- Thread Author
- #1
3.2
மொட்டை மாடியில் இருக்கும் ஒரு அறையை திறந்து, “இந்த ரூம்ல அட்டாச் பாத்ரூம் இருக்கு மச்சான். ஹாங்... சாப்பாடு எல்லாம் உனக்கு இஷ்டம்னா நீ இங்க தனியா குக் பண்ணிக்கோ” என்றான்.
“இல்ல மச்சான். நான் ஹோட்டல்ல பாத்துக்கிறேன். எனக்கு குக் பண்ணத் தெரியாது.”
“டேய்! அப்போ என் சிஸ்டர் கேட்டரிங் சர்வீஸ் தான் பண்ணுறா. அவளையே உனக்கும் சாப்பாடு தர சொல்லுறேன்.”
“ஐயோ அவங்களுக்கு ஏன்டா சிரமம்.”
“இல்ல மச்சான். அவ காலையில டிபன். மதியம் லஞ்ச். ஈவினிங் ஸ்நாக்ஸ் அண்ட் டீ. தென் டின்னர். இப்படி ஒரு IT கம்பெனிக்கு சாப்பாடு பண்ணி தருவா. அப்போ அதுல இருந்து உனக்கும் சாப்பாடு தர சொல்லுறேன்.”
“ம்... அவங்க அதுக்கு காசு வாங்கிக்கிற மாதிரி இருந்தா எனக்கு Ok தான்.”
“நீ பணம் தரலைனாலும் என் மவன் உன்கிட்ட வாங்கிடுவான். ஏன்னா அவன் தான் என் தங்கச்சிக்கு எல்லாமே.”
“எல்லாமேனா?” புரியாது கேட்டான் நண்பனிடம்.
“அவனுக்கு ஏழு வயசு தான்டா. ஆனா பயபுள்ள 7 ஊர் வாய் பேசுவான். சரியான ஏழரை. என் சிஸ்டர் பண்ற பிசினஸ் கணக்கு வழக்கு எல்லாம் இவன் தான் பாத்துப்பான்.”
“ஏழு வயசுல இவ்வளவு திறமையா? ஆச்சரியமா இருக்குடா” என்றான் கொடி.
“அவன்... அவங்க பாட்டி ரிவால்வர் ரீட்டா மாதிரி.”
“என்ன கீதாவா?”
“ஏன்டா பாவி. நான் எங்க அப்படி சொன்னேன். ரீ... ரீ... ரீட்டா.” என்று கத்திச் சொன்னான்.
“ஓ... இப்பப் புரியுதுடா.”
“சரி மச்சான். நீ குளிச்சிட்டு ரெடியா இரு. சாப்பிட்டுட்டு நானே உன்னை நீ வேலை பாக்க போற இடத்துக்கு அழைச்சிட்டு போறேன்.”
“ம்... சரிடா” என்று கொடி சொன்னதும், மாடியில் இருந்து சுரேஷ் கீழே இறங்கிச் செல்ல, தனக்கு தந்த அறையில் அவன் பையை வைத்த கொடி, அவன் அறையில் இருந்து வெளியே வந்தான். மொட்டை மாடியின் அழகை ரசிக்க, அங்கே அதிகப்படியான மல்லிகைச் செடிகள் இருப்பதை பார்த்தவன், அந்தப் பூக்களின் வாசத்தை நுகர்ந்தபடி புது ஊரின் அழகை மொட்டை மாடியில் நின்றபடி ரசித்து கொண்டு இருக்க, அதே சமயம் அவன் சட்டை பாக்கெட்டில் இருந்த செல் போன் மணி ஒலித்தது.
"சொல்லுங்க அம்மா நானே உங்களுக்குக் கால் பண்ணனும்னு நினைச்சேன்” என்று பேசியவன், மல்லி செடியில் பூத்த பூக்களினை ஒவொன்றாக பறித்து கீழே போட்டப்படி தன் அம்மாவிடம் பேச தொடங்கினான்.
"என்னப்பா புது வீடு எப்படி இருக்கு? அங்க இருக்குற மனுஷாளுங்க எல்லாம் நல்ல விதமா இருக்காங்களா? ஹாங் நான் உன் ஜாதகத்தையும், உன் அக்கா ஜாதகத்தையும் ஜோசியர்கிட்ட காட்டினேன்பா. உன் அக்காவுக்கு இந்த வருஷம் கண்டிப்பா கல்யாணம் முடிஞ்சிடுமாம். உனக்கும் கூட சீக்கிரம் கல்யாணம் முடியுமாம். ஹாங் அப்புறம் நீ வேலை பாக்குற இடத்துல உன்னை கொடின்னு எல்லாம் அறிமுக படுத்திக்காத. யாராவது உன் பெயர் என்னனு கேட்டா வீரான்னு சொல்லு" என்று நான்ஸ்டாப்பாக அம்மா பேசிய பேச்சை கேட்டு சிரித்தான்.
