Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சோழனூர்-திருச்சி:
வீட்டிற்கு வந்த மகி வேகமாக குளித்து தயாரானவர் எதிர் வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்து அந்தோணி வந்தால் கொடுக்குமாறு சொல்ல,அவர்களோ எங்கே எஸ்தரை காணும் என்கவும்,அவளுடைய சின்னம்மா பொண்ணுக்கு உடம்பு சரி இல்லையென்று காரைக்கால் வரைக்கும் போயிருக்கிறாளென்று சமாளித்தவர் அங்கிருந்து திருச்சியை நோக்கி கிளம்பினார்...போகும் வழியெல்லாம் தனது மனைவியை எப்படி தேடுவதென்று கவலையானது.
வேலை டென்ஷன் ஒரு பக்கம் மனைவியை தேடுவது ஒரு பக்கமென்று மனதிற்குள்ளே கோபமும், கவலையாகவும் இருந்தது.
எவ்வளவு திமிரு இவளுக்கு?ஏன் எனக்கு திட்ட உரிமையில்லையா? மூணு வேளை சோறு போட்டு இருக்க இடமும் நல்ல ராஜ வாழ்க்கை தானே கொடுத்திருக்கிறேன்.
நான் என்ன இவளை மரத்து நிழலிலையா குடும்பம் பண்ண வச்சேன்?எல்லாம் உட்கார்ந்து சாப்பிட்ட திமிரு இவளையெல்லாம் வயல் வேலைக்கு அனுப்பியிருந்தால் அப்போ புருஷனோட அருமை தெரிந்திருக்குமென்று மனைவியை திட்டிக் கொண்டே திருச்சிக்கு வந்து சேர்ந்தார்.
நேராக ஆபீஸ்க்கு போய் தனது சிஸ்டம்மை ஆன் பண்ணி ஈமெயிலை ஓபன் பண்ண அதில் மறுநாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு போவதற்காக அவருக்கு பர்மிஷன் லெட்டர் அனுப்பி இருந்ததை படித்தவர் தனது பி. ஏ கிட்ட அதை பிரிண்ட் அவுட் எடுக்க சொல்லியவர் ஸ்டாப் எல்லாரையும் மீட்டிங் ஹாலுக்கு வரச்சொன்னார்.
சிறிது நிமிடத்தில் அந்த ஆபீஸிலிருந்த ஆபீஸர்களும் மீட்டிங் ஹாலுக்கு வர,அங்கு வந்த மகியும் மறுநாள் எம்எல்ஏ வீட்டுக்கு ரைடு போகும் விஷயத்தை பற்றி சொல்லியவர் இந்த விஷயம் எக்காரணத்தை கொண்டும் வெளியே தெரியக்கூடாதென்று கண்டிப்பாக சொல்லிவிட்டு அவர்களை போக சொன்னவர் தனது கேபினுக்கு வந்து பெண்டிங் வேலையை முடித்து கிளம்பவே இரவானது...
வரும் போது பெயருக்கு சாப்பிட்டு வீட்டுக்கு வந்தவருக்கு மனைவியின் நினைவுகள் வர இனி அந்த ஓடுகாளியை நினைக்கவே கூடாது என்று சொன்னாலும் அவ எங்கதான் போயிருப்பாள்?டிடெக்டிவ் கிட்ட கொடுத்து தேடலாமாயென்ற எண்ணம் வராமலில்லை.
நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் கடந்து சென்றது.விடியலும் ஆரம்பமாக மகியோ மற்ற ஆபீஸர்களோடு திருச்சி எம்எல்ஏவாக இருக்கும் காத்தவராயன் வீட்டை நோக்கி சென்றார்...
அரை மணி நேரத்தில் அந்த பெரிய வீட்டின் கேட் முன்பு போய் நின்று ஹாரனை அழுத்த அங்கிருந்த வாட்ச்மேனோ கவர்மெண்ட் முத்திரை உள்ள காரை பார்த்துவிட்டு கதவை திறந்து விட மூன்று கார்களும் உள்ளே போய் நின்றது.
