• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 11, 2025
Messages
27
Chapter 11

இமைகள் இரண்டும்
பாரமாகிப் போனது.
உனைக் காண முடியாமல்,

அடிக்கடி சிமிட்டித் தனது
வேலையைச் செய்கிறதே!


வீட்டிற்கு வந்தவள் அவனை கண்டதும் அப்படியே நின்று விட்டாள். இவன் எங்கே இங்கே என்ற கேள்வியோடு நின்றவளை அவள் அளவிற்கு அதிர்ந்திடாமல் பார்த்து வைத்தான் அவன்.


வேகமாக நடந்து வந்ததில் நெஞ்சு கூடு ஏறி இறங்க, நெற்றியோரம் வழிந்த வியர்வை தாடை வழியே கழுத்தில் இறங்கி கொண்டிருந்தது. புருவங்கள் நெறிய கண்கள் சற்றே விரிந்து அங்கே அவனை எதிர்பார்க்கவில்லை என்றதை அப்பட்டமாக பறைசாற்றியது அவள் முகம். இருக்கையில் அமர்ந்து இருந்தவன் இவளை கண்டதும் ஒரு பக்கமாக திரும்பி இவளை நிதானமாக பார்த்து வைக்க, தந்தை இருக்கும்போதே இப்படி பார்க்கிறானே என்ற கலக்கத்துடன் தந்தையை பார்த்தாள்.

“என்னம்மா கடைக்கு போய்ட்டு வர்றேன்னு கற்பகத்துகிட்ட சொல்லிட்டு போய்ருக்க, சார்கிட்ட சொல்ல வேண்டாமா. பாரு நீ வேலைக்கு வரலைன்னு உன்னை தேடி இங்கேயே வந்திருக்காரு” என்றார் அப்பாவியாக.

வேலைக்கு வரலைன்னு தேடி வரலைப்பா, அவர் தேவைக்காக வந்திருக்காரு என்று நினைத்து கொண்டவள். “எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் கடைக்கு போய்ட்டு வரும்போது கம்பெனிக்கு போய் லீவு சொல்லிட்டு வரலாம்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள இவர் இங்கே வந்திருக்காரு” என்றாள் தந்தையை பார்த்து கொண்டே.

“என்னம்மா செய்யுது உடம்புக்கு” அக்கறையாக கேட்டார் அவர்.

“கொஞ்சம் சோர்வா இருக்குப்பா அவ்வளவு தான்” அவள் சொல்லி முடிக்கும் முன்னே “அவ்வளவு தான்னா வேலைக்கு வரலாமே” என்றான் வாசு அவளை கூர்ந்து பார்த்து.

“ஏதாவது அவசர வேலை இருக்குங்களா சார்” சோமு வாசுவை பார்த்து கேட்க அவனோ அவர் மகளை பார்த்தபடியே, “அவசர வேலை இல்லை அவசிய தேவை, அதுவும் எனக்கு தேவா இல்லாமல் எதுவுமே இல்லை. அந்த அளவுக்கு தேவா என்னோட இன்றியமையாத தேவை ஆகிட்டாங்க” என்றான் இருபொருள்பட.

தந்தை முன்னிலையில் என்ன பேசுகிறான் இவன் என அவனை முறைத்தவள், அப்பா என ஏதோ கூற வர, “பரவாயில்லையே வேலைக்கு போன ஒரு மாசத்திலேயே என் பொண்ணு அந்தளவுக்கு நல்லா வேலை செய்யறான்னா எனக்கு சந்தோஷம் தான்” என்றார் தந்தை.

இவங்க ரெண்டு பேரு மட்டுமே பேசிக்கறதுக்கு நான் எதுக்கு என நினைத்தவள், “டீ போடறேன்” என கூறிவிட்டு வெளியே வந்து விட்டாள்.

“சரிங்க சார் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, கிளம்பறேன்”

“இருங்க சார் டீ குடிச்சுட்டு போகலாம்”

“பரவாயில்லை சார் தேவாகிட்ட சொல்லிட்டு கிளம்பறேன்” என்றவன் வெளியே வந்து அவளை தேடினான். தேடினாலும் கிடைக்காமல் போவதற்கு அவள் வீடு ஒண்ணும் அரண்மனை அல்லவே, நேராக சமயலறைக்கு வந்தவன் அங்கே டீ போடும் சாக்கில் மேடை மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தவளை பார்த்தபடி சுவற்றில் சாய்ந்து இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றான்.

அவன் வரவை எதிர் பார்த்து நின்றாளோ என்னவோ, “என்ன வேணும் உங்களுக்கு” நேரடியாக கேட்டாள்.

