New member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 5
- Thread Author
- #1
" டேய் டேய் தம்பி கார்த்தி நில்லு டா " என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் மகன் கார்த்தியின் பின்னால் ஓடினாள் ராசாத்தி....
அவளது பேச்சு எதையும் காதில் வாங்காமல் விறு விறு என முன்னேறிக் கொண்டிருந்தான் கார்த்தி.
தன் தாய் எத்தனை தூரம் அழைத்தும் அவன் திரும்பி பார்க்கவில்லை, தாயை போல அவனது கண்களும் கண்ணீரை தாரைதாரையாய் இரைத்துக் கொண்டிருந்தது அதை தனது கை கொண்டு துடைக்கக்கூட மறந்தவன் அப்படியே ஒரு பொம்மை போல நடந்தான்.
அவன் சட்டையில் மேலிரண்டு பட்டன்கள் அருந்து எங்கேயோ விழுந்திருந்தது, சட்டை பையும் கிழிந்திருந்தது, முகத்திலும் லேசான காயங்களும் இருந்தது, அதை பார்க்கும் பொழுது அவன் யாரிடமோ மல்லுக்கட்டி வந்திருக்கிறான் என்பது நன்றாக தெரிந்தது...
வீட்டை விட்டு வந்தவன் ஊரையும் கடந்திருந்தான் ஆனால் இப்போது அவனுக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை அதனால் அந்த ஊரின் எல்லை முடிவில் நின்று வானத்தை விரக்தியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் அப்படி நின்று பார்க்க பார்க்க அவனது கண்கள் ஆறாக இன்னும் ஒழுகியது.
யார் இந்த கார்த்தி???
எதற்காக இவன் இப்படி வந்து நிற்கிறான்???
அவன் தாய் அவன் பின்னாலேயே அழுது கொண்டு வந்ததற்கு காரணம் என்ன???
குட்டியா ஒரு பிளாஷ்பாக் .....
கார்த்தி 20 வயது நிரம்பிய இளைஞன் அப்போதுதான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்து இருந்தான் .
அவனது தாய் ராசாத்தி அருகில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளி ராசாத்தியின் கணவர் கார்த்திக்கு ஐந்து வயது இருக்கும் போது ஒரு விபத்தில் உயிரிழந்தார். அதிலிருந்து தனி ஒரு ஆளாக தனது குழந்தையை யாருடைய ஆதரவும் இன்றி ராசாத்தி வளர்த்து வந்தாள்.
ராசாத்தியின் கணவர் முன் கோபி என்பதால் அவளுக்கு ஆதரவாக யாரும் இருக்கவில்லை, ராசாத்திக்கு வயதான தாய் மட்டுமே உடன் பிறந்தோர் என்று யாரும் இல்லை கணவன் வழியில் அவனின் முன் கோபத்தால் ஆதரவு என்று எவரும் இல்லை....
இப்படி ஒரு இளம் விதவை இருந்தால் ஊர் வாயிற்கு சொல்லவா வேண்டும் அவள் யாரோடு பேசினாலும் அவளுக்கு பெயர் வேசி தான், தற்செயலாக பார்த்தாலும் அவளுக்கு பெயர் வேசி தான் அப்படித்தான் உண்மை என்ன என்பதை பற்றி யோசிக்காமல் அவரவர் வாய்க்கு வந்தபடி அவரவர் எண்ணம் போல் ராசாத்தி பற்றி அவதூறு பேசியது.
அப்படி யாரோ ஒருவன் தன் தாயைப் பற்றி பேச அவனோடு மல்லு கட்டினான் கார்த்தி, அது கைகலப்பாக மாற கார்த்தி அவனை தாக்கவும் எதிரில் இருந்தவன் கார்த்தியை தாக்கவுமாக இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்...
அப்போது ராசாத்தி பற்றி அவதூறு பேசியவன்,
" இப்போ நீ வீட்டுக்கு போய் பாருல உங்க ஆத்தா இன்னொருத்தன் கூட படுத்து தான் கிடக்கா சந்தேகம் இருந்தா நீயே நேர்ல போய் பாரு என்று வாய் துடுக்காக பேச அவனிடம் மீண்டும் மல்லு கட்டிவிட்டு அங்கிருந்து வீடு திரும்பியிருந்தான் கார்த்தி
அவன் வந்த நேரம் அவனது வீட்டில் இருந்து ஒரு தடித்த ஆள் வெளியே வர அவனுக்கு சிரிச்ச முகமாய் விடை கொடுத்துக் கொண்டிருந்தாள் ராசாத்தி.
