- Thread Author
- #1
காதல் - 2.2
மாப்பிளை பையன் இவர்களை வரவேற்க வாசலில் நின்றான். மகிழினி ஓரக்கண்ணில் இவனை ரசிக்கும் அழகை இவனும் ரசித்து இருந்தான்.
“என்ன தம்பி. இந்த வீட்டுல தான் நீங்க இருக்கீங்களா” என்று ஆரம்பித்தார் பாட்டி.
“ம்... ஆமா பாட்டி. வாங்க உள்ள வாங்க. வாங்க மகிழ். அண்ணா நீங்களும் வாங்க” என்று மாப்பிளை இவர்களை தன் வீட்டிற்குள் அழைத்து வந்து இருக்கையைக் காண்பித்து, உக்காருங்க. நான் தண்ணி கொண்டு வரேன்.” என்றான்.
“இல்லப்பா. வரும் போது தான் டீ குடிச்சிட்டு வந்தோம். இப்ப எதுவும் வேண்டாம்.” என்றார் பாட்டி.
“சரி பாட்டி. நீங்களும் மகிழும் இங்க தங்கிக்கோங்க. அதோ அங்க ஒரு ரூம் இருக்கு. அண்ணா நம்ம மாடியில தங்கிக்கலாம் வாங்க.” என்று செங்கோட்டையனை அழைக்க,
“இருக்கட்டும் தம்பி. என் அக்கா வீடு இந்த ஊருல தான் இருக்கு. நான் போய்ட்டு நாளைக்கு காலையில வரேன். பாட்டி நான் கிளம்புறேன். சித்ரா நான் போயிட்டு வரேன்மா. தம்பி. கல்யாண வேலை எதாவது இருந்தா சொல்லுப்பா. அண்ணன் வேணா இங்கேயே இருந்து முடிச்சு தரேன்.” என்றார்.
“இல்ல அண்ணா. நான் எல்லாமே முடிச்சிட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வச்சி மகிழ் கழுத்துல தாலி கட்ட வேண்டியது தான் பாக்கி.”
“விட்டா நீங்க இப்பவே தாலி கட்டிடுவீங்க போல.” என்றார் கிண்டலாக.
“பின்ன. ஆம்பள பிள்ளைனா இப்படி தான் இருக்கணும். பாருங்க இந்த வீடு கூட எவ்வளவு சுத்தமா இருக்கு. தனக்கு தேவையானதை இந்த புள்ள தானாவே எப்படி எல்லாம் நடத்திக்குது பாருங்க. ஹ்ம்ம். எனக்கும் தான் ஒரு பேரன் இருக்கானே. பிஞ்சிலே பழுத்தவன்.” என்று அலுத்துக் கொண்டார் பாட்டி.
“பாட்டி...” என்று மகிழ் பாட்டியை அமைதிப்படுத்த,
“ஆமா. அண்ணனை சொன்னா இவளுக்கு பொத்திகிட்டு வந்துடும். சரி தம்பி. நான் போய் கொஞ்ச நேரம் கண் மூடுறேன். மண்டைக்குள்ள ட்ரெயின் ஓடுற மாதிரியே இருக்கு.” என்று சொல்லிக்கொண்டே பாட்டி ஒரு ரூமுக்குள் நுழைய, மகிழினியின் பக்கத்து வீட்டு அண்ணன் செங்கோட்டையன் மாப்பிளை வீட்டில் இருந்து வெளியேறினான்.
மகிழோ அந்த வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தவள், மாப்பிளை சின்ன வயதில் வாங்கிய சான்றிதழ் டிவி மேல் இருப்பதை பார்த்து வேகமாக ஓடுப்போய் அதைக் கையில் எடுக்கும் முன்பு, மாப்பிள பையன் அதை தன் வசம் எடுத்து கொண்டான்.
"பாருடா. நான் இத மறந்துட்டேனே. என்ன மகிழ்... இதுல என் பெயர் இருந்தா கண்டுபிடிச்சிடலாம்ன்னு நினைச்சு எடுக்க வந்திங்களோ?" என்று மாப்பிளை கேட்டதும். மகிழ் அவனை கோவமாக முறைத்தவள்.
