• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
சோழனூர்:

எதிர் வீட்டில் இருந்த சாரதா பாட்டி கார் சத்தத்தை கேட்டு வந்தவர் எங்கப்பா போயிருந்தீங்க?வந்து பார்த்தேன் வீடு பூட்டி இருந்தது.அதுதான் நம்ம சந்திரா கிட்ட விசாரிக்கலாம்னு அங்க போனேன்,கார் சத்தம் கேட்டுச்சு வந்துட்டேன்.


உள்ள வா சித்தி சொல்லுறேன் என்கவும்,அக்கா மகனின் குரல் சுரத்தே இல்லாமல் இருப்பதை கவனித்தவர் யோசனையோடு அவர்களோடு வீட்டிற்குள் வந்தார்.

எய்யா உன் தங்கச்சிகாரியையும் காணும்,வீடு பூட்டியிருக்கு அவ எங்க போனான்னு தெரியல?ஒருவேளை மகி ஏதாச்சு சண்டை போட்டுட்டு கூப்பிட்டு போயிட்டானா?

அதைக் கேட்ட அந்தோணியோ சித்தி என்றவர் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் அழுதார்.

ஐயா என்னய்யா ஆச்சு?

அந்தோணி எதுக்குப்பா அழுவுற சொல்லுயா எனக்கு வேற படபடப்பா வருது என்கவும்,நாம மோசம் போயிட்டோம் சித்தி என்க,தம்பி கொஞ்சம் புரிகிற போல சொல்லுயா என்று அவரும் பதறினார்.

அழுது கொண்டே தனது சட்டை பாக்கெட்டிலிருந்த லெட்டரை எடுத்து சித்தியின் முன்னால் அந்தோணி நீட்ட,என்ன யா இதுவென பாட்டி கேட்க,படிச்சு பாரு என்கவும்,அய்யோ ஏசப்பா இதுல என்ன குண்டு இருக்குன்னு தெரியலையே?

ஏம்பா எங்களை இப்படி சோதிக்கிறனு மனதிற்குள் நினைத்தபடியே மகனிடமிருந்து வாங்கி படித்து பார்த்தவர் ஐயோ என் பொண்ணு எங்கடா போனாளென்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுத்தார்.

எங்க போய் தேடுவேன் சித்தி?

தங்கச்சி காணாமல் போய் ஒரு வாரம் ஆகுதென்று தலையிலே அடித்துக் கொண்டு அந்தோணி அழ,நம்ம தேடி பார்க்கலாம் யா அழாத ராசா என்றவர் ஆண்டவரே எதுக்குப்பா இவ்வளவு சோதனை?

எஸ்தர் வாழ்க்கை இப்படி சீரழிஞ்சிடுச்சே...கோவத்துல எதுவும் தப்பான முடிவை தங்கச்சி எடுத்திருந்தால் நான் என்ன பண்ணுவேன் சித்தி?

மூச்சுக்கு 300 முறை என் அம்மாவை பாத்துக்கோங்க மாமானு உன் பேத்தி சொன்னாளேனு அந்தோணி கதற,எப்பா ஏன் இவ்வளவு பெரிய வார்த்தை பேசுறனு அக்கா மகனை சமாதானப்படுத்த,என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்ட சித்தியென அழுதவர்,உன் மருமவனுக்கு இன்னொரு குடும்பம் திருச்சில இருக்கு தெரியுமா?.

என்னய்யா சொல்றனு அதிர்ந்து போய் சாரதா பாட்டி கேட்க,ஆமாம் என்றவர் இங்கிருந்து போனதிலிருந்து நடந்ததை எல்லாம் சொல்ல,கேட்ட பாட்டியோ ராணியை தீ பார்வை பார்த்தார்.

தனது அத்தையின் முகத்தை பார்க்க முடியாமல் ராணி கீழே குனிந்து கொள்ள,எப்படி இவ்வளவு பெரிய பாவத்தை உங்களால செய்ய முடிஞ்சது சொல்லு ராணி?

