• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 5, 2024
Messages
3
உனது புன்னகை போதுமடி…

1000342620.jpg

“சுபா மா” என்று அழைத்தபடியே வீட்டிற்குள் வந்தார் அந்த அறுபதைக் கடந்த மனிதர் வெங்கடேசன். அழைப்பிலேயே தன் தந்தை தான் என்று அறிந்தவள் முகமலர சமயலறையில் இருந்து வெளியே வந்தவள்,

“அப்பா வாங்க வாங்க” என்று உற்சாகமாய் வரவேற்றாள் சுபஸ்ரீ. அவளின் சத்தத்தில் அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த அவளின் கணவன் ரிஷி அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தான். தன் மாமனாரைப் பார்த்தவன் முகம் மலர வந்து அவரிடம் இருந்த லக்கேஜை வாங்கியவன்,

“வாங்க மாமா. எப்படி இருக்கீங்க? சொல்லிருந்தா நான் பஸ் ஸ்டாண்ட் வந்து கூப்பிட வந்துருப்பேன்ல. பாவம் எவ்ளோ தூரம் நடந்து வருவீங்க. உட்காருங்க” என்றவன்,

“ஹே தண்ணி கொண்டு வா டி” என்றபடி அவரோடு அமர்ந்தான்.

“இருக்கட்டும் மாப்பிள்ளை. திடிர்னு அவளை பார்க்கணும் போல இருந்துச்சுன்னு வந்தேன். நீங்க வேலைக்குக் கிளம்பிட்டு இருப்பீங்க தான. அதான் எதுக்கு தொல்லை பண்ணனும்னு நானே வந்துட்டேன்.”

“இதுல என்ன மாமா இருக்கு. அஞ்சு நிமிஷம் ஆகிருமா? அத்தை வரலையா மாமா” என்றிட தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த சுபாவும்,

“ஆமா பா அம்மா வரலையா?” என்றிட அவரோ,

“அவ வரலை. எனக்கு இங்க ஒரு வேலை ரொம்ப நாளா முடிக்காம இருந்துச்சு. உன்னையும் பார்க்கணும் போல இருந்துச்சா. அதான் சரி பார்த்துட்டு அந்த வேலைய முடிச்சுட்டு போலாமேன்னு வந்தேன்” என்றிட அப்பொழுது தான் அவரின் நான்கு வயது பேத்தி உறக்கத்தில் இருந்து முழித்து, “தாத்தா” என்றபடி உற்சாகமாய் ஓடிவந்தாள்.

“வாங்க வாங்க.. எங்கம்மா பெத்தாரு” என்றபடி அவளை தூக்கிக் கொஞ்சினார்.

“சரிங்க மாமா. அப்போ நான் வேலைக்குக் கிளம்புறேன். உங்களுக்கு ஏதோ வேலைன்னு சொன்னீங்கள்ல சாயந்தரம் வந்ததும் வண்டியில கூட்டிட்டு போறேன்.” என்றவன் அலுவலகத்திற்குக் கிளம்ப மருமகனின் அக்கறையில் அகமகிழ்ந்தார் அந்த பெரியவர். தன் மகளின் தேர்வு என்றுமே சரியாகத் தான் இருக்கும் என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

“சரிங்க பா. உங்களுக்கு பிடிச்ச பொங்கல் சட்னி வைக்குறேன். குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க” என்றவள் சமயலறைக்கு சென்றாள். குளித்து முடித்து வந்தவருக்கு,

“வாங்க பா சாப்பிடலாம். பொங்கல் சூடா இருக்கு” என்றபடி பரிமாறினாள்.

“நீ சாப்பிட்டியாடா?”

“இன்னும் இல்லப்பா. உங்க பேத்திய சாப்பிட வச்சுட்டு நான் சாப்பிடனும்” என்றிட அவளின் கரம் பற்றி அமர வைத்தவர்,

“நீயும் சாப்பிடு என்கூட. நான் சாப்பிட்டு முடிச்சு சுலோக்கு ஊட்டிவிடுறேன்.” என்றிட தந்தையின் அன்பில் எப்பொழுதும் போல் உருகியவள் அவருடன் அமர்ந்து சாப்பிடலானாள்.

