• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
மகி நினைவுகள்...

கணவர் சொன்னதை கேட்ட மேரி,ஏங்க இந்த வருஷம் மகிக்கும் எஸ்தருக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம் என்க, இப்போது தான் டி படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போயிருக்கான்.

அதுக்குள்ள எதுக்கு உனக்கு அவசரம் என்று ஆபிரகாம் மனைவியை முறைக்க,என்னைக்கு இருந்தாலும் என் அண்ணன் பொண்ணு தானே இந்த வீட்டுக்கு மருமகள்.

அதை எப்போ பண்ணுனா என்ன?

ஒருவேளை உங்களுக்கு வேற யாரையாச்சும் மருமகளாக ஆக்கணும்னு எண்ணம் இருக்கா என்க, மனைவியின் குணத்தை பற்றி தெரிந்த ஆபிரகமோ அய்யய்யோ சாரா அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது.உன் அண்ணன் பெண் தான் என்னுடைய மருமகள் போதுமா என்றார்.

கண்டிப்பா அதுல எந்த சந்தேகமும் இல்லை.உங்க பையன் காதல் கீதலுனு சுத்திட்டு வந்தான் அப்புறம் நான் மனுசியாக இருக்க மாட்டேங்க.நல்ல ஞாபகம் வச்சுக் கொள்ளுங்கள் என்கவும்,ஏன் டி இப்படி சொல்ற?

நம்ம புள்ள எல்லாம் அப்படி பண்ண மாட்டேன் என்றார்.ஹம் அப்படி பண்ண கூடாது அதனால தான் சொல்லி வைக்கிறேன்.அப்பாவை போல நீங்க ஒன்னும் பழகறது கிடையாது பிரண்டு போல தானே பிள்ளை கிட்ட பழகுறீர்கள் என்று கணவரை மேரி முறைத்தார்.

தோளுக்கு மேல வளர்ந்துட்டா தோழன் மாதிரி இது நான் சொல்லி தான் உனக்கு புரியணும் என்று அவசியம் இல்லை.என்னை விட நீ தான் உன் மகனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைக்கிறடி என்றார்.

சரி ரெண்டு பேரும் இப்படி மாறி மாறி வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்தா என்ன ஆகிறது.மகி வரும் போது அவனுக்கு பிடித்தமானதையெல்லாம் சமைக்கலாம்னு இருக்கிறேன் என்கவும் ஆபிரகாமும் தனது கோபத்தை விட்டவர் மகனுக்காக பிடித்ததை எல்லாம் லிஸ்ட் போட ஆரம்பித்தார்.

மேலும் இரண்டு நாட்கள் கடந்து செல்ல மூன்றாவது நாள் மதியம் சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் வந்து மகி இறங்க,அவனுக்காக ஆபிரகாமும் காரில் வெளியே காத்துக் கொண்டிருந்தார்.

பேசஞ்சர் எல்லாம் இறங்கி வரவும் மகன் எங்கே என்று அந்த கூட்டத்தில் தேட,சிறிது நிமிடத்தில் லக்கேஜோடு மகியும் வர தாஸ் என்று ஆபிரகாம் கூப்பிட தந்தையின் குரல் வந்த திசையில் திரும்பியவன் அங்கிருந்தவரை பார்த்து கையைசைத்தான்.

பின் சீட்டில் வந்து மகி உட்கார டிரைவர் கார் எடுக்கவும் எப்படிப்பா போச்சு என்று விசாரிக்க நல்லா போச்சுப்பா என்றான்.

எப்போ ஜாயின் பண்ணனும் என்று கேட்க ஆகஸ்ட் 5ஆம் தேதி என்றான்.பின்னர் இருவரும் பேசிக் கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தனர். மகனுக்காக மேரியோ பெரிய விருந்தையே தயார் பண்ணி வைத்திருந்தார்.

உள்ளே வந்தவன் அம்மா என்று மேரியின் காலில் விழ காட் பிளஸ் யூ பா என்றவர் ரொம்ப சந்தோஷமா இருக்கு மகி என்று மகனின் கையை பிடித்து சொல்லு எனக்கும் மா.நீ சந்தோஷமா இருந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றான்.