“நீ தாண்டி வேணும்” அழுத்தமாக கூறினான் அவன்.

“ஒரு நைட்க்கு போதுமா, இல்லை நீங்க கூப்பிடும்போது எல்லாம் வரணுமா” இந்த வார்த்தையை கேட்க அவளுக்கு அத்தனை அசௌகரியமாக இருந்தது ஆனாலும் கூட அவனிடம் இன்று பேசியே ஆக வேண்டும் என நினைத்தே பேசினாள்.

“வாழ்நாள் முழுக்க”

“அப்படி என்கிட்ட என்ன இருக்கு, எல்லா பொண்ணுங்களையும் போலத்தான் நானும் கொஞ்ச நாள்லயே சலிச்சு போய்டுவேன்” என்றாள் இகழ்ச்சியாக.

“அது என்னோட கவலை”

“ஒரு பொண்ணை வெறும் உடம்பா மட்டும் பார்க்கறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லையா, நான் அப்படி பட்டவ இல்லை” பற்களை கடித்து -கொண்டு சொல்ல, “நானும் உன்னை அப்படி நினைச்சு கேட்கலை” என்றான் கொஞ்சம் கோவமாக.

“வேற” புருவம் உயர்த்தி அவள் கேட்டு வைக்க, ஒரு நெடுமூச்சுடன் அவள் அருகே வந்தான். அவள் சற்றே பின்னால் நகர முயல, அவளின் இருபக்கமும் கையை அணைவாக வைத்தவன் அவள் முகத்தை ஆராய்ந்தபடியே, “என்னை கல்யாணம் செஞ்சுக்கோ” என்றான்.

இது என்ன புது கதை என அவள் பார்த்து இருக்க, “இதுவரைக்கு நான் எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம் ஆனா மீதி இருக்கற என்னோட வாழ்நாளை உன்னோட வாழணும்னு நினைக்கிறேன். அதுக்காக எனக்கு உன்னோட மனசு மட்டும் போதும் அப்படி டையலாக் எல்லாம் விட மாட்டேன், உன்னோட மொத்தமும் எனக்கு வேணும். எனக்கு தெரியும் என்னோட வாழ்க்கை முறை உனக்கு பிடிக்கலைன்னு ஆனா காலம் கடந்து போச்சு நடந்ததை இனி மாத்த முடியாது. இனி அது எதுவும் நடக்காது. எனக்கு நீ வேணும்” என்றான் உறுதியாக.

அவள் அவனை வினோதமாக பார்த்து வைக்க, “யோசிச்சி சொல்லு ஆனா முடிவு நல்லதா இருக்கணும். முதல்ல வேலைக்கு வா நீ இல்லாம அந்த இடத்தில நின்னா உடம்பு நெருப்பா தகிக்குது. கொஞ்சம் நாள் பேசி பழகலாம், உனக்கு பிடிக்காதது எல்லாத்தையும் விட்டுடறேன். பிளீஸ் வாம்மா” என்றான்.

இதென்னடா கெஞ்சலை கூட கம்பீரமா கேட்டு வைக்கிறான் என்று நினைத்து கொண்டாள்.

வாசல் வரை சென்றவன் “உன் கை ருசிக்கு சாப்பிட்டு பழகிட்டேன் வெளியே சாப்பிட முடியலை, மதியம் பசியோட இருப்பேன்” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

முதல் நாள் தந்தைக்காக உதவி கேட்டு சென்ற போது எவன் செத்தா எனக்கென்ன என்று விடடேற்றியாக பேசினான், பிறகு தானே ஓடி வந்து நின்று உதவி செய்தான். பணம் கொடுத்ததை திருப்பி கொடுக்க வேலையும் கொடுத்தான். வீட்டு உணவின் ருசிக்கு ஏங்கி அவளிடம் சமைத்து தறுகிறாயா என்றான்., இப்போது திருமணம் செய்து கொள் என்று கேட்கிறான். இதெல்லாம் எப்படி ஒன்றுடன் ஒன்று ஒத்து போகும். முரண்பாடுகள் கொண்ட மொத்த உருவமாக இருக்கும் இவனை எதற்காக நான் பொறுத்து போகிறேன். வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம் இது தானே அவள். ஆனால் இவன் விஷயத்தில் முதலில் ஒரு முடிவு எடுப்பதும் பிறகு அதை மாற்றிக்கொள்வதும் என்ன விதம். புரியாமல் அவள் விழித்து நிற்க, அவன் சாப்பாடு கேட்டது வேறு நினைவில் வந்து போனது.