“உன் அம்மா மாதிரியே நீயும் நல்ல சமைக்குற மா” என்றவர் மகளின் சமையலை ருசித்து சாப்பிட்டார். அப்பொழுது தன் பேத்தியும் பக்கத்து வீட்டு சிறுமியும் பொம்மை வைத்து விளையாடுவதை வேடிக்கைக் பார்க்கலானார்.

“என்ன நீ இப்படி மேக்கப் போட்டுருக்க நல்லாவே இல்ல. நான் பாரு எனக்கு பிடிச்ச மாதிரி எவ்ளோ அழகா பண்ணிருக்கேன். என்னை மாதிரியே நீயும் பண்ணு” என தன் கையில் இருக்கும் பொம்மையைப் பார்த்தபடடி கூறிக் கொண்டிருந்தாள் அந்தப் பக்கத்து வீட்டு சிறுமி. அதனைக் கேட்டதும் சுலோக்ஷனாவோ,

“உன் பொம்மைக்கு உனக்கு பிடிச்ச மாதிரி மேக்கப் போட்டுக்க. இது என் பொம்மை. நான் எனக்கு பிடிச்ச மாதிரி தான் போடுவேன். அப்போ தான் அதுக்கும் பிடிக்கும். உன் பொம்மைக்கு பண்ணுண மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன் போ” என்றவள் தன் பொம்மைக்கு ஒரு பொட்டு வைத்துவிட்டு அதனைக் கண்ணாடியில் காண்பித்து,

“உனக்கு இந்தப் பொட்டு பிடிச்சுருக்கா” என்று கேட்டவள் அது பதில் கூறியது போல தானே நினைத்தவள், பின்பு அவளே, “பிடிக்கலையா... அப்போ வேணாம்... உனக்கு பிடிச்ச மாதிரியே வேற பொட்டு வச்சுக்கலாம் சரியா” என்று அழித்துவிட்டு வேறு பொட்டினை அந்த பொம்மைக்கு வைத்துவிட்டாள். அவளின் செய்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் வெங்கடேசன். பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சில நினைவுகள் எழ அவரின் சிந்தனை ஐந்து வருடங்கள் பின்னோக்கி பயணப்பட்டது.

சுபஸ்ரீக்கு திருமண வரன் தேடிக் கொண்டிருந்த சமயம் அது. கையில் சில வரன்களின் ஜாதகத்துடன் அவளின் பெரியப்பா வந்திருந்தார் அன்று.

“இங்கப் பாரு வெங்கட்டு இது நல்ல இடமா தான் தெரியுது. பையன் நல்ல வேலைல இருக்கான். குடும்பமும் நல்ல வசதி. என்ன கொஞ்சம் பெரிய குடும்பம். அவ்ளோ தான். எனக்கென்னமோ இது தான் சரியா வரும்னு தோணுது.” என்று கூறிக் கொண்டிருக்க வெங்கடேசனோ ஓரமாக நின்று கொண்டிருந்த தன் மகளை ஏறிட்டார். அவளோ தலையை இடவலமாக ஆட்டி தனக்குப் பிடிக்கவில்லை என்று கூற கண்களை மூடித் திறந்தவர்,

“அண்ணே நீ சொல்றது எல்லாம் சரி தான். ஆனா எனக்கு என்னமோ இந்த வரன் மேல மனசு ஒப்பல. வேற பார்ப்போமே” என்றிட அவரின் சகோதரனுக்கோ பொறுமை காற்றில் பறந்தது.

“நானும் பார்த்துட்டே இருக்கேன். இப்படி வர எல்லா வரனையும் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தா என்னடே அர்த்தம். பொண்ண கட்டிக் கொடுக்குற ஐடியா இருக்குதா இல்லையா உனக்கு. கூடவே வச்சுருக்க போறியா. பொண்ணு பாசம் இருக்கலாம் தான் வெங்கட்டு. அதுக்காக இப்படியா” என்று கடிந்து பேசினார்.