ஏற்கனவே கோவத்தின் உச்சியில் இருந்த கார்த்தி இதை பார்க்கவும் இன்னும் கோபம் கொண்டு ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று இருந்தான். அந்த ஆளுக்கு விடை கொடுத்த ராசாத்தி தன் மகனை பார்க்கவும் இன் முகத்தோடு வரவேற்க, அவனது தோற்றத்தை கண்டதும் திகைத்து போனாள்,
" ஐயா கார்த்தி என்னடா ஆச்சு ஏன் இப்படி வந்து இருக்க என்ன நடந்தது " பதட்டத்தோடும் தன் மகனின் மீது இருந்த பாசத்தோடும் கேட்டாள் ராசாத்தி
ஊர் பேசியதும் எவனோ ஒருவன் சொல்லியதும் அதற்கு ஏற்றார் போல் தன் வீட்டிலிருந்து ஒருவன் வெளியேறியதும் அவனது சிந்தை முழுவதையும் ஆட்கொண்டிருக்க, கார்த்தி தனது தாயின் கையை தட்டி விட்டு வீட்டின் உள்ளே சென்றான்.
அவனின் பின்னால் ஓடிய ராசாத்தி என்ன ஏது என்று அவனிடம் விவரம் கேட்க அவன் அவளை அருவருப்பாக பார்ப்பதைப் போல் பார்த்தான் அவனது இந்தப் பார்வையும், அதற்கான அர்த்தமும் புரியாமல் ராசாத்தி அவனை எதிர் நோக்க,
" ஊர்ல சொல்றதெல்லாம் உண்மையாக்கிட்ட இல்ல இனிமேல் உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன் " என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான் கார்த்தி.
சொல்லின் அர்த்தம் புரியாமல் சிறிது நேரம் யோசித்தவளுக்கு அவன் கூறிய சொல்லின் அர்த்தம் விளங்கிய போது தன் ஈரகுலையை உயிரோடு அறுத்து எடுப்பதை போல் உணர்ந்தாள், உலகம் சுழற்சியை நிறுத்தியதை போல் உணர்ந்தவள் அப்படியே உறைந்து நிற்க அவளைக் கடந்து வெளியே சென்றான் கார்த்தி.
மகன் செல்வதில் சுயத்திற்கு வந்து அவனின் பின்னாலேயே ஓடி வர அவளது எந்த சொல்லையும் காது கொடுத்து கார்த்தி கேட்கவில்லை....
தனக்கான ஆதரவாக இருந்த ஒற்றை உயிரும் இன்று இப்படி பேசிய பின்பு தனது ஓட்டு மொத்த வாழ்நாளையும் வெறுத்திருந்தாள் ராசாத்தி.
தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு வீட்டின் உள்ளே நுழைந்தவள் தனது சேலையை எடுத்து தூக்க மாட்டிக்கொண்டாள்,
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் கார்த்திக்கு ஓடிவந்து தகவல் சொல்ல கார்த்தி இப்போது மீண்டும் வீட்டை நோக்கி ஓடி வந்தான், கதவை உடைத்து தன் தாயை தூக்கில் இருந்து இறக்கினான் அவள் மூர்சையாகி இருந்தாள் உடலெல்லாம் சில்லிட்டு போனது...
தன் தாயை அப்படி கண்டவுடன் அவனுக்கு இருந்த கோவம் எல்லாம் எங்கோ காணாமல் போயிருந்தது, சற்று முன் வீட்டிற்கு வந்த அந்த தடித்த ஆள் இப்போது மீண்டும் திரும்பி வந்து இருந்தார்,
அவரது கையில் வெற்றிலை பாக்கும் திருமண பத்திரிக்கையும் இருந்தது,
அவன் யார் என்று விசாரிக்க அப்போது தான் தெரிந்தது, ராசாத்திக்கு தூரத்து உறவு அண்ணன் முறையாம் கார்த்திக்கு மாமன் முறை.
அவர் தனது மகன் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க வந்திருந்தார் கல்யாண மாப்பிளைக்கு கார்த்தி மைத்துனன் முறை என்பதால் பத்திரிகை வைக்கும் பொழுது அவனுக்கு சுருள் வைப்பது கிராமத்து நடைமுறை அதை மறந்து அவர் வந்திருந்தார் ஆனால் கிராமத்தில் அது ஒரு உரிமை என்பதால் அந்த உரிமையை ராசாத்தி விட்டுக் கொடுக்கவில்லை தனது மகனுக்கு சுருள் வைக்க வேண்டும் என்றவள் கேட்டுக் கொண்டதற்காக,
வெற்றிலை பாக்கு வாங்க அந்த தடித்த ஆள் கடைக்கு சென்றார்.
அவரை தான் தவறாக எண்ணி கார்த்தி பேச நிலைமை தலைகீழாக மாறிப் போனது ஆத்திரத்தில் தான் விட்ட வார்த்தைகளை எண்ணி கார்த்தி அலறினான் ஆனால் அதனால் உபயோகம் ஏதேனும் உண்டா??
" ஐயோ அம்மா நான் தெரியாம பேசிட்டேன்மா என்ன விட்டுட்டு போயிடாத மா....
