• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சோழனூர்

விதி நம்மள பொண்ணா பொறக்க வச்சிடுச்சிங்களேண்ணி.என்ன பண்றது சொல்லுங்கள்?. மண்ணுக்குள் போற வரைக்கும் யாரோ ஒருத்தவங்களுக்காக நம்ம எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு போக வேண்டியதாக தான் இருக்கு


இதில் நீயும் நானும் மட்டும் என்ன விதிவிலக்கா?.உலகத்தில் இருக்கிற எல்லா பொம்பளைங்களின் நிலைமையும் இப்படித்தானே என்று தனது நாத்தனாரை ராணி தேற்றினார்.

நாளைக்கு ஷமீராவுக்கு பிறந்தநாள்னு உங்க அண்ணன் டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கிறாரென்று ராணி சொல்ல நானும் அவளுக்காக துணியும் அவள் ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்ட டாலரும் வாங்கி வச்சிருக்கேன்.அதை எடுத்துட்டு வரேன்.உங்கள் மருமகளிடம் கொடுத்துவிடுறீங்களா அண்ணி என்கும் எஸ்தரை பார்த்தவர் இதை என்கிட்ட கேட்கணுமா?

நீங்க எடுத்துட்டு வாங்கண்ணி நான் கொடுக்கிறேன் என்க...தனது கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்த எஸ்தரும் கதவை திறந்து உள்ளே போனவர், கணவருக்கு தெரியாமல் பீரோவை திறந்து அதில் மகளுக்காக வாங்கி வைத்த பொருள்களை எடுத்துட்டு வந்து ராணியிடம் கொடுக்க அவரும் அதை வாங்கிக் கொண்டு சரிங்கண்ணி போயிட்டு வரேன்.நாங்க காலையில சீக்கிரமா கிளம்பிடுவோமென்று சொல்லிக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.

மனைவி பேகோடு வருவதை பார்த்த அந்தோணி என்ன ராணி அது என்க உங்க தங்கச்சி தான் கொடுத்துச்சு மாமா...

நாளைக்கு உன் மருமகளுக்கு பிறந்தநாள் இல்லையா என்கவும் உன் அண்ணன் உர்ரென்று தான் இருக்கிறானா என்க,அண்ணனை பார்க்கவில்லை.அண்ணியை ரொம்ப சத்தம் போட்டுருக்கும் போல அழுதுகிட்டு இருந்துச்சுங்க...

ம்ம் என்ன பண்றது யார் வாழ்க்கை எப்படி போகுமென்பதை நம்மளால சொல்ல முடியாது.ஆண்டவரோடு தீர்மானம் எதுவோ அதன் போல நடந்து போயிருச்சு.

அதிலிருந்து கடந்து வருது தான் புத்திசாலித்தனம்.அப்படியே பாபுக்கும் ஒரு பொண்ணை பாத்து கல்யாணத்த முடிச்சா சரியாகிடும் ராணியென்று அந்தோணி சொல்ல,திடீர்னு பொண்ணுக்கு நாம எங்க மாமா போகிறது?.

அதுதான் எனக்கும் யோசனையா இருக்கு ராணி.ஆண்டவர் என்ன புதுசாவா இனிமேல் பொண்ணை பொறக்க வைக்க போறாரு.

நமக்கென்று வரப் போகும் மருமகள் இங்குதான் எங்கையோ இருக்கும் என்றவர் சரி மா நான் போய் காருக்கு பெட்ரோல் ஃபில் பண்ணிட்டு வந்துடுறேன்.காலையிலே நம்ம கிளம்ப,பாதி வழியில் பெட்ரோல் இல்லாமல் போனால் சரிப்பட்டு வராது.இன்னும் வேற ஏதாவது வாங்கிட்டு வரணுமா என்க...ஆமாங்க பழம்லாம் எதுவும் வாங்கவில்லையே என்கவும்,அதை மதுரை கிட்ட போய் வாங்கிகிட்டா என்ன ராணி?

