New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
யாருக்காக வாழ வேண்டும் என்றால் ஏன் நான் இல்லையா, அவளையே உயிராக நினைத்திருக்கும் என் நினைவு அவளுக்கு இல்லவே இல்லையா. அவள் தந்தை கூட என்னை நினைவில் வைத்து அவளை பார்த்து கொள்ள சொல்லி விட்டு போனார், இவளானால் யார் இருக்கிறார்கள் தனக்கு என்று கூறிவிட்டாளே. அவருக்கு தன் மீது இருந்த நம்பிக்கை கூட இவளுக்கு இல்லையா.
இவளை பார்த்த நொடியில் இருந்து இவள் மட்டும் ஜீவன் என்று வாழும் என்னை இதயத்தின் ஒரு ஓரத்தில் கூட அவள் இருத்தி வைக்கவில்லையா என்ற கேள்வியில் அவன் மனம் வெம்பி போனது. கற்பகத்தை திரும்பி பார்த்தவன் அவளை பிடித்து கொள்ளுமாறு கண்ணசைக்க, தன் கண்களை துடைத்து கொண்டு வந்து தேவியை தாங்கி கொண்டாள் அவள்.
அவசரமாக வெளியேறியவன், வாசலில் வந்து நின்று கழுத்தை பின்னோக்கி சாய்த்து வானத்தை பார்த்து நின்றான். ஏன் அவளுக்கு தன் நினைவு இல்லாமல் போனது, எந்த விதத்திலும் அவளுக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்ற நம்பிக்கையே இல்லையே அவளுக்கு. மனதில் கேள்விகள் புழுக்கமாக சூழ ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டான்
“வாசு”, பின்னிருந்து கோபால் அழைக்க திரும்பி பார்த்தான்.
“மத்த ஏற்பாடெல்லாம் பண்ணனும்” என்றான். தலையசைத்தவன் அவனுடன் நடந்தான்.
அதன் பிறகு வேலைகள் துரிதமாக நடந்தது, மருத்துவமணை கட்டணத்தை கட்டிவிட்டு சோமுவை வீட்டிற்கு எடுத்து வர வண்டி ஏற்பாடு செய்தான். வீடு வாசலில் பந்தல் போடப்பட்டு இறுதி கரியங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது எதையும் உணரும் நிலையில் இல்லை தேவி. இயந்திர பொம்மை போல கற்பகத்தின் கை பற்றலில் இயங்கி கொண்டிருந்தாள்.
வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர், தந்தையை கிடத்தி இருந்த இடத்தை விட்டு அகலாமல் அவரையே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள். வாசு வீட்டு வாசலில் பந்தல் போட்டு வைக்க, அக்கம் பக்கம் தெரிந்தவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.
அவளுக்கு உறவென்று அழைக்க யாரும் இருக்கிறார்களா என கற்பகம் கேட்க இல்லை என்று தலையசைத்தாள். இறுதி காரியங்களை வாசுவே முன்னின்று செய்ய அங்குள்ளவர்கள் அந்த காட்சியை பார்த்து விட்டு தங்களுக்குள் கிசுகிசுத்து பேசிக்கொண்டனர். இதை கண்ட கோபால் விரைவில் வாசுவிற்கும் தேவயானிக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறி அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்.
இருப்பினும் கிசுகிசு பேச்சுக்கு அஞ்சாத மக்கள் எதையாவது பேசிக்கொண்டு தானே இருப்பார்கள். அதனால் யாரும் அதை பற்றி கவலை கொள்ளவில்லை. மருத்துவமணைக்கு பிறகு வாசு தேவி அருகில் செல்லவில்லை, அதற்கு செல்ல நேரமில்லை என்பது காரணமாக கற்பகமும் கோபாலும் நினைத்து கொண்டிருந்தாலும், அவன் நினைத்தால் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது அவன் மட்டுமே அறிந்தது.
ஆயிற்று எல்லாம் முடிந்தது, சோமுவின் இறுதி சடங்கு செய்யப்பட அப்போதும் கதறி அழுதவள் அப்படியே மயங்கி சரிந்திருந்தாள். தன்னவளின் நிலை கண்டு நெஞ்சம் வலித்தாலும் செய்ய வேண்டிய காரியங்களை செய்வதில் முனைப்பாக இருந்தான் வாசு.
