• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
396
திருச்சி:

அன்று விடுமுறை நாள் என்றாலும் வழக்கம் போல எழுந்த மகியோ எஸ்தர் டீ கொண்டு வா டி என்கவும்,கிச்சனில் இருந்த மானசாவோ இதோடு ஒரு முடிவு கட்டுறேன் என்று பல்லை கடித்தவாறு ஹாலுக்கு வந்தவர்,உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?

நானும் பார்த்துட்டு இருக்கேன் எதற்கு எடுத்தாலும் எஸ்தர் எஸ்தர் னு... என் பேர் கூடவா மறந்துடுச்சி?

சட்டப்படி நான் தான் உரிமை உள்ள பொண்டாட்டி.அவள் உங்க ஆசை நாயகி,ஒண்ட வந்தவளென்று வாயை மூடுவதற்குள் ஓங்கி மானசாவின் கன்னத்தில் அறைந்த மகி,இன்னொரு வார்த்தை என் பொண்டாட்டியை பற்றி ஏதாவது பேசுன மனுசனா இருக்க மாட்டேன்.

ஏன் டி அவளா உன் புருஷனை பங்கு போட்டுக் கொண்டாள்?

வயிற்றில் இருக்கும் புள்ளை மேல சத்தியம் பண்ணி நீ தான டி எங்க அம்மாக்கு ஜால்ரா அடிச்ச...

என் அம்மாவை எப்படி சமாளிக்கணுமென்று எனக்கு தெரியாதா டி?

பெரிய புடுங்கி போல வார்த்தையை விட்டது நீ... இன்னைக்கு அவள் எங்கே போனானே தெரியலையே?இத்தனைக்கும் நீ ஒருத்தி தான் டி காரணம்.

எங்கம்மா அருவாமனையை கழுத்தில் வச்சிருந்தால் உடனே வெட்டிக்கொண்டு செத்துடுவாங்களா?எனக்கு தெரியாதா என் அம்மாவை பற்றி...

படிச்சு படிச்சு சொன்னேன் இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம்.எனக்கு
கல்யாணம் ஆயிடுச்சு குழந்தை இருக்கு இன்னொரு பொண்ணு வாழ்க்கை கெடுக்க வேணாம்னு,நீ கேட்டியா டி? கொஞ்சமாவது நான் சொன்னதை காது கொடுத்து நீ கேட்டியா?.

என்னை நம்பி வந்தவள் டி.அவளை தொலைச்சிட்டேன்.ஊர் உலகத்தை பொறுத்தவரை எஸ்தர் தான் என் பொண்டாட்டி.உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதை சொன்னாலும் நீ தான் இடையில் வந்தவன்னு சொல்வாங்க.

சோ...

ஒழுங்கு மரியாதையா வாய மூடிக்கொண்டு இரு.என்னை மிருகமாக்காதே...

இந்த விஷயம் என் பொண்ணுக்கு தெரிஞ்சால் என்னை பற்றி என்ன நினைப்பாள்னு தெரியலையே...

உன் யோக்கியதையே காரி துப்புற போல இருக்கு.நீ எனக்கு நியாயம் பேச வந்துட்டியாடானு கேட்டால் என் நிலை என்ன ஆக டி??? என்று மனதில் உள்ளதை எல்லாம் மகி கொட்டும் போது அவரின் செல் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.

டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்து பார்த்தவர் அட்டென் பண்ணி சொல்லு ராணி,எப்படி இருக்க?

மாமா,அத்தை பாபுலாம் நல்லாருக்காங்களா?

உன் அண்ணி பற்றி எதாவது தெரிந்ததாயென கேள்விகளை அடுக்க,இதையெல்லாம் அந்த பக்கமிருந்து கேட்ட ராணிக்கு நம்ப அண்ணன் தான் இவ்வளவு அமைதியாக பேசுறாரா?

ஒருவேளை நம்பர் மாற்றி பண்ணிட்டோமா என்று காதில் இருந்த போனை எடுத்து பார்த்தவர் அண்ணா தான் என்றவாறு தனக்குள் சொல்லியபடி மீண்டும் காதில் வைக்க...

