• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
5
" எங்கே அவள்!!!
என்றே மனம்!!!
தேடுதே ஆவலால் ஓடிவா.....
என்று பாடி கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்த கண்ணன் தனது மனைவி தர்ஷினியை தேடினான்,
அவள் சோபாவின் ஒரு ஓரத்தில் அமர்ந்து ஏதோ தீவிர யோசனையில் அமர்ந்து இருந்தாள் அவளின் அருகில் சென்ற கண்ணன்,

" மை டியர் பொண்டாட்டி
என்ன டி ஏதோ பயங்கரமான யோசனையில இருக்க,

அவள் கடுப்பாக அவனை பார்த்து தீ பார்வை ஒன்றை செலுத்த,
அவனுக்கு என்னவென்று புரியாமல் அவளை பார்த்து

" ஏய் என்ன டி என்னை எதுக்கு முறைக்குற,

மீண்டும் அவளிடம் மௌனம்... கூடவே தீ பார்வை இப்போது எரிச்சல் பார்வையாக மாறியிருந்தது

" இப்போ எதுக்கு நம்மள இப்படி முறைச்சு பாக்குறான்னு தெரியலயே 🤔🤔 நாம எதாவது தப்பு பண்ணுனோமா அவன் சிந்தனையை துரிதபடுத்தினான் அவனது சிந்தனைக்கு ஏதும் எட்டவில்லை.

" ம்ம்ஹும் இது சரிபட்டு வராது பேசாம அவகிட்டயே கேட்டுருவோம். ஏன்னா இவ இப்படி இருந்தா நமக்கு ஒரு வேலையும் ஓடாது என்று தனக்கு தானே பேசி கொண்டு மீண்டும் அவளை அழைத்தான்,

" அடியேய் என்ன டி ஆச்சு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க,

அவனின் அடியே அவளை எப்போதும் கூடுதல் சந்தோசபடுத்தும் ஆனால் இன்று அதுவே அவளுக்கு எரிச்சலை கொடுக்க அவளிடமிருந்து வார்த்தை சற்றே கடினமாக வந்தது,

" யப்பா சாமி கொஞ்சம் நேரம் அமைதியா இருக்கியா தேவை இல்லாம கடுப்ப கிளப்பாத என்று அவள் இரைய, அதில் சற்றே கலங்கி போனான் கண்ணன்...

அதற்கு காரணம் அவளது வார்த்தை கோபத்தில் வந்து விழ, முகமானது அவனின் மீது வெறுப்பை உமிழ்ந்தது....

அதனால் வீட்டின் உள்ளே வரும் போது இருந்த குதூகலம் இப்போது அவனிடம் முற்றிலும் வற்றி போயிருந்தது, அவன் அமைதியாக நின்றான் அவளும் மறுமொழி எதுவும் பேசவில்லை.

நேரம் ஸ்லோ மோஷன் எபக்ட்டில் நகர்ந்தது அவனுக்கு அதற்கு மேல் பொறுமை போதவில்லை மீண்டும் தனது மனைவியிடம் பேச முயற்சி செய்தான்,

" அடியே இப்போ எதுக்கு டி கோபமா இருக்க,

அவளிடம் மௌனம்

" தர்ஷினி உன்கிட்ட தான் டி கேட்குறேன்

அவளிடம் இப்போதும் பதில் இல்லை,
கண்ணன் மெதுவாக பொறுமையை இழக்க ஆரம்பித்தான் காரணம் அவளின் இந்த பேசாத மௌனம்

பொதுவாகவே இது போன்ற கோபம் கணவன் மனைவிக்கும் காதலர்களுக்கும் இடையில் வருவது வழக்கமானது தான் ஏனென்றால் கணவனோ மனைவியோ காதலனோ காதலியோ அவர்களது எண்ணம் எதுவாக இருந்தாலும் தன்னிடம் முழுமையாக வெளிப்படுத்தி விட வேண்டும் என்று நினைப்பது இயல்பு இந்த இயல்பு விதியிலிருந்து கண்ணனும் விலகியவன் அல்ல அதனால் கண்ணனின் கேள்வி ஏற்கனவே கேட்டது தான் என்றாலும் இப்போது சற்று உஷ்ணமாக வெளியேறியது.....,