முந்தானையை இழுத்து சொருகிக்கொண்டு வேகமாக சமைக்க துவங்கினாள். சமைத்து முடித்தவள் அதை எடுத்து கொண்டு அப்பாவிடம் சென்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீதியில் இறங்கி நடந்தாள்.

அவளிடம் மீதம் இருந்த அந்த ஒற்றை நகையை விற்கத்தான் கடைக்கு சென்றாள். அது அவள் அம்மாவின் தாலி, அதை விற்க இதுவரை மனம் வாராததால் அப்படியே வைத்திருந்தாள். ஆனால் இப்போது அதற்கு அவசியம் வந்திருந்தது. அம்மா கோபிக்க மாட்டாள் என்று மனதோடு சொல்லிக்கொண்டவள் கடைக்கு சென்றாள். ஆனால் நகை அளவை பார்த்து முகம் தெரியாத ஆளுக்கு பணம் கொடுக்க முடியாது என்று கூறி விட்டான் அடகு கடைக்காரன். என்ன செய்வது கற்பகத்தை அழைத்து கொண்டு வந்து தான் விற்க வேண்டும் என நினைத்தபடியே தான் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

இந்த நகையை விற்றால் எப்படியாவது அவன் கடனை அடைத்து விடலாம் தான். ஆனால் அப்பாவுக்கு தெரியாமல் விற்க வேண்டும் தெரிந்தால் வருந்துவார். ஆனால் அவன் இப்படி கேட்ட பிறகு வேறு வழியும் இருக்கவில்லை அவளுக்கு.

கேட்டை தாண்டி கொண்டு உள்ளே செல்ல அங்கே வேலை நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. என்ன நடந்தது என்று பார்க்க, அவள் அமரும் இருக்கையில் அவன் விழி மூடி அமர்ந்து இருந்தான். இவள் வரவை உணர்ந்தோ என்னவோ விழி திறந்தான்.

உணவு பாத்திரத்தை டேபிள் மீது வைத்து விட்டு யோசனையோடு புருவம் சுருக்கி பார்த்தாள். "எல்லாரும் ஊருக்கு போறாங்க ஒரு மாசம் கழிச்சு தான் வருவாங்க. அதான் இன்னைக்கு பர்சேஸ் போய்ருக்காங்க. ஊரை விட்டு வந்து இங்கே வேலை செய்யறாங்க லீவுக்கு போகும்போது கெத்தா போகணும்னு நினைப்பாங்க. பிள்ளைக்குட்டி சொந்த பந்தம் எல்லாத்துக்கும் துணிமணி தேவையானது எல்லாம் வாங்கிட்டு கிளம்புவாங்க" என்றான் விளக்கமாக.

அடேங்கப்பா ஒற்றை புருவ சுருக்களுக்கு இவ்வளவு விளக்கமா, அதுவும் அவள் வாய் விட்டு கேட்காமலே என நினைத்து கொண்டவள் அதை காட்டிக்கொள்ளாமல் “நான் எதுவும் கேட்கலையே” என்றாள்.

“நீ இதை கேட்பேன்னு தோனுச்சி” என்றான் அவன்.

“அதான் வேலை இல்லையே அப்பறம் எதுக்கு என்னை வர சொல்றீங்க, சாப்பிட்டு டிபன் பாக்ஸ் கொடுத்தா எடுத்துட்டு போய்விடுவேன்” என்றாள்.

“அவங்களுக்கு வேலை இல்லை ஆனா உனக்கு வேலை இருக்கு”

“இயர் என்டிங் அக்கவுண்ட்ஸ் பார்க்கணும், ரெண்டு பெரும் சேர்ந்து பார்த்தா சீக்கிரம் முடிஞ்சிடும்” என்றான்.

“ஒரே நாள்லயா”

“ஒரு மாசத்தில”

“அதெப்படி யாரும் இல்லாத இடத்தில நான்” அவள் தொடர்ந்து பேச உணவு பையை எடுத்தவன் “ரொம்ப பசிக்குது சாப்பிட்டு வந்து பேசறேன்” என்று அங்கிருந்து சென்று விட்டான்.

ஒரு ஆழ்ந்த மூச்சுடன் அந்த இருக்கையில் அமர சென்றவள் என்ன நினைத்தாலோ ஒரு நொடி நின்று பிறகு அமர்ந்து வேலையை பார்க்கலானாள்.

