• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Nov 29, 2024
Messages
5
IMG_20241130_065318.jpg
டமால்.....என்று இடி போன்ற.சத்தம் கேட்டு....அங்கு சுற்றி இருந்தவர்கள்ஓடி..வந்தனர்.... அப்போது கண் விழித்த அலி... தூரமாக அழுது கொண்டு இருந்த தன் நண்பனை நோக்கி ஓடினான்... டேய்..மச்சான்..எனக்கு ஒன்னும்.. ஆகல ...நீ...நல்லா...தானே..இருக்க... என்று கேட்க..அவனிடம்..பதில் இல்லை..அவனோ..அழுது கொண்டே..இருந்தான்... அவனருகில் சிலர் பேசுவது அவன் காதில் விழுந்தது... யாருனு...தெரியலையே... சின்ன பையனா இருக்கானே... சரி..அவன் விதி அவ்ளோ தான்... என்று தங்களுக்குள் பேசி கொண்டு..இருந்தனர்.... ஹாஸ்பிடலுக்கு தூக்குங்கபா... என்று ஒருவன் சொல்ல... இல்ல..பா...ஆளு.
ஸ்பாட் அவுட் .... ஆகிடும்... என்று மற்றொருவன்..சொல்ல... சம்பவ இடத்துக்கு போலீஸ் வந்தது.... என்ன நடந்துச்சு...என்று போலீஸ் விசாரிக்க... ..நாளு பைக் la.வந்தாங்க .. நான்..கூட அவங்களை...எதுக்கு டா..இவளோ வேகமா போறிங்கனு... திட்டினேன்.... அதுக்கு அவங்க ... ஏ ..பெருசு...உனக்கு எல்லாம் இதுல இருக்குற" கிக்கு" தெரியாது இதுக்கு பேரு தான் racing....அப்டின்னு சொல்லிட்டு கொஞ்ச தூரம் கூட போகல sir... மின்னல் வேகத்தில் போன பைக் முன்னாடி திடீர்னு ஒரு மாடு குறுக்கே வந்து விழ...அந்த பைக் நிலை தடுமாறி..சரிஞ்சிட்டு..sir... நான் கூச்சல் போட்டதுல எல்லாரும் ஓடி வந்தாங்க... மிச்ச வண்டிலாம் போயிட்டு...கடைசியாக வந்த வண்டியை மட்டும்... அங்க நின்னவங்க சேர்ந்து வழி மறைச்சு புடிச்சுட்டோம் ... அந்த ஒருவனை மட்டும் அதுல இருந்தான்..அவனை பிடிச்சு வைத்து இருக்கோம்...என்று சொல்லி ஒருவனை காமிக்க... அவனோ.. பயத்தில் நடுங்கிய படி அழுது கொண்டு நின்றான்.. அவன் மேனி முழுவதும் இரத்தமாக இருந்தது... டேய்...என்ன..டா...உனக்கு இப்படி ஆகிட்டு என்று அழுது கொண்டு இருக்க.... அலியோ...டேய்..மச்சான்... என்று அவனை அழைக்க .. பதில் இல்லை...அதனால் அவனருகில் சென்று அவனை தொட அவனுக்கு எந்த உணர்வும் இல்லை.. அப்போது அவன் முன்பு ..அங்கு இறந்து கிடந்த தன்னை கண்டு அதிர்ந்தான்...அலி.... அப்போது... தான் அவனுக்கு புரிந்தது..அந்த விபத்தில் உயிர் பிரிந்தது தனக்கு தான் என்று..அப்படியே..அதிர்ந்தான்..சில மணி துளி களில் அவனின் குடும்பம் வரவே... அவள் அம்மா தன் மார்பை தட்டி அழுது கொண்டு...நீங்க எவ்வளவோ சொன்னீங்களே .. நான் தானே கேக்கல...இப்ப .என் மகனை இப்படி இழந்து விட்டேனே.... காலைல..தானே.. புது பைக் எடுத்துட்டு வெளியே வந்தான்... இப்படி ஆகிட்டே என்று.. அழுது கொண்டே மயங்கினாள்..எம்மா...எம்மா....நாம் உன் கிட்ட தாமா இருக்கேன்... Racing பண்ணினது என் தப்பு தான்.. ...இனி இப்படி racing பண்ண மாட்டேன்... போன.தடவ. காப்பாதுன மாதிரி ..இந்த ஒரு தடவை மட்டும் காப்பாத்தி விடு மா.. என்று கதற... அது யாரு காதிலும் விழ வில்லை.. .