“ஏன்டா சிரிக்குற?” என்ற தாயின் அதட்டலில்,
“அம்மா உங்க ராசி பலன் பாக்குற வேலையை நீங்க எப்போ தான் நிறுத்த போறிங்களோ?” என்றான்.
"அதெல்லாம் உங்க ரெண்டு பேருக்கு கல்யாணம் முடிந்த கையோடு நிறுத்திடலாம். சரி நான் சொன்ன மாதிரி விளக்கு போட்டுட்டு தானே நீ இப்போ தங்க போற வீட்டுக்கு போன?" என்று கேட்டார்.
“இல்ல அம்மா. நான் கோவிலுக்கு போனேன் தான். ஆனா அங்க ஒரு குட்டி சாத்தான் என்னை விளக்கு போட விடல.”
"ஐயோ என்ன தம்பி இது? சரி நாளைக்கு விளக்கு போட்டுட்டு வேலைக்கு போ புரியுதா?"
“ம்... சரிம்மா.”
"சாப்பாடு எல்லாம் எப்படிப்பா?" என்று அடுத்த கேள்விக்குத் தாவினார்.
கொடி – என் நண்பனோட சிஸ்டர் தருவாங்க போல நம்ம பே பண்ணிடனும்.”
"சரிப்பா. உடம்ப பாத்துக்கோ. தினமும் நைட்டு எனக்கு போன் பண்ணு. பொன் பண்ண மறக்காத."
“ம்... சரிம்மா. அக்காவை கேட்டேன்னு சொல்லு. நான் நைட்டு அக்காவுக்குக் கால் பண்ணுறேன்.” என்று சொன்ன கொடிவீரன் அவனை அறியாமல் தன் அம்மாவிடம் பேசியப்படி, மொட்டை மாடியில் இருந்த மல்லி செடியில் பூத்த பூக்களை எல்லாம் கீழே பிச்சி போட்டுக்கொண்டு இருந்தான்.
அதே சமயம் மாடிக்கு ஏறி வந்த பெண், "ஐயோ என் உயிர். என்ன பண்ணுறீங்க நீங்க? யாரு நீங்க? ஏன் என் பூவை எல்லாம் சாகடிச்சீங்க?" என்று இவன் நெஞ்சை உருக்கும் குரலில், ஆதங்கத்துடன் இவன் கண் முன் வந்து நின்று இருந்தவள் நெற்றியில், சந்தன பொட்டும் சாம்பல் நிற சேலையில் கூட தேவதையை போல காட்சி தந்தாள். அவளின் கண்கள் மட்டும் பொலிவு இழந்த நிலையில் இருந்தன. இவன் கோவிலில் பார்த்த அதே மங்கை.
கொடி கிள்ளிப் போட்டப் பூக்களை எல்லாம் அள்ளி எடுத்துத் தன் இதயத்தோடு அணைத்து கொண்டவள் கண் எதிரில், கொடி வீரன் ஏதும் புரியாதவனாக நின்று இருந்தான்.
"யோவ் நீ எப்படியா எங்க வீட்டுல இருக்க? என்ன கோவில்ல என் அத்தையை சீண்டி பார்த்தது போதாதுன்னு, இப்போ வீட்டுக்கே வந்துட்டியா? ஆளையும் அவனையும் பாரு. யோவ் உன்னை தான்யா" என்று ஏழு வயது சிறுவன் கத்தும் சத்தம் கேட்டு சுரேஷ் மாடிக்கு ஓடி வந்தான்.
“என்ன என்ன சத்தம் இங்க? டேய் மச்சான் என்னடா?” என்று சுரேஷ் குழப்பத்துடன் கேள்வி கேக்க,
“இல்ல மச்சான். அது வந்து...” என்று கொடி வீரன் தன் எதிரில் நின்று இருந்த பெண், அவள் கையில் அள்ளி எடுத்த மலர்களை பார்த்து முகம் வாடி நிற்பதைக் கண்டான்.
