• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
டெல்லி-மினிஸ்டர் அமர்நாத் வீடு:

ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்து ஒரு வாரம் ஹாஸ்பிடலில் டாக்டரின் கண்காணிப்பில் வைத்திருந்து மீண்டும் டாக்டர் கர்ணன் செக் பண்ணி பார்க்க குழந்தை நல்லா இருக்காள் என்று சொன்ன பிறகு பேத்தியை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு அமர்நாத் ஏற்பாடு பண்ணியிருந்தார்.

அந்த பங்களாவோ வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க குழந்தையின் நலனுக்காக பூஜை செய்வதற்காக வந்திருந்த பண்டிதர்களுக்கு எண்ணற்ற பரிசுகளை அமர்நாத்தும் அவன் பொண்டாட்டியும் அள்ளி கொடுத்தனர்.

சேது ஒரு நாளைக்கு அந்த டாக்டர் பேமிலியை நம்ம வீட்டுக்கு லஞ்சுக்கு வர சொல்லு நம்ப புள்ளையோட உயிரை அந்த பையன் காப்பாற்றி கொடுத்து இருக்கிறான் அவன் என்ன கேட்டாலும் கொடுக்குறதுக்கு நம்ம கடமைப்பட்டிருக்கோம்.

ஆனா அந்த பொண்ணுங்களை பார்த்தால் எதுவும் வாங்குற போல தெரியல ஒருநாள் நம்ம வீட்டில் சாப்பிட கூப்பிட்டு பெருமை படுத்தலாமே என்கவும்,சார் டாக்டர் ருத்ரனுடைய அப்பாயிண்ட்மெண்ட் பற்றி ஹாஸ்பிடல் விசாரிச்சேன்.

இன்னும் ஒரு மாதம் வரைக்கும் அவர் எங்குமே நகர முடியாது.அவருக்கு சில ஆபரேஷன் இருக்கு என்று சொல்ல, அப்படியா சரி நம்ம குழந்தையும் கொஞ்சம் நல்லா ஆகட்டும் அவளை நேரடியாக கூப்பிட்டு அவங்க வீட்டுக்கு போகலாம் என்க,சரிங்க சார் என்றான்.

வனிச்சூர்:

கண்டிப்பா உன்கிட்ட இதைவிட ரொம்ப மோசமாக நடந்துப்பேன் டி.ஆளு பார்க்க எப்படி இருக்கேனோ அதை விட பல மடங்கு என் செயல் இருக்கும்.அது உன் கிட்ட மட்டுமே.அதனால் நீ என்னை சமாளிக்க ரெடியா இருக்கிறது ரொம்ப நல்லது செல்லமென்று கண்ணடித்து சொல்ல...

ஆமா "இவரு பெரிய வீராதி வீரன் சூராதி சூரன்" இவருக்கு நாங்க பயப்படுறாங்க போயா போயா என்று ஷமீராவும் வாயாட,ஓஓஓ அப்படியா டி.

சரி டி இன்னைக்கு பாத்துரலாமா என்க, பார்க்கலாமே அப்படி என்ன பண்ணிடுவீங்க?

இந்த கொய்யாக்கு நான் பயப்பட என்று ஷமீரா முறைக்க,இந்த வாய் அப்ப என்ன சொல்லுதுன்னு பார்க்க தாண்டி போறேன் என்றவன்,சாப்பிட்டு எழுந்து வாஷ்பேஷனில் போய் கையை கழுவிட்டு வந்து மனைவியின் இடுப்பில் சொருகியிருக்கும் முந்தானை எடுத்து அதில் கை மற்றும் வாயை துடைத்தான்.

கணவன் இப்படி செய்வான் என்பதை எதிர்பார்க்காதே ஷமீராவோ அதிர்ந்து போய் நிற்க,காலையிலேயே மல்லிப்பூ வச்சிட்டு இப்படி கும்முனு இருக்கியே மனசு எப்படி தடுமாறுது தெரியுமா டி என்கவும் அதில் சுதாரித்தவள் போயா அங்கிட்டு...

