Member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 41
- Thread Author
- #1
Chapter 24
விலகியே இருப்பதால்
நெருக்கத்தின் அளவு
குறைவதில்லை,
நெருங்கி நின்று விலகளை காட்டும்
உறவு நீ இல்லை...
ஒருவாரம் கடந்து இருந்தது, அவர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. கோபால் கற்பகம், வாசு தேவி நால்வரும் சென்று வேலையாட்களுக்கு துணி எடுத்து வந்தனர். அதை தேவி கையாலேயே கொடுக்க வைத்தான் வாசு. அவர்களுக்கு விருந்தும் கொடுத்து புது துணியும் கொடுத்ததை விட, தனியாகவே இருந்த தங்கள் முதலாளி குடும்பஸ்தன் ஆகியதில் அனைவருக்குமே சந்தோஷமும் மனநிறைவும். வாசு கோபக்காரன் முரடன் தானே தவிர அவர்களை பொறுத்தவரையில் நல்லாவன தான். கண்ணியம் குறையாதவன் தான். அவர்களுக்கு ஒன்று என்று வந்துவிட்டால் துணிந்து எதையும் செய்து கொடுப்பான். அப்படி பலருக்கும் பலதும் செய்து கொடுத்திருக்கிறான். இது வரையில் அவன் தந்தை சொன்ன வார்த்தையை அவன் காப்பாற்றி வந்திருக்கிறான். அதில் அவர்கள் அனைவருக்குமே அவனிடம் நிறைவு தான் காண முடிந்தது. அப்படி பட்டவன் ஒரு நல்ல பெண்ணை கட்டி நல்ல முறையில் வாழ்வதை பார்க்க அவர்களுமே ஆவலுடன் இருந்தார்கள் போலும். அது இப்போது கண்ணெதிரே நடைபெற்றதில் இன்னுமே மகிழ்ந்து போனார்கள்.
அதே போல வேலைக்கு வந்த நாளில் இருந்து அனைவரிடமும் நல்லபடியாக நடந்து கொண்ட தேவி மீது இன்னுமே மதிப்பும் மரியாதையும் கொண்டனர்.
இருவரும் ஒன்றாகவே வேலைக்கு சென்றனர், ஒன்றாகவே வீடு திரும்பினர். ஒருவரை ஒருவர் பிரியாத நிழல் போலவே மற்றவர்கள் கண்ணுக்கு தெரிந்தனர். ஆனால் இருவருக்கும் இடையில் நிழல் நிஜத்தை தொடாது என்பது போலத்தான் அவர்கள் வாழ்க்கை சென்றது.
ஒரே மெத்தையில் படுத்தாலுமே, இருவருக்கும் இடையில் ரயிலின் இரு தண்டவாளங்களுக்கு நடுவே இருக்கும் இடைவெளி இருந்தது. உறங்கும் வரையில் அவளை மடியில் வைத்து தாங்குபவன் அதன் பிறகு அவளை மெதுவே தனித்து பிரித்து படுக்க வைத்து விடுவான். முதலில் தேவா இதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை என்றாலும், நாளடைவில் அவன் விலகல் தன்மையை அவள் தெரிந்து கொண்டாள். திருமணம் என்றால் அதன் பிறகான தாம்பத்யம் புரியாத அளவிற்கு அவள் ஒன்றும் குழந்தை அல்லவே.
மொட்டு விட்ட காதலை முட்டி மோதி மலர செய்ய முடியாதே, தானாக தானே அது மலர வேண்டும் இது அதற்கான அவகாசம் போலும் என்று அவளும் அமைதியாக இருந்தாள்.
அலுவலகம் வீடு என்று பெரும்பாலும் இணைந்தே இருந்தார்கள், சில நேரம் அவன் லோடு எடுத்து செல்லும் போது அவன் வரும் வரையில் கூட உண்ணாமல் உறங்காமல் காத்திருப்பாள்.
நீ ஏம்மா சாப்பிடாம இருக்க கனிவாக கேட்பான், உன்னை சாப்பிட சொன்னேன் தேவா அதட்டலாக சொல்வான். இப்படி சாப்பிடமா இருக்காதேன்னு எத்தனை முறை சொல்றது கடுமையாக திட்டுவான். ஆனால் எல்லாவற்றிக்குமே ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுப்பவளிடம் அவன் கனிவு, அதட்டல், கோபம் எதுவுமே வேலை செய்யாது. அவன் தான் விரைவாக வீடு திரும்ப வேண்டி வரும்.
சில நாட்கள் கற்பகம் துணைக்கு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பாள், இவனை கண்டதும் அவள் எழுந்து சென்று விட இவன் கோபமாக குளிக்க செல்வான்.
“எதுக்காக இப்படி சாப்பிடாம உட்கார்ந்து இருக்க தேவா, உன் வயிறும் என் வயிறும் ஒண்ணா” அவன் கடிந்து கொள்ள எதுவுமே பேசாமல் அவனுக்கு உணவை எடுத்து வைப்பாள்.