நீ என்னை வளர்த்தும் நான் இப்படி அறிவில்லாம போயிட்டேனே.... " அவனிடம் கதறல்,
" எவன் எவனோ என்னென்னமோ பேசுறதெல்லாம் கடந்து கடந்து வந்தேன் இன்னைக்கு கூட உன்ன ஒருத்தன் தப்பா பேசினான்னு தான அவன் கூட சண்டை போட்டேன், அவன் கூட அடிச்சு மல்லு கட்டிட்டு அவன் சொன்ன ஒரு வார்த்தையை நானே நம்பிட்டேனே..... "
" நானே உன்னை தப்பா நினைச்சு உன் உயிரையும் குடிச்சுட்டேனே.... "
" அம்மா என்னை பாரும்மா,
எனக்கு உன்ன விட்டா யார் இருக்காங்க எனக்கு உன்ன தவிர வேற எதுவும் தெரியாதே.... எழுந்துரு மா"
" அம்மா வீட்டை விட்டு வெளியே போன எனக்கு ஊரு எல்லையை தாண்டுனதுக்கு அப்புறம் எங்க போகனும்னு தெரியலையே மா இப்படி இருக்கிற என்னை விட்டுட்டு உனக்கு போறதுக்கு எப்படி மா மனசு வந்துச்சு... என்ன விட்டுட்டு போகாதம்மா திரும்ப வந்துடுமா நான் யார் பேச்சையும் காதுல வாங்க மாட்டேன்மா,
யாரு என்ன சொன்னாலும் அதை கணக்குல எடுத்துக்க மாட்டேன் மா,"
" அடுத்தவங்களுக்கு என்னடா தெரியும் நம்மளை பத்தின்னு நீ அடிக்கடி சொல்லி சொல்லி என்னை வளர்த்தயே ம்மா இத்தனை நாளும் அப்படி இருந்த நான் ஏதோ ஒரு இடத்துல சரிக்கிட்டேனே, ஆத்திரத்தில அறிவை இழந்துட்டேனே ம்மா அதனால ஈடு செய்ய முடியாத உன்னை நான் இழந்துட்டேனே என்று அந்த இருபது வயது இளைஞன் கதற ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது....
அவனுக்கென்று ஆறுதல் சொல்லவோ அவனது நிலையை புரிந்து கொள்ளவோ யாரும் இல்லை அந்த ஊர் பேச்சை கேட்டு தான் அவன் அவனது தாயை இழந்து தவிக்கிறான் அதே ஊர் இன்று மாற்றிப் பேசுகிறது,
" சண்டாள பாவிகளா நல்லா இருந்த ஒரு பிள்ளைய மாத்தி மாத்தி பேசி இப்படி அவளோட உயிரை எடுத்துட்டீங்களே " என்று ஒரு கிழவி பேச
" தான் சொந்த மகனோட மனசுலையே விஷத்தை விதைச்சு விட்டீங்களே டா அந்த விஷம் இன்னைக்கு ஒரு உயிரை குடிச்சிருச்சே" என்று இன்னொரு கிழவன் பேசினான்..
இப்படியாக இப்போதும் தன் பங்கிற்கு ஊர் வாய் மட்டும் பேசியது...
ஊர் தன் தாய் உயிரோடு இருக்கும்போது ஒரு மாதிரியும் அவள் இறந்த பின்பு வேறு மாதிரியும் பேசியது கார்த்தியின் காதில் விழுந்தது...
இப்படி மாறி மாறி பேசும் இந்த ஊர் வாயை வைத்து தன் தாயை இப்படி தொலைத்து விட்டேனே என்று எண்ணி கதறி அழுத கார்த்தி,
தன் தவறை உணர்ந்து தாயின் கால்களை இறுக பற்றி கொண்டு அழுதான்... அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தி கதறியவன் தன் தாயின் மார்பில் சாய்ந்து அழுக அவளது இதயத்துடிப்பு மெல்லமாய் அவனுக்கு கேட்டது... தனது தாயின் உயிர் இன்னும் அடங்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட கார்த்தி உடனடியாக ராசாத்தியை தூக்கி தோழில் கிடத்திக்கொண்டு வெளியே ஓடினான்...
தனது ஊரில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று ஓரளவிற்கு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் வர அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்து ஆம்புலன்ஸ் வழியாக அனுப்பி வைத்தார்கள்
ஆம்புலன்ஸில் அமர்ந்த கார்த்தி தன் தாயின் கையை பற்றி கொண்டு அம்மா மன்னிச்சுடுமா இனிமேல் இந்த ஊர் வாய் என்ன பேசினாலும் அதை நான் கண்டுக்க மாட்டேன் கவனத்திக்கு கொண்டு போக மாட்டேன்.
ஊர்வாய் பேசுறதுக்கு எல்லாம் காது கொடுத்தா நாம வாழ முடியாது பா என்று தன் தாய் அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தையை தன் சிந்தையில் கொண்டு வந்து அது எத்தனை உண்மை என்பதை உணர்ந்து கண்ணீர் வடித்தான் கார்த்தி ......
கதை முற்றும்......
ஊர்வாய் பேசும் வார்த்தை எல்லாம் உண்மை என்று நினைத்தும், அவர்களின் வார்த்தைக்கு செவியை கொடுத்தும் நமது உயிருக்கு உயிரான உறவுகளை இழந்து விடாதீர்கள். வாழ்க்கை கார்த்திக்கு கொடுத்தது போல் இன்னொரு வாய்ப்பு எல்லாருக்கும் கொடுத்து விடாது!!!!
அன்புடன்.......,
மாரி மதி