அப்படியே உங்க ஆத்தா புத்தி தானா உங்களுக்கும்?

படிச்சு படிச்சு என் அக்கா சொன்னாளே இந்த குடும்ப வேண்டாம் வேண்டாம்னு.பாவி மவள் கேக்கலையேனு நெஞ்சிலே அடித்துக் கொண்டு அழுதார்.

அத்தை ..அழாதீங்கனு அவரின் கையை ராணி பிடிக்க வர,ச்சீ எட்ட போ என்று உதறிவிட்டவர் அப்போ உனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா டி என்கவும்,தெரியுங்கத்தை என்றார்.

தெரிஞ்சும் சொல்லவே இல்லை...எதுக்கு என் பொண்ணு வாழ்க்கையை இப்படி கெடுத்தீங்கள் இவ்வளவு சுயநலமா இருந்திருக்கிறீர்களே நீங்க எல்லாம் மனுச ஜென்மமா?

அந்த கம்மனாட்டி பயலுக்கு ஒரு போனை போடு அந்தோணியென பாட்டி கத்த,அவன் கிட்ட பேசுறதுக்கு இனிமே என்ன சித்தி இருக்கு?

ஆமா யா நீ சொல்வதும் சரிதான்.இந்த நாயை விட்டு தள்ளு முதல்ல நம்ம புள்ளையை தேடுவோம்.தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் போய் விசாரிக்கலாமே என்கவும் சரி சித்தி...

நீ இரு நான் விசாரிக்கிறேன் என்க, இல்ல என் மகளை பத்தி தெரியாம நான் இருக்க மாட்டேனென்று அழுதவர் புடவை முந்தானையால் முகத்தை துடைத்தபடி எழுந்தவர்,வா யா போகலாம் என்க,ராணியோ நானும் வரேங்கத்தை என்கவும்,,மரியாதை கெட்டுப் போயிடும் வீட்ல இருடி.

எங்கள் குடியை கெடுத்த வரைக்கும் போதுமென்று திட்டிய அந்தோணி தனது சித்தியை அழைத்துக் கொண்டு தெரிந்தவர்கள் வீட்டில் எல்லாம் தங்கையை தேட போனார்.

அதோ இதோ இன்று ஒரு வாரம் கடந்து சென்றது.ஆனால் எஸ்தரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.சாரதா பாட்டிக்கு அக்கா மகளின் கவலையில் உடல்நிலை சரியில்லாமல் போனது...

அவரின் மகன் அவன் மனைவியோடு அண்ணன் வீட்டில் வந்து அம்மாவை பார்த்துட்டு வீட்டிற்கு கூப்பிட,என் பொண்ண பத்தி தெரியாம நான் வீட்டுக்கு வர மாட்டேனென்று கறாராக சொல்லிவிட்டார்.

அந்தோணியோ இந்த ஒரு வாரத்திலேயே பத்து வயது அதிகரித்தது போல நொந்து விட்டார். நாம முடங்கி விட்டால் தங்கையை தேட முடியாதென்ற நிதர்சனத்தை புரிந்து தனது சித்தியை தேற்றியவர் தெரிந்த போலீஸ்காரர்களிடம் உதவி கேட்கலாமா என்றார்.

குடும்ப மானம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போக வேண்டாம்யா.
வேற எப்படி தான் சித்தி தங்கச்சியை தேடுவதென்று அந்தோணி கவலையாக,ஆண்டவர் ஏதாச்சும் ஒரு வழி கொடுப்பார்யா.நம்ம நம்புன ஆண்டவர் நம்மள கைவிட மாட்டார் என்கும் போது அந்தோணியின் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.