ராணி...

ராணி.... கேட்குதா என்க..

ம் ணா...

"நெட்வொர்க் பிரச்சினை போல ணா"

இங்கு எல்லாரும் நல்லாருக்கோம் ணா.அங்கு நீங்களும் அண்ணியும் நலமா?

"ஹம் இருக்கோம் மா"

என்ன திடீர்னு உனக்கு அண்ணன் ஞாபகம் வந்திருக்கு?நான் போன் பண்ணினாலும் எடுக்க மாட்டியே மா..

அது வந்து ணா உன் மருமகனுக்கு வரும் 7 ஆம் தேதி நிச்சயதார்த்தம் இருக்கே,உனக்கு ஞாபகம் இல்லையா என்று ராணி கேட்க,அட ஆமா இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு.

வேலையில் இருக்கிற டென்ஷன்ல அதை மறந்துட்டேன் மா.அங்கு சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் சொல்லியாச்சா என்று மகி கேட்க,ஆச்சு ணா.நானும் மாமாவும் தான் போய் சொல்லிட்டு வந்தோம்..

ஓஓஓ சரி மா..

நீங்கள் திருச்சி ரீச்சாகும் போது சொல்லு நான் வந்துடுறேன் மா.ஹம் ணா அண்ணி என்று ராணி தயங்க..

அதை பார்க்கலாமென்று அழைப்பை துண்டித்தவர் கண்ணீரோடு நிற்கும் மனைவியை கண்டு கொள்ளாமல் வெளியே சென்றார்..

மேதினூர்:

மூடியிருக்கும் கையை செழியன் விலக்க,எதிரில் இருப்பது அவளுக்கு மங்களாக தெரிந்தது.

பின்னர் கண்களை கசக்கி விட்டு பார்த்தவளோ பனிக்கட்டிகள் உறைந்தது போல் உறைந்து போய் நிற்பவளின் பின்னாலிருந்து அணைத்தவன்,எப்படி டி இருக்கு?

இந்த இடம் உனக்கு என்ன ஞாபகம் படுத்துது சொல்லு பார்க்கலாம்?

ஒரு நாள் நள்ளிரவில் ஒரு பொண்ணு கனவு கண்டு என்கிட்ட கனவில் நடந்த விஷயத்தையும் அந்த சூழலையும் சொன்னாள்..

அவள் கனவை நினைவாக்கணும்னு மனசு படுத்தி எடுத்துச்சு..ஏதோ என்னால் முடிந்ததை வைத்து இதை உருவாக்கியிருக்கேன்.

இந்த ஏழையோட பரிசு அவளுக்கு பிடிச்சிருக்கா?

கணவனின் ஒவ்வொரு வார்தைகளில் இருக்கும் காதலோ கோடி பூக்களை கொட்டியது போல உள்ளம் கர்வத்தில் மிதத்தாலும்,மறந்தும் வாயை திறக்கவில்லை.

அவளின் அமைதியை பார்த்தவன் ஏன் டி இப்படி?

"ஏதாவது வாயை திறந்து பேசு டி"

உன்னோட இந்த அமைதி நெஞ்சை பிளக்குது டி.தயவு செய்து ஒரு முறை உன் புருஷனை மன்னிச்சிடு டி என்று செழியன் கெஞ்ச,ஷமீராவோ சிறிதும் மனமிறங்கவில்லை

அவள் மனமோ கண்ணுக்கு முன்னால் இருக்கும் மலையை ரசிப்பதா,இல்லை பஞ்சு போன்ற மேகத்தை ரசிப்பதா, இல்லை இயற்கை எழிலோடு இருக்கும் அந்த சூழலை ரசிப்பதாக,இல்லை கணவனின் காதலை ரசிப்பதா?என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனாள்.

மேகங்களோ வெண் போர்வை போல அந்த உயர்ந்த மலையில் அங்கங்கே இருப்பதை பார்த்தவளுக்கு கையை நீட்டி அதை தொடணும் போல எண்ணம் வர அவளையும் மறந்து வலது கையை நீட்டினாள்.