“இல்லடா. இவங்க நான் அந்த மல்லி செடியை...” என்று கொடி நடந்ததை சொல்ல வருவதற்குள், சுரேஷ் என்ன நடந்து இருக்கும் என்று யூகித்து கொண்டவன்
“ஐயோ மச்சான்! நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். இதோ இங்க இருக்குற பூ செடிங்க இது மேல மட்டும் எக்காரணத்தை கொண்டும் நீ கை வச்சிடாத. அதோட உன் சாப்பாட்டுல என் பையன் உனக்கு விஷம் வச்சிடுவான். ஏன்னா என் தங்கச்சியின் உசுரே இந்த பூச்செடிங்க தான்” என்று சுரேஷ் சொல்ல, கொடி தன் எதிரில் நின்று மல்லி பூக்களை தன் இதயத்தோடு அணைத்து கொண்டு அந்த பூக்களுக்கு ஆறுதல் சொல்லும் அந்த பெண்ணை குழப்பதுடன் பார்த்தான்.
கொடியை விரல்களால் சுண்டி அழைத்த சிறுவன், "யோவ். உன்னை பார்த்தா அவ்வளவு நல்லவன் போல இல்லையே. யாருயா நீ?" என்று அந்த சிறுவன் கேட்டதும், சுரேஷ் அந்த சிறுவனின் வாயில் ஒரு குத்து விட்டான்.
“டேய் வாண்டு, இவன் என் நண்பன். இவனுக்கு இந்த ஊருல வேலை கிடைச்சு இருக்கு. இவன் இனிமே மாடியில இருக்குற ரூம்ல தான் தங்க போறான்” என்ற சுரேஷ் கொடியை பற்றி அந்த சிறுவனிடம் சொல்ல, கொடியோ. தன் எதிரில் பூக்களை பார்த்து வருந்தியப்படி நின்று இருந்த பெண்ணை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தான்.
"ஏன்யா தகப்பா. உன்னையே ஏதோ என் பாட்டி என் முகத்துக்காக பாவம் பார்த்து தான் இந்த வீட்டுக்குள்ள சேர்த்து இருக்காங்க. அப்படின்னு பார்த்தா நீயே வேஸ்ட் லக்கேஜ். இப்போ இதுல வேற உனக்கு ஏன் எக்ஸ்ட்ரா லக்கேஜ்" என்று அந்த சிறுவன் சொன்னதும் சுரேஷ் மீண்டும் அந்த சிறுவனை பார்த்து ஒரு குத்துவிட்டான்.
“மச்சான் இவன் தான் நான் பெத்த ஏழரை. பெயர் வேணு. ரொம்ப பேசுவான். ஆனா, இவன் வாயை அடைக்க எனக்கிட்ட ஒரு வழி இருக்கு. இதோ பாரு முருங்கை குச்சி. இத இவன் வாயில சொருகிட்டா போதும் பயபுள்ள கொஞ்ச நேரத்துக்கு வாயை திறக்க மாட்டான்.” என்று சுரேஷ் சொன்னப்படி தன் பாக்கெட்டில் இருந்த முருங்கை கீரை குச்சியை வேணு வாயில் திணித்தான்.
“சரி மச்சான். நான் இவனை தூக்கிகிட்டு கீழே போறேன். நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா. நம்ம நீ வேலை பாக்க போற இடத்தை போய் பார்த்துட்டு வந்துடுவோம்” என்று சொல்லிக்கொண்டே சுரேஷ் வேணுவை தூக்கிக்கொண்டு கீழே சென்றான்.
“ஏங்க சாரிங்க. நான் வேணும்னே இந்த பூவை எல்லாம் கிள்ளி கீழே போடல. ஏதோ தெரியாம தான்...” என்று கொடி மனம் வருந்தி அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேக்க,
அவளோ இவனை ஏறெடுத்து கூடப் பார்க்கவில்லை. அந்தப் பூக்களை எல்லாம் தன் சேலை முந்தானையில் முடிந்து வைத்து கொண்டவள், மாடியில் இருந்த ஒரு வாளி தண்ணீரை எடுத்து. மல்லிச் செடிகளுக்கு ஊற்றியப்படி அந்த இடத்தை அழகாக சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அவளின் செயலைப் பார்த்துக் கொண்டு இருந்த கொடி வீரனின் தோளை தட்டினான் சுரேஷ்.
"என்னடா. இன்னுமா நீ குளிக்க போகல. போ குளிச்சிட்டு வா" என்றான்.
"இவங்க?" என்று கொடி அந்த பெண்ணை சுட்டி காட்டி கேட்டதும்,
"நான் தான் சொன்னேனே. இவ என் தங்கச்சி. இவ பெயர்...”
Author - அதெல்லாம் இப்போ சொல்றதுக்கு இல்ல Next Part ல சொல்லுவோம் இப்போ நான் போய் முருங்கை கீரை பறிக்க, ஐயோ! இல்ல இல்ல உடைக்க போறேன்.
Bye.
Urs SK