• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 11, 2025
Messages
27
Chapter 14

விலை மதிப்பில்லாதது
ன் கண்ணீர்,
அதை
எனக்காக மட்டுமே கொடுத்திடு பெண்ணே.
அதற்கான விலை என்
மரணம் என்றாலும் கூட
பெற்றுகொள்கிறேன்..


அவள் கண்ணீர் அவன் தோளில் வழிந்து நெஞ்சை நனைத்து கொண்டிருந்தது. மெல்ல அவன் கைகள் அவள் முதுகை வருடி கொடுக்க, தன்னை நிதானித்து கொண்டவள், அவனிடம் இருந்து பிரிந்தாள்.

“இப்படி அழாதம்மா, எனக்கு வலிக்குது. என்னோட பாஸ்ட்டை சொல்லி உன்கிட்ட அனுதாபம் தேடிக்கிற மாதிரி இருக்கு” என்றான்.

“ஆமா சும்மா இருந்தவளை அதையும் இதையும் சொல்லி அழ வச்சுட்டு போங்க நீங்க” என அவன் தோளில் அடித்தாள். இயல்பான அவள் செய்கையில் அவனுக்குள் மத்தாப்பு மலர்ந்தது.

தோள் மீது சிந்தி இருந்த அவள் கண்ணீரை கண்டான், அதை வருடிக்கொண்டே “நீ உன்னோட கண்ணீரால என்னை சுத்தமாக்கிட்ட ஆனா நான் என்னோட கரையை உனக்கு கொடுத்துட்டேன்” என்றான் அவள் உடை மீது படிந்திருந்த மணல் தூசியை காட்டி. அவள் புரியாமல் பார்க்க, அவன் சுவற்றை இடித்ததில் அவன் மீது பட்டிருந்த மண் துகள்கள் கட்டி அணைத்ததில் அவள் மீதும் படிந்து இருந்தது. அதை தட்டி கொண்டவள், “இப்போ சரியாகிடுச்சு, வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே சுத்தமா இருந்தா போதும்” என்றாள் அவனுக்கு புரியும்படி.

அவனும் புரிந்து கொண்டானோ என்னவோ மேற்கொண்டு பேசவில்லை, “ஆமா ரூமை இடிச்சுட்டீங்களே இனி எங்கே தூங்குவீங்க” என கேட்டாள்.

“வேறெங்கே இங்கே தான், கொஞ்சம் நாளாவே இங்கே தான் தூங்கறேன்”

“இங்கே எப்படி படுக்க முடியும், உங்க உயரத்துக்கு இங்கே காலை நீட்டி வசதியா படுக்க முடியாதே” என அந்த இடத்தை பார்வையால் அளந்தபடியே கேட்டாள். அது ஒரு சிறிய அறை தான் அதில் பாதி இடத்தை அங்கிருந்த மேசையும் இரு நாற்காலிகளும் அடைத்து கொண்டிருந்தது. இதில் அவன் நீட்டி படுப்பதெல்லாம் நிச்சயம் வசதிப்படாது.

அவன் லேசான புன்னகையை சிந்தினான், “என்ன கேள்வி கேட்டா சிரிக்கறீங்க” இப்போவெல்லாம் அடிக்கடி சிரிக்கராரு. தனக்குள் நினைத்து கொண்டாள்.

“இந்த இடம் இல்லை, உன்னோட இந்த சின்ன மடி கிடைச்சா கூட நிம்மதியா தூங்குவேன்” என்றான் அவன் ஆழ்ந்த பார்வையுடன்.

இவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, மௌனியாக நின்றாள். அடுத்து பேச முடியாமல் அவள் தடுமாறுவதை பார்த்தபடியே, “சாப்பாடு கொண்டு வந்தியா” என்று கேட்டான்.

“ஹா கொண்டு வந்தேன்” என அவள் எடுத்து வைத்தாள்.

“நான் போய் குளிச்சுட்டு வந்து சாப்பிடறேன், நேத்துல இருந்து ஒண்ணுமே சாப்பிடலை” என்று வெளியேற போக, “கை காயமா இருக்கே எப்படி சாப்பிடுவீங்க” என்றாள் அவள்.