சரி மகி நீ குளிச்சிட்டு வா சாப்பாடு ரெடியா தான் இருக்கு சாப்பிட்டுக்கலாம் பா என்று சொல்ல,சரி மா என்றவன் அவனது ரூமிற்கு சென்று சிறிது நிமிடத்தில் குளித்து பிரஷ் ஆகி வர மகனுக்கு சாப்பாடு பரிமாறினார்.

எங்கம்மா ராணியை காணும் என்றவனுக்கு உங்க அத்தை கூட டவுனுக்கு போயிருக்குப்பா என்றவர் சமைத்த உணவுகளை மகனின் தட்டில் பரிமாற அவனும் தனது தாயின் கைப்பக்குவ உணவை வழக்கம் போல ரசித்து ருசித்து சாப்பிட்டான்.

ஒரு வாரம் போனதே தெரியவில்லை மகியும் வீட்டில் சொல்லிக்கொண்டு டெல்லிக்கு புறப்பட்டான்.அங்கு போய் நல்லபடியாக வேலையில் ஜாயின் பண்ணி ஒரு மாதம் கடந்திருக்க,முதல் மாதம் சம்பளத்தை வாங்கி தனது அம்மா பெயருக்கு அனுப்பி விட மேரியோ தலைகால் புரியாமல் குதித்துக் கொண்டிருந்தார்.

வனிச்சூர்:

நான் வேற பெரிய பிளான்ல இருக்கேன் டி. 10 இல்லை 12 குட்டிகள் முடிவு பண்ணிருக்கேன் டி என்கவும்,என்ன 12 குழந்தையா என்று அதிர்ச்சியில் ஷமீரா கண்களை விரித்தாள்.

மனைவியின் அதிர்ந்த முகத்தை ரசனையோடு பார்த்தவன் ஆமாம் செல்லம்.அந்த காலத்தில் தாத்தா பாட்டி எல்லாம் பெத்துக்கலையா அதே டிரெண்டை தான் இனி நம்பளும் பாலோவ் பண்ண போறோம்...

சோ அதற்கான ப்ராசஸில் இறங்கிடலாம் டி.அதை விட்டு இப்படி பேசியே காலத்தை ஓட்டிடுவ போலையே என்று குனிந்து மனைவியை கைகளில் தூக்கியவன் ஐ லவ் யூ……
எனக்கென பிறந்தவள்
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா,ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா யம்மாடியோஓஓஓ என்று பாட கணவனின் குரலில் பெண்ணவளோ மயங்கி போக..

என்ன டி உன் புருஷன் குரல் அவ்வளவு கொடூரமாவா இருக்கு?கண்ணை மூடிக் கிட்ட என்கவும்,அதைக் கேட்டு பட்டென்று கண்களை திறந்தவள் உண்மையிலேயே உங்களுக்கு பாட்டு பாட தெரியுமா இளா?ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை என்க,
நீ தான் கேட்கவே இல்லையே டி என்றான்.

இதெல்லாம் ஒரு காரணமா?ஏன் நான் கேட்டா தான் நீங்க சொல்லணுமா என்கவும்,அப்படி இல்லையே.நீ கேட்காமல் சொல்லலாம்.

பட் நானும் இது போல ஒரு சூழ்நிலையில் பாடி உன்னை இம்ப்ரஸ் பண்ணனும்னு இருந்தேன் டி என்று சொல்லி மனைவியின் தோளில் கையை போட்டுக் கொண்டு ரோஜா பூ தூவிய பாதையில் நடத்தி கூப்பிட்டு போக,டெக்கரேஷன் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு.

ஆமாம் இதெல்லாம் எப்ப பண்ணுனீங்க என்கவும்,டெக்ரேசன் காலையிலேயே பண்ணிட்டு போனேன் டி.இது ஆர்ட்டிபிசியல் ரோஸ் கசங்காது.
கேண்டில்ஸ் மட்டும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஏத்தி வச்சேன் என்றான்.

பயங்கர ரொமான்டிக் பர்சனா இருக்கீங்களே இளா.இவ்வளவு நாள் எனக்கு தெரியாம போயிடுச்சே என்கவும் எங்கடி நீ பேச விட்ட,சொல்லு?

ஏதாவது ஒரு வார்த்தை ரொமான்ஸா பேச விட்டாயா? என்று மனைவியை கையில் ஏந்தி கொண்டு மெத்தையை நோக்கி போனவன் அங்கிருந்து பெட்டில் படுக்க வைத்து கையை கட்டிக்கொண்டு ரசித்தான்.

