New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
காலையில் அவன் கேட்டுக்கொண்டதுபடி சற்று சீக்கிரமே எழுந்து வேலைகளை முடித்து கொண்டு கிளம்பினாள். "என்னம்மா சீக்கிரமே கிளம்பற" கேட்ட தந்தைக்கு "கொஞ்சம் வேலை இருக்குப்பா" என்று கூறிவிட்டு வெளியே வந்தாள்.
அவள் செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்ப வாசலில் நுழைந்தாள் கற்பகம். "வாங்கக்கா” வரவேற்றவளை “என்ன அதுக்குள்ள கிளம்பிட்ட” என கேட்டாள் கற்பகம்.
“கொஞ்சம் வேலை இருக்காம் சீக்கிரம் வர சொன்னார்”.
“ஓஹ் சரி திரும்பி நில்லு" என அவளை திருப்பினாள். "என்னக்கா" என்றபடியே அவள் திரும்பி நிற்க தலையில் ஏதோ வைக்க போனவளை திரும்பி பார்த்து விட்டு “அய்யோ வேண்டாம்க்கா” என்றாள் பதறி.
“பூவை போய் வேண்டாம்னு சொல்றியே” அலுத்து கொண்டாள் கற்பகம்.
“இல்லக்கா நான் பூ வைக்கறது இல்லை” என்றாள் இவள்.
“ஏன் நீ பொண்ணு தானே, பூ வச்சா என்ன தப்பு”
“தப்பெல்லாம் இல்லைக்கா என்னமோ வைக்கறது இல்லை”.
“இன்னைக்கு வச்சிட்டு போ”
“நீங்க வச்சுக்கோங்கக்கா”
“ஆமா எனக்கு இருக்கற அரை அடி முடிக்கு நானே எவ்வளவு வச்சுக்க முடியும். உங்கண்ணன் நேத்து பூக்கடை பக்கம் லோடு போய்ருக்காரு அவர் தான் வாங்கிட்டு வந்தாரு. எனக்கு போகத்தான் உனக்கு கொடுத்தேன்” என அவள் தலையில் வைத்து விட்டாள்.
தேவிக்கு என்னமோ தலையே பாரமாக இருப்பது போல இருந்தது, ஆனாலும் பாசமாக வைத்து விடும்போது இன்னும் எப்படி மறுப்பது என்று நினைத்தவள் அவளுக்கு தலையாட்டி விட்டு கிளம்பினாள்.
அலுவலக வாசலில் வந்து நின்றவள் தன்னிடம் இருக்கும் சாவியை கொண்டு திறக்க முயல அது திறந்தே கிடந்தது. இங்கே தான் எங்காவது வாசு இருப்பான் என்று சுற்றும் முற்றும் கண்களை மேயவிட்டபடியே கதவை திறந்து உள்ளே செல்ல அங்கே குப்புற படுத்து உறங்கி கொண்டிருந்தான் அவன்.
இவர் ஏன் இங்கே படுத்திருக்காரு நினைத்து கொண்டே ஓரமாக ஒதுங்கி சென்று மேசையில் தான் கொண்டு வந்த பொருட்களை வைத்தவள் அவனை எப்படி எழுப்புவது என்று தெரியாமல் தடுமாறி நின்றாள். ஆனால் அவளுக்கு வேலை வைக்காமல் அவள் தலையில் இருந்த மல்லகை பூ அவன் நாசி தீண்டி எழுப்பி விட்டிருந்தது.
தலையை உயர்த்தி கண்கள் சுருக்கி பார்த்தவன் பின் மெதுவாக ஒருக்களித்து படுத்து கொண்டு அவளை தான் பார்த்தான். சாவகாசமாக பள்ளிகொண்ட பெருமாள் போல படுத்து கொண்டு தன்னை பார்ப்பவனை என்ன செய்யலாம் என்று கோபம் வந்தது அவளுக்கு.
“என்ன இங்கே படுத்திருக்கீங்க” என்று கேட்டாள்.
“கொஞ்சம் நாளா இங்கே படுத்தா தான் தூக்கம் வருதும்மா” என்றான் அவன் சோம்பல் முறித்தபடியே. முட்டி வரை ஷார்ட்ஸ், ஆர்ம் கட் பனியன் அணிந்து இருந்தான். கலைந்த தலைமுடியை கையால் கொதிக்கொண்டே எழுந்தவன், “தேவா ஒரு பிளாக் டீ போட்டு தர்றியா” என்றான் கெஞ்சலாக.