மனைவியின் செய்கையை கண்டவனோ அவள் நினைப்பது புரிந்ததும் குனிந்து அவளை தூக்க, இப்போது முன்பை விட உயரத்தில் இருப்பது போல தோன்றவும் இரண்டு கைகளை விரித்து கண்களை மூடி அந்த சூழலை ரசித்தாள்.

செழியனோ கையிலிருப்பவளை ஒரு சுத்து சுற்ற மேக கூட்டத்தில் ஒரு பகுதி அவளை தழுவி செல்லும் போது கண்களை திறந்தவளோ இயற்கையின் பேரழகில் தன்னையே தொலைத்தாள்

"மேலும் இரண்டு நாட்கள் கடந்திருந்தது".

அந்த இரண்டு நாளிலும் மகாராணிக்கு சேவகன் போல ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மனைவிக்கு பணிவிடை செய்ய,கணவனை பார்க்க பாவமாக இருந்தாலும் ஷமீரா மட்டும் மனமிறங்கி வரவில்லை.

வழக்கம் போல அதிகாலையில் எழுந்து மாடிக்கு வந்தவள் இயற்கையை ரசிக்கும் போது இந்தா டி என்று ஒரு கப்பை நீட்டியவன் பேக்கிங் பண்ணிட்டு ரெடியாகு.நாம ஊருக்கு கிளம்பணுமென்க...

அவளோ காபியை ரசித்து குடிக்க..

"சண்டாளி"

இன்னும் எவ்வளவு தான் டி நான் கெஞ்ச?

பெண் மனம் இளகியதுனு எந்த பரதேசி பயல் சொன்னது?அந்த நாய் மட்டும் கையில் கிடைச்சது அடிச்சே கொல்லுவேன்.

ஆளை பார்க்க தான் சாப்ட் போல இருக்காள்.ஆனா கோவத்தில் பெரிய சொர்ணாக்காவா இருக்காளே...

என்னைக்கு மனசு இறங்கி வருவாளோ என்று புலம்பிக் கொண்டே செழியன் கீழே போக, உடலில் ஏற்படுத்திய காயத்தை விட மனது காயமாக இருந்ததால் அந்த சூழலில் இருந்து அவளால் வெளிவர முடியாமல் இருந்தாள்.

சிறிது நிமிடங்கள் நின்று அந்த சுற்றத்தை ரசித்தவள் பின்னர் கீழே இறங்கி வந்து ஊருக்கு போவதற்காக பேக்கிங் பண்ணி முடித்து ரெடியாக,உள்ளே வந்த செழியனும் ரெடி ஆகி வெளியே போய் காரை எடுத்தான்.

ஷமீரா லக்கேஜோடு வெளியே வந்ததும் அதை வாங்கி டிக்கியில் வைத்தவன் பின்னர் அங்கிருந்த சுவற்றில் உள்ள நம்பரில் டோர் லாக் பண்ண,அந்த வீடு முழுவதுமே பெரிய இரும்பு கிரில்லால் மூடப்பட்டது.

இதை பார்த்தவளுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை,எப்படி இது சாத்தியம் என்று அதிர்ந்து போனாள்.

அந்நேரம் ஹாரன் சத்தம் கேட்டு ஷமீரா திரும்பி பார்க்க,ஹெல்மெட் போட்ட பெண்ணொருத்தி ஸ்கூட்டியில வந்து இறங்கியவள் வேகமாக வந்து செழியனை அடிக்க,அவனோ ஏய் செல்லம் வேண்டாம் வலிக்குது என்று சிரித்தபடியே சத்தமிட்டான்.

தாவணி பாவடையில் பாம்பு போன்ற நீண்ட பின்னலோடு அழகாய் இருப்பவளை பார்த்த ஷமீராவிற்கு கணவன் மேலே கோவமும்,யாரென்று தெரியாத பெண்ணவளின் மேலே கொஞ்சம் பொறாமையும் வந்தது....