" ஏய் தர்ஷினி உன்கிட்ட தான டி கேட்கேன் எதுக்கு இப்படி உட்கார்ந்து கிட்டு இருக்கன்னு பதில் சொல்லாம இப்படி அமைதியா இருந்தா என்ன டி அர்த்தம்......

கண்ணனின் உஷ்ண வார்த்தைகள் அவளை சற்றே உலுக்கி பார்த்தது, ஆனாலும் காதல் திருமணம் செய்தவர்கள் ஆச்சே அதை வெளிப்படுத்தும் விதமாக வீம்பு செய்து பார் என்றது ஒரு மனம், வேண்டாம் என்று இன்னொரு மனம் கூறியது.... அதற்கும் காரணம் இருந்தது,

என்ன வீம்பு செய்தாலும் விஷயம் வாயிலிருந்து வரும் வரைக்கும் அவன் இந்த இடத்தை விட்டு நகர மாட்டான் என்பது அவளுக்கு தெரியும் அதே நேரம் இப்போது நாம் பேசினால் தான் அவனிடம் நமது கோபத்தை காட்ட முடியும் என்று நினைத்தவள் அவனிடம் சீறினாள்,

" என்ன யா சொல்ல சொல்லுற நா வீட்ல இருக்குறவங்க கிட்ட ஒன்னு சொல்லி வச்சா நீ வேற ஒன்னு சொல்லுற என்றாள் உஷ்ணம் குறையாத கோபத்தோடு,

" நீ என்ன டி சொன்ன?? அத மாத்தி நான் என்ன சொன்னேன் அத முதல்ல சொல்லு டி கண்ணனும் அதே தோணியில் எதிர் கேள்வி கேட்க,

" எங்க வீட்டு விஷயம் பத்தி

" வீட்டு விஷயமா 🤔🤔 நீ என்ன சொன்ன அதை நா என்ன மாத்தி சொல்லிட்டேன்னு கேட்டேன் டி

" எனக்கு தாய் மாமன்னு எவனும் கிடையாது அதனால எங்க அம்மா வீட்டு பால் காய்ச்சுக்கு நாம தான் சீர் செய்யணும்னு சொல்லி இருந்தேன் இல்ல

" ஆமா சொல்லி இருந்த, நீ சொன்ன மாதிரி தான் நாம சீர் செஞ்சிட்டு வந்துட்டோம்ல அப்புறம் என்ன அதுல என்ன உனக்கு பிரச்சனை

" அதுல ஒன்னும் பிரச்சனை இல்ல எனக்கு தாய் மாமன் இல்லன்னு நான் சொல்லி இருக்கேன் நீ எங்க அம்மாவுக்கு சித்தப்பா மவன் இருக்கான் பெரியப்பா மவன் இருக்கான், இருந்தாலும் அவனுங்க எல்லாம் செய்ய மாட்டாங்க அதனால நாம தான் எல்லாம் செய்யணும்னு சொல்லி நம்ம வீட்ல சொன்னியா???

