Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
திருச்சி:
உங்க இடத்துல தான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நானும் இருந்தேன்.அன்னைக்கு என் பையன் வேற ஜாதி பொண்ணை காதலிக்கிறேன்னு சொல்லும்போது நான் சம்மதிக்கல...
ஒருவேளை மதத்தையும் ஜாதியையும் பார்க்காம இருந்தா,இன்னைக்கு என் பையன் உயிரோட இருந்திருப்பானே சார் என்கும் நாதனின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
அழாதீங்க நாதன் நடந்தது நடந்து போயிடுச்சி இனி வருத்தப்பட்டு ஒன்னும் புண்ணியமில்லை என்கவும்,சொந்த பந்தங்களையும் ஊர்ல இருக்குறவங்கள் வரட்டு கவுரவத்தை பற்றி தான் யோசித்தனே தவிர,என்னுடைய பையனினா ஆசையை பற்றி நான் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.
இதோ அஞ்சு வருஷமா என் பொண்டாட்டி என்கிட்ட பேசறதே கிடையாது.
ஜாதியும் மதத்தையும் கட்டிக்கிட்டு அழுவு என் புள்ளையை கொன்ன போல என்னையும் கொன்னு காரியம் பண்ணிடுன்னு கடைசியா சொன்னவள்தான் அதிலிருந்து அமைதியாகிட்டாள்.
கால்ல கூட விழுந்து கெஞ்சி பாத்துட்டேன் சார் இதுவரைக்கும் அவ மனசு இறங்கவில்லை என்னோட தவறு அதுக்கு அப்புறம் மேல தான் புரிஞ்சுது.
ஒருவேளை என் பையன் ஆசைப்பட்ட போல அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் சம்மதம் சொல்லிருந்தால் இன்னைக்கு அவன் குடும்பமா எங்கேயோ ஒரு இடத்துல உயிரோட இருந்திருப்பான்.
நம்மளோட குடும்பம் நம்மளோட கௌரவம் மத்தவங்க என்ன நினைப்பாங்க என்பது தான் கவலை..ஆனால் நமது பிள்ளைகளோட விருப்பத்தை பற்றி யோசிக்கிறதே இல்லைங்க சார்.
அவர்களுடைய நியாயமான ஆசையை நம்மளே நிறைவேற்றி இருந்தால் இப்படி நடந்து கொள்ள மாட்டாங்கன்னு அனுபவத்துல நான் புரிஞ்சுகிட்டேன் சார்.உங்களுக்கு நான் அட்வைஸ் பண்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.
உங்களுக்கு பிடிக்கலையா நீங்க தாராளமா ஒதுங்கி இருங்க,எங்கேயோ கண் காணாத இடத்துல பாப்பா வாழ்ந்துட்டு போகட்டும்.
உங்களுக்கு ஒன்னும் அடுத்தடுத்து குழந்தைகள் இல்லையே என்கும் நாதனின் வார்த்தைகளை கேட்க மகிக்கு சுருக்கென்று நெஞ்சுக்குள் முற்கள் தைத்தது போலிருந்தது.
என்னடா இவன் இப்படி பேசுறானேனு நினைக்காதீங்க நிதர்சனத்தை சொல்றேன் சார்.என் இரண்டாவது பொண்ணுக்கு ஜாதகம் மதம் ஜாதி எதுவுமே பார்க்கல மாப்பிள்ளை டாக்டரா இருக்குறாரு. ஆசிரமத்தில் வளர்ந்தவர் தான், தெரிஞ்சவங்க மூலமா கேள்விப்பட்டேன் கல்யாணம் பண்ணி வச்சேன் இதோ சொந்த வீடு வாசல் குடும்பமா சென்னையில சந்தோஷமா இருக்காங்க.
நீங்களும் யோசிச்சு பாருங்க சார்.அப்புறம் மேடத்தை தேடுவதற்கு கண்டிப்பா உதவி செய்கிறேன்.எனக்கு தெரிஞ்ச டிடெக்டிவ் ஏஜென்சி திருச்சியில் இருக்கிறது.
அவங்கள வேண்டுமென்றால் போய் பார்க்கலாமென்க, மகிக்கும் அது சரி என்று பட்டது.இன்னைக்கு ஈவினிங் போகலாமா என்கவும் சரிங்க சார் என்றார்.
பின்னர் சாப்பிட்ட கைகளை கழுவி விட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் நாதன் பேசிய வார்த்தைகளே மகியின் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
நேரமும் கடந்திருக்க மற்றவர்கள் எல்லாரும் ஆபீஸ் டைம் முடிந்து வீட்டிற்கு சென்றனர்.நாதனும் மகியும் எப்பொழுதும் கொஞ்சம் லேட்டாக தான் செல்வார்கள்.
ஆனால் இன்று அவர்கள் டிடெக்டிவ் ஆபீஸ்க்கு போக வேண்டுமென்று சரியான நேரத்திற்கு தனது வேலையை முடித்துவிட்டு வந்து கதவைத் தட்ட எஸ் கம்மின் என்றார்.
