• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 23

Joined
Jan 15, 2026
Messages
49
விவாதக் காதல்
விவாதம் – 23

“மச்சான் உன்ன பார்த்து எத்தன வருஷமாச்சுடா” என்றான் ஜீவா.

“ம் ஆமாடா. சரி நீ எப்படி இருக்க?” என்று கேட்டான் கொடிவீரன்.

“நலம் தான். சரி வா நம்ம அந்த பக்கம் போய் பேசுவோம். மீனா நீ உன் ப்ரண்ட் கூட பேசிட்டு அங்க வா நாங்க கோவில் நுழைவாயில பேசிகிட்டு இருக்கோம்” என்றான் ஜீவா.

“ம்... சரி மாமா.”

கொடிவீரனும், ஜீவாவும் தெப்பக்குளத்தில் இருந்து வேறு பக்கம் சென்றனர். வேணு மகிழினி மற்றும் மீனா இருக்கும் இடத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தான்.

“சித்ரா இப்படி உக்காரு” என்றதும் மகிழினி அமர, “அப்புறம் நீ என்ன பண்ணுற? எப்படி இருக்குற? ஏன் திடிர்னு வேலையில இருந்து நின்னுட்ட? உன்னை பார்க்க உன் வீட்டுக்கு வரலாம்னு பார்த்தேன். ஆனா, அப்படியே வாழ்கை ஓடுற ஓட்டத்துல கடந்து போய்ட்டே இருந்துட்டேன். சரி சொல்லு நீ என்ன பண்ணுற? ஏன் உன் முகம் எல்லாம் வாடி போய் இருக்கு?என்னடி எதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.

“என்னத்த சொல்ல சொல்ற வாழ்க்கையே மாறிடுச்சி. நர்ஸ்கு படிச்சி முடிச்சிட்டு நம்ம எல்லாம் ட்ரைனிங் பீரியட்ல இருந்தோம் இல்ல, அப்போவே பாட்டி எனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.”

“அதான் அப்போவே சொன்னியே. நீ வேலைக்கு வரது எல்லாம் உன் பாட்டிக்கு பிடிக்கலன்னு.”

“ம்... ஆமா அதனால தான் அவங்க சீக்கிரமா எனக்கு மாப்பிள்ள பாக்குற படலத்தை ஆரம்பிச்சாங்க. சீக்கிரமா நல்ல பைனையும் பார்த்து எனக்கு கட்டி வச்சாங்க. ஆனா, எனக்கு தான் அவர் கூட வாழ கொடுத்து வைக்கல.”

“கொடுத்து வைக்கலைனா. புரியல?” என்று மீனா புரியாதவளாக கேட்க, தன் திருமண வாழ்க்கையின் இழப்பை பற்றி சித்ரமகிழினி சொல்லி முடிக்க, மீனாவின் கண்கள் தானாக கலங்கியது

“ரொம்ப அழுதாச்சுடி. இனி அழ என் கண்ணுல கண்ணீர் இல்ல. அவரோட இழப்பு என்னை நட பிணமா மாத்திடுச்சி. யாருக்காக வாழனும், எதுக்காக உசுரோட இருக்கனும்? அந்த விபத்துல நானும் அவரோடவே போய் சேர்ந்து இருக்க கூடாதா? கல்யாணம் முடிந்த அதே நாளில் என்னை விட்டு போறதுக்கா, நாங்க ரெண்டு பேரும் பார்த்ததுமே நேசிக்க ஆரம்பிச்சோம். ஏன் என் வாழ்க்கையில இந்த கடவுள் வீரனை அனுப்பி வச்சி, என் அன்பை அவர் உணரும் முன்பே என்னை விட்டுட்டு போனாருன்னு, இப்படி ஏகப்பட்ட விடை தெரியாத கேள்வி என் மனசுல தினமும் தோன்றி தோன்றி மறைஞ்சிட்டு இருக்கு.”

“சாரிடி. எனக்கு இதெல்லாம் தெரியாது.” என்று வருத்தமாகச் சொன்னாள் மீனா.

“நீயேன் சாரி கேக்குற. எல்லாம் என் தலையெழுத்து.”