சிறிது நிமிடங்கள் வரை கண்ணை மூடி இருந்தவள் கணவனின் பார்வையோ தன்மேல் தான் இருக்கிறது என்பது தெரிந்து இரண்டு கைகளையும் விரிக்க புயல் வேகத்தில் மனைவியின் மேல் பாய்ந்தவன் எண்ணிக்கையில்லா முத்தங்களோடு கூடலையும் தொடங்கினான்.

போதும் என்ற மனமின்றி மனைவியை ஆளுகை செய்தவன் அவள் சோர்ந்து போனதை பார்த்த பிறகு இன்று போதும் என்று மனமேயின்றி விலக அதிகாலை சேவலும் கூவியது.

ஒரு மணி நேரம் கடந்து கண்களை திறக்க அவளை அணைத்தபடி செழியன் நன்கு உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.

கணவனின் உறக்கம் கலையாமல் அவன் கையை எடுத்தவள் காற்றில் அலைபாயும் தன்னவனின் தலைமுடியில் கைகளை விட்டு நீவியவள்,பின்னர் அவன் அடர்ந்து தாடியில் முத்தம் வைத்துவிட்டு கீழே கிடந்த புடவை எடுத்து மேலே சுற்றிக் கொண்டவள் ரெஸ்ட் ரூமுக்கு சென்றாள்.

பின்னர் குளித்து தயாராகி கீழே வர அங்கே வானதியும் செல்லதுரையும் டீ குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

பின்னர் வழக்கமான வேலையை செய்தவள் கணவனுக்கும் தனக்குமான டீ, காபியை போட்டு எடுத்துக் கொண்டு மேல போக,அங்கே செழியன் எக்சர்சைஸ் பண்ணிக் கொண்டிருப்பது தெரிந்தது.

உடற்பயிற்சியினால் முறுக்கேறிய உடலோ வியர்வையில் பளபளப்பதை பார்த்தவள் விழி விரிய அதிசயத்து நின்றாள்.

ஏதோ ஒரு தூண்டுதலில் செழியன் திரும்பிப் பார்க்க மனைவியின் பார்வை தன் உடம்பில் இருப்பதை பார்த்து சிரித்தவன் ஓய்...என்னடி பகல் கனவா என்க,அதில் சுதாரித்தவள் ஒன்னும் இல்லையே என்று சொல்லியவள் ஞாணம் கலந்தபடி அவனிடம் வந்தவள் டீ என்றாள்.

நிமிர்ந்து பார்த்து குடு டி.இப்படியா கீழே குனிஞ்சுகிட்டு குடுப்பாங்கள் என்கவும் பரவாயில்ல இப்படியே எடுத்துக்கோங்க ப்ளீஸ் இளா ஒரு மாதிரியா இருக்கென்றாள்.

அடியேய் நமக்குள்ள என்னடி வெட்கம் வேண்டி கிடக்கென்று காலை நேர பூந்தென்றலாய் நெற்றி வகுட்டில் குங்குமம் தீட்டி,புருவத்திற்கு நடுவில் பொட்டு வைத்து நீண்ட கூந்தலின் அடியில் முடிச்சு போட்டு மென்மையான புடவையில் தேவதைபோல் இருப்பவளை இமைக்கால் பார்த்தான்.

கணவனின் பார்வை குறுகுறுப்பை தர புரிஞ்சுக்கோங்களேன் என்று சினுங்கியவாறு டீ டம்ளரை செழியனிடம் நீட்டிக் கொண்டு வேறு பக்கம் திரும்பி நின்றாள்.

மனைவியின் வெட்கத்தை ரசித்தவன் சரி போனா போகட்டும் எடுத்துக்குறேன் டி என்றவன் அவள் தோள் மேல் கையை போட்டுக் கொண்டே டீயை குடித்தவன் நீயும் காபி குடி என்க ம்ம் என்றாள்.

அவள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவன் மனைவியின் தோளின் மேல் கையை போட்டுக் கொண்டு அந்த மொட்டை மாடியில் நடக்க அய்யோ இளா என்ன பண்றீங்க?