போய் சோபாவில் உட்காருங்கள் டீ எடுத்துட்டு வரேன்னென்க,சரிங்க பொண்டாட்டி.நீங்க சொல்லிட்டீங்க இல்லையா அதுக்கு அப்பீலே கிடையாது என்று சிரித்துக் கொண்டே ஹாலுக்கு போனவன் டிவியை ஆன் பண்ணிட்டு வந்து உட்கார்ந்தான்.

சிறிது நிமிடத்தில் ஷமீராவும் டீ டம்ளரோடு அங்கு வந்தவள் 2 அடி தள்ளி நின்று டீயை நீட்ட,மனைவியின் முன்னெச்சரிக்கையை பார்த்து சிரித்தவன் வீட்டில் பூஜை இருக்கு செல்லம்,அதனால் இப்போது மாமாக்கு ரொமான்ஸ் பண்ண மூடு இல்லை.

உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் தாராளமா கிட்டே வந்து கொடு என்கவும் சாமி பேரை சொல்வதால் ஷமீராவும் நம்பி அருகில் வர,அவளிடமிருந்து டீ வாங்கும்போது வலது கையால் அவளின் கையை பிடித்து இழுத்து தன்னோடு சோபாவில் உட்கார வைத்தவன் மேடம் ரொம்ப தற்காப்பு பிளானோடு இருக்கீங்களோ என்று அவள் தலையோடு முட்டி கேட்டவன் முதல்ல நீ டீ குடி என்கவும் எதேஏஏ டீ யாஆஆஆஆ என்றவள் முடியாது என்று தலையை அசைத்தாள்.

நீயா ரெண்டு வாய் குடிச்சிட்டு கொடுத்தா நல்லது செல்லம்.இல்லன்னா உன் புருசன் அவனுடைய ஸ்டைல்ல தான் உனக்கு டீ குடுக்குற போல இருக்கும்.உனக்கு எப்படி வசதி என்பதை நீ யோசிச்சுக்கோ என்றான்.

ஐயோ இளா எனக்கு டீ பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா ப்ளீஸ் எனக்கு வேண்டாமென்க,முடியாது இந்தா நீ குடிச்சிட்டு கொடு அப்பதான் நான் குடிப்பேன் என்றான்.

ஏன் தான் இப்படி பண்ணுறீங்க?

எனக்கு பிடிக்காத ஒன்றை செய்ய சொல்வது எந்த விதத்தில் நியாயம்?என்க,உனக்கு பிடிக்காதுனு எனக்கு நல்லா தெரியும் தான் செல்லம் ஆனா எல்லாரும் சொல்லுவாங்க இல்ல பொண்டாட்டி எச்சில் பட்டால் அது தேவாமிர்தம் போல இனிக்கும்னு அதை நானும் செக் பண்ணி பார்க்க வேண்டாமா?

"அதுக்காக தான் டி சொல்றேன்"

நீ சும்மா ஒரு வாய் குடி உன் இதழ் இந்த கோப்பையில் பட்டாவே அது போதும் மாமா சொர்க்கத்திற்கு போன போல ஆகிடுவேனென்று கண்ணடித்து செழியன் சொல்ல....

அவன் சொன்னதை கேட்டவள்,ஆமா எப்போ பார்த்தாலும் மாமா மாமான்னு சொல்றிங்களே எவன் அந்த மாமா எனக்கு தெரியாம என்று கணவனை வெறுப்பேத்தி பார்ப்பதற்காக ஷமீரா கேட்க...

"சொல்லால் அடித்த சுந்தரி மனம் சுட்டுவிட்டு கோலம் என்னடி" என்று செழியன் பாட..ஐயோ கடவுளே நான் கேட்ட கேள்விக்கு நீங்க என்ன பாடுறீங்களென்று சொல்லவும் சீக்கிரம் நீ குடிச்சிட்டு குடு டி..