சிறிது நேரத்துக்கு பிறகு... அவனை அங்கு இருந்து அவன் வீட்டுக்கு தூக்கி சென்றனர்... அவன் வீட்டில் ..அவன் பிணமாக இருக்க
அவன் தாயும் தந்தையும்...நடை பிணமாக இருந்தனர்...
அவன் தன் நிலைக்கு தானே காரணம் என்றவன்..தன் நினைவலையில் மூழ்கினான்..

சில நாட்களுக்கு முன்பு....
இந்த..பாருங்க..நீங்க..என்ன... செய்விங்களோ.. ஏது செய்விங்களோ....நான் நாளைக்கு பைக் கோட வரேன்..அப்டின்னு என் ஃப்ரெண்ட்ஸ் ட சொல்லிட்டென்.... அப்படி கொண்டு போகல என் மானம் போயிரும்... என்று அலி சொல்ல... அவனின் தந்தை ஏதோ சொல்ல ஆரம்பிக்க... நீங்க..எப்பவும் போல அந்த .பழைய பஞ்சாங்கத்தை தானே பேச போறீங்க...எப்ப..பாத்தாலும்.. ஒரே dialogue..... நீயா...எப்ப உன் பைக் க்கு நீயே சம்பாதிச்சு பெட்ரோல் போடுறியோ அப்ப தான் அந்த பெரிய பைக் வாங்கி தருவேனு தானே சொல்ல போறீங்க... அதை நான் இப்ப கேட்கிறதா இல்லை... அதை கேட்டு கேட்டு ..என் காது புளிச்சு போச்சு.... என்ன விட சில்லுவண்டுளாம் பைக் வச்சு தானே இருக்கு... என்று அலி சொல்ல...அதான் .. என் ஸ்கூட்டி இருக்குள்ள அதை நீ தானே..அப்ப அப்ப use panra... என்று முஹம்மத் சொல்ல....
ஏது..அந்த டப்பாவை சொல்றீங்களா...அதுக்கு பேரு பைக் இல்ல ...காய்லாங்கடை குப்பை... ஆனா நான் கேட்டது... ஒன்றரை லட்ச ருவா .பைக் என்று சொல்ல... இந்த பாரு ...அலி....உனக்கு வெறும் பதினாறு வயது தான் ஆகுது...அதுக்குள்ள..உனக்கு எதுக்கு அந்த பைக்.... நீ...கேட்ட உடனே...எல்லாம் வாங்கி தந்தது..தான்..நான்.. செஞ்ச தப்பு.... அதுனால தான்..உனக்கு..எந்த பொருளுடைய
மதிப்பும் தெரியல... என்று அவன் தந்தை .. முஹம்மது சொல்ல.... இது கூட உங்களால. ... வாங்கி தர முடியலனா என்ன எதுக்கு பெத்திங்க... நீங்க எதுக்கு துபாயிக்கு போய் வேளை பாக்குறீங்க..
என்று கேட்க...பாத்தியா..உன் பையன் எப்படி பேசுறான்.... நான் ஒன்னும் .. துபாய்ல மரத்துல இருந்து ரூபாயை பறிச்சு உங்களுக்கு அனுப்பல .... பகல் இரவு பாக்காம... வெயில் மழையில் கிடந்து... ஒரு ரூபாய் இருந்தா...புள்ளை படிப்புக்கு ஆகுமெனு...பல சமயம் பட்டினி கிடந்து... சேர்த்து வச்சு ஊருக்கு அனுப்பிட்டு உங்களுக்கு கஷ்டம் தெரிய கூடாதுனு...உங்களை பாத்து பாத்து வளர்த்தா.. .... என்ன எதுக்கு பெத்திங்கனு கேக்குற... அப்படி தானே... நான்..என்ன..வாங்கி தர மாட்டேன்னா. சொன்னேன்... அதுக்கான வயசு வரட்டும் அப்டின்னு தானே சொல்றேன்... நீங்க இப்படிலாம் சென்டிமென்ட் டா. பேசி...என்னை சமாதானம் செய்யலாம்னு நினைக்காதீங்க.... என்று சொல்லி விட்டு... முடிவா..என்ன தான் சொல்றீங்க.... நான்...சொன்னது சொன்னது தான்...என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை...என்று முஹம்மத் சொல்ல.... ஓஹோ...அப்ப..நான் சொல்றதை நல்லா கேட்டுகோங்க... நீங்க..மட்டும் எனக்கு பைக் வாங்கி தரல... நான் செத்து போயுறுவேன்.... என்று அலி சொல்ல ...போடா... .. உன் பூச்சாண்டி வேளையெல்லாம் உன் அம்மா.என் கிட்ட வச்சுக்க...என்று சொல்லி விட்டு பானு...நான் வெளியே போயிட்டு வரென்... என்று சொல்லி விட்டு சென்றார் .. நான்...