Member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 33
- Thread Author
- #1
Chapter 20
துளியாக
சுருங்கிய வானம்
எனை விட்டு விலகாமல்
பின் தொடர்கிறதே!
அவளுக்கு துணைக்கு வந்த பாட்டி எப்போதோ உறங்கி இருக்க, இருந்த அசதியில் அவளும் உறங்கி போனாள். காலையில் விழித்தவள் அறையில் வெளிச்சம் கசிவதை பார்த்து நேரத்தை பார்த்தாள். விடிந்து இருந்தது. இரவு சென்றவன் இன்னுமா வரவில்லை. படங்களில் வருவது போல மர்மமாக இருக்க, எதையும் எடுத்ததும் முடிவு செய்வது தவறு என்று மனதை வேறு விஷயத்தில் திசை திருப்ப நினைத்தவள் தன் வேலைகளை முடித்து கொண்டு வெளியே வந்தாள்.
கூடத்தில் சிலர் வேலை பார்த்து கொண்டிருக்க, இவளை கண்டதும் ஒரு நொடி பேச்சை நிறுத்தியவர்கள் மீண்டும் வேலையை தொடர்ந்தனர். இவள் நேராக ஜெயாவை தேடி சென்றாள். அந்த வீடு அவளுக்கு புதியது தான் என்றாலும் எங்கே நின்றாலும் கேட்கும்படி சலசலத்து பேசிக்கொண்டிருந்த ஜெயாவின் அதட்டல் குரலில் யாரையும் கேட்காமலே அவள் இருந்த திசையை நோக்கி சென்று இருந்தாள் தேவி.
வா கண்ணு என மருமகளை வாய் நிறைய வரவேற்ற ஜெயா, "இந்தாடி சகுந்தலா, மருமகளுக்கு காபி ஊத்தி கொடு” என்றாள்.
அவள் கூறியதும் சடாரென அவள் கையில் காபி கோப்பை திணிக்கப்பட, அதை பார்த்து கொண்டே, “அத்தை நான் அப்பாவை பார்த்துட்டு வரேன்” என்றாள் இவள்.
ஒரு நொடி யோசிப்பது போல இருந்த ஜெயா, “ஏய் சகுந்தலா, மருமக கூட போ” என அவளை ஏவினாள்.
இல்லை பரவாயில்லை அத்தை அவங்க வேலையை பார்க்கட்டும் நான் போய்ட்டு வரேன்” இவள் மறுக்க “ஆ அதெப்படி தனியா போவ, இரு நான் வரேன்" என அவளே புடவையை உதறி சொருகிக்கொண்டு கிளம்பி இருந்தாள்.
தந்தையுடன் தனியாக பேச வேண்டும் என்று தான் அந்த சகுந்தலாவை மறுத்தாள், ஆனால் இப்போது ஜெயா கூட வருகிறேன் என்று கூறும்போது என்ன சொல்லி மறுக்க முடியும். அமைதியாக அவளுடன் நடந்தாள். அடுத்த தெருவின் துவக்கத்திலே இருந்தது அவளது தந்தைக்கு பார்த்து கொடுத்திருந்த வீடு. அவள் உள்ளே செல்ல கண் விழித்து படுத்தபடி இருந்தார் சோமு. எப்போது எழுந்தார் என்று தெரியவில்லை. அப்பா என அழைத்து கொண்டே உள்ளே சென்றவளுக்கு அவரை பார்த்ததும் கண்கள் கலங்கி போனது.
அவள் கைகளை பற்றிக்கொண்டவருக்கும் ஏதோ பல காலம் மகளை பிரிந்திருந்தது போன்ற உணர்வு. இருவரும் கண்கலங்கி நிற்க, இந்த டிராமாவை வேற இனி பார்க்கனுமா என்று ரீதியில் நின்று இருந்தாள் ஜெயா.
“அத்தை நீங்க இருங்க நான் அப்பாவை குளிக்க வச்சுட்டு வரேன்” என தேவி கூற, முகத்தை சுளித்த ஜெயா, “இங்க பாரும்மா இனிமே நீ இந்த வேலை எல்லாம் செய்ய வேண்டியது இல்லை. அதுக்கு எல்லாம் ஆள் போட்டிருக்கான் என் புள்ளை. நீ அப்பப்ப வந்த அப்பாவை சாப்பிட்டீங்களான்னு விசாரிச்சுக்கிட்டா போதும், என்ன சோமு நான் சொல்றது” என்று அவரையும் துணைக்கு இழுத்து கொண்டாள்.