எப்படியும் காலை 10 இல்லை 11 மணிக்கு எல்லாம் நம்ப அங்க போயிட மாட்டோமா என்கவும்,ஆமா நீங்க சொல்றதும் சரிதான் என்றார்.

சரி சாப்பாடு எடுத்து வை நான் சாப்பிட்டுட்டு கிளம்புறேனென்று டைனிங் டேபிளில் போய் உட்கார, ராணியும் கணவருக்கு உணவை பரிமாற இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

ஏங்க சின்னவன் வருவான

சொல்லிருக்கிறேன் மச்சான் வருவாறான்னு எனக்கு தெரியாது.
அவனுக்கு ஷமீராவை ரொம்ப பிடிக்கும்.விஷயத்தை கேள்விப்பட்டதும் அப்படியா மாமா என்று சொன்னானே தவிர புள்ளை மேல கோபப்படல...

அண்ணியை தான் காச்மூச்சென்று கத்துமேன்னு சொன்னான்.அவன் அண்ணன் குணம் தெரியாமலா இருக்கும் என்க அதுவும் சரிதான் மாமா.

பின்னர் சாப்பிட்டு முடித்தவர் ஹேங்கரில் இருந்த சாவியை எடுத்து கொண்டவர் சரி நீ போய் கேட்ட திற நான் கார் எடுக்குறேன்னு சொல்லிட்டு கார் நிற்கும் இடத்திற்கு போனார்..

ராணியும் அந்த பெரிய இரும்பு கேட்டை திறந்து விட அந்தோணியும் காரை எடுத்துக்கொண்டு வெளியே போனார்.

அப்பொழுது தெரிந்த பெண்மணியோ அந்த வழியாக வந்தவர் என்ன ராணி எப்படி இருக்கிற?என்க,நல்லா இருக்கேன் கா.நீங்க நல்லா இருக்கீங்களா என்று பொதுவாக பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது நான் கேள்விப்பட்ட விஷயம் உண்மையா?.
உன்ணன் மவள் ஷமீரா ஓடிப்போயிட்டாமே அப்படியா ராணி?.

ஐயோ அக்கா அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லை.நாளைக்கு அவளுக்கு கல்யாணம் கா.தூரத்து சொந்தம் தான்.பாபுக்கும் ஷமீராவுக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருந்தது.ஆனா பாபு கடைசி நேரத்தில் தங்கச்சி போல நினைக்கிறேன் வேண்டான்னு சொல்லிட்டான்.

அவங்களும் பொண்ணு கேட்டாங்களா சரி வேற வழி இல்லாம நம்மளும் சொன்ன தேதியில் கல்யாணம் பண்ணனுமே அதுக்காக தான் சம்மதிச்சிட்டோம்...

மருமகளுக்கு சீர் செய்வதற்காக தான் உங்க கொழுந்தன் சாமாம் வாங்க போயிருக்காரு கா.நம்ம கிறிஸ்டியன் முறையில அப்படி கிடையாது.அவங்க இந்து குடும்பம் தான்.பையன் நல்ல வேலையில இருக்கிறான் ஊருக்குள்ள பெரிய தலைக்கட்டு.

சாகும் போது சாதியையும் மதத்தையும் தூக்கிட்டா போக போறோம்?கண்ணை மூடிட்டா எவன் நம்பல தூற்றுவான் எவள் நம்ப நினைத்து அழுவுறான்னு நம்ப என்ன பாத்துகிட்டா இருக்கப் போகிறோம்?.

ஒத்த பொண்ணா பொறந்தா,இப்போ பெரிய குடும்பத்தில் வாக்கப்பட வாய்ப்பு கிடைச்சிருக்கு எதுக்கு அத விடணும் சொல்லுங்கக்கா என்று அவரிடமே கேட்டார்.

அப்படியா ராணி சங்கதி...ஆனால் மக்களெல்லாம் வேற போல பேசிக்குதே என்றார்... வெறும் வாய்க்கு ஏதாச்சும் விஷயம் கிடைச்சா இப்படித்தான் அக்கா இல்லாத பொல்லாததெல்லாம் மென்னு தூப்புவாங்க.