" ஆமாடி நேத்து மச்சான் கேட்டான் எவ்வளவு செலவு வந்தது யார் வந்தாங்கன்னு அப்போ தான் சொன்னேன். அதுவும் உண்மையைத் தானடி சொன்னேன்

" நல்லா உண்மையை சொன்ன இப்போ அங்க தான் பிரச்சனையே

" அதுல என்ன டி பிரச்சனை

" நான் நீ உண்மைய சொன்னேன்னு சொல்லுறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்ன கட்டி தான் அக்கா கிட்ட சொல்லி இருந்தேன் எனக்கு தாய்மாமன்னு யாரும் கிடையாது செய்முறை எல்லாம் செய்யறது நாங்க தான் செய்யணும் வேற ஆள் கிடையாதுன்னு

" அது எனக்கு எப்படி டி தெரியும் நீ அவங்க கிட்ட சொன்னது

" நான் தான் உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன் இல்ல எனக்கு தாய் மாமன் கிடையாதுன்னு அவங்க கிட்ட சொல்லி இருக்கேன் அதே மாதிரி நீயும் சொல்லிருன்னு

" எங்கிட்ட எப்போ டி அப்படி சொன்ன

" எப்போவா அவளது கோபம் இன்னும் அதிகரித்தது....

" ஆமா டி எப்போ சொன்ன எனக்கு நினைவு இல்லையே

" உனக்கு எப்படி யா அதெல்லாம் நினைவுல இருக்கும் உனக்கு தான் ஒண்ணுமே நினைவுல இருக்காதே அப்படி இருந்தா தான் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே

" அடியே இப்போ இத சொன்னதால உனக்கு என்ன டி பிரச்சனை

" என்ன பிரச்சனையா ரெண்டு நாளைக்கு முன்ன கட்டி தான்யா சொல்லி இருக்கேன் எனக்கு எவனும் கிடையாதுன்னு ஆனா நீ அதெல்லாம் ஒன்னும் இல்ல அவளுக்கு சொந்தக்காரன் இருக்கான் ஆனா ஒருத்தனும் செய்ய மாட்டான்னு சொல்லி இருக்க, இப்ப என்கிட்ட அவங்க வந்து கேப்பாங்க அவன் அப்படி சொல்றான் நீ இப்படி சொல்ற இதுல யாரு சொல்றது உண்மைன்னு கேட்டாங்கன்னா என்னய்யா நான் பதில் சொல்லுவேன்

" இதுல என்னடி இருக்கு உண்மைய சொல்லிட வேண்டியது தானே

" உண்மையை சொல்லவா சொன்னா என்ன நடக்கும்ன்னு உனக்கு தெரியாதா???

இப்போது கண்ணனிடம் அமைதி,

" சும்மாவே நம்ம வீட்டு ஆளுங்க என்னை மதிக்க மாட்டாங்க இதுல என் சொந்த பந்தம் இருந்தும் செய்ய மாட்டாங்கன்னு சொன்னா அவங்க என்ன இன்னும் கேவலமாக தான் பார்ப்பாங்க நம்ம வீட்டு ஆளுகளை பத்தி தெரிஞ்சுக்கிட்டு நீயே இப்படி பேசுனா என்ன அர்த்தம் அவளிடம் கோபமும் தன் வீட்டார் தன்னை ஏளனம் செய்வார்களே என்ற ஆதங்கமும் அப்பட்டமாக தெரிந்தது

தன் மனைவியின் ஆதங்கம் அவனுக்கு நன்றாக புரிந்தது அவளது ஆற்றாமையை நினைத்து அவளுக்கு ஆறுதல் சொல்ல எண்ணினான் ஆனாலும் அவள் கூறுவது பொய் அது என்றிருந்தாலும் ஒரு நாள் வெளியில் வந்து மற்றவருக்கு அம்பலப்படுத்தி விடும் என்ற உண்மையை அவளிடம் இப்போது கூறினால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை என்பதை அவன் நன்றாக உணர்ந்தான் சிறிது நேரம் மௌனமாக நின்று யோசித்தவன் பின் அவளிடம் கூறினான்,

" அவங்க கேட்டா நான் தான் தெரியாம சொல்லிட்டேன்னு சொல்லி சொல்லிரு டி,

" அது எப்படி அவனுக்கு தெரியாம இருக்கும்ன்னு கேட்பாங்க நம்ம வீட்டு ஆளுங்க எந்த விஷயத்தையும் சாதாரணமா விட மாட்டாங்க நோண்டிகிட்டே தான் இருப்பாங்க

