• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
வைகையின் பிறப்பிடம்.

பொன்னையா வீட்டிலிருந்து உத்தமபாளையம் கிராமச்சாடி வந்து விட்டான். தனது பழைய சட்டை பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து கால் செய்ய…

என்னடா வந்துட்டியா ?

என்றான் பிரபு.

அங்கேயே இரு பத்து நிமிஷத்துல வந்துருவேன். ரொம்ப நேரமாக நின்று கொண்டிருந்தான் பொன்னையா.

எதிரே.. கரும்பு கட்டுகள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டு இருக்க பக்கத்தில் ஒருவர் பீடியை பற்ற வைத்துக் கொண்டு புகையை மூக்கின் வழி விட்டுக் கொண்டிருந்தார்.

செல்போனை எடுத்து முகநூல் பக்கம் நுழைந்தான். ஒருத்தி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உடன் அழகான புகைப்படத்தை பதிவிட்டு இருக்க ஒருவன் கீழே “ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” பதிவை போட்டிருந்தான்.

அதற்கு தேங்க்யூ….. அவளுடைய

மறு பதிலை பார்த்தான்.

பிரபு இரு சக்கர வாகனத்தில் நீல நிற சட்டை அதற்கு தகுந்தாற் போல் வேட்டி பக்கத்தில் வந்து வண்டியை நிறுத்தினான்.

மணி “பதினொன்று”

பொன்னையா பின்னால் அமர்ந்தான்.

என்ன சரக்கு போட்டு போகலாம் டா! என்றான் பிரபு.

“மேல கடை இருக்கு அங்க போயி பார்த்துக்கலாமா”

பெட்ரோல் போட வண்டியை வளைத்தான். முன்நூறு ரூபாய்க்கு போட்டு சின்னமனூர் ஹைவேஸ் போகும் பாதையில் எ.டி.ம் இருக்கும் இடத்தில் வண்டியை போய் நிறுத்தினான்.

மலைகளுக்கு இடையே டவர் எல்லாம் கிடைக்காது. சும்மா செல்ல நோண்டிக்கிட்டு வரக்கூடாது. பொன்னையாவை பார்த்து முக சுழிப்புடன் சொல்லிவிட்டான். இருசக்கன வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதே..

ஒருவர் வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். சாலையில் சென்றவர்களும் பதறி அடித்துப் போய் ஓடினார்கள். லேசான காயம் தான் உயிர் பிழைத்தார்கள் என்று கூட்டத்தில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். எதிரே வந்த டோம்போ வண்டி குறுக்கே வந்து விட்டான். பொறுமை இழந்து கூட்டம் விலகி சென்றது. இருசக்கர வாகனத்தை சாலையை நோக்கி வேகமாக ஓட்டினான். இடதுபுறம் ஓடைப்பட்டி நாலு கிலோ மீட்டர்.

ஆனைமலையான் பட்டி இரண்டு கிலோமீட்டர். பச்சை நிற எழுதப்பட்டிருந்தது. இருபுறங்களும் வாழை மரங்களும் திராட்சை குடிகளும் செந்நிற மண்ணில் செழித்து வளர்ந்திருந்தது. மேகமலையை எப்படியாவது ஒரு நாள் நான் பார்த்து விட முடியாதா! “அது எப்படி இருக்கும்”. பொன்னையாவின் மனதில் உதித்துக் கொண்டே இருந்தது. தீராத கனவுகளுடன் சென்று கொண்டிருக்கும் போது தான் செக் போஸ்ட் வந்தது.

பெரிய முறுக்கு மீசை வைத்த ஒருவர் வண்டியை நிப்பாட்டினார். பக்கத்தில் வந்து வண்டியை கூர்ந்து கவனித்தார் . “வண்டியில ஒன்னும் இல்ல” சார்…

போயிட்டு அஞ்சு மணிக்குள்ள வந்துருங்க… என்றார்

கொஞ்சம் தூரம் சென்ற பின் சாலை வளைவும் நெளியுமாக சென்றது. அடர்ந்த மரங்கள், அழகிய பூக்கள் எங்கிருந்தோ வேற்று கிரகணத்துக்கு வந்தது மாதிரி உணர்ந்தான் பொன்னையா.