அது என்னமோ உண்மைதான்.ஆனால் உன் நாத்தனார் தான் ரொம்ப பாவம் டி யம்மா.உன் அண்ணன் கிட்ட பிடுங்கள் பட்டுக்கிட்டு இருக்கிறா.இன்னும் உன் அண்ணன் குணம் மாறலை பாரு.

அது பிறவி குணம் அதெல்லாம் மாற்ற முடியாதுக்கா என்றார்.

சரித்தா நான் வரேனென்று அவர் செல்ல,ஊரான் வீட்டு கதைக்கு மட்டும் மூக்கை தூக்கிட்டு முதல்ல வந்துருவாங்க.இவங்க பேத்தி அப்படியே முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட போல தான் விசாரிக்க வந்துட்டாங்களென்று திட்டிக்கொண்டே ராணியும் வீட்டிற்குள் வந்தார்.

வனிச்சூர்:

ரஞ்சனி ரஞ்சனி என்று குரல் கொடுக்க, அத்தை வீடு வரைக்கும் போயிருக்குப்பா என்கும் கண்மணியிடம் டீ எடுத்துட்டு வா என்க...

இதோ பா என்று சொல்லிக் கொண்டு உள்ளே போனவள் அடுப்பில் சூடா இருந்த டீயை வடிகட்டி ஊற்றி எடுத்து வந்து தந்தையிடம் குடுக்க,நீங்களாம் குடிச்சீங்களா?

ஹம் நாங்கள் குடிச்சிட்டோம் பா.

ரெண்டு நாள் லீவுல தானே இருக்கீங்க ஷமீராவை நம்ம தோட்டத்து பக்கம் கூட்டிட்டு போய் காட்ட வேண்டியது தானே?.வீட்டுக்குள்ளார இருக்கே என்கவும் நாளைக்கு கூட்டிட்டு போறேன் பா என்றாள்.

ஏன் இன்னிக்கு நாள் நல்லா இல்லையா என்று கனலரசன் கேட்க,அவர் கேட்ட தொணியில் மூவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.சோம்பேறித்தனம் என்று சிரித்தபடியே டீ குடித்துவிட்டு தனது ரூமிற்கு சென்று விட்டார்.

அப்பா கோபமாக பேசுற போல இருக்கும் கா.ஆனா செம்மையா காமெடி பண்ணுவாரு தெரியுமா என்று கவிதா சொல்ல பார்த்தாலே தெரியுது என்று சிரித்த ஷமீராவிற்கு நம்மளுடைய அப்பா இப்படி எல்லாம் நம்மகிட்ட விளையாட்டாக கூட பேசியது இல்லையே என்ற எண்ணம் வராமலும் இல்லை.

மச்சி ஊறுனது போதும்யா இன்னொரு நாளைக்கு வரலாம்.பொழுது போயிடுச்சு பாருங்களென்று கண்ணன் சொல்ல..இரு மாப்பு இன்னும் கொஞ்ச நேரம் குளிச்சிட்டு வரோம் என்றவாறு பாபு நீச்சல் அடித்துக் கொண்டிருந்தான்..

ஏன் டா துபாய்ல தண்ணி கிண்ணிலாம் கிடையாதா?தண்ணிய பார்க்காத போல ரெண்டு பேரும் இப்படி எருமை மாட்ட விட கேவலமா ஊறுரீங்களேயென்று செழியன் கேட்க,ஹா ஹா என்று சிரித்தவர்கள் ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஊர்ல குளிக்கிற போல வராது சகல.

அது என்னவோ வாஸ்தவம் தான் பங்கு...துபாயாக இருந்தாலும் நம்ம சொந்த ஊரு போல வராது..

ஏன் பங்கு ரெண்டு பேரும் துபாய்க்கு போய் எத்தனை வருஷம் ஆகுது என்றபடியே செழியன் ஈரத் துணியை மாற்றிக் கொண்டிருந்தான்.