“ஏன் இப்படி அநியாயம் பண்ணுறீங்க. எண்ணி இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு கல்யாணம். ஆனா எனக்கு உங்க பெயர் கூட தெரியல.” என்று வருத்தமாக அவள் பேசும் அழகை கண்கொட்டாமல் ரசித்தவன்,
"அச்சோ. பாப்பா வருத்தப்பட்டா அப்படியே அள்ளி முத்தம் தரணும் போல இருக்கே" என்றான்.
“என்ன?” என்று அதிர்ந்து கேட்க,
"ஹாங். இல்ல இல்ல. அழாதமான்னு சொன்னேன்".
“இதுக்கெல்லாம் நீங்க அனுபவிப்பிங்க.”
“"ஐயோ மகிழ். சாபம் எல்லாம் விட்டுடாதீங்க. நான் உங்க கூட நிறைய வருஷம், நம்ம பிள்ளைங்க கூட ஒரு நிறைவான வாழ்கை வாழனும்."
“அது என்ன நிறைவான வாழ்கை?”
"ம். வாங்க. வந்து இப்படி உக்காருங்க."
“ஐயோ உள்ள பாட்டி இருக்காங்க.”
“"ஏங்க. நான் என்ன உங்கள என் மடி மேலேயா உக்கார சொன்னேன். இந்த சேர்ல உக்காருங்க” என்றதும் “ம்...” என்றாள்.
"இந்த வீடு வாடகை வீடு தான். ஆனா நம்ம கல்யாணம் முடிந்த கையோடு உங்க பெயருல நம்ம புது வீடு வாங்கணும். அப்புறம் முடிந்த வரை பிள்ளைங்க பெத்துக்கணும். இன்னொரு முக்கியமான விஷயம். இப்போ நீங்க இந்த வீட்டு மொட்ட மாடிக்கு போய் பார்த்தா கூட. அங்க நிறைய மல்லி பூ செடி இருக்கும். அன்னைக்கு நான் உங்களுக்கு கொண்டு வந்த பூ கூட நம்ம வீட்டுல மலர்ந்தது தான். எனக்கு என்னமோ அந்த மல்லி பூ வாசத்துல. என் அம்மா சுவாசத்தை நான் உணறுற மாதிரி இருக்கும். இப்போ கொஞ்ச நாளா அந்த மல்லிப்பூவை பார்த்தால் உங்க நினைவு தான் வருது. நம்ம கல்யாணத்துக்கு பிறகு. எனக்கு தினமும் என்ன வேலை இருந்தாலும். எத்தனை வயசானாலும். என் கையாள நான் உங்களுக்கு மல்லிப்பூ கட்டி. நானே உங்களுக்கு வச்சி விடுவேன். அண்ட் என்னோட இன்சூரன்ஸ் பணம் எல்லாம் எனக்கு பிறகு என் மனைவியை தான் சேரும்ன்னு என் வேலையில சொல்லி இருக்கேன். அப்புறம்...” என்று நிறுத்தினான்.
மகிழ் அவனையே பார்த்திருக்க, "இல்ல. வேணா. இப்பவே எல்லாம் சொல்லிட்டா எப்படி? இன்னும் நம்ம வாழ போற 75 வருஷதுக்கு மீதம் ஆசையை சொல்லுறேன்" என்று பூரிப்புடன் சொன்னான்.
மகிழினியின் மனதை கவர்ந்த அவனின் பெயர் என்னவாக இருந்தாலும், இவன் தான் என்னவன். என்ற எண்ணம் இவள் மனதில் ஆழமாக பதிய தொடங்கியது.
மகிழினியும் பாட்டியும். இவன் வீட்டில் தங்கிய இரண்டு நாளில். அவர்களை தன் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான் மாப்பிளை பையன்.
