• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 11, 2025
Messages
27
யோசனையாக இருந்த தேவி “அவருக்கு காசை திருப்பி கொடுத்திடனும், இதை வித்து கொடுங்க என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு அதையும் சேர்த்து போட்டு கொடுத்துடலாம்”... என்றாள் சட்டென்று.

சரி என தலையாட்டிகொண்டான் கோபால். அன்றைய நாள் முழுவதும் அங்கேயே இருந்துவிட்டு, மாலையில் கிளம்ப சொன்னார்கள். கோபால் மட்டும் அப்போதைக்கு கிளம்ப கற்பகம் அங்கேயே இருந்தாள்.

“நீ போய் குளிச்சுட்டு வா தேவி, நான் இங்கே இருக்கேன்”... என்றாள் கற்பகம்.

“இல்லைக்கா போய்ட்டு போய்ட்டு வர வேண்டாம், சாயங்காலம் ஒரு வண்டி மட்டும் ரெடி பண்ணா போதும் அப்படியே வீட்டுக்கு போய்டலாம்”...

அங்கே அமர்ந்து இருந்தபோது, “உனக்கு சொந்தகாரங்க யாரும் இல்லையா தேவி”... என கேட்டாள் கற்பகம்.

“எல்லாரும் இருந்தாங்க கா இப்ப யாரும் தொடர்பில இல்லை”

அம்மா?

“நான் சின்ன வயசா இருக்கும்போதே இறந்துட்டாங்க, அப்பா தான் என்னை வளர்த்தாரு. டிகிரி பாதிக்கு மேலே படிக்க முடியலை. அதான் இப்ப வேலை கிடைக்காம தவிக்கிறேன்”... என விரக்தி புன்னகை சிந்தினாள்.

“அதெல்லாம் கிடைக்கும் நீ கொஞ்சம் நேரம் இப்படியே படு”... என அவளுக்கு இடத்தை கொடுத்து விட்டு ஓரமாக அமர்ந்து கொண்டாள். இருந்த சோர்விற்கு தேவியும் படுத்து விட்டாள்.

கண் மூடி படுத்திருக்கும் அவளையே பார்த்தாள் கற்பகம், நல்ல அழகு தான், கோதுமை நிறம், பொட்டு ஒன்றை தவிர எதுவும் இல்லாத முகம், நிதானமான பேச்சு, அலட்டல் இல்லாத குணம். ஆனால் உள்ளே எதையோ வைத்து கொண்டு பாதுகாக்கும் ரகசிய பெட்டி போல இருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது. வெளியே சொல்ல மனம் வரவில்லையோ அல்லது சொல்ல பிடிக்கவில்லையோ அதிகம் பேசிக்கொள்ள மாட்டாள். பார்த்த மாத்திரத்தில் மனதிற்கு நெருக்கமாக தோன்றி விடுகிறாள். அது தான் அதிசயம் என எண்ணிக்கொண்டாள்.

மதியம் இருவரும் அங்கேயே வாங்கி சாப்பிட்டனர், மாலையில் வண்டிக்கு கேட்கும்படி கோபாலிடம் கூற அவனோ வாசுவை அழைத்து கொண்டு வந்திருந்தான்.

“என்னங்க மறுபடியும் அவரையே கூட்டிட்டு வந்திருக்கீங்க”

“நான் கூப்பிடலைடி, அவனே தான் எப்போ டிஸ்சார்ஜ்னு கேட்டான் சொன்னேன், கிளம்பி வந்துட்டான்”

டாக்டரிடம் பேசிவிட்டு வெளியே வந்த தேவி இவன் வரவை எதிர்பாராமல் அப்படியே நின்று விட, “எனக்கு வேலை இருக்கு கோபால்”... என்றான் குறிப்பாக.

இருந்தா போக வேண்டியது தானே இங்கே எதுக்கு வரணும் என்ற கேள்வியை தொண்டைக்குள் விழுங்கி வைத்தவள் பேசாமல் அவனுடன் வண்டியில் அமர்ந்தாள்.

வீட்டிற்கு வந்த போதும் அவன் தான் சோமுவை தூக்கி வந்து படுக்க வைத்தான். படுக்கையில் விட்டவன் வெளியே செல்ல போக “தாங்க்ஸ்” என்றாள் தேவி அவசரமாக. ஒரு நொடி நின்று அவளை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்தவன் எதுவும் சொல்லாமல் வெளியேறினான்.

அப்போதுதான் நினைவு வந்தவளாக கோபால் கொடுத்த பணம் தான் வைத்திருந்தது என சேர்த்துஎடுத்து கொண்டு அவனிடம் கொடுக்க ஓடினாள். ஆனால் அவனோ அதற்கு முன் வண்டியை எடுத்துகொண்டு கிளம்பி இருந்தான்.

முதலில் அதை கொடுத்து விட வேண்டும் என உந்துதல் எழ கோபாலிடம் சென்றாள். “அண்ணா நீங்க இந்த பணத்தை அவர்கிட்ட கொடுத்திடறீங்களா”... என்று கேட்டாள்.

“நான் கொடுக்கறதை பத்தி ஒண்ணுமில்லைமா, ஆனா நீ கொடுத்துட்டு ஒரு சாரியும் சொன்னா நல்லா இருக்கும். இதுவரைக்கும் யார்கிட்டயும் அவன் அடங்கி போய் நான் பார்த்ததே இல்லை. நீ அடிச்சும் அமைதியா இருக்கறதே ஆச்சரியமா இருக்கு”... என்றான்.

அவன் கூறுவதும் சரி தானே, அவசரப்பட்டு அவனை அடித்திருக்க கூடாது, உனக்கு தான் அவர் தந்தை அவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உனக்கு தான் இருக்கிறது. மற்றவர்களும் அதே பதட்டத்தை அக்கறையை காட்ட வேண்டும் என்று நினைப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும் என மனசாட்சி எடுத்து கூறியது.

மருந்தின் வீரியத்தில் இன்னும் உறங்கிக்கொண்டிருந்த தந்தையை பார்த்தாள். இப்போது இவர் இப்படி நிம்மதியாக உறங்க காரணமே அவன் தானே. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் அவளுக்கு எந்தவித சங்கடமும் இருக்கவில்லை. நாளை சென்று மன்னிப்பு கேட்டு விட்டு பணத்தை கொடுத்து விட்டு வர வேண்டும் என நினைத்து கொண்டாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top