யாராச்சும் பார்த்த சங்கடமா இருக்க போகுது என்கவும்,அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க டி என்றவன் மொட்டை மாடியின் ஓரத்தில் மனைவியை நிற்க வைத்து தூரத்தில் தெரியும் மலையை காட்ட அந்த அதிகாலை நேரத்தில் இயற்கை பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.

கணவனை ஓரக்கண்ணால் பார்த்தவள் தினமும் எக்ஸர்சைஸ் பண்ணுவீங்களா என்றாள்.ஆமாடி,ஏன் பார்க்க நல்லா இல்லையா என்று செழியன் கேட்க,
ஐயோ என பதறியவள் சூப்பரா இருக்கீங்க என்றாள்...

அப்படியா என்று மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே சிரிக்கவும்,அதில் என்ன சந்தேகம் என்று சொல்லி திரும்பியவள் கணவனின் முகத்தை பார்க்கவும் வெட்கம் வந்து தடுத்தாலும் கண்ணை மூடி திறந்தவள் ஜிம் பாய் போல இருக்கீங்க என்று சொல்லி நாக்கை கடித்தாள்.

பார்ரா என்று சிரித்தவன் பரவாயில்லையே என் பொண்டாட்டி என்னை எல்லாம் ரசிக்கிறாளே என்க, அதில் கோபம் வந்தவள் நான் ரசிக்காமல் அந்த மசாலா ஃபேக்டரில் உள்ளவளுங்க ரசிக்கணுமோ என்று பல்லை கடித்தாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
தம்புசாமி வீடு:

கண்மணியோ ஆத்திரமாக கட்டிலில் உட்கார்ந்திருக்க மீண்டும் கால் வந்தது. முதல் ரிங் முழுவதும் கட்டாக திரும்பவும் பாபு கால் பண்ண,அட்டென்ட் பண்ணியவள் சொல்லுங்க உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்க,நீ தாண்டி எனக்கு பிரச்சனை என்றான்.

என்னாஆஆஆ நான் தான் பிரச்சினையா,அதுக்கு இப்ப என்ன பண்ணனும் என்று கேட்க கட்டிப்பிடிச்சு முத்தம் கொடு சரியாயிடுவேன் என்று பாபு சொல்லவும் அவளால் எதுவும் பேச முடியவில்லை.

கண்மணி அமைதியாக இருப்பதை பார்த்தவன் என்னடி பேச்சையே காணும்?வாய் கிழிய இவ்வளவு நேரம் ஏன் போன் பண்ணலைனு அந்த காட்டு காட்டுன இப்ப பதில் சொல்லுடி எனக்கு என்க,அப்பவும் அவள் அமைதியாக இருக்கவும் ஐ லவ் யூ டி என்றான்.

தன்னவனின் குரலில் தனக்கான காதலை கேட்கவும் இனிமையாக இருந்தது.ஏண்டி இப்படி அமைதியாக இருந்தா என்னடி அர்த்தம்?

ஆமா இல்லன்னு ஏதாவது சொல்ல வேண்டியதுதானே என்கவும் லவ் யூ டூ டா எருமை மாட்டு பயலே.உனக்கு இப்ப என்னடா வேணும் என்று கண்மணி கத்த,எதே எருமை மாட்டுப் பயலாஆஆ...

என்னடி இப்படி பேசுற என்க இன்னும் நிறைய பேசுவேன் டா.உன் பாட்டுக்கு பேசிட்டு இருக்க,வந்தனா மூஞ்சி மொகரைலாம் பேந்துடும் என்கவும்,அடிப்பாவி சரியானா பஜாரியா டி நீ என்றான்.

ஆமாடா அதுல என்னடா சந்தேகம் என்றாள்.

அய்யய்யோ இவ்ளோ பெரிய வாயாடின்னு தெரியாம போயிடுச்சே, ஏய் நான் அப்பாவி டி என்கவும் யாரு நீயாடா அப்பாவி என்று பல்லை கடித்தவள் அப்பாவி தான் நைட் ஒரு மணிக்கு மொட்டை மாடியில் வந்து நிக்க சொல்லி அடம் பிடித்தானோ என்றாள்.

ஆமாடி அதன் பிறகு நம்ம நிச்சயதார்த்தம் அன்று தான் உன்னை பார்க்க முடியும்.அதுவரைக்கும் எனக்கு தாங்கும் இல்லையா என்று அந்த நாளை நினைத்து பார்த்தனர்..