ஆட்டுக்கறி குழம்பில் இட்லி பிசைந்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் எம்எல்ஏ...திடீரென்று இத்தனை ஆபிஸர்கள் உள்ளே வருவதை பார்த்தவர் வாங்க வாங்க சாப்பாடு நேரத்துல வந்துருக்கீங்க..வாங்க சாப்பிடலாமென்க,பரவாயில்லையென்அங்கிருந்த ஹாலில் உட்கார்ந்து கொண்டனர்.
நிதானமாகவே மனைவியின் கை பக்குவத்தை ரசித்து சாப்பிட்டு பெரிய ஏப்பத்தோடு வந்தவர் சொல்லுங்க சார்..என்ன காலையிலேயே இவ்வளவு தூரம்?.
பின்னர் தங்களிடமிருக்கும் சர்ச் வாரண்டை மகியின் அசிஸ்டன்ட் காட்ட தாராளமான சோதிச்சுக்குங்க. சட்டத்தை மதிக்கும் சாதாரண குடிமகன் நானென்று சிரித்தார்.
அதற்குள் இந்த விஷயம் கட்சிக்காரர்களுக்கு தெரிய எம்எல்ஏ வீட்டிற்கு வந்தவர்கள் வெளி கேட் பூட்டியிருப்பதை பார்த்து வன்மையாக கண்டிக்கிறோம் என்று வாசலில் நின்று கத்தினர்.
கட்சிக்காரர்களின் சத்தம் அதிகமாக கேட்க,சார் நாங்கள் எங்களுடைய கடமையை தான் செய்கிறோம்.இவங்க இப்படி போராட்டம் பண்ணிட்டு இருந்தாக்க பின்னர் சட்டப்படி நடவடிக்கைதான் எடுப்போமென்று மகி சொல்ல தனது பி.ஏவை அழைத்தவர் எல்லாரையும் கலைந்து போகுமாறு சொல்ல சொன்னார்...
செல்வி வந்தவங்களுக்கு காபி ஜூஸ் கொண்டு வந்து குடு என்க, சார் அதெல்லாம் ஒன்றும் வேண்டாமென்று சொல்லிவிட்டார்.கடமையில் எப்போதும் மகி கடுமையாக நடந்து கொள்வார் என்பது அரசியலில் இருப்பவர்களுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும்.
லஞ்சம் கொடுப்பதற்காக எத்தனையோ பேர் அவரை அணுகியிருக்க தனது ஒரு பார்வையாலே முறைத்து வெளியே துரத்தி விடுவார்.நேரமும் கடந்து சென்றது ஆனால் அந்த வீட்டில் அப்படி சட்டவிரோதமாக எதுவும் இருப்பது போல் தெரியவில்லை.
என்ன சார் எல்லாம் சரியா இருக்காயென்று டாக்குமெண்ஸை படித்துக் கொண்டிருந்த மகியிடம் கேட்க ஆமாம் சார் அதுதான் எனக்கு சந்தேகமாயிருக்கென்று சிரித்தார்.
தம்பி என்று கூப்பிடலாமா என்க, நிச்சயமாக சார்.வயதில் பெரியவர் தாராளமாக கூப்பிடலாம்.
ஹம்..என்னை பற்றி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.இப்போ என்கிட்ட இருக்கிறது எல்லாம் நான் சம்பாதிச்சு சேர்த்தது ஒரு துளி தான்.எங்களோட குடும்பம் விவசாயத்தை நம்பி வாழ்வது.
இந்த ஊரிலேயே பெரிய நிலக்கிழார் யார் என்றால் எங்களோட குடும்பம் தான்.அதில் வரும் வருமானத்தை வச்சு சுற்றி இருக்கிற கிராம மக்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டு வாழ்ந்துகிட்டு இருக்கும் போது ஊர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக ஏதோ ஒரு பதிவியில் இருக்கணும்னு எங்க அப்பாவுக்கு புரிஞ்சது.
பிறகு அவரும் முதல்ல பஞ்சாயத்து போர்ட் தேர்தலில் நின்னவர் படிப்படியாக உயர்ந்து எம்.பி ஆனார்..