"அய்யோ செல்லம் பிளீஸ் வலிக்குது"

உன் இளா பாவம் இல்லையா?

இது நியாயமா என்று செழியன் கதர...

இளாவாஆஆஆ..!!!

என்னை போல இளானு கூப்பிடும் அளவிற்கு உரிமையானவளா?

யார் இவள்?

போதாததற்கு செல்லம் னு இந்த மனுஷன் கூப்பிடுறாரே,என்ன சங்கதியென தனக்குள் சொல்லிக் கொண்டபடி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

செழியனை அடித்துக் கொண்டிருந்த புதிய பெண்ணவளோ எதுவும் சொல்லாமல் செழியனை அணைத்துக் கொண்டு அழ...

ஷமீராவிற்கோ எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல இருந்தது...

செழியனோ அழும் பெண்ணவளின் தலையை தடவி விட்டு சமாதானம் பண்ணியவாறு திரும்பி மனைவியை பார்க்க அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் அள்ளிப் போட்டால் கருகிவிடும் போல,அந்த அளவுக்கு அனல் அடித்தது.

ஆஹா செழியா,உன் பொண்டாட்டிக்கு பொறாமை வந்துடுச்சு டா.சூப்பரூ.. மூணு நாளா வாயை திறக்காதவள் இப்ப வெடிச்சு சிதற போறாள்.அப்படியே லிப் லாக் அடிச்சு சமாதானப்படுத்திட வேண்டியதுதான் என்க...

அவன் மனசாட்சியோ,அட மானங்கெட்டவனே இதெல்லாம் ஒரு பொழப்பா என்றதோ த்தூஊஊ என்று துப்பியது.

அழுது கொண்டிருந்தவளோ ம்ம் என மூக்கை உறிஞ்சியபடி கண்களை துடைத்தவள் பின்னர் செழியனிடமிருந்து விலகி போனவள் ஸ்கூட்டியில் மாட்டியிருக்கும் பேகை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி நிற்கும் ஷமீராவிடம் வந்து ஹலோ அண்ணி...

நான் தான் உங்க புருஷனுடைய செல்ல மான தங்கச்சி செல்லக்கண்ணு.இதை உங்களிடம் கொடுக்குமாறு உங்கள் சின்ன மாமியார் சொன்னாங்க என்று பையை நீட்ட...

என்னடா நடக்குது என்று ஷமீரா முழித்தாள்.

மனைவியின் பார்வையை உணர்ந்தவன் இந்த அறுந்தவாளு தான் வெற்றியோட மாமா பொண்ணு.என்னோட பிரியமான தங்கச்சி.மேடம் ஆபிஸ் விஷயமாக நார்த்திற்கு போயிருந்தாங்க.அதனால் தான் நம்ப பங்ஷனுக்கு வர முடியலை.

உன்னை வீட்டிற்கு கூப்பிட்டு வரச்சொல்லி ரொம்ப அடம்.நம்மால் தான் போக முடியாத சூழலென்று மனைவிக்கு விளக்க...

ஓஓஓ என்றாள்!!!

என்ன ணா மதனி இம்புட்டு அமைதியான புள்ளையா இருக்காக...பாவம்..இந்த அப்பாவி போய் உனக்கு பொண்டாட்டியா என்று வருத்தமாக செல்லா சொல்ல...

அட கிரகமே...

"இவளா அமைதி"

ஏழு ஊர் வாய் என் பொண்டாட்டிக்கு என்று தனக்குள்ளே முணவியவன் ஆமா செல்லம் உன் அண்ணி அமைதிக்கான நோபல் பரிசை வருஷா வருஷம் வாங்கிட்டு இருக்காள்.

வேண்டும்னா நீ வந்து எடுத்து போ டா.

அண்ணி ஒன்னும் சொல்லமாட்டாள் என்றவாறு மனைவியை பார்த்து கண்ணடித்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
396
பொள்ளாச்சி:

அண்ணி எதுக்கு இப்படி ஃபிரிஸ் ஆகி நிக்கிறீங்க?