டேபிள் மேலிருந்த போனை எடுத்து பார்க்க புது நம்பராக வந்தது.யார் என்று யோசனையோடு அட்டென்ட் பண்ணி ஹலோ என்கவும் அந்த பக்கம் அமைதியாக இருக்க,ஹலோ யாருங்க என்க,கால் கட்டானது

யாருப்பா என்று சாரதா பாட்டி கேட்க தெரியல சித்தி யாரோ கால் பண்ணிருக்காங்க ஹலோ ஹலோ சொன்னா அந்த பக்கம் எந்த பேச்சுமில்லை என்றார்.

அத்தை சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் சாப்பிட வாங்கள் என்று ராணி கூப்பிட கொஞ்சம் விஷம் இருந்தா குடு டி
குடிச்சிட்டு நிம்மதியா போறோம்.பிறகு நீயும் உன் அண்ணனும் சந்தோஷமா இருக்கலாமே என்கவும்,அய்யோ ஏங்க இப்படி வார்த்தையால என்ன கொல்லுறீங்க என்று ராணி அழ,அதற்கு அந்தோணியோ எந்த பதிலும் சொல்லவில்லை.

வனிச்சூர்:கே.கே பேக்டரி:

செழியனும் கண்ணனும் வண்டியை நிறுத்தியவர்கள் அவரவர் செக்ஷனுக்கு சென்றனர்.கண்ணனோ அரிசி பருப்பு உளுந்து பிரிவுக்கு சூப்பர்வைசராக இருந்தான்.

செழியனோ மசாலா பொருட்கள் தயாராகும் பிரிவுக்கு சூப்பர்வைசராக இருந்தான்.உள்ளே போன இருவரும் அவர்கள் வருகையை பதிவு செய்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.

இன்று எவ்வளவு கொள்முதல் ஆகியிருக்கென்ற கணக்கை செழியன் செக் பண்ணிக் கொண்டிருக்கும்போது இண்டர்காம் ஒலிக்கும் சத்தம் கேட்கவும் எடுத்து ஹலோ சொன்னவன் இதோ சார் என்று போனை வைத்தவிட்டு எழுந்தவன் மேனேஜரின் அறைக்கு சென்றான்.

கதவை தட்டி உள்ளே போனவன் குட் மார்னிங் சார்.வர சொன்னிங்களே என்க,ஆமா செழியன் உக்காருப்பா என்றார்.

ஹம் என்று அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டு சொல்லுங்க சார் என்க, நம்மளோட புது பிரான்ச் ராஜ்கோட்ல ஓபன் பண்ணலாம்னு இருக்காங்க அது உனக்கு தெரியும் தானே என்கவும் ஆமாம் சார் தெரியும்.

அது விஷயமாக தான் உன்கிட்ட பேசணுமென்றவரை பார்த்தவன் சொல்லுங்க சார் என்ன விஷயம்.

அதாவது அங்கு தேவையான மொத்த லோடையும் அனுப்பும் போது அவங்க கூட நீங்களும் போகணும்.யாரையும் நம்பி அவ்வளவு தூரம் அனுப்ப முடியாது இல்லையா...

நீங்க மசாலா செக்ஷனுக்கு சூப்பர்வைசராக இருப்பதால் அது உங்களோட வேலை என்கவும், கண்டிப்பாக சார்.எப்ப போகணும் சொல்லுங்க என்கவும்,பிப்ரவரி பத்தாம் தேதி இங்கிருந்து லோடு அனுப்பணும்.14 ஆம் தேதி அங்கு ஷோரூம் ஓபன் பண்ணுறாங்க என்க சரிங்க சார் கண்டிப்பா நான் போறேன்.

என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்குறீங்கள் நிச்சயமாக அதனை சிறப்பாக செய்வேன் என்க,அந்த நம்பிக்கைல தான் உங்களை அனுப்புறேன்.

நம்மளோட மசாலா பொருளுக்கு மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருக்கிறது.அதை நம்ப சரியா காப்பாத்தனும் இல்லையா என்கவும் கண்டிப்பாக சார் என்பவனை பார்த்தவர்,உங்க கூட இன்னொருவரும் வராங்களென்றார்.