சார் போகலாமா என்க ஹம் போகலாம் நாதன் என்றவர் சிஸ்டமை ஆஃப் பண்ணிவிட்டு கீழே வந்தவர்கள் வண்டியை எடுத்துக் கொண்டு நேராக நாதன் சொல்லியே டிடெக்டிவ் ஆபீஸிற்கு அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர்.
ரிசப்ஷனில் இருந்த சோபாவை காட்டி சார் நீங்க உக்காருங்க நான் பாத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே போனார்..
நாதனை பார்த்த அங்கிருந்த டிடெக்டிவ் சங்கர், வாங்க மாமா என்க...மதியம் உன்னிடம் சொன்னேனே என்கவும் சரி மாமா வர சொல்லுங்க என்றான்.
இது என்னுடைய அக்கா பையன் சார் என்று நாதன் சொல்ல அப்படியா என்று வியப்பாய் கேட்க,அதனாலதான் சார் நம்பி கூப்பிட்டு வந்தேனென்று சிரித்தார்.
ஓகே நாதன் என்ற மகி பின்னர் சுருக்கமாக சங்கரிடம் விஷயத்தை சொல்ல அனைத்தையும் கேட்டவனுக்கு மகியின் மேல் தான் ஆத்திரம் வந்தது.
இருந்தாலும் உதவி தேடி வந்தவர்களை முகம் காட்ட முடியாது என்பதால் அவங்க போட்டோ இருந்தா குடுங்க சார் என்க, தனது போனிலிருந்த எஸ்தரின் போட்டோவை சங்கரின் வாட்ஸப்பிற்கு அனுப்பினார்.
மேலும் பல விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டவன் கண்டிப்பாக அவங்களை கண்டு பிடித்திடலாம் என்று சொல்ல எவ்வளவு அட்வான்ஸ் என்று மகி கேட்க அது கேஸ் முடிந்த பிறகு நான் சொல்றேன் சார் என்றான்.
சரி சங்கர் நாங்கள் வருவோமென்று இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
வனிச்சூர்:
ஷமிராவோ இருவரும் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கிச்சனுக்கு போனவள் அதையெல்லாம் சிங்கிள் போட்டு கழுவிக் கொண்டிருக்கும்போது ஓய் பொண்டாட்டி,மனுஷன் குடிக்கிற போல ஸ்ட்ராங்கா ஒரு டீ எடுத்துட்டு வா டி என்று கிச்சனில் இருப்பவளுக்கு குரல் கொடுத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்த செழியனோ பேப்பரை எடுத்து படிக்கலானான்.
மனுஷன் குடிக்கிற போலயாடா டீ கேக்குற இப்ப பாரு என்னோட கைவண்ணத்தை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்,துலக்கிய பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு கையை கழுவியவள் அடுப்பை பற்ற வைத்து டிகாஷனை கொதிக்க வைத்துட்டு,மீதமிருந்த பாத்திரத்தை துலக்கி முடிக்கவும் டிக்காஷனும் கொதித்து தயாரானது.
பின்னர் அதில் பால் ஊற்றியவள் இஞ்சி துண்டை தனது நடுவிரல் நீட்டத்துக்கு நசுக்கி போட்டு டீ தூளையும் அள்ளி போட்டு கொதிக்க வைத்து இறக்கியவளோ கணவனுக்கு எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் இந்தாங்க என்க, கொடுங்க பொண்டாட்டி என்று வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.
அவளோ அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ ரசித்துக் குடுத்தான்.என்னடா இது?அவ்வளவு டிக்காஷன் போட்டோம் இஞ்சி வேற நிறைய போட்டோமே காரமும் கசப்பும் இருக்கணுமே?
இவர் என்னடா என்றால் ரசித்து குடுக்கிறாரே என்ற யோசனையில் இருக்க டீ கப்பையும் பேப்பரையும் கீழே வைத்துவிட்டு எழுந்தவனோ அங்கு யோசனையோடு நிற்கும் மனைவியை இழுத்தவனோ அவள் வாயை தனது வாயால் மூடி வாய்க்குள் இருந்த டீயை அவளுக்குள் செலுத்தினான்.
அவளுக்கோ டீத்தூளின் கசப்பும் இஞ்சியின் காரணமும் தாங்கவில்லை..
ம்ம் என விலக பார்க்க முழுவதையும் அவளை விழுங்க வைத்திட்டே அவளிடமிருந்து விலகியவன்,கொய்யால யாருகிட்ட டி உன் வேலையை காட்டுகிற?
எப்படி உன் புருஷனோட டீ என்கவும் இருடா முதல்ல வாயை கொப்பளிச்சிட்டு வந்து உன்னை பார்த்துக்கிறேனென்று மனதிற்கு நினைத்தவள் வேகமாக போய் வாஷ்பேஷனில் தண்ணீர் திறந்து வாயை கொப்பளித்துக் கொண்டிருந்தாள்...