ஏதாவது பேசுங்கள் என்று ஷமீராவின் கையை பிடித்து செல்லக்கண்ணு சொல்லவும்,அதில் நிகழ்வுக்கு வந்தவளோ ஹாய் என்றாள்.

அப்பாடா இப்பயாவது வாயைத் திறந்தீங்களே...ஹலோ அண்ணி நான் தான் செல்லக்கண்ணு என்கவும் நான் தான் ஷமீரா என்றாள்.அய்யோ முடியலடா சாமி என்று செழியன் சொல்லவும் முடியலன்னா போய் கார்ல உட்காரு,உன்னை யாரு இதெல்லாம் கேட்க சொல்றா??

நான் ஏற்கனவே உன் மேல கொலவெறியில் இருக்கேன் ணா. கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட சொல்லணும்னு சொன்னேன் இல்ல? நான் தானே நாத்தனார் முடிச்சு போடுவேன்னு படித்து படித்து சொன்னேன்..

உன் இஷ்டத்துக்கு நீ போய் மதுரையில் கல்யாணம் பண்ணிட்டு வந்தயில்ல இதுக்காகவே உன்னை லெப்ட் ரைட் வாங்கணும் தெரியுமா என்கவும், மறந்திருந்தவளை நம்ப தான் மூட்டி விடுறோமோ என்று செழியன் நினைக்கவும்,உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு நல்லா கேக்குது.அந்த மானங்கெட்ட மைண்டை கொஞ்சம் அடக்கி வை ணா.

இப்போதைக்கு அண்ணி கூட என்னை பேச விடுங்க என்றவள்,அப்புறங்க அண்ணி நீங்களும் நானும் ஒரே டிபார்ட்மெண்ட் தான்.நானும் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் என்க.. அப்படியா சூப்பர் எங்க வேலை பார்க்கிற?...

"பெங்களூர்ல"

உங்க கல்யாணத்தப்போ அண்ணன் கால் பண்ணி சொல்லுச்சு.நான் தான் மும்பை வரைக்கும் மீட்டிங்க்காக போயிருந்தேன்.அதனால் தான் வர முடியலை.

உங்களுக்காக நிறைய கிப்ட் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன்.அதை நீங்க வீட்டுக்கு வரும்போது தான் கொடுப்பேன்.இது அப்பா அம்மா உங்களுக்காக கொடுத்தாங்க.

அவங்க ரெண்டு பேரும் நம்ம பழனியில் இருக்கிற முருகு செல்லத்தை விசிட் பண்றதுக்காக கோயிலுக்கு போயிருக்காங்க.நேர்ல வர முடியலையாம்,தவறாக எடுத்துக்க வேண்டாமாம் அப்படிணு உங்கள் சின்ன மாமியாரும் மாமனாரும் சொன்னாங்க.

அண்ணனே எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு சொல்லுச்சாமே என்கவும்,அம்மாடி கொஞ்சம் மூச்சு விட்டு பேசு.உன் வேகத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று ஷமீரா சொல்ல,ஹா என்று சத்தமாக சிரித்து விட்டாள்.

இன்னும் எத்தனை நாள் உனக்கு லீவு வாலு என்கும் செழியனுக்கு ஒன் வீக் எடுத்துட்டு தான் ணா வந்திருக்கிறேன். வொர்க் ப்ரம் ஹோம் தான்.வேணும்னா எக்ஸ்டெண்ட் பண்ணினாலும் பண்ணுவேன்.

அந்த ஆப்ப சட்டி தலையன் லண்டன் ப்ராஜெக்டுக்காக போயிருக்கிறான் அதனால ஜாலிதான் என்கவும்,இரு அவங்க கிட்ட போட்டு கொடுக்கிறேன் என்று செழியன் சொல்ல ,என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி என்று செல்லக்கண்ணு பாட, ஷமீராவோ இருக்கும் மனநிலை மறந்து சத்தமாக சிரித்து விட்டாள்.