சொல்றது... உங்களுக்கு பொய் மாதிரி ..இருக்கா... என்று எண்ணியவன்.... சிறிது நேரம் யோசித்தான்.... அம்மா.. காலையில் தன் அக்காவிடம் சொல்லி கொண்டு இருந்தது...நியாபகம். வந்தது... ஏ... ஆயிஷா.... வீட்ல.. எலி தொல்லை ரொம்ப இருக்கு.... அதுனால...அதை விரட்ட...எலி மருந்து கடைல இருந்து வாங்கிட்டு வந்து இருக்கேன்... அதை... செல்ஃப் மேல... ஏறி வை...அது பாக்க கேக் மாதிரி இருக்கு...உன் பசங்க கை..தான் சும்மாவே.இருக்காதே... அவங்க எடுத்துடுவாங்க என்று கூறியது நினைவுக்கு வரவே... அங்கு சென்று மேலே வைக்க பட்டு இருந்த எலி மருந்தை சாப்பிட்டான்... தற்செயலாக வந்த. .அவனது அன்னை ஃபாத்திமா... மருத்து கையில் இருப்பதை பார்த்து என்ன..டா? இது என்று கேட்க...உங்களுகுளாம்... நான்...சொல்றது சும்மா மாதிரி.. இருக்குள்ள... அதான்..நிரூபித்து காமிக்க இதை சாப்பிட்டேன்..என்று சொல்லி... அலி...மயங்கி விழவே... எதுக்கு டா..இப்படி பண்ணி தொலைச்ச... என்று தன் தலையில் அடித்து கொண்டாள்... பிறகு..அவள் அழுகுரல் கேட்டு ஓடி வந்த உறவுகள்..அவனை...
மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்... நீண்ட...முயற்சிக்கு பிறகு.... டாக்டர் அவன் உயிரை மீட்டார்..... ரொம்ப நன்றி டாக்டர்...என்று ஃபாத்திமா சொல்ல.. உங்க கடவுளுக்கு நன்றி சொல்லுங்க... அவன் மீண்டது... அவனோட அதிர்ஷ்டம்... என்று கூறி விட்டு செல்ல... அங்கு... அமர்ந்து இருந்த... முஹம்மதி்டம் வந்த அவரது மனைவி ஃபாத்திமா.. போதுமா.. அவன் கேட்ட மாதிரி .... அந்த பைக் வாங்கி கொடுத்தா என்ன... ஆயிஷாக்கு அப்புறம் 10வருசம் தவத்துக்கு அப்புறம் பிறந்தவன்...உங்களுக்கு அவன் உயிரை விட உங்க. .. வைராக்கியம் தான் முக்கியம் .... அப்படி தானே... என்று கேட்க... ஏண்டி...அவன் நல்லதுக்கு தானே அப்படி சொன்னேன்.... இந்த வயசுல அவ்ளோ பெரிய வண்டி ஓட்டுறது அவ்ளோ நல்லதுக்கு இல்ல... என்று சொல்ல... அவன் என்னா..எப்பவுமே வா.. ஓட்ட போறான்... ஸ்கூல் க்கு போயிறுவான்... வண்டி வீட்ல தானே நிக்க போகுது.... என்று அவரிடம் சொல்ல.... நான்..சொன்னா கேட்கவா போறீங்க... சரி... நான் வண்டிக்கு ஏற்பாடு செய்றேன்..
என்று சொல்லி அங்கு இருந்து புறப்பட... கண்விழித்து பார்த்தான்
.அலி.... அலி.. எதுக்குடா...இப்படி செஞ்ச... உனக்கு.ஏதாவது ஒன்னுனா...அம்மா. எப்படி தாங்குவேன்... அப்பா புது வண்டி எடுத்து தரேனு சொல்லிட்டாரு... இனி எப்பவும்..இப்படி செய்யாத...எல்லா..நேரமும்..ஒரே..
மாதிரி நமக்கு சாதகமாக இருக்காது... என்று சொல்லி அழ...
இனி இப்படி செய்ய மாட்டேன்..
என்று அலி சொல்ல... நீங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போலாம்...இந்த காலத்து பசங்களுக்கு எல்லாமே விளையாட்டா போச்சு.... ஒரு bike காக யாராவது இப்படி செய் வாங்களா.. என்று டாக்டர் சொல்லி விட்டு...அவனை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று சொல்ல...அவனை அழைத்து வந்தனர். ....
பிறகு... அவன் கேட்டது போன்று..அந்த ஒன்றரை லட்சம் ரூபாய் வண்டியை வாங்கி கொடுக்க..