டீ வேற ஆறுது.

அடி மக்கு பொண்டாட்டி உன்னோடு செல்ல புருஷன் தான் டி அந்த மாமா என்று மனைவியின் நெஞ்சில் கையை வைத்து சொல்ல அதுக்கு எதுக்கு இது என்று கணவனின் கையை விரலை தட்டி விட்டவள்,நீ டீ குடிக்க வேண்டாம் போயா என்கவும் எனக்கு டீ குடித்தே ஆகணும் டி என்று பிடிவதாக செழியன் சொல்ல,ஏன் தான் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க என்று சினுங்கினாள்.

அப்பொழுது,யாருமா வீட்ல?

வீடு தான் இவ்வளவு பெரியதாக இருக்கு வந்தவங்கள வாங்கன்னு சொல்றதுக்கு இந்த வீட்ல மனுஷால் கிடையாது?

இந்த லட்சணத்தில் புதுசா மருமகள் வேற வந்திருக்கு என்றவாறு உள்ளே வந்த கண்மணி,அங்கிருந்த செழியனையும் ஷமீராவையும் பார்த்தவள் ரெண்டு புளி மூட்டையும் இங்கதான் இருக்கீங்களா..

ஏன் வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு என்கவும்,எதற்கு டி இப்படி வாசலில் இருந்தே கத்திட்டு வர என்று செழியன் கேட்க,என் வாய் நான் கத்துறேன் உன்னை யாரு கேட்க சொன்னா?

காதில் ஏதாச்சும் தக்கை வச்சி அடைச்சிக்க வேண்டியது தானே என்றவள்,ஏன் மாமா எரும மாடு போல வளர்ந்து இருக்கியே கொஞ்சம் கூட உனக்கு வெக்கமா இல்லை?

இப்படி நடு வீட்டில் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்களே எங்களை போல சின்ன புள்ளைங்க எல்லாம் பார்த்தா என்ன ஆவது என்று கண்மணி சொல்ல,உன்னை எவன் டி பார்க்க சொன்னா என்றான்.

இப்போ பாருடா மாமாயென மனதிற்குள் நினைத்தவள் வா வா உன் மவன் அடிக்கிற கூத்தை வந்து நீயே பாருத்தை என்று சொல்ல,அய்யோ அம்மாவா என்று பதறி அடித்து செழியன் எந்திரிக்க,அத்தை மகனை பார்த்து நையாண்டி காட்டியவள் தொப்பி தொப்பி என்று சிரித்தபடி வாசல் பக்கம் பார்க்க கவிதாவோ இடுப்பில் கூடையோடு வந்து கொண்டிருந்தாள்.

இந்த பனைமரம் ஏன் இப்படி நிக்குது என்றவாறு உள்ளே வந்த கவிதா கேட்கவும்,என்ன டி அக்காளும் தங்கச்சியும் காலையே கிளம்பி வந்துட்டீங்களா எனக்கு லந்து கொடுக்க என்றான்.

ஆமா எங்களுக்கு வேற வேலை வெட்டி கிடையாது இந்த மொகரகட்டைக்கு லந்து கொடுக்க வராங்களென்று கவிதா சொல்ல,ஆளு அரைக்கா படி இருக்க...

உனக்கு இவ்வளவு வாய் எப்படி டி வந்தது என்கவும்,அதுவா போனவாரம் சந்தையில் வாய் விற்றார்கள்.அதில் நாலு வாங்கி நேற்று தான் ஆபரேஷன் பண்ணி தச்சிட்டு வந்தேன்..

வேணும்னா சொல்லு மாமா உனக்கு நாலு வாய் தைக்க சொல்றேனேன்று அத்தை மகனிடம் கவிதா சொல்ல அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு ஷமீராவுக்கு சிரிப்பு தாங்கவில்லை.

