என்னை பற்றிய விவரத்தை தெரிஞ்சிக்க நான் விரும்ப மாட்டேன்" என்று மகிழினி தெளிவாக பேசும் குரலை கேட்டு கொடி அவளை வினோதமாகப் பார்த்தான்.
“நாங்க என் தம்பிக்கு உன்னை பொண்ணு பார்க்க வந்து இருக்கோம்மா. எங்கள போய் சம்மந்தம் இல்லாத ஆளுங்கன்னு சொல்லுற?”
“மறுபடியும் மன்னிக்கணும். எனக்கு இந்த நிகழ்வுல சம்மந்தம் இல்ல. அதனால நீங்க கிளம்பலாம்” என்றாள் அழுத்தமாக.
“சித்ரா” என்றார் புரோக்கர்.
“வாங்க. நல்லா இருக்கிங்களா?” என்று அவரை நலம் விசாரித்தாள்.
“என்னமா நீ. உனக்கு மறுபடியும் ஒரு நல்லது நடக்கணும்னு தானே நாங்க ஆசைப்படுறோம். நீ இப்படிப் பேசினா எப்படிமா?”
அவர் சொல்லுவதைக் காதில் வாங்காது, “டீ காபி எதாவது கொண்டு வரவா?” என்றாள்.
பாட்டி, “சித்ரா” என்று அதட்ட,
“வேணு அத்தைக் கூட மாடிக்கு வரியா?” என்று மருமகனைக் கேட்க, அவன் சம்மதமாகத் தலையசைத்ததும்,
“பாப்பா பாட்டி சொல்றத கேளுடா.” என்றான் சுரேஷ்.
“எப்போ வந்திங்க நீங்க. அண்ணி பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்று அண்ணனிடம் சம்பந்தம் இல்லாது நலம் விசாரிக்க, அண்ணன் அவனோ பே என விழித்தான்.
“சித்ரா என் கோவத்தை அதிகமாக்கி பாக்காத” என்று பாட்டி சொல்ல,
“வேணு நீ வா நம்ம மாடிக்கு போகலாம்.” என்று சொன்ன மகிழினி. தன் காது மெஷினைக் கழட்டி பையில் வைத்தவள், மேசை மேல் இருந்த பூச்செடிகளை எடுத்து கொண்டு மாடிக்கு போக வேணுவும் தன் அத்தையுடன் சென்றான்.
“இன்னும் எதுக்கு இங்க நின்னுகிட்டு. வாங்க போகலாம். யோவ் புரோக்கரே எங்கள அழைச்சிட்டு வரதுக்கு முன்னாடி, பொண்ணுக்கு மறுமணத்துல சம்மதமான்னு எல்லாம் விசாரிக்க மாட்டியா? ஆளையும் அவனையும் பாரு. எல்லாம் வாங்க போகலாம்” என்று கத்திய நபர் அவருடன் வந்த அனைவரையும் அழைத்து கொண்டு மகிழினியின் வீட்டில் இருந்து வெளியேறினார்.
பாட்டி கோவமாக அருகில் இருந்த காபி கப்பை தள்ளி விட்டவர், அவரின் அறைக்கு செல்ல, சுரேஷ் கண்கள் கலங்கிய நிலையில் அந்த இடத்தை சுத்தம் செய்ததைப் பார்த்து கொடி மனம் வருந்தினான்.
“என்னடா ஏன் கண் கலங்குற?”
“என்னனு சொல்றது? எல்லாம் என் தங்கச்சி தலையெழுத்து. சரி நீ உக்காரு நான் டிபன் எடுத்து வைக்கிறேன்.” என்றான் சுரேஷ்.
“இல்ல மச்சான். நீ வா நம்ம வெளிய எங்காவது போயிட்டு வரலாம்.”
“ம்... இரு நான் மாடிக்கு போய் பாப்பாகிட்ட சொல்லிட்டு வரேன்.” என்று சுரேஷ் மாடிக்குச் செல்ல, கொடியும் பின் தொடர்ந்தான்.
மகிழினி, வேணுவுடன் மீண்டும் அதே பூ செடிகளின் நடுவில் நின்றுக்கொண்டு இருந்தாள்.
“வேணு” என்று சுரேஷ் மகனை அழைக்க,
“என்ன?” எனக் கேட்டான் அவன்.
“நீ கீழே போ. நான் உன் அத்தைக்கிட்ட பேசணும்.”
“அதெல்லாம் முடியாது. எதுவா இருந்தாலும் என் எதிர்ல பேசுங்க.”
“ஷப்பா சரி. நீ போய் அவளோட காது மெஷின்னை எடுத்துட்டு வா.
“நீங்க தூரமா நின்னு பேசுனா தான் என் அத்த காதுல விழாது. இவ்ளோ கிட்ட தானே நிக்குறிங்க. பேசுங்க. அதெல்லாம் கேக்கும்” என்றான் அங்கிருந்து நகராது.