ஏய் வாலு நேரமாயிடுச்சு நான் கிளம்புறேன் என்கவும் சரி ணா பார்த்துப் போங்க.எட்டரை மணிக்கு எல்லாம் நல்ல நேரமாம்.அந்த நேரத்தில் தான் அம்மாவும் கிளம்ப சொல்லுச்சு. அதுக்காக நானும் வேகமாக வந்தேன்.

ஹம் சரி சரி என்றனர்.

வாடா வீட்டுக்கு என்று ஷமீரா கூப்பிட,கண்டிப்பா ஒரு நாள் வருவேங்கண்ணி...

பின்னர் அவள் ஸ்கூட்டியிலும் இவர்கள் காரிலும் அங்கிருந்து புறப்பட்டனர். மெயின் ரோடு வர வரைக்கும் வந்தவள் அவள் ஊருக்கு செல்லும் வழியில் செல்லக்கண்ணு வளைந்து செல்ல இவர்கள் வனிச்சூரை நோக்கி புறப்பட்டனர்.

சிறிது நிமிடம் வரைக்கும் காரில் எந்த பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்தது.அப்பொழுது பிளேயரை ஆன் பண்ண கண்மணியே பேசு மௌனம் என்னை கூறு என்று பாடல் ஓட, சிச்சுவேஷனுக்கு ஏத்த போல ஆண்டவர் பாடுகிறார் என்று விசில் அடித்தபடியே செழியன் சொல்ல,ஷமீராவோ அதையெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை.

செல்லம் உன் அண்ணனை தான் காதலிச்சது.ஏன்னு தெரியல கண்ணனுக்கு விருப்பம் இல்லை டி. வெற்றி கூட பிரண்டா ஆன பிறகு அவங்க ஊர் கோயில் விசேஷத்துக்காக எங்களை கூப்பிட்டிருந்தான்.அப்ப கண்ணனை கூப்பிட்டு நானும் இந்த ஊருக்கு வந்திருந்தேன்.

செல்லம் அப்போ 12த் படிச்சுட்டு இருந்துச்சு.என்னமோ தெரியல அந்த முரட்டுப் பயலை பார்த்தவுடனே செல்லத்துக்கு புடிச்சிருச்சு.அது மனசுல உள்ளதை கோயில்ல பூஜை நடக்கும்போது சொன்ன உடனே திருட்டு பயல் பிள்ளையை ஓங்கி அறைஞ்சிட்டான்.

நான் வெளியே வந்து போன் பேசிட்டு இருக்கும் போது இவன் வந்து உடனே ஊருக்கு கிளம்பனும்னு ஒத்த கால்ல நிக்கிறான்.இருடா திருவிழா முடிச்சிடும் போலாமென்றால் கேட்கவே இல்லையே.அப்புறம் வேற வழி இல்லாம கிளம்பி ஊருக்கு வந்த பிறகு தான் இது போல செல்லம் பேசியதை சொன்னான்.

சரிடா அதுக்கு ஏன்டா அடிச்சேன்னு கேட்டால்,பின்ன என்னடா படிக்கிற புள்ளைக்கு யாருனு தெரியாத ஒருத்தனை பார்த்த உடனே காதல் கீதல்னு சுத்திட்டு வரது.

அதான் கடுப்பு வந்துடுச்சுனு சொன்னவன் அதுக்கப்புறம் பொள்ளாச்சிக்கு வரவே இல்லை.இப்ப கண்ணனுக்கு நிச்சயதார்த்தம் என்று நான் தான் சொன்னேன்.முதல் காதல் தோல்வியை தாங்க முடியாது இல்லையா??

எனக்கும் கஷ்டமா தான் இருக்கு.ஆனால் என்ன பண்றது கண்ணனுக்கு மலர் என்று கடவுள் எழுதி இருக்கார் போல.அதை யாரால் மாற்ற முடியும்??

செல்லத்துக்கு நல்ல மாப்பிள்ளை வராமலா போயிடும் என்க...கணவன் சொல்லியதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு வந்தாளே தவிர மறு வார்த்தை பேசவில்லை.