பாபு ஊருக்கு கிளம்புவதற்கு முதல் நாள் இரவு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன் மணி எப்போ 12 ஆகும் என்று காத்திருந்தான்.

இன்று இரவு உன்னை பார்ப்பதற்காக மொட்டை மாடிக்கு வருவேன் எனக்காக காத்திரு என்று கண்மணிக்கு செய்தி அனுப்பிருக்க,அதேபோல் யாருக்கும் தெரியாமல் வந்தவன் அங்கிருந்த படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்கு போக கண்மணியும் அவனுக்காக காத்திருப்பது தெரிந்து வேகமாக போய் தன்னவளை இழுத்து தாமதிக்காமல் அவள் இதழோடு தனது இதழை புதைத்தவன் அப்படியே கீழே சரிந்தான்.

நீண்ட முத்தத்தை அவளுக்கு கொடுக்க என்னதான் கல்யாணம் பண்ணிக்க போகும் வருங்கால கணவனாக இருந்தாலும் முதன் முதலாக தன்னவனின் இந்த செய்கைகள் கண்மணிக்கு பயத்தை கொடுத்தது.

அவள் உடல் நடுங்குவதை உணர்ந்தவன் ரிலாக்ஸ் டி ஒன்றுமில்லை.ஏதோ ஒரு ஆர்வத்துல பண்ணிட்டேன் சாரி என்று அவள் மேல் இருந்து எழுந்து,கையை கொடுத்து அவளை தூக்கி நிறுத்தியவன் நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பறேன் செல்லம்..

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாக்க நமக்கு கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு வளைகாப்பு நடந்தால் நடக்கும்.நான் ரொம்ப நல்ல பையனா இருக்க ஆசைப்படுகிறேன் டி.

என்னை மன்னித்துவிடு டி என்றவன் அவள் இடுப்பை நன்கு கிள்ளிவிட்டு அங்கிருந்து கீழே இறங்கி சென்றான்.இருவரும் அதை நினைத்து பார்த்து சத்தமாக சிரித்து விட்டனர்.

மேலும் சில பல காதல் மொழிகளை பேசிவிட்டு போனை வைத்தார்கள்

செழியன் வீடு:

என்னடி பொண்டாட்டி உன் புருஷனை யாரும் ரசிக்க கூடாதுன்னு பொறாமையா இருக்கோ என்று மனைவியை தன்னோடு இறுக்கி அணைத்தபடி கேட்க,ஏங்க என்ன இதெல்லாமென்று ஷமீரா திமிர,எவன் பார்த்தா எனக்கு என்னடி?

நான் என் பொண்டாட்டியை தானே புடிக்கிறேன் என்று கையில் தூக்கிக்கொண்டு சுத்த ஐயோ என்று ஷமீரா கத்த இவள் கத்தியது எங்கே கீழே இருப்பவர்களுக்கு கேட்குமோ என்று மனைவியின் வாயை தனது வாயால் மூடினான்.

கால்களை உதறி அவனிடமிருந்து விலக பார்க்க செழியனோ என்கிட்டயேவா டி என்றவாறு இறுக்கி அணைத்தபடி தூக்கிக் கொண்டு குடிலுக்கு போனவன் பெட்டில் கிடத்த வேண்டாம் வேண்டாம் என்று பதறினாள்.

ஏன் டி என தாபமாக கேட்க இன்னைக்கு தை அமாவாசை காலையிலே குளிச்சிட்டு விளக்கேத்திட்டேன்.திரும்ப குளிச்சிட்டு போனால் அத்தை என்ன நினைப்பார்கள் என்று சங்கடமாக சொல்ல,மனைவியின் கன்னத்தோடு உரசியவன் இது வேறயா...

சரி போனா போகட்டும்னு விடுறேன் இதுக்கு வட்டியும் முதலும் சேர்த்து நைட்டு சம்பவம் வைத்துக்கொள்கிறேன் டி என்று சிரிக்க,கடவுளே கடவுளே என்று தலையில் தட்டிக் கொண்டவள் கணவனின் கையை கடித்து வைக்க, அதில் தனது கையை அவள் மேல் இருந்து எடுக்கவும் பதறி அடித்து எழுந்தவள் போடா புண்ணாக்கு என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடினாள்.