ஏன் கா வீட்டுக்கு ரெண்டு பேர் வந்திருக்குமே ஒரு டீ காபி கொடுப்போமென்றுலாம் உனக்கு தெரியாதா என்று கவிதா கேட்க,உங்க வீட்டுக்கு நீ வந்து இருக்கீங்க இதை நான் கேக்கணுமாடி என்றாள்.

ஐயோ அக்கா நெஞ்ச நக்கிட்டியே என்று கவிதா ஆக்சன் பண்ண இந்த அடங்காத மாட்டுக்கு எவன் தான் வந்து மாட்ட போறான்னு தெரியலையே ஆண்டவா என்று செழியன் மேலே பார்த்து சொல்ல,உனக்கு அந்த கவலை எல்லாம் வேண்டாம் யா...

அது என்னை கட்டிக்க போறவன் தான் வருத்தப்படணும் என்கவும் சொல்ல முடியாது டி...விதி எப்போ எப்படி மாறுமென்று தெரியாது.நானே உன்னை ரெண்டாம் தாரமாக கட்டுனாலும் கட்டுவேன் என்று செழியன் சிரிக்க..உன் முகர கட்டைக்கு அக்காவே பெருசு.

இதில் நான் வேற உனக்கு இரண்டாம் தரமா கேக்குதா என்றவள் கையில் இருந்த கூடையை தூக்கி செழியனின் மேல் எறிய அதை கேட்ச் பிடித்தவன் என்ன டி இவ்வளவு வெயிட்டாக இருக்கென்றான்.

உங்க அம்மாச்சி தான் கொடுத்து அனுப்பிருக்கு.மதியம் சமையலுக்கு காய் எல்லாம் இருக்கு மாமா என்கும் போது வீட்டிற்குள் வந்த வானதியோ தனது அண்ணன் மகள்கள் இருப்பதை பார்த்து வாங்கடா எப்போ வந்தீங்களென்றார்.

அதற்கு கவிதாவோ,நான் வந்து 18 வருஷம் ஆகுது அக்கா வந்து 25 ஆகுதே,இவ்வளவு வருஷமும் நீ கோமாவில் இருந்தியாத்தை என்க,வாய் வாய் என்று சிரித்தவர்,சாப்டீங்களா டா என்க...

எங்கே உன் அண்ணிங்க சோறு போட்டாங்க? அத்தை வீட்டுக்கு போங்க டி என்று வெறும் வயிற்றோடு எங்களை துரத்தி விட்டுட்டாங்க.

இங்க வந்தாக்கா ஒரு டீக்கு கூட வழியில்லை.ஏன் ஒரு டம்ளர் பச்ச தண்ணிக்கு கூட வழியில்லையே என்று ஷமீராவை பார்த்து கண்ணடித்துக் கொண்டு கவிதா சொல்ல,இதை கேட்ட வானதி அடியாத்தி எனக்கு மாமியார் இல்லாத குறைய நீதான் டி அம்மா தீர்த்து வைக்கிற என்று சிரித்தார்.

அம்மாடி சமீரா(ஷமீரா) தோட்டத்துல கஞ்சி தண்ணி இருக்கு,உன் தங்கச்சிக்கு எடுத்துட்டு வந்து ரெண்டு குண்டான் கொடு.நல்லா குடிப்பா என்று சொல்ல,அம்மா சூப்பர் மா என்று செழியன் சிரிக்கவும்,முதல்ல உன் மகனுக்கு கொடு இன்னும் கொஞ்சம் வளந்துட்டு போகட்டுமென்றாள்.

அப்போது "மாமா மாமா" என்று செழியனை கூப்பிட "என்னடி?" என்றான்.
கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா?
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
எல்லாரும் இருக்கோமே,அது தெரிஞ்சும் இப்படி அக்காவை திங்கிற போல பாக்குறியே என்று செழியனுக்கு மட்டும் கேட்கும்படி கவிதா கேட்க,என் பொண்டாட்டி டி.நான் ரசிப்பேன் உனக்கு என்னடி வந்துச்சென பல்லை கடிக்க, ஓரமா போய் ரசி யா....