“புள்ளையாடா நீ?” மகனின் மேல் எரிந்து விழ,
“என்னை பெத்த உங்களுக்கு தெரியாதா?” என்றான் பதிலுக்கு.
மகனை முறைத்து தங்கையிடம் திரும்பி, “பாப்பா” என்றான்.
மகிழினி. தன் அண்ணனை பார்த்து கடமைக்கென்று சிரித்தாள்.
“ஏன்மா இப்படி பண்ணுற? உன் நல்லதுக்கு தானே அண்ணன் சொல்லுறேன். இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்க போற? உனக்குன்னு ஒரு வாழ்கை வேணாமா?
“அண்ணா அண்ணிக்கு வாழைக்காய் மண்டி பண்ணி வச்சிருக்கேன். போகும் போது எடுத்துட்டு போ.”
“நான் என்ன பேசுறேன். நீ என்ன சொல்ற?”
“அவங்களுக்கு டெலிவரி டேட் எப்போ? பாவம் ரெண்டு பிள்ளைங்க வேற. அவங்கள நீ ஜாக்கிரதையா பார்த்துக்கோ.” என்றாள் தன் பாவத்தில் இருந்து மாறாது.
“பாப்பா” என்றவன் குரல் கெஞ்சலாக வந்தது.
“வேணும்னா மீதம் இருக்குற ரெண்டு பிள்ளைங்களை கூட இங்க அழைச்சிட்டு வந்து விடு. நான் பாத்துக்குறேன்.”
“ஏன்மா என்னை உயிரோட சாகடிக்கிற.”
“சரி அண்ணா. நான் பிரீயா இருக்குறதே இன்னைக்கு ஒரு நாள் தான். சோ நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்” என்று மகிழினி கீழே இறங்கி செல்ல முயல,
அவளை தடுத்த சுரேஷ், "நில்லு பாப்பா. இன்னும் எத்தனை நாளுக்கு தான் இறந்தவனை நினைத்து, நீ இப்படி உன்னோட வாழ்க்கையை அழிச்சிக்க போற? உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு.” என்று சுரேஷ் கோவமாகக் கத்தினான்.
சட்டென கண்கள் சிவந்து. ஆக்ரோஷமாக தன் ஆள் காட்டி விரலால் சுரேஷை கண்டிக்கும் விதமாக, "என் வீரா சாகல. இந்த செடியில பூக்குற ஒவ்வொரு மலரிலும் அவர் என்கூட தான் வாழ்ந்துகிட்டு இருக்காரு. இனி ஒரு முறை எனக்கு மறுமணம் பண்ணி வைக்கிறேன்னு கேனத்தனமா எதாவது பண்ணீங்க, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்று கோவமாக எச்சரித்தாள்.
அந்நிலையில் மகிழினியை பார்த்த கொடி இரண்டடி தள்ளி நிற்க, சுரேஷ் கண்களில் கண்ணீர் ததும்ப, மகிழினி யாரையும் பொறுப்படுத்தாமல் தன் அறைக்குள் சென்று, அவளுடைய கணவன் புகைப்படத்தை எடுத்து தன் இதயத்தோடு இணைத்துக் கொண்டாள்.
"உடலால் உங்க கூட வாழ எனக்குக் கொடுத்து வைக்கல. ஆனா, உணர்வால் நான் உங்க கூட வாழ ஆசைப்படுறேன். இதை ஏன் இவங்க புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க. மறுமணம் பண்ணிக்கோ, மறுமணம் பண்ணிக்கோனா, எப்படி வீரா என்னால உங்கள மறந்து வேற ஒரு ஆணை நினைக்க முடியும்? அப்படி பண்ணா நான் உங்க மீது கொண்ட காதலுக்கும், நீங்க என் மீது கொண்ட அன்புக்கும் துரோகம் பண்ணது போல இருக்காதா?”
“சாகும் தருவாயில் நீங்க என்னை பார்த்து, ஐ லவ் யூ மகிழ்னு சொன்ன வார்த்தை தான் என் செவியில் இன்று வரை ஒலிக்கிறது. அந்த வார்த்தையை தவிர, வேற எந்த அனாவசியமான சொற்களும் என் காதில் விழக்கூடாதுன்னு தான், நான் காது கேக்கும் கருவியை கூட உபயோக படுத்துவதில்லை. எனக்கு உங்களோட இந்த புகைப்படமும், நான் உங்கள் மீது கொண்ட காதலும் மட்டும் என்னை விட்டு அழியாமல் இருந்தால் போதும் வீரா. I💙U வீரா" என்று மனமுறுகி சொன்னாள்.
தன் காதல் கணவனை இன்றளவும் நேசிக்கும் மகிழினியின் வாழ்க்கையில், இவள் காதலுக்கு சமமா,க ஒருவன் தன் காதலை இவளுக்கு பரிசளிக்க காத்து இருக்கிறான் என்பதை வருங்காலமே உணர்த்தும்.

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top