செழியனும் குளித்து விட்டு ப்ரஷாகி கீழே வந்தவன் மனைவியை தேட அவள் கிச்சனில் இருப்பது தெரிந்தது.

அந்நேரம் ஊருக்குள் தண்டோரா சத்தம் கேட்டது.என்னனு வெளியே வந்து பார்க்க இதனால் வனிச்சூர் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் நம்ம சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 10 கிராமங்களுக்கும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையிலிருந்து மருத்துவர்கள் அடங்கிய குழு நாளைக்கு நம்ம ஊருக்கு வருகிறார்கள்.

10 நாட்கள் நம்மூரில் நடக்கும் முகாமை எம்எல்ஏ அவர்கள் இலவசமாக ஏற்பாடு பண்ணி இருப்பதால் பொதுமக்கள் பயனடைமாறு ஊர் தலைவரின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று சொல்லிக் கொண்டே சென்றார்.

இதைப் பற்றி தெரு மக்களும் அங்கங்கே பேசிக் கொண்டிருக்க அம்மா சாப்பாடுனு செழியன் குரல் கொடுக்க, ஷமிராவோ கணவனின் குரல் கேட்டு வெளியே வந்தாள்.

மனைவியை பார்த்தவன் உதட்டை குவித்து உம்மா என்று சொல்லிவிட்டு சாப்பாடு போடுடி என்க,அவனைப் பார்த்து முறைத்தவள் விரலை காட்டி பிச்சு புடுவேன் என்று சொல்லிவிட்டு கிச்சனிற்குள் சிரித்துக் கொண்டே சென்றவள் சமைத்ததை எடுத்து வந்து வைக்க,உங்க அப்பாவா பரிமாறுவாறு என்றான்.

கணவன் சொன்னதை கேட்டு கோபம் வந்தவள் செழியனை பார்த்து முறைக்க என் மாமனாரை தாண்டி சொல்றேன் உனக்கு என்னடி வந்தது என்கவும்,எதுவும் சொல்லாமல் பரிமாறி விட்டு கிச்சனுக்கு செல்ல ஒரு அடி எடுத்து வைத்தவளின் முந்தானை பிடித்து இழுக்கவும் ஐயோ என்னங்க பண்றீங்க அத்தை தோட்டத்துல இருக்காங்களென்க இருக்கட்டும் டி என்றான்.

இன்னும் கொஞ்சம் வேகமாக புடவையை இழுக்க செழியனின் மேல் வந்து விழுந்தாள்.அவளை வளைத்து பிடித்து மடியில் உட்கார வைத்தவன் தட்டில் இருந்த இட்லியை பிட்டு சட்னியில் தொட்டு ஷமீராவுக்கு ஊட்ட வர,அவனின் செயலை பார்த்ததும் தாயின் நினைவு வர அவள் கண்ணிலிருந்து இரண்டு துளிகள் செழியனின் கையில் விழுந்தது.

ம்ம் வாயை திறடி என்று அதட்டவும் இரண்டு வாய் வாங்கிக் கொண்டவள் போதும் என்க,இது மட்டுமென்றான். அய்யோ இளா தாங்க முடியல சாமி என்கவும்,நீ தான் பண்ண மாட்டேங்குற நானாவது பண்றேனேடி...

இன்னும் ஒரு இட்லி சாப்பிட்டு போடி என்று சொல்லவும்,ப்ளீஸ் இளா விடுங்க அத்தை வந்தால் அசிங்கமா போயிடும் என்றவளை பார்த்தவன் அதுவும் சரிதான் என்றபடி மனைவியின் கன்னத்தை பிடித்து நன்கு கடித்தவன் சரி போ என்க...

விட்டால் போதும் டா சாமி என்று புள்ளிமான் போல் அங்கிருந்து கிச்சனிற்கு சென்றவள் சூடாக தோசையை போட்டு எடுத்துட்டு வந்து கொடுத்தாள்.

அப்புறங்க பொண்டாட்டி இன்னைக்கு சண்டே மாமா ஃபுல் நேரம் ஃப்ரீயா தான் இருப்பேன்.உங்களுக்கு ஏதாவது உதவி செய்யணுமா என்று மனைவியை பார்த்து ஒரு மார்க்கமாக சிரித்துக் கொண்டு கேட்க,நீங்க அமைதியாக இருந்தாலே எனக்கு பேர் உதவி என்றாள்.