ஓஓஓ யாருங்க சார் என்க,நம்ம சாரோட அம்மா எங்கவும்,எதேஏஐஐ அந்த மேடம்ஆஆஆ என்று செழியன் அதிர ஹா ஹா ஹா என்று சிரித்தவர் உனக்கும் அவங்களுக்கும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கும்.

வேற வழி இல்லையே என்று மேனேஜர் சிரிக்க,சார் அந்த அம்மா சும்மா நொய்யி நொய்யின்னு எதாவது சொல்லிட்டே இருப்பாங்க எனக்கு கடுப்பு வருமேயென்றான்.

இன்னைக்கு இவ்வளவு பெரிய பேக்டிரியா உருவானதற்கு மூல காரணமே அந்த அம்மா தான்.பின்ன அவங்க இல்லாம அவங்க பேரன் புது பிரான்ச் ஓபன் பண்ணிடுவாறா என்கவும்,அதுவும் வாஸ்தவம் தானென்றான்.

மலர் வீடு:

காலிங் பெல் சத்தம் கேட்கவும் மலரு யாரோ பெல் அடிக்கிறாங்க போய் கதவை திற என்று சொல்லிக்கொண்டு கிச்சனில் பத்மா வேலையை பார்க்க, சனி ஞாயிறு வீட்டில் இருந்தாலே முழுநேர வேலைக்காரியா என்னை ஆகிடுங்கள் என்று புலம்பி கொண்டு கதவை திறக்கவும் அங்கே கண்மணி நிற்பதை பார்த்தவள்,இந்த மகாராணி தானா என்றாள்.

ஆமாடி அதில் என்ன சந்தேகம் என்றவாறு வீட்டிற்குள் வந்தவள் அத்தையென்று பத்மாவை கூப்பிட,சமையல் கட்டில் தான் இருக்கேன் கண்ணுனு அவரும் குரல் கொடுத்தார்.

தூக்கு வாளியோடு கிச்சனிற்குள் போக தோழியை முறைத்துக் கொண்டே மலரும் பின்னாடியே வந்தாள்.

அம்மா பால் கொழுக்கட்டையும் புட்டும் செஞ்சது.இந்தாங்களென்று வாளியை நீட்ட,அடியேய் என் அத்தை எனக்கு தான் டி கொடுத்திருப்பாங்க என்றவாறு அவளின் கையிலிருந்த வாளியை பிடுங்கிய மலரோ மூடியை திறந்து பார்க்க,மேலே பால் கொழுக்கட்டை இருக்கும் டிபன் பாக்ஸும் அதற்கு கீழே சிகப்பு அரிசி புட்டும் இருந்தது.

பாத்திரம் இருக்கும் ஸ்டாண்டிலிருந்து ஸ்பூனை எடுத்தவள் பால் கொழுக்கட்டை இருக்கும் டிபன் பாக்ஸை திறந்து வேக வேகமாக சாப்பிட புரையேறியது.

ஏய் பொறுமையாக தான் சாப்பிடேன் டி என்று பத்மா மகளை திட்ட அத்தையோட கை பக்குவமே பக்குவம்.வாம்மா நீயும் கொஞ்சம் சாப்பிட்டு பாரு என்று மலர் கூப்பிட,நீ மிச்சம் மீதி வச்சாக்க அப்ப நான் சாப்பிடுறேன் என்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
வனிச்சூர்:

கலா கொடுத்த பாலை குடித்துவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது,பத்மா சித்தி சட்டை தைக்க கொடுத்து இருந்துச்சு போகும்போது அப்படியே கொடுத்துட்டு போயிடுறீங்களா என்க,அந்த வழியாக தான் போறேன் எடுத்துட்டு வா மா என்றார்.