வனிச்சூர்:

"சார் வேண்டாம் சார்"

எங்க அப்பாவுக்கு கால் பண்ணாதீங்க என்று அவன் கெஞ்ச,அதையெல்லாம் சட்டை பண்ணாத கனலரசன் அந்த நம்பருக்கு கால் பண்ணினார்.

கால் கட் ஆகும் நேரத்தில் அந்த பக்கம் அட்டென்ட் பண்ணியவர் ஹலோ சொல்லுடா என்க,இது கேள்விப்பட்ட குரலாக இருக்கே என்று யோசித்தவர் ஹலோ எங்க,டேய் நான் தான் சேகரு டா.போன் உடைஞ்சிடுச்சு நம்பர் இல்லன்னு சொன்னியே மறந்துட்டியா என்றார்.

இது நம்ம மேலூர் சேகர் தானே என்று யோசனையானவர் சேகரு இப்போ எங்கடா இருக்கிற என்க..இங்கு டவுன்லதான் இருக்கேன் டா.

ஓஓஓ,உடனே நம்ம ஊருக்கு திரும்பும் இடம் கிட்ட வாயேன் என்று சொல்லி கனலரசன் அழைப்பை துண்டித்தார்.

என்னாச்சு கனலு என்று தம்புசாமி தாத்தா கேட்க,இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க பா என்றவர் ஏன் தம்பி நம்ம மேலூர் சேகரோட பையனா நீ என்க,ஆமாங்க சார்.

உன்ன நான் பார்த்ததே இல்லையேப்பா?

நான் வெளியூர்ல தங்கி படிச்சேன். கண்மணிக்காக தான் இந்த ஸ்கூல்ல இப்போது வேலை பார்க்கிறேன் என்று கீழே குனிந்து கொண்டே சொல்லும் போது புல்லட் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க,அங்கே அந்த பையனின் அப்பா சேகர் தான் வந்து கொண்டிருந்தார்.

வேகமாக வந்து வண்டியை நிறுத்தியவர் என்ன கனலு என்றவர் அங்கிருந்த தனது சின்ன மகனை பார்த்து ராஜா நீ என்ன டா இங்க நிக்கிற என்றவாறு வண்டியை ஸ்டேண்ட் போட்டு கீழே இறங்கி வர கனலரசன் நெற்றியை தடவி யோசனையாக..

தம்புசாமி தாத்தாவோ பட்டென்று விஷயத்தை சொன்னார்.

அதை கேட்ட சேகரோ மகன் என்று பார்க்காமல் நடுரோட்டிலே பளாரென்று இரண்டு அறையை விட்டவர் என்ன வேலை பண்ணி வச்சிருக்க.

இன்னும் ரெண்டு நாள்ல பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்னு நேத்தி தான் வந்து சொல்லிட்டு போனான்.அதுக்குள்ள இப்படி இழுத்து வைத்திருக்கிறாயே நீ எல்லாம் பொட்ட புள்ள கூட பொறந்தா உனக்கு அருமை தெரியும்.

கனலு தப்பா நினைச்சுக்காதடா..

இல்ல டா சேகரு...உன் குரலை கேட்ட பிறகு எனக்கு சங்கடமாயிடுச்சு என்று கனலரசன் வருத்தமாக சொல்ல,அடேய் இதுல நீ சங்கட பட என்ன டா இருக்கு. ஆக வேண்டிய வேலையை பாரு.

இனி இந்த கழுதையால் எந்த பிரச்சனையும் வராது போடா என்கவும் சரி டா சேகரு,தங்கச்சியை கூப்பிட்டு வந்துடு டா என்க,அதை நீ சொல்லனுமா??கண்டிப்பா முதல் ஆளா வருவேன் நீங்க கிளம்புங்க என்றார்.

அவர்களும் அங்கிருந்து சென்று விட இவர்களும் வீட்டிற்கு வந்தனர்.வேகமாக வந்து வண்டியை நிறுத்திய கண்ணனோ வீட்டிற்குள் வந்தவன் கண்மணிஈஈ என்று கத்தினான்.