“நீ எவ்வளவு சுட்டித்தனமான பொண்ணு. உன்னோட சிரிப்பு சத்தத்தை கேட்டு தான், எத்தனையோ நாள் என் கவலைகளை மறந்து இருக்கேன். உனக்கு போய் ஏன்டி இப்படி ஒரு வாழ்கை?”

ப்ச்... அதெல்லாம் விடு. நீ இப்போ எங்க இருக்க. என்ன பண்ணுற? உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுதா” என்று தோழியின் வாழ்க்கை பற்றி கேட்டாள்.

“எனக்கும் ஜீவா மாமாவுக்கும் அடுத்த மாசம் கல்யாணம். இந்த கோவில்கு போய் விளக்கு போட்டுட்டு வாங்கன்னு அத்த சொன்னாங்க. அதான் நாங்க இந்த கோவிலுக்கு வந்தோம்.”

“அவரு உன்னோட அத்தை மகன் தானே?”

“ம்... ஆமா.”

“சூப்பர்டி. எங்க வேலை பார்க்கிற?” என்று மகிழினி கேட்க,

“நான் எங்க வீட்டு பக்கத்துல இருக்குற கிளினிக்ல தான் வொர்க் பண்ணுறேன். ஆமா நீ இப்போ என்ன பண்ணுற?”

“நான் என்னோட வீரன் பெயர்ல கேன்டீன் ரன் பண்ணுறேன்டி. சமையலுக்குள்ள புகுந்துட்டா பல விஷயங்கள் மறந்து போயிடுது. அதான் பாதி நேரம் கேன்டீன்லையே இருந்துடுவேன்.”

“உனக்கு இன்னொரு கல்யாணம் எல்லாம் பண்ணி வைக்க பாட்டி ஏற்பாடு பண்ணலையா?”

“அதெப்படி இருப்ப்பாங்க. அவங்க தினமும் சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க. ஆனா நான் தான் என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன்.”

“அப்போ காலத்துக்கும் இப்படியே இருக்கப்போறியா?”

“ஆமா.”

“என்ன ஓமா” என்று கோவமாகக் கேட்டாள் மீனா.

“சரி சரி என் கதையை விடு. ஆமா உன்னோட மாமா என்ன வொர்க் பண்ணுறாரு? கல்யாணத்துக்குப் பின்ன நீ எங்க இருப்ப? என்று பேச்சை மாற்றினாள் மகிழினி.

“அவரு வக்கீல்டி. கல்யாணத்துக்குப் பின்ன இங்கேயே செட்டில் ஆகணும்னு தான் பிளான். இன்னும் சரியா பிளான் பண்ணல.”

“நல்லது.”

“சரி உன்னோட நம்பர் தா” என்று மீனா கேட்கவும், மகிழினி நம்பர் கொடுக்க, “என்னடி இது லேண்ட்லைன் நம்பரா இருக்கு?” எனக் கேட்டாள்.

“ம்... ஆமா. நான் செல் போன் எல்லாம் யூஸ் பண்ணல.”

“நீ அமேசான் காட்டுல இருக்க வேண்டிய ஆளுடி” என்று மீனா கிண்டல் செய்தபடி, தன் தோழி மகிழினியிடம் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தாள்.

அவளை நோக்கி வந்த ஜீவா, "மீனு போகலாமா" என்று கேட்டதும்,

ஜீவாவின் அருகில் நின்று இருந்த கொடியை பார்த்த மீனா, "நீங்க உங்க ப்ரண்ட் கூட பேசிட்டிகங்களா" என்று கேட்க,

"ம்... பேசிட்டோம் உன் தோழி வீட்டு மாடியில தான் என் நண்பனும் ஸ்டே பண்ணிருக்கான்” என்றான் ஜீவா.

“வாவ் சூப்பர் மாமா. நம்ம கல்யாணத்துக்கு இவங்களுக்கு இங்கேயே பத்திரிக்கை கொடுத்துடலாமா?”

“ஒய் நாட்? பட் நான் பத்திரிக்கை கொண்டு வரலையே.”

“என்கிட்ட ஒன்னு இருக்கு. நான் அத சித்ராக்கு தந்துடுவேன். உங்க நண்பனுக்கு எப்படி?”