அதை திருப்பி பார்த்து கொண்டவன், “இதெல்லாம் ஒண்ணுமே இல்லை இதை விட பெரிய அடியெல்லாம் பட்டிருக்கேன்” என கூறிவிட்டு அவன் சென்று விட்டான்.

அதெப்படி எல்லா வலி நிறைந்த விஷயத்தையும் அவன் சாதாரணமாக கூறுகிறான். அப்படி அவன் சாதாரணமாக கூறும் எல்லாமே இவளுக்கு வலியை கொடுக்கிறது. அவன் வலியும் வேதனையும் ஏன் அவளை இத்தனை தூரம் பாதிக்க வேண்டும். அப்படியா அவனை விரும்ப துவங்கி விட்டாள். இது எப்படி சாத்தியம், அவளுக்கே மலைப்பாக இருந்தது. ஆனாலும் எதையும் அவனிடம் காட்டிக்கொள்ள கூடாது என்று மனதை திடமாக வைத்து கொள்ள முயன்றாள்.

அவன் குளித்து விட்டு வந்து அமர்ந்தான், தலையில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. “இதென்ன அப்படியே துடைக்காம வந்துட்டீங்களா” உணவை அவன் பக்கம் நகர்த்தி கொண்டே கேட்டாள்.

“பசிக்குதும்மா” அவன் பாவமாக கூறியபடி உணவை எடுத்து உண்ண துவங்கினான். மனதக்காளி வத்தல் குழம்பு, வாழை தண்டு கூட்டு, வேர்க்கடலை துவையல். மதியம் சாப்பிட கொண்டு வந்திருந்தாள். அதை அவன் இப்போதே சாப்பிடுவதால் சூடாகவே இருந்தது. அவன் வேகவேகமாக சாப்பிடுவதை கண் கொட்டாமல் பார்த்தாள்.

அவள் அப்படி பார்ப்பதை பார்த்தவன், “நீ சாப்பிட்டியாம்மா” என கேட்டான்.

ம்ம் என தலையசைத்தவள், “ஆமா என்ன வாம்மா போம்மான்னு சொல்றீங்க” என கேட்டாள்.

“தெரியலை அப்படி கூப்பிடத்தான் தோணுது, உனக்கு பிடிக்கலையா”

“இல்லை இல்லை சும்மா கேட்டேன்”.

கொண்டு வந்திருந்த மொத்தத்தையும் அவன் சாப்பிட்டு முடிக்கவும், “நான் வேணும்னா மதியம் வீட்டுக்கு போய் வேற ஏதாவது சமைச்சு கொண்டு வரவா”

அவள் கேட்டதும் ஒரு நொடி யோசித்தவன், “வீட்டுல மாளிகை பொருள் எல்லாம் இருக்கா, ஏதாவது வாங்கணுமா” என்றான் யோசனையாக.

“இல்லை கொஞ்சம் நாளா எனக்கு சாப்பாடு கொண்டு வர, முன்னாடி நீயும் அப்பாவும் மட்டும் தான் இப்போ இது எக்ஸ்ட்ரா செலவு தானே அதான் கேட்டேன்”.

அவனை முறைத்தவள் பாத்திரங்களை எடுத்து வைத்து கொண்டே, “நான் இங்கே செய்யற வேலைக்கு நீங்க கொடுக்கற சம்பளமே அதிகம் தான். அதனால தான் நானும் அப்பாவும் இப்போ கொஞ்சம் கஷ்டம் இல்லாம இருக்கோம். நான் ஒண்ணும் கறியும் மீனுமா சமைக்கலை. என்னால முடிஞ்சதை தான் சமைச்சு கொண்டு வரேன். உங்களுக்கு ஒரு வேலை சாப்பாடு கொடுக்கறதுனால ஒண்ணும் கஷ்டம் வந்திடாது” என கூறிவிட்டு பாத்திரங்களை கழுவ சென்று விட்டாள்.

அவள் பின்னேயே வந்தவன், “அப்பாவுக்கு எப்படி இப்படி ஆச்சு” என கேட்டான்.
கழுவிகொண்டிருந்த கை அப்படியே நிற்க, “சடன் ஸ்ட்ரோக்” என்றாள் பெருமூச்சோடு.