டீ... அவள் யோசிக்க, “ரூம்ல எல்லாமே இருக்கும்” என்றான்.
சரி என்று அவன் அறைக்கு சென்றாள், இங்கும் தள்ளியவுடன் கதவு திறந்து கொண்டது. உள்ளே காலடி எடுத்து வைக்க போனவள் ஒரு நொடி அப்படியே நின்று விட்டாள். முதல் முதலாக அவனை அங்கே தான் பார்க்க கூடாத சூழ்நிலையில் பார்த்தாள். அந்த காட்சி கண் முன்னே படமாக ஓட, உடலில் ஒரு நடுக்கம் வந்தது கண்களை இறுக மூடி திறந்தவள் அப்படியே நின்றாள்.
அவளை பின் தொடர்ந்து வந்தவன், "அங்கே மேலே டீ தூள்"... என துவங்கியவன் அவள் அப்படியே நிற்பதை கண்டு, ச்ச என தலையிலடித்து கொண்டான். உடனே “சாரி சாரிம்மா, எதுவும் வேண்டாம் நீ போ” என்றான் பதட்டதுடன்.
அவன் குரலில் இவளும் சுதாரித்து கொண்டவள், "இல்லை பரவாயில்லை நான் டீ போடறேன்" என உள்ளே நுழைய போக, அவள் கை பற்றி தடுத்தவன் “தெய்வம் சுடுகாட்டுக்கு வர கூடாது, நீ போ” என்று அவளை திருப்பி விட்டு அந்த கதவை மூடினான்.
அவன் சொன்னது எதுவும் புரியவில்லை என்றாலும் கூட அங்கிருந்து சென்றால் போதும் என்ற மனநிலையில் இருந்தவள் அலுவல் அறைக்கு வந்து விட்டாள்.
நன்றாக இழுத்து மூச்சை விட்டவள் வேலையை பார்க்க துவங்கினாள். என்ன தான் மனதை வேலையில் செலுத்த முயன்றாலும் கூட, அந்த அறையில் கண்ட நிகழ்வு தான் கண் முன்னே வந்து போனது. யாரோ எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் நீ ஏன் அதை பிடித்து கொண்டு தொங்குகிறாய் என்று மனதை அடக்க முயன்றாள். ஏனோ அழுகை முட்டிகொண்டு வந்தது. தன் கைபோருள் களவு போனது போல அவள் நெஞ்சை பாரம் அழுத்தியது அப்படியே டேபிள் மீது தலை சாய்த்து படுத்து விட்டாள்.
ஏன் என்றே தெரியாமல் மௌனமாக அவள் கண்கள் கண்ணீரை சொறிந்த வண்ணம் இருந்தது. சற்று நேரம் கழித்து மனம் கொஞ்சம் திடப்பட்டது போல தோன்றவும் நிமிர்ந்து அமர எதிரே சுவற்றில் பின்னோக்கி தலை சாய்த்து நின்று இருந்தான் வாசு. அவனை கண்டதும் அவசரமாக கண்களை துடைத்து கொண்டவள் வேலையை பார்க்க துவங்கினாள்.
கைகள் ஏனோ நடுக்கம் கொள்ள பேனா கை தவறி கீழே விழுந்தது. குனிந்து அதை எடுத்தாள். “என்னை பார்க்கவே அருவெறுப்பா இருக்குல்ல” அவன் கேள்வியில் ஒரு நொடி நின்று நிதானித்தவள், “எதுக்காக நான் அருவெறுப்பு படனும்” என்று கேட்டாள்.
