- Thread Author
- #1
Part 2
“உங்க பெயர் என்ன?” என்று கேட்டாள் சித்ரமகிழினி.
“என் பெயர் தெரியாம தான் நீங்க என்னை மாப்பிளை பார்க்க வந்திங்களா?” என்று அவன் கேட்டதும் மகிழினி விழித்தாள்.
"சரி சரி. அந்த அழகான கண்களை அப்படி எல்லாம் சுத்த விடாதீங்க. பிஞ்சு மனசு தாங்காது" என்று இவன் அவள் அழகை ரசித்தவனாக நின்று இருக்க,
"மாப்பிள்ள தம்பி. வாங்க நேரமாகுது. சீக்கிரமா போய் உங்க கல்யாணத்துக்கு நாள் குறித்துப் புது துணி எல்லாம் வாங்கணும்" என்று தூரத்தில் இருந்து புரோக்கர் அழைத்தார்.
"ஓகே மகிழ். நான் கிளம்புறேன். ஹாங் நீங்க கேட்ட கேள்விக்கு நானா பதில் ஏதும் சொல்ல மாட்டேன். வேணும்னா நீங்க உங்க பாட்டியை கேட்டு தெரிஞ்சிக்கோங்க" என்று சொன்னவன் அவளுக்காக இவன் வாங்கி வந்த மல்லிகை சரத்தை மகிழினி கையில் தந்தப்படி கோவிலை விட்டு வெளியேறினான்.
"சித்து வாமா. ஆட்டோ வந்துடுசசி" என்று பாட்டி அழைத்ததும். மகிழ் கடவுளை பார்த்து மீண்டும் கையெடுத்து கும்பிட்டவள், கோவிலில் இருந்து அவள் பாட்டி வீட்டிற்கு சென்றாள்.
“என்ன சித்து. மாப்பிள என்ன சொல்லுறாரு? உனக்கு அவரை பிடிச்சி இருக்கா?
“ம்... பிடிச்சி இருக்கு பாட்டி.”
“மாப்பிள்ள சென்னையில வேலை பாக்குறாரு. போதாக்குறைக்கு அவர் போலீஸ் வேற. அதனால தான் நம்ம பக்கத்து வீட்டு செங்கோட்டையன்கிட்ட சொல்லி நேத்து நைட்டே மாப்பிள்ளையை பற்றி விசாரிக்க சொன்னேன். அவனும் விசாரிச்சு இன்னைக்கு தான் மாப்பிளையை பற்றி நல்ல விதமா சொன்னான். அதான் உடனே நம்ம மாப்பிளையை பார்த்துட்டு வந்துடலாம்னு உன்னை இன்னைக்கு கோவிலுக்கு அழைச்சிட்டு போனேன்” என்றார்.
“ம்...” என்றாள் மெல்லிய குரலில்.
“என்ன சித்துமா, உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே?” என்றார் திரும்பவும்.
“ஏன் பாட்டி. அப்போ எனக்கு இவர் கூட கல்யாணம் நடந்தா. நானும் சென்னைக்கு போகணுமா?” எனக் கேட்க,
“ஏன் போகாம. நீ இங்க இருந்து என்ன பண்ண போற? மாப்பிள்ளை கூட போய்தான் ஆகணும்.” என்றார் பாட்டி.
“அப்போ நீங்க?” என்று கேட்டாள் மகிழ்.
“நான் மாசம் மாசம் உங்கள பாக்க மாப்பிள்ள வீட்டுக்கு வருவேன். சரிதானே?” என்றதும் அவள் “ம்” என்று தலையசைக்க, “என்னமா? என்னாச்சு?” என்றார் பாட்டி.
“உண்மையாவே நீங்க அண்ணனை என் கல்யாணத்துக்கு கூப்பிட மாட்டிங்களா பாட்டி?”
“கண்டிப்பா கூப்பிட மாட்டேன். படிக்க போன இடத்துல ஒரு பெண்ணைக் காதலிச்சு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு, நம்ம நினைவே இல்லாமல் இருக்குற நன்றி கெட்டவனை எல்லாம் உன் கல்யாணத்துக்கு கூப்பிட முடியாது சித்து.” என்றார் கோபமாக.
“சரி சரி பாட்டி. நீங்க கோவப்படாதீங்க. அமைதியா இருங்க” என்று பாட்டியின் கோவத்துக்கு ஆளாகாமல் மகிழினி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தவள், இன்று தன்னை பெண் பார்க்க வந்தவனின். நடை உடை பாவனையை எல்லாம் தனக்குள் எண்ணிப் பார்த்து தலையணை கீழ் இவள் மறைத்து வைத்து இருந்த மாப்பிளையின் புகைப்படத்தை கையில் எடுத்தாள்.