" அதெல்லாம் நோண்ட மாட்டாங்க டி நீ ரொம்ப யோசிக்க வேண்டாம் நா சொன்னதை மட்டும் சொல்லு டி அதுக்கு மேல எதாவது உன்கிட்ட கேட்டா அது எங்கே எங்க வீட்டை பத்தி பேசுது அப்படி பேசுனா தான தெரியும்ன்னு சொல்லிரு டி அதுக்கு மேல ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்று சொல்லி தற்க்காலிக தீர்வு சொன்னான் கண்ணன்....

மறுநாள் தர்ஷினி சொன்னது போலவே அவரது வீட்டு ஆட்கள் கேள்வி கேட்டு நோண்டினார்கள் கண்ணன் கூறியது போல அவளும் கூற அவர்களது பேச்சு அப்போதைக்கு முடிந்தது..... அன்றைய நாளும் அப்படியே முடிந்து போக மறுநாள் பொழுது புணர்ந்தது, தர்ஷினி சற்று அமைதியை கடைபிடிக்க கண்ணன் எப்பொழுதும் போல் அவளிடம் குறும்பு செய்து விட்டு வேலைக்கு கிளம்பி சென்றான்....

அன்று மதிய உணவுக்காக கண்ணன் வீட்டிற்கு வந்தான் அப்பொழுதும் அவன் தன் காதல் மனைவியை தேடிக்கொண்டு,

" என்னவளே
என்னவளே
எங்கிருந்தாய் நீதான்....
என்ற பாடல் பாடி கொண்டே வர அவனை ஓடி வந்து இறுக்கமாக கட்டிக்கொண்டாள் தர்ஷினி.

அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான் கண்ணன், அந்த அணைப்பில் அவள் இப்போது குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்,

" ஏய் தர்ஷினி எதுக்கு டி பொண்டாட்டி அழுகுற அவனது கேள்வியில் காதல் ரசம் சொட்டியது ஆனால் தர்ஷினியால் தான் பதில் பேச முடியவில்லை மேலும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
அவளை மேலும் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன் அவளது முதுகையை தட்டிக் கொடுத்து தலையை வருடி அவளை சற்று நிதானத்திற்கு கொண்டுவர முயற்சி செய்தான்

" அடியே இப்ப எதுக்குடி அழுவுற ஏன் இப்படி அழுகுற என்ன ஆச்சு என்ன நடந்தது இங்க வா இப்படி உட்காரு என்று அருகில் இருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு அவளுக்கு குடிப்பதற்கும் கொஞ்சம் தண்ணீரை கொடுத்தான் அதை வாங்கி குடித்த தர்ஷினி இப்போது ஓரளவிற்கு சமாதானம் அடைந்திருந்தாள், அவளிடம் என்னடி ஆச்சு எதுக்கு அழுகுற என்று கண்ணன் கேட்க,

மீண்டும் கண்ணனை கட்டிக்கொண்டு சாரி மாமா என்றாள் தர்ஷினி

" எதுக்கு டி

" நீ நேத்து சொன்ன மாதிரி அவங்க கிட்ட சொன்னேன் மாமா

" சரி டி அதுக்கு என்ன

" அவங்க அத அப்படியே மச்சான் கிட்ட சொல்லிருக்காங்க, மச்சான் அத கேட்டுட்டு அவன் என்ன குடும்பம் நடத்துறான்னு கேட்டுருக்காங்க மாமா அது மட்டும் இல்ல அவனை ஒழுங்கா அவ கூட உட்கார்ந்து அவளுக்கு என்ன தேவை அவ குடும்பத்துல யாரு யாரு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க சொல்லுன்னு சொல்லிருக்காங்க