அவருக்குப் பிறகு அரசியல் வாரிசா நான் வந்தேன்.என்னோட 45 வருஷம் அரசியல் வாழ்க்கையில இதுவரை என்னோட சம்பளத்தை தவிர பத்து பைசா என் வீட்டுக்கு நான் எடுத்துட்டு வந்தது கிடையாது.
ஏன்னா என்கிட்ட இருக்கும் சொத்தே இன்னும் எட்டு தலைமுறைக்கு வரும் அடுத்தவங்க சொத்தை வச்சுக்கிட்டு ஒரு போதும் வாழ முடியாதுப்பா. ..
எத்தனையோ பேரு என்னையும் மிரட்டினாங்க பணத்தைக் கொடுத்து வளைக்க பார்த்தாங்க எதுக்கும் அசரலையே நான்.என்கிட்ட நேர்மை இருக்கு.என்னோட பிள்ளைகள் படிச்சு இன்னைக்கு உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள்...
அடுத்த மாசம் எலக்சன் வரப்போகுது இந்த முறையும் நான் தான் ஜெயிப்பேனென்று தெரியும்.அதற்காக தான் இந்த வருமானவரி சோதனையை எதிர்க்கட்சிகர்கள் எனக்கு ஏவி விட்ட சதி என்று பேசிக் கொண்டிருந்தார்.
மகிக்கும் ஓரளவுக்கு காத்தவராயனைப் பற்றி தெரியும் என்பதால் அவருக்கும் இந்த ரெய்டில் விருப்பமில்லை ஆனால் மேலிடம் செல்வதை கேட்டுதானே ஆகணுமென்று வந்திருந்தார்.
வனிச்சூர்:
அம்மாவ ரொம்ப திட்டிகிட்டு தான் இருப்பாங்க இல்லையா பாட்டியென்று ஷமீரா கேட்க உன் அப்பனோட குணம்தான் தெரியுமே. அப்படியே அவன் ஆத்தாவைப் போலயென்றார். .
ஏண்டி மா எங்கிருந்துடி உனக்கு இவ்வளவு துணிச்சல் வந்துச்சு? பக்கத்துல இருக்க எங்கள பாக்க வர்றதுக்கு கூட உன் அம்மா கைய புடிச்சுகிட்டு தான் வருவ...இவ்வளவு தூரத்திலிருந்த பையனை நம்பி வந்திருக்கியே எப்படி இதெல்லாமென்க, ஷமீராவோ அமைதியா இருந்தாள்.
பார்க்க நல்ல குடும்பமாக தெரியுது நல்ல பையனாக தான் இருக்கிறான். போனது போகட்டும் இவங்களுக்கு ஏற்றபடி நல்ல மருமகளாக வாழ்ந்து காட்டு.இங்கு இருக்கிற சடங்கு சம்பிரதாயமெல்லாம் உனக்கு புதுசாக இருக்கும் அதை எல்லாம் பழகிக்க..
எந்த வேலையும் தெரியாதுன்னு சொல்லாதே,உனக்கு எல்லா வேலையும் உன் அம்மா கத்து கொடுத்துருக்காதான்.உன் அப்பனோட கோவம் உனக்கு ஒரு குழந்தை பிறந்ததும் மாறி போயிடும் அதுவரைக்கும் எஸ்தர் உன் அப்பன் கிட்ட பிடுங்கள் பட்டு தான் ஆகணும் வேற வழி இல்ல..
நீ அதெல்லாம் நினைச்சு உன் வாழ்க்கையை கெடுத்துக்காத புரியுதா. நாங்க எல்லாம் வாழ்ந்து முடிச்சிட்டோம். நீங்கள் இப்பதான் வாழ்க்கையை தொடங்க போற...
படிச்ச படிப்புக்கு ஏதாச்சு வேலைக்கு போகணும்னு நினைத்தால் தாராளமா போ இல்லையா புருஷனுக்கு ஏத்த பொண்டாட்டியா வீட்டுக்கு நல்ல மருமகளா குடும்பத்தை பார்த்துகிட்டு இரு..