“இல்ல இல்லங்க என் போன் நம்பரை நான் இப்போ தான் ஜீவாகிட்ட கொடுத்தேன். அவன் எனக்கு வாட்சப்ல பத்திரிக்கை அனுப்பினாலே போதும். நான் கண்டிப்பா உங்க கல்யாணத்துக்கு வருவேன்.” என்றான் கொடிவீரன்.

“ஐயோ அதெல்லாம் மரியாதை இல்லிங்க மாமா நீ ஒன்னு பண்ணு இந்தா இந்த பத்திரிகையில நான் சித்ரா பெயர் எழுதுறேன். நீ உன் நண்பன் பெயர் எழுதிடு. இவங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல தானே இருக்காங்க. சோ, ரெண்டு பேருக்கும் பத்திரிக்கை கொடுத்த மாதிரி இருக்கும்.” என்றாள் மீனா.

“ஏங்க அதெல்லாம் வேணாம். நீங்க அவங்களுக்கு மட்டும் பத்திரிக்கை தாங்க.” என்று வேகமாக சொன்னான் கொடிவீரன்.

“அட இருங்க பாஸ். மாமா நீ என்ன வாயை பாத்துகிட்டு நிக்குற. ம் எழுது” என்று மீனா கண்டிப்புடன் சொன்னதும், ஜீவா அவன் பாக்கெட்டில் இருந்த எழுதுகோலை கொண்டு, தன் கல்யாண பத்திரிக்கையில் கொடி வீரன் என்ற பெயரை எழுதி மீனாவிடம் தந்ததும், மீனா அதே பத்திரிகையில் அவள் தோழி சித்ரமகிழினியின் பெயரை எழுதினாள்

“ம்... வா மாமா. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே இவங்களுக்கு கொடுக்கலாம். இந்தாங்க வாங்கிக்கோங்க” என்று ஜீவாவும் மீனாவும் அவர்களின் திருமண அழைப்பிதழை இவர்கள் முன் நீட்டியதும் கொடி வீரன் சங்கடத்துடன் மகிழினியை பார்த்தான்

"ம் சீக்கிரம் வாங்கிக்கோங்க" என்று மீனா அவசரப்படுத்த மகிழினியும், கொடியும் ஒருசேர பத்திரிகையை வாங்கிக்கொண்ட தருணம், எதிர்பாராத சமயத்தில் கோவில் மணி ஒலிக்கும் ஓசை கேட்டு, மகிழினி தலையை பிடித்துக்கொண்டு முகம் மாறினாள்

"என்னடி என்னாச்சு?" என்று மீனா கேட்டதும்

"என்னங்க மறுபடியும் தலை வலிக்குதா? வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம். நீங்க மாத்திரை எல்லாம் போடுறிங்களா, இல்லையா?" என்று கொடி உரிமையோடு மகிழினியை விசாரிக்க, மீனாவும், ஜீவாவும் கண்களால் ஜாடை காட்டியபடி சிரித்து கொண்டார்கள்.

"ஐயோ கத்தாதீங்க. வேணு காதுல விழப்போகுது. எனக்கு ஒன்னும் ஆகல” என்று கொடியை சமாதானம் செய்தாள் மகிழினி

"சரிடா மச்சான். நீங்க கண்டிப்பா எங்க கல்யாணத்துக்கு வந்துடனும். உன் அக்கா கல்யாணம் நல்லபடியா முடிந்ததும் நீ எனக்கு போன் பண்ணு. மீனா கிளம்பலாமா?" என்றான் ஜீவா.

“சரி மாமா. போகலாம். சித்ரா வரேன்டி. நீயும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும். ப்ரோ நீங்களும் தான்” என்று மீனா அன்புடன் சொன்னவள், ஜீவாவுடன் கோவிலில் இருந்து வெளியேற, தன் கையில் இருந்த பத்திரிக்கையை மகிழினி கொடியின் முன் நீட்டினாள்.
 
Joined
Jan 15, 2026
Messages
49
"நீங்களே இத வச்சிக்கோங்க. நான் அக்கா கல்யாணத்த முடிச்சிட்டு வந்து வாங்கிக்கிறேன்." என்றான் கொடிவீரன்.