சின்ன பிள்ளைகள் இருக்கிற இடத்தில் என்ன வேலை பண்ணிட்டு இருக்க என்கவும்,தெரியாத்தனமா சின்னவளா பிறந்துட்ட டி.ஆனால் பேச்சு நூத்து கிழவி என்று சொல்ல,ஆமா இளா எங்க அப்பாவும் சொல்லுவாரு அவங்க அம்மா கவிதா போல தான் இருப்பாங்களென்றார்.

எதேஏஏஏஏ...என்னை பாத்தால் கிழவி போலயா இருக்கு மாமா என்று கவிதா முறைக்க,இல்லடி செல்லம் அழகி போல தாண்டி இருக்க என் ராசாத்தி என்று கவிதாவின் கன்னத்தைப் பிடித்து ஆட்டிக்கொண்டே செழியன் சொல்ல, அக்கா உன் புருஷன் மேல கேஸ் போட்டு விடுவேன்..

அனாவசியமா என்னை தொட்டு பேச வேண்டாம் என்று சொல்லு என்கவும் அம்மா தாயே உங்க ரெண்டு பேர் பஞ்சாயத்துக்கு நான் வரலடி யம்மா. என்னை ஆள விடுங்களென்று ஷமீரா கையெடுத்து கும்பிட என்னக்கா இப்படி சொல்லிட்ட...

அந்த தொடப்பத்தை எடுத்துட்டு வந்து மாமாவ நாலு சாத்து சாத்துவன்னு மனசுல எவ்ளோ எதிர்பார்ப்போடு இருந்தா,இப்படி புஸ்வானத்தில் தண்ணீர் ஊற்றினபோல ஆக்கிட்டியேஏஏஏ?

நீ எல்லாம் கூட பிறந்தவளா என்று கவிதா கேட்க,அடி சண்டாள சிறுக்கி என்றவன் எட்டி கவிதாவின் சடையை பிடித்து முறுக்க,ஐயோ மாமா வலிக்குது விடு மாமா விடு மாமா என்று கத்தினாள்.

அப்போ ஒழுங்கா மன்னிப்பு கேளுடி என்கவும்,நான் என்ன வெங்காயத்துக்கு மன்னிப்பு கேக்கணும்?கனவுல கூட நினைக்காத என்றாள்.

மகனின் செயலை பார்த்து சிரித்தவர் தம்பி முடியில் கை வைக்காதே பிள்ளைக்கு வலிக்கும் என்கவும், அதானே,உன் அண்ண மவள் சொல்றதெல்லாம் கேட்டுட்டு அவளை கண்டிக்காத என்னையே சொல்லு என்று கவிதாவின் ஜடையை விட, ஆத்தாடி!!!!

"உலக்கை கையில மாட்டிகிட்டு என் கழுத்து பட்டப்பாடு எனக்கு தானே தெரியும்"

அய்யோ ஆத்தா என்று சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தவள் எக்கா உன் புருஷன் பேசினதை ரசித்த வரைக்கும் போதும் ஒரு வாய் டீ குடுத.

உங்கொம்மா அத்தை வீட்டுக்கு போங்கடின்னு நீராகாரம் கூட கொடுக்கவில்லை தெரியுமா என்று வயிற்றை தடவிக் கொண்டு கவிதா சொல்லவும் எல்லாரும் சிரித்து விட்டனர்.

சின்ன குட்டி டீ என்னடி டிபனே அக்கா செஞ்சு வச்சுருக்கேன் வா சாப்பிடலாம் என்று ஷமீரா கூப்பிட,தாயே,என்கூட பிறந்த புண்ணியவதியே இந்த வார்த்தையை முன்னாடியே சொல்லிருக்கிறது இல்லையா?