சரி சித்தி என்றவர் உள்ளே போய் தைத்த ஜாக்கெட்டுகளை ஒரு கவரில் போட்டு எடுத்துட்டு வந்து வானதியிடம் கொடுக்க,ஷமீராவும் அவரும் பேசிக் கொண்டே வந்தவர்கள் மலர் வீட்டு முன்பு வந்து பத்துமா பத்துமா என்று கூப்பிட்டார்.

சரியா சொன்னீங்கத்தை என்று கண்மணி சிரிக்க தோழியை முறைத்த மலரோ சாப்பிடுவதை மட்டும் விடவில்லை.

கண்ணு காஃபி குடிக்கிறியாடி என்க, இப்ப வேணாம்.வரும் போது தான் புட்டு சாப்பிட்டு வந்தேன்.கொஞ்ச நேரம் கழிச்சு குடிக்கிறேன்னு சொன்னவள்,எங்கத்தை மாமாவை காணுமென்று கண்மணி கேட்க...

பருத்தி மூட்டைகளை எடை போட உங்க மாமா காலையிலே போயிட்டாருடி என்றவாறு குழம்பை இறக்கி வைத்தவர் அடுப்பை நிறுத்திவிட்டு மலரு சமையல் ரெடி ஆயிடுச்சு என்க,அதான் இதை சாப்பிடுறேனேமா இது போதும்மா என்றாள்.

இதுக்கு தான் பசிக்குது பசிக்குதுன்னு என் உயிரை வாங்கி தொலஞ்சியா என்று பத்மா முறைக்க,நான் என்ன பண்றது மா?

அத்தை இப்படி புட்டும் கொழுக்கட்டையும் கொடுத்து அனுப்புவாங்கன்னு எனக்கு மட்டும் ஜோசியக்காரனா வந்து சொன்னானென்று தனது தாயை மலர் முறைக்க,இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்றவர்,வெளியில வானதியக்கா கூப்பிடுற போல இருக்கே என்றவாறு கதவை திறக்க அங்கே வானதியும் ஷமீராவும் நின்றனர்.

இருவரையும் பார்த்தவர் அக்கா,வா மா என்று உள்ளே கூப்பிட கிச்சனில் இருந்த மலரும் கண்மணியும் யாரென்று பார்க்க ஹாலுக்கு வந்தவர்கள் அங்கிருந்த ஷமீராவை பார்த்து ஏய் ஷமீ என்று கத்தினர்.

கலா வீடு வரைக்கும் போனோம் பத்மா.சட்டை கொடுத்துச்சு என்று கவரை கொடுக்க சரிக்கா என்றவர்,டீ எடுத்துட்டு வரேன்னு உள்ளே போக,ஒன்னும் வேணாம்...

சொன்னதை கேட்காம கலாவும் தம்பி பொண்டாட்டிக்கு இப்பதான் பால் வச்சு கொடுத்துச்சி குடிச்சிட்டு நேராக இங்க வரோம்.வீட்ல மொட்டு மொட்டுனு உக்காந்து இருக்கேன்னு கையோடு உன் மருமவளையும் கூப்பிட்டு வந்தேன்.

ஷமீராவை பார்த்து சிரித்த பத்மாவோ அம்மாடி ஊரெல்லாம் புடிச்சிருக்கா என்கவும் புடிச்சிருக்குங்கத்தை என்றாள்.

பங்க்ஷன் முடிந்த மறுநாள் சொந்த பந்தங்களை எல்லாம் வானதியும் செழியனும் அவளுக்கு அறிமுகப்படுத்தியதால்,ஒரு சிலரை மட்டும் அவளுக்கு நன்கு தெரிந்தது.

ஏய் ஷமீ ரெண்டு கிழசும் பேசிட்டு இருக்கட்டும் நம்ம போகலாம் வா என்று மலர் சொல்ல,வாய் வாய் என்று வானதி சொல்லவும்,தாயைப் போல பிள்ளை என்று சும்மாவா சொல்லி இருக்காங்க மா என்றாள்.