அஞ்சு வருஷம் இருக்குமாடா என்று பரத்திடம் கேட்க,அவனோ இருக்கும்டா...படிச்சு முடிச்ச உடனே எங்களுக்கு ஜாப் கிடைத்தது.ரெண்டு பேரும் போயிட்டோம் மச்சி.

நாங்க ரெண்டு பேரும் காலேஜ்ல ஒன்னா தான் படிச்சோம் என்க...அப்படியா எந்த காலேஜில் படித்தீர்கள் என்க, சென்னையில் இருக்கும் காலேஜ் பெயரை பரத்தும் சொன்னான்...

ஏன் மச்சி மதுரையில் கொத்தனார் வேலை இல்லைனா சென்னைக்கு போனீர்களென்று செழியன் சிரிக்க, எதேஏஏஏ...நேரம் தான் டா என்றான்.

ஆமா மாப்பி யாரு எப்போ எப்படி ஜோடி சேருவோம்னு தெரியாது இல்லையா இப்ப நீயும் தங்கச்சியும் வாழ்க்கையில் ஒன்று சேரவில்லையா என்று கண்ணன் கேட்க...ஏன்டா லூசு பயலே எல்லாத்துக்கும் என்னை தானடா எக்ஸாம்பிலா சொல்லுறதென்று முறைத்தான்...

அது அப்படி இல்லை மாப்பி...சிறந்த எடுத்துக்காட்டுக்கு உதாரணமாக உன்னை காட்டுறோம்.இது பெருமைப்பட வேண்டிய விஷயம் தானே என்று கண்ணன் சொல்ல எட்டி மிதிச்சேன்னு வச்சுக்க மூஞ்சி மொகரைலாம் பேந்திட்டு போயிடும் என்று சொல்லிக்கொண்டு செழியன் அங்கிருந்த பாறையில் ஏறி மேலே வந்தான்.

மற்ற மூவரும் கரைக்கு வந்து உடையை மாற்றிக் கொண்டவர்கள்,மாலை நேர சூரியன் மலையின் அந்தப் பக்கம் மறைவதை பார்த்து ரசித்துக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

எப்பாடி,எப்ப போன நீங்க பொழுது போய் வீட்டுக்கு வரீங்களே?.டீ எடுத்துட்டு வரட்டுமாயென்று வானதி கேட்க,கொடுமா என்றபடியே அங்கிருந்து சோபாவில் உட்கார்ந்தானுங்கள்.

மூன்று பேருக்கும் சுக்கு மல்லி வர காப்பியை கொண்டு வந்து கொடுக்க என்னம்மா இதுவென்று பாபு கேட்க,மல்லி டீ கண்ணு என்றார்.

அதைக் கேட்டவனோ எஸ்தர் அத்தையும் இதுபோல வீட்ல பொடி அரைச்சு வச்சுக்கிட்டு தான் டீ போடுவார்கள் என்றான்.

இருடா நான் வீட்டுக்கு போன் பண்ணி பேசிட்டேன் வரேனென்ற பரத் தனது போனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு பேச போக...ஏய்யா ராவுக்கு என்ன ஆக்குறதென்று வானதி கேட்கவும், நீங்க இருங்கமா நாங்க சமைக்கிறோம் என்று பாபு சொல்ல,இருக்கட்டும் பா அது என்ன ஆம்பள புள்ள அடுப்பு புகுந்து ஆக்குறது என்றார்.

அப்படியெல்லாம் இல்லைங்கம்மா ஆண் பெண் இருவருக்கும் சமையல் தெரிந்து கொள்வது ரொம்ப நல்லதுங்கம்மா...சமையல் தெரிஞ்சதால் தான் எங்களுக்கு செலவு குறையுது.இல்லன்னா ஹோட்டல்ல சாப்பிட்டே வாங்குற சம்பளத்தில் பாதி போயிடும் என்றான்.