“ம்... உங்க பெயர் என்னவா இருக்கும்? நான் வேணா போய் பாட்டியை கேக்கவா? ஐயோ வேணா வேணா. பாட்டி இப்போ தான் அண்ணன் மேல இருக்குற கோவத்துல என்கிட்ட மூஞ்சி காட்டினாங்க. ஆனாலும், உங்க பெயரை இப்போ நான் எப்படி தெரிஞ்சிக்கிறது?” என்று தனக்குள் பல கேள்விகளை கேட்டுக்கொண்டாள்.
சில நிமிடத்தில் மீண்டும் அந்த போட்டோவை தலையணை கீழ் வைத்தப்படி பாட்டியிடம் செல்ல, "இன்னும் பத்து நாள்ல கல்யாணமா. அவ்வளவு சீக்கிரமா. எப்படி தம்பி?" என்று பாட்டி போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்ததை கேட்டவளுக்கு அப்பட்டமாக தெரிந்தது பாட்டி மாப்பிளையிடம் தான் பேசுகிறார் என்று.
"சரி மாப்பிள்ள. நீங்க இவ்வளவு சொல்றிங்க. இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு. நான் சித்ராகிட்ட பேசிட்டு உங்களுக்கு போன் பண்ணுறேன்" என்று சொன்ன பாட்டி அழைப்பைத் துண்டித்தார்.
“யாரு பாட்டி போன்ல.?”
“மாப்பிள்ள தான்மா. இன்னும் பத்து நாள்ல ஒரு நல்ல நாள் இருக்காம். அதான் நமக்கு சம்மதம்னா. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண அவரே எல்லா ஏற்பாடும் பண்ணுறேன்னு சொல்லுறாரு. நீ என்ன சொல்ற?” என்றார் அவர்.
“என்ன? இன்னும் பத்து நாள்லயா?” என்று அதிர்ந்து கேட்டாள்.
“ம்... ஆமாம் சித்ராமா..”
“என்ன பாட்டி இது. எல்லாமே இவ்வளவு சீக்கிரமாவா?”
“நானும் அதான்மா கேட்டேன். இதே மாதிரி நீ கேள்வி கேட்டா. மாப்பிள உன்னை அவருக்கு போன் பண்ண சொல்லுறாரு. அவரு உன்கிட்ட பேசிக்கிறாராம். இந்தா அவருக்கு போன் பண்ணி பேசு.” என்று போனை நீட்டினார்.
“ஐயோ! நானா? ஹ்ம் ஹ்ம் போன்லாம் வேணா பாட்டி. எனக்கு சங்கடமா இருக்கு” என்றாள் பதறியபடி.
“அட பேசு. இந்தா பிடி. இப்போ தான் மாப்பிள தம்பி பேசிட்டு போனை கட் பண்ணாரு, நீ அந்த நம்பர்க்கே கால் பண்ணு. சரியா?” எனக் கேட்க,
“ம்...” என்று தலையசைத்தாள் அவள்.
“சரி நீ பேசு. நான் பக்கத்துல போயிட்டு வரேன்.” என்று சொன்ன பாட்டி அங்கிருந்து வெளியே செல்ல., முதலில் தயங்கிய மகிழினி தைரியத்தை வர வைத்து தன்னை பார்க்க வந்த மாப்பிளைக்கு போன் செய்தாள்.
மறுமுனையில் 'ஹலோ". என்ற அவன் குரலை கேட்டு. மகிழினி அமைதியாக இருக்க, "ஹலோ. போன் பண்ணிட்டு ஏன் அமைதியா இருக்கீங்க. எதாவது கேளுங்க மகிழ்?" என்று அவன் கேட்டான்.
தனக்குள் சிரித்த மகிழ், “என்ன கேக்குறது. அதான் நான் கேட்டதுக்கே நீங்க இன்னும் பதில் சொல்லலையே.?” என்க,
“அப்படியா? நீங்க கேட்டு நான் என்ன சொல்லல.?” என்றான் பதிலுக்கு.
“நான் தான் உங்க பெயர் என்னனு கேட்டேனே.” என்று சிணுங்கினாள்.
“இன்னுமா நீங்க என் பெயரை கண்டுபிடிக்கல?”
“ஹ்ம் ஹ்ம் இல்ல.”
“ஏன். உங்க பாட்டிகிட்ட கேக்கலையா? கேட்டிருந்தா அவங்க சொல்லிருப்பாங்களே.”
“அது பாட்டி என் அண்ணன் மேல இருக்குற கோவத்துல இப்போ கொஞ்சமா டென்சன்ல இருக்காங்க. அதான் அவங்கிட்ட நானா ஏதும் கேக்கல. கேட்டா சொல்லுவாங்க தான். ஆனா கேட்கத் தோணலை” என்றாள் மகிழ்.