மகள் புரியாமல் பார்ப்பதை உணர்ந்த சோமு, “ஆமாம்மா என்னை பார்த்துக்க இங்கேயே ஆள் இருக்கு. நீ கவலை படாம நிம்மதியா இரும்மா” என்றார் தடுமாற்றத்தை மறைத்து கொண்டு.
“அப்படியா அப்பா, உங்களுக்கு”...., அவள் ஏதோ கூற வர, “அதான் ஆள் இருக்குன்னு சொல்றேனே அப்பறம் என்ன நாம வீட்டுக்கு போவோமா” என அவளை அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்தாள் ஜெயா.
“அத்தை நான் இன்னும் கொஞ்சம் நேரம் அப்பவோட இருந்துட்டு வரேன்”... கொஞ்சம் இறங்கியே பேசினாள்.
“அதெப்படி முடியும், அங்கே கல்யாணத்துக்கு வராதவங்க எல்லாம் உன்னை பார்க்க வருவாங்க, நீ எங்கேன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும். அப்பறம் அப்பாகிட்ட பேசிக்கலாம் கிளம்பு”. இப்போது கொஞ்சம் அவள் பேச்சில் கடுமை கூடியது போல தோன்றியது தேவிக்கு.
அவள் அப்பாவை பார்க்க, அவர் கண் மூடி திறந்து போம்மா என்றார். மனமே இல்லாமல் ஜெயந்தியுடன் கிளம்பி சென்றாள். ஜெயந்தி சொன்னது போல அங்கே வேலைக்கு ஆள் வைக்கப்பட்டு இருந்தது தான். ஆனால் அந்த ஆள் ஒன்றும் அவரை நன்றாக கவனித்து கொள்ள வைக்கப்படவில்லை. தேவி இங்கே அடிக்கடி வருவதை தடுக்கவே வைக்கப்பது போல தோன்றியது சோமுவிற்கு. இருந்தாலும் கட்டிக்கொடுத்த பெண்ணை அருகே இருந்து பார்க்கும் நிலையே போதும் என்ற எண்ணத்தில் சோமு அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
அடுத்த இரண்டு நாட்களும் கணவனாகப்பட்டவன் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. எங்கே சென்றிருக்கிறான் என்று ஜெயந்தியிடம் மேலோட்டமாக கேட்டு வைக்க, “ஆம்பிளை வேலையா வெளியே போனா முன்ன பின்ன இருக்கும். அதை முடிச்சுட்டு வருவான், நீ இதையெல்லாம் போய் உங்கப்பன்கிட்ட சொல்லிட்டு இருக்காத, மேலுக்கு முடியாதவன் வருந்த போறான்” என்று வேறு கூறி வைத்தாள்.
அந்த இரண்டு நாட்களுமே அதே கிழவி அவள் அறையில் துணைக்கு படுத்துக்கொள்ள, அப்பாவுடன் இருந்துகொள்கிறேன் என்று கூட கூற முடியாமல், முதல் நாள் அன்றே கணவன் வெளியே சென்றதை தந்தையிடம் மறைக்க நினைத்து இவளும் அமைதியாக படுத்து விட்டாள்.
மூன்றாம் நாள் காலையில் அவள் கேட்டது என்னவோ ஒரு பெண்ணின் அலறல் குரல் தான். அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவள் சத்தம் வந்த திசை நோக்கி ஓட, வழியிலேயே அவளை தடுத்து நிறுத்தினாள் ஜெயா.
“என்ன தேவி”, ஒன்றுமே நடவாதது போல அவள் கேட்டு வைக்க, “அத்தை அங்கே ஏதோ சத்தம் கேட்குது” என்றாள் சத்தம் வந்த திசையை காட்டி.
“ஆ அதுவா, அது ஒண்ணுமில்லைம்மா, அந்த வீட்டுல ஒரு பொண்ணுக்கு வயித்து வலி எப்போ பாரு இப்படித்தான் கத்திட்டு இருக்கும். கொஞ்சம் நேரத்திலே அதுவே சரியா போய்டும்” என்றாள் அவள் சாதாரணமாக.