எல்லாம் முடிந்து கம்பெனிக்கு சென்று அவன் குளித்து விட்டு வர, வாசலில் ஏதோ கூட்டமாக இருந்தது. யாராவது உறவினர்கள் இறப்பு செய்தி கேட்டு வந்திருப்பார்களோ என நினைத்து கொண்டு வர, ஒரு காரும் தடியான நான்கு ஆட்களும் இருந்தனர்.
அவர்களை பார்த்து புருவம் சுருக்கியவன், வேகமாக உள்ளே நுழைய “இவ என்னோட பொண்டாட்டி என்னை ஏமாத்திட்டு அப்பனும் மகளும் ஊரை விட்டு ஓடி வந்துட்டாங்க. இவளை தேடி கண்டுபிடிக்க இவ்வளவு நாள் ஆச்சு. இப்போ தான் இந்த நல்லவ இங்கே ஒளிஞ்சிருக்கறது தெரிஞ்சது. அதான் இவ அப்பனை பார்த்து நாலு வார்த்தை நல்லா நாக்கை புடிங்கிக்கற மாதிரி கேட்டுட்டு இவளை கழுத்தை பிடிச்சி இழுத்து போகலாம்னு வந்தேன். பார்த்தா இவ அப்பன் போய் சேர்ந்துட்டான். இனி யாரோட இருக்க போறா ஏய் கிளம்புடி” என்று ஒருவன் இரைந்து கொண்டிருந்தான்.
வாசலில் வந்து நின்ற வாசு திகைத்து நிற்க, தேவயானியோ எந்த பதிலும் சொல்லாமல் வெறித்த பார்வையுடன் நின்று இருந்தாள்.
“அட இது என்னடி கூத்தா இருக்கு, கல்யாணம் ஆனா பொண்ணு புருஷனை விட்டுட்டு இப்படியா ஓடி வர்றது. ஏம்மா இங்கே வந்து ஆள் இல்லாம அப்பாவை வச்சு பார்க்க முடியாம எவ்வளவு கஷட்டப்பட்ட, இப்போ தான் உன் புருஷன் வந்து கூப்பிடறாரே கிளம்பி போம்மா” என்றார் ஒரு பெண்மணி.
தேவி எதுவும் பேசாமல் நிற்க, “தம்பி இன்னைக்கு தான் எல்லாம் முடிஞ்சிருக்கு, நீங்க கொஞ்சம் பொறுத்து கூட்டிட்டு போங்களேன்” என்று அவனிடம் நயமாக பேசினார் அந்த பெண்மணி.
ம்ம் என யோசிப்பது போல செய்தவன், ரெண்டு நாள்ல வருவேன் தயாராகி இருக்கணும் அதை விட்டுட்டு இங்கே இருந்து வேற எங்கயாவது ஓட நினைச்ச, உன் காலை உடைச்சு வண்டியில தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்” என்று கத்தியவன் வெளியேறினான்.
போகும்போது வாசலில் நின்று அவனையே இமை இடுங்க பார்த்துகொண்டிருந்த வாசுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்.
அவன் சென்றதும், “என்ன பொண்ணும்மா நீ, புருஷன் இருக்கும்போது கழுத்துல தாலி இல்லாம இப்படித்தான் சுத்துவியா. வயசான அப்பனை இங்கே கூட்டிட்டு வந்து நல்லா வாழ வேண்டிய மனுஷனை இப்படி அநியாயமா சாவடிச்சுட்டியே. இங்கே பார்க்கறதெல்லாம் நல்லா தான் இருக்கும் ஆனா எதுவும் கடைசி வரைக்கும் கூட வராது. பேசாம உன் புருஷன் கூட கிளம்பி போற வழியை பாரு”. என சொல்லிவிட்டு அந்த பெண்மணியும் அவருடன் இருந்த இன்னும் சிலரும் கிளம்பி சென்றனர்.
போகும்போதே, “ஆள் பார்க்க அமுக்குணி மாதிரி இருந்தா பாரு என்ன வேலை பார்த்திருக்கா”.
“அக்கா இவளை சொல்லி குத்தமில்லை, இவன் அப்படி பட்ட ஆள் தானே. அதான் இவளையும் வலைச்சு போட்டு இருப்பான்”.
“அந்த கோபால் ஏதோ ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னான், இந்த கூத்து எங்கேடி போய் சொல்றது” என்ற பேச்சுகளுடன் தன்னை கடந்து சென்ற பெண்களின் பேச்சு வாசுவின் காதில் விழ, சட்டென வந்த வழியே திரும்பி சென்று இருந்தான் அவன்.