உன் புருஷன் கிட்ட பேசி பேசி தொண்டை தண்ணி வத்தி என் ஆவியே போயிடுச்சு கா...சீக்கிரம் வா என்கவும் சின்ன குட்டி உன் மாமா தீனி வாங்கிட்டு வந்திருக்கிறார் எடுத்துக்கடி என்று வானதி சொல்ல,சரித்தை சரித்தை என்று கிச்சனுக்குள் போனாள்.

கண்ணு நீயும் வாடி சாப்பிடலாம் என்று ஷமீரா கூப்பிட,எனக்கு வேணாம் டி இன்றைக்கு காலையில் நான் சாப்பிடுவதில்லை.மதியம் படையல் முடிஞ்ச பிறகு சாப்பிடுகிறேன் டீ மட்டும் கொடு.அத்தை டீ குடிக்க மாட்டாங்க ஷமீ,மோர் கலக்கி உப்பு போடாமல் கொண்டு வா என்கவும்,சரி டி என்றாள்.

அப்பொழுது செழியனுக்கு கால் வர பக்கத்தில் இருந்த போனை எடுத்து யார் என்று பார்த்தவன்,என்ன இந்த நேரத்தில் போன் வருது என்ற யோசனையோடு அட்டென்ட் பண்ணாமல் இருக்க...

என்னய்யா உன் முன்னால் காதலி போன் பண்றாள் போல இப்படி திருதிருன்னு முழிச்சிட்டு இருக்க. அட்டென்ட் பண்ணி பேச வேண்டியதுதானே என்று கண்மணி சிரிக்கவும் அதில் சுதாரித்தவன் எதோ கம்பெனி கால் டி.

அதுக்கு எதுக்குடி இம்பார்ட்டண்ட் கொடுக்கணும் என்று சொல்லிவிட்டு சோபாவில் உட்கார்ந்தவன்,அவன் ஃபோனை சைலண்டில் வைத்துவிட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் கால் பண்ணுறேனென்று அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பினான்.

மேடம் பேசணும் என்று சொல்கிறார்கள் என்று பதில் வர 5 மினிட்ஸ்ல நானே கால் பண்றேன் என்று சொல்லிவிட்டு டிவியை பார்க்க,என்னய்யா உன் திருட்டு முழியே சரியில்லையே?

ஏதாச்சும் திருட்டுத்தனம் பண்றியா என்று கண்மணி கேட்கவும்,ஏண்டி என் பொண்டாட்டியே என்னை இப்படி சந்தேகப்பட மாட்டாள்.நீயே அவளுக்கு சொல்லிக் கொடுக்குவ போல என்று செழியன் முறைக்க,உன் கேப்மாரி தனம் எங்களுக்கு தானே தெரியும். அவளுக்கு எங்கே தெரியப்போகிறது என்றாள்.

இப்பொழுது இங்கிருந்து வெளியே போய் போன் பேசணுமே?என்ன பண்ணலாம் என்று யோசித்தவன் அட ஆமா இன்னைக்கு அமாவாசை தானே படைப்பதற்கு ஏதாவது தேவைப்படுமே...

ஐடியா என்றவாறு கிச்சனுக்கு சென்றவன் அம்மா டவுனில் இருந்து ஏதாவது வாங்கிட்டு வரணுமா என்று கேட்க,இல்ல தம்பி.அப்பா எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாரு.சமைச்சுட்டு படைக்க வேண்டியதுதான்.

பிறகு நீ போய் அம்மாச்சியை கூப்பிட்டு வா என்கவும் அப்படியா சரி மா என்றவன் நான் கண்ணன் கிட்ட போயிட்டு வரேன் என்க சரிப்பா என்றார்.

பைக் சாவியை எடுத்துக்கொண்டு விசில் அடித்தபடியே வெளியே வந்தவன் வண்டியை ஸ்டார்ட் பண்ணி தனது பாட்டி வீட்டுக்கு போகாமல் நேராக மெயின் ரோட்டில் போனவன் ஓரத்தில் இருந்த மரத்தின் கீழே வண்டியை நிறுத்திவிட்டு தனது ஃபோனில் இருந்து சற்று முன்னர் வந்த நம்பருக்கு கால் பண்ண அதுவோ பிஸி பிஸி என்று வந்தது.

