• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 11, 2025
Messages
27
என்னம்மா தெரியனும், உன்னை கண்ணெதிரே பார்த்துட்டு இருக்கேன் வேற என்ன தெரிஞ்சுக்கணும்”. அவன் சாதாரணமாக கூறினான்.

“இங்கே நீங்க பார்க்கறது மட்டும் இல்லை நான். எனக்கு வேற கடந்த காலம் இருக்கும், அது எப்படி வேணும்னா இருக்கலாம். எதுவுமே உங்களுக்கு தெரியாது. இப்படி அவசரப்பட்டு கல்யாணம் பேச வந்துட்டீங்க”

இப்போது தலை சாய்த்து அவளை பார்த்தவன், “அவசரம் தான் மா, ஆனா அது மட்டும் இல்லை, அவசியமும் கூடத்தான். நான் வாழணும்னா நீ எனக்கு அவசியம்னு தோணுது. அப்படி நினைச்சதுக்கு அப்பறம் இதுவே கால தாமதம் தான்னு நினைக்கிறேன்”. இடையில் அவள் ஏதோ கூற வர, இரும்மா நான் சொல்லி முடிச்சுடறேன், என்றவன்... உன்னோட கடந்த காலம் எப்படி வேணும்னா இருக்கட்டும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை இந்த நிமிஷம் இங்கே இருக்கற நீ மட்டும் தான் எனக்கு தெரியற, எனக்கு அது போதும். அப்படி உனக்கு உன்னோட கடந்த காலத்தை பத்தி சொல்லணும்னா, சொல்ல நினைச்சா... சந்தோஷமான விஷயமா இருந்தா மனசோட வச்சுக்கோ, சங்கடமான விஷயமா இருந்தா என் நெஞ்சில சாய்ஞ்சுகிட்டு சொல்லு அதுக்காக இந்த இடம் எப்பவும் காத்திட்டு இருக்கும். ஆனா எது எப்படி இருந்தாலும் இந்த கல்யாணம் முடிவு மாறாது. என்னை தவிக்க விடாதம்மா” என்றவன் சென்று விட்டான்.

கூடுதலாக இன்னும் சிறிது நேரம் சோமுவிடம் பேசிவிட்டு அவன் கிளம்பி சென்று விட, இவள் தந்தை அறையை நோக்கி சென்றாள்.

அவளை பார்த்ததும் கண்கள் மின்ன, கை நீட்டினார் தந்தை. அவர் கையை பற்றிக்கொண்டவள் அவர் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

மகளின் தலையை வருடியவர், “ரொம்ப நாளைக்கு அப்பறம் நான் இன்னைக்கு தான்மா சந்தோஷமா இருக்கேன். உன்னை தனியா விட்டுட்டு போய்டுவேனோன்னு நினைச்சுட்டு இருந்தேன். அப்படி போனா என்னோட உயிர் இங்கேயே தான் சுத்திட்டு இருக்கும். ஆனா இப்போ உனக்கு ஒரு நல்லது நடக்க போகுது நான் நிம்மதியா போவேன்மா” என்றார்.

“அப்பா அவருக்கு நம்மளை பத்தி, என்னை பத்தி எதுவுமே தெரியாது. அப்படி தெரிஞ்சு இருந்தா இதெல்லாம் சாத்தியமா எனக்கு தெரியலை. நமக்கு இதெல்லாம் எதுக்குப்பா” அவள் மெதுவாக தந்தைக்கு எடுத்து சொல்ல நினைக்க அவரோ விரக்தியாக மகளை பார்த்து இருந்தார்.

“ஏம்மா இனிமேல் இதெல்லாம் சொல்லி என்ன ஆக போகுது, அவர் எதை பத்தியும் கவலை இல்லைன்னு சொல்லிட்டு தான் கல்யாணம் பத்தி பேசினாரு. எனக்கென்னவோ இதெல்லாம் நல்லபடியா தான் நடக்கும்னு தோணுது” என்றார்.

ஏற்கனவே நோய் வாய்ப்பட்டிருக்கும் தந்தையிடம் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் “சரிப்பா தூங்குங்க அப்பறம் பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு வெளியே வந்து விட்டாள்.

அவள் வெளியே வரவும் அங்கே கற்பகமும் கோபாலும் நின்று இருந்தனர். இவளை கண்டதும் வேகமாக அவளிடம் வந்த கற்பகம், “தேவி என்னை எதுவும் தப்பா நினைக்காதடி, அவங்க வந்து பேச போறாங்கன்னு சொன்னாரு. பேசரதுல என்ன இருக்கு பொண்ணுனு இருந்தா நாலு பேர் கேட்க தானே செய்வாங்க அதான் நான் அமைதியா இருந்தேன். நீ பொறுமையா யோசிச்சு சொல்லு” என்றாள் அக்கறையாக.