ஆமா யா...ஆனால் உங்க ஐயா அடுப்படி வந்து எட்டிப் பார்க்க மாட்டாரு என்க, என்ன என் தலை உருளுது என்றபடியே வீட்டுக்குள் வந்த செல்லதுரை அங்கே இருக்கும் பாபுவை யார் என்று கண்களை சுருக்கி பார்க்க,ஷமீராவின் அத்தை பையன் என்று வானதி அறிமுகப்படுத்த வாப்பா நல்லா இருக்கியா என்று நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
ஆமா,உங்க அம்மாக்காரி என்னமோ என் தலையை உருட்டிக்கிட்டு இருந்தாளே என்னவாம் என்கவும்,அது ஒன்னும் இல்லப்பா.சமையல் பற்றி பேசிக் கொண்டிருந்தோமென்று செழியன் சொல்ல, ஓஓஓ...
சமையல்கட்டு பக்கமே நான் எட்டி கூட பார்த்திருக்க மாட்டேன்னு உங்கம்மா சொல்லிருப்பாளே.

"ஆமா"

உண்மையை தானே சொன்னேனென்ற வானதி தாவங்கட்டையை தனது தோள்பட்டையில் இடித்துக் காட்டி சொல்ல,மனைவியை பார்த்து சிரித்தவர்,நீ தான் 24 மணி நேரமும் அங்கே குடியிருக்கிறியே,இதில் நானும் வந்தா வயல் வேலைகளை உன் அண்ணன் தம்பி வந்து பாப்பானுங்களா?.

அதானே என் வீட்டாளை இழுக்கவில்லை என்றால் உங்களுக்கு தூக்கமே வராதேயென்று பல்லை கடித்தார்.

அடியேய்....என் அத்த மகனுங்களை நான் கூப்பிடுறேன் இதுல உனக்கு எங்கடி பத்திகிட்டு போகுது?.பேச்சை குறைச்சுட்டு போய் ராவுக்கு புள்ளைங்களுக்கு சோறு ஆக்கி போடுற வேலையை பாரு போடி என்று செல்லதுரை சொல்லும் போது பரத்தும் வந்துவிட அவனிடமும் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் கல்யாண வேலை எந்த அளவுக்கு இருக்கென்று மகனிடம் சொல்லிக் கொண்டிருக்க,சரிப்பா என்று செழியனும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

படிச்ச பொண்ணு.வீட்டிலேயே இருக்க வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கியோனு மகனிடம் கேட்க,தான் கேட்க நினைத்த கேள்வியை செல்லதுரை கேட்பதை பார்த்து பாபுவின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது..

அது வந்து பா கண்மணி வேலை பாக்குற ஸ்கூல்லையே கம்ப்யூட்டர் டீச்சர் தேவை படுதாம்.இவளும் அதுக்கு தான் படிச்சிருக்கிறாள்.

அதான் இன்டர்வியூ போய் அட்டென்ட் பண்ண சொல்லலாம்னு பார்க்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க பா?.

ம்மா நல்ல விஷயம் தான் கண்ணு..படிச்ச புள்ள வேலைக்கு போகட்டுமே.ஆனால் அதுக்கு விருப்பம் இருந்தா போகட்டும்.இல்லையா புருஷன் குடும்பம்னு பார்க்கட்டும்.

சரிப்பா நீங்கள் பேசிட்டு இருங்கள் நான் வெளியே போயிட்டு வரேனென்று செல்லதுரை அங்கிருந்து சென்றார்.

நேரமும் கடந்து செல்ல இரவு உணவாக சாதம் காரக் குழம்பு முட்டை ஆம்லெட் போட்டு முடித்து விட்டு முற்றத்திற்கு வந்த வானதி,இளா சாப்பிடலாம்யா என்க...

சரி மா என்றவன் டேய் வாங்கடா என்று நண்பர்களோடு கையை கழுவிட்டு வந்து உட்கார, தம்பி நைட்ல நம்ம வீட்ல எப்போதும் சோறு தான்யா..