நாங்கள் ஒன்னும் அக்கம் பக்கத்தில் இல்லை ஓடிவந்து பார்க்கிறதுக்கு கஷ்டமோ நஷ்டமோ நீ தான் முண்டியடிச்சு வாழ்க்கையில் முன்னேறி வரணும்.
இன்னைக்கி உன் அப்பா அம்மா இப்படிப்பட்ட குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டிருக்க என்று கோவப்படுறவங்க அதே வாய் என் பொண்ணு நல்ல குடும்பத்துல நல்ல கணவனோடு வாழ்கிறாள்னு நம்ம சொந்தக்காரர்களுக்கு முன்னாடி பெருமையா சொல்லணும்.
அது உன்னோட கையில் தான் இருக்கென்று தனது அனுபவத்தை பேத்திக்கு பாடமாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்..
மேலும் சில விஷயங்கள் பேசிக் கொண்டிருக்க கதவைத் தட்டி உள்ளே வந்த பாபு நால்வரையும் சாப்பிட அழைத்துப் போனான்.அங்கே பொண்ணு மாப்பிள்ளை இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து தலை வாழை இலையில் உணவை பரிமாறினர்.
எல்லாரும் சாப்பிட்டு முடித்து எழுந்தனர்.
சிலர் காலையில் அங்கு கோயிலில் நடந்த விசேஷத்திற்கு வர முடியலை என்பதால் வீட்டிற்கு வந்து தங்கள் கையில் கிடைத்த பரிசுகளை கொடுத்து சென்றனர்.
தெரிந்தவர்கள் எல்லாம் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதால் ஷமீராவை வேறு புடவை மாற்றிக் கொண்டு இருக்க சொன்னார்.
மாமியார் தன்னிடம் பேசியதை பார்த்த ஷமீரா அத்தை என்னோட டிரஸ் எல்லாம் அங்கு இருக்கேயென்க, எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தாச்சி.
அந்த ரூம்ல தான் இருக்கு பாருத்தானு சிரித்துக் கொண்டே வானதியும் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, சரிங்கத்தை என்றவள் அவர் காட்டிய ரூமிற்குள் சென்று கதவை சாற்றி விட்டு திரும்ப அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
தனது மாமியாரோ இல்லை அத்தை தான் வந்திருக்காங்களென்று நினைத்துக் கொண்டு கதவை திறக்க புயல் போல் உள்ளே வந்து கதவை சாத்தியவனை பார்த்தவள் என்ன பண்றீங்க?.
உங்களை யார் இங்கே வர சொன்னா?
வெளியே போங்க யாராவது தப்பா நினைக்க போறாங்களென்று பதற்றமாக சொல்லவும் இனிமே என்னை யாருடி தப்பா நினைக்க போறா என்று மனைவியை இழுத்து தன்னோடு இருக்கியவன் அவள் இதழில் புதைந்தான்.
ஒரு கட்டத்தில் அவள் மூச்சிற்காக ஏங்குவது தெரிந்து தனது மூச்சை கொடுத்து மனைவி ஆசுவாசப்படுத்தியவன் பின்னர் மனமின்றி விலகியவன்,ரொம்ப அழகா இருக்கடி என்றபடியே புடவை இடைவெளியில் தெரியும் வெறுமையான இடுப்பில் கையை கொடுத்து தனது நெஞ்சோடு அணைக்க ஷமீராவுக்கு கணவனின் செயல்கள் வெட்கம் வந்தது.
அப்புறம் பொண்டாட்டி நல்லா தெம்பா சாப்பிடுங்க அப்பதான் உன் புருஷனை சமாளிக்க முடியும் என்றான்.ஆஹான் நீங்க என்ன அடங்காத காளையா உங்களை சமாளிக்கிறதுக்கு புதுசா தெம்பு வேணும்.
ஓஓஓஓ என்றபடி அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவன் இந்த வாய் ராவுக்கு என்ன சொல்லுதுன்னு பார்க்கலாமென்று ஒரு மார்க்கமாக சிரிக்க,எதுக்கு சம்பந்தமே இல்லாம சிரிக்குறீங்களென்றாள்.