“என்னண்ணே நீ இப்படி பேசுற. என் பொண்ணு கல்யாணத்தைச் சீக்கிரம் பார்க்கனும்னு தான் எனக்கும் ஆசை”

“நீ செய்யுறதை எல்லாம் பார்த்தா எனக்கு அப்படி தோணலடே.. அவகிட்ட சம்மதம் கேட்டுக் கேட்டு நீ பண்ணிட்டு இருக்கியோ” என்று கேட்டவர் சுபாவை ஒரு பார்வை பார்க்க அவளோ, ‘போச்சு கண்டுபிடிசுட்டாரே இந்த பெரியப்பா’ என்று நினைத்தபடி பார்த்தாள்.

“இங்க பாரு வெங்கட்டு. அவகிட்ட கேட்டுக் கேட்டு தான் எல்லாம் செய்யனும்னா ஒன்னும் பண்ண முடியாது. என் பொண்ணுக்கும் தானே கல்யாணம் செஞ்சி வச்சேன். இது தான் மாப்பிள்ளை வந்து கழுத்து நீட்டுன்னு சொன்னேன். இதோ இப்போ புள்ள பெத்துட்டு சந்தோஷமா இருக்கலையா.. சின்ன வயசுல இருந்து எல்லாத்தையும் அவளைக் கேட்டா செஞ்ச நீ. இதெல்லாம் நாம பார்த்து செய்யுறது தான்.” என்று மேலும் அறிவுரை என்ற பெயரில் ஆணாதிக்கத்தைத் திணிக்க தந்தை தன்னால் பேச்சு வாங்குவதைப் பொறுக்காமல்,

“அப்பா நீங்க எந்த வரன் பார்த்து சொன்னாலும் எனக்கு சம்மதம் தான் பா. உங்களுக்குப் பிடிச்சுருந்தா எனக்கு ஒகே தான்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட,

”ஹான் பார்த்தியா புள்ளையே சொல்லிருச்சு. அப்புறம் என்ன?” என்று கேட்டார். அதுவரை அமைதியாக இருந்த வெங்கடேசனோ,

“அண்ணே! என்ன டா தம்பி எதிர்த்துப் பேசுறானேன்னு நினைக்காத. உன் பொண்ணுக்கு உன் இஷ்டப்படி செஞ்ச அவளும் சந்தோஷமா இருக்கா. எனக்கும் சந்தோஷம் தான். அதே மாதிரி என் பொண்ணுக்கு என் இஷ்டப்படி தான் செய்வேன். என் பொண்ணோட இஷ்டம் தான் என் இஷ்டமும். அவளைக் கேட்காம நாம மட்டும் பார்த்து வச்சு கட்டிவச்சு நாளைக்கு ஏதும் பிரச்சனைன்னு வந்தா அவ மனசுல ஒரு சின்ன வருத்தம் வரும் தானே. நம்ம அன்னைக்கே வேணாம்னு சொன்னோம். இந்த அப்பா தான் கேட்கலன்னு. அப்படி மட்டும் தோணுச்சுனா நாம ஒரு அப்பாவா நம்ம கடமையைச் சரியா செய்யாம விட்டோமோன்னு ஆயிடாதா. எனக்கு அது தேவை இல்ல. எந்த வரனா இருந்தாலும் என் பொண்ணு பார்த்து சம்மதம் சொன்னா தான் நான் அடுத்தகட்ட வேலைக்கே போவேன். அது அம்பானி வீட்டு சம்மந்தமா இருந்தா கூட சரி” என்று தீர்க்கமாக கூறிவிட,

“சொல்றது சொல்லிட்டேன்டே. அப்புறம் உன் இஷ்டம் வெங்கட்டு. நான் வேற வரன் வந்தா சொல்றேன். சுபா கிட்ட கேட்டுட்டு நீ என்னன்னு சொல்லு. நான் வரேன்” என்றவர் வெளியில் வந்ததும் முதல் வேலையாக அலைபேசியில் தன் மகளை தொடர்புக் கொண்டு,

“அம்மாடி.. நீ சந்தோஷமா தானே டா இருக்க. அப்பா உன்னைக் கேட்காம கல்யாணம் பண்ணி வசுட்டேனேன்னு உன் மனசுல ஏதும் வருத்தம் இருக்கா” என்று வினவ மறுமுனையில் என்ன கூறினாளோ,

“அப்படியா மா.. சரிமா சரிமா.. நீ சந்தோஷமா இருந்தா சரி தான்” என்று அழைப்பைத் துண்டித்தவர், “ஹப்பாடா” என்று பெருமூசிவிட்டபடி அவர் வீட்டிற்கு நடக்கலானார்.

