• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 11, 2025
Messages
33
ஆனால் அதற்கு முன்பே திருமண வீட்டில் தேவியை படம் பிடித்து மகனிடம் காட்டி இருக்க, அவள் அழகில் கவர்ந்திழுக்கப்பட்ட அருண், அவள் தனக்கு தான் என்று முடிவே செய்து விட்டான்.

“அவங்க இப்போ வேண்டாம்னு சொல்றாங்க தம்பி” மகனிடம் வந்து நின்றார் ஜெயலக்ஷ்மி.

“ஏனாம்?”

“அந்த குட்டி படிக்கணுமாம்” நீட்டி முழக்கினாள் தாய்.

“ம்ம் என்ன செஞ்சா பொண்ணு தருவாங்க” அவன் குறுக்கு மூலை கேள்வி கேட்டது. அவன் பஞ்சாயத்து தலைவர் ஆனது எல்லாம் அவன் சாதி வெறியை தீர்த்து கொள்ளவும், அவனுக்கு கூழை கும்பிடு போட ஒரு கூட்டம் வேண்டும் என்று தானே தவிர, மற்றவர்களுக்கு நல்லது செய்யும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை.

அவன் கேட்டதை புரிந்து கொள்ள முடியாத தாய், “அட என்னய்யா வேற பொண்ணா இல்லை உனக்கு” என கேட்டு முடிக்கும் முன் ஏய் என கர்ஜித்தான் மகன். அதில் ஆடி போனாள் தாய்.

“எனக்கு அவ தான் வேணும், சும்மா இருந்தவனை அவ போட்டோ காட்டி நீ தானே ஏத்தி விட்ட, இப்போ வேற ஒருத்தியை பார்க்கறேன்னு சொல்ற, இப்போ எல்லாம் அவளை நினைச்சுகிட்டு தான் தினம் ஒருத்தியோட படுக்கறேன். எப்போ அவளோட படுப்பேன்னு காத்திட்டு இருக்கேன். நீ அவளை மறக்க சொல்றியா, கொன்னுடுவேன் உன்னை” என்று தாயின் கழுத்தை நெறிக்க பார்த்தான்.

அவன் கையை உதறி அவனிடம் இருந்து தனது உயிரை காப்பாற்றிக்கொண்டவள், அடேய் இதெல்லாம் ஒரு காரணமாடா, என வாய் வரை வந்ததை கேட்டு வைக்க முடியாமல், “சரிப்பா ஏதாவது செய்யறேன்” என்று வாக்கு கொடுத்தாள் தாய்.

“செய்யற இல்லை, உனக்கு காரியம் செய்ய வேண்டி இருக்கும்” என விரலை நீட்டி மிரட்டிவிட்டு சென்றான் மகன்.

அவன் சென்றதும் இது தான் தனக்கு தானே ஆப்பு வச்சுக்கறது என நினைத்து நொந்து போனாள் ஜெயலக்ஷ்மி. ஒன்று அவள் ஏதாவது செய்ய வேண்டும் இல்லை அவன் ஏதாவது ஏடாகூடமாக செய்து வைப்பான்.

ஒரு மாதம் கடந்திருந்தது, மகள் திருமணம் வேண்டாம் என்று கூறிய பிறகு அவளை சோமு தொந்தரவு செய்ய வில்லை. அவள் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாள் அவளுக்கு அலைபேசி வந்தது சோமுவிற்க்கு உடல் நலம் சரியில்லை என்று அடித்து பிடித்து மருத்துவமனை ஓடினாள்.

அங்கே படுத்திருந்தார் சோமு, அவர் விழித்திருக்கவுமே நிம்மதி பெருமூச்சு விட்டவள், “என்னப்பா ஆச்சு” என கேட்டாள் பதட்டத்தை மறைத்து கொண்டு.

“ஒன்னுமில்லைடா வேலை செஞ்சுட்டே இருக்கும்போது திடீர்னு முதுகுல ஒரே வலி நிக்க முடியாம கீழே விழுந்துட்டேன், அதுக்கப்பறம் என்னவோ ஒரு மாதிரி கால் எல்லாம் மரத்து போனது போல இருக்குடா” என்றார் சோர்வாக.

அவர் சொன்னதை கேட்டதும் திகில் அடைந்தவள் வேகமாக மருத்துவரை தேடி ஓடினாள். இவளை கண்டதும், முகம் சுருக்கிய மருத்துவர் “வேற யாரும் கூட வரலையாம்மா” என்று கரிசனமாக கேட்டார்.

“இல்லை டாக்டர் நானும் அப்பாவும் மட்டும் தான் இருக்கோம் என்கிட்டயே சொல்லுங்க” என்றாள் அவள் திடமாக.

“நீ ரொம்ப சின்ன பொண்ணா இருக்கம்மா ஆனா வேற வழி இல்லை, அவருக்கு இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயல் இழந்து போச்சு, இனி அவர் மீதி காலம் படுக்கைல தான்” என்றார்.

“என்ன டாக்டர் சொல்றீங்க, திடீர்னு எப்படி இப்படி ஆகும். காலையில நல்லா வேலைக்கு போனார் அதுக்குள்ள இப்படின்னா எனக்கு ஒண்ணுமே புரியலை” என படபடத்தாள்.

“நீ கேட்கறது சரி தான்மா ஏன்னா திடீர்னு இப்படி ஆகாது, ஏற்கனவே அவருக்கு அடிபட்டிருக்கணும் அதை நீங்க கவனிக்காம விட்டிருக்கீங்க, அதனால தான் அந்த இடுப்பு எலும்பு தேய்மானம் ஆகி இப்படி பெரிய பிரெச்சனையில கொண்டு வந்து விட்டிருக்கு. நான் சொன்னது சரியா ஏற்கனவே ஏதாவது அடி பட்டுச்சா?”.

ஒரு கணம் தடுமாறி போனவள், “ஆ.. ஆமா டாக்டர்” என்றாள் உள்ளே சென்று விட்ட குரலில்.

“அதான்மா, வயசாகுது பாரு, இதெல்லாம் நடக்கும். பொம்பளை பிள்ளையா வேற இருக்க ஆனா வேற வழியும் இல்லை இனி நீ தான் அவரை பார்த்துக்கனும்” என்றார் சங்கடத்தோடு.

கண்களை மூடி திறந்து திடமாக அவரை பார்த்தவள் “எங்கப்பாவை நான் பார்த்துக்கறேன் டாக்டர்” என கூறிவிட்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்தவளுக்கு நெஞ்சை அடைத்து கொண்டு வந்தது, சின்ன வயதில் இருந்து தன்னை கீழே இறக்கி விடாமல் கைகளில் பொத்தி வைத்து வளர்த்த தந்தை, அவருக்கா இன்று இந்த நிலைமை. பத்து வருடங்களுக்கு முன்பு கூட அவருக்கு பெண் தர சிலர் முன் வந்தனரே அத்தனை கம்பீரமாக இருப்பாரே, கடவுளே அவரை ஏன் இப்படி சோதிச்ச நினைக்க நினைக்க மனம் வெடித்து விடுவது போல அழுகை முட்டி கொண்டு வர தொண்டை குழி வலித்தது. வேகமாக ஆள் அரவமற்ற ஒரு மரத்தடியை தேடி சென்றவள் வாய் விட்டு கதறி அழுதாள் தனது தந்தையின் நிலையை எண்ணி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top