"அது சரி டி யம்மா"

போற இடத்துல கொஞ்சம் வாயை அடக்கி இருங்கத்தா. இல்லன்னா பெத்த எங்களை தான் காரி துப்புவாங்கனு வானதி சொல்ல, எம்மா துப்புர வாயை உடைத்து விட மாட்டேன் என்று மலர் சொல்ல,யாத்தே,எங்க போயி இதெல்லாம் சொல்லுவேனென்று வானதி சொல்லியதை கேட்டு கண்மணிக்கும் ஷமீராவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது.

வா ஷமி நம்ம அங்க போகலாம் என்று தோட்டத்துக் கதவை திறந்து அவளுங்கள் மூவரும் சென்றுவிட பத்மாவும் வானதியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்புறம் கா நல்லா தான போயிட்டு இருக்கு,ஒன்னும் பிரச்சனை இல்லையேனு பத்மா கேட்க,சுமூகமாக தான் போயிட்டு இருக்கு.நம்ம குடும்ப பழக்க வழக்கங்களை சொல்லி கொடுக்கணும்.அவளுக்கு தெரிந்ததை செஞ்சுக்கிட்டு இருக்கா.

ம்ம் சரிக்கா சரிக்கா என்ன பண்றது, என்ன நடக்கும்னு ஆண்டவன் எழுதி இருக்கிறானோ அப்படித் தானே நடக்குமென்க,ஆமாம் பத்மா.

நம்ம இன்னும் எத்தனை காலம் இருப்போம் சொல்லு?

கடைசி வரைக்கும் வாழ போறது அவங்க ரெண்டு பேர்.சண்ட வம்பு இல்லாம அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துக்கிட்டால் நமக்கு போதும்.வேற என்ன நம்ப கேட்க போறோம்.ஆமா மகிழன் போன் பண்ணினானா?மருமகள் நல்லா இருக்கா?.

நல்லா இருக்காங்க கா.நேத்து தான் போன் பண்ணுனான்.பேரனோட மொத பிறந்தநாளுக்கு கூப்புடுறான். எங்கிருந்து கா நாம போக முடியும்.
அவன் வேலை பார்க்கிற இடத்திற்கு பொண்டாட்டி கூட்டிட்டு போய் குடும்பத்துடன் இருக்கானே அது போதும் கா என்றார்.

நீ சொல்றதும் சரி தான் பத்மா.நம்ம விதி இந்த கிராமத்தை விட்டு போகக் கூடாதுனு எழுதி இருக்கு.

ஏய் கண்ணு ஷமீயை கூப்பிட்டு நம்ப அரசி குளத்துக்கு போலாமாடி என்று மலர்,கேட்க போகலாம் தான் ஆனா வீட்டுல சொல்லலையேடி என்கவும், அதெல்லாம் பத்மாவும் வானதியும் பேசிப்பாங்க..

நமக்கு எதுக்கு அந்த கவலை.ஷமீ அங்கு கொஞ்ச தூரம் நடந்து போனால் அரசிக்குளம் இருக்கு.சூப்பரா இருக்கும் அங்க போகுமா என்கவும்,அத்தைகிட்ட சொல்லிட்டு போகலாமே என்றாள்.

சரி இரு நான் பத்துகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு துண்டு எடுத்துட்டு வரேனென்று உள்ளே போக,கண்மணியும் அங்கிருந்த சூழல்களை பற்றி ஷமீராவுக்கு சொல்லிக் கொண்டிருக்கவும் உள்ளே வந்த மலரோ அம்மா ஷமீயை கூப்பிட்டு அரசி குளத்துக்கு போயிட்டு வரோம் என்க...

வெயிலா இருக்குடி இப்ப போறீங்களேயென்று பத்மா கேட்க, சும்மா போயிட்டு வரோம்மா என்கவும் சரி சரி பார்த்து போயிட்டு வாங்களேன்று சொல்லி விட்டு அவர்கள் பேசிக் கொண்டிருக்க,மலரோ ஆளுக்கு ஒரு துண்டை எடுத்துக் கொண்டு வந்தவள் போகலாம் என்கவும் மூவரும் பேசிக்கொண்டே அந்த வரப்பில் நடந்து போனார்கள்.