எதோ சாதிச்சது போன்று... அவனுக்கு மகிழ்ச்சி... அதை எடுத்து கொண்டு... தன் நண்பர்களை பாக்க சென்றான் ... அப்போதும் அவன் தந்தை...அவனை தடுத்தார்...அவன் அவரை அலட்சியம் செய்து விட்டு சென்றான்..
டேய்...மச்சான்...புது .. எப்படி இருக்கு என்று கேட்ட அலியிடம்... டேய்... மச்சான்...சொன்ன மாதிரியே... bike வாங்கிட்டியே..... நினைச்சதை முடிச்சிட்டுயே...பெரிய ஆளு தான்.. டா நீ...என்று அவன் நண்பர்கள் சொல்ல...அவனுக்கு ஒரே பெருமையாக இருந்தது... பிறகு தான் அந்த racing நடந்தது... அதன் விலை..தன் உயிர் ..என்பதை இப்போது தான் உணர்ந்தான்.. அப்போது அங்கு இருந்தவர்கள் ... உடலை அடக்கம் செய்ய எல்லா ஏற்பாடும் செய்ய... அதை பார்த்த..அவள் அன்னை..அங்கேயே.. அதிர்ச்சியில் விழுந்து இறந்து போக....டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு அவள் இறந்ததாக கூற... யோசித்து கொண்டு இருந்தவன்...அவளருகில் ...எம்மா...
எம்மா... என்று சத்தம் பொட்டு கொண்டு ஓடி வர.... .
அட..எதுக்குடா..இப்படி சத்தம் போட்டு கொண்டே ஓடி வர... என்று ஃபாத்திமா கேட்க..அப்போது தான் அவன் உணர்ந்தான்...அனைத்தும் கனவு என்று.... அப்போது... தொலைகாட்சியில் பதினாறு வயது சிறுவன்... விபத்தில் பலி... பைக் வாங்கி தர வில்லை என்றாள்...தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால். பைக் வாங்கி கொடுத்த பெற்றோக்கு... பேரிடி யாக விழுந்தது... என்று செய்தியாளர் வாசிக்க... இந்த காலத்து மக்களுக்கு பெரியவங்க என்ன சொன்னாலும்..தப்பா தெரியுது..இப்ப பாரு.. இழப்பு யாருக்கு..அவனை பெத்தவங்களுக்கு தான்... என்று சொல்ல... அப்பா... என்ன மன்னிச்சுடுங்க... எனக்கு பைக் வேண்டாம் அப்பா... என்று சொல்ல..அவனை ஆச்சரியமாக பார்த்து கொண்டு நின்றாள் ஃபாத்திமா...
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
ஷப்பா! கனவா? அலி மாதிரி எல்லா பிள்ளைங்களும் நிதர்சனத்தைப் புரிஞ்சிக்கிட்டா நிறைய இழப்புகளை நாம தடுக்கலாம்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் Rafitha பாத்திமா💐💐💐
 
Member
Joined
Sep 3, 2024
Messages
31
இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய கதை. அருமை சகி. எதற்காக வரிக்கு வரி புள்ளிகள் (...) வச்சிருக்கீங்க.
 
New member
Joined
Nov 29, 2024
Messages
5
ஷப்பா! கனவா? அலி மாதிரி எல்லா பிள்ளைங்களும் நிதர்சனத்தைப் புரிஞ்சிக்கிட்டா நிறைய இழப்புகளை நாம தடுக்கலாம்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் Rafitha Fathima💐💐💐
நன்றி.... உண்மை தான்....
 
Last edited by a moderator:
New member
Joined
Nov 29, 2024
Messages
5
இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய கதை. அருமை சகி. எதற்காக வரிக்கு வரி புள்ளிகள் (...) வச்சிருக்கீங்க.
ஆமாம்..சகி... இது யாராவது ஒரு இளைஞன் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றாலும்..எனக்கு... மகிழ்ச்சி தான்.... ஏனெனில் இது உண்மையில் நடந்த சம்பவம்....அதில்...அந்த இளைஞன்.... உயிர் மீளவே இல்லை என்பது தான் கசப்பான உண்மை... சகி....
 
Last edited:
New member
Joined
Nov 29, 2024
Messages
5
நன்றி..சகி.. உங்கள் கருத்து என்னை மேலும் ஊக்குவிக்கிறது...
அந்த புள்ளிகள்.. இடைவெளி நிறுத்தத்துக்கு வைத்தது.... நீங்கள் கூறியதில் இருந்து அது வாசிப்பவர்களுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக தோன்றுகிறது..நான். மாற்ற முயற்சி செய்கிறேன்...
 
Top