Member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
“ஏன்”
“அது மதியம் சாப்பாட்டுக்கு போனப்ப தான் கற்பகம் சொல்லுச்சி, ஹாஸ்பிடல் போய் செக்கப் பண்ணனுமாம்” என்றான் வெட்கத்துடன். முதலில் ஒன்றும் புரியாமல் விழித்த வாசு, பிறகு புரிந்ததும் “ஓஹ் சரி நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு” என்று கூறி அனுப்பி வைத்தான்.
தேவாவிடம் கூறிவிட்டு அவனே லோடு எடுத்து செல்ல வேண்டும் என அவளிடம் விவரத்தை கூறினான். அமைதியாக அவனையே இமைக்காமல் பார்த்தவள், “நாம எப்போ இது போல போய் செக்கப் பண்ண போறோம்” என கேட்டாள்.
“நாம ஏன் போகனும்”, வாய்விட்டு கேட்டவன் அவள் அழுத்தமான பார்வையில் நெற்றியை தேய்த்து கொண்டே அங்கேயே நின்று விட்டான்.
“இந்த கல்யாணம் அய்யோ பாவம்னு அனுதாபத்திலே நடக்கலை அதை என்னால நூறு சதவீதம் உறுதியா சொல்ல முடியும். நமக்குள்ள புரிதல் வரனும் அதுக்காக விலகி இருக்கேன்னு நீங்க சொன்னா அதை நான் கண்டிப்பா ஏத்துப்பேன். ஆனா அந்த புரிதல் வர எந்த முயர்ச்சியும் செய்யாம இருக்கறது தான் ஏன்னு எனக்கு புரியலை”.
“இப்படி எல்லாம் பேசறதால என்னை சுகத்துக்கு அலையிறேன்னு”, அவள் கூறி முடிக்கும் முன் தேவா என்ற அவன் அதட்டலில் லேசாக சிரித்தாள் அவள்.
“நீங்க தானே சொன்னீங்க எனக்கு உன்னோட மனசு மட்டும் போதும் அப்படி டையலாக் எல்லாம் விட மாட்டேன், உன்னோட மொத்தமும் எனக்கு வேணும். ஆனா செயல்ல அப்படி எதுவும் தெரியலையே” என்றாள் இதழ் வளைத்து.
“அப்படி உதட்டை வளைக்காதடி” அவன் தடுமாறி நிற்க “இது நீங்க இல்லை வாசு, எனக்கு தெரிஞ்ச வாசு எதையும் முகத்துக்கு நேரா பேசுவாரு, இப்படி யோசிச்சு யோசிச்சு பேசற நீங்க யாரோ போலத்தான் எனக்கு தெரியறீங்க, நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்று அவள் வேக நடையுடன் வெளியேறினாள்.
அவனை கடந்து வேகமாக செல்லும் போது லேசாக அவள் உடல் அவன் மீது லேசாக உரசி விட தீயில் குளித்த மெழுகாக உருகிக்கொண்டிருந்தான். அவனுக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன அவளை கண்ணோடு கண் நோக்கி பேசுகையில், அவள் இதழ்கள் அவன் பெயர் உச்சரிக்கையில், எதிர்பாராத தருணங்களில் நிகழும் தீண்டலில் என அவ்வப்போது அவனை நெருப்பில் குளிக்க வைத்து கொண்டு தான் இருக்கிறாள் பெண்.
பெண்வாடை அறியாதவன் அல்ல, ஆனால் அப்போது பசிக்கு உண்டவனுக்கு இப்போது ருசித்து உண்ண தயக்கம் ஏன் எழுகிறது. அவனுக்கே தெரியவில்லை.
அவள் வீடு சென்று சேர்ந்திருப்பாள் ஆனால் அவன் இன்னும் அவள் கேட்ட கேள்வியில் இருந்து மீண்டு வரவில்லை. இரவு லோடு முடித்து விட்டு அவன் வந்து சேர வெகுவாகவே தாமதம் ஆகி இருந்தது.
அறைக்குள் அமர்ந்து வாசலை பார்த்தபடி இருந்தவளை காணுகையில் நெஞ்சுக்குள் பனிமழை பொழிந்த உணர்வு. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் உள்ளே சென்றவனுக்கு உணவை எடுத்து வைத்தாள் அவள்.
இருவரும் உண்டனர், அவள் பாத்திரங்களை எடுத்து வைக்க அவனும் உதவி செய்ய வந்தான். அவள் கையை நீட்டி தடுத்து விட்டாள்.
மெத்தையை சரி செய்ய முயன்றான், அவன் கையில் இருந்து மெத்தை விரிப்பை பிடுங்கி கொண்டாள்.
