• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 11, 2025
Messages
27
ஒரு நாள் அப்பா இருக்கும்போது நேரடியாவே அவரோட..., அப்பாவால அதை தாங்கிக்கவே முடியலை. அவ்வளவு பாசமா இருந்தவங்க இப்படி மாறுவாங்கன்னு கூட அவர் நினைச்சிருக்க மாட்டார். ரொம்பவே நொந்து போய்ட்டார். இதெல்லாத்தை விடவும் ஹைலைட் அவங்க அந்த ஆளோடவே கிளம்பி போனது. ஒரு குறைந்த பட்சம் மனசாட்சி கூட இல்லாம, அப்பாவை எப்படியோ போகட்டும்னு விட்டுட்டு போய்ட்டாங்க.

நான் அம்மா அம்மான்னு அவங்க பின்னடியே அழுதுட்டு போனப்ப தான் யாருடா உனக்கு அம்மா அநாதை நாயேன்னு எட்டி உதைச்சுட்டு போய்ட்டாங்க. நான் அம்மா அம்மான்னு அழுதுட்டே இருந்தேன். அப்போ இங்கே வேலை செஞ்சவாங்க தான் அப்பாவையும் பார்த்துட்டு என்னையும் வளர்த்தாங்க.

நான் அம்மாவை நினைச்சு அழறது தாங்கிக்க முடியாம அப்பா என்னை பத்தி சொன்னாரு. அப்போ அந்த நிமிஷம் அவர் தான் எனக்கு தெய்வமா தெரிஞ்சார். அதுல இருந்து இங்கே வேலை செய்யறவங்க அப்பா இவங்க தான் எனக்கு வாழ்க்கை. இந்த தொழிலை கத்துகிட்டேன் நானே நின்னு வேலை செய்தேன். படிப்பை கூட விட்டுடலாமான்னு நினைச்சேன், அப்பா விடலை படிப்பு எப்பவவுமே கை கொடுக்கும் உனக்கு படிப்பு வருது அதை விடாதன்னு சொன்னாரு. அதனால ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி செஞ்சிட்டு இருந்தேன்.

ஒரு கட்டத்திலே வாழ்ந்தது போதும்னு அவர் மேலே போய்ட்டாரு, சாகும்போது இந்த இடம் அவரோட சுய சம்பாத்தியம்னு என் பேர்ல எழுதி வச்சுட்டு போய்ட்டாரு. தனியா இருந்தேன் காதல், காமம் ஏதேதோ பேர் சொல்லி என்னை அடைய பார்த்த பொண்ணுங்ககிட்ட எனக்கு எந்த ஈர்ப்பும் வரலை. அதுக்கு மாறா பசி தூக்கம் போல உடல் தேவையையும் தீர்த்துக்க ஆரம்பிச்சேன். அது என்னவோ அந்த பொம்பளைய பழி வாங்கற மாதிரி ஆரம்பத்துல தோணுச்சி அதுக்கப்பறம் அதுவே பழக்கம் ஆகிடுச்சி.. இப்போ இந்த இடம் அவங்க முன்னாள் கணவர்க்கு சொந்தம் மனைவிங்கற பேர்ல அவங்களுக்கு வரணும்னு சமீப காலமா நோட்டீஸ் அனுப்பிட்டு இருக்கா. முடியாத நேரத்திலே அவரை குப்பை மாதிரி தூக்கி வீசித்து போனவளுக்கு சொத்து வேணுமாம். கொஞ்சம் கூடவா உடம்பு கூசலை. இது அவரோட சுய சம்பாத்தியம் அவர் என்னை மகனா ஸ்வீகாரம் செஞ்சு தான் இந்த இடத்தை என் பேர்ல எழுதி வச்சிட்டு போனாரு. அவர் என்கிட்ட கேட்டுகிட்டது எல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். எல்லா இங்கே வேலை செய்ய வரவங்களை நல்லா பார்த்துக்கோ. ஊர் உறவை விட்டு பொழைப்புக்காக வராங்க அவங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம் அதை என்னைக்கும் மறந்திடாதன்னு சொன்னாரு. அப்பா இருக்கும்போது வேலை செய்த சிலரோட குடும்பத்தை சேர்ந்தவங்க தான் இன்னும் கூட வேலை செய்யராங்க. அவங்க வாழ்வாதாரம் இதை நம்பி தான் இருக்கு என்ன ஆனாலும் நான் இதை கொடுக்க மாட்டேன்” என்றான் உடல் இறுகி உறுதியாக.