“உங்களை நான் தப்பா நினைக்கலைக்கா, எனக்கு அவர்கிட்ட பேச வேண்டியது இருக்கு” என்றவள் கிளம்பி கம்பெனிக்கு சென்றாள்.

அங்கே கணக்கு புத்தகத்தை வைத்து கொண்டு ஏதோ பார்த்து கொண்டிருந்தான் வாசு, இவள் வரவை கண்டவன் நிமிர்ந்து பார்த்தான்.

“நீங்க அவசரப்படறீங்க” என்றாள் எடுத்ததும்.

“நீ கொலைக்காரியா கொள்ளைக்காரியா எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே தான்மா” என்றான் பொறுமையாக.

“அப்படி எல்லாம் இல்லாம வேற ஏதாவது இருந்தா”?

“எதுவா இருந்தாலும் பரவயில்லம்மா, ஆனா” ஒரு நொடி அவளை கூர்ந்து பார்த்து விட்டு, “ஒரு வேலை உனக்கு என்னை பிடிக்கலையா, நான் திரும்ப ஏதாவது தப்பான காரியம் செய்வேன்னு நினைக்கறியா” என்றான் வலியுடன்.

அவனை முறைத்து பார்த்தவள் “வாங்கின அடி உங்களுக்கு தான் மறந்து போச்சு நினைக்கிறேன், இப்படி மடத்தனமா பேசிட்டு இருந்தா திரும்ப வாங்க வேண்டி வரும்” படபடவென கூறி முடித்தவள் என்ன சொன்னோம் என உணர்ந்து உதட்டை கடித்து கொண்டு நின்று விட, ஒரு சிறு புன்னகையுடன் “அதுக்காக காலம் முழுக்க காத்திட்டு இருப்பேன் தேவா” என்றான் அவன்.

“சாரி நான் அந்த அர்த்ததுல சொல்லலை ஆனா நீங்க, உங்களை தப்பா பேசினதும்”.. அவள் தடுமாறி நிற்க, நின்றிருந்தவளின் கரம் பற்றினான்.

மெல்ல விரல்கள் மட்டும் தீண்டி பற்றிக்கொண்டவன், “அன்னைக்கு நீ என்னை அடிச்ச பாரு, அப்போ தோணுச்சு எதுக்கு இவ நம்மளை அடிச்சான்னு. ஆனா அதுக்கப்பறம் யோசிச்ச பிறகு புரிஞ்சது தப்பு செஞ்சா அடிச்சு வளர்க்க ஆள் இல்லாம தான் செய்யறது தப்புன்னு உணராம இருந்திருக்கேன். நான் தப்பு செய்யும்போது என் கூடவே இருந்து என்னை அடிச்சு திருத்த நீ வேணும்மா. காலம் முழுக்க உன்னோட அரவணைப்புல என்னை வச்சுக்கோ எந்த தப்பும் செய்ய மாட்டேன். நான் அப்பா அம்மா இல்லாத அநாதை தானே என்னை பார்த்துக்க மாட்டியா” என்றான் ஏக்கத்தோடு.

“அப்படி சொல்லாதீங்க வாசு” என்றாள் குரல் தழுதழுக்க

“இல்லை தேவா, உன்னை போல ஒருத்தி கையில சேர தான் இத்தனை நாளும் அந்த கடவுள் அநாதையாவே சுத்த விட்டாரு போல” என்றவன் கூறி முடிக்க அவன் இதழ்களை கையால் மூடி இருந்தாள் அவள்.

“போதும் இப்படியே தான் பேசிட்டு இருக்க போறீங்களா, ஆமா அப்படி உங்ககிட்ட என்ன இருக்குன்னு இதுங்க எல்லாம் சுத்தி சுத்தி வருதுங்க” என்றாள் சலிப்பாக.

அவன் வருந்துவது பொறுக்காமல் தான் அவள் பேச்சை மாற்றினாள், அதை கேட்டு சத்தமாக சிரித்தவன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தான்.

அவள் அருகே வந்து சற்றே குனிந்தவன் அவள் முகத்தை பார்த்தபடியே, “அது செயல்ல காட்டற விஷயமாச்சே இப்படி வாயால கேட்டா என்ன செய்ய முடியும். அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி”.. என்றான் கண்சிமிட்டி குறும்பாக.

அவன் குறும்பு பேச்சில் காது மடல் சிவந்து போக அவனிடம் இருந்து விலகி திரும்பி நின்று கொண்டவள், “ஆமா மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பு” முனகியபடியே வேலை பார்ப்பது போல பாவனை செய்தாள். அவள் கூறியது அவன் காதுகளில் தெளிவாக விழ முன்பை விட சத்தமாக சிரித்தான் வாசு.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top