கண்களை மெதுவாக திறந்தான் தீர்க்கமாக அவளை பார்த்தான் “இப்பவும் சொல்றேன் தேவா நான் யோக்கியன் இல்லை தான், இதெல்லாம் தப்புன்னு கூட அப்போ எனக்கு தெரியலை. ஆனா உன்னை பார்த்த பிறகு இன்னும் கொஞ்சம் ஒழுங்கா இருந்திருக்கலாமோன்னு தோணுது. வீசுற காத்துல பறக்கற பட்டம் மாதிரி எங்கெங்கோ சுத்திட்டு இருந்தேன். இப்போ தான் அந்த பட்டத்தோட நூல் சேர வேண்டிய கையில கிடைச்சிருக்க நூலை விட்டுடாத, என்னை விட்டுடாதடி” என்றான் இறைஞ்சுவது போல. ஏனோ சொந்தம் என நினைத்தவளை விட முடியாத பரிதவிப்பு அவனிடம். இப்போதாவது இளைப்பாற ஒரு மடி கிடைக்குமா என்ற ஏக்கம் அவன் மனதில்.
அவன் கண்ணில் அத்தனை வலி இருந்தது. காலம் கடந்து செய்த தவறுக்காக வருந்துவது புரிந்தது. ஆனால் தன்னிடம் வருந்தி என்ன ஆக போகிறது.
“நான் ஏன்”.. அவள் பேச துவங்கும் முன் வெளியே சென்று இருந்தான் வாசு.
நான் யார் அவனை பற்றி யோசிக்க. அவன் வாழ்க்கை அதை விரும்பியது போல வாழ்ந்து வந்திருக்கிறான். இடையில் வந்ததால் மட்டுமே அவளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும். அவளிடம் எதற்காக இதையெல்லாம் சொல்ல வேண்டும். அவள் இங்கே வெறும் சம்பளத்துக்கு வேலை செய்பவள் மட்டும் தானே. யார் எப்படி போனாலும் தனக்கு என்ன, எப்போதும் எல்லையோடு நிறுத்தி கொண்டால் எல்லாருக்குமே நல்லது என்று தனக்கு தானே கூறி கொண்டிருக்க, அப்போ இந்த கண்ணீருக்கு என்ன காரணம் என்று அவள் மனசாட்சி கேள்வி எழுப்பியது.
ஆம் ஈர கண்கள் சிவந்து இமைகள் தடித்து வீங்கி இருந்தது. இந்த அளவிற்கா அழுதாள். அவளுக்கே தெரியவில்லை. யாரோ ஒருவன் என்று தானே எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவன் என்ன தவறு செய்தாலும் கூட அவள் ஏன் அதற்கு தவிக்க வேண்டும். அந்த தவறு அவள் உயிரின் ஆழம் வரை சென்று ஏன் தாக்க வேண்டும். என்னுடைய பொருளை யாரோ அபகரித்து கொண்டது போல நான் ஏன் அழுது கொண்டிருக்கிறேன். கண்களை அழுந்த துடைத்து கொண்டவள் அப்படியே சூனியத்தை வெறித்து அமர்ந்து இருந்தாள்.
மாலை வரை அவள் அங்கே தனியாகத்தான் இருந்தாள். அவன் எங்கே சென்றான் என்று எந்த தகவலும் இல்லை. இரண்டு டிரைவர்கள் மட்டும் வந்து சென்றனர். மதியம் வீட்டிற்கு சென்று வந்தாள். அப்போதும் அவன் வந்திருக்கவில்லை, அவள் கொண்டு வந்த உணவும் கூட அப்படியே இருந்தது.
வேலைகளை முடித்து கொண்டு கிளம்ப எத்தனிக்க தலையில் கிடந்த காய்ந்த மல்லிப்பூ சரம் தோளில் வந்து விழுந்தது. அதை எடுத்து ஓரமாக வீசிவிட்டு கதவை பூட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
அவள் முடிவை தெளிவாக கூறிய பிறகும் கூட எதற்காக இந்த போராட்டம். அவன் என்ன செய்கிறானோ என்ன ஆனானோ என்று மனம் பதை பதைக்க வைக்கிறான், ஏன் இப்படி அவளை அலைக்கழிக்கிறான் என அவனை திட்டி கொண்டே தான் வந்திருந்தாள்.
உன் கையால் உண்ட பிறகு வெளியே உண்ண பிடிக்கவில்லை என்று கூறினானே. அவனுக்காக எடுத்து வைத்த உணவு வேறு அவளை பார்த்து முறைத்து கொண்டிருந்தது.
அவன் எப்படி போனால் எனக்கென்ன வந்தது என்று அவளால் இருக்க முடியவில்லை. அது ஏன்? அவள் கேள்விக்கு அவன் தான் பதிலா அவளுக்கு தெரியவில்லை.