அடுத்து அவன் ஏதோ பேச வர, அங்கே டிரைவர் ஒருவர் வந்து நின்றார், வாசு நீ இந்த இடத்தை கட்ட ஆள் கேட்டியே கூட்டிட்டு வந்திருக்கேன் என்று ஒருவரை அறிமுகம் செய்தார்.

சரி வாங்க என அவர்களை அழைத்து கொண்டு அவன் இடித்து தரைமட்டமாக்கிய இடத்தை நோக்கி சென்றான். அந்த இடத்தை விட்டு விட்டு அதை அடுத்து இருந்த இடத்தில் நின்று கொண்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். இவள் உள்ளே சென்று விட்டாள்.

அதன் பிறகு வந்தவர்களோடு பேசிக்கொண்டே வந்தவன், ஒரு செக் லீஃப் எடுத்து எழுதி கொடுத்தான். மீண்டும் அவர்களோடு பேசிக்கொண்டே சென்றுவிட்டான்.

அதன் பிறகு அவன் வரவே இல்லை, அருகில் இருக்கும் சில ஆட்களோடு சேர்ந்து வேலையை பார்த்தான். பிறகு நேரம் மதியத்தை தொட இவள் எழுந்து வீட்டிற்கு புறப்பட்டாள். சரியாக அவள் கிளம்பிய நேரம் அவனை பார்க்க அவனும் இவளை திரும்பி பார்த்தான். செல்கிறேன் என்று அவள் தலை தானாக ஆட, இவனும் தலையசைத்தான்.

அவள் சென்று விட்டாள், ஆனால் அவள் கண்ணுக்கு மறையும் வரையில் இவன் பார்வை அவளை தொடர்ந்து கொண்டே இருந்தது.

வீட்டிற்கு வந்தவள் தந்தைக்கு உணவு கொடுத்து விட்டு அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள். வீட்டில் எப்போதுமே தயிர் இருக்கும், சோமாசுந்தரத்திற்கு அதிகம் காரம் கூடாது என்று அடிக்கடி சாம்பார் குழம்பு எல்லாவற்றிலும் கொஞ்சம் தயிர் கலந்து கொடுப்பாள். அந்த தயிரை எடுத்து இருந்த சாதத்துடன் விட்டு, கொஞ்சம் பட்டை மிளகாய் கருவேப்பிலை தாளித்து கிளறினாள். காலையில் வைத்த கூட்டு இதற்கு தோது படாது என தெரிந்தது என்ன செய்யலாம் என்று யோசிக்க, ஒரே ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பொடியாக நறுக்கி காரம் சற்று தூக்கலாக சேர்த்து வறுத்து கொண்டாள். கூடவே துவையலையும் எடுத்து கொண்டு கிளம்பினாள்.

அவள் அங்கு சென்ற போது வாசு அங்கே இல்லை. அவனுக்கான உணவை ஓரமாக வைத்து விட்டு இவள் வேலையை பார்க்க துவங்கினாள். எங்கே சென்றான் சொல்லிவிட்டு சென்று இருக்கலாமே மனம் முரண்டியதில், ஏன் அவர் எங்கே போனாலும் உன்கிட்ட சொல்லிட்டு போக என்ன அவசியம் இருக்கிறது என தனக்கு தானே கேட்டு கொண்டாள். ஏன் சொல்லிட்டு போனா என்ன அவருக்காகத்தானே சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் மனதோடு வாதிட்டு கொண்டிருக்க, யாரோ அவளை அழைத்தனர்.

வெளியே வந்து பார்த்தாள். ஒருவன் நின்று இருந்தான். “கல்லு லோடு என்ன விலைன்னு சொல்றீங்களா” என கேட்டான்.

உள்ளே வாங்க என அவனை அழைத்து அமர வைத்தவள், “இது லோடு கணக்கு இல்லை பீஸ் கணக்கு தான், ஒரு கல்லு இந்த ரேட் வரும், உங்களுக்கு எத்தனை லோடு வேணுமோ சொல்லிட்டு போங்க, முதலாளி வந்ததும் கேட்டு சொல்றேன். உங்க நம்பர் கொடுத்துட்டு போங்க” என்று கூறினாள்.

“அப்படியா நான் நாளைக்கு வந்து பேசிக்கிறேன் அவர் எப்போ இருப்பார்னு சொல்ல முடியுமா”

“எப்போ இருப்பாங்க சரியா சொல்ல முடியாதே, அவள் யோசிக்க உங்க நம்பர் தாங்க அவர் இருக்காரா கேட்டுகிட்டு வரேன்” என்று கூறினான்.