சிறிது நிமிட நடை பயணத்தில் அரசி குளத்துக்கு வந்தனர்.

ஷமீராவோ அந்த குளத்தில் பூத்திருக்கும் அல்லி பூக்களை பார்த்து கண்கள் விரிய அதிர,எப்படி இருக்கு ஷமீ என்கவும் செம்மையா இருக்கென்றாள்.

சின்ன வயசுல நானும் கண்ணுவும் இங்க தான் ஊரிட்டு கிடப்போம் என்று சொல்லிக்கொண்டு இருவரும் அங்கிருந்த படியில் இறங்கினர்.

ஷமீராவும் ஆசையாக படியின் அருகில் வர கண்ணு மலரு என்று இருவரும் மாத்தி மாத்தி சொல்லிக்கொண்டு தொபுக்கடீரென்று அவளுங்கள் தண்ணிக்குள் குதிப்பதை பார்த்த ஷமீராவோ ஆஆஆ என அதிர்ந்து போனாள்.

தண்ணிக்குள் போனவர்களோ சிறிது நிமிடங்கள் வரைக்கும் வெளியே வராமல் இருக்க மலரு கண்மணி என்று ஷமீரா கத்த,சிறிது நிமிடங்கள் சென்று கத்திக் கொண்டே இருவரும் வெளியே வத்ததை பார்த்துதான் உயிரே வந்தது போல் இருந்தது.

தனது நெஞ்சில் கையை வைத்தவள் பிசாசுங்களே ஏண்டி இப்படி பண்ணுனீங்களென்று முறைக்க, இதெல்லாம் ஒரு ஜாலி டி.சரி நீயும் வா என்கவும் எனக்கு நீச்சல் தெரியாதே என்றாள்...

என்னது உனக்கு நீச்சல் தெரியாதா அட பைத்தியம் அந்த அளவுக்கு ஆழம் இல்லை வா என்று இருவரும் கூப்பிட, ஷமீராவோ பயந்து கொண்டு நான் வர மாட்டேன்னு அங்கிருந்த மரத்தின் கீழே போய் நின்று கொண்டாள்.

அப்பொழுது அவள் போனுக்கு கால் வரும் ரிங்க்டோன் சத்தம் கேட்கவும், எடுத்து பார்க்க செழியன் போட்டோ வரவும் அட்டென்ட் பண்ணியவள் ம் என்கவும் ஓய் பொண்டாட்டி என்னடி பண்ற என்றான்..

"சும்மாதான் இருக்கிறேன் என்றாள்"

"எதேஏஏ சும்மா இருக்கியாஆஆஆஆ"

அடியேய் உன் மாமா பக்கத்துல இருக்கும்போது தான் டி சும்மா இருக்கணும் டி.மற்ற நேரத்தில் நீ டிரஸ் போட்டுக் கொண்டே இருக்கணும்.

கணவன் பேச்சை கேட்டவளோ பிசாசு பிசாசு என்று திட்ட ஹா ஹா என்று சிரித்தவன் என்ன பண்ணிட்டு இருக்க டி என்கவும் ஒன்னும் பண்ணலையே என்றாள்...

வெட்டியா தானே இருந்த,புருஷனுக்கு போன் பண்ணி பேசணும் என்கிற அறிவு எல்லாம் கிடையாதா டி?

ஓஓஓ...எனக்கு எப்படி தெரியும் நீங்க வெட்டியா தான் இருப்பீங்கன்னு. இப்பதானே விஷயம் தெரியுது ஒரு வேலையும் பாக்காம அய்யா இப்படி போன தான் நோண்டிட்டு இருக்குறீங்களென்று ஷமீரா சொல்ல எதோ வெட்டியா இருக்கிறேனாஆஆ...