கருமையான கருமேகங்கள் திரண்டு மலை முகடுகளில் தவழ்ந்து கிடந்தன. தனது சட்டை பையில் இருந்து செல்போனை எடுத்து வளைந்து

“நெளிந்து போகும் பாதை மங்கை மேகூந்தலோ”….

பாடலை போட்டான் பொன்னையா. பூரம் செல்ல செல்ல உயரமான மலை ப்பகுதியில் தேயிலை செடிகள் கண்ணில் உலாவின. பிரபு தேயிலைத் தோட்ட எக்ஸ்டேட்லே வேலை செய்தவன். அவனுக்கு இது எல்லாம் அத்துபடி. பிரவீன் அப்பா ஹைவேஸ் அணை கட்டும் போது “ஒன்னா ரூபா” சம்பளத்துக்கு வேலை பார்த்தவர். உன்னுடைய உறவுக்காரர்கள் எல்லாம் இங்கே தான் தங்கி வேலை செய்கிறார்கள். பொன்னையாவோ தனது வாழ்நாளில் ஒருமுறையாவது தேயிலைத் தோட்ட எஸ்டேட் களை பார்க்க வேண்டும் என்பது அவனுடைய மிகப்பெரிய கனவு.

இருவரையும் முந்தி அடித்துக்கொண்டு ஒரு பெரிய ட்ராவல் பஸ் கடந்தது. நேற்று பருவமடைந்த அழகானபெண்கள் இருந்தார்கள். கேரளாவில் இருந்து சென்று கொண்டிருக்கிறது.

அதில் ஒருத்தியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே வந்தான் பொன்னையா. அவளது கூந்தல் வளைந்து செல்லும் சாலையைப் போல மேடும் பள்ளமாகவும் இருந்தது.

பெரிய வளைவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி.. உயரமான பாலத்தின் மேல் என்று போட்டோ எடுத்தார்கள் . பெரிய மலையின் மேல் நின்று பார்க்கும் பொழுது அடுக்குமாடி குடியிருப்புகள் அணு துகள்கள் போல காட்சியளித்தன. மேலே செல்ல செல்ல சாலைகள் குறுகலாகவும் தூரத்திலும் அடர்ந்த செடிகள்.

பிரபுவை பார்த்து… “ரொம்ப மோசமா இருக்கு” என்றான் பொன்னையா.

டேய்….!

இதையெல்லாம் சரி பண்றதுக்கு சில ரூல்ஸ் இருக்குது தெரியுமா?

ஆலமரம் போல் கிளைகளை பரப்பிக் கொண்டிருந்த மரத்தின் அடியில் குரங்குகள் எங்களை பார்த்தவாறு நின்றது.

அது எங்கள் இருவரையும் நோக்கி வர வண்டியில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து நீட்டினான் பொன்னையா.

விறு விறு என பிடுங்கிக் கொண்டு ஓடியது…

சின்னமனூர் ஹைவேஸ் வந்தடைந்தோம்.

மிகப்பெரிய அணை வயது முதிர்ந்த கிழவியின் முகத்தில் விழுந்த கோடுகளை போல அணை வற்றி எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது போல தோன்றியது.

பெரும் இரைச்சல் சத்தத்துடன் பேருந்து இரவங்கலார் நோக்கி இருவரையும் முந்தி அடித்துக்கொண்டு வேகமாக பின்னால் வந்தது. இருவரும் மணலாறு சென்றடைந்தோம். உயர்ந்த மலைகளுக்கு இடையே தேயிலை செடிகள் மீது பனித்துளிகள் படர்ந்து இருந்தன அவற்றின் அருகில் சென்று பொன்னையாவும் ,பிரபும் விதவிதமான ஸ்டைலுகளில் போட்டோ எடுத்தனர்.

மெல்லிய இலைகளின் நுனிக்கொழுந்தே தனது கைகளால் வருடி கொண்டிருந்தான் பொன்னையா.

தேயிலை எஸ்டேட் அருகில் வானத்திலிருந்து மழையினை பெய்து வித்த வானம் போலவே மணலாறு பகுதியில் அடர் நீல நிறமாக தண்ணீர் இருந்தது. பொன்னையா வெகு நேரமாக அந்த தண்ணீரையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். சாலையில் சில இடங்களில் யானைகளின் எச்சங்கள் காணக் கிடந்தன.

