• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 11, 2025
Messages
33
ஆமாடி நாங்க காட்டுமிராண்டி தான், அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் ஆம்பளைக்கு கீழே தான் பொம்பளை அது எல்லாத்துலயும்” என இரட்டை வசனம் பேச, ச்சீ என முகத்தை சுழித்தாள் பெண்.

“ச்சீயா என்னடி ச்சீ என்னை பொருத்தவரைக்கும் பொம்பளை அதுக்கு மட்டும் தான். அதனால அவ அழகா இருந்தா மட்டும் போதும். அறிவு தேவை இல்லை. நீ அழகா இருக்கன்னு தான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன், ஆனா இவ்வளவு அறிவா பேசுவன்னு தெறிஞ்சிருந்தா உன்னை கல்யாணம் பண்ணிருக்கவே மாட்டேன். ஆனா நடந்தது நடந்திருச்சி உன் வாழ்க்கை உனக்கு முக்கியம்னா பேசாம இவளை இங்கேயே விட்டுட்டு உள்ளே போ, இல்லைன்னா, தாலியை புடிங்கிட்டு உன் அப்பனோட அனுப்பி வச்சிருவேன்”.. அவன் பேசி முடிக்கும் முன் அவன் கட்டிய தாலியை கழட்டி அவன் முகத்தில் வீசி அடித்திருந்தாள் தேவயானி.

அவன் முகத்தில் வந்து விழுந்த தாலி கீழே விழ அதை கண்டதும் கொதித்து போனவனாக, “எவ்வளவு திமிருடி உனக்கு” என அவளை நோக்கி பாய சென்றவனை ஓங்கி அறைந்திருந்தாள் தேவி.

“என்ன உனக்கு மட்டும் தான் அடிக்க தெரியுமா, என்ன சொன்ன பொம்பளை உனக்கு அவ்வளவு கேவலமா போய்ட்டாளா. உங்களை எல்லாம் பெத்து போட மட்டும் பொம்பளை தேவைப்படறாளா. இந்த மாதிரி எண்ணம் இருக்கற நீ கட்டின தாலி என்னோட கழுத்தில இருக்கணும்னு அவசியமே இல்லை. உன்னை பார்த்ததை எனக்கு இப்படி ஒரு கல்யாணம் நடந்ததை எல்லாம் இப்பவே என் நினைப்புல இருந்து அழிச்சிட்டேன். நான் இவளை காப்பாத்தியே தீருவேன் உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ என கீழே விழுந்திருந்த அந்த பெண்ணை தூக்க முயல, அவள் கைபற்றி இழுத்தவன் அவளை தரதரவென இழுத்து சென்றான்.

“என்னடி விட்டா பேசிட்டே போற, ரெண்டு நாளைக்கு முன்னாடியே நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிருந்தா இன்னைக்கு நீ இப்படி எல்லாம் பேசி இருப்பியா. முதல்ல உன்னை இன்னைக்கு அனுபவிக்கிறேன் அப்பறம் வந்து இந்த நாயோட கதையை முடிக்கிறேன்” என்று அவளை இழுத்து சென்று ஒரு அறைக்குள் தள்ளி கதவை அடைத்தான்.

நொடியில் நிகழ்ந்து விட்ட இந்த நிகழ்வில் தனி அறையில் மாட்டிக்கொண்டவள் திகைத்து தான் போனாள்.

அப்பாவின் நம்பிக்கை பொய்த்து போனது, ஆசை ஆசையாக அவள் தந்தை செய்து வைத்த திருமணம் இப்படி நிராசையாக போனதை நினைத்து உள்ளுக்குள் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆனால் இது அழுது வடியும் நேரமல்ல, எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டும், அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் அப்பாவை, அப்பா அப்பா அங்கே தனியாக இருக்கிறாரே. அவரை எப்படி மறந்து போனேன். அவரை இவர்கள் ஏதாவது செய்து விட்டாள். அந்த நொடியில் உள்ளம் பதறி போனாள், அப்பாவை எப்படி காப்பாற்றுவேன் என தவித்தாள். ஆனால் அதற்கான வழி அவளுக்கு தானாகவே அமைந்தது, வேலைக்காரி சகுந்தலா மூலமாக.

இரவோடு இரவாக, அவர்கள் தப்பிக்க வழி செய்து கொடுத்து பெரிய உபகாரம் தேடி கொண்டவள் அந்த அருணின் ஆசை நாயகியாக கை பாவையாக இருப்பவள் என்று அறிந்ததும் அதிர்ந்து போனாள் தேவயானி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top