ரொம்ப தாண்டி உனக்கு கொழுப்பு என்றவன் லெவன் தர்டிக்கு பிரேக் டைம் டி.டீ குடிக்க கேண்டீன் வந்தேன்.சரி பொண்டாட்டிக்கு போன் பண்ணி பேசலாம் என்று கால் பண்ணுனேன் டி.

ம்கும் இந்த கொய்யா செஞ்சு கிழிக்கிற வேலைக்கு பிரேக் ஒன்னு தான் கேடு என்றாள்...

ஏதேஏஏ...

அடியேய் வேலை என்றால் உன் புருஷன் கிட்ட வெள்ளைக்காரனே தோத்துருவான் டி என்கவும் ஒரு நாளைக்கு வந்து பார்த்தா தானே தெரியும் ஐயாவோட
லட்சணமென்றாள்.

நோ செல்லம் அப்படி எல்லாம் முடிவு எடுத்து விடாதே புரியுதா,இங்கு வேற நிறைய பிகருங்கலாம் இருக்கிறாளுங்கள்.

அவளுங்கள் வேறு உன் புருசனை சைட் அடிப்பாளுங்க,அதையெல்லாம் பார்த்து உனக்கு கோவம் வரும்.ஏற்கனவே இங்க மசாலா நெடி வேற தாங்க முடியாது, அப்புறம் அதுவும் உனக்கு சேர்ந்தது ரொம்ப கஷ்டம் என்கவும்,வீட்டுக்கு வாடா உன்னை வச்சிக்கிறேன் என்றாள்..

ஹா ஹா என்று சிரித்தவன் நோ டி செல்லம்.அதான் புருஷன் ஆகிவிட்டேனே இனிமே எதுக்கு வச்சிக்கிறனெல்லாம் சொல்லிட்டு இருக்க என்கவும்,அய்யோ அய்யோ என்றாள்.

சரி டி...மேல நம்ப ரூம்ல இருக்கியா இல்ல அம்மா கூட கீழ இருக்கியாடி என்றான்.

"ஏனாம் என்றாள்"

வீடியோ கால் பண்ண தான் டி..என் பொண்டாட்டி முகத்தை பார்க்கணும் இல்லையா,இதுலாம் உனக்கு ஓவரா தெரியலையா என்க,என் பொண்டாட்டி முகத்தை நான் பார்க்கிறதில் என்னடி நேரங்காலம் வேண்டி கிடக்கென்றான்.

நான் ஒன்னும் நம்ப வீட்டில் இல்லையே என்றாள்.வீட்டில் இல்லாம வேற எங்க சுத்திட்டு இருக்கடி என்கவும்,பின்னர் தான் இருக்கும் இடத்தை சொல்லவும் அங்க என்ன டி பண்ற?

உன்னை யாரு டி தனியா போக சொன்னா?அதெல்லாம் மாமா கூட போக வேண்டிய இடம் டி.

"யோவ் வாய மூடுயா"

எந்த நேரத்துல என்ன பேசணும் தெரியாது.மலரும் கண்மணியும் தான் கூப்பிட்டு வந்தாளுங்க என்கவும் அப்படியா...

ரெண்டு பேரும் தண்ணீரில் ஊறிட்டு இருப்பாங்க நீ என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்கியா?

உனக்கு தான் நீச்சல் தெரியாதே செல்லம்..

ஒரு நாளைக்கு மாமா கத்துக் கொடுக்கிறேன் டி நீ கவலையே படாத என்க,ஐயோ சாமி, நீங்க எனக்கு எதுவுமே கத்துக் கொடுக்க வேண்டாமென்றாள்.

மனைவியின் பதட்டமான குரலைக் கேட்டு சிரித்தவன் நீ சொன்னால் நான் விட்டுறுவேணா டி, செல்லம்... கண்டிப்பா சம்பவம் இருக்குடி என்றான்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top