பின்னர் மேடம் என்று இருக்கும் நம்பருக்கு கால் பண்ண இரண்டே ரிங்கில் அந்த பக்கம் உள்ளவர் அட்டென்ட் பண்ணவும் குட் மார்னிங் மேம் என்றான்.

ஹம் குட் மார்னிங் மிஸ்டர் செழியன் என்றவர் என்னாச்சு என்கவும் பின்னர் அவரிடம் சில விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு அவரும் சிலதை சொல்லவும் பேச்சோ அரை மணி நேரத்துக்கு மேல் கடந்து சென்றது.

பின்னர் ஓகே மேடம் என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் இன்னொரு நம்பருக்கு கால் பண்ணி அவனிடமும் சில விஷயத்தை சொல்ல அந்த பக்கமும் கேட்டுக் கொண்டவன் நேரில் சந்திக்கும்போது பேசலாம் என்று சொல்ல ஓகே பிப்ரவரி 10ம் தேதி...

ஹம் கார்ல தான் வரேன் ராஜ்கோட்ல மீட் பண்ணலாமா என்கவும்,அந்த பக்கமிருந்து போனில் பேசுபவனோ என்னடா இப்படி திடீர்னு சொன்னாக்க நான் எப்படி வர முடியும் என்க...

வேற வழி இல்லை என்றைக்கு வீட்டில் இது தெரிய போகுதோ அன்னைக்கு தான் எனக்கு செருப்படி இருக்கு என்கவும் ஏன்டா இப்படி எல்லாம் சொல்ற என்று அந்த பக்கம் இருந்தவன் கேட்க உண்மைய சொல்றேண்டா.

மூணு வருஷமா இந்த விஷயத்தை மறைச்சிட்டு இருக்கேன்..அப்பா அம்மாவுக்கு இது பிடிக்காது என்பது உனக்கு தெரியும் தானே என்று செழியன் கேட்க,உன்னோட சூழ்நிலை எனக்கு புரியுதுடா.

நம்ப ஒன்னும் திருட்டுத்தனம் பண்ணலையே என்றவன் தங்கச்சி கூட லைப் எப்படி போகுது என்க,நல்லா போகுது டா என்று செழியன் சிரிக்க, என்ன மச்சி ஒரே ரொமான்ஸ் தானா என்றான்.

அட ஏன்டா நீ வேற என்று செழியன் சிரிக்கவும்,அதான் உன் சிரிப்பே காட்டிக் கொடுக்கிறதே என்றவன் மேலும் சிறிது நேரம் நண்பனை கிண்டல் பண்ணிவிட்டு அந்த பக்கம் இருந்தவன் அழைப்பை துண்டித்தான்.

டெல்லி சிபிஐ அலுவலகம்:

மிஸ்டர் கபிலன் மேடம் வரச் சொல்லுராங்களென்று ஆபிசர் ஒருவர் அங்கிருந்தவனிடம் வந்து சொல்ல,ஓகே என்று எழுந்தவன் கதவை திறந்து உள்ளே போய் சல்யூட் வைக்க சிபிஐ இயக்குனர் வசுந்தரா சுந்தரபாண்டியன் தலையை அசைத்தவர் உட்காருங்களென்று அங்கிருந்த சேரை காட்டி சொல்ல,தேங்க்யூ மேடமேன்று உட்கார்ந்தவன் தன்னிடம் இருந்த பைலை நீட்ட,அதை வாங்கிய வசுந்தரா படித்துப் பார்க்கலானார்.

கால் மணி நேரம் சென்று பைலை மூடி அவனிடம் கொடுத்தவர்,வெல்டன் என்றவரிடம் இன்னும் கொஞ்சம் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டால் அரஸ்ட் வாரண்ட் கொடுத்திடலாம் என்றான்.