“என்னம்மா” அவன் கனிவாக கேட்க முயல, அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்தவள் “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, என்னை என்னவோ தாங்கறதா உங்களுக்கு நினைப்பா. உங்களோட கனிவு எல்லாம் எனக்கு தேவையில்லை உங்களோட காதல் தான் வேணும் குடுக்க முடிஞ்சா குடுங்க இல்லைன்னா போங்க” என அவனை தள்ளி விட்டு சென்று படுத்து கொண்டாள்.
அவள் தள்ளியதில் அவன் உடல் என்னவோ திடமாகத்தான் நின்றது, ஆனால் அவன் மனம் தான் கடிக்காரத்தின் பெண்டுலம் போல ஆடிகொண்டிருந்தது. தனக்குள் சிரித்து கொண்டவன் கசங்கி இருந்த சட்டையை பார்த்து கொடுத்து வச்சிருக்க என முனகிகொண்டே அவளிடம் சென்றான்.
மெத்தையில் எப்போதும் ஓரமாக படுப்பவள் இன்று நடுமத்தியில் படுத்து இருந்தாள். அவள் காலின் ஓரம் அமர்ந்தவன், மெல்ல அவள் பாதங்களை இதமாக பிடித்தபடி தேவா என்று அழைத்தான்.
காலை வெடுக்கென இழுத்து கொண்டாள் அவள், கோபமாம். அவனுக்கு அது சுவாரசியமாகவே இருந்தது. மீண்டும் காலை தொட, சரக்கென எழுந்தவள், “ஏன் வாசு என் உடம்புல இந்த காலை தவிர வேற எதுவுமே இல்லையா, இல்லை உங்களுக்கு அது எதுவும் தெரியலையா. இந்த காலுக்கு மேலே”, ஏதோ கூற வந்தவள் தலையசைத்து அதை தவிர்த்து விட்டு “என்னை பார்த்தா என்ன அன்னை தெரசாவா, இல்லை அவ்வையார் மாதிரி இருக்கா. எப்போ பார்த்தாலும் காலை மட்டும் தொட்டுகிட்டு இருக்கீங்க” என சீறினாள்.
ம்ச் பின்னங்கழுத்தை தேய்த்து கொண்டவன் “இப்போ என்ன தாண்டி உன்னோட பிரெச்சனை” என கேட்டான்.
அவன் டி போட்டு பேச கண்களை சுருக்கி பார்த்தவள், “அப்போ உங்களுக்கு தெரியலை இல்லை, பாருங்க அப்படியே பச்சை புள்ளை ஒண்ணுமே தெரியாது. எல்லாமே நாங்க சொல்லி குடுத்தா அப்படியே புடிச்சுப்பாங்க. போங்க போய் தூங்குங்க” என கூறிவிட்டு போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு படுத்து விட்டாள்.
கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து இருந்தவன் எங்கே படுப்பது என்று புரியாமல் அவளையே பார்த்து இருக்க, அவளே நகர்ந்து படுத்து கொண்டாள்.
அவள் அருகில் படுத்தவன், அப்படியே விட்டத்தை வெறித்து கொண்டிருந்தான். அவன் எதற்காக பயப்படுகிறான். பயப்படுகிறானா ஆமாம், அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று தவித்து கொண்டிருக்கிறான். உணர்வுகளின் தேவைக்கு தீனி போட்டவனுக்கு, உயிரின் தேவைக்கு தீனி போட தயக்கம். அவன் செயலில் எத்தனை வீரியம் இருக்குமோ இதுவரையில் அவன் உணர்ந்ததே இல்லை. அது பற்றிய அக்கறை இருந்தது இல்லை. ஆனால் அதன் தாக்கம் அவன் கண்மணியை காயப்படுத்தி விட்டால். அவனால் அதை தாங்கி கொள்ள முடியுமா நிச்சயம் முடியாது. அதை செயல்படுத்தி பார்க்கவும் அவனுக்கு துணிவில்லை.
அவளிடம் இது பற்றி இன்னும் அவன் பேசியிருக்கவில்லை, பேசவும் அவனால் முடியவில்லை. எப்போதும் அவன் பேச்சில் நறுக்கு தெறிக்கும், சூடாக தேவையான அளவு மட்டுமே குடிக்கும் காப்பியை போல கொஞ்சமாக பேசினாலும் சுட சுடவே இருக்கும். அப்படி பட்டவனுக்கு இந்த பூந்தேவதையிடம் பேச முடியவில்லை. தயக்கம் தட்டி கழிக்கிறான் எதுவரையில் செல்வான், அவனுக்கே தெரியாது. ஆனால் அவளுக்கு தெரியும்....