நோ செல்லம்... அப்படி எல்லாம் சொல்லக்கூடாது.உன்கிட்ட சேட்டை பண்றதுக்கு தாண்டி இந்த செழியனை பெத்திருக்காங்க என்கவும் ஷமீராவோ நீங்க ரொம்ப மோசங்களென்றாள்.

மகி நினைவுகள்:

மகியும் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் கடந்திருக்க,இந்த ஒரு மாதமாக வீடு தேடி அலைந்ததில் புரோக்கர் மூலமாக ஒரு வீடு இருப்பதை தெரிந்து அதை பார்க்க ஆட்டோவில் போனான்.

அரை மணி நேர ஆட்டோ பயணத்தில் சாந்தினி சௌவ்க் என்னும் இடத்திற்கு வந்து சேர அங்கே தரகரும் அவனுக்காக காத்திருந்தார்.

தம்பி உங்க நேரம் ஒரு பிளாட் காலியாக இருக்கிறது.ஒரு பெட்ரூம் கிச்சன் ஹால் இருக்கு கேஸ் வசதி எல்லாம் ஆட்டோமேட்டிக்கா பைப்லைன் மூலமாக வரும்.

மத்த பொருள்கள் தான் நீங்க வாங்குற போல இருக்கும் என்கவும்,சரிங்க சார் போய் பார்க்கலாம் என்று இரண்டாவது மாடியில் இருக்கும் அந்த ரூமை போய் பார்த்த மகிக்கும் அது போதுமானதாக இருக்கவும் உடனே அட்வான்ஸ் கொடுத்து அன்றைக்கே குடி வந்து விட்டான்.

பின்னர் வெளியே இருக்கும் கடைக்கு போய் வீட்டுக்கு தேவையான மற்ற பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு படியில் ஏறி மேலே வந்தவன்,அவன் ரூம் கதவை திறக்கும் போது எதிர் பிளாட் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்ப,அங்கே இருந்த பெண்ணை பார்த்தவனுக்கு சில்லென்ற சாரல் வீசுவது போல இருந்தது.

எஸ்தர் தான் உன் வருங்கால மனைவி என்னும் போது வராத உணர்வு முதன் முதலாக அவனுக்குள் சலனத்தை ஏற்படுத்தியவளை இமைக்க மறந்து பார்க்க,அவளும் அவனை யாரோ என்று பார்க்க அவன் கையில் இருக்கும் பொருட்களை வைத்து தரகர் சொல்லியது இவன்தான் போல என்று நினைத்துக் கொண்டவள் கதவை சாத்திவிட்டு உள்ளே போய் விட்டாள்.

அந்த சத்தத்தை வைத்து தான் நிகழ்வுக்கு வந்த மகி மீண்டும் ஒருமுறை அவள் கதவை திறக்க மாட்டாளா என்று காத்துக் கொண்டிருக்க,கதவு திறப்பதாக இல்லை.

பின்னர் வீட்டிற்குள் போனவன் முதலில் வீட்டை துடைக்கலாம் என்று அந்த வேலையில் இறங்கி எல்லாத்தையும் சுத்தம் பண்ணி முடிக்கவும் வேர்த்து விறுவிறுத்துப் போனான்.

ஒரு குளியலை போட்டு தயாரானவன் அப்பார்ட்மெண்டிற்கு வெளியே இருக்கும் ஹோட்டலுக்கு போய் இரவு டிபன் வாங்கிட்டு படியில் ஏறி மேலே போக,எதிர் வீட்டில் பார்த்த பெண்ணும் படியில் இறங்கி அவனுக்கு எதிரே வந்தாள்.

அந்த நேரம் பார்த்து கரண்டும் கட்டாக ஒரு நிமிஷமென்று அவள் கையை பிடித்தவன் உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று ஆங்கிலத்தில் கேட்க, அவளோ எதுவும் பதில் சொல்லாமல் அவன் பிடியிலிருந்து கையை உருவிக் கொண்டு கீழே இறங்கி போவதை கொலுசு சத்தத்தின் மூலமாக உணர்ந்தான்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top