மனைவியின் செயலை பார்த்து ஹாஹா என்று சிரித்துக் கொண்டே அவளிடம் வந்தவன் எதையும் செய்வதற்கு முன்னாடி பலமுறை யோசிக்கணும் செல்லம்...
பிளானிங் இல்லாம எதையும் பண்ண கூடாது ஓகே என்று அவளின் தோளின் மீது கையை போட,கணவனின் கையை தட்டிவிட்டு நிமிர்ந்தவள் எதுக்கு இப்படி பண்ணீங்க?.எனக்கு தான் டீ பிடிக்காதுன்னு தெரியுமே என்கவும்,சரி உனக்கு பிடிக்காது பட் எனக்கு ரொம்ப பிடிக்குமே டி.
முதல் முதல்ல உன்கிட்ட ஆசையா டீ கொண்டு வா என்று கேட்டேன் நீ என்ன வேலை பண்ணிருக்கணும் மாமன் ரசிச்சு குடிக்கிற போல டீ போட்டு வந்திருக்கனுமா இல்லையா?
அத விட்டுட்டு இஞ்சியையும் டீ தூளையும் எனக்கென்னவென்று அள்ளி போட்டஇருக்கிறியே இது நல்லதா சொல்லு?.
அதுக்குன்னு இப்படியா பண்ணுவாங்க என்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டாள்..
"இதுதான் எதிர் வினை செல்லம்"
நீ என்ன செய்கிறாயோ அதுக்கு பதில்...
ஓஓஓஓ அப்ப நான் என்ன பண்ணினாலும் நீங்க திருப்பி பண்ணுவீங்களானு அவள் முறைக்க அப் கோர்ஸ் நீ பண்ணினதையும் பண்ணுவேன் நீ பண்ணாததையும் பண்ணுவேனென்று மனைவியை தூக்கிக்கொண்டு படியில் ஏற எதுக்கு இப்போது மேல போறிங்க?
யாருமே வீட்ல இல்லை கதவுலாம் திறந்து கிடக்கு என்க ஒன்னும் பண்ணலடி பைத்தியம்.மேல வா உனக்கு ஒரு வேலை இருக்கு என்றபடியே தனது ரூமிற்கு போனவன் செல்லம் இங்கு சொந்தக்காரங்க பங்க்ஷனுக்குலாம் புடவை தான் கட்டிட்டு போற போல இருக்கும்.உன்கிட்ட அந்த அளவுக்கு புடவை இல்லைனு நினைக்கிறேன் என்க...
கணவனை முறைத்தவள் நீங்களே எப்படி முடிவு பண்ணலாம் என்கவும்,ஏய் உன்னை கூப்பிட்டு வரும்போது நீ வெறும் கையோடு தானடி வந்த..
கல்யாணத்துக்கு கூட அங்கு ஒன்றுதான் வாங்குனேன் இங்கு நடந்த பங்ஷனுக்கு அப்புறம் அதுக்கு ஒன்னு என்று சிரிக்க எதுக்காக என்று பல்லை கடித்தாள்.
"அதான் டி ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு"...அதுக்கு தான் டி என்று பாட ஐயோ ஏன் இப்படி பண்றீங்க என்று வெட்கப்பட்டுக் கொண்டு வேறு பக்கம் திரும்பி கொண்டாள்...
நீ தானடி எதுக்குன்னு கேட்ட உன் டவுட்டை கிளியர் பண்றதுக்கு தானே நான் இருக்கேனென்று பின்பக்கமாக மனைவியை அணைத்து கொண்டு சொல்ல...
ஆமாம் பொல்லாத புடலங்காய் டவுட் என்றவள் பாபு மாமா துபாயில் இருந்து வரும் போது ஒரு பெட்டி நிறைய டிரஸ் வாங்கிட்டு தான் வந்திருக்கிறார் என்க...என்னடி சொல்ற என் பங்காளிக்கு அந்த அளவுக்கு அறிவு இருக்கா என்கவும் உங்களை விட என் மாமாவுக்கு அறிவு அதிகம் தான் என்றாள்...
அப்படியா சரி பரவாயில்ல உன் அறிவுக்கு தகுந்த போல தானே புருஷன் கிடைப்பான் என்று சிரித்தவன் சரி அதுக்கெல்லாம் பிளவுஸ் எல்லாம் வேணுமேடி...
இல்லை முதல் மரியாதை ராதாவை போல நிக்க போறியா என்றவன் மனைவியை அந்த கோலத்தில் நினைத்து பார்த்து வாவ் செமையா இருப்படி என்க...வாய் வாய் என்று கணவனின் வாயிலே இரண்டு அடி வைத்தாள்...
வாயுள்ள பிள்ளைதான் பிழைத்துக் கொள்ளும் என்று சொல்லுவாங்களே அது உனக்கு தெரியாதா?
சரிடி,எல்லாம் ஒரு பேக்ல எடுத்து வச்சுக்க அதுக்கெல்லாம் பிளவுஸ் வாங்கணும் இல்லையா,அப்படியே தைக்க கொடுத்துட்டு வந்துடலாம் என்றான்.