• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 11, 2025
Messages
33
சோமுவின் சொந்த ஊர் தான் அவர்கள் ஊர் என்பதால் அங்கேயே குடி போக எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். அவர்கள் வீட்டு அருகிலேயே ஒரு சிறிய வீட்டை சோமுவிற்கு என்று பார்த்திருந்தனர்.

அதை கேட்டு “அப்பா என்னோடவே இருக்கணும்னு சொன்னேனே அத்தை” என்றாள் ஜெயாவிடம்.

“ஆமாம்மா, ஆனா பாரு நீங்க சின்னஞ்சிறுசுகள் அப்பாவும் இங்கேயே இருந்தா உங்களுக்கு சங்கடமா இருக்கும்ல அதான் பக்கத்துல வீடு பார்த்தேன். அதனால என்ன என் தம்பியை நான் கூட மாட பார்த்துக்க மாட்டேனா” என்று கேட்டாள் ஜெயா.

அப்பா எங்களோட இருந்தா சங்கடமாக இருக்கும்னா அப்போ இவர் எங்கே இருப்பார் என தொண்டை வரை வந்த கேள்வியை கேட்காமல் அப்படியே நிறுத்தி கொண்டாள். முதல் நாளே எந்த வித கசப்புகளையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில். சோமுவீடம் இதை சொன்ன போது அவரும் இதையே தான் கூறினார்.

“அம்மாடி அப்பா பக்கத்தில தானே இருக்க போறேன் நினைச்சதும் ஓடி வந்திட போற, எனக்கென்னம்மா என் பொண்ணு பக்கத்துல இருக்கற தைரியத்தில நிம்மதியா இருப்பேன்” என்று அவளுக்கு ஆறுதல் கூறினார்.

திருமண வீடு ஒரே கலகலப்பாக இருந்தது, ஆங்காங்கே உறவினர் கூட்டம், அவர்களுக்கான உணவு ஏற்பாடு ஒரு பக்கம், ஆண்கள் அவர்கள் களியாட்டத்தில் ஒரு பக்கம் குழுமி இருக்க, அதில் இருந்த அவன் பார்வையோ இவளை கபளீகரம் செய்து கொண்டே இருந்தது.

இது என்ன பார்வை துகிலுரிக்கும் கயவன் போல என எண்ணிய எண்ணத்தை மனதை தட்டி அப்படி எல்லாம் நினைக்க கூடாது. ஒருவரை பார்வையில் எடைபோடுவது எல்லாம் தவறான செயல். அவருடன் பழகாமல் அவர்களை பற்றிய ஒரு கணிப்புக்கு வர கூடாது என்று தந்தை சொல்லி இருந்த கருத்தை மனதில் கொண்டு வந்து நிலைபடுத்தி கொண்டாள்.

மதியம் விருந்து முடிந்து, மாலை ஆனது ஆட்கள் குறைய துவங்க இவளுக்கு அலங்காரம் செய்ய துவங்கினர். இதெல்லாம் ஏதோ அவசரமாக நடப்பது போல தோன்ற, கொஞ்சம் காலம் பொறுத்து வைத்து கொள்ளலாம் என்று அவனிடம் பேச நினைத்து கொண்டாள்.

ஆனால் அறைக்குள் வந்தவன் அவளை சட்டென இழுத்து புடவையை உறுவவும் அதிர்ந்து போனவள், அவன் கரங்களை தடுக்கும் வேலையில் வெளியே இருந்து கதவை தட்டும் சத்தம்.

யாருடா அது **** என அசிங்கமான வார்த்தை சொல்லி திட்டியவன் வெளியே இருந்து வந்த குரலில் அவள் புடவையை அவள் முகத்திலேயே தூக்கி போட்டு விட்டு சென்று கதவை திறந்தான். வெளியே இருந்தவன் என்ன செய்தி சொன்னானோ கதவை அறைந்து சாற்றிக்கொண்டு அப்படியே வெளியேறிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த ஜெயந்தி, “அம்மாடி தேவி உன் புருஷன் ஒரு முக்கிய வேலையா வெளியே போய்ருக்கான், வர நேரமாகும் நினைக்கிறேன். அதனால இந்த கிழவியை உன்னோட துணைக்கு படுக்க வச்சிக்கோ” என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

அவன் செயலில் அதிர்ந்து போய் இருந்தவள் எந்தவித எதிர்வினையும் ஆற்றாது அப்படியே அமர்ந்து விட்டாள்.

திருமணம் என்றால் இதெல்லாம் நடக்கும் என்று தெரியும் தான், ஆனால் இப்படி என்று அவள் நினைத்திருக்கவில்லை. கொஞ்சம் கூட பொறுமை இல்லாமல் ஏதோ ஓநாயின் பாய்ச்சலோடு அவன் அவளை பற்றி இழுத்ததில் இப்போதும் தேகம் நடுங்கி கொண்டிருக்க, ஒருவித ஒவ்வாத தன்மை உருவாகி இருந்தது.

இது ஒன்றும் காதல் திருமணம் அல்ல தான் அதற்காக இப்படியா ஏதோ வேட்டை நாய் போல மேலே பாய முயல்வது. கொஞ்சம் பொறுமையாக பேசி குறைந்த பட்சம் அவள் பெயரையாவது கேட்டு அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்து பிறகு இதெல்லாம் செய்ய துவங்கி இருக்கலாம். நல்ல வேலையாக அவனுக்கு ஏதோ வேலை வந்து அது அவளுக்கு தன்னை சமன் செய்து கொள்ள கொஞ்சம் நேரத்தை கொடுத்தது. இல்லை என்றால் நிச்சயம் அங்கே ஒரு மனதிற்கு பொருந்தாத செயல் தான் நடந்து இருக்கும். அதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

இப்போது தன்னை தேற்றிக்கொள்ள நேரம் கிடைத்ததை எண்ணி அமைதியாக இருக்க முற்பட்டாள். தந்தையின் நினைவு வந்தது வெளியே சென்று அவரை பார்க்கலாமா என்று நினைக்க, இந்நேரத்தில் வெளியே செல்வது அத்தனை நல்ல விஷயமாக இருக்காது என்று எண்ணிக்கொண்டவள் அப்படியே படுத்து விட்டாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top