“இல்லை என்கிட்ட போன் இல்லை, நீங்க உங்களோட நம்பர் கொடுத்துட்டு போங்க நான் அவரை கால் பண்ண சொல்றேன்” என்று கூறினாள்.

சரி என்று அவனுடைய எண்ணை கொடுத்து விட்டு சென்றான். சென்றவன் நின்று ஒரு நிமிடம் அவளை உற்று பார்த்து விட்டு சென்றதை பெண்ணவள் கவனிக்கவில்லை.

அவன் சென்ற சிறிது நேரத்தில் எல்லாம் உள்ளே வந்தான் வாசு, அவனை கண்டதும், “அடடா எங்கே போறேன் என்ன ஏதுன்னு சொல்லிட்டு போக மாட்டீங்களா” என்று சற்று கோபமாக கேட்டாள்.

“ஏன்மா என்ன ஆச்சு” அவள் கோபத்தில் அவன் பதட்டமாக கேட்டான்.

அவன் பதட்டம் கண்டு நாக்கை கடித்தவள் “இல்லை ஒண்ணுமில்லை உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன், உங்களை காணோம் அதான் கேட்டேன்” என்றாள் சமாளிப்பாக.

ஓஹ் என்றவன் அவள் எதிரே அமர்ந்தான். சாப்பாட்டை அவன் புறம் நகர்த்தி வைத்து கொண்டே, “ஒரு ஆள் வந்து கல்லு கேட்டுட்டு போனாரு” என்றாள்.

“யாரு”

“பேர் தெரியலை நீங்க இருக்கும்போது வாங்கன்னு சொன்னேன், நீங்க எப்போ இருப்பீங்கன்னு கேட்டாங்க. எனக்கென்ன தெரியும் என்கிட்ட சொல்லிட்டா போறாங்கன்னு நம்பர் வாங்கி வச்சிருக்கேன். நீங்களே பேசிக்கோங்க” என்று விட்டு எழுந்து கொண்டாள்.

அவளிடம் சொல்லாமல் சென்று விட்டானாம் அந்த கோபத்தை அவளுக்கே தெரியாமல் காட்டிக்கொண்டிருந்தாள்.

ஆனால் அது அவனுக்கு புரிந்து விட்டது தான் ஆச்சர்யம் “நான் கிளம்பும்போது நீ இல்லம்மா, அதான் சொல்ல முடியலை. இனி சொல்லிட்டே போறேன்” என்றான் சமாதானமாக.

“எனக்கு சொல்லணும்னு அவசியம் இல்லை, ஆனா நீங்க எங்கேன்னு கேட்கறவங்ககிட்ட என்ன சொல்லட்டும் அதான் கேட்டேன்” என்றாள் அவள். எங்கே அவனுக்காக அவள் காத்திருந்தது தெரிந்து விடுமோ என்று விட்டேற்றியாக கூறினாள்.

“என் தப்பு தான் இனி சொல்லிட்டு தான் போவேன் சரியா” என்றான் உணவை எடுத்து உண்டபடியே. என்னதான் அவள் மறைக்க நினைத்தாலும் அவனுக்கு தெரியாதா அவளை பற்றி அதனால் அவள் சொன்னதை அவன் கண்டு கொள்ளவே இல்லை.

அவன் சாப்பிடுவதை கண்டதும், “அவசரத்துக்கு இதான் செய்ய முடிஞ்சது” என்றாள் தயக்கமாக.

“இதுவே அமிர்தமா தான் இருக்கு” என்றான் அவன் கண் சிமிட்டி புன்னகையுடன்.

அவன் கண்சிமிட்டளில் தனக்குள்ளே ஏதோ சுரப்பதாக தோன்றியது அந்த பெண்ணிற்கு. பாலைவனத்தை மட்டுமே பார்த்து கடந்த வந்தவளுக்கு இந்த பனிதுளி பேச்சும் புன்னகையும் இதயத்தை நனைக்கும் நயாகராவாகவே தோன்றியது.
 
Member
Joined
May 9, 2025
Messages
99
Loveu engine started on her side
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top