எப்போவாது இளா இட்லி தோசை சாப்டுவான்.நானும் உங்க அய்யனும் சோறு சாப்பிட்டுபோம் என்றவாறு பறிமாரினார்.

மூவரும் சாப்பிட்டு எழுந்து வாசலில் இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது மாமா என்றவாறு செழியனின் உறவினர் பையன் ஒருவன் கையில் பார்சலோடு வந்தான்.

வா குமாரு சாப்டியா என்க...சாப்பிட்டு தான் மாமா நேரா வரேன் என்றவன்,இந்த மாமா நீ கேட்ட போல கேக்கு என்று நீட்ட,எவ்வளவு ஆச்சு மாப்பிள்ளை என்கவும் அவனோ இருக்கட்டும் மாமா என்றான்.

டேய் சொந்த பந்தம் வேற பிசினஸ் வேற என்றவாறு தனது ஃபோனிலிருந்து கூகுள் பே பண்ணிவிட சிறிது நேரம் அவர்களோடு பேசிட்டிருந்தவன் வரேன் மாமா என்று சொல்லிவிட்டு குமார் போக,செழியனோ கேக்கை எடுத்துட்டு போய் உள்ளே வைத்தான்.

என்ன மாப்பிள்ளை பார்சலென்று பரத் கேட்க நாளைக்கு உன் தங்கச்சிக்கு பிறந்தநாள் மச்சான் ஞாபகம் இல்லையா என்கவும் ஓஹோஓஓஓ சர்ப்ரைஸோ?,ஆனால் ஷமீ தான் அங்கே இருக்கே மாப்பி.

நைட் போகலாமென்ற செழியன்,கண்ணனிடமும் போன் பண்ணி இரவு வரும்போது கதவை திறந்து விட சொல்ல அவனும் சரிடா என்றவன் வீட்டில் இருப்பவர்களிடம் விஷயத்தை சொல்ல,எல்லாம் வெள்ளைக்காரன் போல தான் கொண்டாடுறீங்கள் என்று சொல்லிவிட்டு ஆண்கள் மூவரும் படுக்க சென்று விட்டனர்.

நள்ளிரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. கனவு என்று ஷமீரா தூங்க,மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க இந்த நேரத்தில் யார்?என்கும் யோசனையோடு இருந்தவள் லைட்டை ஆன் பண்ணிவிட்டு பயந்து கொண்டே கதவை திறக்க,ஹாப்பி பர்த்டே என்கும் சத்தம் கேட்டது...

"அதில் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனாள்".

அப்பொழுது செழியனோ அவர்களுக்கு பின்னால் இருந்து ஹாப்பி பர்த்டே மை டியர் பொண்டாட்டி என்றவாறு கையை கட்டிக்கொண்டு சொல்ல,ஷமீராவோ வெளியே நிற்கும் கணவனை ஆச்சரியமாகவும் காதலோடும் பார்க்க...டேய் மாடிக்கு போயிடலாம் மச்சி என்று கண்ணன் சொல்லவும் சரி என்று மற்றவர்கள் எல்லாம் மாடிக்கு செல்ல பாபுவின் பார்வையோ கண்மணி மேல் தான் இருந்தது.

அவளோ இரவிலும் தாவணி போட்டிருக்க...ஏன் நைட்டிலாம் போட மாட்டாளா என்று யோசனையோடு அவளை பார்க்க கண்மணிக்கும் அவன் பார்வை புரிந்து குறுகுறுப்பை கொடுக்கவும் வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டாள்.