“ம்...” என்றாள் அவள்.
“ஏங்க நீங்க மாத்திரை எல்லாம் Follow பண்ணுறீங்க இல்ல?”

“பண்ணுறேன் சார்.” என்று அமைதியாக பதிலளித்தாள்.

“சரி போகலாமா? இல்ல இன்னும் கொஞ்ச நேரம் நீங்க இங்க தான் இருக்க போறிங்களா?”

“இல்ல இல்ல போகலாம்.”

“சரி நான் போய் ஆட்டோ அழைச்சிட்டு வரேன்” என்று நகர,

“எதுக்கு?” என்றாள் புரியாது.

“நீங்க தான் பைக்ல வரமாட்டீங்களே. அதான் ஆட்டோ கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்.”

“நீங்க வேணுவை அழைச்சிட்டு போங்க. நான் நடந்தே வீட்டுக்கு வந்துடுவேன்.”

"ம் சரி பார்த்து வாங்க" என்றவன் வேணுவை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றான்

இரவு 8 மணி அளவில் தனக்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அவன் அறையில் இருந்து கீழே இறங்கிய கொடிக்காக, வாசலில் ஆட்டோ காத்து இருந்தது.

"என்ன சார் கிளிப்பிட்டீங்களா?" என்று வேணு கேட்டதும்...

"ம்... ஆமா டா 9 மணிக்கு பஸ். ஆமா பாட்டி எங்க?” என்று கேட்டுக்கொண்டே கொடி வீட்டுக்குள் நுழைய,

"வாப்பா தம்பி. கிளம்பியாச்சு போல" என்று பாட்டி கேட்க,.

"ம்... ஆமா பாட்டி கிளம்பிட்டேன். நான் போய்ட்டு வரேன். நான் போனதும் உங்க போன்கு கால் பண்ணுறேன். நீங்க உடம்ப பாத்துக்கோங்க. கண்டிப்பா நீங்க அக்கா கல்யாணத்துக்கு வரணும். நான் உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன்" என்றவன் கண்கள் மகிழினியை தேடுவதை அறிந்து கொண்ட பாட்டி,

"தம்பி கூடுமானவரை நாங்க கல்யாணத்துக்கு வர முயற்சி பண்ணுறோம். நீ நல்ல விதமா போய்ட்டு வா. ஹான் இந்தாப்பா சித்ரா உன்கிட்ட இத தர சொன்னா. இதுல உனக்கு பஸ்ல போகும் போது பசிச்சா சாப்பிட நைட்டுக்கு தேவையான டிபன் இருக்கு” என்று சிரித்த முகத்துடன் சொன்னார்.

"ம் சரி பாட்டி” என்று சொன்னவன் மகிழினியின் அறையை எட்டிப்பார்க்க, அவளின் அறை கதவு மூடி இருந்ததை கண்டு முகம் வாடினான்.

"சரி பாட்டி நான் கிளம்புறேன்" என்றவன் வாசலை நோக்கி செல்ல,

"தம்பி” என்று அவனை அழைத்து கொடியின் நெற்றியில் திருநீர் வைத்தார்.

கொடி மரியாதையுடன் ஆசியை ஏற்றுக் கொண்டு, "பாட்டி உங்க பேத்தி எங்க? உள்ள இருக்காங்களா, கொஞ்சம் கூப்பிடுறிங்களா? அவங்ககிட்டயும் சொல்லிட்டு கிளம்புறேன்" என்று கொடி தயக்கத்துடன் கேட்டான்.

"இல்லபா. அவளுக்கு கேன்டீன்ல வேல இருக்குன்னு அங்க போயிட்டா. அவ வந்தா நீ சொல்லிட்டு போனன்னு நான் சொல்லிடுறேன். உனக்கு நேரம் ஆகுது பாரு. நீ கிளம்பு" என்று பாட்டி சொன்ன பொய்யை நம்பி கொடியும் சம்மதமாய் தலையசைத்து, ஆட்டோவில் ஏறி அமர, வேணு டாட்டா காட்டி வழி அனுப்பி வைத்தான்.

