• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 11, 2025
Messages
27
“அய்யோ வாசு என்ன பண்றீங்க” பதறி போனவள் விலகி நிற்க, “இந்த சாதாரண மன்னிப்பெல்லாம் என் தப்பை நியாயப்படுத்தாது தான், ஆனா எனக்கு வேற வழி தெரியலைம்மா” என்றான் கலங்கிய குரலோடு.

“முதல்ல எழுந்திருங்க” என்றாள் கண்களை மூடி திறந்து.

அவன் எழவும், “இங்கே பாருங்க சரி எது தவறு எது புரிஞ்சுகிட்டாலே போதும், யாரும் யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை. இதுவரைக்குமே நீங்க நீங்களா இருக்கீங்க அது தான் உங்களோட குணமே. நடந்ததை விட்டுடுங்க” என்றாள் கனிவாக.

“அநியாயமாக ஒரு குடும்பத்தை கலைக்க இருந்தேன், அந்த பிள்ளைகளோட வாழ்க்கையை பாழாக்க இருந்தேன், எவ்வளவு பெரிய தப்பு அது தப்புன்னு கூட உணராம செஞ்சிருக்கேன். என்னை விட கேவலமான ஒரு ஜென்மம் இந்த உலகத்திலே இருக்க முடியாதுல்ல” என்றான் வலியுடன்.

“அதான் நீங்களே சொல்லிட்டீங்களே வாசு, தப்புன்னு உணராம செஞ்சேன்னு. இப்போ தான் உணர்ந்துட்டீங்களே அப்போ அதை மறக்கறது தானே நியாயம். இல்லை வாழ்க்கை முழுக்க அதை பிடிச்சுட்டே தொங்க போறீங்களா” என்றாள் அவனை ஆழ்ந்து பார்த்து.

“உன்னால.. இதை எல்லாம் மறக்க.. முடியுமா.. தேவா” அவன் குரல் எதிர்பார்ப்போடு தயங்கி தயங்கி ஒலிக்க, அவனை ஆழ்ந்து பார்த்தவள் கூறினாள். “மறதி தானே வாழ்க்கையோட பெரிய மாற்றமே. சிலதை மறக்கறதும் சிலதை மறக்காம இருக்கிறதும் தானே மனுஷங்க. உங்களை மன்னிக்க நான் ஒண்ணும் கடவுள் கிடையாது வாசு.. சரி தவறுகள் நிறைஞ்ச சாதாரண பெண் தான். ஆனா ஒண்ணு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும். ஒரு விஷயத்தை விரும்ப துவங்கிட்டா அதுல இருக்கற குறை எதுவுமே கண்ணுக்கு தெரியாது வாசு. வானத்து நிலவை ரசிக்கறோம் அதுல இருக்கற கரையை பெருசா எடுத்துக்கறோமா, இல்லையே. அப்படித்தான் எனக்கு நீங்களும்”. என்றாள் உள்மனதில் இருந்து வந்த வார்த்தைகளோடு.

அவன் அவளைத்தான் பார்த்து நின்றான், அவன் வாழ்வை ஒலி பெற வைக்க வந்த தேவதையாக தெரிந்தாள் தேவயானி.

ஒற்றை வார்த்தையில் அவள் மனதையும் அவனுக்கான மன்னிப்பையும் கொடுத்து விட்டாள். அவனை மன்னிக்க அவள் யார், அவனுக்கு எல்லாமே அவள் தான். செய்த தவறுகளுக்கான பாவ மன்னிப்பை யாரோ ஒரு பாதிரியாரிடம் கேட்கிறோம் அவர் நமக்கு என்ன சொந்தமா பந்தமா. இல்லையே கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் இடைவெளியை இணைக்கும் பாலமாக அவர்கள் இருப்பது போல, அவர்கள் மூலம் செய்த தவறுகளுக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்பு கேட்பது போலத்தான் அவளையும் எண்ணினான்.

ஆனால் என்ன ஒரு மாற்றம் அவனுக்கு கடவுள் கொடுத்த வரமாக அவளை நினைக்க துவங்கி இருந்தான் என்பதே உண்மை.

சொல்லியவளின் வார்த்தைகள் அசரீரி போல காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. “ஒரு விஷயத்தை விரும்ப துவங்கிட்டா அதுல இருக்கற குறை எதுவுமே கண்ணுக்கு தெரியாது வாசு. நிலவை ரசிக்கறோம் அதுல இருக்கற கரையை பெருசா எடுத்துக்கறோமா, இல்லையே. அப்படித்தான் எனக்கு நீங்களும்”.

அன்று முழுவதும் அவன் மொபைல் போனில் அந்த ஒரு பாடல் மட்டுமே திரும்ப திரும்ப ஒலித்து கொண்டிருந்தது.

பற பற பற பறவை ஒன்று…

கிரு கிரு வென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
ஜெபிக்கவா…
அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…
ஓ… அன்பே எந்தன் வாழ்வுக்கு…
ஆசிர்வாதம் நீயடி…
கண்ணீராடும் பிள்ளைக்கு…
நீயே காதல் தாயடி…
உன்னை காண மீண்டும் மீண்டும்…
கண்கள் தூண்டும்…
இருமுறை ஒரு வானவில் வருமா…
பற பற பற பறவை ஒன்று…
கிரு கிரு வென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
ஜெபிக்கவா…
அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…
தேவாலயம் மெழுகும் நானே…
திரி ஏறும் தீயும் நீயே…
என் தேகம் கண்ணீர்விட்டு கரையுதே…
மீன் கொத்த செல்லும் பறவை…
மீன் வலையில் விழுந்தது போல…
வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே…
மழையில் கழுவிய மணலிலே…
தொலைந்த காலடி நானடி…
முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு…
நிலைத்த முகவரி நீயடி…
பெட்ரோல் மீது தீயை போல…
உந்தன் மீது பற பற என பரவுது மனசு…
பற பற பற பறவை ஒன்று…
கிறு கிறுவென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
ஜெபிக்கவா…
அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…
என் உலகம் கைவசம் இல்லை…
என் பெயரும் ஞாபகம் இல்லை…
சத்தியமாய் என் அருகே நீ இருக்கிறாய்…
பெற்றவரை வீட்டில் மறந்தேன்…
மற்றவரை ரோட்டில் மறந்தேன்…
மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்…
மங்கை என் குரல் கேளடி…
நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி…
எனது அசுத்தங்கள் பாரடி…
வந்து என்னை பரிசுத்தம் செய்யடி…
பெட்ரோல் மீது தீயை போல…
உந்தன் மீது பற பற என பரவுது மனசு…
பற பற பற பறவை ஒன்று…
கிரு கிரு வென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா…
அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…

உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top