என்னதான் வயிற்று வலியாக இருந்தாலும் ஒரு பெண் இப்படியா கத்துவாள். உயிர் பிரியும் வலியுடன் கேட்ட அந்த பெண்ணின் குரலே மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்க, குழப்ப ரேகைகளுடன் வலம் வந்தாள். என்னவாயிற்று என்று கேட்டால் சரியான பதில் கூற கூட அந்த வீட்டில் ஆள் இல்லாத போது யாரிடம் கேட்பாள். எத்தனையோ ஆட்கள் இருந்தும் ஒருவரும் அவளுடன் பேசுவதில்லை. துணைக்கு படுத்து கொள்ள வரும் பாட்டி கூட ஏதோ தூங்குவதற்கு மட்டுமே இங்கே வருவது போல வந்ததும் படுத்து விடும்.
நேரம் ஆக ஆக சத்தம் அதிகரித்ததே தவிர குறைந்தது போல இல்லை, எங்கோ ஒருவர் வலியில் துடித்து கொண்டிருக்க எனக்கென்ன என்று அவளால் இருக்க முடியவில்லை. அந்த சத்தம் உயிர் வதையில் வேதனை படுவதை போல இருந்தது. இனியும் பொருத்திருக்க முடியாதவளாக சத்தம் வந்த திசை நோக்கி சென்றாள்.
வீட்டின் பின் பக்கம் அடுத்த தெருவில் முடியும் அங்கே மாட்டு தொழுவத்தின் பக்கம் செல்ல செல்ல சத்தம் அவளை நெருங்கி கொண்டிருந்தது, இங்கே பக்கத்திலே ஏதோ வீட்டுல இருந்து தான் சத்தம் வருது போல என காதை தீட்டி வைத்து கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தவள் ஒரு இடத்தில் அப்படியே நின்று விட்டாள். நின்று விட்டாள் என்பதை விட திகைத்து போனாள் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். ஒரு நொடி மூச்சு விடவும் மறந்தவள் அடுத்த நொடி வீட்டை நோக்கி திரும்ப ஓடினாள். வேகமாக ஓடியவள் மெத்தையில் இருந்த போர்வையை உருவிகொண்டு மீண்டும் அதே திசையில் ஓட, ஆங்காங்கே வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் என்ன நடக்க போகிறதோ என்ற ரீதியில் அவளை தொடர்ந்தனர். என்ன நடந்தது என்ன ஆச்சு என அவர்கள் பேசிக்கொள்ள, என்னவென வெளியே வந்து பார்த்த ஜெயா, தேவி பின்பக்கம் ஓடுவதை கண்டு அய்யோ என தலையிலடித்து கொண்டு அவளை பின் தொடர்ந்து சென்றாள்.
வேகமாக ஓடிய தேவி, நிறுத்துங்க என அங்கே நின்று இருந்தவர்களை பார்த்து இறைந்தாள். அவளை அங்கே எதிர் பாராத சிலர் திரும்பி பார்க்க, வேகமாக ஓடி சென்று அங்கே நிர்வாணமாக மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பெண்ணின் மீது தான் கொண்டு வந்த போர்வையை போர்த்தி விட்டாள்.
சிவப்பேறி கண்களுடன் அவர்களை பார்த்தவள் “ச்சீ நீங்க எல்லாம் மனுஷங்க தானே, இப்படியா ஒரு பொண்ணை நடத்துவீங்க, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா” என சீறியவள் அவள் கைகட்டை அவிழ்த்து விட, ஏய் என அவளை பற்றி இழுத்தான் அருண்.
“உனக்கு இங்கே என்ன வேலை, போடி உள்ளே” என அவளை பிடித்து உள்ளே தள்ளினான்.
“நீங்க.. நீங்க இவ்வளவு மோசமானவரா. ஒரு பொண்ணை அதுவும் நிர்வாணமாக்கி அடிச்சு கொடுமை செய்யற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது” என கண்களை விரித்து கேள்வி கேட்டாள்.
“ஓஹ் நீ பெண் உரிமை பத்தி பேசறியா, இங்கே பாரு இந்த ஊர்ல யார் வேணும்னா இந்த ****** அடிக்கலாம் அதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு. ஏன்னா அவ செஞ்ச காரியம் அப்படி” என்றான் நக்கலாக.
“அவ என்ன வேணும்னா செஞ்சிருக்கட்டும் அதுக்காக இப்படியா, கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம. உங்களை எல்லாம் போலீஸ்ல சொல்லி உள்ளே தள்ளனும்” அவள் சொல்லி முடிக்க அங்கிருந்த அனைவருமே அவளை பார்த்து எள்ளி நகைத்தனர்.