பின்னர் மனைவியோடு மாடிக்கு வந்தவன் அவள் கையில் கத்தியை கொடுத்து கேக்கை வெட்ட சொன்னான்.ஷமீராவும் எதிர்பாராத ஆனந்த அதிர்ச்சியோடு கேக்கை வெட்டியவள் முதல் துண்டை யாருக்கு கொடுப்பதென்று திருதிருவென்று முழித்தாள்

செழியனுக்கு கொடுத்தால் பாபுக்கு கோவம் வரும்.பாபுக்கு கொடுத்தால் இவருக்கு கோபம் வரும்.இப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டோமே என்று அவள் முழிப்பதை பார்த்த செழியன் பங்காளி நீங்களே வாங்கிக் கொள்ளுங்களென்க,இருக்கட்டும் பங்காளி உங்க பொண்டாட்டி தான் நீங்களே வாங்கிக் கொள்ளுங்களென்று மாமன் மகளை எந்த உணர்வும் இல்லாத பார்வையில் பார்த்தவாறு பாபுவும் சொன்னான்....

அடேய் இரண்டு பேரும் எட்ட போய் தொலைங்கடா என்ற கண்ணன் ஹாப்பி பர்த்டே பாப்பா என்றவாறு ஷமீராவின் கன்னத்தை அன்பாக தட்டி சொல்லியவன் கேக்கை ஊட்டி விட கண்ணீரோடு கண்ணனை தான் பார்த்தாள்.

எதுக்குடா அழுவுற உன்மேல கொஞ்சம் கோவம் இருந்துச்சு.இப்ப இல்ல சாப்பிடு என்று சொல்லவும் இந்தாண்ணா என்று அவளும் கொடுக்க ஆண்டவா சிவாஜி செத்துட்டாருன்னு பாத்தாக்க இங்க ஒரு எருமை மாடு உருவத்தில் வந்திருக்கிறார் என்று செழியன் சொல்லவும்,மச்சான் தங்கச்சி புருஷன்னு பார்க்கிறோம் என்று பரத் சொல்ல ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க என்று சொல்லவும் அந்த இடத்தில் ஒரே சிரிப்பு சத்தமாக இருந்தது. ..

பின்னர் அனைவருக்கும் கேக் வெட்டி கொடுக்க எல்லாரும் அவளுக்கும் சிறிது ஊட்டி விட்டு ஹாப்பி பர்த்டே என்றனர்.செழியன் மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க உனக்கு என்னடா,மாப்பிள்ளை முறுக்கு வேண்டி கிடக்கு??

அதான் என் தங்கச்சி கேக் நீட்டுதே வாங்கி தின்னு தொலைய வேண்டியது தானே,உனக்கு என்ன வெத்தல பாக்கு வச்சு தனியா அழைக்கணுமா என்கவும் அப்பவும் அவன் எதுவும் சொல்லாமல் இருக்க,இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு மற்றவர்கள் எல்லாம் கீழே சென்றனர்.

முன்னாடி கவிதா கண்ணன் பரத் செல்ல அதற்கு அடுத்தது கண்மணி செல்லவும் பின்னாடி பாபு வருவது தெரிந்து ஒருவித படபடப்போடு அடுத்த படியில் காலை வைக்க போனவள் தடுமாறி போக எட்டி அவளை பிடித்து விட்டான்.

இந்த முறையும் தன்னை அணைத்து பிடித்த ஆணின் கரத்தில் கண்மணிக்கு நடுக்கம் வந்தது.அவள் உடல் நடுங்குவதை பாபுவால் உணர முடிந்தது.சாரி நீங்க விழ போறீங்கன்னு தான் பிடித்தேன்.

மற்றபடி வேறு எந்த தப்பான எண்ணமும் இல்லையென்று பட்டென்று கையை எடுக்க அவளோ எதுவும் சொல்லாமல் வேகமாக படியில் இறங்கி ரூமிற்குள் போனவள் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்...

கணவனின் பார்வை தன்னை ஊசியாய் துளைப்பதை பார்த்து அவனுக்கு இப்பொழுது என்ன தேவை என்பது அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

கையிலிருந்த கேக்கை அங்கிருந்த மாடிப்படி சுவற்றின் மேல் வைத்தவள் வேகமாய் வந்து கணவனை அணைத்துக்கொள்ள,செழியனும் காற்று புகாதவாறு தன் காதல் மனைவியை இறுக்கி அணைத்தவன் அவள் உதட்டில் தனது பரிசை கொடுக்க ஆரம்பித்தான்.