" சரி டி அதனால என்ன

" ஏன் மாமா பொய் சொன்னது நான் ஆனா மச்சான் கிட்ட கெட்டு போனது உன் பேர் ஆச்சே தப்பு என்னோடது தான் அதோட பாதிப்பு உனக்கு தான மாமா வந்துருக்கு,

" அடி லூசு பய பொண்டாட்டி இதெல்லாம் ஒரு பிரச்சனையா டி

" உனக்கு எதுவும் பிரச்சனை இல்ல தான் மாமா ஏன்னா நீ ஒரு தப்பும் செய்யல அது தெரியாம மச்சான் அவன் என்ன குடும்பம் நடத்துறான்னு கேட்டுட்டாங்களே மாமா அது தான் என்னால தாங்க முடியல,
நீ எப்படி குடும்ப நடத்துற, என்னை எப்படி பார்த்துட்டு இருக்கன்னு எனக்குத்தானே தெரியும். அவளிடம் விசும்பல் அப்படி தெரிஞ்சிருந்த நானே உனக்கு இப்படி ஒரு பேர் வர காரணம் ஆயிட்டேனே என்று கூறியவள் வெடித்து அழ ஆரம்பித்தாள், அவளை கண்ணன் ஆறுதல் படுத்த,

" சாரி மாமா என்று சொல்லி மீண்டும் கட்டிக் கொண்டு குலுங்கினாள் தர்ஷினி

" அட லூசு பய பொண்டாட்டி அவ்வளவுதானா நா கூட என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்

" ஏன் மாமா மச்சான் உன்ன இப்படி சொன்னதுல உனக்கு வருத்தம் இல்லையா

" நான் எதுக்குடி வருத்தப்படணும் இதே வார்த்தையை நீ சொன்னா நான் வருத்தப்படலாம் மச்சான் சொன்னததுக்கெல்லாம் நான் வருத்தப்பட முடியுமா???

தர்ஷினி அவனை நிமிர்ந்து பார்த்தாள் காரணம் அவன் யாருக்காகவும் தனது சுயமரியாதையை இழக்க கூடாது என்று சொல்பவன் ஆச்சே...... ஆனால் அதை எல்லாம் யோசிக்காமல் கண்ணன் பேசினான்,

" உன்னோட சந்தோசத்துக்காக உன்னோட சுயமரியாதைக்காக ஒரு சில பொய் இந்த வீட்ல சொல்ல வேண்டி இருக்கு அதை நீ சொல்ற அதை என்கிட்டேயும் சொல்லிடுற அப்படி இருந்தும் அதை நான் மறந்து வீட்ல உண்மைய சொன்னது என் தப்பு தானே நான் மறக்காமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது இல்ல டி.

" ஆனாலும் என்னோட சுயநலத்துக்காக உன்னோட சுயமரியாதையை நான் கெடுத்துட்டேனே மாமா சாரி மாமா என்று மீண்டும் அவள் அழ

" அடியே உனக்காக நான் என்னையவே இழக்க தயாரா இருக்கேன் அப்படி இருக்கும் போது இதெல்லாம் ஒரு விஷயமாடி உனக்கென நான் இருக்கேன் அதனால நீ மத்தவங்க பேசுறதெல்லாம் யோசிக்காம சந்தோசமா இரு பொண்டாட்டி என்று சொல்லி அவளை கட்டிக்கொள்ள அவனது மார்பில் முகம் புதைத்து கொண்டாள் தர்ஷினி.....



சுபம்.....


வாழ்க்கையில் கணவன் மனைவி என்பது இன்றியமையாத ஒரு உறவாகும் அந்த உறவிற்காக நம் சுயநலத்தையும் சுயமரியாதையும் விட்டு கொடுக்கலாம் தப்பே இல்லை ஏன்னா மனைவியை (காதலை) விட சிறந்தது எதுவும் இல்லை 😍😍😍


அன்புடன்
மாரி மதி 💙💙
 
Top