அன்றைய தினம் சுபமுகூர்த்த நாளில், நல்ல நேரத்தில், மாப்பிளையின் பக்கத்தில் இருந்து அவன் வளர்ந்த ஆதரவற்ற இல்லத்தின் உரிமையாளரும், சித்ரமகிழினியின் பக்கத்தில் இருந்து அவளுக்கு இன்று வரை எல்லாமுமாக இருக்கும் பாட்டியும் கையப்பமிட, ரெஜிஸ்டர் ஆஃபிஸில் சித்ரமகிழினி கழுத்தில் மாலையிட்டு மாங்கல்யத்தை அணிவித்தான் மாப்பிளை.
பாட்டியின் கண்களில் ஆனந்த கண்ணீர் தத்தும்பியது.
சித்ரமகிழினி மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி மலர்ந்து இருந்தது.
மாப்பிளையின் முகத்தில் மேலும் சந்தோஷ ரேகை படர்ந்து இருந்த தருணம் அது.
"சரி சரி. சீக்கிரம் மாப்பிளையும் பொண்ணும். ரெஜிஸ்டர் புக்ல கையெழுத்து போடுங்க" என்று ரெஜிஸ்டரர் சொல்ல, முதலில் கையப்பமிட்ட மாப்பிளை தன் கையில் இருந்த எழுதுகோலை மகிழினியிடம் தந்தான்.
அதை பெற்றுக்கொண்டவள் கண்ணில், தன் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தவனின் பெயரை முதல் முறையாக தன் மனதிற்குள், "வீரவேல்" என்று வாசித்தவள், தன் ஆட்கொல்லும் பார்வையால் அவனை பார்த்தாள்.
"ஒரு வழியா. Mrs. வீரா. என் பெயரை கண்டு கொண்டீர்கள் போல?" என்று புன்னகையுடன் அவன் சொன்னதும், தன் கையப்பத்தை. அவள் பெயரின் பக்கத்தில் போட்டவள்,
"உங்கள நான் வீரான்னு கூப்பிடணுமா. இல்ல வேலான்னு கூப்பிடணுமா?" என்று பொறுமையாக கண் சிமிட்டிக்கொண்டே கேட்டதும்,
"நீங்க எப்படி வேணாலும் கூப்பிடுங்க. ஆனா என்னை நீங்க கூப்பிட்டா மட்டும் போதுங்க" என்று அவன் சொன்னதும். மகிழினியின் முகம் வெட்கத்தாலும் இன்பத்தாலும் சிவந்த தருணம்.
“சரி சரி. நல்ல நேரத்துல கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்க. நாங்க அதுக்குள்ள போய் வீட்டுல பண்ண வேண்டிய சடங்கை எல்லாம் பண்ண ஆரம்பிக்குறோம்.” என்றார் பாட்டி.
“பாட்டி. நாங்க கோவிலுக்கு போயிட்டு அப்படியே ஆஸ்ரமத்துக்கும் போயிட்டு வந்துடுறோம்” என்றான் வீரவேல்.
“ம்... சரிப்பா. அப்படியே செய்யுங்க.”
“சரி பாட்டி. நான் உங்களுக்கு கார் சொல்லிருக்கேன். நீங்க அதுல போயிடுங்க. நான் மகிழினியை என் காருல அழைச்சிட்டு போறேன்.”
“நல்லதுப்பா.”
“மகிழ் வாங்க. பாட்டிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிப்போம்.” என்று மாப்பிளை பையன் வீரா சொல்ல, திருமண ஜோடிகள் இருவரும் அங்கிருந்த பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.
“என்ன தம்பி. போட்டோ எடுக்க கூட ஆள் சொல்லலையா? கல்யாணம்னா அதெல்லாம் இருக்கனும் தானே?” எனக் கேட்டார் பாட்டி.
“இல்ல பாட்டி. அடிக்கடி போட்டோ எல்லாம் எடுத்தா ஆயுசு கம்மியாகும். வேணும்னா நம்ம உங்க ஊருக்கு போய், அங்க நம்ம எல்லாம் சேர்ந்து ஒண்ணா ஒரே ஒரு போட்டோ எடுப்போம்.” என்று அவன் சொன்னதும், அவன் சொல்லுக்கு சம்மதம் சொன்னபடி பாட்டி வீராவின் வீட்டுக்கு கிளம்பினார்.