மணலாறில் ஒரே ஒரு டீக்கடை மட்டும் இருந்தது. உள்ளே சென்று சாப்பாடு இருக்குதா ன்னு கேட்டான் பிரபு.

கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ரெடி பண்ணுறேன் கடைக்காரன் சொல்ல பிரபு வெளியே வந்தான்.

சற்று விரைவில் நின்று கொண்டிருந்த பொன்னையாவை பார்த்து…

டேய்…

அந்த தெரியுது பாத்தியா!

அதுதான்

“வெள்ளிமலை”

இதுக்கு மேல போனோம்னா “மகாராஜா மெட்டு”

அதுக்கடுத்தாப்புல ஊரு இல்ல..

அப்படியே தேக்கடி போயி சேந்துரும் மலை.

இப்படியே தேயிலை எஸ்டேட் பக்கம் போனேன்னா!

ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல..

“ஆன பார்க்கலாம்”

கண்டிப்பா ஏதாவது ஒரு இடத்துல நின்னுகிட்டு இருக்கும்.

கீழே எல்லாம் வருமான்னு கேட்டான் பொன்னையா.

இப்ப வராதுடா!

நைட்டு டைம் தான் வரும்.

“இந்த மனுசன் இருக்கானே மனுஷன்”

“உலகத்திலேயே கேடுகெட்ட புத்தியே மனுசனுக்கு மட்டும் தான் இருக்கு”

விவசாயத்தை அழிக்கிறான்.

விலை நிலங்களை அழிக்கிறான்.

“வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க சொன்னா பூச்செடிகளை வளர்த்துட்டு திரிகிறங்கே” பாவம் யானைகள் என்ன பண்ணும்

ரோட்டுக்கு தான் வரும்.

நாங்கள் இரு மலைகளுக்கு நடுவே நின்று கொண்டிருந்தோம். உயரத்திலிருந்து விழும் பச்சை நிற ங்களின் மனம் எங்கள் நாசிகளில் நிறைந்தது.

அங்கிருந்து விழும் அவற்றின் தன்மையை உணர முடிந்தது.

நாங்கள் மேல் நோக்கி சென்றோம்.

கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தாண்டி விட்டோம்.

அடர்ந்த மரங்களுக்கு இடையில் மிகப்பெரிய உருவம் தெரிந்தது. தனது செல்போனை எடுத்து படம்பிடித்தான் பொன்னையா.

வெறும் நான்காயிரம் ரூபாய்க்கு வாங்கின செல்போனில் படம் தெளிவாக இல்லை.

பொன்னையா நெருங்கி சென்றான். மரக்கிளைகளை ஒடித்து தனது தும்பிக்கையால் வாயினில் நுழைத்து கொண்டிருந்தது.

இவ்வளவு பெரிய உயிரினத்தை

மனிதன் எவ்வளவு கேவலமான செயல்களில் ஈடுபடுத்திகிறான் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

அதன் கருமையான கருவிழிகள் எங்களை நோக்கி பாய்ந்தன. சுருள் சுருளான தோல்கள். பட்டாம்பூச்சி றெக்கை போல அதன் காதுகள்.

உலகத்தில் உள்ள அனைத்தையும் மறந்து விட்டு யானையவே பார்த்துக் கொண்டிருந்தான். என் இதயம் பேச தொடங்கியது.

கரு மேங்கள் சூழ்ந்தன.

மழை வர மாதிரி இருந்தது.

மழை பெய்யவில்லை.

பொன்னையா பேச தொடங்கினான்.அவனால் பேச முடியவில்லை.அவன்

வாழ்வின் பெரிய ஆனந்தம்.

யானை ..பக்கத்தில் இருக்கின்ற பெரிய மரத்தடியில் நின்று மரக்கிளையை உடைத்துக் கொண்டிருந்தது.

தேக்கடி மலையின் தொடர்ச்சி இந்த மலை தான். மேகமலை வைகையின் பிறப்பிடம்.சுருளி அருவி இந்த மலையில் இருந்து தான் உருவாகிறது.

பிரபு கிழே இருந்து டேய்.. வாடான்னு கூப்பிட்டா ன்.

அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு..

மேலே பார்த்தான் பத்து யானைகள் நின்று கொண்டிருந்தது.



கோம்பை மா.மணிகண்டன்.

தேனி.

செல்
:8883157402.
 
Top