• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 11, 2025
Messages
42
அவள் மீது அபிமானம் வர, அவளது குணமே பிரதான காரணமாக இருந்த போதும், அருகிலேயே அழகு சிற்பத்தை வைத்து கொண்டு அவனால் கண்களை கட்டிக்கொண்டு இருக்க முடியவில்லை. என் மனைவி என்ற உரிமை இருந்த போதும், ஏனோ அவளை அப்படி பார்ப்பதே பெரிய தவறு என்பது போல அவன் மனம் அவனை இடித்துரைத்து கொண்டே இருந்தது.

“சாப்பிட்டு நீயும் கிளம்பி தேவா கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம்” என்றான்.

“எங்கே”

“இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போனவங்க எல்லாம் வேலைக்கு வந்திருவாங்க, அவங்களுக்கு எல்லாம் நம்ம சார்பா டிரஸ் எடுத்து கொடுத்து, கல்யாணத்துக்கு விருந்து ஒன்னு குடுக்கனும். இதுவரைக்கும் துணி எல்லாம் நான் எடுத்ததே இல்லை. அதான் கோபாலும் அவன் மனைவியும் கூட வந்தா நாம போய் எடுத்துட்டு வந்திடலாம்” என்றான்.

“ஓஹ் சரி, ஆனா நாளைக்கு போகலாமா” என கேட்டாள் அவள்.

ஏன் எதற்கு என்று காரணம் கேட்காமல் “சரிம்மா” என்று விட்டான்.

அவன் பட்டென அப்படி சரி என்று விடவும் அவளுக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது. “அது அவசரம்னா வேனும்னா இன்னைக்கே”... அவள் தடுமாற, தலையை இடவலமாக அசைத்தவன், அவளை ஆழ்ந்து பார்த்து கொண்டே “உன்னை விட எனக்கு எதுவுமே முக்கியம் இல்லைம்மா, ஒண்ணும் பிரெச்சனை இல்லை நாளைக்கே போகலாம். ரெண்டு பார்ட்டி லோடு கேட்டிருந்தாங்க, நான் போய் ரெடி பண்ணி குடுத்துட்டு வந்திடறேன். நீ ரெஸ்ட் எடு” என்று விட்டு எழுந்து கொண்டான்.

“நானும் கூட வரவா”

“உனக்கு முடியுமா”

“தனியா இங்கே இருக்க ஒரு மாதிரி இருக்கும், அப்பா நியாபாகமாவே”

“சரி வா” இருவரும் கிளம்பி வெளியே வர ஆங்காங்கே நின்றிருந்த சிலர் இவர்களை பார்த்து சினேகமாக சிரித்தனர்.

வழமை போல தனது வண்டியை எடுத்தவன், அவள் புரியாது பார்த்து வைக்கவும், அதை ஸ்டண்ட் போட்டு நிறுத்தி விட்டு தெருவில் இறங்கி நடக்க துவங்கினான்.

“இல்லை பரவாயில்லை, நீங்க வேனும்னா வண்டியில வாங்க. நான் நடந்து வரேன்”

“இருக்கட்டும் தேவா எல்லாத்துக்கும் கொஞ்சம் டைம் எடுக்கும்ல” என்றான் அனுசரனையாக.

“உங்களுக்கு கஷ்டமா இருக்கா”

“இல்லம்மா” தோளை குலுக்கினான்.

இருவரும் பேசிக்கொண்டே அலுவலகத்தை அடைந்திருந்தனர். லோடு ஏற்ற காத்திருந்த சிலர், இவர்கள் வந்ததும் வேலையை துவங்கினர்.

“என்னம்மா வேலைக்கு வந்து நிக்கற” கோபால் அதிர்ந்து போய் கேட்க, “ஏன் என்ன அவ்வளவு பெரிய ஷாக்” என்று கேட்டான் வாசு.

“அதுக்கில்லை வாசு, நேத்து தான் கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள வேலைக்கும் வந்தா”


“அது அவர் என்ன சொல்வாரு தெரியலையே அக்கா” இவள் தயங்க உள்ளிருந்து வெளியே வந்த வாசு, “என்ன தெரியலை” என கேட்டான்.

“அண்ணா இன்னைக்கு நைட் நீங்க எங்க வீட்டுக்கு விருந்துக்கு வாங்கன்னு சொல்றேன், ஆனா நீங்க என்ன சொல்வீங்க தெரியலைன்னு தேவி சொல்றா. எங்க வீட்டுக்கு சாப்பிட வருவீங்க தானே” என்று கேட்டாள்.

ம்,..அது.. என நெற்றியை தேய்த்து கொண்டே யோசித்தவன், “நீங்க தப்பா நினைக்க கூடாது. நான் இன்னும் என் பொண்டாட்டி சமையலையே முழுசா சாப்பிட்டு முடிக்கலை. அதுவும் இல்லாம சாகரவரைக்கும் அவ கையால தான் சாப்பிடணும்னு நினைக்கிறேன் அதான்” என்றான் சமாதானமாக.