இலக்கின்றி வெறித்த பார்வையுடன் அவன் கூறி முடித்து அவளை பார்க்க, கண்களில் பொங்கி வழிய தயாராக இருந்த கண்ணீரோடு அவன் தலையை இழுத்து அவள் நெஞ்சில் அணைத்து கொண்டாள் தேவயானி.

திகைத்து போனவனால் நிமிர்ந்து கூட அவளை பார்க்க முடியவில்லை, அத்தனை இறுக்கமாக அவளுள் அவனை புதைத்து வைத்திருந்தாள். அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவன் தோள்பட்டையில் பட்டு உடலில் ஊடுருவிகொண்டிருந்தது.

சிறிது நேரம் அப்படியே இருந்தவன், பிறகு அவளிடம் இருந்து மெல்ல விலக முயல, அவளுக்கும் அப்போது தான் அவள் செயல் உரைத்ததோ என்னவோ மெதுவாக அவனை விட்டு விலகினாள்.

“என்னம்மா” அவன் மெல்லிய குரலில் கேட்க, “சின்ன குழந்தையா பசியோட மயங்கி கிடந்து ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்கதானே” என்றாள் திக்கி திக்கி வந்த அழுகை குரலோடு.

எட்டி அவள் கையை பற்றிக்கொண்டவன் “எனக்கு அதெல்லாம் நினைவு இல்லம்மா” என்றான் அவளை சமாதானம் செய்யும் விதமாக.

ஆனாலும் ஏனோ ஒரு சிறிய குழந்தை ஒட்டிய வயிறும் கூம்பிய முகமுமாக அழுத கண்ணீர் தடங்களோடு குப்பை தொட்டி ஓரம் கிடப்பது போன்ற காட்சியே அவள் கண் முன்னே வந்து போனது. அதை நினைக்க நினைக்க அழுகை பீறிட்டு வர வாயை மூடி அதை அடக்க பார்த்தவள், அவனின் வேண்டாம் என்ற தலையாட்டலில் அதை அடக்க முடியாமல் அவன் தோளிலேயே சாய்ந்து கொண்டு கதறி அழுதாள்.

கண் முன்னே நடவாத போதும், சில காட்சிகளை மனகண்ணிலோ அல்லது ஊடகத்திலோ பார்க்க நேரும்போது நம்மை அறியாமல் கண்கள் கலங்கி அழ தோன்றுமே, அந்த மாதிரி ஒரு நிகழ்வு தான் இப்போது தேவிக்கு நடந்து கொண்டிருந்தது.

அகதிகள் கப்பலில் வரும்போது ராணுவத்தினரால் சுடப்பட்டு கடற்கரை ஓரம் ஒதுங்கிய ஒரு சிறுவனின் உடல் கிடந்த காட்சி, சோமாலியாவில் பசியால் வாடி கிடந்த ஒரு குழந்தையை கழுகு ஒன்று கொத்தி தின்ன காத்திருக்கும் காட்சி, ஈழத்தில் குண்டு வெடிப்பில் தாய் இறந்தது கூட தெரியாமல் அவள் மார்பில் பால் அருந்த முயர்ச்சிக்கும் மழலையின் புகைப்படம் போன்ற காட்சிகள். இதை எல்லாம் நினைக்கும்போதே நெஞ்சை வலித்து கண்களில் கண்ணீர் வருவது போலத்தான் தற்போது தேவயானியின் நிலையும் இருந்தது
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top