ஹம் என தனது நெற்றியை தடவி யோசித்தவர் இவ்வளவு நேரம் இருந்த கண்டிப்பு மறைந்து இயல்பானவர் உங்களோட ஃப்ரெண்டுக்கு என்ன ஆச்சு என்க...

சிறிது நொடிகள் தயங்கிய கபிலன் பின்னர் நண்பனின் நிலையை பற்றி சொல்ல அப்படியா என்று சிரித்தவர் இது பற்றி என்கிட்ட சொல்லவே இல்லையே என்கவும் அவன் என்கிட்டயும் சொல்லலையே மேடம் என்றான்.

கபிலன் சொன்னதைக் கேட்டு முறைத்து பார்த்தவர் நம்பர போல சொல்லுங்க மேன்.நான்கு பேரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.உங்களுக்கு தெரியாம எப்படி இருக்கும்?

நிஜமா மேடம் இது பற்றி எனக்கும் வெற்றிக்கும் தெரியாது என்க,வெற்றி பேரை நான் சொல்லவே இல்லையே என்று வசந்தரா கேட்க,ஆத்தாடி மாட்டிக் கொண்டோமே என்று திருதிருவென்று கபிலன் முழித்தான்.

அப்பொழுது கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்த வெற்றிவேல் குட் மார்னிங் மேடம் என்க அவனை பார்த்தவர் இடது கையால் சேரை காட்டி உட்காருங்கள் என்றார்.

வெற்றிவேலோ அவனிடமிருந்த பைலை எடுத்து வசந்தராவிடம் நீட்ட அதை வாங்கி படித்துப் பார்த்தவர் என்ன முடிவு பண்ணி இருக்கீங்க வெற்றிவேல்?

நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்ன போல தான் மேடமென்றான்.ஓஓ இது சரி வருமா என்றவரை பார்த்தவன் நீங்கள் இப்படி சொன்னால் என்ன அர்த்தம் மேடமென்கவும்,இந்த கேஸில் நீங்க விசாரிக்க போற ஆளு ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது.

கரணம் தப்பினால் மரணம் என்பது போல 25 வருஷத்துக்கு முன்னாடி நடந்த கேஸ்.அதில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க தான் உங்க மூணு பேரையும் நான் அப்பாயிண்ட்மெண்ட் பண்ணிருக்கிறேன்.

90 சதவீதம் கேஸ் முடிஞ்சிட்டு.மீதம் உள்ளதை எந்த அளவுக்கு சீக்ரெட்டா முடிக்கிறீர்களோ அந்த அளவுக்கு குற்றவாளி சீக்கிரம் நம்ம கிட்ட சிக்குவான்.

சட்டத்தில் இருக்கிற ஓட்டையை பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியும்னு அவசியம் இல்லை.சின்ன லீடிங் குற்றவாளிக்கு கிடைத்தாலும் அவனோட பதவியை வைத்து ஒன்றும் இல்லாம பண்ணிடுவான் என்க, கண்டிப்பாக மேடம்.

எந்த தவறும் நடக்காது எங்கள நம்பி இந்த கேஸ் ஒப்படைச்சிருக்கீங்க,அந்த குற்றவாளியை சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்காமல் நிச்சயமாக நாங்கள் விட மாட்டோம் என்றவனை பார்த்தவர் நீங்க ரெண்டு பேர் தான் சபதம் எடுக்கிறீர்களே தவிர உங்களுடைய கூட்டாளி வாய் திறக்கலையே என்றார்.

மேடம் அவர் ஊர்ல இருக்கிறாரென்று வெற்றி சொல்ல,என்னடா விளையாடுறீங்களானு வசுந்தரா முறைக்க,நீங்க தான் மா விளையாண்டுட்டு இருக்கீங்க என்று வெற்றிவேலும் தனது தாய் வசுந்தராவை முறைத்துப் பார்த்தான்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top