“ஹா, ஹா, நல்ல பொண்டாட்டி நல்ல புருஷன் தான். ஆனா பாருங்க எங்களுக்கு அந்த மாதிரி எந்த கட்டுபாடும் இல்லை. அதனால நாங்களும் இங்கேயே வந்து சாப்பிட்டுகிறோம்” என்றாள்.

“அதனால என்ன தாராளமா” என்று அவன் கூற, தேவியும் “அதுக்கென்னக்கா அண்ணாவை கூட்டிட்டு வந்திருங்க, சேர்த்தே சமைக்கிறேன்” என்று கூறினாள்.

சிறிது நேரம் பேசிவிட்டு கற்பகம் சென்று விட, சமையலறையில் நின்று இருந்தவளின் பின்னால் வந்து நின்றான் அவன்.

“நான் உனக்கு வேலை இழுத்து வச்சுட்டேன்ல”

“ஏன் அப்படி சொல்றீங்க”

“இல்லை எல்லாருக்கும் சமைக்கணும்னா”...

“அதனால என்ன இன்னும் ரெண்டு பேருக்கு சேர்த்து சமைக்கறது ஒண்ணும் கம்பு சுத்துற விஷயம் இல்லை”.

பிரெச்சனை இல்லையே” என்று கேட்டாள்.

இல்லை என அவன் தலை மட்டுமே ஆடியது ஆனால் நிறைய இருக்கிறது என்று அவன் கண்கள் சொல்லாமல் சொல்லியது.

அவள் வரும்போது அவன் நெஞ்சை தடவிகொண்டும் கழுத்தை தடவிகொண்டும் இருந்தான், அது நினைவில் வர சட்டென திரும்பியவள் வேகமாக வந்து அவன் நெஞ்சை தொட்டு, “வலிக்குதா என்ன செய்யுது” என பதட்டதுடன் கேட்டாள்.
ஆனால் அவனோ அவளை விட பதட்டமாக அவளிடம் இருந்து விலகி இருந்தான். “என்னங்க ஏதாவது செய்யுதா மீண்டும் அவள் கேட்க, “இல்லம்மா அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா தான் நின்னுட்டு இருந்தேன்”.

சரி என அவள் சென்று விட்டாள், ஊப் என உதட்டை குவித்து ஊதியவன் மீண்டும் நெஞ்சை தடவ எழுந்த கையை அடக்கி கொண்டு, வேண்டாம் என தலையை உலுக்கி கொண்டவன் அவள் பின்னே சென்றான்.

இருவரும் சாப்பிட்டு விட்டு அவர்களது பள்ளி கல்லூரி பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பேச்சு மேலோட்டமாக ஏதோ கடமைக்கான பேச்சு என்பதை போல அல்லாமல் அவளின் ஒவ்வொரு நிகழ்வையும் உள் வாங்கி கொண்டு கேட்டிருந்தான். இனி படிக்க வேண்டும் என்றாலும் படிக்க கூறினான். அவளோ பார்க்கலாம் என்று கூறி விட்டாள்.

இரவு மொத்தமாக கற்பகம், கோபால் இருவருக்கும் சேர்த்து சமைத்து வைத்து விட்டு நால்வரும் சேர்ந்து சாப்பிட்டனர். மறுநாள் கடைக்கு செல்ல வேண்டியதை பற்றி கூறினான் வாசு.

“நாங்க எதுக்குப்பா நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்களேன்” கோபால் இதமாக மறுக்க, இல்லைண்ணா வொர்கர்ஸ் எல்லாருக்கும் வாங்கனும் சும்மா வாங்க போய்ட்டு வரலாம்” என்றாள் தேவி.

“ஏன் உனக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா” வாசு அவனை இமை இடுங்க கேட்க, “ஆமா அப்படியே நான் கலெக்டர் வேலைக்கு போறேன் பாரு நீ குடுத்தா தான் எனக்கு வேலையே. எப்போ போகலாம் சொல்லு என்று கேட்டு கொண்டான்.

அதன் பிறகு அவரவர் கூட்டுக்குள் அடைந்து கொள்ள, மீண்டும் அவனுக்குள் எரிமலையின் தாக்கம். எப்படி அவளுடன் அந்த அறையில் இருப்பது என்று தகித்து போனான்.

முதல் நாள் அலுப்பில் உறங்கி போனார்கள், இரண்டாம் நாள்...

“தூங்கலாமாமா நாளைக்கு கடைக்கு போகனும், அவன் கூற சரி என்று படுத்து விட்டாள் தேவி. அவன் சொன்னதை கேட்டுக்கொண்டவள், அவன் ஏன் பதறி விலகி சென்றான் என்று அப்போது யோசிக்கவில்லை. ஆனால் பிறகு அவன் விலகலுக்கான காரணம் தெரிந்த போது அவள் அதிர்ந்து போனாளா அல்லது அவனை அதிர வைத்தாளா.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top