“எனக்கு வேண்டாம்” அவன் முறுக்கி கொள்ள, அவளுக்கு எடுத்து வைத்திருக்கும் தட்டையும் எடுத்து வைத்து விட்டு படுக்க முனைவாள்.
“தேவா நீ சாப்பிடு”
“இனிமேல் நான் உங்களுக்காக காத்திருக்க மாட்டேன், அதே போல நீங்களும் என்னை சாப்பிட சொல்லாதீங்க” அவள் முகம் திருப்பி கொண்டு சொல்ல, பின்னந்தலையை கோதி கொண்டு அவனே சென்று இருவருக்கும் உணவை பரிமாறுவான்.
உதட்டுக்குள் புன்னகையை ஒளித்தபடி சாப்பிடுவாள். “நான் வெளியே போனா எப்படி இருக்கும் தெரியாதும்மா, அதான் சொல்றேன்” உணவை அலைந்தபடியே சொல்வான்.
“அப்பவும் உங்களுக்காக ஒருத்தி காத்திட்டு இருக்கான்னு நினைவு இருக்குமா இல்லை”.. இவள் தலை சரித்து அவன் முகம் பார்க்க, “உன் நினைப்பை தவிர வேற என்னம்மா இருக்கு என்கிட்ட” என்பான் காதலோடு.
சில நேரங்களில் அவன் காதல் கரை மீறிய புணலாக பொங்கி வழிவதும் சில நேரத்தில் கட்டுக்குள் வைத்த கனலாக அவளை எரிப்பதுமாக இருக்க, அவளுக்கு தான் ஒன்றும் புரிவதில்லை.
அவள் உணவை அவன் தட்டில் வைக்க போக போதும்மா என தட்டை தூக்கி கொண்டானே தவிர, அவள் கை பிடித்து தடுக்கவில்லை. ஆனால் வேலை நேரத்தில் அவள் தடுமாறுபோது தங்கு தடையின்று ஓடி வந்து தாங்கி பிடிப்பான். தன்மானம் பாராமல் அவள் கால் பாதங்களை தடவி கொடுப்பான்.
உடல் சிலிர்க்க, “ஒண்ணுமில்லை சாதாரணமா தான் ஸ்லிப் ஆகிடுச்சு” அவன் வியர்வை அரும்பிய தோளில் கையூன்றி கீழே குனிந்தபடி அவள் பேச நிமிர்ந்து அவள் முகத்தை பார்ப்பவன் என்ன நினைப்பானோ, உடனே தலையை உலுக்கி கொண்டு, “மருந்து ஏதாவது போடு தேவா” என கூறிவிட்டு விலகி சென்றிடுவான்.
ஏன் இந்த விலகல் தன்மை அவளுக்கு லேசாக அவனின் விலகல் புரிந்தது, எல்லாவற்றிலும் கண்ணின் இமை போல அவளை காப்பவன் அந்த இமைக்கும் கண்ணுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல விலகியே இருப்பது தான் ஏன் என்று புரியவில்லை.
நாட்கள் அதன் போக்கில் சென்றது, இது தான் பிரெச்சனை என்று இல்லாமல் அவர்கள் வாழ்க்கை தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமல் இருந்தது. முதலில் தனக்கு அவகாசம் கொடுத்து விலகி நிற்கிறான் என நினைத்தவள், பிறகு தான் அவனிடம் இருந்து அவளை விலக்கி வைத்திருக்கிறான் என புரிந்து கொண்டாள்.
பகலெல்லாம் கடுமையாக உழைத்து கலைத்து வருபவன், இரவு அவளை மடி தாங்க மறந்தது இல்லை. அவள் உறங்கியது விலகி கொள்பவன் உறங்காமலே விழித்து கிடந்து பல நாள் விடியலில் உறங்கி போவான்.
இரவில் சில நேரம் விழித்து பார்ப்பவள் அவன் அவள் முகம் பார்த்தபடியே விழித்து கிடப்பதை கண்டு புருவம் சுருக்குவாள். ஆனால் அடுத்த நொடியே அது பொய் என்பதை போல அவன் கண்கள் மூடி உறங்கி இருப்பான்.
உறக்கத்தில் புரண்டு உருளுபவள் அல்ல தேவி, அதனால் படுத்த இடத்திலேயே தான் படுத்திருப்பாள். அவனும் அதே போல படுத்த நிலையிலேயே படுத்து இருப்பான். எப்போதாவது கை பட நேர்ந்தால் அவன் உடலில் ஒரு அதிர்வலை உண்டாவதை அவள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறாள். அவன் விரல் படும்போது அவளுக்கும் உள்ளுக்குள்ளே ஒரு சிலிர்ப்பு ஓடத்தான் செய்யும், ஆனால் அவனிடம் தெரிவது போல நிலநடுக்க அதிர்வு அல்ல. ஏன் இப்படி?
அன்று மாலை கோபாலிடம் ட்ரிப் ஷீட் கொடுக்க, “வாசு நான் இன்னைக்கு லோடு போகலைப்பா” என்றான் தயங்கி.