“ஓ... இப்போ என்ன பண்ணலாம்.?”
“ஏன். உங்க பெயர் என்னனு நீங்க சொல்ல மாட்டீங்களா?”
“ஹ்ம் ஹ்ம். நானா சொல்ல மாட்டேன்னு தானே சொன்னேன்.”
“சரி. நான் போனை வைக்கவா?
“ஹலோ ஹலோ இருங்க மகிழ். என்ன கோவமா?” எனக் கேட்டான் அவன்.
“இல்ல இல்ல.” என்றாள் வேகமாக.
“பின்ன ஏன் அதுக்குள்ள போனை கட் பண்ணறீங்க?” என்று கேட்க, அவள் அமைதியாக இருக்கவும், “சரி. பாட்டி நம்ம கல்யாணத்தை பற்றி என்ன சொன்னாங்க?”
அவனின் ஆர்வம் புரிந்தாலும், “இன்னும் முடிவா ஏதும் சொல்லல.” என்றாள் சித்ரமகிழினி.
“நீங்க கவலைப்படாதீங்க. இன்னும் பத்து நாள்ல நம்ம கல்யாணம் நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.”
“நான் கவலைப்படுறேன்னு உங்ககிட்ட நான் எப்போங்க சொன்னேன்.” என்று கேட்டாள்.
“அப்போ நீங்க என்னை கல்யாணம் பண்ணலைனா, நீங்க கவலைப்பட மாட்டீங்களா?”
“பெயர் தெரியாத ஆளை நினைத்து கவலைப்பட என்ன இருக்கு?” என்று பதிலடி கொடுக்கவும், “ஓ...” என்றான்.
“சரி. நான் போனை வைக்கிறேன்.” என்று அவள் சொல்ல,
“ஏங்க... ஏங்க வைக்காதீங்க. வேனும்னா உங்க போன் நம்பர் தந்துட்டு இந்த போனை கட் பண்ணுங்க.” என்றான் அவனும்.
“எனக்குன்னு தனியா போன் எல்லாம் இல்ல.”
“என்னங்க சொல்றிங்க. இந்த காலத்துல போன் இல்லாத மனுஷனா. எப்படிங்க இப்படி ஆச்சர்யப்படுத்துறீங்க.?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் அவன்.
எனக்குன்னு தனியா போன் இருந்தா, நான் என் அண்ணாகிட்ட பேசிடுவேன்னு, என் பாட்டி எனக்கு போன் வாங்கி தரல.”
“ரொம்ப வில்லித்தனமான பாட்டி போல.” என்று சற்றே கிண்டலாகக் கேட்டான்.
“இங்க பாருங்க. என் பாட்டியை பத்தி இப்படி எல்லாம் பேசுனா, அப்புறம் நான் உங்கள கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்லிட்டேன்.” என்று கோவம் கொள்ள,
“ஐயோ இல்ல இல்லைங்க. உங்க பாட்டி ஹீரோயின் தான். வில்லி எல்லாம் இல்ல. நீங்க கோவப்படாதீங்க” என்றான் வேகமாக.
“ம்...” என்றாள் சித்ரமகிழினி.
“சரி. உங்களுக்கு என்னை உண்மையாவே பிடுச்சிருக்கா?”
“அதான் கோவில்லையே சொன்னேனே. பின்ன என்னவாம். அடிக்கடி கேட்குறீங்க?”
“அப்போ இன்னும் பத்து நாள்ல நமக்கு கல்யாண ஏற்பாடு பண்ணலாம். இல்லையா?”
“அதெல்லாம் நீங்க பாட்டிகிட்ட கேட்டுக்கோங்க. எனக்கு எதுவும் தெரியாது என்றாள்.”
“ம். அது சரி.”
“அப்ப நான் போனை வைக்கவா?”
“ம். வையுங்க.” என்றான் அவன்.
“அப்போ நீங்க உங்க பெயரை சொல்லவே மாட்டிங்களா?” என்றவள் குரல் குறைந்திருந்தது.
“ம்... அதையும் உங்க பாட்டிகிட்டே கேட்டு தெரிஞ்சிக்கோங்க” என்று கிண்டலாக சொன்ன மாப்பிள்ளை. செல் போன் இணைப்பை துண்டிக்க.
“ரொம்ப கிண்டல் பிடித்த ஆளு தான் போல.” என்று மகிழினி தனக்குள் அவனை ரசித்தவளுக்கு, அன்றைய இரவில் இருந்து அவனது பெயரை தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூடிப் போனது.