கைகள் வேலையை செய்தாலும், அவள் வரும்போது கண்மூடி அவன் அமர்ந்து இருந்த கோலம் என்னவோ நெஞ்சை பிசைந்தது. தலையை பின்னோக்கி சாய்த்து கண்கள் மூடி இருந்தான் எங்கோ ஓடி கலைத்த சோர்வு அவன் முகத்தில், நிம்மதியாக இளைப்பாற இடமில்லை என்பது போல ஒரு வெறுமை. அது அவளை பார்க்கும் வரை தான் அதன் பிறகு வந்து விட்டாயா என்பது போன்ற ஒரு ஏக்கம் அவன் கண்ணில். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் முடிந்தவரை தன்னை சமன் செய்து கொள்ள முயல்கிறான் என்று தான் அவளுக்கு அப்போது தோன்றியது. எதற்காக இத்தனை பாடுபடுகிறான். அவளுக்கு தெரியவில்லை சரி ஆனால் அவனுக்குமே தெரியவில்லையே. ஏதோ அலைப்புறுதல் இருந்து கொண்டே இருக்கிறது. அது அவளை காணும்போது மட்டும் சூரியன் விழுங்கிய பனி துளியாக காணாமல் போகிறது. பாற்கடலை கடைந்து அமுதம் உண்டது போல் அவள் கொடுத்த உணவை உண்டு மோட்சம் அடைந்தான்.

அவள் வேலை செய்து கொண்டிருக்க, உள்ளே வந்தவன் ஒரு சாவியை எடுத்து அவள் முன்னே வைத்தான். “இது இந்த ரூம் சாவி என்கிட்ட ஒண்ணு இருக்கு. உனக்கு நேரம் ஆனா நீ கிளம்பு நான் வெளியே போய்ட்டு வரேன்” என்றவன் வெளியே ஒரு எட்டு வைத்து விட்டு மீண்டும் திரும்பி “தனியா இருப்ப தானே” என்றான்.

ஏன் அவள் என்ன குழந்தையா தனியாக இருக்க பயப்பட, தலையை ஆட்டினாள். அவன் கிளம்ப “ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினாள்.

என்னவென அவன் பார்க்க “நான் இங்கே திரும்ப வந்தது என்னோட கடனை அடைக்கறதுக்காக மட்டும் தான். மத்தபடி நீங்க சொன்ன மாதிரி பேசி பழகி எனக்கு அதெல்லாம் சரி வராது. நீங்களும் அதை மறந்திடுங்க” என்றாள் தெளிவாக.

“உனக்கு சரி வராது நீ சொல்லிட்ட, அதுக்காக நான் மறக்கணும்னு அவசியம் இல்லையே. நீ வேலையை பாரு உனக்கு பிடிக்காதது எதுவும் இங்கே நடக்காது” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.

செல்லும் அவன் முதுகையே பார்த்து இருந்தவளுக்கு அவளறியாமலே ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது.

மதியம் நேரம் வெயிலை பொருட்படுத்தாமல் கடற்கரை ஓரம் இருந்த ஒரு மரத்தின் அடியில் படுத்து கிடந்தான் வாசு. அவன் இன்னும் கொஞ்சம் சரியாக இருந்திருக்கலாமோ. ஒற்றை வார்த்தை அவள் கேட்ட ஒற்றை வார்த்தையில் உயிர் வலியை உணர்கிறான். அவனுடன் பழகிய பெண்களை போல அவளையும் நின

ஒற்றை வார்த்தை கூட தவறாக யாரும் தன்னை பேசிவிட கூடாது என்பதில் உறுதியாக இருப்பவள் எப்படி தவறுகளுடனே வாழும் ஒருவனை ஏற்றுக்கொள்வாள்.

ஆனால் இது நாள் வரையில் அவனுக்கு அவன் செயல்கள் எதுவுமே தவறாக தெரிந்தது இல்லை. வயிற்று பசிக்கு உண்டேன் என்பது போல உடல் பசிக்கு கிடைத்ததை எடுத்து கொண்டேன் என்று தான் வாழ்ந்து வந்தான். அது இப்போது எத்தனை பெரிய தவறு என்று அவனுக்கு புரிய துவங்கி இருந்தது.

ஆனால் காலம் கடந்த ஞானம் ஒரு போதும் பலன் தராதே

இப்போது கூட அவள் அருகே தடுமாறும் உணர்வுகளை தடுக்க முடியாமல் தான் இப்படி ஓடி வந்திருக்கிறான். தனிமை அவனை என்ன செய்ய வைக்கும் என்று அவனுக்கே தெரியாது. அவள் இருந்த அறையிலேயே மதி மயங்கி கிறங்கி கிடப்பவன் ஆளில்லாத இடத்தில் அவளிடம் எப்படி விலகி இருப்பான். ஏற்கனவே அவன் குணம் நடவடிக்கை செயல் என்று எதிலும் அவள் கொண்டிருப்பது அதிருப்தி மட்டும் தானே என்ன செய்வான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top