வேணு வீட்டுக்குள் வந்ததும், பாட்டி தன் வீட்டு வாசல் கதவை தாழிட்டவர், மகிழினி இருக்கும் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, அங்கே கட்டிலின் மேல் அமர்ந்து இயல்பாக புத்தகத்தை படித்து கொண்டு இருந்தாள் மகிழினி.

"என்ன சித்ரா இதெல்லாம்? அந்த தம்பி ஊருக்கு போகும்போது, நல்ல விதமா வழி அனுப்பி வைக்காம, ஏன் இப்படி ரூமுக்குள்ள வந்து மறைஞ்சு உக்காந்துக்கிட்டு, நீ இங்க இல்லைன்னு சொல்ல சொன்ன" என்று கேட்டார்.

"பாட்டி அவரு அவங்க அக்கா கல்யாணத்துக்காக போறாரு. நானே ஒரு ராசி இல்லாத ஆளு. என் முகத்த பார்த்துட்டு போய் அவருக்கு எதாவது பிரச்சனை வந்தா, அப்புறம் என்னால அந்த குற்ற உணர்ச்சில இருந்து வெளிய வரவே முடியாது. அதான் நான் கேன்டீன்கு போயிட்டேன்னு சொல்ல சொன்னேன்."

"இதெல்லாம் ஒரு காரணமா? ஏம்மா நீ ராசி இல்லாதவன்னு யாரு சொன்னாங்க?"

"யாரு சொல்லணும்? அதான் எனக்கே தெரியுமே" என்றாள்.

“இருந்தாலும் நீ பண்ணுறது ரொம்ப தப்புமா. பாவம் அந்தப் பையன், எவ்ளோ கண்ணியத்தோடு உன்கிட்ட நட்புடன் பழகுது அந்த புள்ள .ஆனா நீ ஏன் இப்படி பண்ணுற?”

“பாட்டி இதெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியாது. அவரு நல்ல விஷயத்துக்கு போறாரு. நல்ல விதமா கிளம்புட்டுமே. இப்போ என்னாச்சுன்னு நீங்க இவ்வளவு கோவப்படுறீங்க?”

“சரி நீ என்னமோ பண்ணு. வா வந்து முதல்ல சாப்பிடு.” என்றார்.

“ஆமா. டிபன் பை அவர்கிட்ட தந்துட்டீங்களா?”

“ம் ஆச்சு ஆச்சு. சரி வா சாப்பிடலாம்.”

“நீங்களும் வேணுவும் சாப்பிடுங்க. நான் போய் செடிக்கு எல்லாம் தண்ணி ஊத்திட்டு வந்து சாப்பிடுறேன்” என்றவள், தண்ணீர் வாலியுடன் மாடிக்கு செல்ல, அங்கே மல்லி பூ தோட்டத்தின் மத்தியில், சின்ன ஜாடியில், மஞ்சள் நிற ரோஜா செடி ஒன்று அழகாக பூத்து இருப்பதை பார்த்தாள்.

பூந்தோட்டத்தின் அருகில் சென்று அந்த செடியை கையில் எடுத்து, "இந்த ரோஜா செடியை யாரு வாங்கிட்டு வந்து மல்லி பூ செடிகளுக்கு நடுவே வச்சி இருப்பாங்க!!?" என்று கேள்வி கேட்பவளின் வினாவுக்கு விடையாக

"நீங்க கொடுத்த ஒற்றை மஞ்சள் ரோஜா பூவை, நான் தாங்க செடியா உருவாக்கி, அங்க வச்சிருக்கேன்" என்று விடை சொன்ன கொடி வீரன், தன் இரு கரங்களை கட்டியபடி, வாட்டமாக சுவற்றில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தவனின் உருவம், மகிழினியின் கண்களில் நிரம்பி இருந்தது.

Author - இவனை ஊருக்கு போக சொன்னா, கொடி ஏன் ரோஜா மலரை சுற்றி வருது? ஐயோ! இப்பெண்குட்டி கையாள, இந்த சேட்டன் செமையா வாங்க போறான்றது மட்டும், எனக்கு நல்லா தெரியுதுங்கோ 🤭

Urs SK💙💛
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top