நீண்ட முத்தத்தை மனைவிக்கு பரிசாக கொடுத்தவன் அவள் உதட்டிலிருந்து மனமே இல்லாமல் விலகி ஹாப்பி பர்த்டே மை டியர் சண்டி ராணி என்கவும் மகிழ்ச்சி இளா என்றாள்...

ஒரு வருடத்திற்கு பிறகு தன்னை இளா என்று கூப்பிடுபவளை முறைத்துப் பார்த்தான்...

ஏண்டி என்னை இளா என்று கூப்பிடறதுக்கு உனக்கு 12 மாசம் தேவைப்பட்டுதாடி என்கவும் நீங்கள் கூட தான் என்னை சண்டி ராணி என்று கூப்பிட்டு ஒன்னரை வருஷத்துக்கு மேல ஆகுது.அதை மறந்துட்டீங்களா என்று திருப்பி கேட்டாள்...

நான் ஒருத்தன் இவ வேற தேதி நேரம் கிழமை சூழ்நிலை எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்கிட்டு கேள்வி கேப்பாள்...அது தெரியாம வாயை கொடுத்து மாட்டிக்கிறேனே என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்..

பின்னர் தனது பாக்கெட்டிலிருந்த கவரை எடுத்தவன் அதிலிருந்த பொருளை எடுத்து கண்ண மூடுடி என்க...என்னவாம் என்றாள்..

ஏய் மூடுனா மூடு டி.ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காமல் உன்னால் இருக்க முடியாதா டி என்று மனைவியின் உதட்டை பிடித்து திருவிக் கொண்டே சொல்ல,வலிக்குதுங்க என்றாள்.

அப்போ சொன்னதை கேட்க வேண்டியது தான டி.எதுக்கு டி என்கிட்ட வாங்கி கட்டுக்கிற என்க...ம்ம் என்ற ஷமீராவும் கண்ணை மூடி நிற்க சிறிது நொடியில் தனது கழுத்தில் ஏதோ உராய்வது தெரிந்து கண்ணை திறந்து பார்க்க மனைவியின் கழுத்தில் செழியன் ஷமி என்று இதய வடிவில் பெயர் எழுதிய செயினை போட்டு விட்டான்...

என்ன இளா இதுவென அதிர்ச்சியா கேட்க உனக்காக ஆசை ஆசையா வாங்குனதுடி.போன வருஷம் செய்ய சொல்லி வாங்கினேன்.அது இந்த வருஷம் என் பொண்டாட்டியாக வந்த பிறகு தான் கொடுக்கணும்னு இருக்கு போல என்றவன் மனைவியின் தொண்டைக் குழியின் கீழே தொங்கும் டாலரை பார்த்து அதில் முத்தம் வைக்கப் போக என்ன பண்றீங்க என்று தலையை பின்பக்கம் இழுத்தாள்...

ஏய் இப்போதைக்கு நீ என் பொண்டாட்டி டி.உன்னை என்ன பண்ணாலும் யாரும் என்னை கேட்க முடியாது.ஆனா நான் ஜென்டில்மேன் டி.சடங்கு சம்பிரதாயம்லாம்னு தாத்தா சொல்லிருக்கார்.

அதெல்லாம் முடியாம மாமா உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் டி செல்லமென்று சொல்லியவாறு அந்த டாலரை தொட்டுப் பார்த்தவன் பிடிச்சிருக்கா டி என்றான்...

எதுக்கு இவ்வளவு செலவு பண்ணிருக்கீங்க?

கொஞ்சம் கூட உங்களுக்கு பொறுப்பே கிடையாது.நான் தான் வர சம்பளத்தை சேர்த்து வைங்களென்று சொன்னேனே, அதை கேட்கலையென்றால் என்ன அர்த்தமென்று வழக்கமான பொண்டாட்டியாய் அர்ச்சனையை ஆரம்பித்தாள்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top