அதற்குள் அவளை பின் தொடர்ந்து வந்திருந்த ஜெயா, “இந்தா தேவி இங்கே என்ன உனக்கு வேலை வா என்கூட” என அவள் கையை பற்றி இழுத்தாள்.
அவள் ஏதோ சாதாரணமாக கூறி அவளை இழுக்க, அவள் கையை உதறியவள் “இங்கே நடக்கற எதுவுமே உங்க கண்ணுக்கு தெரியலையா நீங்க ஒரு பொண்ணு தானே, உங்க கண்ணு முன்னாடியே இன்னொரு பொண்ணை இப்படி நாசம் செய்யறாங்க நீங்க ஏதோ சாதாரணமா பேசறீங்க” என கத்தினாள்.
“அதுக்கு, அவ செஞ்ச வேலை அப்படி. எங்க சாதி சனத்துல இது தான் தண்டனை நீ புதுசு, வெளியூர்ல வளர்ந்தவ அதனால உனக்கு எதுவும் தெரியலை வா” என அவளை பிடித்து இழுத்து சென்றாள்.
“முடியாது இந்த கொடுமையை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது. எங்கப்பா என்னை அப்படி வளர்க்கலை. அநியாயம் நடக்கறதை பார்த்துட்டு நமக்கென்னன்னு போக என்னால முடியாது. இப்போ இந்த பொண்ணை நான் கூட்டிட்டு போறேன். போலீஸ்ல சொல்லி உங்க எல்லாரையும் ஜெயில்ல போடறேன்” என மயங்கி சரிய துவங்கி இருந்த பெண்ணவளை தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டாள்.
அவள் அருகில் வந்த அருண், “விடு அவளை” என்றான் ஆக்ரோஷமாக.
முடியாது இவள் அவன் முகம் பார்த்து நேரடியாக கூற அடுத்த நொடி அவள் கன்னத்தில் அறைந்திருந்தான் அவன். அதில் நிலை தடுமாறியவள் கையில் இருந்த பெண்ணோடு கீழே சரிந்து விழுந்தாள். அவள் கையை பற்றி தூக்கி நிறுத்தியவன், "நான் உன் புருஷன் என்னையே எதிர்த்து பேசறியா" என்றான் முகத்திற்கு நேராக.
“புருஷனா முதல்ல மனுஷனா நடக்க முயற்ச்சி பண்ணுங்க, அப்புறம் புருஷன் ஆகலாம், இரக்கம் இல்லாத மிருகம் மாதிரி இந்த பெண்ணை அடிச்சு வச்சிருக்கீங்க”
“ஏய் இவ கட்டின புருஷனை ஏமாத்திட்டு இன்னொருத்தன் கூட ஓடி போய்ட்டா. அவளை தேடி பிடிச்சு இங்கே கூட்டிட்டு வந்திருக்கோம். எதுக்குன்னு நினைச்சே அவ புருஷனோட திரும்ப வாழ வைக்கவா, இல்லை”.. இடவலமாக தலையாட்டியவன் “இப்படி ஒழுக்கம் கெட்டு திமிரெடுத்து திரிஞ்சா இங்கே இது தான் தண்டனை. உடம்புல துணி இல்லாம மூணு நாளைக்கு கட்டி வச்சு அடிப்போம். அதுக்கப்புறம் கூட உயிரோட இருந்தா எங்கயாவது பிச்சை எடுத்து சாப்பிட வேண்டியது தான். செத்தா தூக்கி போட்டு எரிச்சுடுவோம். இது தான் இங்கே சட்டம். அப்போ தான் இங்கே இருக்கறவளுங்க பத்தினியா இருப்பாளுங்க. இல்லைன்னா எல்லாம் தறிகெட்டு திரியும்” என ஏளனமாக கூறியவன். உனக்கு இவ்வளவு விளக்கம் போதும்னு நினைக்கிறேன், பேசாம உள்ளே போ” என்றான்.
அவன் பேச்சை கேட்டதும் இன்னுமே கொதித்து போனாள். “பத்தினியா இங்கே இருக்கற அம்பளைங்க எல்லாருமே பத்தினி தானா. ஒருத்தன் சொல்லு பார்க்கலாம். அடுத்தவங்களை குறை சொல்றதுக்கு நாம யாரு. அவ வாழ்க்கையை முடிவு பண்ண அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு, அத்தோட இதை சட்டத்தின் மூலமா தான் எதிர்கொள்ளனும் அதை விட்டுட்டு இது என்ன பார்பேரியன் மாதிரி”