வந்ததும் வராதமாக மகனின் கோபமான குரலை கேட்டு புவனாவும் ரஞ்சனியும் என்னாச்சு சின்னவனே என்க,கண்மணியை வர சொல்லு மா..

மாடியில் பாபுவோடு போன் பேசிக் கொண்டிருந்தவளோ ஜன்னல் வழியாக கண்ணன் குரலை கேட்டு அண்ணன் எதுவோ சத்தம் போடுது..

வந்து பேசுறேன் என்று கட் பண்ணி விட்டு கீழே வரவும் வேகமாக போனவன் தங்கையின் கன்னத்தில் பளாரென்று அறைந்தான்.

இதை பார்த்து தாய்கள் இருவரும் சின்னவனே ஏண்டா பிள்ளையை போட்டு அடிக்கிற என்க..ரெண்டு பேரும் வாயை மூடுங்கம்மா..24 மணி நேரமும் அக்காளும் தங்கச்சியும் அடுப்பை கட்டிக்கிட்டு சாவுங்க.

பொம்பள புள்ள வீட்டில் இருக்கிறதே என்ன நடக்குதுன்னு பார்க்க மாட்டீங்களா?அந்த ராஜா பையன் உன்னிடம் வம்பு பண்ணுனானா?

வீட்ல இத்தனை பேர் இருக்கிறோமே சொல்லணும்னு அறிவு கிடையாதா?அவன் என்னன்னாக்க நீயும் அவனும் காதலிச்சதாகவும்,நிச்சயத்தை நிறுத்தத்துக்காக வரேன்னு சொல்லிட்டு எங்க பின்னாடி வரான்.

இவ்வளவு தூரம் நடந்திருக்கு ஒரு வார்த்தை கூட வாயை திறக்கலை என்று மீண்டும் அறையப் போக..

கண்மணியோ பயத்தில் அழுது கொண்டே பின்னாடி நகர்ந்தாள்.

நல்ல வேளை அது அப்பாவோட ஃப்ரெண்ட் பையன் என்கிறதால போயிடுச்சு.இதே வேற ஒருத்தனா இருந்தாக்க மாப்பிள்ளை வீட்டுக்காரன் வரும்போது இந்த செய்தி எல்லாம் கேள்விப்பட்டால் என்ன நினைப்பாங்க என்று சத்தம் போட...

சின்னவனே போதும் விடு என்றவர் கவிதா என்று தம்புசாமி தாத்தா கூப்பிட, உள்ளே படித்துக் கொண்டிருந்தவளோ வேகமாக ஓடி வந்தாள்.

உங்க ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கிறானே அந்த ராஜா,அக்கா கிட்ட வம்பு பண்ணான என்கவும் அவளோ திருத்திருவென முழித்தாள்.

உன்ன தானே கேக்குறேன் அங்க முழிச்சா என்ன சங்கதி என்று அதட்ட ஆமா தாத்தா ரெண்டு வாட்டி அக்கா கிட்ட பஸ்ல பேசினாரு,அது மட்டும் தான் எனக்கு தெரியும்..

ஓஓஓ நீயும் கூட ஒத்து ஊதிருக்கியா என்று அவளையும் அடிக்க போக டேய் சும்மா இருடா கொஞ்சம் கோபத்தை அடக்கு.பொம்பள புள்ள விஷயம் சுமூகமா தான் இருக்கணும் புரியுதா.

நம்ம புள்ள ஒரு தப்பும் பண்ணல அது நமக்கு தெரியும் என்று இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கனலரசன் சொல்ல,நீங்கள் சொல்றது எங்களுக்கு நியாயமா இருக்கு.

நீயும் நானும் நம்புவோம் எல்லாருமே நம்புவார்களா என்று கடுப்பாக கேட்கவும்,பேரன் சொல்வது வாஸ்தவம் என்பதால் தம்புசாமி தாத்தாவும் எதுவும் சொல்லவில்லை.


வீழ்ந்தேனடி..
 
Active member
Joined
May 9, 2025
Messages
114
Shamira ennunum nalla vechu seyumma
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top