ஜன்னல் வழியே இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சுபாவுக்கோ சிரிப்பு தான். அப்போது அறைக்குள் வந்த வெங்கடேசனோ,

“உன் பெரியப்பா பேசிட்டு போனத நெனச்சு வருத்தம் ஏதும் பட்டியா டா?” என்று தலையைக் கோதியபடி வினவ,

“அதெல்லாம் இல்லப்பா. நீங்க இருக்கும் போது எனக்கென்ன கவலை”

“அதுசரி. அதுக்காக இனிமே அடுத்து வர வரன எனக்காகவெல்லாம் பிடிச்சுருக்குன்னு சொல்லக் கூடாது என்ன? உனக்கு நிஜமாவே மனசுக்கு பிடிச்சுருந்தா மட்டும் என்கிட்ட சொல்லு சரியா. உன்னோட சந்தோஷம் தான் அப்பாவோட சந்தோஷமும்” என்று கேட்க,

“சரிப்பா” என்றாள் புன்னகைத்தபடி.

“இப்போ அத்தான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டாக. அவரு சரியா தான் பேசுனாக. இப்படியே அவ சரி சொல்லுற வரைக்கும் உக்காந்துருந்தா இன்னும் எத்தன வருஷம் ஆகுமோ. நான் இதை பேசி பேசி ஓஞ்சி போயிட்டேன். பேச வந்த அந்த மனுஷனையும் வாயைமூட வச்சுட்டீக. என்னமோ போங்க. சாப்பிட வாங்க ரெண்டு பேரும்” என்று சமயலறையில் இருந்து புலம்பலும் அழைப்பும் வர,

“ஹே போடி! உனக்கு உங்க அப்பா உன்கிட்ட சம்மதம் எதுவும் கேட்கலையேன்னு பொறாமை.” என்றிட,

“சரியா சொன்னீங்கப்பா” என்றபடி வாயைப் பொத்தி சிரித்தாள் சுபஸ்ரீ.

“ஆமா ஆமா. என் அப்பா என்கிட்டே கேட்காம செஞ்சாலும் நல்ல புருஷனை தான் கொடுத்துருக்காங்க” என்று கூற அதில் வெங்கடேசனுக்கு ஏக பெருமை.

அதன் பின் சில நாட்களிலேயே ஒரு நல்ல வரன் வர சுபாவுக்கும் பார்த்தவுடனே மனதுக்கு பிடித்திருந்தது. குடும்பமும் நடுத்தர வர்க்கமாய் நல்ல குடும்பமாக தெரிந்தது விசாரித்தவரை. பையனும் எந்த ஒரு கெட்டப்பழக்கம் எதுவும் இல்லாமல் இருக்க சுபா சம்மதம் கூறிய அடுத்த நாளில் இருந்தே அனைத்து வேலைகளும் விறுவிறுவென நடக்க இதோ திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கடந்து பெண்ணைப் பார்க்க சுபாவின் வீட்டிற்கு வந்திருந்தார் வெங்கடேசன். சிறுமியின் வார்த்தையில் இந்த நினைவுகள் எல்லாம் வந்திருக்க அதனை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தவரைக் கண்டவளுக்கு அவருடைய எண்ணம் நன்றாகவே புரிந்தது.

“அப்பா.. உங்க பேத்தி அப்படியே உங்கள மாதிரி” என்று சிரித்தபடி கூற வழக்கம் போல தன் மனதினைப் படித்துவிட்டாள் தன் மகள் என்று அறிந்து அவள் சிரிப்பில் அகமகிழ்ந்தவர்,

“உன் பொண்ணாச்சே மா. அதான்” என்று கூறி சாப்பிட்டு எழுந்து தன் பேத்தியைக் கொஞ்சலானார்.

அடி கோயில் எதற்கு?
தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி...
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

முற்றும்...
 
New member
Joined
Dec 5, 2024
Messages
3
உனது புன்னகை போதுமடி…

View attachment 57

படித்து விட்டு அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்😍😍
 
Top